Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

மருத்துவர்களின் ஓய்வு வயது 63ஆக அதிகரிப்பு!

1075655740.jpg

அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு வயதை 63 வயது வரை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சுகாதார, ஊடகத்துறை அமைச்சர் மற்றும் பொதுநிர்வாக, மாகாண மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சரினால் கொண்டுவரப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, சிறப்பு மருத்துவ அலுவலர்கள், தர மருத்துவ அலுவலர்கள், சிறப்பு பல் மருத்துவ அலுவலர்கள், அனைத்து பல் அறுவை சிகிச்சை அலுவலர்கள் மற்றும் நிர்வாக மருத்துவ அலுவலர்கள் உட்பட அனைத்து அரசு பதிவு மருத்துவ அலுவலர்களின் ஓய்வு வயது 63 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

முன்னதாக, மருத்துவர்களின் ஓய்வு வயது 65 ஆக இருந்தது, பின்னர் அது 60 ஆக குறைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது
 

https://newuthayan.com/article/மருத்துவர்களின்_ஓய்வு_வயது_63ஆக_அதிகரிப்பு!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
59 minutes ago, கிருபன் said:

 

மருத்துவர்களின் ஓய்வு வயது 63ஆக அதிகரிப்பு!

1075655740.jpg

அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு வயதை 63 வயது வரை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சுகாதார, ஊடகத்துறை அமைச்சர் மற்றும் பொதுநிர்வாக, மாகாண மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சரினால் கொண்டுவரப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, சிறப்பு மருத்துவ அலுவலர்கள், தர மருத்துவ அலுவலர்கள், சிறப்பு பல் மருத்துவ அலுவலர்கள், அனைத்து பல் அறுவை சிகிச்சை அலுவலர்கள் மற்றும் நிர்வாக மருத்துவ அலுவலர்கள் உட்பட அனைத்து அரசு பதிவு மருத்துவ அலுவலர்களின் ஓய்வு வயது 63 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

முன்னதாக, மருத்துவர்களின் ஓய்வு வயது 65 ஆக இருந்தது, பின்னர் அது 60 ஆக குறைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது
 

https://newuthayan.com/article/மருத்துவர்களின்_ஓய்வு_வயது_63ஆக_அதிகரிப்பு!

சத்தியமூர்த்திக்கும் இன்னும் ஒரு வருடம் கூடியுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
38 minutes ago, RishiK said:

சத்தியமூர்த்திக்கும் இன்னும் ஒரு வருடம் கூடியுள்ளது. 

ஏழைமக்களுக்கு கஸ்ரகாலம்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த அறுபத்து மூன்று வயது எல்லை என்பது இலங்கை அரச மருத்துவமனைகளில் சேவையாற்றுவதற்கான கட்டுப்பாடா? இந்த வயது எல்லையின் பின்னரும் தனியார் மருத்துவமனைகளில் வேலையாற்றலாமா?

அறுபத்து ஐந்து வயது ஏன் அறுபதாக குறைக்கப்பட்டது?

மற்றைய நாடுகளில் வயது எல்லை என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, நியாயம் said:

இந்த அறுபத்து மூன்று வயது எல்லை என்பது இலங்கை அரச மருத்துவமனைகளில் சேவையாற்றுவதற்கான கட்டுப்பாடா? இந்த வயது எல்லையின் பின்னரும் தனியார் மருத்துவமனைகளில் வேலையாற்றலாமா?

அறுபத்து ஐந்து வயது ஏன் அறுபதாக குறைக்கப்பட்டது?

மற்றைய நாடுகளில் வயது எல்லை என்ன?

தனியார் மருத்துவமனைகளில் வேலை செய்வதற்கு வயது வரம்பு இல்லை, நியாயம்.

இலங்கையில் இளையோர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று எல்லா அரசுப் பணிகளுக்கும் இந்த விதி அறிமுகப்படுத்தப்பட்டது என்று நினைக்கின்றேன்.

பல நாடுகளில் இப்படி ஒரு வரம்பு இல்லை. அமெரிக்காவில் 67 என்பது ஒரு மைல்கல் போன்றது. விரும்பினால் அல்லது வீட்டில் இருப்பது தொல்லை அதிகம் என்றாலும், வேலைக்கு அதன் பின்னரும் தொடர்ந்து போய்க் கொண்டிருக்கலாம்.

போன வாரம் ஒரு மருத்துவரை இங்கு சந்தித்தேன். அவருக்கு 80 வயதுகள் இருக்கும். அவருடைய அலுவலக மேசையிலேயே விழுந்து அவரின் உயிர் போகும் என்று சொன்னார்.........



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிங்கத்திற்கு பிறந்தபடியால் சிங்கபாகு என்று பெயர் வைத்ததில் ஒரு நியாயம் இருக்கின்றது............. ஆனால் சிங்கம் தூக்கிச் செல்ல முன்னேயே சிங்கவல்லிக்கு ஏன் சிங்கவல்லி என்று பெயர் வைத்தார்கள்........... அதானல் தான் சிங்கம் வந்து சிங்கவல்லியை தூக்கிக் கொண்டு போய், பின்னர் சிங்கபாகு பிறக்க வேண்டியதாகப் போய்விட்டதோ என்னவோ..................🤣. என்னுடைய முன்னோர்களிலும் சிங்கம் என்று வரும் பெயர்கள் இருக்கின்றன..............😜.   
    • 3-4 வெவேறு வடிவம். எல்லாவற்றிலும், விஜயனின் தந்தை சிங்கபாகு பிறந்தது (அல்லது வளர்ந்தது, ஏனெனில் ஒரு வடிவத்தில் சிங்கம்  விஜயனின் அப்பமா சிங்கவல்லி , அவரின் இரு பிள்ளைகளையும் காவச்சென்று அதன்  காவலில் வைத்து இருந்தகாக) சிங்கத்துக்கும்,   விஜயனின் அப்பம்மா சிங்கவல்லிக்கும்.
    • தமிழரசுக்கட்சியின்(Itak) பொதுச்செயலாளர் சத்தியலிங்கத்தை தேசிய பட்டியலினூடாக தெரிவுசெய்தமையானது சுமந்திரனை(M.A.Sumanthiran) நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதற்கான தந்திரோபாயமாக இருக்கும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் மதன் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தேசிய பட்டியலுக்கான பெயர் பட்டியல் உறுப்பினர்களை முன்னதாகவே கொடுக்காதது சுமந்திரனை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதற்கான உத்தியாக கூட இருக்கலாம். தற்போது தெரிவுசெய்யப்பட்டிருக்கும், சத்தியலிங்கம் நடுநிலையானவர் அல்ல, அவர் ஒரு குழு சார்ந்து செயற்படக் கூடியவர். சுமந்திரன் மீதான வெறுப்பே தமிழரசுக்கட்சியின் பின்னடைவிற்கான காரணம். தாம் நினைக்கின்ற விடயங்களை எடுத்து நடத்தக்கூடிய விடயங்களில் சுமந்திரன் வல்லவர் என குறிப்பிட்டுள்ளார்.  சம்பந்தனின் பதவியையும், அவரின் வயது மூப்பையும் அவர் தனக்கு சாதகமாக சுமந்திரன் பயன்படுத்திக் கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். https://tamilwin.com/article/sumathiran-s-next-step-to-enter-parliamen-1734690467?itm_source=parsely-detail
    • கனடா நாட்டு ஊடகம் ஒன்றில் வந்திருக்கும் செய்தி... https://www.cp24.com/news/world/2024/12/20/at-least-2-dead-and-68-hurt-after-car-drives-into-german-christmas-market-in-suspected-attack/
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.