Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

‘GovPay’ அப் அறிமுகம் – அரச கொடுப்பனவுகள் அனைத்தும் டிஜிட்டல்மயம்!

1355947713.png

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

அரச நிறுவனங்களுக்கு செலுத்தப்படும் அனைத்து கொடுப்பனவுகளும் டிஜிட்டல்மயப்படுத்தப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் ஒரு சிறப்பு திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) வருடாந்த 1% முதல் 1.5% வரை பணத்தாள்கள் கொடுக்கல் வாங்கல்களுக்காக வீணாக செலவிடப்படுகிறது.

பணத்தைப் பயன்படுத்தி செலுத்தப்படும் கொடுப்பனவுகள் மோசடி மற்றும் ஊழலை அதிகரிப்பதற்கும், பணம் செலுத்தும் செயல்பாட்டில் திறமையின்மைக்கும் வழிவகுக்கிறது.

அதனால் அரச நிறுவனங்கள் அனைத்தும் டிஜிட்டல்மயப்படுத்தப்பட உள்ளன. அரச நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளையும் டிஜிட்டல் மயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த மாற்றத்தை எளிதாக்கும் வகையில் ‘GovPay’ மொபைல் அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 16 அரசு நிறுவனங்கள் இந்த அப்ளிகேஷனில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

ஏனைய நிறுவனங்கள் ஜனவரி முதல் இணைக்கப்படும்.  இந்த முன்முயற்சியானது அரசாங்கப் பணம் முழுவதையும் டிஜிட்டல் மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் பொதுச் சேவைகளின் செயல்திறன் மேம்படும்.

டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஊக்குவிப்பது மனித உழைப்பைக் குறைக்கும், முறைகேடுகள் மற்றும் ஊழலை அகற்ற வழிவகுக்கும் என்பதுடன், பொதுமக்களுக்கு வசதியான சேவைகளை வழங்கும்.” என்றார்.

 

https://newuthayan.com/article/‘GovPay’_அப்_அறிமுகம்_–_அரச_கொடுப்பனவுகள்_அனைத்தும்_டிஜிட்டல்மயம்!

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்படியே Tips குடுக்க option இருக்கிறமாதிரி லஞ்சம் வாங்கவும் ஒரு option ஐ உருவாக்கிறது - அதுக்கு VAT ம் போடலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விதானைமார்  பாடுதான்..கஸ்டம்போலை...



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கதையை நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள். வாழ்ததுக்குள்!  தொடருங்கள்
    • நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓட இடமளியோம்! - அமைச்சர் சுனில் கடும் எச்சரிக்கை! இந்த நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓட இடமளிக்கமாட்டோம் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "இன, மத வன்முறைகளைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் இன, மத ரீதியிலான சில பிரச்சினைகள் இருக்கின்றமை உண்மைதான். அவற்றுக்கு நாம் தீர்வு காண்போம். ஆனால், அந்தப் பிரச்சினைகளை ஊதிப்பெருக்கும் வகையில் - வன்முறைகளைத் தூண்டும் வகையில் எவராயினும் கருத்துக்களை வெளியிட்டால் அவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓட இடமளிக்கமாட்டோம்.  வேரூன்றியிருந்த தேசிய இனப்பிரச்சினை ஆயுதப் போராட்டமாக மாறியதால்தான் வடக்கு - தெற்கு இடையேயான உறவு அறுந்தது.  பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள். அந்த நிலைமை மீண்டும் வர இடமளியோம். புதிய அரசமைப்பின் ஊடாகத் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்போம்." - என்றார்.     https://newuthayan.com/article/நாட்டில்_மீண்டும்_இரத்த_ஆறு_ஓட_இடமளியோம்!_-_அமைச்சர்_சுனில்_கடும்_எச்சரிக்கை!    
    • அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும் - முழு விவரம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தமிழ்நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தின. அதைத் தொடர்ந்து, மாணவி அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் வெளியானது முதல் சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழு அமைத்தது வரை பல விஷயங்கள் நடந்துள்ளன. இந்த வழக்கில் இதுவரை தெரிய வந்துள்ள தகவல்கள் என்ன? நீதிமன்ற விசாரணையின்போது என்ன நடந்தது? இதையொட்டி கடந்த சில தினங்களில் தமிழக அரசியலில் நடந்த சம்பவங்கள் யாவை?   அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ன நடந்தது?   சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் டிசம்பர் 23-ஆம் தேதியன்று மாணவி ஒருவர் இரவு உணவுக்குப் பிறகு, மாணவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தங்களை அச்சுறுத்தியதாகவும் பிறகு தனது நண்பரை அங்கிருந்து விரட்டிவிட்டு, தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மறுநாள் காலையில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மாணவி அளித்த புகாரின் பேரில், அந்த நேரத்தில் அப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் பதிவான எண்களை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அதன் அடிப்படையில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபரை மாணவி அடையாளம் காட்டினார். டிசம்பர் 25-ஆம் தேதியன்று கைது செய்யப்பட்ட அந்த நபர் 37 வயதான ஞானசேகரன் என்றும், அவர் நடைபாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்தது. இதையடுத்து சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஞானசேகரன் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் எடுக்கப்பட்டார்.     எஃப்.ஐ.ஆர். வெளியான விவகாரத்தில் என்ன நடந்தது?   பின்னர் டிசம்பர் 26-ஆம் தேதியன்று காலையில், மாணவி அளித்த புகார் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் வெளியானது. மாணவிக்கு நடந்த அசம்பாவிதங்கள் பற்றிய விரிவான தகவல்கள் மட்டுமின்றி, அவரது பெயர், அலைபேசி எண், படிக்கும் பாடப்பிரிவு, முகவரி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அதில் இடம் பெற்றிருந்தன. சில தொலைக்காட்சி நிறுவனங்கள் அவரது தனிப்பட்ட விவரங்கள் தவிர்த்து, எந்தெந்தப் பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் அடங்கிய எஃப்.ஐ.ஆரை ஒளிபரப்பின. ஆனால், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களின் பெயர், முகவரி, புகைப்படம் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வெளியிடக்கூடாது என்று சட்டங்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து தமிழக அரசியல் களத்தில் இந்த விஷயம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. எஃப்.ஐ.ஆர் வெளியானது தொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேசிய மகளிர் ஆணையத்திற்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அதற்குப் பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "பாதிக்கப்பட்ட பெண்ணை முடக்க வேண்டுமென்று அரசு முயலவில்லை. அவர் மிகவும் துணிச்சலோடு முன்வந்து, அரசு மீது நம்பிக்கை வைத்துப் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது," என்றார். ''எஃப்.ஐ.ஆர் வெளியானதற்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம், அது வெளியானது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது" என்று சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்தார். இதற்கிடையே, காவல்துறையின் அலட்சியம் மட்டுமே இதற்குக் காரணம் என்று சமூக செயற்பாட்டாளர்கள் விமர்சித்தனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டு தமிழ்நாடு காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் டிசம்பர் 28-ஆம் தேதியன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதோடு, உண்மை கண்டறியும் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.     மாணவர்கள் போராட்டம் நடத்தியது ஏன்?   மாணவிக்கு நேர்ந்த சம்பவத்தைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் புதன்கிழமையன்று பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தினர். 'மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை' எனக் கூறி அவர்கள் முழக்கம் எழுப்பினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் பிரகாஷ், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் பிரகாஷ் வெளியிட்ட விளக்கத்தில், பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்புப் பணியாளர்கள் எப்போதும் பணியில் உள்ளதாகவும், கண்காணிப்பு கேமராக்கள் இருந்தபோதும் விருப்பத்தகாத சம்பவம் நடந்துள்ளதாகவும் கூறினார். அதோடு, "இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் வகையில் பல்கலைக்கழக அளவில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது" எனக் குறிப்பிட்டார்.     குற்றம் சாட்டப்பட்டவர் திமுகவை சேர்ந்தவரா?   இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ஞானசேகரன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் எடுத்துக்கொண்டதாக கூறப்படும் பழைய புகைப்படம் ஒன்று வைரலானது. அதுகுறித்து டிசம்பர் 26ஆம் தேதியன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் கைதான ஞானசேகரன் திமுகவில் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லை" என்று தெரிவித்தார். மேலும், ஞானசேகரன் திமுக நிர்வாகி என்று பரப்பப்படும் தகவல் பொய்யானது எனக் கூறிய அவர், "பொதுவாக மக்கள் அமைச்சர்களைச் சந்திப்பதைத் தடுக்க முடியாது. துணை முதல்வர், அமைச்சர்கள் ஆகியோருடன் மக்கள் நின்று புகைப்படம் எடுப்பது சகஜம்தான்," என்று விளக்கமளித்தார். அதோடு, "தமிழ்நாடு முதல்வருக்கோ, திமுக அரசுக்கோ இந்த வழக்கை மறைப்பதற்கான அவசியம் இல்லை. அண்ணா பல்கலைக்கழக மாணவியின் வழக்கு பொள்ளாச்சி பாலியல் வழக்கைப் போல் இல்லை, தவறு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடும்," என்றும் கூறினார். இந்நிலையில் டிசம்பர் 28 அன்று தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்த அண்ணாமலை, "மாணவியை பாலியல் தாக்குதல் செய்த திமுக நிர்வாகி ஞானசேகரன் அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் வெகு சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம்," என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு, குற்றம் சாட்டப்பட்ட நபர் "திமுகவை சேர்ந்தவர் என்பதை மறைக்க, இன்னும் எத்தனை நாட்களுக்குப் பொய் சொல்லி ஏமாற்றலாம் என்று திமுக அரசு நினைக்கிறது?" என்றும் விமர்சித்துள்ளார்.   சென்னை காவல்துறை அளித்த விளக்கம் என்ன?   இந்த விவகாரம் தொடர்பாக டிசம்பர் 26-ஆம் தேதியன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் ஆணையர் அருண், "ஒரு குற்றவாளி எந்தக் கட்சியில் இருந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை. அந்த நபர் மீது நடவடிக்கை எடுப்போம்" என்று உறுதியளித்தார். அப்போது சமூக ஊடகங்களில் எஃப்.ஐ.ஆர் வெளியானது பற்றி பதிலளித்த அவர், இத்தகைய வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை வெளியாகக்கூடாது என்றும் அது தவறும் என்றும் தெரிவித்தார். அது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய காவல் ஆணையர், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதேவேளையில், "எஃப்.ஐ.ஆர் இணையத்தில் பதிவேற்றப்பட்டதும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தகவல்கள் லாக் ஆவதில் தாமதமாகி இருக்கலாம். அந்த நேரத்தில் இதைப் பதிவிறக்கம் செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டிருப்பார்கள்" என்று விளக்கினார். குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் குறித்துப் பேசிய ஆணையர், "இதுவரை நடைபெற்ற புலன் விசாரணையில் ஞானசேகரன் என்ற ஒருவர் மட்டுமே குற்றவாளி எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஞானசேகரன் மீது ஏற்கெனவே திருட்டு உள்பட 20 வழக்குகள் உள்ளன. 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர்மீது எந்த வழக்கும் பதிவாகவில்லை. இதுபோல வேறு யார் பாதிக்கப்பட்டிருந்தாலும் தைரியமாக புகாரளிக்க முன்வர வேண்டும்," என்றார்.     தமிழ்நாடு அரசியலில் ஏற்பட்ட அதிர்வலைகள் யாவை?   கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் தமிழக தலைநகரின் முக்கிய இடங்களில் ஒன்று. அங்கு இத்தகைய சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்துப் பேசிய மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், "இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க பல்கலைக்கழக அளவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து உரிய முடிவுகள் எடுக்கப்படும்" என்று உறுதியளித்தார். இந்த விவகாரம் குறித்துப் பேசிய அண்ணாமலை, இதை வன்மையாகக் கண்டித்ததோடு சாட்டையடி போராட்டத்தையும் மேற்கொண்டார். டிசம்பர் 26ஆம் தேதியன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். இந்த விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மாநில முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்" என்று கூறினார். மேலும், டிசம்பர் 27 அன்று காலை 10 மணியளவில் கோயம்புத்தூரில் தனது வீட்டின் முன்பாக, அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் சில முறை அடித்துக்கொண்டார். அப்போது அங்கிருந்த பாஜக தொண்டர்கள் திமுகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தனது சாட்டையடி போராட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை தான் கையில் எடுத்துள்ள போராட்டம் வருங்காலத்தில் மிகவும் தீவிரமாகும் என்றார். "அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருக்கிறது. கல்வியின் தரம் சரியத் தொடங்கியுள்ளது. பொருளாதாரம் பின்தங்க ஆரம்பித்துள்ளது. தமிழ்நாட்டில் பெண்கள் மீதான குற்றச்செயல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இன்று இந்தப் போராட்டத்தைத் வேள்வியாகக் கையில் எடுத்துள்ளோம்" என்றார். அதோடு 48 நாட்கள் விரதம் இருக்கவுள்ளதாகக் கூறியதோடு, திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணியப் போவதில்லை என்றும் சூளுரைத்தார்.     நீதிமன்ற விசாரணையின்போது என்ன நடந்தது?   Getty Images இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி அதிமுக வழக்கறிஞர் வரலட்சுமி, பாஜக வழக்கறிஞர் மோகன்தாஸ் ஆகியோர் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. டிசம்பர் 27ஆம் தேதி மாலை நடந்த விசாரணையின்போது, "வழக்கு விசாரணையில் இருக்கும்போதே காவல் ஆணையர் எப்படி கைதானவர்தான் குற்றவாளி என்ற முடிவுக்கு வந்தார்?" என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். அதோடு பாதிக்கப்பட்ட மாணவியைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், "பெண்கள் ஆண்களுடன் பேசக்கூடாது, மாணவி அங்கு சென்றிருக்ககூடாது என்று கூறக் கூடாது. காதல் என்பது பெண்களின் தனிப்பட்ட சுதந்திரம்," எனக் கூறினர். எஃப்.ஐ.ஆர் வெளியானது குறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மறுநாள்(டிசம்பர் 28) விசாரணையின்போது, எஃப்.ஐ.ஆர் வெளியானது குறித்து விளக்கமளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெளியாகிவிட்டதாக விளக்கமளித்தார். அதேவேளையில், இந்த விவகாரத்தில் 14 பேர் மீது விசாரணை நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.   சர்ச்சையான காவல் ஆணையரின் செய்தியாளர் சந்திப்பு குறித்து விளக்கமளித்த அரசு தலைமை வழக்கறிஞர், இந்த வழக்கில் காவல்துறை யாரையும் பாதுகாக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தவே காவல் ஆணையர் செய்தியாளர்களைச் சந்தித்ததாக தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளது. 189 ஏக்கர் பரப்பிலான வளாகத்தில் 8 வழிகள் உள்ளன. வளாகத்தில் 988 கேமராக்கள் உள்ளன. அதில் 849 செயல்படுகின்றன. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருகிறது," என்று தெரிவித்தார்.   அமைச்சர்களுடன் எடுத்த புகைப்படம் பற்றி நீதிபதிகள் கூறியது என்ன?   இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மணி, "குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர் செல்வாக்கு நிறைந்த அரசியல் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்" என்றார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், "ஒரு நிகழ்வில் நம்முடன் ஒருவர் புகைப்படம் எடுத்துக்கொள்வதை வைத்து முடிவுக்கு வரக்கூடாது. இது பொருந்தாத வாதம்" எனக் கண்டித்து, குற்றச் சம்பவம் குறித்து மட்டும் பேசுமாறு கூறினர். இறுதியாக, மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கு மூன்று பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதோடு, மாணவிக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்குமாறு மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.     தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் எவ்வளவு முக்கியமானது?   கிண்டியில் சுமார் 180 ஏக்கர் பரப்பளவில் அண்ணா பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இதன் வளாகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி, ஏ.சி. டெக், ஸ்கூல் ஆஃப் ஆர்கிடெக்சர் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 13,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். வளாகத்தில் மூன்று விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. உயர்தர தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கல்வியை வழங்குவதன் மூலம் தமிழ்நாட்டின் கல்வித் தரத்தை வடிவமைப்பதில் அண்ணா பல்கலைக்கழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. கடந்த 1978இல் நிறுவப்பட்ட பல்கலைக்கழகம், மாநிலத்தின் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்குப் பங்களிக்கும் திறமையான நிபுணர்களை உருவாக்கும் முதன்மை நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான வலுவான அடித்தளத்துடன், பரந்த அளவிலான இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களை அண்ணா பல்கலைக்கழகம் வழங்குகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.   https://www.bbc.com/tamil/articles/clyvjw17px0o
    • தென் கொரியா: விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளான விமானம் - 124 பேர் உயிரிழப்பு 29 டிசம்பர் 2024, 01:50 GMT Reuters புதுப்பிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர் தென்கொரியாவில் 181 பேர் பயணித்த ஒரு விமானம் முவான் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதில் 124 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. நாட்டின் தென்மேற்கில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில், ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற இந்த விமானம் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக யோன்ஹாப் செய்தி முகமை கூறுகிறது. ஜேஜூ ஏர் நிறுவனத்தின் இந்த விமானத்தில் 175 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் உட்பட 181 பேர் பயணித்துள்ளனர். தாய்லாந்திலிருந்து வந்த விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இந்த விமானம் போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 737-800 ரக விமானம் என்று ஜேஜூ ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.  Reuters இந்த விபத்தில், இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார் எனவும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் ஒரு தீயணைப்பு துறை அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார். இந்த விபத்தில் உயிர் பிழைத்த இருவரும் விமானக் குழுவை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.  விமானத்தின் பின்புறத்தில் உள்ள பயணிகளை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருவதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விமான பயணிகளில் 173 பேர் தென் கொரியர்கள் எனவும், 2 பேர் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் யோன்ஹாப் செய்தி முகமை கூறுகிறது. Reuters ஆனால், பறவை மோதல் அல்லது மோசமான வானிலை விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று தீயணைப்புத் துறை ஊகிக்கிறது இந்த விபத்துக்கான சரியான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது என்று முவான் தீயணைப்புத் துறையின் தலைவர் லீ ஜியோங்-ஹியூன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.  "விமானத்தின் வால் பகுதி அப்படியே இருக்கிறது. ஆனால் விமானத்தின் மற்ற பகுதிகளின் வடிவத்தை யாராலும் அடையாளம் காண முடியவில்லை", என்று அவர் கூறினார்.  சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள உறுதிப்படுத்தப்படாத காணொளியில், விமானம் சறுக்கிக்கொண்டே ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று சுவரில் மோதுவது தெரிகிறது. பின்னர் இந்த விமானத்தில் தீப்பிடித்தது. 80 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 30 தீயணைப்பு வாகனங்கள் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தது. தற்போது முவான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக யோன்ஹாப் செய்தி முகமை தெரிவித்துள்ளது. Reuters தென்கொரியாவின் இடைக்கால அதிபர் சோய் சாங்-மோக் விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டார். அவர் முவானில் இந்த பகுதியை "ஒரு சிறப்பு பேரிடர் மண்டலமாக" அறிவித்துள்ளார். "இந்த விமான விபத்தில் ஏற்பட்ட இழப்புகள் காரணமாக கடுமையான சூழல் நிலவி வருகிறது. உயிரிழந்தவர்வர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்", என்று அவர் கூறினார்.  உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆதரவளிக்க அரசு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்று அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.  EPA/Yonhap சோய் சாங்-மோக் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் ஜேஜூ ஏர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.  செய்தியாளர் சந்திப்பில், இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிம் இ-பே மற்றும் பிற அதிகாரிகள் தங்கள் தலையை தாழ்த்தி மணிப்பு கேட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருப்பதே தற்போது தங்களின் முன்னுரிமை என்று கிம் இ-பே கூறினார்.  மேலும் இந்த விமான நிறுவனம், அதன் இணையதளத்தை கருப்பு நிறத்திற்கு மாற்றி ஆன்லைனில் மன்னிப்பு கோரியது.  EPA/Yonhap ஜேஜூ ஏர் நிறுவனத்தின் அதிகாரிகள் இந்த விபத்து நடந்ததற்காக மணிப்பு கேட்டனர் முவான் தென் கொரிய தலைநகர் சோலில் இருந்து 288 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. விமான பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தரும் துறையாகத் தென் கொரியாவின் விமானப் போக்குவரத்துத் துறை கருதப்படுகிறது. ஜேஜூ விமான நிறுவன வரலாற்றில் இதுவே முதல் உயிரிழப்புகளைக் கொண்ட மோசமான விபத்தாகும். தென் கொரியாவின் மிகப்பெரிய குறைந்த கட்டண விமான நிறுவனமான இது 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. https://www.bbc.com/tamil/articles/c20e26w86g7o?at_campaign=ws_whatsapp
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.