Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐசிசி 19இன் கீழ் மகளிர் ரி20 உலகக் கிண்ணம்: மலேசியாவில் ஆரம்பம்: இலங்கை உட்பட 16 அணிகள் பங்கேற்பு

Published By: VISHNU  

image

(நெவில் அன்தனி)

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நாளைமறுதினம் 18ஆம் திகதி நடைபெறவுள்ள 6 போட்டிகளுடன் ஆரம்பமாவுள்ளது.

இந்த வருட 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியை மலேசியா முன்னின்று நடத்துகின்றது.

 19 வயதுக்குட்பட்ட ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்திய மலேசியாவில் 17 வருடங்கள் கழித்து மற்றொரு பிரதான ஐசிசி கிரிக்கெட் போட்டி நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும்.

all_team_captins_...jpg

தென் ஆபிரிக்காவில் 2023இல் நடைபெற்ற அங்குரார்ப்பண ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்து இரண்டாவது அத்தியாயம் மலேசியாவில் இந்த வருடம் அரங்கேற்றப்படவுள்ளது.

இரண்டாவது அத்தியாயம் ஜனவரி 18ஆம் திகதி ஆரம்பமாகி பெப்ரவரி 2ஆம் திகதி நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியுடன் நிறைவுபெறும்.

u_19_women_s_t20_world_cup_logo.jpg

under_19_world_cup_trophy..png

இலங்கை அணி

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றும் இலங்கை அணிக்கு மனுதி நாணயக்கார தலைவியாகவும் ரஷ்மிக்கா செவ்வந்தி உதவித் தலைவியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தென் ஆபிரிக்காவில் 2023இல் நடைபெற்ற முதலாவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றிய மனுதி நாணயக்கார, ரஷ்மிக்கா செவ்வந்தி, தஹாமி செனெத்மா, ரஷ்மி நேத்ராஞ்சலி, சுமுது நிசன்சலா ஆகிய ஐவரும் இந்த வருடமும் விளையாடவுள்ளனர்.

sri_lanka_u_19_women_s_team_for__u_19_t_

மனுதி நாணயக்கார (தலைவி - மொறட்டுவை பிறின்சஸ் ஒவ் வேல்ஸ்), ரஷ்மிக்கா செவ்வந்தி (உப தலைவி - மாத்தறை, அனுரா கல்லூரி), விமோக்ஷா பாலசூரிய (திருகோணமலை சிங்கள ம.வி.), ஹிருணி ஹன்சிகா, சுமுது நிசன்சலா, ரஷ்மி நேத்ராஞ்சலி, சஷினி கிம்ஹானி, சஞ்சனா காவிந்தி, ஷெஹாரா இந்துவரி (அறுவரும் ரத்கமை, தேவபத்திராஜ கல்லூரி), தஹாமி சனுத்மா (நுகேகொடை, அநுலா வித்தியாலயம்), அஷேனி தலகுனே (கண்டி, மஹமாயா மகளிர் கல்லூரி), ப்ரமுதி மெத்சரா (அம்பாறை உஹன மத்திய கல்லூரி), சமோதி ப்ரபோதா (மொணராகலை. பஞ்ஞானந்த மகா வித்தியாலயம்), தனுலி தென்னக்கூன் (குருநாகல், மாலியதேவ மகளிர் கல்லூரி), லிமன்சா திலக்கரட்ன (அவுஸ்திரேலியாவில் பயின்றவர்) ஆகியோர் 19 வயதுக்குட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

 

முதலாவது சம்பியன் இந்தியா

தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற அங்குரார்ப்பண அத்தியாயத்தில் ஷபாலி வர்மா தலைமையிலான இந்தியா சம்பியனானது.

2023_under_19_w_t20_wc_india.png

பொச்சேஸ்ட்ரூம் விளையாட்டரங்கில் 2023 ஜனவரி 29ஆம் திகதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 7 விக்கெட்களால் வெற்றிகொண்டு இந்தியா சம்பியனாகி இருந்தது.

இங்கிலாந்தை 17.1 ஓவர்களில் 68 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா 14 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 69 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி சம்பியனானது.

 

நான்கு குழுக்கள்

இவ் வருடம் பங்குபற்றும் 16 அணிகள் நான்கு குழுக்களில் விளையாடவுள்ளன.

ஏ குழுவில் இந்தியா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள். மலேசியா ஆகிய அணிகளும்

பி குழுவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா ஆகிய அணிகளும்

சி குழுவில் நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா, நைஜீரியா, சமோஆ ஆகிய அணிகளும்

டி குழுவில் அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், நேபாளம், ஸ்கொட்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெறுகின்றன.

 

under_19_world_cup_groups.png

இந்த நான்கு குழுக்களிலும் லீக் முறையில் முதலாம் சுற்று நடத்தப்படும்.

முதலாம் சுற்று நிறைவில் ஏ மற்றும் டி குழுக்களில் முதல் 3 இடங்களைப் பெறும் அணிகள் ஒரு குழுவிலும் பி மற்றும் சி குழுக்களில் முதல் 3 இடங்களைப் பெறும் அணிகள் மற்றைய குழுவிலும் சுப்பர் சிக்ஸ் சுற்றில் விளையாட தகுதிபெறும்.

சுப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும்.

அவற்றில் வெற்றிபெறும் அணிகள் 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண இரண்டாவது அத்தியாயத்தின் சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும்.

 

முதல் சுற்று நடைபெறும் மைதானங்கள்

ஏ குழுவுக்கான போட்டிகள் கோலாலம்பூர் பேயுமாஸ் ஓவல் மைதானத்திலும் பி குழுவுக்கான போட்டிகள் ஜோஹார் கிரிக்கெட் பயிற்சியகம் ஓவல் மைதானத்திலும் சி குழுவுக்கான போட்டிகள் சரவாக் போர்னியோ கிரிக்கெட் மைதானத்திலும் டி குழுவுக்கான போட்டிகள் பாங்கி YSD-UKM கிரிக்கெட் ஓவல் மைதானத்தினலும் நடைபெறும்.

 

போட்டி அட்டவணை

ஜனவரி 18

அவுஸ்திரேலியா எதிர் ஸ்கொட்லாந்து (டி குழு)

இங்கிலாந்து எதிர் அயர்லாந்து (பி குழு)

சமோஆ எதிர் நைஜீரியா (சி குழு)

பங்களாதேஷ் எதிர் நேபாளம் (டி குழு)

பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா (பி குழு)

நியூஸிலாந்து எதிர் தென் ஆபிரிக்கா (சி குழு)

ஜனவரி 19

இலங்கை எதிர் மலேசியா (ஏ குழு)

இந்தியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் (ஏ குழு)

ஜனவரி 20

அவுஸ்திரேலியா எதிர் பங்களாதேஷ் (டி குழு)

அயர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா (பி குழு)

நியூஸிலாந்து எதிர் நைஜீரியா (சி குழு)

ஸ்கொட்லாந்து எதிர் நேபாளம் (டி குழு)

இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான் (பி குழு)

தென் ஆபிரிக்கா எதிர் சமோஆ (சி குழு)

ஜனவரி 21

மேற்கிந்தியத் தீவுகள் எதிர் இலங்கை (ஏ குழு)

இந்தியா எதிர் மலேசியா (ஏ குழு)

ஜனவரி 22

பங்களாதேஷ் எதிர் ஸ்கொட்லாந்து (டி குழு)

இங்கிலாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா (பி குழு)

நியூஸிலாந்து எதிர் சமோஆ (சி குழு)

அவுஸ்திரேலியா எதிர் நேபாளம் (டி குழு)

பாகிஸ்தான் எதிர் அயர்லாந்து (பி குழு)

தென் ஆபிரிக்கா எதிர் நைஜீரியா (சி குழு)

ஜனவரி 23

மலேசியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் (ஏ குழு)

இந்தியா எதிர் இலங்கை (ஏ குழு)

 

நிரல்படுத்தல் போட்டிகள்

(13, 14, 15, 16ஆம் இடங்கள்)

ஜனவரி 24

பி 4 எதிர் சி 4, ஏ 4 எதிர் டி 4

 

சுப்பர் சிக்ஸ்

ஜனவரி 25 

பி 2 எதிர் சி 3 (பாங்கி  YSD-UKM   கிரிக்கெட் ஓவல்)

பி 1 எதிர் சி 2 (சரவாக் போர்னியோ கிரிக்கெட் மைதானம்)

டி 1 எதிர் ஏ 3 (பாங்கி  YSD-UKM கிரிக்கெட் ஓவல்)

சி 1 எதிர் பி 3 (சரவாக் போர்னியோ கிரிக்கெட் மைதானம்)

ஜனவரி 26 சுப்பர் சிக்ஸ்

ஏ 2 எதிர் டி 3 (கோலாலம்பூர் பேயுமாஸ் ஓவல்)

ஏ 1 எதிர் டி 2 (கோலாலம்பூர் பேயுமாஸ் ஓவல்)

ஜனவரி 27 சுப்பர் சிக்ஸ்

பி 1 எதிர் சி 3 (சரவாக் போர்னியோ கிரிக்கெட் மைதானம்)

ஜனவரி 28 சுப்பர் சிக்ஸ்

டி 2 எதிர் ஏ 3 (கோலாலம்பூர் பேயுமாஸ் ஓவல்)

சி 1 எதிர் பி 2 (சரவாக் போர்னியோ கிரிக்கெட் மைதானம்)

ஏ 1 எதிர் டி 3 (கோலாலம்பூர் பேயுமாஸ் ஓவல்)

ஜனவரி 29 (சுப்பர் சிக்ஸ்)

சி 2 எதிர் பி 3 (பாங்கி   YSD-UKM  கிரிக்கெட் ஓவல்)

டி 1 எதிர் ஏ 2 (பாங்கி   YSD-UKM கிரிக்கெட் ஓவல்)

ஜனவரி 31

முதலாவது அரை இறுதி (கோலாலம்பூர் பேயுமாஸ் ஓவல்)

இரண்டாவது அரை இறுதி (கோலாலம்பூர் பேயுமாஸ் ஓவல்)

பெப்ரவரி 2

இறுதிப் போட்டி (கோலாலம்பூர் பேயுமாஸ் ஓவல்)

https://www.virakesari.lk/article/204004

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்ப நாளன்று ஆஸி. வெற்றி;  மூன்று  போட்டிகள் மழையினால் கைவிடப்பட்டது

Published By: DIGITAL DESK 3   18 JAN, 2025 | 03:21 PM

image

(நெவில் அன்தனி)

மலேசியாவில் சனிக்கிழமை (18) ஆரம்பமான இரண்டாவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் காலையில் நடைபெற்ற 4 போட்டிகளில் ஒன்றில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றதுடன் மற்றைய மூன்று போட்டிகள் மழையினால் கைவிடப்பட்டது.

1801_aus_win.jpg

ஸ்கொட்லாந்துக்கு எதிராக பாங்கி YSD - UKM கிரிக்கெட் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற டி குழு போட்டியில் 9 விக்கெட்களால் அவுஸ்திரேலியா இலகுவாக வெற்றி பெற்றது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 15.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 48 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் எம்மா வால்சிங்கம் (12), சார்லட் நேவார்ட் (10) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

1801__caoimhe_bray_australia_bowling.jpg

பந்துவீச்சில் காய்ம்ஹே ப்றே ஒரு ஓட்டத்திற்கு 3 விக்கெட்களையும் எலினோ லரோசா 7 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹஸ்ரத் கில் 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 6.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 49 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

கேட் பெலே ஆட்டம் இழக்காமல் 29 ஓட்டங்களையும் ஐன்ஸ் மெக்கியொன் 12 ஓட்டங்களையும் பெற்றனர்.

இங்கிலாந்துக்கு ஏமாற்றம்

ஜொஹார் கிரிக்கெட் பயிற்சியக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் இடையிலான பி குழு போட்டி மழையினால் இடையில் கைவிடப்பட்டது.

இது கணிசமான ஓட்டங்களைப் பெற்ற இங்கிலாந்துக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றது.

1801_eng_vs_ireland_abandoned.jpg

ஜெமிமா ஸ்பென்ஸ் 37 ஓட்டங்களையும் சார்லட் ஸ்டப்ஸ் 31 ஓட்டங்களையும் டாவினா பெரின் 26 ஓட்டங்களையும் சார்லட் லெம்பர்ட் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் எலி மெக்கீ 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 3.5 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 28 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை தொடர்ச்சியாக பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது.

சராவக் போர்னியோ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்த சமோஆ அணிக்கும் நைஜீரியா அணிக்கும் இடையிலான சி குழு போட்டியும் ஜொஹார் கிரக்கெட் பயிற்சியக ஓவல் மைதானத்தில் நடைபெறவிருந்த பாகிஸ்தானுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையிலான பி குழு போட்டியும் சீரற்ற காலநிலையால் முழுமையாக கைவிடப்பட்டது.

இந்த வருட 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மலேசியா, நேபாளம், நைஜீரியா, சமோஆ ஆகிய அணிகள் முதல் தடவையாக பங்குபற்றுகின்றன.

https://www.virakesari.lk/article/204158

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷ், தென் ஆபிரிக்கா வெற்றி

18 JAN, 2025 | 05:16 PM
image

(நெவில் அன்தனி)

மலேசியாவில் சனிக்கிழமை (18) ஆரம்பமான இரண்டாவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் பிற்பகல் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் பங்களாதேஷும் தென் ஆபிரிக்காவும் வெற்றியீட்டின.

நேபாளத்துக்கு எதிராக YSD - UKM கிரிக்கெட் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டி குழு போட்டியில் 5 விக்கெட்களால் பங்களாதேஷ் வெற்றி பெற்றது.

1801_bang_bt_nepal.jpg

நேபாளத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 53 ஓட்டங்கள் என்ற குறைந்த மொத்த எண்ணிக்கையை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் சிறு தடுமாற்றத்திற்கு மத்தியில் 13.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 53 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

மூன்றாவது ஓவரில் 3 விக்கெட்களை இழந்து 11 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்த பங்களாதேஷுக்கு மத்திய வரிசை வீராங்கனைகளான சாடியா இஸ்லாம் (16), அணித் தலைவி சுமய்யா அக்தர் (12) ஆகிய இருவரும் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி கைகொடுத்தனர்.

1801_jannatul_maoua_player_of_the_match_

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் 18.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 52 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் சானா ப்ரவீன் 19 ஓட்டங்களையும் சீமனா கே.சி. 10 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜனாத்துல் மவ்வா 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

டக்வேர்த் லூயிஸ் முறைமையில் தென் ஆபிரிக்கா வெற்றி

சி குழுவில் இடம்பெறும் பலம்வாய்ந்த அணிகளான நியூஸிலாந்துக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையிலான போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமையில் 22 ஓட்டங்களால் தென் ஆபிரிக்கா வெற்றிபெற்றது.

மழை காரணமாக இப் போட்டி அணிக்கு 11 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டு நடத்தப்பட்டது.

1801_sa_win_by_22_runs.jpg

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 11 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 91 ஓட்டங்களைப் பெற்றது.

ஜெம்மா போத்தா (32), சிமோன் லோரென்ஸ் (21) ஆகிய இருவரும் 5.2 ஓவர்களில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

தொடர்ந்து மத்திய வரிசையில் கராபோ மெசோ 25 ஓட்டங்களைப் பெற்று அணியை மேலும் பலப்படுத்தினர்.

பந்துவீச்சில் ஆயான் லெம்பட் 6 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் டாஷ் வேக்லின் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

1801_jemma_botha_south_africa_player_of_

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 11 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 69 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ஆரம்ப வீராங்கனை எம்மா மெக்லியொட் 34 ஓட்டங்களையும் ஈவா வொலண்ட் ஆட்டம் இழக்காமல் 12 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மோனாலிசா லிகோடி 8 ஓட்டங்களுக்கு 2 விக்டெக்களையும் கேலா ரெனேக் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இலங்கை - மலேசியா போட்டி நாளை

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இலங்கை நாளை காலை நடைபெறவுள்ள ஏ குழுவுக்கான முதலாவது போட்டியில் மலேசியாவை எதிர்த்தாடும்.

அப் பொட்டியைத் தொடர்ந்து நாளை பிற்பகல் நடைபெறவுள்ள இதே குழுவுக்கான இரண்டாவது போட்டியில் நடப்பு  சம்பியன் இந்தியாவை மேற்கிந்தியத் தீவுகள் சந்திக்கவுள்ளது.

https://www.virakesari.lk/article/204179

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துடுப்பாட்டத்தில் சனெத்மா, பந்துவீச்சில் ப்ரபோதா அற்புதம்; மலேசியாவுடனான போட்டியில் இலங்கைக்கு அமோக வெற்றி

19 JAN, 2025 | 12:39 PM
image

(நெவில் அன்தனி)

கோலாலம்பூர், பேயுமாஸ் ஓவல் மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற மலேசியாவுக்கு எதிரான ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண ஏ குழுவுக்கான ஆரம்பப் போட்டியில் 139 ஓட்டங்களால் இலங்கை அமோக வெற்றியீட்டியது.

துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு ஆகிய சகல துறைகளிலும் திறமையை வெளிப்படுத்திய இலங்கை, இந்த வெற்றி மூலம் சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு செல்வதற்கான தனது வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துகொண்டுள்ளது.

இரண்டாவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் இரண்டாம் நாள் போட்டிகள் இன்று நடைபெறுகிறது.

தஹாமி சனெத்மாவின் பொறுமையான துடுப்பாட்டம், சஞ்சனா காவிந்தியின் அதிரடி துடுப்பாட்டம், சமுதி ப்ரபோதா, ரஷமி செவ்வந்தி, லிமன்சா திலக்கரட்ன ஆகியோரின் கட்டுப்பாடான பந்துவீச்சுகள் என்பன இலங்கையை இலகுவாக வெற்றிபெறச்செய்தன.

மலேசியாவினால் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களைக் குவித்தது.

19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் இலங்கை பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

தென் ஆபிரிக்காவில் 2023இல் நடைபெற்ற அங்குரார்ப்பண 19 வயதுக்குட்பட்ட ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் பங்களாதேஷுக்கு எதிராக 4 விக்கெட்களை இழந்து பெற்ற 155 ஓட்டங்களே இலங்கை இதற்கு முன்னர் பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும்.

மலேசியாவுடனான போட்டியில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சஞ்சான காவிந்தி 13 பந்துகளில் 6 பவுண்டறிகளுடன் 30 ஓட்டங்களைக் குவித்தார். அத்துடன் சுமுது நிசன்சலாவுடன் 19 பந்துகளில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தார்.

அதன் பின்னர் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய தஹாமி சனெத்மா, இரண்டு சிறப்பான இணைப்பாட்டங்களில் பங்கெடுத்ததுடன் அரைச் சதம் குவித்து அசத்தினார்.

14 ஓட்டங்களைப் பெற்ற அணித் தலைவி மனுதி நாணயக்காரவுடன் 3ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களையும் 28 ஓட்டங்களைப் பெற்ற ஹிருணி குமாரியுடன் 4ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களையும் தஹாமி சனெத்மா பகிர்ந்து அணியை மேலும் பலப்படுத்தினார்.

52 பந்துகளை எதிர்கொண்ட தஹாமி சனெத்மா 5 பவுண்டறிகளுடன் 55 ஓட்டங்களைப் பெற்று கடைசி ஓவரில் ஒரு பந்து மீதம் இருந்தபோது ஆட்டம் இழந்தார்.

சஷினி கிம்ஹானி 13 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் சித்தி நஸ்வா அலிஅஸிஸ் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட மிகவும் கடினமான 163 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட மலேசிய மகளிர் அணி 14.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 23 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படுதோல்வி அடைந்தது.

மலேசிய அணியில் ஆறு வீராங்கனைகள் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தனர்.

நூர் ஆலியா 7 ஓட்டங்களையும் சுவாபிக்கா 6 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

பந்துவீச்சில் சமுதி ப்ரபோதா 5 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லிமன்சா திலக்கரட்ன 3 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மனுதி நாணயக்கார 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/204225

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியது இலங்கை

21 JAN, 2025 | 12:04 PM
image
 

(நெவில் அன்தனி)

கோலாலம்பூர், பேயுமாஸ் ஓவல் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற ஏ குழுவுக்கான தனது இரண்டாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 81 ஓட்டங்களால் வெற்றிகொண்ட இலங்கை, இரண்டாவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தின் சுப்பர் சிக்ஸ் சுற்றில் விளையாடுவதை உறுதிசெய்துகொண்டது.

மலேசியாவுக்கு எதிரான போட்டியில் போன்றே மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியிலும் சகலதுறைகளிலும் மிகவும் பொறுப்புணர்வுடன் விளையாடிய இலங்கை மிக இலகுவாக வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த 19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது.

இந்த வருட 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இதுவரை அணி ஒன்றினால் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

சஞ்சனா காவிந்தி, சுமுது நிசன்சலா ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 39 பந்துகளில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

சுமுது நிசன்சலா 19 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் அணித் தலைவி மனுதி நாணயக்காரவுடன் 2ஆவது விக்கெட்டில் மேலும் 48 ஓட்டங்களை சஞ்சனா காவிந்தி பகிர்ந்து  அணியை நல்ல நிலையில் இட்டார்.

மிகவும் நிதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடிய சஞ்சனா காவிந்தி 6 பவுண்டறிகளுடன் 38 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரைத் தொடர்ந்து ஹிருணி குமாரி ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார்.

எனினும் மனுதி நாணயக்காரவும் தஹாமி சனெத்மாவும் 4ஆவது விக்கெட்டில் 30 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகம் ஊட்டினர்.

மனுதி நாணயக்கார 4 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 37 ஓட்டங்களைக் குவித்தார்.

மொத்த எண்ணிக்கை 137 ஓட்டங்களாக இருந்தபோது   மனுதி நாணயக்கார,   ரஷ்மிக்கா செவ்வந்தி (0)  ஆகிய இருவரும் ஆட்டம் இழந்தனர்.

திறமையாகத் துடுப்பெடுத்தாடிய தஹாமி சனெத்மா ஆட்டம் இழக்காமல் 31  ஓட்டங்களைப்   பெற்றதுடன் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் ஷஷினி கிம்ஹானியுடன் 29 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டார். கிம்ஹானி 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் செலினா ரொஸ் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 167 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி 19.4ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 85  ஓட்டங்களைப்  பெற்று தோல்வி அடைந்தது.

இலங்கை பந்துவீச்சாளர்கள் மிகத் திறமையாக பந்துவீசியதால் மேற்கிந்தியத் தீவுகள் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.

அணித் தலைவி சமாரா ராம்நாத் (24 ஓட்டங்கள்), ஜஹ்ஸாரா க்ளெக்ஸ்டன் (15), கெனிக்கா கசார் (12), அம்ரிதா ராம்தஹால் (11) ஆகிய நால்வரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் சமுதி ப்ரபோதா 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லிமன்சா திலக்கரட்ன 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அசேனி தலகுனே 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ரமுதி மெத்சரா, ஷஷினி கிம்ஹானி ஆகியோர் தலா ஓரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: சமுதி ப்ரபோதா.

https://www.virakesari.lk/article/204423

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

19இன் கீழ் மகளிர் டி20 உலகக் கிண்ணம்: அறிமுக போட்டியிலேயே வைஷ்ணவி ஹெட்-ட்ரிக்; மலேசியாவை வென்றது இந்தியா

Published By: VISHNU

21 JAN, 2025 | 07:42 PM
image
 

(நெவினல் அன்தனி)

கோலாலம்பூர், பேயுமாஸ் ஓவல் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற மலேசியாவுக்கு எதிரான ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் இந்தியாவின் அறிமுக வீராங்கனை வைஷ்ணவி ஷர்மா ஹெட்-ட்ரிக்குடன் 5 விக்கெட்களைக் கைப்பற்ற இந்தியா 10 விக்கெட்களால் வெற்றிபெற்றது.

2101_vaishnavi_sharma_india_hat-trick.jp

இடது கை சுழற்பந்து வீச்சாளரான வைஷ்ணவி ஷர்மா இந்த வருட 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் முதலாவது ஹெட்-ட்ரிக்கை பதிவு செய்து  வரலாறு படைத்தார்.

19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் பதிவான இரண்டாவது ஹெட்-ட்ரிக் இதுவாகும்.

தென் ஆபிரிக்காவில் 2023இல் நடைபெற்ற அங்குரார்ப்பண ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் ஸ்கொட்லாந்துக்கு எதிரான போட்டியில் தென் ஆபிரிக்காவின் மெடிசன் லாண்ட்ஸ்மன் முதலாவது ஹெட் - ட்ரிக்கை பதிவு செய்து சாதனை நிலைநாட்டியிருந்தார்.

மலேசியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் ஹெட் - ட்ரிக் முறையில் விக்கெட்களை வீழ்த்திய வைஷ்ணவி ஷர்மா, ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 5 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டி வரலாற்றில் இதுவே மிகச் சிறந்த பந்துவீச்சு பெறுதியாகும்.

சோனம் யாதவ்வுக்கு பதிலாக இந்திய அணியில் இடம்பிடித்த அறிமுக வீராங்கனை வைஷ்ணவி, மலேசியாவை 14.3 ஓவர்களில் 31 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க உதவினார்.

அவர் தனது முதலாம் கட்ட பந்துவீச்சில் மலேசிய அணித் தலைவி நூர் டானியா சியூஹடாவையும் நுரிமன் ஹியாதாவை யும்  ஆட்டம் இழக்கச் செய்ததுடன் இரண்டாம் கட்ட பந்துவீச்சில் நூர் ஐன் பின்தி ரோஸ்லான், நூர் இஸ்மா டானியா, சித்தி நஸ்வா ஆகியோரை ஹெட் - ட்ரிக் முறையில் வெளியேற்றினார்.

வைஷ்ணவிக்கு பக்கபலமாக பந்துவீசிய ஆயுஷி ஷுக்லா ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 3.3 ஓவர்களில் 8 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

மலேசியா பெற்ற 31 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிய இந்தியா 2.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 32 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ட்ரிஷா கொங்காடி 27 ஓட்டங்களுடனும் இந்த வருட மகளிர் பிறீமியர் லீக் போட்டிக்கான ஏலத்தில் மும்பை இண்டியன்ஸினால் 1.60 கோடி ருபாவுக்கு வாங்கப்பட்ட ஜீ. கமலினி 4 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

ஆட்டநாயகி: வைஷ்ணவி ஷர்மா

https://www.virakesari.lk/article/204484

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

19இன் கீழ் மகளிர் ரி20 உலக் கிண்ண லீக் சுற்றில் 2 போட்டிகள் மீதம் இருக்க சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு 11 அணிகள் தகுதி

Published By: VISHNU   22 JAN, 2025 | 07:40 PM

image

(நெவில் அன்தனி)

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றுவரும் இரண்டாவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கட் அத்தியாயத்தின் 5ஆம் நாள் போட்டிகள் முடிவில் சுப்பர் சிக்ஸ் சுற்றில் விளையாட 11 அணிகள் தகுதிபெற்றுள்ளன.

ஏ குழுவில் இன்னும் இரண்டு போட்டிகள் மீதம் இருக்கின்ற போதிலும் நடப்பு சம்பியன் இந்தியாவும் இலங்கையும் சுப்பர் சிக்ஸ் சுற்றில் விளையாட தகுதிபெற்றுகொண்டுள்ளன.

மேற்கிந்தியத் தீவுகளுக்கும் மலேசியாவுக்கும் இடையில் நாளை நடைபெறவுள்ள போட்டியில் வெற்றிபெறும் அணி இக் குழுவிலிருந்து 3ஆவது அணியாக சுப்பர் சிக்ஸ் சுற்றில் விளையாட தகுதிபெறும்.

பி குழுவிலிருந்து இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்கா, அயர்லாந்து ஆகிய அணிகளும் சி குழுவிலிருந்து தென் ஆபிரிக்கா, நைஜீரியா, நியூஸிலாந்து ஆகிய அணிகளும் டி குழுவிலிருந்து அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து ஆகிய அணிகளும் சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இன்றைய போட்டி முடிவுகள்

குழு பி

இங்கிலாந்துக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் ஜோஹோர் கிரிக்கெட் பயிற்சியக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட்களால் வெற்றிபெற்றது.

2201_eng_win.jpg

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட ஐக்கிய அமெரிக்க மகளிர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 119 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து மகளிர் அணி  14.2 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 120 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

டாவினா சரா பெரின் 74 ஓட்டங்களைப் பெற்று இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் தனிநபருக்கான அதிகூடிய மொத்த எண்ணிக்கையைப் பதிவுசெய்தார்.

அயர்லாந்து வெற்றி

அயர்லாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமைப் பிரகாரம் அயர்லாந்து 13 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

2201_ireland_win_dls_method.jpg

சீரற்ற காலநிலை காரணமாக ஜோஹோர் கிரிக்கெட் பயிற்சியக ஓவல் மைதானத்தில் தடைப்பட்ட இப் போட்டி அணிக்கு 9 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது. 

முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட அயர்லாந்து மகளிர் அணி 9 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 69 ஓட்டங்களைப் பெற்றது.

19 வயதுக்குட்பட்ட பாகிஸ்தான் மகளிர் அணிக்கு டக்வேர்த் லூயிஸ் முறைமைப் பிரகாரம் 9 ஓவர்களில் வெற்றி இலக்கு 73 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.

பாகிஸ்தான் 9 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 59 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

சி குழு

சரவாக், போர்னியோ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற சி குழு போட்டியில் நைஜீரியாவை டக்வேர்த் லூயிஸ் முறைமைப் பிரகாரம் 41 ஓட்டங்களால் தென் ஆபிரிக்கா வெற்றிகொண்டது.

சீரற்ற காலநிலையால் தடைப்பட்ட ஆட்டம் 8 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

2201_south_africa_win_dls_method.jpg

முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட தென் ஆபிரிக்க மகளிர் அணி 8 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 49 ஓட்டங்களைப் பெற்றது.

8 ஓவர்களில் 66 ஓட்டங்கள் என்ற திருத்தப்பட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட நைஜீரிய மகளிர் அணி 8 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 24 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

நியூஸிலாந்து வெற்றி

சராவக், போர்னியோ கிரிக்கெட் மைதானத்தில் அணிக்கு 17 ஓவர்களாக நிர்ணயிக்கப்பட்டு நடத்தப்பட்ட போட்டியில் சமோஆ அணியை எதிர்த்தாடிய நியூஸிலாந்து 67 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

2201_nz_win.jpg

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட நியூஸிலாந்து மகளிர் அணி 17 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட சமோஆ மகளிர் அணி 14.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 40 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

டி குழு

அவுஸ்திரேலியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையில் பாங்கி YSD-UKM கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அவுஸ்திரேலியா 83 ஒட்டங்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது.

2201_aus_win.jpg

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்பத்தில் தடுமாறிய அவுஸ்திரேலியா 4ஆவது விக்கெட்டில் கோய்மி ப்றே, எலினோர் லரோசா ஆகிய இருவரும் பகிர்ந்த 72 ஓட்டங்களின் உதவியுடன் கௌரவமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட சமோஆ மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 56 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

பங்களாதேஷ் வெற்றி

பாங்கி  YSD-UKM  கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு டி குழு போட்டியில் ஸ்கொட்லாந்திடம் சவாலை எதிர்கொண்ட பங்களாதேஷ் 17 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

2201_bang_win.jpg

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் மகளிர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட ஸ்கொட்லாந்து மகளிர் அணி 8 விக்கெட்களை இழந்து 103 ஓட்டங்ளைப் பெற்றது.

https://www.virakesari.lk/article/204603

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலேசியாவை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ் தகுதியைப் பெற்றது மேற்கிந்தியத் தீவுகள்

23 JAN, 2025 | 12:37 PM
image
 

(நெவில் அன்தனி)

கோலாலம்பூர், பேயுமாஸ் ஓவல் மைதானத்தில் இன்று (23) நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண ஏ குழுவுக்கான கடைசிக்கு முந்தைய லீக் போட்டியில் மலேசியாவை 53 ஓட்டங்களால் வெற்றிகொண்ட மேற்கிந்தியத் தீவுகள் கடைசி அணியாக சுப்பர் சிக்ஸ் சுற்றில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டது.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி சுப்பர் சிக்ஸ் வாய்ப்பைப் பெறும் என்ற சூழ்நிலையில் இரண்டு அணிகளும் வெற்றியைக் குறிவைத்து களம் இறங்கின.

ஆனால், இந்த வருட 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணத் தொடரில் முதல் தடவையாக திறமையை வெளிப்படுத்திய மேற்கிந்தியத் தீவுகள் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டி சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை உறுதி செய்துகொண்டது.

அதேவேளை, இந்தத் தோல்வியால் வரவேற்பு நாடான மலேசியா போட்டியிலிருந்து ஏமாற்றத்துடன் வெளியேறியது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 112 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் அசாபி கெலண்டர் 30 ஓட்டங்களையும் ஜஸாரா க்ளக்ஸ்டன் 19 ஓட்டங்களையும் அபிகெய்ல் ப்றைஸ் 14 ஓட்டங்களையும் பெற்றதுடன் உதிரிகளாக 27 ஓட்டங்கள் மொத்த எண்ணிக்கைக்கு சேர்ந்தது.

பந்துவீச்சில் நூர் இஸத்துள் சியாபிக்கா 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நஸ்வா 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மலேசியா 18 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 59 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியுடன் வெளியேறியது.

அணித் தலைவி நூர் டானியா சியுஹதா 12 ஓட்டங்களைப் பெற்றார். இதன் மூலம் இந்த சுற்றுப் போட்டி முழுவதிலும் மலேசியா சார்பாக இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்ற ஒரே ஒரு வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

மலேசியாவின் மொத்த எண்ணிக்கையில் 21 உதிரிகளே அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது.

பந்துவீச்சில் சமாரா ராம்நாத் 6 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் எரின் டியேன் 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நய்ஜன்னி கும்பபெச் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: சமாரா ராம்நாத்.

https://www.virakesari.lk/article/204650

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கை ம‌க‌ளிர் இந்தியாவிட‌ம் ப‌டு தோல்வி

 

பின‌லுக்கு அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் போவ‌து உறுதி 

சில‌து இந்தியா ம‌க‌ளிர் கோப்பை வெல்ல‌க் கூடும்...........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரை இறுதி வாய்ப்பை இழந்தது இலங்கை; இந்தியா, அவுஸ்திரேலியா முன்னேறியது

Published By: VISHNU   26 JAN, 2025 | 07:43 PM

image
 

(நெவில் அன்தனி)

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றுவரும் இரண்டாவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் அரை இறுதிக்கு செல்லும் இலங்கையின் வாய்ப்பு இயற்கை அன்னையின் சீற்றத்தால் பறிபோனது.

இக் குழுவிலிருந்து அவுஸ்திரேலியாவும் நடப்பு சம்பியன் இந்தியாவும் அரை இறுதிகளில் விளையாட தகுதி பெற்றுக்கொண்டன.

இலங்கைக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையில் கோலாலம்பூர், பேயுமாஸ் ஓவல் மைதானத்தில் இன்று  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த முதலாம் குழுவுக்கான சுப்பர் சிக்ஸ் போட்டி சீரற்ற காலநிலையால் நாணய சுழற்சி நடத்தப்படாமலேயே முழமையாக கைவிடப்பட்டதால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

சுப்பர்  சிக்ஸ் சுற்றை முதலாம் குழுவில் 2 புள்ளிகளுடன் ஆரம்பித்த இலங்கை தற்போது 3 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் இருக்கிறது. ஸ்கொட்லாந்து ஒரு புள்ளியுடன் 6ஆம் இடத்தில் இருக்கிறது.

சுப்பர் சிக்ஸ் சுற்றை தலா 4 புள்ளிகளுடன் ஆரம்பித்த அவுஸ்திரேலியாவும் இந்தியாவும் இந்த சுற்றில் தத்தமது முதலாவது போட்டிகளில் வெற்றி பெற்றதால் தலா 6 புள்ளிகளைப் பெற்று அரை இறுதியில் விளையாடுவதை உறுதி செய்துகொண்டன.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற்ற சுப்ப சிக்ஸ் போட்டியில் 7 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி 19 வயதுக்குட்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி 16.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 53 ஓட்டங்களைப் பெற்றது.

2601_aus_win.jpg

துடுப்பாட்டத்தில் ப்றைஅனா ஹரிச்சரன் 17 ஓட்டங்களையும் சமாரா ராம்நாத் 14 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் எலீனோர் லரோசா, காய்மி ப்றே, டேஜான் வில்லியம்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் அணி 10.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 57 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

துடுப்பாட்டத்தில் லூசி ஹெமில்டன் 28 ஓட்டங்களைப் பெற்றார்.

பங்களாதேஷுக்கு எதிராக  இன்று  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  போட்டியில் இந்தியா 8 விக்கெட்களால் வெற்றிபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 64 ஓட்டங்களைப் பெற்றது.

2601_india_win.jpg

பங்களாதேஷ் சார்பாக சுமய்யா அக்தர் ஆட்டம் இழக்காமல் 21 ஓட்டங்களையும் ஜன்னத்துள் மௌஆ 14 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் வைஷ்ணவி ஷர்;மா 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் அணி 7.1 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 66 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ட்ரிஷா கங்காடி 31 பந்துகளில் 8 பவுண்டறிகளுடன் 40 ஓட்டங்களைக் குவித்தார்.

இப் போட்டி முடிவுகளை அடுத்து இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் தலா 6 புள்ளிகளைப் பெற்றுள்ளன. நிகர ஓட்ட வேக அடிப்படையில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.

இக் குழுவில் இடம்பெறும் மற்றைய நான்கு அணிகளால் 6 புள்ளிகளைப் பெற முடியாது என்பதால் இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டன.

https://www.virakesari.lk/article/204971

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன‌ அணிக‌ளுட‌னான விளையாட்டு சீக்கிர‌ம் முடிஞ்சிடுது....................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா, அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்காவைத் தொடர்ந்து இங்கிலாந்து அரை இறுதிக்கு முன்னேறியது

Published By: VISHNU   27 JAN, 2025 | 07:45 PM

image
 

(நெவில் அன்தனி)

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றுவரும் ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் இந்தியா, அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா ஆகிய அணிகளைத் தொடர்ந்து இங்கிலாந்து கடைசி அணியாக அரை இறுதிகளில் விளையாட தகுதி பெற்றுக்கொண்டது.

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண சுப்பர் சிக்ஸ் சுற்றில் இரண்டாம் குழுவிலிருந்து முதலாவது அணியாக தென் ஆபிரிக்கா அரை இறுதிக்கு முன்னேறி இருந்தது.

2701_eng_win.jpg

அதனைத் தொடர்ந்து இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் நேற்றைய தினம் அரை இறுதிச் சுற்றில் விளையாட தகுதி பெற்றிருந்தன.

இன்றைய தினம் நடைபெற்ற இரண்டாம் குழுவுக்கான ஒரே ஒரு சுப்பர் சிக்ஸ் போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்து நான்காவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

சரவாக், போர்னியோ கிரிக்கெட் மைதானத்தில் இன்று திங்கட்கிழமை (27) நடைபெற்ற இரண்டாம் குழுவுக்கான சுப்பர் சிக்ஸ் போட்டியில் நியூஸிலாந்தை 6 விக்கெட்களால் இங்கிலாந்து வெற்றிகொண்டது.

தென் ஆபிரிக்காவில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் அரை இறுதிவரை முன்னேறியிருந்த நியூஸிலாந்து இந்த வருடம் சுப்பர் சிக்ஸ் சுற்றுடன் வெளியேறுகிறது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட நியூஸிலாந்து மகளிர் அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 89 ஓட்டங்களைப் பெற்றது.

எம்மா மெக்லியோட், கேட் ஏர்வின் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி முதலாவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர்.

ஆனால், ஏனைய வீராங்கனைகள் அதனை அனுகூலமாக்கிக்கொள்ளத் தவறியது நியூஸிலாந்து அணிக்கு பாதகமாக அமைந்தது.

கேட் ஏர்வின் 35 ஓட்டங்களையும் எம்மா மெக்லியோட் 18 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்களை விட வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையை எட்டவில்லை.

மேலும் நியூஸிலாந்தின் 10 விக்கெட்கள் 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன.

பந்துவீச்சில் டில்லி கோர்ட்டீன் கோல்மன் 8 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ப்ரிஷா தனவாலா 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ட்ருடி ஜொன்சன் 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து மகளிர் அணி 11.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 90 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஜெமிமா ஸ்பென்ஸ் 29 ஓட்டங்களையும் டாவினா பெரின் 21 ஓட்டங்களையும் சார்ளட் ஸ்டப்ஸ் ஆட்டம் இழக்காமல் 17 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ரிஷிக்கா ஜஸ்வால் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/205076

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ட்ரிஷாவின் சாதனைமிக்க சதத்தின் உதவியுடன் இந்தியா 150 ஓட்டங்களால் வெற்றி

Published By: VISHNU   28 JAN, 2025 | 11:26 PM

image
 

(நெவில் அன்தனி)

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் முதலாவது சதத்தை ட்ரிஷா கொங்காடி குவித்து சாதனை படைக்க, ஸ்கொட்லாந்தை 150 ஓட்டங்களால் இந்தியா மிக இலகுவாக வெற்றிகொண்டது.

கோலாலம்பூர் பேயுமாஸ் ஓவல் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற முதலாம் குழுவுக்கான சுப்பர் சிக்ஸ் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 208 ஓட்டங்களைக் குவித்தது.

2801_trisha_100_not_out.jpg

இந்த வருட 19 வயதுக்குட்பட்ட ரி20 மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

ட்ரிஷா கொங்காடி,  குணாலன்  கமலினி  ஆகிய இருவரும் 81 பந்துகளில் 147 ஓட்டங்களைப் பகிர்ந்த இந்தியாவுக்கு பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

2801_kamalini_ind.jpg

இந்த இணைப்பாட்டம் 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் சகல விக்கெட்களுக்குமான சாதனையுடன் கூடிய அதிகூடிய இணைப்பாடடமாகும்.

தமிழ்நாடு மதுரையைச் சேர்ந்த குணாலன் கமலினி ஜீ 42 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகளுடன் 51 ஓட்டங்களைப் பெற்று முதலாவதாக ஆட்டம் இழந்தார்.

அதனைத் தொடர்ந்து ட்ரிஷாவும் சானிக்கா சோல்கேயும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 39 பந்துகளில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

ட்ரிஷா கொங்காடி அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 59 பந்துகளில் 13 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 110 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

சானிக்கா சோல்கே ஆட்டம் இழக்காமல் 29 ஓட்டங்களைப் பெற்றார்.

பதிலுக்க துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 14 ஒவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 58 ஓட்டங்களை மட்டும் பெற்று தோல்வி அடைந்தது.

பிப்பா கெலி (12), எம்மா வால்சிங்கம் (12), பிப்பா ஸ்ப்ரூல் (11), நய்மா ஷெய்க் (10 ஆ.இ.) ஆகிய நாலவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் மிதிலா விநோத் 8 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் வைஷ்ணவி  ஷர்மா 5 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ட்ரிஷா கொங்காடி 6 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: ட்ரிஷா கொங்காடி.

 

பங்களாதேஷுக்கு வெற்றி

 

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் தனது கடைசி முதலாம் குழுவுக்கான சுப்பர் சிக்ஸ் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை எதிர்கொண்ட பங்களாதேஷ் 10 விக்கெட்களால் வெற்றிபெற்றது.

பேயுமாஸ் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி 13 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 54 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 8.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 55 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

தென் ஆபிரிக்காவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையிலான இரண்டாம் குழு சுப்பர் சிக்ஸ் போட்டி  மழையினால் முழுமையாகக் கைவிடப்பட்டது.

நாளைய தினம் கடைசி சுப்பர் சிக்ஸ் போட்டிகள்

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் கடைசி 2 சுப்பர் சிக்ஸ் போட்டிகள் நாளை புதன்கிழமை (29) நடைபெறவுள்ளது.

இலங்கை தனது கடைசி போட்டியில் அவுஸ்திரேலியாவை பாங்கி YSD - UKM கிரிக்கெட் ஓவல் மைதானத்தில் எதிர்தாடவுள்ளது. நைஜீரியாவுக்கும் அயர்லாந்துக்கும் இடையிலான போட்டியும் இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த இரண்டு போட்டிகளுடன் சுப்பர் சிக்ஸ் சுற்று நிறைவடைகிறது.

https://www.virakesari.lk/article/205168

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணம் : பந்துவீச்சிலும் களத்தடுப்பிலும் லிமன்சா அபாரம்; அவுஸ்திரேலியாவை அதிரவைத்தது இலங்கை

29 JAN, 2025 | 04:34 PM
image

(நெவில் அன்தனி)

மலேசியாவில் நடைபெற்றுவரும் இரண்டாவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் கடைசி சுப்பர் சிக்ஸ் போட்டியில் அவுஸ்திரேலியாவை 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்பவுள்ளது.

இலங்கை பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சுகளும் லிமன்சா திலக்கரட்னவின் பந்துவீச்சு மற்றும் அதிசிறந்த களத்தடுப்பு என்பனவும் இலங்கையை வெற்றி அடையச் செய்தன.

download.jpg

ஹம்பாந்தோட்டையில் கடந்த வருடம் மார்ச் மாதம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 மும்முனை தொடரின் ஆரம்பப் போட்டியில் அவுஸ்திரேலியாவை 7 ஓட்டங்களால் வெற்றிகொண்டிருந்த இலங்கைக்கு, மலேசியாவில் 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் கிடைத்த வெற்றி மகத்தான வெற்றியாக அமைந்தது.

இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா தோல்வி அடைந்த போதிலும் அவ்வணி ஏற்கனவே அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றிருந்தது.

பாங்கி YSD-UKM கிரிக்கெட் ஓவல் மைதானத்தில் இன்று பகல் நடைபெற்ற முதலாம் குழுவுக்கான சுப்பர் சிக்ஸ் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 99 ஓட்டங்களைப் பெற்றது.

முன்வரிசை வீராங்கனைகளான சஞ்சனா காவிந்தி (19), சுமுது நிசன்சலா (18), மனுதி நாணயக்கார (15), ஹிருணி குமாரி (14) ஆகிய நால்வரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் லில்லி பாசிந்த்வெய்ட் 7 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹஸ்ரத் கில் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டேகான் வில்லியம்சன் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்டெக்களை இழந்து 87 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

முதல் 3 விக்கெட்களை குறைந்த ஓட்டங்களுக்கு இழந்த அவுஸ்திரேலியாவுக்கு 4ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த கயோமே ப்றே, எலினோர் லரோசா ஆகிய இருவரும் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து தெம்பூட்டினர்.

ஆனால், 15ஆவது ஓவரில் 3 விக்கெட்களை இழந்து 64 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்த அவுஸ்திரேலியா அதன் பின்னர் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 5 விக்கெட்களை இழந்து தோல்வியைத் தழுவியது.

கயோமே ப்றே 27 ஓட்டங்களளையும் எலினோர் லரோசா 18 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்களை விட ஐன்ஸ் மெக்கியொன், லூசி ஹெமில்டன், க்றேஸ் லயன்ஸ் ஆகியோர் தலா 10 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் சமுதி ப்ரபோதா 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ரமுதி மெத்சரா 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அசேனி தலகுனே 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

மிக முக்கியமான ப்றேயின் விக்கெட்டை வீழ்த்திய லிமன்சா திலக்கரட்ன, 2 பிடிகளை எடுத்ததுடன் ஒரு ரன் அவுட்டிலும் பங்காற்றி ஆட்டநாயகி விருதை தனதாக்கிக்கொண்டார்.

நைஜீரியா வெற்றி

இப் போட்டிக்கு முன்னர் நடைபெற்ற இரண்டாம் குழுவுக்கான கடைசி சுப்பர் சிக்ஸ் போட்டியில் அயர்லாந்தை நைஜீரியா 6 ஓட்டங்களால் வெற்றிகொண்டிருந்தது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட நைஜீரிய மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 94 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட அயர்லாந்து மகளிர் அணி 18.4 ஓவர்களில் 88 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

வெள்ளிக்கிழமை அரை இறுதிகள்

சுப்பர் சிக்ஸ் சுற்று இன்றுடன் நிறைவடைந்ததுடன் அரை இறுதிப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (31)நடைபெறவுள்ளன.

முதலாவது அரை இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவை அவுஸ்திரேலியாவை எதிர்த்தாடவுள்ளது.

அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் இந்தியாவை இங்கிலாந்து சந்திக்கவுள்ளது.

அரை இறுதிகளில் வெற்றிபெறும் அணிகள் பெப்ரவரி 2ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாடும்.

https://www.virakesari.lk/article/205251

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

19இன் கீழ் மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிகள்:  தென் ஆபிரிக்கா எதிர் அவுஸ்திரேலியா, நடப்பு சம்பியன் இந்தியா எதிர் இங்கிலாந்து

Published By: VISHNU   30 JAN, 2025 | 10:51 PM

image

(நெவில் அன்தனி)

மலேசியாவில் நடைபெற்றுவரும் 2ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் விளையாடப் போகும இரண்டு அணிகளைத் தீர்மானிக்கும் அரை இறுதிப் போட்டிகள் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளன.

கோலாலம்பூர் பேயுமாஸ் ஓவல் விளையாட்டரங்கில் நாளை நடைபெறவுள்ள முதலாவது அரை இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவும் அவுஸ்திரேலியாவும் விளையாடவுள்ளன.

தொடர்ந்து நடைபெறவுள்ள இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் இந்தியாவை இங்கிலாந்து எதிர்த்தாடவுள்ளது.

இந்த நான்கு அணிகளில் தென் ஆபிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய 3 அணிகளும் தோல்வி அடையாத அணிகளாக அரை இறுதிகளில் விளையாட தகுதிபெற்றன.  

ஆனால், முதலாம் குழுவுக்கான தனது கடைசி சுப்பர் சிக்ஸ் போட்டியில் இலங்கையிடம் முற்றிலும் எதிர்பாராத விதமாக அவுஸ்திரேலியா தோல்வி அடைந்திருந்தது.

தென் ஆபிரிக்கா எதிர் அவுஸ்திரேலியா

தென் ஆபிரிக்காவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான போட்டியில் வெற்றிபெறுவதற்கு அனுகூலமான அணியாக தென் ஆபிரிக்கா திகழ்கின்ற போதிலும் அவுஸ்திரேலியா தலைகீழ் முடிவுவை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

3001_australia_u19.png

3001_south_africa_u19.png

தென் ஆபிரிக்கா விளையாடிய 5 போட்டிகளில்   (முதல் சுற்று மற்றும் சுப்பர் சிக்ஸ் சுற்று) நான்கில் வெற்றிபெற்றது. ஒரு போட்டி முழமையாக கைவிடப்பட்டது.

தென் ஆபிரிக்க துடுப்பாட்டத்தில் எவரும் பெரியளவில் பிரகாசிக்கவில்லை. ஏனெனில் அவர்களில் ஒருசிலரே துடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், சிறப்பான பந்துவீச்சே தென் ஆபிரிக்காவின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியிருந்தது.

தென் ஆபிரிக்கா சார்பாக துடுப்பாட்டத்தில் சிமோன் லௌரென்ஸ் 4 போட்டிகளில் 66 ஓட்டங்களையும் ஜெம்மா போத்தா 52 ஓட்டங்களையும் பெற்றனர். 

பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட கேலா ரினெக் 9 விக்கெட்களையும் மோனா லிசா லெகோடி 6 விக்கெட்களையும் நிதாபிசெங் நினி 5 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அவுஸ்திரேலியா 5 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை ஈட்டியதுடன் ஒரு தோல்வியைத் தழுவியது.

அவுஸ்திரேலியவின் துடுப்பாட்டமும் பந்துவீச்சும் பலம்வாய்ந்ததாக போட்டி முடிவுகளிலிருந்து தெரிகிறது.

அவுஸ்திரேலிய சார்பாக துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்திய கயோமே ப்றே 83 ஓட்டங்களையும் லூசி கேய் ஹெமில்டன் 71 ஓட்டங்களையும் கேட் மாரி பேலே 60 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஹஸ்ரத் கில் 8 விக்கெட்களையும் டேகான் வில்லியம்சன், எலினோர் லரோசா, கயோமே ப்றே ஆகியோர் தலா 7 விக்கெட்களையும், லில்லி பாசிங்வெய்ட் 6 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்தியா எதிர் இங்கிலாந்து

இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை பலம்வாய்ந்த இந்தியா வெற்றிகொள்ளும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

3001_india_u_19.png

3001_england_u19.png

துடுப்பாட்டம், பந்துவீச்சு ஆகிய இரண்டு துறைககளிலும் இந்தியா பலம்மிக்கதாக இருக்கிறது. முதல் சுற்றல் மிகக் குறைந்த எண்ணிக்கைளைக் கொண்ட போட்டிகளில் இலகுவாக வெற்றிபெற்ற இந்தியா, சுப்பர் சி;க்ஸ் சுற்றில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தி கணிசமான மோத்த எண்ணக்கைகளைப் பெற்றது.

19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் ட்ரிஷா கொங்காடி குவித்த முதலாவது சதத்தின் உதவியுடன் ஸ்கொட்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 200க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்தது.

3001__trisha_gongadi.png

இந்தியா சார்பாக துடுப்பாட்டத்தில் ட்ரிஷா கொங்காடி ஒரு ஆட்டம் இழக்காத சதம் உட்பட 230 ஓட்டங்களையும் குணாலன் கமலினி ஒரு அரைச் சதத்துடன் 71 ஓட்டங்களை யும்   பெற்றுள்ளனர். ஆறு துடுப்பாட்ட வீராங்கனைகளின் ஸ்ட்ரைக் ரேட் 100க்கும் மேற்பட்டதாக இருப்பது இந்தியாவுக்கு பலம்சேர்ப்பதாக அமைகிறது.

3001_vaishnavi_sharma.jpg

பந்துவீச்சில் 5 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்கள் என்ற சிறந்த பந்துவீச்சுப் பெறுதியுடன் வைஷ்ணவி ஷர்மா 12 விக்கெட்களைக் கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறார். ஆயுஷி ஷுக்லா 10 விக்கெட்களையும் வி.ஜே. ஜோஷித்தா 6 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர். இவர்கள் அனைவரும் இங்கிலாந்துக்கு சவாலாக விளங்குவர் என நம்பப்படுகிறது.

மறுபக்கத்தில் இங்கிலாந்து விளையாடிய 5 போட்டிகளில் 2 போட்டிகள் கைவிடப்பபட்டன. இதன் காரணமாக அதன் வீராங்கனைகளுக்கு துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் அதிகளவில் ஈடுபட முடியாமல்போனது. ஆனால், விளையாடப்பட்ட 3 போட்டிகளில் இங்கிலாந்து வீராங்கனைகள் சிறப்பான ஆற்றல்களை வெளிப்படுத்தியிருந்தனர்.

இங்கிலாந்து துடுப்பாட்டத்தில் டாவினா பெரின் ஓர் அரைச் சதத்துடன் 131 ஓட்டங்களையும் ஜெமிமா ஸ்பென்ஸ் 66 ஓட்டங்களையும் ட்ருடி ஜோன்சன் 60 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

பந்துவீச்சில் டில்லி கோர்டீன் கோல்மன் 7 விக்கெட்களையும் ப்ரிஷா தனவாலா 5 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர்.  

இந்த இரண்டு அணிகளில் சகலதுறைகளிலும் இந்தியா பலம்வாய்ந்ததாக இருக்கின்றது. எனவே இந்தியாவை வெற்றிகொள்வதாக இருந்தால் இங்கிலாந்து அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்த வேண்டிவரும்.

இந்த இரண்டு அரை இறுதிப் போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் பெப்ரவரி 2ஆம் திகதி நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும்.

https://www.virakesari.lk/article/205377

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

19 இன் கீழ் மகளிர் ரி - 20 உலகக் கிண்ண இறுதி ஆட்டம் : சம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் குறிக்கோளுடன் தென் ஆபிரிக்காவை சந்திக்கிறது இந்தியா

31 JAN, 2025 | 10:03 PM
image

(நெவில் அன்தனி)

மலேசியாவின் கோலாலம்பூர், பேயுமாஸ் ஓவல் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெறவுள்ள ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் சம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் குறிக்கோளுடன் தென் ஆபிரிக்காவை நடப்பு சம்பியன் இந்தியா சந்திக்கிறது.

இந்த இறுதிப் போட்டி இலங்கை நேரப்படி  ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

தென் ஆபிரிக்காவில் 2023இல் நடைபெற்ற அங்குரார்ப்பண ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்த்தாடிய ஷஃபாலி வர்மா தலைமையிலான இந்தியா 7 விக்கெட்களால் வெற்றிபெற்று முதலாவது சம்பியனாகியிருந்தது.

இப்போது அங்குரார்ப்பண அத்தியாயத்தை முன்னின்று நடத்திய தென் ஆபிரிக்காவை இறுதிப் போட்டியில் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையுடன்  இந்தியா   களம் இறங்கவுள்ளது.

இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இரண்டு அணிகளும் தோல்வி அடையாத அணிகளாக இருப்பதால், இறுதிப் போட்டி பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதிப் போட்டிக்கு முன்னோடியாக கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 9 விக்கெட்களால் இந்தியாவும் மற்றைய அரை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை 5 விக்கெட்களால் தென் ஆபிரிக்காவும் வெற்றிகொண்டு இன்றைய இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன.

இந்தியா முதல் சுற்றில் 3 போட்டிகளிலும் சுப்பர் சிக்ஸ் சுற்றில் 2 போட்டிகளிலும் அரை இறுதிப் போட்டியிலுமாக தான் விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றிபெற்றது.

தென் அபிரிக்கா முதல் சுற்றில் 3 போட்டிகளிலும் சுப்பர் சிக்ஸ் சுற்றில் ஒரு போட்டியிலும் அரை இறுதிப் போட்டியிலுமாக 5 போட்டிகளில் வெற்றிபெற்றிருந்தது. சுப்பர் சிக்ஸ் சுற்றில் ஒரு போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

இந்த இரண்டு அணிகளில் இந்தியா சகலதுறைகளிலும் பலம்வாய்ந்த அணியாகத் தென்படுவதால் இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்கா கடும் சவாலை எதிர்கொள்ளும் என கருதப்படுகிறது.

இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய வீராங்கனைகளே அதிகூடிய மொத்த ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் அதிகூடிய விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

ட்ரிஷா கொங்காடி 6 போட்டிகளில் ஆட்டம் இழக்காத ஒரு சதம் உட்பட 265 ஓட்டங்களைக் குவித்துள்ளதுடன் தமிழக வீராங்கனை குணாலன் கமலினி 2 அரைச் சதங்களுடன் 135 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

பந்துவீச்சில் வைஷ்ணவி ஷர்மா 5 போட்டிகளில் 15 விக்கெட்களையும் ஆயுஷி ஷுக்லா 6 போட்டிகளில் 12 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

முதலாவது போட்டியில் விளையாடாமல் இருந்த வைஷ்ணவி, மற்றொரு சுழல்பந்துவீச்சாளர் காயமுற்றதால் இரண்டாவது போட்டியில் விளையாடினார். அப் போட்டியில் 5 விக்கெட்களைக் கைப்பற்றியதுடன் அணியில் நிரந்தர இடத்தைப் பிடித்துக்கொண்டார்.

இந்த நால்வருடன் ஏனைய வீராங்கனைகளும் இந்தியாவை மீண்டும் உலக சம்பியனாக்கும் குறிக்கோளுடன் களம் இறங்கவுள்ளனர்.

தென் ஆபிரிக்க அணியில் ஜெம்மா போத்தா (86 ஓட்டங்கள்), கேலா ரினேக் (10 விக்கெட்கள்) ஆகிய இருவரே துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் ஓரளவு பிரகாசித்துள்ளனர்.

அணிகள் விபரம்

இந்தியா: குணாலன் கமலினி, ட்ரிஷா கொங்காடி, சானிக்கா சோல்கே, நிக்கி ப்ரசாத் (தலைவி), ஈஷ்வரி அவாசரே, மிதிலா வினோத், ஆயுஷி ஷுக்லா, வி.ஜே. ஜோஷித்தா, ஷப்னம், பாருணிக்கா சிசோடியா, வைஷ்ணவி ஷர்மா.

தென் ஆபிரிக்கா: ஜெம்மா போத்தா, சிமோன் லௌரென்ஸ், ஃபே கௌலிங், கேலா ரினேக் (தலைவி), கராபோ மெசோ, மியெக் வென் வூர்ஸ்ட், செஷ்னி நாயுடு, ஏஷ்லி வன் வைக், லுயண்டா நிசூஸா, மோனாலிசா லெகோடி, நிதாபிசெங் நினி.

3001_south_africa_u19.png

3001_india_u_19.png

3101_sa_in_final.jpg

3101_india_final.jpg

https://www.virakesari.lk/article/205474

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சகல போட்டிகளிலும் வெற்றியீட்டி உலக சம்பியனானது இந்தியா; இறுதி ஆட்டநாயகி, தொடர்நாயகி இரண்டையும் வென்றார் ட்ரிஷா

Published By: VISHNU   02 FEB, 2025 | 06:27 PM

image

(நெவில் அன்தனி)

மலேசியாவின் கோலாலம்பூர், பேயுமாஸ் ஓவல் மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற இரண்டாவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவை 9 விக்கெட்களால் வெற்றிகொண்ட இந்தியா தோல்வி அடையாத அணியாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

0202_jay_shah_to_niki_prasad_u29_w_t20_w

19 வயதான ட்ரிஷா கொங்காடி பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்திலும் பிரகாசித்து இந்தியா சம்பியனாவதை உறுதி செய்தார்.

0202_vaishnavi_sharma.png

தென் ஆபிரிக்காவில் 2023இல் நடைபெற்ற அங்குரார்ப்பண 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியிலும் இந்தியா சம்பயினாகி இருந்தது.

0202_trisha_gongadi_trisha_player_of_the

அந்த வருடம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய அணி 7 விக்கெட்களால் இங்கிலாந்தை வீழ்த்தி சம்பியனாகி இருந்தது.

0202_indian_playeri_in_a_different_setup

இந்த வருடம் நிக்கி  ப்ரசாத் தலைமையிலான இந்தியா, சம்பியன் பட்டத்தை மீண்டும் சுவீகரித்ததன் மூலம் முதல் இரண்டு அத்தியாங்களிலும் சம்பியனான அணி என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தது.

0202_gongadi_trisha.jpg

இன்றைய இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட தென் ஆபிரிக்க மகளிர் அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 82 ஓட்டங்களைப் பெற்றது.

0202_ind_players_with_soveniers.jpg

தென் ஆபிரிக்காவின் நட்சத்திர துடுப்பாட்ட வீராங்கனை ஜெம்மா போத்தா (16 ஓட்டங்கள்) உட்பட மூன்று வீராங்கனைகள், பவர் ப்ளேக்குள் ஆட்டம் இழந்ததால் தென் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

ஆனால், மத்திய வரிசையில் மூவர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றதால் தென் ஆபிரிக்கா ஓரளவு கௌரவமான நிலையை அடைந்தது.

மீக்கே வன் வூஸ்ட் 23 ஓட்டங்களையும் ஃபே கௌலிங் 15 ஓட்டங்களையும் கராபோ மெசோ 10 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் கொங்காடி ட்ரிஷா 4 ஓவர்களில் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பூர்ணிக்கா சிசோடியா 4 ஓவர்களில் 6 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆயுஷி ஷுக்லா 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வைஷ்ணவி ஷர்மா 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் அணி 11.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 84 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி மீண்டும் சம்பியனானது.

தமிழக வீராங்கனை குணாலன் கமிலினி (8), ட்ரிஷா கொங்காடி ஆகிய இருவரும் 27 பந்துகளில் 36 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

தொடர்ந்து ட்ரிஷா, சானிக்கா சோல்கே ஆகிய இருவரும் பிரிக்கப்படாத இரண்டாவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து தமது அணியை இலகுவாக வெற்றிபெறச் செய்தனர்.

கொங்காடி ட்ரிஷா 33 பந்துகளில் 8  பவுண்டறிகள்  உட்பட 44 ஓட்டங்களுடனும் சானிக்கா சோல்கே 22 பந்துகளில் 4 பவுண்டறிகள் உட்பட 22 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

இலங்கை உட்பட 16 அணிகள் பங்குபற்றிய இரண்டாவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் இந்தியா சகல போட்டிகளிலும் வெற்றிபெற்றது.

முதல் சுற்றில் ஏ குழுவில் மேற்கிந்தியத் தீவுகளை 9 விக்கெட்களாலும் மலேசியாவை 10 விக்கெட்களாலும் இலங்கையை 60 ஓட்டங்களாலும் இந்தியா வெற்றிகொண்டிருந்தது.

தொடர்ந்து சுப்பர் சிக்ஸ் சுற்றில் பங்களாதேஷை 8 விக்கெட்களாலும் ஸ்கொட்லாந்தை 150 ஓட்டங்களாலும் அரை இறுதியில் இங்கிலாந்தை 9 விக்கெட்களாலும் இந்தியா வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றிருந்தது.

இந்திய வீராங்கனைகள் முன்னிலை

இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி வீராங்கனைகளே துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் முன்னிலையில் இருக்கின்றனர்.

துடுப்பாட்டத்தில் கொங்காடி ட்ரிஷா 7 போட்டிகளில் ஒரு ஆட்டம் இழக்காத சதம் உட்பட மொத்தமாக 309 ஓட்டங்களைக் குவித்து முதலிடத்தில் உள்ளார். அவரது சராசரி 77.25 ஆகும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 147.14 ஆகும்.

ட்ரிஷா பந்துவீச்சிலும் துல்லியமாக பந்துவீசி 7 விக்கெட்களைக் கைப்பற்றி தான் ஒரு சிறந்த சகலதுறை வீராங்கனை என்பதை நிரூபித்தார்.

குணாலன் கமலினி 2 அரைச் சதங்களுடன் மொத்தமாக 143 ஓட்டங்களைப் பெற்று அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் வரிசையில் 3ஆம் இடத்தில் உள்ளார்.

பந்துவீச்சில் சுழல்பந்துவீச்சாளர் வைஷ்ணவி ஷர்மா 6 போட்டிகளில் மொத்தமாக 17 விக்கெட்களைக் கைப்பற்றி அதிக விக்கெட்களைக் கைப்பற்றியோர் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். அவரது சராசரி 4.35 ஆகும்.

அவரது சக வீராங்கனை ஆயுஷி ஷுக்லா 5.71 என்ற சராசரியுடன் 14 விக்கெட்களை வீழ்த்தி இரண்டாம் இடத்தில் உள்ளார்.

இறுதி போட்டியில் 44 ஓட்டங்களைப் பெற்றதுடன் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தியமைக்காக இறுதி ஆட்டநாயகி விருது கொங்காடி ட்ரிஷாவுக்கு வழங்க்பட்டது.

தொடரில் 309 ஓட்டங்களைப் பெற்றதுடன் 7 விக்கெட்களை வீழ்த்தியதால் தொடர்நாயகி விருதும் ட்ரிஷாவுக்கே வழங்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/205616

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IND vs SA: 19 வயதுக்குப்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்ற வென்றது எப்படி?

கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 பிப்ரவரி 2025, 11:06 GMT
புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 82 ரன்கள் சேர்த்தது.

83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 11.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

 

இந்த இறுதிப் போட்டி மலேசியாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

இந்த போட்டியில் இந்திய அணியில் அதிகபட்சமாக த்ரிஷா கொங்காடி 44 ரன்கள் எடுத்தார். மேலும் அவர் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்,

இந்திய அணி தரப்பில் பருணிகா சிசோடியா, ஆயுஷி சுக்லா, வைஷ்ணவி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த ஒட்டுமொத்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை.

அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த வெற்றியில் த்ரிஷா முக்கிய பங்கு வகித்தார்.

கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, த்ரிஷா கொங்காடி

அற்புதமாக விளையாடிய த்ரிஷா

இந்திய அணி சார்பில் தொடக்க வீராங்கனை த்ரிஷா கொங்காடி 33 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இவரைத்தவிர தவிர, சனிகா சால்கே ஆட்டமிழக்காமல் 26 ரன்கள் எடுத்தார்.

த்ரிஷா அற்புதமான பந்துவீச்சையும் வெளிப்படுத்தி இந்த போட்டியில் இந்திய அணியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் 4 ஓவர்களில் 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

த்ரிஷா தெலங்கானாவை சேர்ந்தவர். வலது கை பேட்டரான த்ரிஷா, உள்ளூர் கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணிக்காக விளையாடியுள்ளார்.

மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2025 ஏலத்திலும் த்ரிஷாவின் பெயர் இருந்தது, இருப்பினும் அவரை எந்த அணியும் வாங்கவில்லை.

கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வைஷ்ணவி சர்மா

திணறிய தென்னாப்பிரிக்கா

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மிக் வான் வூர்ஸ்ட் 23 ரன்கள் எடுத்தார்.

இந்த போட்டியின் போது ஒட்டுமொத்த தென் ஆப்பிரிக்க அணியும் ரன்களை குவிக்க போராடியது.

மிகவும் துல்லியமாக பந்து வீசிய இந்திய பந்துவீச்சாளர்கள், ரன்களை தடுத்தது மட்டுமின்றி, சரியான நேரத்தில் விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பந்துவீச்சில் கூட தென்னாப்பிரிக்க அணி எந்த புதிய அம்சங்களையும் வெளிப்படுத்த முடியாமல் தோல்வி அடைந்தது.

இந்திய அணியின் பேட்ஸ்வுமன்கள் சிறப்பாக பேட்டிங் செய்து 52 பந்துகள் மீதமிருக்கையிலேயே வெற்றியை கைப்பற்றினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

19 வயதின் கீழ் மகளிர் உலகக் கிண்ண சிறப்பு அணியில் இலங்கையின் சமோதி

03 FEB, 2025 | 03:26 PM
image

(நெவில் அன்தனி)

மலேசியாவில் நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண போட்டியில் அற்புதமாக பிரகாசித்த வீராங்கனைகளைக் கொண்ட 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கிண்ண சிறப்பு அணியில் இலங்கையின் சமோதி ப்ரபோதா பெயரிடப்பட்டுள்ளார்.

2201_chamudhi_prabodha.png

12 வீராங்கனைகளைக் கொண்ட இந்த சிறப்பு அணியில் பந்துவீச்சில் திறமையாக செயற்பட்ட இலங்கையின் 15 வயதுடைய சமோதி ப்ரபோதா 10ஆம் இலக்க வீராங்கனையாக பெயரிடப்பட்டுள்ளார்.

ஐந்து போட்டிகளில் விளையாடிய சமோதி ப்ரபோதா 6.33 என்ற சராசரியுடன் மொத்தமாக 9 விக்கெட்களைக் கைப்பற்றினார். அவரது எக்கொனொமிக் ரேட் 3.80 ஆகும்.

மலேசியாவுக்கு எதிரான போட்டியில் ப்ரபோதா 5 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றி இருந்தார். உலகக் கிண்ணப் போட்டி ஒன்றில் அதுவே அவரது சிறந்த பந்துவீச்சுப் பெறுதியாக இருந்தது.

2101_chamudhi_prabodha.jpg

இந்த சிறப்பு அணியில் நான்கு இந்தியர்கள் இடம்பெறுவதுடன் அணியின் தலைவியாக தென் ஆபிரிக்காவின் கேலா ரினேக் பெயரிடப்பட்டுள்ளார்.

இந்த அணியில் தமிழ் வீராங்கனை ஒருவர் இடம்பெறுகின்றமையும் விசேட அம்சமாகும். தமிழகத்தின் மதுரையைப் பிறப்பிடமாகக் கொண்ட வீராங்கனை குணாலன் கமலினி என்ற வீராங்கனையே சிறப்பு அணியில் இடம்பெறும் தமிழ் வீராங்கனை ஆவார். 

இந்திய அணியின் ஆரம்ப வீராங்னையான கமலினி, 7 போட்டிகளில் 2 அரைச் சதங்கள் உட்பட 143 ஒட்டங்களை மொத்தமாக பெற்றிருந்தார்.

gunalan_kamalini_india_tamil_nadu.png

19இன் கீழ் மகளிர் ரி20 உலகக் கிண்ண சிறப்பு அணி

கொங்காடி ட்ரிஷா (இந்தியா - 309 ஓட்டங்கள், சராசரி 77.25, ஸ்ட்ரைக் ரேட் 147.34, அதிகூடிய எண்ணிக்கை 100 ஆ.இ.)

ஜெம்மா போத்தா (தென் ஆபிரிக்கா - 105 ஓட்டங்கள், சராசரி 26.25, ஸ்ட்ரைக் ரேட் 123.52, அதிகூடிய எண்ணிக்கை 37 ஓட்டங்கள்)

டாவினா பெரின் (இங்கிலாந்து - 176 ஓட்டங்கள், சராசரி 35.20, ஸ்ட்ரைக் ரேட் 138.38, அதிகூடிய எண்ணிக்கை 74 ஓட்டங்கள்)

குணாலன் கமலினி (143 ஓட்டங்கள், சராசரி 35.75, ஸ்ட்ரைக் ரேட் 104.37, அதிகூடிய எண்ணிக்கை 56 ஆ.இ.)

கொய்மே ப்றே (அவுஸ்திரேலியா - 119 ஓட்டங்கள், சராசரி 29.75, ஸ்ட்ரைக் ரேட் 96.74, அதிகூடிய எண்ணிக்கை 45),

பூஜா மஹாட்டோ (நேபாளம் - 70 ஓட்டங்கள், சராசரி 23.33, ஸ்ட்ரைக் ரேட் 51.85, அதிகூடிய எண்ணிக்கை 27, பந்துவீச்சு: 9 விக்கெட்கள், சராசரி 7.00, எக்கொனொமி ரேட் 4.34, சிறந்த பந்துவீச்சு பெறுதி 9 - 4 விக்.)

கேலா ரினேக் (தலைவி - தென் ஆபிரிக்கா - 11 விக்கெட்கள், சராசரி 6.27, எகொனொமி ரேட் 4.14, சிறந்த பந்துவீச்சப் பெறுதி 2 - 3 விக்.),

கேட்டி ஜோன்ஸ் (விக்கெட் காப்பளார் - இங்கிலாந்து - 2 பிடிகள், 7 ஸ்ட்ம்ப்கள்),

ஆயுஷி ஷுக்லா (இந்தியா - 14 விக்கெட்கள், சராசரி 5.71, எக்கொனொமி 3.01, சிறந்த பந்துவீச்சுப் பெறுதி 8 - 4 விக்.),

சமோதி ப்ரபோதா (இலங்கை - 9 விக்கெட்கள், சராசரி 6.33, எக்கொனொமி ரேட் 3.80, சிறந்த பந்துவீச்சுப் பெறுதி 5 - 3 விக்.),

வைஷ்ணவி ஷர்மா (இந்தியா - 17 விக்கெட்கள், சராசரி 4.35, எக்கொனொமி ரேட் 3.36, சிறந்த பந்துவீச்சுப் பெறுதி ஹெட்-ட்ரிக் உட்பட 5 - 5 விக்.)

12ஆவது வீராங்கனை: நிதாபிசெங் நினி (தென் ஆபிரிக்கா - 6 விக்கெட்கள், சராசரி 7.33, எக்கொனொமி ரேட் 4.00, சிறந்த பந்துவீச்சுப் பெறுதி 4 - 3 விக்.)

https://www.virakesari.lk/article/205692

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.