Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: Vishnu

28 Jan, 2025 | 06:40 PM
image
 

இந்த நாட்டில் ஜே ஆர் ஜனாதிபதியாக இருந்த காலம் தொடக்கம் இன்று அனுரகுமார திசாநாயக்க காலம் வரையிலும் 37வருடத்தில் பல ஜனாதிபதிகளைக்கண்டாலும் இனப்படுகொலைகளுக்கு நீதியைத்தராத நிலையிலேயே நாங்கள் நினைவேந்தல்களை செய்துவருகின்றோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

WhatsApp_Image_2025-01-28_at_16.43.25.jp

கிழக்கு மாகாணத்தையே உலுக்கிய படுகொலைகளில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 38ஆவது நிறைவு நினைவேந்தல் நிகழ்வு பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்றது.

WhatsApp_Image_2025-01-28_at_16.43.24.jp

மட்டக்களப்பு மகிழடித்தீவு சந்தியில் உள்ள படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபியில் குறித்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

WhatsApp_Image_2025-01-28_at_16.43.22.jp

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத்,படுகொலைசெய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.

WhatsApp_Image_2025-01-28_at_16.43.24__1

இதன்போது, ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் உயிர்நீர்த்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

28-01-1987 மற்றும் 12-06-1991ஆகிய காலப்பகுதிகளில் இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் மகிழடித்தீவு இரால்பண்ணை மற்றும் கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளில் 239பேர் படுகொலைசெய்யப்பட்டனர்.

குறித்த படுகொலையில், சிறுவர்கள்,பெண்கள் மற்றும் முதியவர்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.இவர்களை நினைவு கூரும் வண்ணமே, கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவுத்தூபி 2,000ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

1987ஆம் ஆண்டு இதே தினத்தில் 33ஆண்டுகளுக்கு முன்பு கொக்கட்டிச்சோலை இறால் வளர்ப்பு என்று கூறுகின்ற மகிழடித்தீவு,முதலைக்குடா இறால் வளர்ப்ப பண்ணை,படுவான்கரை பெரு நிலத்தில் இராணுவத்தினர் மேற்கொண்ட படுகொலையில் 157க்கும் அதிகமானவர்கள் படுகொலைசெய்யப்பட்டார்கள்.அதனைவிட கணக்கெடுக்கமுடியாத வகையில் படுகொலைகள் முன்னெடுக்கப்பட்டன.பாரிய இனப்படுகொலையொன்று முன்னெடுக்கப்பட்டது.

1987ஆம் ஆண்டு என்பது கிழக்கு மாகாணத்தில் இந்த கொக்கட்டிச்சோலை பகுதியில் பெரியளவிலான படுகொலை முன்னெடுக்கப்பட்டது.அதன்பின்னர் இந்தி இலங்கை ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு அதன் பின்னர் படுகொலைகள் முள்ளிவாய்க்கால் வரையில் இடம்பெற்றது.

கொக்கட்டிச்சோலை படுகொலையென்பது அன்றைய காலகட்டத்தில் சர்வதேச ரீதியாக பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது.இன்று 38வது ஆண்டினை நினைவுகூரும்போது கூட படுகொலைசெய்தவர்கள் மீதோ அதன் பின்னாளிருந்தவர்கள் மீதோ எந்தவித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

மட்டு. கொக்கட்டிச்சோலை படுகொலையின் 38ஆவது நிறைவு நினைவேந்தல் நிகழ்வு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாலையின் அமைதியை கிழித்துக்கொண்டு வந்து தரையிறங்கிய உலங்குவானுர்திகள்; 100க்கும் அதிகமானவர்களை பறிகொடுத்த குடும்பங்கள்; மகிழடித்தீவு இறால் பண்ணை படுகொலை - 38 வருடங்கள்

Published By: RAJEEBAN   29 JAN, 2025 | 02:22 PM

image

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவு இறால் பண்ணை படுகொலை இடம்பெற்று ஜனவரி 28ம் திகதியுடன் 38 வருடங்களாகின்றது.

இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை சம்பவங்களின் பட்டியல் மீக நீளமானது - அதில் இதுவுமொன்று.

நீதிக்கான எந்த நம்பிக்கையும் இன்றி அன்றைய நாட்களின் வலிகளுடன்  வாழ்பவர்கள் பலர்.

Makiladitheevu__massacare.jpg

மகிழடித்தீவு இறால் பண்ணையில் வேலை பார்த்த 85 இளைஞர்கள் உட்பட 100 க்கும் அதிகமானவர்களை இலங்கை இராணுவத்தினர் கொன்றுகுவித்தது இன்னமும் பலரின் நெஞ்சில் நீங்காத வடுவாக நீடிக்கின்றது.

அன்றைய தினம் விடியல்காலையின் அமைதியை கிழித்துக்கொண்டு ஹெலிக்கொப்டர் ஒன்று மணல்பிட்டியில் தரையிறங்கியதும் அதன் பின்னர் இடம்பெற்ற கொடுரங்களும் இன்னமும் நினைவைவிட்டகலவில்லை என தெரிவிக்கும் ஜோர்ஜ் ராஜ்மேனன் தனது தந்தையை பறிகொடுத்த நினைவுகளை பகிர்ந்துகொள்கின்றார்.

கணபதிப்பிள்ளை டானியல் சுவேந்திரன் (எனது அப்பாவும்(வாவா)அவருடன் வேலை செய்த உடன் ஊழியர்கள் 85 பேர் உட்பட 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இலங்கை இராணுவத்தினரால் இனப் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 38வருடங்கள் (28.01.1987) காலங்கள் கடந்தாலும் இச்சம்பவம் இன்றும் எம் நெஞ்சில் நீங்கா வடுக்களாகவே நேற்று நடந்ததுபோல் உள்ளது...

474792695_952159190365116_30650683054884

அன்று எனக்கு 4 வயது

அன்றைய நாள் இன்றும் எனக்கு ஞாபகம் உள்ளது.. 

28/01/1987 அன்று விடியச்சாமத்தின் அமைதியை கிழித்துக்கொண்டு 2-3 உலங்குவானூர்தி (ஹெலிகாப்டர்) மணல்பிட்டியில் (கொக்கட்டிச்சோலை) வட்டமிட்டு இறங்கியது அப்போது காலை 6மணி இருக்கும்.

அப்பா என்னை தனது கையில் என்னை தூக்கி வீட்டுக்கு பின்னால் உள்ள குளக்கட்டில் வைத்து அந்தா பார் ஹெலி என்டார். கண்ணுக்கு எட்டிய துராத்தில் ஆலா போல் வட்டமிட்டு இறங்கியது அப்போது தெரியாது அப்பாவின் உயிர் குடிக்கும் எமன் அதில் வருகிறான் என்று. வேலைக்கு போக அப்பா ஆயத்தமாகும் போது ஊராக்கள் வந்து சொன்னார்கள் ஆமிக்காரன் ஊருக்குள்ள வாரானாம் என்று. ஊரில் ஒரே பதட்டம். ஒப்பிஸ்க்கு போனா பிரச்சினை இல்ல அமெரிக்கன்ட கம்பெனி தானே பிரச்சினை இல்ல என்ற நம்பிக்கையில்  வேலைக்கு போனார் . 

அம்மாவும் நானும் என் சொந்தக்காரரும் அப்பா கடைசியாக சேப்பத்து கட்டால் சைக்கிளில் போனதை பார்த்தோம்.

474782273_1528516154513521_7802996090908

நடுத்தர வயது வந்த அண்ணாச்சிமார் மாமாமார் எல்லோரும் கான்னா காட்டுக்குள் ஆமிக்கு பயந்துபோய் பாதுகாப்புக்கு ஓடி ஒளிந்தனர். ஊர் ஒரே பதட்டமாக இருந்தது. மதியம்மளவில் வெடிச்சத்தம் கேட்ட தொடங்கிது. பின்னேரம் வரை தொடர்தது. அது வரைக்கும் என்ன நடக்குது என்று எனக்கு தெரியாது. மயண்டை ஆகியதும் கண்ணா காட்டுக்குள்ளே உயிரை காக்க சென்ற ஆம்புள்ள பொடியன்கள் ஊருக்குள்ள திரும்பி வந்தார்கள். அப்பாவோ அவருடன் வேலைக்கு போன மற்றவர்களோ திரும்பிவரவில்லை.

இருட்டிலே நாங்கள் எல்லோரும் அப்பாவை தேடி அப்பம்மாவின் வீட்டுக்கு மகிழடித்தீவு சந்திக்கு (வேத கோயில் மெதடிஸ்த ஆலயம் மகிழடித்தீவு) போகப் போனோம். அப்போது மகேஸ் மாமியின் கடப்படியில் அப்பா செத்த செய்தியை கேட்டோம். 

அம்மா உடனே மயங்கி விழுத்தது மட்டும் ஞாபகம் இருக்கு! இன்றோ 38 ஆண்டுகள் உருண்டு விட்டது.!! (1987-2025)

474486846_1145402020644695_5123599663185

அன்று இரவு அப்பம்மாவின் வீட்டில் தங்கினோம். இச்சம்பவத்தில் உயிர் தப்பியவர் அச்சா சித்தப்பா மட்டுமே(அப்பாவின் தம்பி). அவர் மூலமே அப்பாவும் சக ஊழியர்களும் மகிழடித்தீவு சந்தியில் வைத்து இராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டு உழவு இயத்திரத்தில் ஏற்றிச் செல்லப்பட்டத்தை அறிந்தோம். மகிழடித்தீவுச் சந்தி எம் உடன் பிறப்புகளின் குருதியால் வெள்ளமாக ஓடியது. அன்று படுவான்கரையே மயானமானது.

இது என் கதை மட்டுல்ல ஒரேயொரு நாளில் என்னை போன்று அப்பாவை இழந்த அம்மாவைப் போல் விதவையாக்கப்பட்ட அப்பப்பா அப்பம்மாவை போல் சொந்த மகனை பறி கொடுத்த பெரியப்பா சித்தப்பா மாமி போல் உடன்பிறப்பை தொலைத்த 1௦0க்கும் மேற்பட்ட குடும்பங்களின் உள்ளக்குமுறல் மட்டுமல்ல. படுவான்கரை மக்களின் குமுறல்.! 50-60 தாய்மார் விதவைகளாக்கப்பட 200-250 பிள்ளைகள் தகப்பன் அற்ற அனாதைகளாக்கப்பட்டார்கள் 

அன்று மரணித்தது எனது அப்பா மட்டுமோ அல்லது ஒருசிலரோ மட்டுமல்ல. 

படுவான்கரையில் ஒரு படித்த ஒரு துடிதுடிப்பான நடுத்தர தலைமுறை வர்க்கம். தங்கள் சொந்த கிராமங்களை (மகிழடித்தீவு முனைக்காடு முதலைக்குடா கொக்கட்டிச்சோலை) முன்னேற்ற பாடுபட்டு நேசித்து வாழ்ந்த ஒரு தலைமுறை அது. இவர்களின் இழப்பின் தாக்கம் பின் நாட்களில் தான் விளங்கியது. மாலை நேர வகுப்பு சிரமதானம் கிராமங்கள் தோறும் மர நடுகை மாலை நேர விளையாட்டு போன்றவை இவர்களின் மறைவோடு கானல் நீராகிவிட்டது. மண்முனை தொடங்கி மகிழடித்தீவு நெடுகிலும் பனைமரம் உண்டு. யார் இதை நாட்டினார்கள் என்று வினவிய போதே இம்மைந்தர்களின் இழப்பின் பெறுமதி விளங்கியது. தன் சொந்த சமூகத்தின் மீது அக்கறை கொண்ட நல்நெஞ்சங்கள் இன்று மௌனித்து போய்விட்டது.! 

வட கிழக்கில் இடம்பெற்ற முதலாவது இனப்படுகொலைச் சம்பவம் மகிழடித்தீவு இறால் பண்ணை இனப்படுகொலை (28-01.1987). ஆயிரங்கள் தங்கள் சொந்த உறவுகளை பறி கொடுத்த நாள். படுவான்கரை மக்களின் குரல்வளை நசுக்கப்பட்ட கரி நாள் அது!! படுவான்கரையின் இன்றைய பின்தங்கிய நிலைமைக்கு அத்திவாரம் இட்டதும் இந்த சம்பவமே. !!!

1983 கருப்பு ஜூலை கொழும்பில் தொடங்கி 2009 மே முள்ளிவாய்கால் வரை நடந்தேறிய அனைத்து படுகொலைகளிலும் இது போன்ற பல சமூகங்களின் கதைகள் உறங்கி கிடக்கின்றன. 

விடை தெரியா கேள்வி மட்டுமே உள்ளது. 

இத்தனை இழப்புக்கும் நான் செய்த தவறு என்ன ? என் குடும்பம் செய்த குற்றம் என்ன ?? தமிழனாய் பிறந்ததா???

அப்பா திரும்பி வரவில்லை..அப்பா வருவார் என்ற எதிபார்போடு இன்றுடன் 38வருடங்கள் கடந்துவிட்டதுப்பா.!!!

படஉதவி-ஜோர்ஜ் ராஜ்மேனன்

https://www.virakesari.lk/article/205206

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.