Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
06 JAN, 2025 | 10:24 PM
image
 
இலங்கை ஆயுதப்படைகளுக்கும் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான 33 வருடகாலப் போர் இப்போதெல்லாம் நினைவில் இருந்து மெதுவாக அருகிக் கொண்டு போகிறது. விடுதலை புலிகள் இயக்கம் 1976 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி முறைப்படி ஆரம்பிக்கப்பட்டது. மூன்று தசாப்தகால போருக்கு பிறகு விடுதலை புலிகள் முல்லைத்தீவின் நந்திக்கடல் ஏரியில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி தங்களது தோல்வியைச் சந்தித்தார்கள். வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான அந்த இயக்கத்தினால் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட போர் சுதந்திரத்தின் பின்னரான இலங்கையின் வரலாற்றில் முக்கியமான ஒரு பாகமாகும்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'கேணல்' கிட்டுவின் செயலினால் விஜய குமாரதுங்க எவ்வாறு ஏமாற்றமடைந்தார், லலித் அத்துலத்முதலி எவ்வாறு ஏமாற்றப்பட்டார் ?

15 JAN, 2025 | 12:43 PM
image

டி.பி.எஸ். ஜெயராஜ் 

கடந்த வாரம் பிரசுரமான ' கேணல் ' கிட்டு என்ற சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார் பற்றிய இந்த கட்டுரையின் முதல் பாகத்தில் விடுதலை புலிகளின் யாழ்ப்பாண மாவட்ட தளபதியாக இருந்த அவரை நான் 1986 நவம்பரில் ' இந்தியாவின்  புரொண்ட்லைன் ' செய்திச் சஞ்சிகைக்காக பேட்டி கண்டதைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதுவே கிட்டுவுடனான கலந்துரையாடல் ஒன்று ஆங்கில சஞ்சிகை ஒன்றில் வெளியான முதல் சந்தர்ப்பமாக அமைந்தது. 

அவருடனான பேட்டி குறித்து நான் குறிப்பிட்டது வாசகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பேட்டியை மீண்டும் பிரசுரம் செய்யமுடியுமா என்பதை அறிவதில் ஆர்வம்கொண்டு பல வாசகர்கள் என்னுடன் தொடர்புகொண்டார்கள். அந்த 'புரொண்ட்லைன் ' பேட்டி நீண்ட ஒன்று அல்ல என்பதால், இந்த கட்டுரைக்குள் அவருடனான கலந்துரையாடலை சேர்க்கிறேன். 38 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் கூட, விடுதலை புலிகள் இயக்கம் மற்றும் அதன் யாழ்ப்பாணத் தளபதி பற்றி சில துல்லியமான உளநோக்குகளை அது வழங்குகிறது. இதோ அந்த பேட்டி -- 

புரொண்ட்லைன் பேட்டி 

" நாங்கள் இறப்பதற்கு தயாராயிருக்கிறோம், அவர்கள் தயாரில்லை" --  யாழ்ப்பாணத்தில் விடுதலை புலிகளின் கிட்டுவுடன் பேட்டி.

தமிழீழ விடுதலை புலிகளின் யாழ்ப்பாணக் குடாநாட்டு பிராந்திய தளபதி அவரைப்பற்றி நிலவுகின்ற அபிப்பிராயத்துக்கு பொருத்தமில்லாத ஒரு தோற்றத்தைக் கொண்டவர். சராசரிக்கும் சற்றுக் குறைவான உயரத்தைக் கொண்ட அவர் மூக்குக் கண்ணாடி அணிந்திருப்பார். நெற்றிக்கு மேலே முன்தலையில் மயிர்  இருக்காது. 26 வயதான கிட்டு என்ற சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார் இப்போது இலங்கையில் பெரிதும் தேடப்படும் ஒரு தீவிரவாதி. விடுதலை புலிகள் பொதுவில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தை தங்களது முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு  முயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த நாட்களில் இலங்கையில் மிகவும் பெருமளவுக்கு பேசப்படும் ஒருவராக கிட்டு விளங்குகிறார்.

கிட்டு மிகவும் மென்மையாகவும்  மரியாதையான தொனியிலும் பேசுவார். ஒரு விடயத்தை அழுத்திக் கூறவேண்டும் என்றால் சில நேரங்களில்  ஒரு புன்சிரிப்புடன்  சைகைகளை காட்டுவார். அதேவேளை அவரது கண்களும் கூட சிரிக்கும். ஆனால், இயக்கத்திற்குள் ஒழுங்கு, கட்டுப்பாட்டை பேணுகின்ற விடயத்தில், அவர் மிகவும் கடுமையான பேர்வழி. யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில்  ஒருவரை அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கும்போது ' அர் ' என்ற விகுதியைச் சேர்த்துக்கொள்வது வழக்கம் இந்தியிலே 'ஜி' யைச் சேர்த்துக் கொள்வது போன்று. கிட்டுவை கிட்டர் என்று அழைப்பார்கள். யாழ்ப்பாணத்துச் சிறுவர்கள் அவரை கிட்டு மாமா என்று அழைப்பார்கள்.

கலந்துரையாடல் ஒன்றுக்காக டி.பி.எஸ். ஜெயராஜ் அவரைச் சந்தித்தார்.

பெயரை அவர் எவ்வாறு பெற்றார்?

"நான் இயக்கத்தில் இணைந்தபோது எனக்கு வெங்கட் என்ற பெயர் கொடுக்கப்படடது. அந்தப் பெயர் வெங்கிட்டுவாக மாறி விரைவாக கிட்டுவாகியது.

கிட்டு 1978 ஆம் ஆண்டில் 18 வயது பாடசாலை மாணவனாக விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்தார். "நான் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவன். வல்வெட்டித்துறை மக்கள் 1950 களில் இருந்தே இராணுவ அடக்குமுறைக்கு முகங்கொடுக்க வேண்டியாருந்தது. கடத்தலையும் சட்டவிரோத குடிவரவையும் தடுப்பது என்ற போர்வையில் இராணுவம் எங்களை கொடுமைப்படுத்தியது. அது விடயத்தில் எதையாவது செய்ய வேண்டும் என்று எப்போதும் நான் விரும்பினேன். இந்த உணர்வுடனேயே நான் வளர்ந்தேன்.  அதற்கு பிறகு தமிழ் மக்கள் மீதான  அடக்குமுறை இடம்பெற்றது. அடக்குமுறைக்கு எதிராக நான் போராட வேண்டியிருந்தது.  அதனால் நான் விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டேன். பிரபாகரனும் கூட வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவரே.அப்போது நான் முழு அளவில் அரசியல் உணர்வு கொண்டவனாக இருக்கவில்லை. ஆனால், ஒரு விடுதலைப் போராளி என்ற வகையில் எனது செயற்பாடுகளின் ஊடாக அரசியல் அறிவையும் உணர்வுகளையும் பெற்றுக்கொண்டேன். போராட்டத்தின் ஊடாக என்னை நான் வளர்த்துக்கொண்டேன்."

குறிப்பிட்ட ஒரு அரசியல் தத்துவத்தை அல்லது கோட்பாட்டை ஏற்றுக்கொள்கிறீர்களா? 

"நல்லது. எனக்கும் சில அரசியல் கோட்பாடுகள் இருக்கின்றன. அடிப்படையில் அது விடுதலை புலிகளின் கோட்பாடேயாகும். அதை நான் முழுமையாகப் பின்பற்றுகிறேன். நான் பெருமளவுக்கு நடைமுறைச் சாத்தியமான முறையில் சிந்திப்பவன். வெறுமனே பேசுவதை அல்லது ஆராய்வதை விடவும் செயல்சாத்தியமுடைய நடவடிக்கைகளை நான் விரும்புபவன்.  அதுவே முக்கியமானது.  நான் தத்துவங்களைப் பற்றி பேசுவதில்லை.  எனக்கு தத்துவம் தெரியாது. செயலில் மாத்திரமே எனக்கு நம்பிக்கை."

நான் கிட்டுவிடம் அவரது நடைமுறைச் சாத்தியத்தை மையமாகக்கொண்ட அணுகுமுறைக்கு உதாரணம் ஒன்றைக் கூறுமாறு கேட்டேன்.  அவர் அதற்கு சாதிப் பிரச்சினையை பிரச்சினையை கூறினார்.

விடுதலை புலிகளின் அன்றாட வாழ்வில் சாதி என்ற விடயத்துக்கு இடமில்லை என்று அவர் கூறினார். ஆனால், இந்த பிரச்சினையில் பழமைவாத யாழ்ப்பாணச் சமூகத்தின் சிந்தனை தொடர்பில் கிட்டுவின் அணுகுமுறை வேறுபட்டது. "தாழ்த்தப்பட்டது என்று சொல்லப்படுகின்ற ஒரு சாதியைச் சேர்ந்த தகுதிவாய்ந்த உறுப்பினர் ஒருவர் எமது இயக்கத்தில் இருந்தால், சாத்தியமாகும் வேளைகளில் எல்லாம்  அவரை நான் ஒரு பிரதேசத்தின் பிரதிநிதியாக அல்லது முகாம் ஒன்றின் பொறுப்பாளராக நியமிக்கிறேன். அதனால் பொதுவில் சமூகம் அதன் தவறான எண்ணங்களைக் கைவிட்டு அவருடன் விவகாரங்களைக் கையாள வேண்டியிருக்கும். சமூகங்களுக்கு இடையில் பெருமளவுக்கு புரிந்துணர்வும் உறவுமுறையும் வளரும்." 

"விடுதலை புலிகள் இயக்கம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கத்தில் இருக்கிறது என்ற ஒரு  உணர்வு குறிப்பிட்ட சில பிரிவினர் மத்தியில் இருக்கிறது" என்று கிட்டுவிடம் நான்கூறினேன்.

"ஆம், அவ்வாறு சிலர் கூறுகிறார்கள். சிலர் ஒரு படி மேலே சென்று எமது இயக்கத்தை குறிப்பிட்ட ஒரு சாதியே அதன் மேலாதிக்கத்தில் வைத்திருக்கிறது என்று கூறுகிறார்கள். சமூகத்தின் சகல பிரிவுகளும் எமககுக் கீழ் அணிதிரளுவதை தடுக்கும் நோக்குடன் இதை சிலர் தவறான  பிரசாரங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். ஆனால், பிரபாகரன் தனது இயக்கத்தை ஆரம்பித்தபோது என்ன நடந்தது என்பதை உங்களுக்கு கூறுகிறேன். முதலில் இயக்கத்தில் உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் யாராக இருந்திருப்பார்கள்?  அவரது நண்பர்கள், பள்ளித் தோழர்கள், உறவினர்கள், அயலவர்கள் மற்றும் அவரது கிராமத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்திருப்பார்கள் இல்லையா? அதனால் அவர்கள் எல்லோரும் இயல்பாகவே  வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்களாகவே இருந்திருப்பர். எமது வளர்ச்சி படிப்படியானது. நாளடைவில் மற்றையவர்களும் இணைந்து கொண்டார்கள். 

"தலைவர்களை நியமிப்பதில் மூப்பு முறைமை ஒன்று எம்மிடம் இருந்ததால், வல்வெடடித்துறையைச் சேர்ந்த ஆரம்பக்கட்ட அணியினர் தலைமைப் பதவிகளில் இருக்கிறார்கள். ஆனால், வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் அத்தகைய பதவி நிலைகளில் இருக்கிறார்கள். மூப்பு மற்றும் ஆற்றல் ஊடாக மற்றையவர்கள் விரைவில் முன்னுக்கு வருவார்கள். அதற்கு பிறகு இந்த வல்வெட்டித்துறை படிமம்  காணாமல்போய்விடும். ஆனால், சாதி தொடர்பான குற்றச்சாட்டு முற்று முழுதாக தவறானது." 

விடுதலை புலிகள் இயக்கத்தில் தலைமைத்துவ போட்டி எதுவும் இல்லையா? 

"இல்லை. ஏன் என்று உங்களுக்கு நான் சொல்கிறேன். விடுதலை புலிகளின் போராட்ட நடவடிக்கைகளில்  இறந்தவர்களை நோக்குவீர்களாக இருந்தால், அவர்களில் பெரும் எண்ணிக்கையானவர்கள் மேல்மட்ட அல்லது கீழ் மட்டங்களைச் சேராந்த தலைவர்களாக இருப்பதை நீங்கள் கண்டுகொள்வீர்கள். இதற்கு காரணம் வெறுமனே உத்தரவுகளை பிறப்பிப்பதில் அல்ல,  எமது போராளிகளுக்கு தலைமை தாங்கிச் செல்வதில் நாம் நம்பிக்கை கொண்டவர்கள். அதனால், எமது இயக்கத்திற்குள் போட்டி இருப்பதாக இருந்தால் கூட அது இரு வசதியான வாழ்வுக்கானதாக இருக்கமுடியாது. மரணத்தை துணிச்சலுடன் எதிர்கொள்வதற்கான போட்டியாக மாத்திரமே அது இருக்க முடியும். அதனால் போட்டி என்பது வாழ்வதற்கா அல்லது சாவதற்கா என்பதற்கேயாகும்." 

இந்த கட்டத்தில் நான் கிட்டுவிடம் அவர் எப்போதுமே ஆபத்துக்கு மத்தியில் நிற்பதாக யாழ்ப்பாண வாசிகள் சிலர் கூறியதைப் பற்றி கேட்டேன். ஒரு பிக் அப் வாகனத்தில் இருந்து கொண்டு ஒரு ஹெலிகொப்டரை நோக்கி கி்ட்டு சுட்டதைக் கண்டதாக ஒருவர் கூறினார். யாழ்ப்பாணக் கோட்டையில் இருந்து  ஷெல் தாக்குதல் இடம்பெறுகின்ற வேளைகளில் எல்லாம் கிட்டு களத்தில் நிற்பார். தேவையில்லாமல் உங்களை நீங்கள் ஆபத்தில் மாட்டிக் கொள்ளும் சூழ்நிலைக்கு உள்ளாக்குகிறீர்கள் இல்லையா என்று நான் அவரிடம் கேட்டேன்.

அதற்கு அவர் அலட்சியமாகப் பதிலளித்தார். "எவ்வாறோ நான் இதுவரையில் அதிர்ஷ்டசாலியாக இருந்திருக்கிறேன்.  நான் இப்போது கூறப்போவதே உங்களை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கக்கூடும். ஆனால், இஸ்ரேலிய ஜெனரல் ஒருவரின் ஆலோசனையையே நான் பின்பற்றுகிறேன்.  அந்த ஆள் ஒருபோதுமே போர் நிலைகளுக்கு பின்னால் நின்று உத்தரவுகளை பிறப்பித்ததில்லை என்று நீண்டகாலத்துக்கு முன்னர் நான் வாசித்தேன். அவர் எப்போதுமே முன்னரங்கத்தில் நின்றவாறு" முன்னே வாருங்கள்.... எனக்கு உதவியாக நில்லுங்கள்" என்றுதான் சத்தமிடுவார். பின்னரங்கத்தில் நின்றுகொண்டு "முன்னேறிச் செல்லுங்கள்" என்று அவர் ஒருபோதும் சொன்னதில்லை.

அவர் எவ்வாறு தனது அணியினர் மத்தியில் ஒழுங்கு கட்டுப்பாட்டை ஏற்படுத்தினார்? 

"ஒருவரை நாங்கள் உடனடியாகவே படையணிகளில் சேர்த்துக் கொள்வதில்லை. அவரை  அவதானித்து  முதலில் சாதாரண பணிகளுக்கு அனுப்புவோம். அவர் தனது ஆற்றலை நிரூபித்தால் பிறகு பெரிய பொறுப்புக்கள் அவருக்கு கொடுக்கப்படும். இறுதியில் ஆயுதப் பயிற்சி வழங்கப்படும்."

"எனது ஆட்கள் ஒழுங்கு கட்டுப்பாடு இல்லாதவர்களாக இருந்தால், அது எனது தவறே  நான் கட்டுப்பாடு இல்லாதவனாக இருந்தால் எனது தலைவர் பிரபாகனில் தான் தவறு. எமது ஒழங்கு கட்டுப்பாட்டு தராதரங்கள் காரணமாகவே நாம் வேறு இயக்கங்களில் இருந்து பிரிந்து வருபவர்களை அல்லது ஏனைய குழுக்களில் இருந்துவரும் அதிருப்தியாளர்களைச் சேர்த்துக் கொள்வதில்லை. அதேபோன்றே, எமது உறுப்பினர்களில் ஒருவர் தன்னால்  எம்முடன் செயற்படமுடியாது என்று உணர்ந்தால்  அவர் எம்மை விட்டு விலகிச் செல்வதற்கு சுதந்திரம் உண்டு. ஆனால்,  அவர் வேறு ஒரு குழுவில் இணையவோ அல்லது புதிய இயக்கம் ஒன்றை ஆரம்பிக்கவோ கூடாது."

தலைவர் பிரபாகரனுக்கும் களத் தளபதிகளுக்கும் இடையிலான உறவு நன்றாக இருந்ததாக கிட்டு கூறினார். அவர்கள் இடையறாது தொடர்பில் இருந்தார்கள். இடைக்கிடை ஆரோசனை கலப்பதற்காக அவரைச் சந்தித்தார்கள். அவர்களது கருத்துக்களை தலைவர் பிரபாகரன் மிகுந்த அக்கறையுடன் கவனத்தில் எடுத்தார்.

நான் கிட்டுவிடம் சமாதான முயற்சிகள் பற்றி கேட்டேன்.

"திம்புவில் வெளிப்படுத்தப்பட்ட எமது கோட்பாடுகளில் நாம் உறுதியாக நிற்கிறோம். இவை எமது குறைந்தபட்சக் கோரிக்கைகள். ஜெயவர்தன அவற்றுக்கு ஒருபோதும் இணங்கப் போவதில்லை. எனவே எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை."

தனது போராளிகளினதும் அரச துருப்புக்களினதும் ஒப்பீட்டளவிலான பலம் குறித்து கிட்டு மனந்திறந்து வெளிப்படையாகப் பேசினார். "அவர்களிடம் கூடுதலான ஆட்கள் இருக்கிறார்கள். சிறந்த ஆயுதங்களும் தளபாடங்களும் இருக்கின்றன. ஆனால், எம்மிடம் தார்மீக பலமும் துணிச்சலுமே இருக்கிறது. நாம் சாவதற்கு தயாராக இருக்கிறோம்.  அவர்கள் அதற்கு தயாராக இல்லை. அவர்கள் முகாம்களில் இருந்து வெளியில் வருவதில்லை. ஏனென்றால், கடைசிப்போராளி இறக்கும் வரை நாம் போராடுவோம் என்பதும் தங்களுக்கு பாரிய  இழப்புக்கள் ஏற்படும் என்பதும் அவர்களுக்கு தெரியும்."

புலிகளின் குரல் 

யாழ்ப்பாணக் குடாநாட்டின் பெருமளவு பகுதிகளை விடுதலை புலிகள் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த ஒரு நேரத்திலேயே கிட்டுவுடனான எனது இந்த  கலந்துரையாடல் ஆங்கிலத்தில்  பிரசுரமானது. கிட்டு அதை தமிழில் மொழிபெயர்ப்புச் செய்வித்தார். அது  " புலிகளின் குரல் " என்று அறியப்பட்ட விடுதலை புலிகளின் ஒலிபரப்புச் சேவையில் ஒலிபரப்பானது. பேட்டி கண்டவருக்காகவும் பேட்டியை வழங்கியவருக்காகவும் இரு விடுதலை புலிகள் இயக்கப் போராளிகள் குரல் கொடுத்தார்கள்.

பிரபாகரனுக்கும் கிட்டுவுக்கும் இடையில் பகைமையை  ஏற்படுத்தும் ஒரு சிறுபிள்ளைத்தனமான முயற்சியாக  அந்த பேட்டியின் சில பகுதிகளை திரிபுபடுத்தி அன்று சென்னையில் இயங்கிக்கொண்டிருந்த போட்டிக் குழுக்கள் ஒரு அநாமதேய துண்டுப்பிரசுரமாக  எவ்வாறு வெளியிட்டன என்பதை பல வருடங்கள் கழித்து விடுதலை புலிகளின்  தத்துவவாதியும் அரசியல் மதியூகியுமான பாலா அண்ணை என்ற அன்ரன் பாலசிங்கம் என்னிடம் கூறினார்.

ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போனறு பண்டிதர் என்ற முன்னாள் யாழ்ப்பாணத் தளபதி ரவீந்திரன் யாழ்ப்பாணத்தில் விடுதலை புலிகளின் இராணுவப் பிரிவுக்கும் அரசியல் பிரிவுக்கும் பொறுப்பாக இருந்தார். கிட்டுவும் திலீபன் என்ற இராசையா பார்த்திபனும்  முறையே இராணுவப் பிரிவுக்கும் அரசியல் பிரிவுக்கும் பொறுப்பாக பண்டிதரால் நியமாக்கப்பட்டனர். திலீபன் 1987 செப்டெம்பரில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து தன்னுயிரை மாய்த்துக் கொண்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

கிட்டுவும் திலீபனும் 

பண்டிதர் 1985 ஜனவரியில் கொல்லப்பட்டதை அடுத்து கிட்டு விடுதலை புலிகளின் யாழ்ப்பாணத் தளபதியானார். அரசியல் பிரிவு திலீபனின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது. திலீபனை ஒப்பீடடளவில் சுதந்திரமாக இயங்குவதற்கு கிட்டு அனுமதித்தார்.  அன்றைய நாட்களில் இருவரும் விடுதலை புலிகளை மேம்படுத்துவதற்கு ஒன்றாக தீவிரமாக இயங்கினர்.

விடுதலை புலிகள் இராணுவப் பிரிவு என்றும் அரசியல் பிரிவு என்றும் பிரிக்கப்பட்ட போதிலும், இரு பிரிவுகளையும் சேர்ந்த போராளிகள் சண்டைகளில் பெரும்பாலும் ஒன்றாகவே செயற்பட்டனர். ஆயுதப் போராளிகளுக்கும் அரசியல் செயற்பாட்டளர்களுக்கும் இடையில் ஒரு கண்டிப்பான பிளவு இருக்கக்கூடாது என்பதே கிட்டுவின் நிலைப்பாடாக இருந்தது. கண்டிப்பான பிளவு ஒன்று இருந்தால் போராளிகள் மத்தியில் தேவையற்ற பொறாமை ஏற்படவும் அதன் விளைவாக ஆயுதப் போராளிகள் " அறிவிலிகள் " என்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் " கோழைகள் " என்றும் ஒரு ஆரோக்கியமற்ற ஒரு  பாரம்பரியமும் வளர்ந்துவிடும். அதனால், திலீபன் உட்பட அரசியல் செயற்பாட்டாளர்கள் இராணுவ நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்றனர்.

விடுதலை புலிகளின் யாழ்ப்பாண அரசியல் பிரிவின் தலைவர் என்ற வகையில் திலீபன் கிட்டுவின் இணக்கத்துடனும் ஒத்துழைப்புடனும் புதிய வழிமுறையைக் கடைப்பிடித்தார். யாழ்ப்பாண குடாநாடு 23 அரசியல் உப பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு அரசியல் பொறுப்பாளரின் தலைமையில் செயற்பட்டன. சகல அரசியல் பொறுப்பாளர்களும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வெவ்வேறு இடங்களில் திலீபனின்  தலைமையில் சந்திப்பார்கள்.  அறிக்கைகளும் மீளாய்வுகளும் சமர்ப்பிக்கப்பட்டு சகல பிரச்சினைகளும் விரிவாக ஆராயப்படும்.  அதற்கு பிறகு திலீபன் அரசியல் பிரிவின் நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்றம் குறித்து கிட்டுவுக்கு விரிவாக விளக்கமளிப்பார்.

கிட்டு --  திலீபன் இரட்டையர்களினால் இன்னொரு அம்சமும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வைக்கப்படும் முறைப்பாட்டு பெட்டிகளின் ஊடாக மக்கள் தங்களது முறைப்பாடுகளை விடுதலை புலிகளுக்கு தெரிவிக்கக்கூடிய நடைமுறை ஒன்று வகுக்கப்ட்டது. மக்கள் தங்களது பிரச்சினைகளை எழுதி அந்த பெட்டிகளில் போடமுடியும். அநாமதேய முறைப்பாடுகளும் கூட ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய யாழ்ப்பாண மக்கள் விடுதலை புலிகள் இயக்கப் போராளிகளைப் பற்றிய முறைப்பாடுகளையும் கூட சமர்ப்பித்தனர். இந்த முறைப்பாடுகளின் விளைவாக ஒழுக்காற்று  விசாரணைகள் நடத்தப்பட்டு போராளிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. விடுதலை புலிகள் மக்களுக்கு ஓரளவுக்கேனும் பொறுப்புக்கூறுவதற்கு தாங்களாக ஏற்படுத்திக்கொண்ட முதல் சந்தர்ப்பமாக இது அமைந்தது.

ஊடகங்கள் மீதான மதிப்பு

விடுதலை புலிகளின் முக்கியமான தலைவர்கள் பலரைப் போலன்றி கிட்டு ஊடகங்களை மதித்து நடந்தார். யாழ்ப்பாணத்தில் இருந்த மூத்த பத்திரிகையாளர்களுடன் அவர் தனிப்பட்ட முறையில் தொடர்புகளைப் பேணினார். குடாநாட்டில் இருந்த ஊடகங்களுடனும் ஊடகவியலாளர்களுடனும் தொடர்பாடலைச் செய்யும் பொறுப்பு விடுதலை புலிகளின் இரு உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கிட்டுவும் தனது " ஆட்சிக்காலத்தில் " யாழ்ப்பாணத்தில் பல ஊடக அமைப்புக்களை நிறுவினார். அது விடயத்தில் அவருக்கு திலீபன் சிறந்த முறையில் உதவியாகவும் ஆதரவாகவும் செயற்பட்டார். " புலிகளின் குரல் " ஒலிபரப்புச் சேவை மற்றும் " நிதர்சனம் " தொலைக்காட்சி ஆகியவற்றுக்கு புறம்பாக, " களத்தில் ", சுதந்திரப்பறவைகள் " என்ற இரு பிரசுரங்களும் வெளியிடப்பட்டன. யாழ்ப்பாணத்தில் விடுதலை புலிகளின் ஊடக விவகாரங்களில் திலீபன் முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தை வகித்தார்.

1986 ஆம் ஆண்டில் பிரபலமான திரைப்பட நடிகரும் அரசியல் கட்சியின் தலைவருமான விஜய குமாரதுங்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் விளைவாக கிட்டுவும் யாழ்ப்பாணத்தில் அன்று விடுதலை புலிகளின் பேச்சாளராக இருந்த ரஹீமும் பெருமளவு பிரசித்தத்தை பெற்றனர். இந்த கட்டுரையின் முதல் பாகத்தில் குறிப்பிட்டதைப் போன்று  ஸ்ரீலங்கா மகாஜன கட்சியின் தலைவர் விஜயவுடன்  ஒஸீ அபேகுணசேகரவும் பீலிக்ஸ்  பெரேராவும் யாழ்ப்பாணம் வந்திருந்தனர். நல்ல முறையில் வரவேற்கப்பட்ட அவர்கள் கிட்டுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விஜயவின் யாழ்ப்பாண விஜயம் மற்றும் கிட்டுவுடனான அவரின் சந்திப்புகளை காண்பிக்கும் வீடியோ தென்னிலங்கையில் பரவலாக விநியோகத்தில் இருந்தது.

விஜய குமாரதுங்கவின் யாழ்ப்பாண விஜயம்

விஜய குமாரதுங்க யாழ்ப்பாணம் விஜயம் எவ்வாறு நடந்தது என்பது ஒரு சுவாரஸ்யமான கதை. 1986 ஆம் ஆண்டில் விடுதலை புலிகள் இலங்கைப் படைவீரர்கள் இருவரைப் பிடித்து தங்களது காவலில் வைத்திருந்தனர். தமிழர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் தொடர்பில் அனுதாபத்தைக் கொண்ட ஒரு முக்கியமான சிங்கள அரசியல் தலைவரிடம் அந்த இரு படைவீரர்களையும் ஒருதலைப்பட்சமாக விடுதலை செய்வதன் மூலமாக சில அரசியல் அனுகூலங்களைப் பெறுவதற்கு விடுதலை புலிகள் தீர்மானித்தார்கள். இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்  வாசுதேவ நாணக்காரவைப் பற்றி யோசித்தார். ஆனால், கிட்டுவும் ரஹீமும் விஜயவை சிறந்த  தெரிவு என்று உணர்ந்தனர்.

பிறகு என்ன நடந்தது என்பதை சில வருடங்கள் கழித்து ரஹீம் என்னிடம் விபரமாகக் கூறினார். ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்த விடுதலை புலிகளிடம் விஜயவின் தொலைபேசி இலக்கம் கூட இருக்கவில்லை. ரஹீம் தனது அடையாளத்தை வெளிக்காட்டாமல் முன்னாள் அமைச்சர் ரி.பி. இலங்கரத்னவுடன் தொலைபேசியில் பேசி விஜயவின் தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.  பிறகு அவர் விஜயவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தன்னை யார் என்று கூறினார். அதை ஒரு ஏமாற்று என்று சந்தேகித்த விஜய திருப்பி ரஹீமுடன் தொலைபேசியில்  பேசினார்.

பல தொலைபேசி அழைப்புகளுக்கு பிறகு அது விடுதலை புலிகள் தான் என்று நம்பினார். அத்துடன் இரு படைவீரர்களையும் விடுதலை செய்வதற்கு விடுதலை புலிகள் விரும்புவது குறித்தும் அவர் மகிழ்ச்சியடைந்தார். விஜயவை மனைவி சந்திரிகா குமாரதுங்கவுடன் யாழ்ப்பாணத்துக்கு வருமாறு விடுதலை புலிகள் அழைப்பு விடுத்தனர். ஆனால், சில தனிப்பட்ட காரணங்களுக்காக சந்திரிகாவினால் வரக்கூடியதாக இருக்கவில்ரை. அதனால் ஒஸீ அபேகுணசேகரவுடனும் யாழ்ப்பாணம் வருவதற்கு விஜய திட்டமிட்டார். பிறகு பீலிக்ஸ் பெரேராவும் அவர்களுடன் இணைந்து கொண்டார்.

மூவருக்கும் விடுதலை புலிகள் அமோக வரவேற்பு அளித்தனர். காவலில் இருந்த படைவீரர்களையும் அவர்கள் சந்தித்தனர். அந்த இரு படைவீரர்களின்  குடும்பத்தவர்களுடனும் சில மதத் தலைவர்களுடனும் சேர்ந்து விஜய மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு வருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. குடும்பத்தவர்கள் மற்றும் மதத் தலைவர்கள் முன்னிலையில் விஜரவிடம் படைவீரர்களை ஒப்படைப்பது என்பதே ஏற்பாடு என்று கூறப்பட்டது.

விஜயவின் யாழ்ப்பாண விஜயமும் விடுதலை புலிகளுடனான அவரின் ஊடாட்டங்களும் விரிவான முறையில் ஔிப்பதிவு செய்யப்பட்டு வீடியோ கசட் தயாரிக்கப்பட்டது. அந்த நாட்களில் இன்டர்நெற் கிடையாது. இப்போதுள்ளதைப் போன்று  'வைறல்' என்ற சொல்லும்  மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை. ஆனால், விடுதலை புலகளைச் சந்திப்பதற்கு விஜய யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட விஜயம் பற்றிய வீடியோ மிகவும் பிரபல்யமானது. அதன் பிரதிகள் பரவலாக விநியோகிக்கப்பட்டன. இரவோடிரவாக விஜய ஒரு பெரிய அரசியல் ஹீரோவாக மாறினார். அந்த நேரத்தில் இன உறவுகள்  மேம்படுவதற்கு வீடியோ உதவியது என்பது முக்கியமாக கவனிக்கத்தக்கது.

லலித் அத்துலத்முதலி கவலை 

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துக்கும்  தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலிக்கும்  கவலையாகப் போய்விட்டது. விஜயவை மலினப்படுத்தி படைவீரர்களின் விடுதலைக்கான  ' பெருமையை 'தனதாக்கிக் கொள்ளலாம் என்று லலித் நினைத்தார். விடுதலை புலிகளுடனான தனது தொடர்பு வழிகளைப் பயன்படுத்தி படைவீரர்களின் விடுதலைக்கு பிரதியுபகாரமாக பாதுகாப்பு படைகளின் காவலில் இருந்த இரு விடுதலை புலிகள் சந்தேகநபர்களை விடுதலை செய்ய முன்வருவதாக லலித் அறிவித்தார். எந்தவிதமான பிரதியுபகாரத்தையும் எதிர்பார்க்காமல் இரு படைவீரர்களையும் விஜயவிடம் விடுவிப்பதற்கு விடுதலை புலிகள் தயாராக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை,  வடக்கில் இன்னொரு ' திருப்பம் ' ஏற்பட்டது. விடுதலை புலிகளின் சிரேஷ்ட தலைவரும் தனது நெருங்கிய நண்பருமான அருணா யாழ்ப்பாணக் கோட்டைக்குள் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை காலந்தாழ்த்தியே கிட்டு தெரிந்துகொண்டார்.  விடுதைலை புலிகளின் படகு ஒன்று இலங்கை கடற்படையின் கப்பல் கடலில் வைத்து நடத்திய தாக்குதலில் அருணா பலியாகி விட்டார் என்றே நம்பப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த அருணா விடுதலை புலிகள் இயக்கத்தின் மிகவும் மூத்த ஒரு தலைவர். விடுதலை புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட தளபதியாகவும் அவர் செயற்பட்டவர். ஆனால்,  விடுதலை புலிகளின் படகு ஒன்று கடலில் கவிழ்ந்ததை அடுத்து கடற்படையினரால் பிடிக்கப்பட்டபோது அருணா தனது உண்மையான அடையாளத்தை கடற்படையிடம் வெளியிடவில்லை. ' குஞ்சு குமார்' என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட அருணா புலிகள் தங்களின்  படகை ஓட்டுவதற்காக தன்னை  பணம் கொடுத்து அமர்த்தியதாக கூறினார். அதனால்  தங்களிடம் பிடிபட்டவர் விடுதலை புலிகளின் முக்கியமான ஒரு தலைவர் என்பது பாதுகாப்பு படைகளுக்கு தெரியாத நிலையில் அருணா இராணுவ காவலில் இருந்துவந்தார்.

திட்டத்தை மாற்றிய கிட்டு 

அருணா இராணுவக் காவலில் உயிருடன் இருக்கிறார் என்பதை உறுதிசெய்து கொண்டதும் கிட்டுவின் திட்டம் மாறியது. விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவரை விடுவிக்கத் தயாராயிருப்பதாக அத்துலத்முதலி செய்த அறிவிப்பை பய்படுத்தி கிட்டு இரகசியமாகப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தார். இரகசியப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருந்த அதேவேளை விஜய குமாரதுங்க இரு படை வீரர்களின் உறவினர்களுடனும்  மதத்தலைவர்களுடனும்  யாழ்ப்பாணம் வந்துசேர்ந்தார்.

அவர்களுக்கு விடுதலை புலிகள் அன்பான வரவேற்பு அளித்தனர். படைவீரர்களை அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சந்திப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால், ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டதன் பிரகாரம் படைவீரர்களை விடுதலை செய்வதற்கு கிட்டு மறுத்தார்.

ஏமாற்றமடைந்த விஜய வெறுங்கையுடன் கொழும்பு திரும்பினார். விஜயவுக்கு ஏற்பட்ட அசௌகரியத்தினால் குதூகலமடைந்த தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி  விடுதலை புலிகளுடனான கைதிகள் பரிமாற்றத்தை துரிதப்படுத்தினார். ஆனால், குஞ்சு குமார் என்பது உண்மையில் அருணா என்பது தெரியவந்தபோது அத்துலத்முதலிக்கு பெரிய அவமானமாகப் போய்விட்டது. அந்த நேரத்தில் அதுவரையில் பிடிபட்ட விடுதலை புலிகளின் மிகவும் மூத்த தலைவர் ஒருவரை விடயம் அறியாமல் அரசாங்கம் நழுவவிட்டது.

அருணா என்பதை தெரியாமல் அவரை விடுதலை புலிகளிடம் அரசாங்கம் ஒப்படைத்த செய்தியை சகல ஊடகங்களையும் முந்திக்கொண்டு ' த இந்து ' பத்திரிகையின் அன்றைய கொழும்பு செய்தியாளர் என்ற வகையில் நானே முதலில்  வெளியிட்டேன். எனக்கு இதை கூறியது கிட்டுவே. அவருக்கு அருணாவின் விடுதலை பெரியதொரு  வெற்றி.

பிறகு எனக்கு அத்துலத்முதலியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. என்ன நடந்தது என்பதை நான் கூறியபோது அவர் உள்ளூர சிரித்துச் சமாளித்துக்கொண்டார்.

யாழ்ப்பாணத்தின் முடிசூடா மன்னன்

அருணா விவகாரத்துக்கு பிறகு யாழ்ப்பாண மக்கள் மத்தியில் கிட்டுவின் செல்வாக்கும் மதிப்பும் துரிதமாக உயர்ந்தது. அப்போது அவர் யாழ்ப்பாணத்தின் முடிசூடாமன்னன். ஆனால் விதி வேறுவிதமாக அமைந்து விட்டது. யாழ்ப்பாண நகர மத்தியில் கிட்டுவை கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியில் தனது ஒரு காலை அவர் இழந்தார். அந்த தாக்குதலை அறிந்து சீற்றமடைந்த அருணா யாழ்ப்பாணத்தில் விடுதலை புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரெலோ, ஈ.பி.ஆர். எல்.எவ். இயக்க உறுப்பினர்கள் பலரை படுகொலை செய்தார். அதற்கு பிறகு என்ன நடந்தது என்பதை  இந்த கட்டுரையின் மூன்றாம் பாகத்தில் பார்ப்போம்.

473029271_623411373578393_86931032800618

472767838_1287274122525695_3164280936535

471864201_1410524699918008_1260529757843

https://www.virakesari.lk/article/203838

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிட்டு மீதான கொலை முயற்சி

Published By: DIGITAL DESK 7   21 JAN, 2025 | 02:07 PM

image

டி.பி.எஸ். ஜெயராஜ் 

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் தளபதியான கேணல் கட்டு என்ற சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார் இருபதாம் நூற்றாண்டின  80 களில் யாழ்ப்பாணத்தின முடிசூடாமன்னனாக கருதப்பட்டார். யாழ்ப்பாண குடாநாட்டின் மிகப்பெரும் பகுதி அப்போது விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. கிட்டு ஓட்டிச்சென்ற வாகனத்துக்குள் இனந்தெரியாத நபர் ஒருவர் குண்டொன்றை வீசியபோது யாழ்ப்பாணம் எங்கும் பெரும் அதிர்ச்சிக்குள்ளானது.

1987 ஆம் ஆண்டில் இடம்பெற்ற அந்த சம்பவத்தின் விளைவாக கிட்டு ஒரு காலை இழந்தார். அந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பான விவகாரங்களில் கட்டுரையின் இந்த மூன்றாம் பாகம் கவனம் செலுத்துகிறது.

இரு வாரங்களுக்கு முன்னர் இந்த கட்டுரையின் முதல் பாகத்தில் குறிப்பிடப்பட்டதை போன்று கிட்டு யாழ்ப்பாணத்தில் இரு தடவை கைது செய்யப்பட்டபோது பாதுகாப்பு படைகளிடம் இருந்து தப்பிச் செல்வதற்கு அவரின் கெடுதியில்லாதவர் போன்ற தோற்றம் உதவியது.

தாங்கள் சந்தேகத்தில்  கைதுசெய்த மென்மையான குணாதிசயத்தைக் கொண்டவரைப் போன்ற தோற்றத்தைக் கொண்ட பேர்வழி பயங்கரமான விடுதலை புலிகள் இயக்கத்தின் யாழ்ப்பாண தளபதி கிட்டு என்பதை இராணுவம் புரிந்து கொள்ளவில்லை. 

வல்வெட்டித்துறையை சேர்ந்த இளைஞரான கிட்டு, பண்டிதர் என்ற ரவீந்திரனின் தலைமைத்துவத்தின் கீழ்  விடுதலை புலிகளின் யாழ்ப்பாண இராணுவத்  தளபதியாக நியமிக்கப்பட்டபோது யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான மக்களுக்கு தெரியாதவராகவே அவர் இருந்தார். அதனால் அவர் யார் என்பதை தெரியாத  கும்பல் ஒன்று அவரைத் தாக்குவதற்கு முயற்சித்த விசித்திரமான சம்பவம் ஒன்றும் இடம்பெற்றது. அன்று என்ன நடந்தது என்ன தெரியுமா? 

1984  ஆம் ஆண்டில் பண்டிதரின் தலைமையின் கீழ்  கிட்டு விடுதலை புலிகளின் இராணுவ தளபதியாகவும் திலீபன் அரசியல் பிரிவின் தலைவராகவும் பொறுப்பேற்றபோது இராணுவமும் பொலிஸும் சுதந்திரமாக நடமாடின. அதனால் விடுதலை புலிகள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் மக்களுடன் மக்களாக கலந்தது இயங்க வேண்டியதாயிற்று. மாவோ சேதுங்கின் வார்த்தைகளில் கூறுவதானால் கெரில்லாக்கள் மக்கள் என்ற சமுத்திரத்தில் நீந்தித்திரியும் மீன்கள்.

1984 ஏப்ரிலில் யாழ்ப்பாண நகரின் மத்தியில் சனசந்தடிமிகுந்த ஆஸ்பத்திரி வீதியில் இராணுவத்தின் ரோந்துப் பிரிவொன்றை  மறைந்திருந்து தாக்குவதற்கு விடுதலை புலிகள் கண்ணிவெடி ஒன்றை மறைத்து வைத்தனர். அந்த கண்ணிவெடிச் சம்பவம் அடைக்கலமாதா கத்தோலிக்க தேவாலயத்துக்கு எதிரே இடம்பெற்றது. ஒரு சில படைவீரர்கள் காயமடைந்தனரே தவிர, எவரும் கொல்லப்படவில்லை.

கண்ணிவெடியை வெடிக்க வைப்பதற்காக விடுதலை புலிகள் தேவாலய வளாகத்திற்குள் பதுங்கியிருந்தனர். சில படைவீரர்கள் அந்த வளாகத்திற்குள் சென்று  கண்டபாட்டில் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். தேவாலயத்தின் சுவர்களை குண்டுகள் சல்லடை போட்டன.

அடைக்கலமாதா தேவாலயத்தை இராணுவத்தினர் தாக்குகிறார்கள் என்ற செய்தி யாழ்ப்பாணம் எங்கும் பரவியது. யாழ்ப்பாண மாநகரசபை பகுதியில் வாழ்ந்த மக்களில் 40 சதவீதமானவர்கள் கத்தோலிக்கர்கள். உடனடியாக யாழ்ப்பாணத்தில் ஆரியகுளம் பகுதியில் அமைந்திருக்கும் பௌத்த நாகவிகாரைக்கு அருகாக கும்பல் ஒன்று திரண்டது. தேவாலயம் மீதான தாக்குதலுக்கு பழிவாங்க விகாரை மீது தாக்குதல் நடத்த அவர்கள் முயன்றார்கள்.

இதை கேள்விப்பட்ட உடனடியாகவே சம்பவ இடத்துக்கு விரைந்து கும்பலை கலந்து செல்லுமாறு உத்தரவிட்டார். நீங்கள் யார் என்று கிட்டுவை அவர்கள் திருப்பிக் கேட்டார்கள். விடுதலை புலிகளின் யாழ்ப்பாண மாவட்ட தளபதி என்று அவர் கூறிய பதிலை அவர்களில் பலர் நம்பவில்லை.

அதற்கு காரணம் கிட்டுவின் அப்பாவித்தனமான தோற்றமேயாகும். நீ ஒரு புலி இல்லை என்று கூறிக்கொண்டு அவர்கள் அவரை நோக்கி ஆவேசத்துடன் விரைந்தனர். கிட்டு தனது பிஸ்டலை எடுத்து ஆகாயத்தை நோக்கி இரண்டு வேட்டுக்களை தீர்த்தார். அமைதியானவரைப் போன்று தோன்றிய அவர் உண்மையில் கிட்டுதான் என்பதை விளங்கிக்கொண்ட அவர்கள் கலைந்து சென்றனர்.

இவ்வாறுதான் கிட்டு யாழ்ப்பாண வாசிகளுக்கு முதலில் தெரியவந்தார். அதற்கு பிறகு யாழ்ப்பாணத்தில் பரிச்சயமான ஒருவராக அவர் மாறினார். யாழ்ப்பாணக் குடாநாட்டின் பெரும்பகுதி விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பிறகு கிட்டு பெரியளவில் தனது பிரசன்ன்தை வெளிக்காட்டினார். கிட்டுவின் தலைமைத்துவத்தின் கீழேயே யாழ்ப்பாணத்தின் பெரும்பகுதியை விடுதலை புலிகள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்கள்.

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத் தாக்குதல் 

எவ்வாறு இந்த நிலைவரம் ஏற்பட்டது?  குடாநாட்டுக்குள் விடுதலை புலிகள் தங்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்த தொடங்கிய நிலையில், பல பொலிஸ்  நிலையங்கள் மூடப்பட்டன. இராணுவமும் அதன் காவல் நிலைகளைக் குறைத்துக்கொண்டது. இராணுவத்தினரின் ரோந்து நடவடிக்கைகளும் குறைந்துவிட்டன. மாவட்டம் முழுவதற்கும் பொலிஸ் தலைமையகமாக விளங்கிய யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தின் மீதான விடுதலை புலிகளின் தாக்குதலே இந்த நிலைவர மாற்றத்துக்கு காரணமாகும்.

வல்வெட்டித்துறையை சேர்ந்த பொலிஸ் சாராஜன்ட் ஒருவரின் வடிவில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்குள் விடுதலை புலிகள் ஒரு ' உளவாளியை ' வைத்திருந்தனர். அது வேறு யாருமல்ல பின்னரான நாட்களில் விடுதலை புலிகளின் " பொலிஸ்மா அதிபர் " என்று அறியப்பட்ட நடேசன்தான். வினீதா குணசேகர என்ற சிங்கள  பெண்பொலிஸ் உத்தியோகத்தரை திருமணம் செய்த நடேசன் தாக்குதலுக்கு நேவையான திடடங்களையும் வரைபடங்களையும் தயாரிப்பதில் விடுதலை புலிகளுக்கு உதவினார்.

கிட்டுவே நேரடியாக தலைமைதாங்கி நடத்திய யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் மீதான தாக்குதல் பெரிய  வெற்றிகரமானதாக அமைந்தது. பொலிசாரின் ஆயுதங்களில் பெரும்பகுதியை விடுதலை புலிகள் கைப்பற்றினர். விடுதலை புலிகளின் படையணி ஒன்று முடைநாற்றம் எடுக்கும் அகழியின் ஊடாக இரகசியமாக நகர்ந்துசென்று தாக்குதல் நடத்தி பொலிசாரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினர்  என்று கூறப்படுகிறது. யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தாக்குதலுக்கு பிறகு குடாநாட்டில் பொலிசாரின் நடவடிக்கைகள் இல்லாமல் போயின. இராணுவமும் கூட தரையில் அதன் துருப்புக்களின்  நடமாட்டங்களை மட்டுப்படுத்தத் தொடங்கியது.

திம்புவில் சமாதானப் பேச்சுவார்த்தை

இதற்கு பிறகுதான் பூட்டான் நாட்டின் தலைநகர் திம்புவில் இந்தியாவின் அனுசரணையுடனான பிரபல்யமான சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இலங்கை அரசாங்கத் தூதுக்குழுவுக்கு ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் சகோதரர் எச்.டபிள்யூ. ஜெயவர்தன கியூ.சி. தலைமை தாங்கினார். தமிழர்கள் தரப்பில் தமிழர் ஐக்கிய விடுதலை  கூட்டணி, தமிழீழ விடுதலை புலிகள், தமிழீழ மக்கள் விடுதலை கழகம் ( புளொட்), தமிழீழ விடுதலை இயக்கம் ( ரெலோ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ( ஈ.பி.ஆர்.எல்.எவ்.) மற்றும் ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (  ஈரோஸ்) ஆகியவற்றின்  பிரதிநிதிகள் பங்கேற்றனர். திம்பு பேச்சுவார்த்தைகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மோதல் நிறுத்தம் ஒன்றை அவசியப்படுத்தின. போர்நிறுத்தத்தின்போது இலங்கை பாதுகாப்பு படைகள் முகாம்களுக்குள் முடக்கப்பட்டன.

இந்த போர் நிறுத்தத்தை கிட்டு விடுதலை புலிகளின் அனுகூலத்துக்கு பயன்படுத்திக் கொண்டார். 

இராணுவ முகாம்களுக்கு நெருக்கமான கேந்திர முக்கியத்துவ நிலைகளில் விடுதலை புலிகள் பதுங்கு குழிகளையும் அகழிகளையும் இரகசியமாக அமைத்துக் கொண்டனர். ஆயுதப்படைகள் தூங்கிக் கொண்டிருந்தன. இரண்டு சுற்றுக்களுக்கு பிறகு திம்பு பேச்சுவார்த்தைகளை முறிவடைந்தன. மீண்டும் மோதல்கள் ஆரம்பமாகின.

மோதல்கள் ஆரம்பமானபோது தாங்கள் முற்றுகைக்கு உள்ளாகியிருப்பதை இராணுவத்தினர் தெரிந்துகொண்டனர். இராணுவ முகாம்கள் விடுதலை புலிகளினால் நிர்மூலம் செய்யப்படக்கூடிய ஆபத்து இருக்கவில்லை என்றபோதிலும்,  தங்களது முகாம்களில் இருந்து வெளியில் வருவது படையினருக்கு பிரச்சினையாக இருந்தது. ஏனென்றால் இராணுவ முகாம்களுக்கு நெருக்கமான  நிலைகொண்டிருந்த விடுதலை புலிகளின் படையணிகள் படையினரை நோக்கி தாக்குதல் நடத்தக்கூடிய நிலையில் இருந்தனர்.

இராணுவ அணியொன்று வெளியில் வருவதற்கு முயற்சித்த சந்தர்ப்பங்களில் எல்லாம் இராணுவ முகாம்களுக்கு அண்மையாக இருந்த விடுதலை புலிகளின் காவல் நிலைகளில் இருந்த போராளிகள் தங்களின் தலைமையை வாக்கி டோக்கி மூலமாக உஷார்ப்படுத்தினர். அப்போது சர்ச்சைக்குரிய  பகுதிகளுக்கு விடுதலை புலிகளின் மேலதிக படையணிகள் விரைந்து தாக்குதல் நடத்தி இராணுவத்தினரை முகாம்களுக்கு திருப்பி அனுப்பிவிடுவர். இவ்வாறாக தாக்குதல்களை நடத்திய விடுதலை புலிகளின் மேலதிக படையணிகளுக்கு பெரும்பாலும் கிட்டுவே தலைமை தாங்குவார்.  சண்டைகள் கடுமையானவையாக இருக்கும். இறுதியில் இராணுவத்தினர் தங்களது முகாம்களுக்கு திரும்பிவிடுவர்.

பாதி விடுதலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் பாதி விடுதலை செய்யப்பட்ட நிலையில் இருந்தது. அந்த நேரத்தில் முக்கியமானவராக கிட்டு விளங்கினார். இராணுவம் வீதிகளில் நடமாடமுடியாத நிலையில் இருந்ததால் இராணுவ முகாம்களுக்கான போக்குவரத்து பிரதானமாக ஆகாய மார்க்கத்திலேயே இடம்பெற்றது.

விநியோகங்கள் ஹெலிகொப்டர்கள் மூலமாகவே அனுப்பி வைக்கப்பட்டன. முகாம்களில் இருந்து படையினரை வெளியில் கொண்டு செல்வதும் முகாம்களுக்கு அவர்களை கொண்டு வருவதும் ஆகாய மார்க்கமாகவே இடம்பெற்றது. ஆகாயமார்க்க போக்குவரத்தின் மையநிலையமாக  பலாலி விமானத்தளம் விளங்கியது.

படையினரும் பொலிசாரும் களத்தில் இயங்கமுடியாத நிலையில், பீரங்கித் தாக்குதல்களையும் ஹெலிகொப்டர்களில் இருந்து துப்பாக்கிப் பிரயோகங்களை செய்யவும் விமானக் குண்டுத் தாக்குதல்களை நடத்தவும் அரசு நிர்ப்பந்திக்கப்பட்டது. துயரமான ஒரு திருப்பமாக இலங்கை அரசு  அந்நியர்கள் மீது தாக்குதல் நடத்துவதைப் போன்று அதன் சொந்த குடிமக்கள் மீது விமானக் குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்தத் தொடங்கியது.

விமானக் குண்டுவீச்சு தாக்குதல்கள், ஹெலிகொப்டர்கள் மூலமான துப்பாக்கிப் பிரயோகங்கள் மற்றும் ஷெல்வீச்களுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணத்தின் அந்த பகுதிகள் பாதி விடுவிக்கப்பட்ட ஒரு நிலையில் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன.

யாழ்ப்பாண மக்கள் படையினரின் தேடுதல் நடவடிக்கைகள்,  சுற்றிவளைப்புகள்,  கைதுகள் மற்றும் தடுப்புக்காவல் ஆகியவை பற்றிய பீதியின்றி சுதந்திரமாக வாழ்ந்தனர். முகாம்களில்  இருந்து படையினர் வெளியில் வருவதை விடுதலை புலிகள் தடுத்து வைத்திருந்ததனால் அந்த சுதந்திரம் அவர்களால் ஏற்படுத்தப்பட்டது என்று மக்கள் கருதினர்.

விடுதலை புலிகள் அவர்களது அந்த மகிழ்ச்சியான நாட்களில் மக்கள் மத்தியில்  மானசீகமான ஆதரவையும் செல்வாக்கையும் அனுபவித்தனர். விடுதலை இயக்க போராளிகள் ஹீரோக்களாக நோக்கப்பட்டனர். அன்று கிட்டு யாழ்ப்பாண மக்களில் பலரினால்   பிரமிப்புடனும் மதிப்புடனும்  ஏன் பாசத்துடனும் நோக்கப்பட்டார். அவர் பேரளவில் செல்வாக்கு மிக்கவராக விளங்கினார். 

இத்தகைய ஒரு சூழ்நிலையிலேயே நம்பமுடியாதது நடந்தது. யாழ்ப்பாண நகரத்தின் மத்தியில் கிட்டுவை கொலை செய்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவரது வாகனத்தின் மீது குண்டு ஒன்று எறியப்பட்டதன் விளைவாக அவர் தனது ஒரு காலை இழந்தார். இந்த சம்பவத்தினால் யாழ்ப்பாண மக்கள் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாகினர். "தமிழ்ப் பெண்புலிகள், இலங்கையின் கொடூரமான உள்நாட்டுப் போரில் ஒரு சிறுவர் போராளியாக எனது கதை " ( Tamil Tigress, My  story as a Child Soldier  in Sri Lanka's Bloody Civil War) என்ற நூலை எழுதிய நிரோமி டி சொய்சா, கிட்டு மீது தாக்குதல் நடத்தப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டபோது தனது பாடசாலைத் தோழிகள் மத்தியில் காணப்பட்ட சோகத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். அது எவ்வாறு நடந்தது?

ஆன் சிந்தியா துரைராஜா 

அந்த நாட்களில் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் கிட்டு "பண்டைத் தமிழர் வாழ்வில் காதலும் வீரமும் பின்னிப்  பிணைந்திருந்தன" என்று கூறியிருந்தார். யாழ்ப்பாணத்தின் முடிசூடா போர் மன்னனின் இதயத்தை காமன்கணை துளைத்ததை அறிந்த மக்களுக்கு பெரிய வியப்பாகப் போய்விட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துவ பீட மாணவியாக படிந்துக் கொண்டிருந்த  ஆன் சிந்தியா துரைராஜா என்ற மாணவியை அப்போது காதலித்துக் கொண்டிருந்தார். கிட்டு ஒரு இந்து. சிந்தியா ஒரு கத்தோலிக்கர். ஆனால், காதலுக்கு கண் இருக்கவில்லை. அச்சுவேலியைச் சேர்ந்த சிந்தியாவின் குடும்பம் யாழ்நகரில் வசித்து வந்தது.

படையினருடனான சண்டைகளில் ஈடுபடாவிட்டால், வாரத்தில் குறிப்பிட்ட சில தினங்களில் கிட்டு தான் மணஞ்செய்து கொள்ளப்போகும் சிந்தியாவின் வீட்டுக்கு போவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 1987  மார்ச் 30  கிட்டு தனது பச்சைநிற லான்சரை தானே ஒட்டிக்கொண்டு சிந்தியாவின் வீட்டுக்குப் போனார். அவருடன் அவரது மெய்க்காவலர் சாந்தாமணியும், நிக்சன் என்ற  இன்னொரு போராளியும் கூடச் சென்றிருந்தனர். சாந்தாமணி கிட்டுவுக்கு பக்கத்தில் முன் ஆசனத்திலும் நிக்சன் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்தனர்.

கொலை முயற்சி 

யாழ்நகரில் 2 ஆம் குறுக்குத்தெருவில் உள்ள சிந்தியாவின் வீட்டுக்கு நெருக்கமாக கிட்டு தனது காரை நிறுத்தியபோது மாலையாகிவிட்டது. கிட்டு வீட்டுக்கு உள்ளே செல்லும்போது அவரது மெய்க்காவலர்கள் வெளியில் வாகனத்திற்குள் இருப்பது வழமையாகும். கிட்டு வாகனத்தின் கதவை திறந்தபோது படபடவென்று யாரோ ஓடிவருகின்ற கால் சத்தம் கேட்டது. தரித்துநின்ற வாகனத்தின் பின்புறமிருந்து ஓடிவந்த நபர் ஒருவர் பக்க ஜன்னல் வழியாக குண்டொன்றை வீசினார்.

காரின் கதவைத் திறந்த கிட்டு அவரை நோக்கி வீசப்பட்ட குண்டு காரின் உள்ளே  வெடித்தபோது தனது வலதுகாலை தரையில் வைத்திருந்தார். காருக்குள் இருந்த இடதுகால் சிதைந்து போனது. முன் ஆசனத்தில் இருந்த சாந்தாமணியும் காயமடைந்தார். பின் ஆசனத்தில் இருந்த நிக்சன் காயப்படவில்லை.

காயமடைந்த கிட்டு வீதியின் வடிகாலுக்குள் வீழ்ந்தார். அடுத்து நடந்தது நம்பமுடியாத அளவுக்கு துணிச்சலானதாகவும் உண்மையில் வீரசாகசமாகவும் இருந்தது. படுமோசமாக காரமடைந்த போதிலும், கிட்டு தனது மக்னம் 357 துப்பாக்கியை எடுத்து குண்டை எறிந்துவிட்டு தப்பியோடிய நபரை நோக்கி சரயாரியாக சுட்டார். ஆனால் அந்த நபர் அந்திமாலை இருளுக்குள் ஓடிமறைந்து விட்டார். துப்பாக்கி ரவை சுற்று முழுவதையும் முடித்த பிறகு மீண்டும் துப்பாக்கியை நிரப்புவதற்கு  கிட்டுவால் முடியவில்லை. இரத்தம் வடிந்தோடிய நிலையில் நிலைகுலைந்த அவர் நினைவிழந்தார்.

உடனடியாகவே கிட்டு யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரிக்கு விரையப்பட்டார். ஒரு கட்டத்தில் அவரின் சுவாசம் நின்றுவிட்டது. உள்ளக பயிற்சி மருத்துவ மாணவர் ஒருவரின் உயிர்காக்கும் முயற்சியானால்  மீண்டும் கிட்டு சுவாசிக்கத் தொடங்கினார். கிட்டு உயிர்தப்பினார் என்றபோதிலும், அவரின் இடதுகாலை முழங்காலுக்கு மேல் ஒரு இடத்தில் துண்டிக்க வேண்டியதாயிற்று. காயமடைந்த சாந்தாமணிக்கும் ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.

முற்றிலும் எதிர்பாராத இந்த சம்பவத்தினால் விடுதலை புலிகள் குழப்பநிலைக்கு உள்ளாகியிருந்தனர். 2 ஆம் குறுக்குத் தெருவுக்கு நெருக்கமாக உள்ள வீதிகளையும் ஒழுங்கைகளையும் விடுதலை புலிகள் போக்குவரத்துக்கு தடைசெய்தனர். குண்டுத் தாக்குதலை நடத்திய நபர் அயலில் எங்காவது மறைந்திருக்கக்கூடும் என்று அவர்கள் சந்தேகித்தனர். நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தடுத்துவைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர்  4 ஆம் குறுக்குத் தெருவில் இருந்த '  சற்றர்டே றிவியூ ' ஆசிரியபீட அலுவலகத்தில் பணியாற்றிய உதவி ஆசிரியர். தடுத்து வைக்கப்பட்டவர்களில் ஒரு சிலரைத் தவிர, ஏனையவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

சந்தேகமும் வதந்திகளும் 

கிட்டுவை கொலை செய்ய முயற்சித்தவர் இராணுவம் நிலைகொண்டிருந்த யாழ்ப்பாணக் கோட்டைக்குள் இருந்து வந்தவர் என்று ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது. கோட்டையைச் சுற்றி விடுதலை புலிகளின் காவல் நிலைகள் இருந்ததால் அவ்வாறு எவராவது கோட்டையில் இருந்து வெளியே வந்து நடமாடியிருந்தால்  போராளிகள் அதைக்  கண்காணித்திருப்பர். அதனால் அந்த ஆரம்பக்கட்ட சந்தேகம் நிராகரிக்கப்பட்டது. ஆனால், கிட்டு மீதான தாக்குதலுக்கு இராணுவ வீரர் ஒருவரே பொறுப்பு என்று கூறி தேசிய பாதுகாப்பு அமைச்சு உரிமை கோரிய செய்திகள் ஊடகங்களில் வெளிவரச் செய்யப்படதை இதனால் தடுக்க முடியவில்லை.

கிட்டு மீது வீசப்பட்டது ஒரு கிரனேட் என்றும்  முதலில் செய்திகள் வெளியாகின. அதைத் தொடர்ந்து குண்டின் சிதறல்களை ஆய்வுசெய்த விடுதலை புலிகள் அது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஒரு ' நாட்டுக்குண்டு' என்ற முடிவுக்கு வந்தனர். அதற்கு பிறகு சந்தேகம் ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ, புளொட்  மீது திரும்பத்தொடங்கியது.

மாற்று இயக்கங்களுடனான விடுதலை புலிகளின் மோதல்களில் பெருமளவுக்கு இழப்புகளைச் சந்தித்தவை இந்த மூன்று இயக்கங்களுமே ஆகும். கிட்டு மீதான கொலை முயற்சிக்கு அரசு உதவியும் ஒத்தாசையும் செய்திருக்கக்கூடும் என்றும் சந்தேகிக்கப்பட்டது. இந்த கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டு சந்தேகத்துக்கு உரியவர்கள் பலரை விடுதலை புலிகள் தடுத்துவைத்த போதிலும், உருப்படியாக எதுவும் ஒருபோதும்  நிரூபிக்கப்படவில்லை.

கிட்டு மீதான கொலை முயற்சி ஒரு உள்வீட்டு வேலை என்று குழப்பத்தைத் தந்த இன்னொரு வதந்தியும் உலவியது. விடுதலை புலிகளின் அப்போதைய பிரதி தலைவர் மாத்தையா என்ற மகேந்திரராஜா இதைச் செய்வித்திருப்பார் என்பது ஒரு கருத்து. இது விடயத்தில் மாத்தையாவின் விசுவாசியும் விடுதலை புலிகள் இயக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளருமான விசு என்ற அரவிந்தராஜாவின் பெயரும் இது விடயத்தில் அடிபட்டது.

இன்னொரு வதந்தி மிகவும் பாரதூரமானது.  மாத்தையா ஊடாக  அல்லது புறம்பாக  விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை  பிரபாகரன் இதைச் செய்வித்திருக்கலாம் என்பதே அது. கிட்டுவின் செல்வாக்கு மீதான பொறாமையை இதற்கு காரணமாகவும் கூறப்பட்டது. எவ்வாறிருந்தாலும்,  இவை வெறுமனே ஊகங்களே. ஒருபோதும் நிரூபிக்கப்படவில்லை.

பின்னரான வருடங்களில் கிட்டு வெளிநாட்டில் இருந்தபோது அவருடன் நீண்ட தொலைபேசி உரையாடல்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என் மீது அவர் நம்பிக்கை வைத்திருந்தார் போன்று தோன்றியது. என்னுடன் பல விடயங்களை வெளிப்படையாக அவர் பேசினார். குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஒரு தடவை நான்  அவரிடம் கேட்டேன். அது "இனந்தெரியாதது" என்று பதிலளித்த அவர் சீறீசபாரத்தினத்தின் விசுவாசி ஒருவர் பழிவாங்கும் வேட்கையில்  "தன்னந்தனியனாக" செயற்பட்டிருக்கக்கூடும் என்று நினைப்பதாக சொன்னார். (ரெலா தலைவர்  சிறீசபாரத்தினத்தை கிட்டுவே நேரடியாக சுட்டுக்கொன்றார்) விடுதலை புலிகளின் உள்வீட்டு வேலைக்கான சாத்தியம் குறித்து நான் கேட்டபோது மிகவும் ஆத்திரமடைந்த கிட்டு "இப்படி ஒருநாளும் கதையாதையுங்கோ அண்ணன்"  என்று கடிந்துகொண்டார்.

அப்பாவிகளை படுகொலை செய்த அருணா 

விடுதலை புலிகளின் மூத்த தலைவரான அருணா ஈவிரக்கமின்ற அப்பாவிகள் பலரை படுகொலை செய்த சம்பவம் கிட்டு மீதான கொலை முயற்சியின் மிகவும் பாரதூரமான, எதிர்மறையான விளைவாக அமைந்தது. யாழ்ப்பாணத்தில் கல்வியங்காட்டைச் சேர்ந்த அருணா என்ற செல்லச்சாமி செல்வகுமார் விடுதலை புலிகளின் மட்டக்களப்பு தளபதியாக பணியாற்றிய ஒரு மூத்த போராளி.

அருணா தமிழ்நாடு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது படகை இலங்கை கடற்படை தாக்கி அவரையும் வேறு போராளிகளையும் கைதுசெய்தது. அருணா கெட்டித்தனமாக தனது அடையாளத்தை மறைத்து விடுதலை புலிகளினால் பணம் கொடுத்து அமர்த்தப்பட்ட குஞ்சு குமார் என்ற படகோட்டியாக பாசாங்கு செய்தார். அவர் யாழ்ப்பாணக் கோட்டைக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

கிட்டு தேசிய பாதுகாப்பு  அமைச்சர் லலித் அத்துலத்முதலியுடன் பேச்சுவார்த்தை நடத்தி கைதிகள் பரிமாற்ற ஏற்பாடு ஒன்றின் மூலமாக அருணாவின் விடுதலையை பெற்றுக்கொண்டார். இந்த கைதிகள் பரிமாற்றத்தின் விபரங்கள் கடந்த வாரம் வெளியான இந்த கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் இருக்கின்றன.

கிட்டுவும் அருணாவும் இயக்கத்தில் சகபாடி தோழர்களாக இருந்ததற்கு புறம்பாக மிகவும் நெருங்கிய நண்பர்களும் கூட. இது தவிர, கைதிகள் பரிமாற்றத்தின் மூலமாக தனக்கு விடுதலையை பெற்றுத் தந்ததற்காக அருணா கிட்டுவுக்கு மிகுந்த நனறியுடையவராகவும் இருந்தார். அதனால்  கிட்டு மீதான தாக்குதல் பற்றி கேள்விப்பட்டதும் அவர் மிகவும் வெறித்தனமாக நடந்துகொண்டார். அவர் தன்னிலை மறந்து செயற்பட்டார்.

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு அண்மையாக ஸ்ரீனிவாசன் வீதியில் (லவ் லேன்) ஒரு வீட்டில் சுமார் ஐம்பது பேரை விடுதலை புலிகள் சிறை வைத்திருந்தனர். அந்த கைதிகளில் ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ மற்றும் புளொட் இயக்கங்களின் உறுப்பினர்களும் சில வர்த்தகர்களும்  அடங்கியிருந்தனர். அவர்கள் விடுதலை புலிகளின் புலனாய்வுப் பிரிவினராலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். 

அருணா அந்த வீட்டுக்குச் சென்று அங்கு காவல் செய்துகொண்டிருந்த விடுதலை புலிகளுக்கு உத்தரவிட்டு சகல கைதிகளையும் ஒரேயிடத்தில் கூடவைத்தார். பிறகு விடுதலை புலிகள் போராளிகளிடமிருந்து இயந்திரத் துப்பாக்கிகளை வாங்கி  நிராயுதபாணிகளான  கைதிகளை சுட்டுத் தள்ளினார்.

வெறிபிடித்த அருணாவினால் நாற்பதுக்கும் அதிகமானவர்கள் ஈவிரக்கமின்றி கொலை செய்யப்பட்டனர். பலியானவர்களில் எவருமே கிட்டு மீதான தாக்குதலில் எந்தவகையிலும் சம்பந்தமில்லாதவர்கள். அது உண்மையிலேயே ஒரு அப்பாவிகள் படுகொலையேயாகும். ஆனால், தற்செயலாக இந்த சம்பவமே தவறுதலாக " கந்தன் கருணை" படுகொலை என்று குறிப்பிடப்படுகிறது.

இந்த படுகொலைகள் தொடர்பாக அருணா விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனால் தடுத்துவைக்கப்பட்டார். இயக்கத்தில் அவரது உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டது  வேறு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை. இந்திய இராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் 1987  அக்டோபரில் மோதல் மூண்டபோது அருணா விடுதலை செய்யப்பட்ட போதிலும், ஆயுதங்களை வைத்திருப்பதற்கு  தடை விதிக்கப்பட்டது. சில வாரங்கள் கழித்து அருணா யாழ்ப்பாணம் செம்பத்திரிசியார் கல்லூரிக்கு அண்மையாக ரேராந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியப் படையினரால் கொல்லப்பட்டார்.

அருணா செய்த படுகொலையை நியாயப்படுத்த விடுதலை புலிகள் ஒரு கட்டுக்கதையை வெளியில் விட்டனர். மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த  சில சமூகவிரோத பிரகிருதிகள் காவலுக்கு இருந்த போராளிகள் இருவரை மடக்கிப்பிடித்துக் கொலைசெய்தனர்.  போராளிகளின் ஆயுதங்களுடன் தப்பியோடுவதற்கு அந்த பிரகிருதிகள் முயற்சித்தனர். அங்கே துப்பாக்கிச் சண்டை மூண்டது. அப்போது சில கைதிகள் கொல்லப்பட்டு விட்டனர் என்று விடுதலை புலிகள் கூறினர். இந்தக் கதையை எவரும் பெரிதாக நம்பவில்லை. அந்த கொடூரமான படுகொலை பரவலாக கண்டனத்துக்கு உள்ளானது. 

கிட்டுவின் மருத்துவ சிகிச்சை

அதேவேளை, அவயவம் துண்டிக்கப்பட்ட பிறகு கிட்டு ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை பெறுவதற்கு பதிலாக விடுதலை புலிகளினால் பாதுகாப்பான வீடு ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டார். கிட்டு தங்கியிருந்து சிகிச்சை பெறுவதன் காரணமாக யாழ்ப்பாணம்  ஆஸ்பத்திரி மீது பாதுகாப்பு படைகள் விமானக்குண்டுவீச்சு தாக்குதலை நடத்தக்கூடும் என்று விடுதலை புலிகள் அஞ்சினர். கிட்டுவை கவனிப்பதற்காக பல மருத்துவர்கள் வெவ்வேறு இரகசிய இடங்களுக்கு சென்று வந்தனர்.  யாழ்ப்பாணத்தில் உள்ள பிலிப்ஸ் நேர்ஸிங் ஹோமிலும் இடைக்கிடை கிட்டு மருத்துவப் பராமரிப்பைப் பெற்றார்.

கிட்டுவை கவனிக்கும் பொறுப்பை யாழ்ப்பாணத்தில்  விடுதலை புலிகளின் அன்றைய பேச்சாளராக இருந்த ரஹீம் என்ற சிறீக்குமார் கனகரத்தினம் ஏற்றுக் கொண்டார். ரஹீம் கிட்டுவுடன் இரவுபகலாக தங்கியிருந்தார். கிடடுவின் மருத்துவப் பராமரிப்பை ஒருங்கிணைக்கும் பணியுடன் அவரின் பாதுகாப்புக்கும் ரஹீம் பொறுப்பாக இருந்தார். கிட்டுவின் தனிப்பட்ட உதவியாளர்கவும் அவர் செயற்பட்டார். கிட்டுவுக்கு பதிலாக பதில் தளபதியாக விடுதலை புலிகளின் மன்னார் தளபதி ராதா யாழ்ப்பாணத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

ஊன்றுகோலுடன் நடந்தார்

கிட்டு மனத்துணிச்சலும் தைரியமும் கொண்டவர். விரைவாக குணமடைந்த அவர் கால் ஒன்று துண்டிக்கப்பட்டதன் காரணமாக சாரம் ஒன்றை அணிந்து கொண்டு  ஊன்றுகோலுடன் நடமாடித் திரியத் தொடங்கினார்.  இயக்கத்திற்குள் அவரது மதிப்பும் மக்கள் மத்தியிலான செல்வாக்கும் மாறாமல் அப்படியே இருந்தன.  விடுதலை புலிகள்   1987 மேதினத்தை கொண்டாடியபோது அந்த அரங்கில் கிட்டு வாகனம் ஒன்றில் இருந்தவாறு கூட்டத்தினருக்கு  உரையாற்றினார்.

குடாநாட்டின் வடமராட்சி பிரதேசத்தை மீளக் கைப்பற்றுவதற்கு 1987 மே 26/ 27 திகதிகளில் பாதுகாப்பு படைகள் " ஒப்பரேசன் லிபறேசன்" இராணுவ நடவடிக்கையை தொடங்கியபோது  சண்டையில் ஈடுபட முடியாதவராக  கிட்டு இருந்தார். ஆனால் அவர் முன்னரங்கத்தில் நின்று போராடிய தனது பையன்களுடன் வானொலி மூலமாக தொடர்புகொண்டு   உற்சாகப்படுத்தி ஆலோசனைகளையும் வழங்கினார்.

அரசியலில் தீவிர செயற்பாடு 

ஒரு காலை இழந்த போதிலும் கூட, கிட்டு விடுதலை புலிகள் இயக்கத்திற்குள் அரசியல் ரீதியில் மிகவும் தீவிரமாக செயற்பட்டார். இந்தியா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் மெக்சிக்கோ போன்ற  பல  நாடுகளுக்கு அவர் பயணம் செய்தார். சமாதான முயற்சிகள் பலவற்றிலும் கூட அவர் ஈடுபட்டார். இந்த விடயங்களை இந்த கட்டுரையின் நான்காவதும் இறுதியானதுமான பாகத்தில் அடுத்தவாரம் பார்ப்போம்.

https://www.virakesari.lk/article/204436

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய கடற்படை தங்களை கொல்வதை முறியடித்த கிட்டுவும் தோழர்களும்

Published By: DIGITAL DESK 7   29 JAN, 2025 | 08:57 AM

image

டி.பி.எஸ். ஜெயராஜ்

தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட இராணுவத் தளபதி கிட்டு என்ற சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமாரின் வாழ்வும் காலமும் இந்த நீண்ட கட்டுரையின் கவனக்குவிப்பாக இருந்துவருகிறது. முதல் மூன்று பாகங்களும்  வல்வெட்டித்துறையை சேர்ந்த பதினெட்டு வயதான இளைஞன் எவ்வாறு விடுதலை புலிகள் இயக்கத்தில் ஒரு கெரில்லாப் போராளியாக இணைந்து படிப்படியாக  உயர்ந்து   யாழ்ப்பாணத்தின் "முடிசூடா மன்னாக " வந்தார் என்பதை விளக்கின. கிட்டுவும் அவரது சில தோழர்களும்  இந்திய கடற்படை தங்களை கைதுசெய்வதை தடுக்க தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்களின் மரணத்துக்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து நான்காவதும் இறுதியுமான இந்த பாகம் விளக்குகிறது.

இந்த கட்டுரைத் தொடரில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டதைப் போன்று 1987 மார்ச் 30 ஆம் திகதி அவரது வாகனத்தின் மீது குண்டு வீசப்பட்டதால் கிட்டு ஒரு காலை இழந்தார். அதையடுத்து அவர் தீவிர இராணுவ சேவையில்  இருந்து " கட்டாய ஓய்வைப் " பெற நிர்ப்பந்திக்கப்பட்டார். துடிப்பான போராளியான கிட்டு தனது போராட்ட நாட்கள் முடிவுக்கு வந்துவிட்டது என்ற யதார்த்தத்தை ஏற்றுக் கொள்வதற்கு தயாராயிருக்கவில்லை. இந்தியாவுக்கு சென்று செயற்கைக் கால் ஒன்றை பொருத்திக் கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து அவர் ஆராய தீர்மானித்தார்.

1987 ஜூலை நடுப்பகுதியில்  புங்குடுதீவில் இருந்து யாழ்ப்பாணத்தில் தனக்கு அடுத்த நிலையில் இருந்த ரஹீமுடனும் இன்னொரு மூத்த போராளியான செர்ணத்துடனும் சேர்ந்து கிட்டு இரகசியமாக படகு மூலம் இந்தியாவுக்கு சென்றார். சில வாரங்கள் கழித்து 1987 ஜூலை 29 ஆம் திகதி இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர்.ஜெயவர்தனவும் இந்திய -- இலங்கை சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். அதையடுத்து போரில் ஒரு தணிவு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து பெரும் எண்ணிக்கையான விடுதலை புலிகள் இலங்கைக்கு திரும்பினர்.

விடுதலை புலிகள் மீது நிறைந்த அனுதாபம் கொண்டிருந்த அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரனை கிட்டு சந்தித்தார். அவர் பல வழிகளிலும் விடுதலை புலிகளுக்கு  உதவினார். மெட்ராஸில் ( இன்றைய சென்னை ) அசோக் நகரில் உள்ள செய்கை அவயவங்கள் பொருத்தும் மருத்துவ நிலையத்தில் கிட்டு மருத்துவ பராமரிப்பைப் பெறவதற்கு முதலமைச்சர் ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார்.

ஆனால், நிலைவரங்கள் விரைவாக மாறத் தொடங்கின.1987  அக்டோபரில் இந்திய அமைதிகாக்கும் படைகளுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் போர் மூண்டது. நோய்வாய்ப்பட்டிருந்த  முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அப்போது மருந்தவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார்.

விடுதலை புலிகளின் அரசியல் மதியூகி அன்ரன் பாலசிங்கமும் யோகி மற்றும் திலகர் போன்ற அரசியல் பிரிவின் மூத்த உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்த நிலையில், மெட்ராஸில்  பிரதான அரசியல் பேச்சுவார்த்தையாளர் கிட்டு மீது திணிக்கப்பட்டது. அரசியல் பிரிவின் இன்னொரு மூத்த தலைவரான  'பேபி' சுப்பிரமணியமும் அப்போது மெட்ராஸில் இருந்தார். ஆனால் செயற்பாடுகளில் தீவிர ஈடுபாடு காட்டாமல் அமைதியாக இருப்பதற்கு அவர் விரும்பினார்.

கலைஞர்

அன்று எதிர்க்கட்சியாக இருந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைலர் கலைஞர் முத்துவேல் கருணாநிதியை சந்தித்த கிட்டு விடுதலை புலிகளின் சார்பில் வேண்டுகோள் விடுத்தார். எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவர்களாக விடுதலை புலிகளை கலைஞர் கருதியதால் அவருக்கும் அவர்களுக்கும் இடையிலான உறவுகள் கசப்படைந்திருந்தன. என்றாலும், திராவிட முன்னேற்ற கழகத்தின் முக்கியஸ்தரான வைகோ என்று அறியப்பட்ட வை. கோபாலசுவாமி ஊடாக கருணாநிதியுடன் உறவுகளை மீண்டும் ஏற்படுத்திக் கொள்வதற்கு கிட்டுவினால் முடிந்தது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் கிட்டு சந்தித்தார்.

அதன் விளைவாக கருணாநிதியும் தமிழ்நாட்டின் ஏனைய அரசியல் தலைவர்களும் இந்திய அமைதிகாக்கும் படைகளுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் மூண்ட போரைக் கடுமையாக கண்டனம் செய்தார்கள். உடனடியாக போர்நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்களுடனும் இந்தியாவை தளமாகக் கொண்டு செயற்பட்ட சர்வதேச ஊடகங்களுடனும் கிட்டு தொடர்பாடல்களைச் செய்தார். அதன் விளைவாக விடுதலை புலிகளின் நிலைப்பாட்டுக்கு தமிழ்நாட்டிலும் வேறு சில இந்திய மாநிலங்களிலும் பிரசித்தம் கிடைத்தது. மேற்குலக நாடுகளில் இருந்த விடுதலை புலிகள் சார்பு அமைப்புக்களுடனும் கிட்டு தொடர்பில் இருந்தார்.

எம்.ஜி.ஆர். 

அமெரிக்காவில் இருந்த வண்ணம் எம்.ஜி.ஆர். கிட்டுவுடன் தொடர்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மைலாப்பூரில் இருந்த தொலைத்தொடர்பு நிலையம் ஒன்றன் ஊடாக அமெரிக்காவில் இருந்த எம்.ஜி.ஆரின் உதவியாளர்களில் ஒருவருடன் ரஹீம்  தொடர்புகொள்வார்.  மாறிமாறி தகவல்கள் பரிமாறப்பட்டன.  தமிழ்நாட்டில் விடுதலை புலிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிர்பார்த்த எம்ஜி.ஆர். ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  கிட்டு, ரஹீம், காஸ்ட்ரோ மற்றும் சில  விடுதலை புலிகளை திருவான்மியூரில் ' வீட்டுக்காவலில் ' வைத்தார். ஆதனால் இந்தியாவில் விடுதலை புலிகளக்கு எதிராக மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதேவேளை கிடடுவின் காதலி சிந்தியா இந்திய இராணுவத்தினால் கைதுசெய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து கிட்டுவின் படம் அடங்கிய அல்பம் ஒன்று கண்டெடுக்கப்படடது. அதன் மூலமாக அவர் கிட்டுவின் காதலி என்பது இந்தியப் படையினருக்கு தெரியவந்தது. சிந்தியா பலாலியில் தடுத்து வைக்கப்பட்டார்.

ஒரு சில வாரங்கள் கழத்து எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் இருந்து மெட்ராஸ் திரும்பினார். அவர் கிட்டுவைச் சந்தித்தார். இந்திய இராணுவத்தினால் கிட்டுவின் காதலி தடுத்து வைக்கப்பட்டிருந்ததை அறிந்து எம்ஜி.ஆர். ஆத்திரமடைந்தார்.  அவர் புதுடில்லிக்கு நெருக்குதல் கொடுத்தார். ஒரு சில நாட்களுக்குளன சிந்தியா மெட்ராஸுக்கு கொண்டுவரப்பட்டு கிட்டுவுடன் மீண்டும் இணைந்துகொண்டார். எம்ஜி.ஆர். 1987 டிசம்பர் 24 ஆம் திகதி காலமானது பெரும் கவலையை ஏற்படுத்தியது.

பேச்சுவார்த்தையாளர் 

பெயரளவில் வீட்டுக்காவலில் இருந்தாலும், கிட்டு பேச்சுவார்த்தையாளர் என்ற பாத்திரத்தை வகித்தார். இந்திய புலனாய்வு சேவையான 'றோ' வைச் சேர்ந்தவர்கள் உட்பட இந்திய அதிகாரிகள் அவருடன் தொடர்பு கொண்டனர்.  அவ்வாறே அரசியல் தலைவர்களும் ஊடகங்களின் பிரதநிதிகளும் கிட்டுவுடன் தொடர்பில் இருந்தனர். 

விடுதலை புலிகளுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருமாறு ராஜீவ் காந்தி அரசாங்கத்தின் மீது இந்தியாவுக்குள் கடுமையான நெருக்குதல்கள் பிரயோகிக்கப்பட்டன. ' றோ'வின் அனுசரணையுடனான ஒரு நடவடிக்கையாக  இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களான ஜொனியையும் ரஹீமையும்  விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக கிட்டு வன்னிக்கு அனுப்பினார்.ஆனால், ஒரு  மாபெரும் தொடர்பாடல் தவறு காரணமாக ஜொனி இந்திய அமைதி காக்கும் படையினரால் கொல்லப்பட்டார். ரஹீம் மெட்ராஸுக்கு திரும்பினார்.

நாளடைவில், விடுதலை புலிகளுடன் இணக்கப்பாட்டை ஏற்டுத்திக்கொள்ளும் நம்பிக்கையை புதுடில்லி கைவிட்டது. விடுதலை புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதுடன்  ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் ஈ.என்.டி.எல். எவ். இயக்கங்களை ஊக்குவித்து வடக்கு கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதன் விளைவாக தமிழ்நாட்டில் விடுதலை புலிகளின் அலுவலகங்களும் பாதுகாப்பான இடங்களும் மூடப்பட்டன. மெட்ராஸ் மத்திய சிறையில் உள்ள ஒரு பகுதியில் கிட்டு உட்பட 164 விடுதலை புலிகள் தடுத்துவைக்கப்பட்டனர். சிந்தியா அந்த சிறையில் பெண்களுக்கான பகுதியில் அடைக்கப்பட்டார்.

சாகும்வரை உண்ணாவிரதம்

விசாரணை எதுவும் இன்றி நீண்டநாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலை புலிகள் பொறுமை இழந்து தங்கள் மீது குற்றச்சாட்டுக்கள் இருந்தால் வழக்குத் தொடரவேண்டும் அல்லது விடுதலை செய்யவேணடும் என்று கோரிக்கை விடுத்தனர். எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத பட்சத்தில் திலீபனைப் போன்று கிட்டுவும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுப்பார் என்று அவர்கள் அறிவித்தனர். கிட்டு அவ்வாறு போராட்டத்தில் இறங்கினால் தாங்களும் அதில் இணைந்து கொள்ளப்போவதாகவும் அவர்கள் அச்சுறுத்தினர். உண்ணாவிரதப் போராட்ட அச்சுறுத்தல் பற்றிய செய்தி தமிழ்நாட்டு ஊடகங்களில் வெளியானது. 

இந்திய அரசாங்கம் பீதியடைந்தது.தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலை புலிகள் 1988 செப்டெம்பரில் மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு விமானம் மூலம் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். முதலில் அவர்கள் காங்கேசன்துறையில் தங்கவைக்கப்பட்டு பிறகு பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி முகாமுக்கு கூட்டிச்செல்லப்பட்டனர்.

வன்னியில் கிட்டு 

கிட்டுவும் சிந்தியாவும் பலாலிக்கு கொண்டு வரப்பட்டனர்.  பிறகு அவர்கள் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு முன்பாக இறக்கி விடப்பட்டனர். சென்னையில் செயற்கைக்கால் பொருத்தும் திட்டம் சரிவரவில்லை என்பதால் கிட்டு தொடர்ந்தும் ஊன்றுகோலின் உதவியுடனேயே நடந்துகொண்டு திரிந்தார். அவரை போட்டிக்குழுக்கள் தாக்குவது சுலபம். கிட்டுவும் சிந்தியாவும் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியக்கலாநிதி நச்சினார்க்கினியரின் அலுவலகத்துக்கு சென்றனர். வல்வெட்டித்துறை பிரஜைகள் குழுவின் தலைவர் வைத்தியசாலைக்கு வந்து கிட்டுவை வன்னிக்கு கூட்டிச் சென்றார். சிந்தியா தனது வீட்டுக்கு சென்று பெற்றோர்களுடன் இணைந்துகொண்டார்.

அதற்கு பிறகு கிட்டு விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் வன்னிக் காட்டு்குள் வாழ்ந்தார். வன்னியில் வாழ்ந்த அந்த நாட்களே தனது வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான காலப்பகுதி என்று கிட்டு எனக்கு பின்னர்ஒரு கட்டத்தில் சொன்னார். வைகோ என்று  அழைக்கப்படுகின்ற  தமிழ்நாட்டு அரசியல் தலைவர் கோபாலசுவாமி இலங்கையின் வடபகுதிக்கு இரகசியமாக படகில் வந்தபோது அவரைச்  சந்தித்தவர்களில் கிட்டுவும் ஒருவர்.

அதிர்ச்சிதரும் ஒரு திருப்பமாக விடுதலை புலிகளுக்கும் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தலைமையிலான இலங்கை  அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் தொடங்கின. அன்ரன் பாலசிங்கமும் அடேல் பாலசிங்கமும் பேச்சுவார்த்தைகளுக்காக கொழும்புக்கு வந்தனர். பேச்சுவார்த்தைகள் 1989 செப்டெம்பரில் போர்நிறுத்தம் ஒன்றுக்கு வழிவகுத்தது. விடுதலை புலிகளும் இலங்கை அரசாங்கமும் பகைமையைக் கைவிட்ட நிலையில், இலங்கையில் இருந்து இந்திய அமைதிகாக்கும் படையை விலக்கிக் கொள்ளவேண்டும் என்று  புதடில்லி கடுமையான நெருக்குதலுக்கு உள்ளானது.

திருமணமும் ஐக்கிய இராச்சியமும்

நிகழ்வுப்போக்குகளின் இந்த அற்புதமான திருப்பம் கிட்டுவின் வாழ்விலும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. அவர் தயக்கத்துடன் வன்னியில் இருந்து வெளியேறி ஐக்கிய இராச்சியத்துக்கு சென்றார். அதற்கு முன்னர் கிட்டுவும் சிந்தியாவும் கொழும்பில் திருமணம் செய்து கொண்டனர். அடேல் பாலசிங்கம் தனது " விடுதலைக்கான வேட்கை " (The Will to Freedom ) என்ற நூலில் அதை விரிவாக எழுதியிருக்கிறார்.  அதில் இருந்து பொருத்தமான பகுதிகள் வருமாறு ;

" பிரபாகரனைச் சந்தித்து கலந்தாலோசனை நடத்துவதற்கு அக்டோபர் முற்பகுதியில் நாங்கள் முல்லைத்தீவுக்கு இரண்டாவது தடவையாக நாம் சென்றோம். பிரபாகரனைச் சந்தத்தபோது அவர் துண்டாக்கப்பட்ட காலுக்கு சிகிச்சை பெறுவதற்காக கிட்டுவை லண்டனுக்கு அனுப்புவதற்கான தனது விருப்பத்தை  பாலாவிடம்  அவர் தெரிவித்தார்.

" தன்னை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான தீர்மானம் குறித்து கேள்விப்பட்டதும்  கிட்டு உண்மையில்  இரண்டு மனத்தில் இருந்தார். செயற்கைக் கால் ஒன்றைப் பொருத்துவதற்கு அவர் விரும்பினார் என்பதை யறுப்பதற்கில்லை. அதைப் பொருத்தினால் அவரின் நடமாட்டத்துக்கு வசதியாக இருக்கும். ஆனால், கிட்டு தனது போராளிகளுடனும் தாயகத்துடனும் உணர்வுபூர்வமான பிணைப்பைக் கொண்டவர்.அவர்களை விட்டு பிரிந்துசெல்லும் சாத்தியம் உண்மையில் அவருக்கு பெரும் வேதனை தருவதாகும்.

" போராளிகளுக்கு போதனைசெய்து அவர்களை உற்சாகப்படுத்தி புதிய திட்டங்களில் ஈடுபடுத்தக்கூடிய சூழ்நிலையில் கிட்டு செழித்தவர். வெளிநாட்டுக்கு புறப்படுவதற்கான நாட்கள் நெருங்க நெருஙக அவர் அமைதியானார். அவரின் போராளிகளில் பலரும் கூட அமைதியானார்கள். அளம்பில் காட்டுக்குள் இருந்து கிட்டுவை வெளியே கூட்டிச் செல்லவிருந்த தினம் பிரபாகரனின் தோளில் சாய்ந்து அழுத காட்சி நான் கண்ட மிகவும் கவலைக்குரிய ஒரு காட்சி என்று நான் நினைக்கிறேன்.

" கிட்டுவின் போராளிகள் அவரைக் கதிரையில் வைத்து தங்கள் தோள்களில் சுமந்து காத்துநின்ற ஹெலிகொப்டரை நோக்கிக் கொண்டு சென்றார்கள். காட்டுக்கு ஊடாக சென்று கொண்டிருந்தபோது கிட்டு தனக்கே உரித்தான துணிச்சலை வெளிப்படுத்தி போராளிகளுடன் பகிடிவிட்டு சிரித்துப் பேசி அவர்கள் மீதான பாசத்தை வெளிப்படுத்தினார்.

" கொழும்பு வந்துசேர்ந்த உடனடியாக கிட்டுவை நாங்கள் பிரிட்டிஷ் தூதரகத்துக்கு கூட்டிச் சென்றோம்.பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகருடன் கதைத்த பிறகு கிட்டுவின் ஐக்கிய இராச்சியத்துக்கான விசாவுக்கு அங்கீகரிக்கப்பட்டது. ஆனால், லண்டனுக்கு புறப்படுவதற்கு முன்னர் அவர் மிகவும் முக்கியமான கடமையொனறைக் கவனிக்க வேண்டியிருந்தது.

" இந்திய அமைதி காக்கும் படையில் காவலில் இருந்து விடுவிக்கப்ட்டு முல்லைத்தீவு காடுகளுக்குள் கிட்டு சென்றபோது மருத்துவ மாணவியான தனது காதலி சிந்தியாவைப் பிரிந்து விட்டார்.  இப்போது காதலியுடன் மீண்டும் இணைவதற்கு அவர் ஆர்வமாக இருந்தார். அவரது வேண்டுகோளின் பேரில் சிந்தியா அவரைச் சந்திக்க யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வந்தார்.

" அவர்கள் திருமணம் செய்வதற்கு தீர்மானித்தனர். திருமண வைபவத்தில் கலந்துகொள்வதற்காக கிடடுவின் தாயார் வல்வெட்டித்துறையில் இருந்து கொழும்புக்கு வந்தார். சிந்தியாவின் பெற்றோர் ஏற்கெனவே கொழும்பில் இருந்தனர். பேச்சுவார்த்தைக்காக வந்திருந்த விடுதலை புலிகள் குழு தங்கியிருந்த ஹோட்டல் அறைகளில் ஒன்றில் கிட்டு -- சிந்தியா திருமணப்பதிவு இடம்பெற்றது. சில நாட்களுக்கு பிறகு கிட்டு லண்டனுக்கு சென்றார். பயண ஏற்பாடுகள் செய்யப்பட்ட பிறகு சிந்தியாவும் லண்டன் சென்று கிட்டுவுடன் இணைந்துகொண்டார்."

நிகழ்வுகளை பின்னோக்கிப் பார்க்கும்போது இனிமேல் இலங்கைக்கு திரும்பப்போவதில்லை என்ற ஒரு முன்னுணர்வு கிட்டுவுக்கு இருந்தது என்பதை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. தனது சுபாவத்துக்கு புறம்பான முறையில் கிட்டு பிரபாகரனின் தோளில் சாய்ந்து அழுததற்கு அதுவே காரணமாக இருந்திருக்கலாம்.

லண்டன் வந்துசேர்ந்த பிறகு கிட்டு தேவையான மருத்துவ சிகிச்சையைப் பெற்று செயற்கைக் காலை பொருத்திக் கொண்டார். லண்டனில் அவருடன் இணைந்த சிந்தியா சில மாதங்களுக்கு பிறகு தனது மருத்துவப் படிப்பை தொடருவதற்கு இலங்கை திரும்பினார்.

விடுதலை புலிகளின் சர்வதேச செயலகம்

ஐக்கிய இராச்சியத்தில் கிட்டு மனவுறுதியுடனும் ஆர்வத்துடனும  விடுதலை புலிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளில் மூழ்கினார். உலகின் பல்வேறு நகரங்களில் இருந்த விடுதலை புலிகள் ஆதரவு அமைப்புக்கள்/ கிளைகளுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டு கிட்டு அவற்றை எல்லாம் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தார்.  விடுதலை புலிகளின் சர்வதேச செயலகம் லண்டனில் அமைக்கப்பட்டது. அந்த நேரத்தில் விடுதலை புலிகள் சர்வதேச ரீதியில் தடைசெய்யப்படவில்லை.

அதேவேளை, இந்திய இராணுவம் 1990 மார்ச்  30 ஆம் திகதி இலங்கையை விட்டு வெளியேறியது. 1990 ஜூனில்  இலங்கை ஆயுதப் படைகளுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் போர் மூண்டது. பிரேமதாச தலைமையிலான அரசாங்கத்துக்கும் புதுடில்லிக்கும் இடையில்  முரண்பாடுகள் கிளம்பிய நிலையில், சாத்தியமானால் இந்தியாவுடன் நல்லிணக்கத்துக்கு காலம் கனிந்துவிட்டது என்று கிட்டு உணர்ந்தார். தமிழ்நாட்டில்  திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதி கருணாநிதியின் கீழ் விடுதலை புலிகளுக்கு சார்பான அரசாங்கம் ஆட்சியில் இருந்த அன்றைய சூழ்நிலையை  இது விடயத்தில்  ஒரு நல்ல அம்சமாக கிட்டு கருதினார்.

ராஜீவ் காந்தி 

கிட்டு தனது எண்ணத்தை பிரபாகரனுக்கு தெரியப்படுத்தியபோது அந்த திசையில் நடவடிக்கைகளை முன்னடுக்குமாறு அவரும் பச்சைக்கொடி காட்டினார். இந்தியாவில் நடைபெறவிருந்த பொதுத்தேர்தலில் ராஜீவ் காந்தி வெற்றிபெறுவார் என்று பரவலாக நம்பப்பட்டது. அதனால் ராஜீவ் காந்தியுடன் உறவுகளைச் சீர்செய்வதற்கு  விடுதலை புலிகளின் சார்பில் கிட்டு முயற்சித்தார்.

முதலில் அவர் மெட்ராஸில் தங்கியிருந்த கவிஞர் காசி ஆனந்தனை ராஜீவ் காந்தியைச் சந்திக்க அனுப்பினார். அதற்கு பிறகு லண்டனில் இருந்து இரண்டாவது தூதுவர் ஒருவர் ராஜீவ் காந்தியைச் சந்திக்க அனுப்பப்பட்டார். நன்கு தெரிந்த நிதியுதியாளர் அர்ஜுனா சிற்றம்பலமே அந்த தூதுவர். இந்த விஜயங்கள் வெற்றிகரமானவையாக அமையவே கிட்டுவும் ராஜிவ் காந்தியின் கீழான எதிர்கால காங்கிரஸ் அரசாங்கம் ஒன்று விடுதலை புலிகளுடன் ஒத்துப்போகும் அணுகுமுறையொன்றை  கடைப்பிடிக்கும் என்று எதிர்பார்த்தார்.

ஆனால், 1991 மே 21 ஆம் திகதி தமிழ்நாட்டில் விடுதலை புலிகளின் பெண்  தற்கொலைக் குண்டுதாரியின்  தாக்குதலில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதை அடுத்து கிட்டுவின் எதிர்பார்ப்புகள் எல்லாம் சிதறிப்போயின.  ராஜீவ் காந்தியுடன் நல்லிணக்கத்துக்கான முயற்சிகளை வெளிப்படையாக உற்சாகப்படுத்திய அதேேளை விடுதலை புலிகளின் தலைவரும் புலனாய்வுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மானும் மறைமுகமாக அவரைக் கொலை செய்வதற்கான கொடூரமான சதத்திட்டத்தை தீட்டிக் கொண்டிருந்தார்கள் போன்று தோன்றியது.

ராஜீவ் காந்தி கொலை  கிட்டுவுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு அதிர்ச்சியாக அமைந்தது. ஆனால் இந்திய அதிகாரிகள் கிட்டுவும் கொலைச்சதியில் சம்பந்தப்பட்டிருந்ததாக சந்தேகித்தார்கள். விடுதலை புலிகளினால் தனக்கு எந்த ஆபத்தும் வராது என்று ராஜீவ் காந்தி நினைக்கக்கூடியதான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக இரு தூதுவர்களை கிட்டு புதுடில்லிக்கு அனுப்பியதாக இந்திய மத்திய புலனாய்வுப் பணியகம் (சி.பி.ஐ.) நினைத்தது.

சுவிற்சர்லாந்து 

 கிட்டுவை விசாரிக்க வேண்டும் அல்லது அவரை விசாரிக்க இந்திய அதிகாரிகளை அனுமதிக்கவேண்டும் என்று பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு இந்தியா  கடுமையான நெருக்குதலைக் கொடுத்தது. இதனால் பிரிட்டிஷ் அரசாங்கம் கிட்டுவுக்கு எதிராக திரும்பும் நிலை ஏற்பட்டது. பிரிட்டனை விட்டு வெளியேற வேண்டும் அல்லது விளைவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிவரும் என்று அவருக்கு காலஅவகாசம் கொடுக்கப்ட்டது. தான் கைதுசெய்யப்படக்கூடும் என்று எதிர்பார்த்த கிட்டு இங்கிலாந்து கால்வாயைக் கடந்து பிரான்ஸுக்குச் சென்றார்  . ஒரு குறுகிய காலத்துக்கு பிறகு சுவிட்சர்லாந்துக்கு சென்றார். அங்கு அவர் அரசியல் தஞ்சம் கோரியதாக கூறப்பட்டது.

சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்த வேளையில் சமாதான முயற்சியொன்றை ஆரம்பிக்க கிட்டு முயன்றார். இலங்கையின் முன்னாள்  வெளியுறவு அமைச்சர் ஏ.சீ.எஸ். ஹமீதுவை ஜெனீவாவில் கிட்டு இரகசியமாக தனியாக ஒரு தடவை  சந்தித்ததாக  'சுவிஸ்'  முரளி என்று அறியப்பட்ட சுவிட்சர்லாந்தில் விடுதலை புலிகளின் ஒருங்கிணைப்பாளர் நடராஜா முரளிதரன் கூறினார். பிரேமதாச அரசாங்கத்தில் ஹமீது அப்போது நீதியமைச்சராக இருந்தார். அவருடனான பேச்சுவார்த்தையின் விளைவாக எந்தப் பயனும் ஏற்படவில்லை.

மெக்சிக்கோ

அதேவேளை, கிட்டு தனது சமாதான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்தார். கலிபோர்ணியாவில் வாழும் இலங்கை வம்சாவளி கல்விமான கலாநிதி கே. செல்வகுமார் ஊடாக அவர் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துடன் தொடர்புகொண்டார். மேற்கொண்டு பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக அமெரிக்காவுக்கு நெருக்கமான நாடொன்றுக்கு கிட்டு வரவேண்டும் என்று இராஜாங்க திணைக்களத்தில் இலங்கை விவகாரங்களைக் கையாளும் பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி கலாநிதி புர்னெல் டெலி கூறியதாக கலாநிதி செல்வகுமார்  தெரிவித்தார். கனடாவுக்குள் பிரவேசிப்பதற்குள் பிரவேசிப்பதற்கு கிட்டு மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. அதனால் கிடடு சுவிட்சர்லாந்தில் இருந்து மெக்சிக்கோ சென்றார்.

மெக்சிக்கோவில் இருந்துகொண்டு புர்னெல் டெலியுடன் கிட்டு தொடர்பு கொண்டார். கிட்டு அமெரிக்காவுக்குள் பிரவேசித்து சமாதான முயற்சாக்கான அலுவலகம் ஒன்றைத் திறப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற யோசனைக்கு இணக்கமானவராக அந்த அமெரிக்க அதிகாரி இருந்தார் என்று செல்வகுமார் கூறினார். ஆனால்  குறித்துரைக்கப்பட்ட வழிகாட்டல்களின் பிரகாரம் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அதிகாரமளிக்கும் கடிதம் ஒன்றை கிட்டு சமர்ப்பிக்கவேண்டும  என்று கேட்கப்பட்டது.அதன் பிரகாரம் பிரப்கரனுக்கு அறிவித்துவிட்டு கிட்டு கடிதத்துக்காக காத்திருந்தார். அந்தக் கடிதம் ஒருபோதும் வந்துசேரவில்லை.

நீண்ட நாட்களாக காத்திருந்து விரக்தியடைந்த கிட்டு இலங்கைக்கு வருமாறு கேட்கப்பட்டார். விடுதலை புலிகள் இயக்கத்திற்குள் பிரச்சினை ஏற்பட்டிருந்தது. பிரபாகரனுக்கும் பிரதி தலைவர் மாத்தையாவுக்கும் இடையிலான உறவுகள் கசப்படைந்திருந்தன. அரசியல் பிரிவு தலைவர் யோகியுடனும் பிரபாகரன் மகிழ்ச்சியாக இல்லை. தனது நம்பிக்கைக்குரியவரான கிட்டுைஅரசியல் பிரிவுக்கு பொறுப்பான பிரதி தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்று பிரபாகரன் விரும்பினார் என்ற ஊகிக்கப்பட்டது. இலங்கை திரும்புவதற்கான சாத்தியம் குறித்து கிட்டுவும் மகிழ்ச்சியடைந்தார்.

தாய்லாந்து 

மெக்சிக்கோவில் இருந்து உக்ரெயின் சென்ற கிட்டு அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். பிறகு சிங்கப்பூரில் இருந்து அவர் தாய்லாந்து சென்றார்.  தாய்லாந்தின் புக்கெட்டில் ஆயுதங்களையும்  வெடிபொருட்களையும் வேறு கருவிகளையும் ஏற்றிய விடுதலை புலிகளின் சரக்கு கப்பலில் கிட்டு ஏறினார்.ஹொண்டூராஸ் நாட்டில் பதிவு செய்யப்பட்ட அந்த கப்பலுக்கு ' அஹற் ' என்று பெயரிடப்பட்டிருந்தது. இந்திய அதிகாரிகள் அந்த கப்பலை சந்தேகத்தில் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள் என்பது விடுதலை புலிகளுக்கு தெரியாது. 

1993 ஜனவரி 13 ஆம் திகதி இலங்கையின் கரையோரத்தில் இருந்து தெற்கே 290 மைல்கள் தொவைிலும்  இந்தியாவின் கரையோரத்தில் இருந்து தென்கிழக்கே 440 மைல்கள் தொலைவிலும் வந்துகொண்டிருந்த கப்ஓலை  இந்திய கரையோரக் காவல் படை அணுகியது. இது நடந்தது நடந்தது சர்வதேச கடற்பரப்பிலாகும். அது இந்திய கடற்பரப்போ அல்லது இலங்கை கடற்பரப்போ அல்ல.

'ஒப்பரேசன் ஜபார்தாஸ்த்'

 'அஹற் ' விடுதலை புலிகளின் ஒரு ஆயுதக்கப்பல் என்பதும் அதில் இயக்கத்தின் மூத்த தளபதி கிட்டு வருகிறார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டபோது இந்தியா ' ஒப்பரேசன் ஜபார்தாஸ்த் ' நடவடிக்கையை தொடங்கியது. கரையோரக்காவல் படையின் இரு கப்பல்களும்  மூன்று கடற்படை கப்பலகளும் 'அஹற் ' கப்பலை இடைமறித்தன விவேக், கிர்பான், பெரோஸ் காந்தி எனபவையே கடற்படைக் கப்பல்களின் பெயர்கள். விடுதலை புலிகள் சரணடைய வேண்டும் என்று இந்திய கடற்படை கேட்டது. அதற்கு மறுத்த கிட்டு இந்திய படையினர் கப்பலில் ஏறுவதற்கு முயற்சித்தால் அதை குண்டுவைத்து தகர்க்கப்போவதாக அச்சுறுத்தினார். மூன்று நாட்களாக நடுக்கடலில் ஒரு இழுபறிநிலை நீடித்தது.

ஜனவரி 16 ஆம் திகதி இந்திய கடற்படை 'அஹற்' கப்பலில் ஏறுவதற்கு தயாரானது. விடுதலை புலிகளினால் பணம் கொடுத்து அமர்த்தப்பட்ட கிரமமான பணியாளர்கள் குழு ஒன்று கப்பலில் இருந்தது. " ஏழு விரல்கள்" என்று அறியப்பட்ட கப்பலின் காப்டன  ஜெயச்சந்திரனையும் ஏழு பணியாளர்களையும் கிட்டு உயிர்காப்பு படகில் அனுப்பிவைத்தார். படகு கவிழ்ந்து பணியாள்கள் கடலில் மூழ்கியபோது இந்திய கடற்படை அவர்களை காப்பாற்றியது.

கிட்டுவும் லெப்டினண்ட் கேணல் குட்டிசிறீ உட்பட எட்டு இயக்கப் போராளிகளும் கப்பலுக்கு தீவைத்தனர். அது விரைவாகவே தீப்பிடித்துக்கொண்டது. கிட்டுவும் தோழர்களும் குண்டுகளை வெடிக்க வைத்ததுடன் சயனைட் வில்லைகளையும் விழுங்கினர். இவ்வாறுதான் காவிய நாயகன் போன்ற கிட்டு் நடுக்கடலில் தனது வாழ்வை பயங்கரமான முறையில் முடித்துக் கொண்டார்.

1993 ஜனவரி 14 தைப்பொங்கல் தினத்தன்று விடுதலை புலிகளின் சகல முகாம்களிலும் பொங்கல் நடந்தது.  பல்வேறு முகாம்களில் பொங்கல் கொதிக்கும் நிலையை எட்டியபோது பானைகள் வெடித்தன. இரு நாட்களுக்கு பிறகு கிட்டுவின் மரணத்துடன் இந்த சம்பவங்களை தொடர்புபடுத்திய விடுதலை புலிகளின் பல முக்கியஸ்தர் அவற்றை முன்கூட்டிய அபசகுனமாக கருதினர்.

கிட்டு பூங்கா 

விடுதலை புலிகள் மூன்று நாள் துக்கத்தை பிரகடனம் செய்தனர். வல்வெட்டித்துறை தீருவில் மயானத்தில் நினைவுத்தூபி ஒன்றும் அமைக்கப்பட்டது. தங்களது பீரங்கிப் பிரிவுக்கு கிட்டுவின் பெயரையும் மோட்டார் பிரிவுக்கு குட்டிசிறியின் பெயரையும் விடுதலை புலிகள் சூட்டினர். நல்லூரில் உள்ள பூங்கா ஒன்றுக்கும் கிட்டுவின் பெயர் சூட்டப்பட்டது.

ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போன்று ஒரு பத்திரிகையாளன் என்ற வகையில் நான் நெருங்கிப் பழகிய விடுதலை புலிகள் இயக்கத்தின் உயர்மட்ட தலைவர்களில் கிட்டு ஒருவர். உண்மையில் அவரை நான்தான் முதற்தடவையாக  ஆங்கிலப் பிரசுரம் ஒன்றுக்காக (புரொண்ட்லைன்) பேட்டி கண்டேன். அவர் ஐக்கிய இராச்சியம், சுவிட்சர்லாந்து மற்றும் மெக்சிக்கோவில் இருந்த நாட்களில் அவருடன் பல தடவைகள் தொலைபேசி மூலமாகவும் பேசியிருக்கிறேன்.

அவர் மெக்சிக்கோவில் தனிமையில் இருந்ததால் என்னுடன் மணிகணக்காக பேசுவார். அவருடனான ஊடாட்டங்கள் குறித்து இனிமையான நினைவுகள் எனக்கு இருக்கின்றன. "கேணல்"  கிட்டு என்ற சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமாரின் வாழ்வும் மரணமும் உண்மையிலேயே வடக்கு போராளி ஒருவரின் வீரகாவியம்.

https://www.virakesari.lk/article/205182

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.