Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர் அர்ச்சுனா தொடர்பில் வெளிவராத மேலும் பல உண்மைகள் - ஜே.வி.பி நியூஸ்

அர்ச்சுனாவின் அரசியலும் அதைவிரும்பும் இரசிகர்களும்.
( யாழ் தினக்குரல்- 2/2,ஞாயிறு)
     
 தமிழ்த் திரைப்படமொன்றில் தன்னை ஊரில் ரவுடியாகப் ‘பில்ட்டப்’ பண்ணும் நோக்கில் நகைச்சுவை நடிகர் வடிவேலு “நானும் ரவுடிதான். என்னையும் கைது செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு போங்கள்” என்று கெஞ்சுவதை சிலர் பார்த்திருப்பீர்கள். அந்தக்காட்சிதான் அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் அரச்சுனா இராமநாதனை சாவகச்சேரியில் வைத்து அனுராதபுர காவல்துறையினர் கைது செய்தபோது அவர் நடந்தகொண்டவிதம் நினைவுபடுத்தியது.

காவல்துறையினர் அவரைக் கைவிலங்கின்றி அழைத்துச்செல்ல முற்பட்டபோது அர்ச்சுனா தனக்கு விலங்கிட்டுக் கூட்டிச் செல்லுங்கள் என்று தானே வலிந்து கேட்டு விலங்கு கையில் மாட்டப்பட்டதைப் பார்த்தோம். அர்ச்சுனாவின் அரசியலை விளங்கிக் கொள்ள இதுவொன்றே போதும். வடிவேலுவின் நடிப்பை இரசிகர்கள் எவ்வாறு கைதட்டி ரசித்தார்களோ அதேபோல அர்ச்சுனாவின் இது போன்ற நடிப்புகளை இரசிப்பதற்கென்றும் நம்மத்தியில் ஒரு ரசிகர் வட்டம் இருக்கவே செய்கிறது. அவர்களில் பெரும்பாலானவர்களே அவரது ஆதரவாளர்களாகவும் இருந்து வருகின்றனர். ஆனால் அரச்சுனாவின் இதுபோன்ற நடிப்புகளுக்கான அவரது உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ளும் மனநிலையில் அந்த வட்டத்தினர் இல்லாமலிருப்பதே அர்ச்சுனாவுக்கான பலம். 
    
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்யட்சகராக அர்ச்சுனா பதவியேற்றது தொடக்கம் நேற்றுவரை அவரது நடத்தைகளை அவதானித்து வந்தால் அவரது குணச்சித்திரத்தைப் (மனப்பாங்கு+ நடத்தை) புரிந்து கொள்வது கடினமானதொன்றல்ல. சிலர் அவரை நகைச்சுவைத் துண்டாக( comedy piece)க் கடந்து செல்கின்றர். சிலர் அவரை மனநலம் குன்றியவராகப் பார்க்க முனைகின்றனர்.
 

அதேவேளை அரச்சுனாவின் இரசிகர்கள் அவரைக் கதாநாயகனாவே பார்க்கின்றனர். இவற்றுள் அர்ச்சுனா யார்? நகைச்சுவையாளரா? மனநலம் குன்றியவரா? அல்லது கதாநாயகனா? இவை எல்லாமாகவுமன்றி இதற்கப்பால் வில்லனாகவுங்கூட அவரைப் பார்க்க முடியும். கிராமத்தவர்களின் ‘காரிய விசரன்’  என்ற பேச்சுமொழி இவ்வாறான குணச்சித்திரம் கொண்டவர்களைத்தான் குறிப்பதாக இருக்கிறது போலும்.
    
தொடக்கத்தில் சாவகச்சேரி வைத்தியசாலையில் காணப்பட்டதாக அவரால் சில விடயங்கள் வெளிப்படுத்தப்பட்போது அவரை ஒரு ‘குறை அறைவோன்’(Whistleblower) ஆகச் சிலர் பார்த்தார்கள். ஆனால் அவரது அடுத்தடுத்த செயற்பாடுகள் குறைகளைக் களைவதற்கான உண்மையான வெளிப்படுத்தல்களாக அல்லாமல் தன்னையொரு மீட்பராகக்  காட்டுவதற்காகப் பொய்கள், புனைவுகள், ஊதிப்பெருப்பித்தல் போன்ற நடவடிக்கைகளாக மாறியதால் அவர் குறை அறைவோனல்லன் என்றும் குறிக்கோளோடு நகர்வோன் என்றும் மக்கள் இனங்காணத் தொடங்கியதால் அவரைச் சுற்றியேற்படுத்தப்பட்ட ஒளிவிம்பம் மெல்ல மெல்ல அகலத்தொடக்கியது.
நிறுவனமொன்றின் தவறுகளைத் திருத்த விரும்பும் ஒருவன் முதலில் அதனை உரியவழிகளில் தீர்க்கவே முயற்சிப்பான். அவை வெற்றிபெறாதவிடத்து மட்டுமே அதற்காகப் பொதுமக்களின் ஆதரவைத் திரட்டப் பொதுவெளிக்கு அவற்றைக் கொண்டு வருவான். 

இவையாவற்றுக்குமுன் அக்குறைகள் தொடர்பான உண்மைகளைக் கண்டறிவதுடன் அதற்கான ஆதாரங்களையும் இயன்றவரை சேகரிக்கத்திருப்பான். இவை எதுவும் இல்லாத அர்ச்சுனாவின் செயற்பாடுகள் அவர் உண்மையில் குறைகளைக் களைவதற்காகவன்றி வேறு தேவைகளுக்காக முயற்சிக்கிறார் என்பதை மக்கள் படிப்படியாக விளங்கிக் கொள்ளத் தலைப்பட்டனர். 
    
சாவகச்சேரி வைத்தியசாலையில் தொடங்கிய அவரது குற்றச்சாட்டுகள் மாவட்டம், மாகாணம், போதனா வைத்தியசாலை என  வைத்தியத்துறை முழுவதுமே சாக்கடை தான்மட்டும் சந்தனம் என்ற நிலைக்கு உயர்ந்தபோதே அவர்தொடர்பான விம்பமும் சரியத் தொடங்கிவிட்டது. அவரது குற்றச்சாட்டுகள் எவற்றுக்குமே ஆதாரங்களை முன்வைக்காமையினால் வழக்குகளுக்குமேல் வழக்குகளாக நாளாந்தம் ஒவ்வொரு நீதிமன்றிலும் முன்னிலையாகவேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.சாவகச்சேரியில் போற்றியும் தூக்கியும் கொண்டாடாடிய கூட்டத்தினர் படிப்படியாக உண்மையை உணரத் தொடங்கிவிட்டனர். அவருக்காகப் பிணை நின்றவர்களும் தாமாகவே அதிலிருந்து விலகிக் கொண்டனர். ஆனாலும் அதற்கிடையில் அவர் தனது மூலதனத்திற்கான பயனை அறுவடை செய்து கொண்டார். தொடர்ந்து அதனைத் தக்கவைப்பதற்கான செயற்பாடுகளிலேயே அவர் தற்போது ஈடுபட்டுவருகிறார். 
    

ஒருவர் தன்னை மற்றவர் கவனிக்க வேண்டும், தன்னைப்பற்றி பேசவேண்டும், புகழவேண்டும் என்று எண்ணுவது இயல்பானதே. அதற்காகப் பலர் நேர்மறையான நடத்தைகளை வெளிப்படுத்துவர். சிலர் எதிர்மறையான நடத்தைகளை வெளிப்படுத்துவர். ஒப்பீட்டு ரீதியில் எதிர்மறையான நடத்தைகள் அதிகவனத்தைப் பெறுவதுடன் அதன் பரவல் வேகமும் கூடுதலாக இருக்கும். அத்துடன் அவர்கள் அவ்வாறான நடத்தைகளை அடிக்கடி மேற்கொள்ளவும் விரும்புவர். இவர்கள் தமது நடத்தையின் நேரடி விளைவின்மீது கவனத்தைக் குவிப்பார்களேயன்றி அதன் தொடர்விளைவுகளின்மீது கவனம் செலுத்தமட்டார்கள். 

பிறர் நலனுக்காகச் செய்வதாகக் கூறும் இவர்கள் தமது நடத்தைகளால் பிறருக்கு ஏற்படுத்தப்படும் விளைவுகள் பற்றி ஒருபோதும் சிந்திப்பதில்லை. இவ்வாறான நடத்தைகளுக்கு சிறுவயதில் அவர்களுக்கு ஏற்பட்ட தாக்கங்கள், தாழ்வு மனப்பாங்கு போன்ற பல காரணங்கள் இருக்கலாம் என உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். மக்களைத் தன்பால் ஈர்க்க இந்த முறையையே அர்ச்சுனா  அதிகம் கையாள விரும்புகிறார். தான் வைத்தியத்துறையில் சாதனை செய்து பெயரெடுப்பதற்குப் பதிலாக மற்ற வைத்தியர்கள் பிழை என்று கூறி நக்கீரராக பெயரெடுக்க அர்ச்சுனா விரும்புகிறார்.அடிக்கடி செய்திகளில் தான் வரவேண்டும் எனக் கணக்குப் பண்ணுகிறார். ஒழுக்கத்தையும் அற, விழுமிய பண்புகளையும் அதிகம் மதிக்கும் சமூகமொன்றில் ஒருவரின் இவ்வாறான எதிர்மறை நடத்தைகள் அவர்மீதான வெறுப்பையே அதிகம் உருவாக்கும். ஆனால் அப்பண்புகள் குறைந்துவரும் ஒருசமூகத்தில் இதனை வரவேற்கும் போக்கு வளரும். இவ்வடிப்படையில் நோக்கும்போது அரச்சுனா எமது சமூகத்தின் ஒழுக்க விழுமியங்களின் வீழ்ச்சியின் குறியீடா?
   

சிலர் கூறுவதுபோன்று அர்ச்சுனா தெரியாமல் எதையும் செய்யவில்லை. அவர் அவ்வாறான பேர்வளியுமல்லர். தெரிந்தகொண்டே தேவைக்காகவே அனைத்தையும் செய்கிறார். அதனாற்றான் தான் செய்வதையெல்லாம் தானே ஊடகங்களில் நேரலையாக வெளிப்படுத்துகிறார். தனது செயல்களைக் கண்டு முகஞ்சுழிக்கும் பெருங் கூட்டத்தைவிட அதனை ரசித்து வரவேற்கும் சிறுகூட்டமே அவரது தற்போதைய இலக்கு. தரக்கரீதியாக சிந்திக்காத அக்கூட்டத்தைக் கெத்து காட்டுவதன்மூலம் அவர் கவரவிரும்புகிறார். பாராளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவரின் கதிரை என்பது, அதிகாரிகளின் அறைக்குள் அத்துமீறி நுழைந்து கலாட்ட செய்வது, கௌசல்யாவின் காதலனை இழிவுபடுத்துவது, கேவலமான வார்த்தைப் பிரயோகங்கள், அவற்றையெல்லாம் நேரலையில் சமூக ஊடகங்களில் வெளிவிடுவது போன்ற விடயங்கள் தவறானவை என்பது  எம்.பி.பி எஸ் படித்தவருக்கு தெரியாததல்ல. இதன்மூலம் தனது வாக்கிலும் கணக்கிலும் வரவு கூடுமென அவர் எண்ணுகிறார். அவர் இவ்வாறு எண்ணுவது சரியென இங்கும் அங்கும் சிலர் இருப்பதுதான் கவலை. 

இது தமிழ்ச் சினிமாவின் தாக்கமாகவும் இருக்கலாம். அதில்தான் ரஜனி,விஜய் போன்ற கதாநாயகர்கள் செய்யும் சட்டரீதியற்ற மோசமான செயல்கள் யாவும் நியாயமானவை என நிறுவப்படுகின்றன. மக்களைக் கனவுலகில் மிதக்கவைத்து அவர்கள் பெட்டியை நிரப்புவது போல்தான் இதுவும். அடிக்கடி தான் எம்.பி.பி.எஸ் என்று கூறி மற்றவரை  கல்வித் தரத்தின் மூலம் இழிவு படுத்துவதும்  தெரிந்துகொண்டே செய்யும் ஒருவகை உளவியல் ரீதியான தாக்குதல்தான். ஒருவனை மட்டந்தட்ட, அடக்க இவ்வாறான முறைகள் எமது சமூகத்தில் நீண்ட காலமாகவே கையாளப்பட்டு வருகின்றன. சாதி,படிப்பு அல்லது பட்டங்கள், ஆங்கில மொழியறிவு அதற்கப்பால் தாய்,தந்தை, உறவுகளின் தவறான நடத்தைகள் என்பவை சிலர் கையாளும் அங்குசங்கள். 
    
அர்ச்சுனா எமது சமூகத்திற்கு அதிலும் குறிப்பாக இளையோருக்கு தவறானதொரு முன்மாதிரி. அவரை ஊக்குவிப்பது என்பது நமக்கு நாமே சூனியம் வைப்பது போன்றது. பணத்துக்காக தவறாகப் புனையும் யு ரியூப்பினரும், உண்மைநிலை அறியாது உதவும் புலம்பெயர் உறவுகளும் ஆழமாகச் சிந்திக்கவேண்டிய நேரமிது. தவறுகள் திருத்தப்பட வேண்டும்.

( யாழ் தினக்குரல்- 2/2,ஞாயிறு)

Edited by தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.