Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்துக்களின் சமருக்கு 3ஆவது வருடமாக ஜனசக்தி நிறுவனம் பிரதான அனுசரணை

03 FEB, 2025 | 03:05 PM
image

(நெவில் அன்தனி)

யாழ். இந்து கல்லூரிக்கும் பம்பலப்பிட்டி (கொழும்பு) இந்து கல்லூரிக்கும் இடையிலான 14ஆவது வருடாந்த 'இந்துக்களின் சமர்' யாழ். இந்து கல்லூரி மைதானத்தில் இம் மாதம் 7ஆம், 8ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இளைஞரையும் விளையாட்டுத்துறையையும் ஊக்குவிக்கும் நன்னோக்குடன் இந்துக்களின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டிக்கு ஜனசக்தி குழுமம் (JXG) தொடர்ச்சியான மூன்றாவது வருடமாக பிரதான அனுசரணை வழங்குகிறது.

download__3_.jpg

இந்த வருட அத்தியாயம் கொழும்பில் நடைபெறுவதாக இருந்த போதிலும் பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வருடப் போட்டியை நடத்த யாழ். இந்து கல்லூரி முன்வந்தமை பாராட்டுக்குரியதாகும்.

பம்பலப்பிட்டி கல்லூரி அடுத்த வருடம் தனது பவள விழா கொண்டாட்டங்களை மிகவும் பிரமாண்டமான முறையில் ஆரம்பிக்கவுள்ளதால்  இந்துக்களின் சமரையும் அந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இப் போட்டி தொடர்பான ஊடக சந்திப்பும், அனுசரணை வழங்கும் நிகழ்வும் தமிழ் யூனியன் அண்ட் அத்லெட்டிக் க்ளப் (TU & AU) கேட்போர்கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.

இந்த வைபவத்தில் பேசிய ஜனசக்தி நிறுவனத்தின் ஸ்தாபகரும் அதிபருமான சந்த்ரா ஷாவ்டர், 'வடக்கிலுள்ள இந்து கல்லூரிக்கும் தெற்கிலுள்ள இந்து கல்லூரிக்கும் இடையிலான இந்தப் போட்டி மிகவும் சிறப்வுவாய்ந்ததாகும். இந்த மாபெரும் கிரிக்கெட் சமருக்கு அனுசரணை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் அடைகிறோம்' என்றார்.

இதேவேளை, இந்துக்களின் சமர்' ஒரு மறக்க முடியாத மாபெரும் கிரிக்கெட் போட்டியாகும் என ஜனசக்தி குழுமத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி கமிக்க டி சில்வா தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 'சமூகங்களையும் குழுக்களையும் ஒன்றிணைக்கும் ஒரு கருவி  விளையாட்டுத்துறை  யாகும். 400 கிலோ மீற்றர் வித்தியாச தொலைவில் இருக்கும் இந்த இரண்டு பாடசாலைகளும் விளையாட்டுத்துறை மூலம் சகோதரத்துவத்தை கட்டி எழுப்ப முடியும் என்பதையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை உருவாக்கமுடியும்   என்பதையும் வெளிப்படுத்திவருகின்றன' என்றார்.

இப் போட்டிக்கான அனுசரணை உதவுத் தொகைக்குரிய மாதிரி ஆவணத்தை ஜனசக்தி குழுமத்தின் ஸ்தாபகரும் அதிபருமான சந்த்ரா ஷாவ்டரிமிருந்து யாழ். இந்து கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கொழும்பு கிளைத் தலைவர் ஜீ. வசந்தன் பெற்றுக்கொண்டார்.

https://www.virakesari.lk/article/205689

  • கருத்துக்கள உறவுகள்

இந்துக்களின் சமர் எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பம்!

இந்துக்களின் சமர் எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பம்!

இந்துக்களின் சமர் என வர்ணிக்கப்படுகின்ற பம்பலப்பிட்டி இந்து கல்லூரி மற்றும் யாழ்.இந்து கல்லூரிக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெறுவதாக இருந்த போதிலும் பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் வேண்டுகோளுக்கு இணங்க போட்டியை  யாழில் நடத்த யாழ். இந்து கல்லூரி முன்வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பம்பலப்பிட்டி கல்லூரி அடுத்த வருடம் தனது பவள விழா கொண்டாட்டங்களை மிகவும் பிரமாண்டமான முறையில் ஆரம்பிக்கவுள்ளதால் இந்துக்களின் சமரையும் அந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

போட்டி தொடர்பான ஊடக சந்திப்பும், அண்மையில் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. யாழ். இந்து கல்லூரிக்கும் பம்பலப்பிட்டி இந்து கல்லூரிக்கும் இடையிலான 14ஆவது வருடாந்த ‘இந்துக்களின் சமர்’ யாழ். இந்து கல்லூரி மைதானத்தில் எதிர்வரும் 7ஆம், 8ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1419557

  • கருத்துக்கள உறவுகள்

நான் படித்த காலத்தில் 'இந்துக்களின் சமர்' என்பது யாழ். இந்து கல்லூரி எதிர் கொக்குவில் இந்து கல்லூரி தான். இப்ப (14 வருடமாம்) யாழ். இந்து, கொக்குவில் இந்துவை கலைத்து விட்டு கொழும்பு இந்துடன் சேர்ந்துள்ளது. எல்லாம் ஒரு விளம்பர மோகந்தான் 😁

Edited by பிரபா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்துக்களின் சமர் - நாணய சுழற்சியில் வென்ற யாழ். இந்து முதலில் துடுப்பெடுத்தாடுகிறது

07 FEB, 2025 | 11:38 AM
image
 

யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கும் கொழும்பு பம்பலப்பிட்டி இந்து கல்லூரிக்கும் இடையிலான 14ஆவது “இந்துக்களின் சமர்” கிரிக்கெட் போட்டி யாழ். இந்து கல்லூரி மைதானத்தில் இன்று (7) காலை ஆரம்பமாகியுள்ள.

இந்த இரண்டு நாள் கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் இந்து கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

DSC_8321.jpg

DSC_8322.jpg

DSC_8323.jpg

DSC_8326.jpg

DSC_8339.jpg

https://www.virakesari.lk/article/206047

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

14ஆவது இந்துக்களின் சமர்: பலமான நிலையில் யாழ். இந்து

Published By: VISHNU   07 FEB, 2025 | 08:17 PM

image

(நெவில் அன்தனி)

யாழ். இந்து கல்லூரி மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) ஆரம்பமான 14ஆவது இந்துக்களின் சமர் வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ். இந்து கல்லூரி அணி பலமான நிலையில் இருக்கிறது.

போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் யாழ். இந்து கல்லூரி அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்களை இழந்து 71 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

கே. பரஷித் 39 ஓட்டங்களையும் வி. விதுசன் ஆட்டம் இழக்காமல் 20 ஓட்டங்களையும் எஸ். சுபர்ணன் ஆட்டம் இழக்காமல் 11 ஓட்டங்களையும் பெற்றனர்.

2.jpg

3.jpg

இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்கள் மீதம் இருக்க, கொழும்பு இந்து கல்லூரி அணியை விட 152 ஓட்டங்களால் யாழ். இந்து கல்லூரி அணி முன்னிலையில் இருக்கிறது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த யாழ். இந்து  அணி, முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது.

4.jpg

துடுப்பாட்டத்தில் அறுவர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்று தங்களது அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கினர்.

அவர்களில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய மத்திய வரிசை வீரர் வி. விதுஷன் 9 பவுண்டறிகளுடன் 49 ஓட்டங்களைப் பெற்றார்.

 5.jpg

அவரைவிட அணித் தலைவர் கே. பரஷித் (20), எஸ்.  சுபர்ணன்   (16), ரி. பிரீத்திகன் (14), ரீ. பிரீமிகன் (12), ஜே. பவானன் (12), ஐ. ஸ்ரீவஸ்தன் (11) ஆகியோர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

கொழும்பு இந்து  பந்துவீச்சில் விஸ்வநாதன் யுவராஜ் 27 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் பத்மநாதன் ஸ்ரீ நிதுசன் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ராமநாதன் தேஸ்கர் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு இந்து (பம்பலப்பிட்டி) சகல விக்கெட்களையும் இழந்து 91 ஓட்டங்களை மட்டும் பெற்றது.

துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்திய தவகுமார் சந்தோஷ் 8 பவுண்டறிகளுடன் 42 ஓட்டங்களைப் பெற்றார். அவரை விட சுரேஷ் குமார் மிதுஷிகன் (13) மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார்.

யாழ். இந்து பந்துவீச்சில் கே. நித்தீஸ் 12 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் வி. விதுசன் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் எஸ். சுபரணன் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

இந்துக்களின் சமருக்கு ஜனசக்தி குழுமம் 3ஆவது வருடமாக அனுசரணை வழங்குகிறது.

https://www.virakesari.lk/article/206111

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

14ஆவது இந்துக்களின் சமர்: கொழும்பு இந்துவை 64 ஓட்டங்களால் வெற்றிகொண்டது யாழ். இந்து; தொடரிலும் 4 - 3 என முன்னிலை

Published By: VISHNU   08 FEB, 2025 | 09:05 PM

image

(நெவில் அன்தனி)

யாழ். இந்து கல்லூரிக்கும் கொழும்பு இந்து (பம்பலப்பிட்டி) கல்லூரிக்கும் இடையில் யாழ். இந்து கல்லூரி மைதானத்தில் இன்று சனிக்கிழமை (08) முடிவுக்கு வந்த 14ஆவது இந்துக்களின் சமரில் யாழ். இந்து கல்லூரி 64  ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

DSC_8407.jpg

கொழும்பு இந்து கல்லூரியின் கடைசி 3 விக்கெட்ளை ஹெட் - ட்ரிக் முறையில் வீழ்த்தி 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்த யாழ். இந்து வீரர் சுதர்சன் சுபர்னன் தனது அணி வெற்றிபெறுவதை உறுதிசெய்தார்.

DSC_8389.jpg

இந்த வெற்றியுடன் இந்துக்களின் சமரில் யாழ். இந்து கல்லூரி 4 - 3 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலை அடைந்துள்ளது.

DSC_8376.jpg

யாழ். இந்து கல்லூரியினால் நிர்ணயிக்கப்பட்ட 252 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு இந்து கல்லூரி சகல விக்கெட்களையும் இழந்து 187 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

DSC_8368.jpg

கொழும்பு இந்து கல்லூரி ஒரு கட்டத்தில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 130 ஓட்டங்களைப் பெற்று சிறப்பான நிலையில் இருந்ததால் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.

DSC_8374.jpg

ஆனால், அதன் கடைசி 7 விக்கெட்கள் 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்ததால் யாழ். இந்து மகத்தான வெற்றியை ஈட்டியது.

DSC_8371.jpg

ஆரம்ப வீரர் சுரேஷ் குமார் மிதுஷிகன் மிகவும் பொறுமையாகத் துடுப்பெடுத்தாடி 144 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டறிகளுடன் 77 ஓட்டங்களைப் பெற்ற போதிலும் அது பலனற்றுப் போனது.

DSC_8354.jpg

திவேந்திரன் யதுஷனுடன் ஆரம்ப விக்கெட்டில் 49 ஓட்டங்களையும் தவக்குமார் சந்தோஷுடன் இரண்டாவது விக்கெட்டில் 48 ஓட்டங்களையும்  மிதுஷிகன் பகிர்ந்து அணியை ஓரளவு நல்ல நிலையில் இட்டார்.

DSC_8365.jpg

மிதுஷிகனை விட மத்திய வரிசை வீரர் சுரேஷ் சர்விஷ் 39 ஓட்டங்களையும் ஆரம்ப வீரர் திவேந்திரன் யதுஷன் 25 ஓட்டங்களையும் தவக்குமார் சந்தோஷ், பத்மநாதன் ஸ்ரீ நிதுசான் ஆகிய இருவரும் தலா 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

DSC_8347.jpg

கொழும்பு இந்துவின் கடைசி 3 துடுப்பாட்ட வீரர்களான சுரேஷ் சர்விஷ், விஸ்வநாதன் யுவராஜ், அணித் தலைவர் ராமநாதன் தேஷ்கர் ஆகிய மூவரை ஹெட் - ட்ரிக் முறையில் சுபர்னன் ஆட்டம் இழக்கச் செய்து 58 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றினார். அவரை விட கனகராஜ் நிதீஸ் 75 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

DSC_8349.jpg

முன்னதாக போட்டியின் இரண்டாம் நாளான இன்று சனிக்கிழமை காலை தனது முதல் இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 71 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த யாழ். இந்து கல்லூரி 9 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்று துடுப்பாட்டத்தை டிக்ளயார் செய்து நிறுத்திக்கொண்டது.

அணித் தலைவர் கிருஷ்ணராஜ் பரஷித் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 8 பவுண்டறிகளுடன் 39 ஓட்டங்களைப் பெற்றதுடன் 2ஆவது விக்கெட்டில் சுதர்சன் சுபர்னனுடன் 40 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

தொடர்ந்து  சுபர்னன் (16), அன்டன் விமலதாஸ் விதுசன் (25) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் மேலும் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 93 ஓட்டங்களாக உயர்த்தினர்.

ஆனால், 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 6 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டதால் யாழ். இந்து கல்லூரி தடுமாற்றம் அடைந்தது. (110 - 8 விக்.)

எனினும், இந்திரலிங்கம் ஸ்ரீவஸ்தன் (26), 10ஆம் இலக்க வீரர் சுதர்சன் அபிவர்ணன் (27 ஆ.இ.) ஆகிய இருவரும் 9ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 40 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர்.

கொழும்பு இந்து பந்துவீச்சில் ராமநாதன் தேஷ்கர் 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் விஸ்வநாதன் யுவராஜ் 47 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

வெள்ளிக்கிழமை (07) ஆரம்பமான இந்த இரண்டு நாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். இந்து கல்லூரி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது.

கொழும்பு இந்து கல்லூரி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விககெட்களையும் இழந்து 91 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

 

எண்ணிக்கை சுருக்கம்

யாழ். இந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 172 (ஏ. விதுஷன் 49, கே. பரஷித் 20, வி. யுவராஜ் 27 - 4 விக்.)

கொழும்பு இந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 91 (ரீ. சந்தோஷ் 42, கே. நித்தீஸ் 12 - 4 விக்.),

யாழ். இந்து 2ஆவது இன்: 170 - 9 விக். டிக்ளயார்ட் (கே. பரஷித் 39, எஸ். அபிவர்ணன் 27, ஆர். தேஷ்கர் 35 - 4 விக்., வி. யுவராஜ் 47 - 4 விக்.)

கொழும்பு இந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 187 (சுரேஷ்குமார் மிதுசிகன் 72, எஸ். சர்விஷ் 39, சுதர்சன் சுபர்னன் 58 - 6 விக்.

விசேட விருதுகள்

ஆட்டநாயகன்: சுதர்சன் சுபர்னன் (யாழ் இந்து)

சிறந்த துடுப்பாட்ட வீரர்: சுரேஷ்குமார் மிதுசிகன் (கொழும்பு இந்து)

சிறந்த பந்துவீச்சாளர்: விஸ்வநாதன் யுவராஜ் (யாழ். இந்து)

சிறந்த களத்தடுப்பாளர்: தினேஷ்ராமன் பிரீத்திகன் (யாழ். இந்து)

https://www.virakesari.lk/article/206181

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.