Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேதகு வே.பிரபாகரன் "வீர நாள்" (மே 17 2025)

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரும் தமிழீழத்தேசியத்தலைவருமான மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வீரச்சாவு பேரறிவிப்பு 01-03-2025

உலகெங்கும் பரந்து வாழும் எம் உயிரினும் மேலான தமிழ் மக்களே.

எமது விடுதலை இயக்கத்தின் தலைவரும் தமிழினத்தின் ஒப்பற்ற பெருந் தலைவருமான தமிழீழத்தேசியத தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், இறுதிவரை கொண்ட கொள்கையில் உறுதி தளராது முப்பத்தாறு ஆண்டுகளாக (36 ஆண்டுகள்) எதிரிப்படைகளோடு அடிபணியாது போராடி நந்திக்கடலோரம் நடைபெற்ற இறுதிச்சமரில் வீரகாவியமானார்.

சிறிலங்கா அரசுக்கும் அதன் இராணுவ இயந்திரத்திற்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய உலகநாடுகளின் கூட்டுப்படை வலிமையையும் ஏகாதிபத்திய அரசுகளின் சூழ்ச்சி நிட்டங்களையும் எதிர்கொண்டு, அனைத்து தடைகளையும், தனது பேராற்றலால் உடைத்தெறிந்து தமிழினத்தின் ஆற்றலோனாக தேசியத்தலைவர் திகழ்ந்தார்.

தமிழினத்தின் தேசிய அடையாளத்தை நிலைநிறுத்தி, முள்ளிவாய்க்கால் இறுதிப்போர் வரையும் உறுதி குலையாது படைநடத்தி, நான் வரித்துக்கொண்ட உயரிய இலட்சியத்தையும், தனது வழிநடத்தலையும் உளமார ஏற்று உயிர்களை விதையாக்கிய மாவீரர்களின் தியாகங்களையும், இலட்சியக் கனவுகளையும். நெஞ்சில் நிறுத்தி, எதிரிப்படையோடு இறுதிக்கணம் வரை துணிவோடு களமாடி எமது தேசியத்தலைவர் அவர்கள் வீரச்சாவடைந்த நாள் 2009 ஆண்டு மே மாதம் 17ம் நாள் என தமிழீழ மாவீரர் பணிமனை முடிவு செய்து அறியத்தருகிறது.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவினை உறுதிப்படுத்தி நெஞ்சைப் பிளக்கும் இப்பெரும் துயர்மிகு அறிவிப்பை, அவரது வழிநடத்தலை உளமார ஏற்றுப் போராடிய போராளிகளுக்கும், அவரை ஒப்பற்ற தேசியத் தலைமையாக தமது நெஞ்சங்களில் சுமந்திருக்கும் எம்முயிரினும் மேலான தமிழ் மக்களுக்கும் பெருந்துயரத்தோடு, தமிழீழ மாவீரர் பணிமனையூடாக உறுதிப்படுத்தி வெளிப்படுத்திக்கொள்ளும் அதேவேளை எமது வீரவணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

காலம்காலமாக அடிமைவாழ்வுக்குள் சிக்குண்டு சிதைந்து கொண்டிருந்த ஈழத்தமிழினத்திற்கு கிடைத்த ஒரு சூரியத்தேவனாக, இந்த நூற்றாண்டில் உலகமே வியக்கும் பல அற்புதமான வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து. தமிழினத்தின் அதி உச்ச வீர அடையாளமாக, அவர் நிகழ்ந்தார்.

வரலாற்றிலிருந்து எவராலும் அழிக்கப்பட முடியாதவாறு, எதிரியாலும் போற்றப்படும் போரியல் அறத்துடனும், உயர்ந்த இராணுவ ஒழுக்கத்துடனும், தமிழர் வரலாற்றில் அவர் நிலைபெற்றுவிட்டார் என்பதால், செம்மொழியாம் எம் தாய்த் தமிழ்மொழி வாழும் காலமெல்லாம் எம்தேசத் தலைவரும் நிலைபெற்று நித்திய வாழ்வு வாழ்வார்.

எமது அன்பிற்குரிய தாய்த்தமிழ் உறவுகளே!

தமிழினத்தின் கலங்கரை விளக்காக, தமிழ் மக்களை அடிமைத் தனத்திலிருந்து கரைசேர்க்கப் புறப்பட்டு, அடிமை விலங்குடைத்து, கொண்ட கொள்கையில் உறுதி தளராது, மாவீரர் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

தமிழினத்தின் விடிவிற்காக தனது உயிரை அர்ப்பணித்த எம் தேசியத் தலைவருக்கு உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி பேரெழுச்சியோடு அவரை நெஞ்சங்களில் நிலைநிறுத்தி தமிழீழ போராட்ட வரலாற்றின் மிகப்பெரும் அடையாளமாக அவரை இறையாக்கி எம் இதயக்கோயில்களில் வைத்து பூசிக்கப்படக்கூடியவராக்க வேண்டியது ஒவ்வொரு தமிழ்களது மிகப்பெரும் கடமையும் பொறுப்புமாகும்.

ஆகவே வரலாற்றில் எமக்கு கிடைத்த பொக்கிசமான எம்தேசத்தலைவருக்கு தலைவரின் தலைமையில் போராடிய போராளிகள், சமூக கட்டமைப்பினர், புலம்பெயர் மற்றும் தாயக தமிழக மக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து அவரது இறுதி வீரவணக்க நிகழ்வை, தாயகம், தமிழகம் உட்பட தமிழ் மக்கள் பரந்துவாழும் உலகப்பரப்பெங்கிலும் உலகம் போற்றும் வகையில் மே 17, 2025 அன்று "மேதகு வே.பிரபாகரன் வீர நாள்" என்று பேரெழுச்சியோடு முன்னெடுப்போம் என உறுநிஅளிக்கிறோம்.

எம் பெருந்தலைவர் அவர்களால் கட்டமைத்து, வளர்த்தெடுக்கப்பட்டு நமது கைகளில் தரப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் போராட்டத்தை, அதே உறுதிப்பாட்டுடனும், அதே கட்டுக்கோப்புடனும், அதே ஒருங்கிணைவுடனும், மாறிவரும் பூகோள அரசியல் மாற்றங்களுக்கேற்ப தடம் மாறாது முன்னெடுத்துச் சென்று எமது இறுதி இலட்சியத்தை அடைவோமென எம் தேசியத் தலைவர் மீதும் மாவீரர்கள் மீதும் உறுதியெடுத்துக் கொள்கிறோம்.

"புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்."

மாவீரர் பணிமனை,

தமிழீழ விடுதலைப்புலிகள். 01-03-2025

இவர்களுக்கு இப்பதான் தெளிந்து இருக்கு.

யாழ் இணையம் இதனை எப்பவோ வெளிப்படையாக அறிவித்து விட்டு ஒவ்வொரு வருடமும் மாவீரன் பிரபாகரன் அவர்களுக்கு அஞ்சலியும் செலுத்திக் கொண்டு வருகின்றது.

போராடி வீழ்ந்த தலைவரின் மகள் துவரகாவினது சாவு பற்றியும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இல்லாவிடின் போலிகாக்களது பெருக்கம் கூடி விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அஞ்சலிக்க ஏற்பாடுகள்

1818474549.JPG

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அஞ்சலிப்பதற்கு தாயகத்திலும், புலத்திலும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
'மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்' என்ற அமைப்பொன்று புலம்பெயர் தமிழர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் ஊடாகவே இந்த அஞ்சலிப்பு நிகழ்வை நடத்த முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் பிரபாகரனுக்கான அஞ்சலி நிகழ்வுகளை தாயகத்திலும் புலத்திலும் சமநேரத்தில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசியத் தலைவர் தொடர்பான பல்வேறு விவாதங்கள் அண்மைக்காலமாகவே முன்வைக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே, தேசியத் தலைவரின் வீரவணக்க நிகழ்வை உணர்வெழுச்சியுடன் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான ஊடகச் சந்திப்பையும் அவர்கள் இணையவழியில் நடத்தியதுடன், சிறப்பு ஊடக அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளனர்.

https://newuthayan.com/article/தமிழீழ_விடுதலைப்_புலிகளின்_தலைவர்_பிரபாகரனை_அஞ்சலிக்க_ஏற்பாடுகள்

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பிரபாகரனுக்கு விரைவில் வீரவணக்க நிகழ்வு: நினைவெழுச்சி அகவம் அறிவிப்பு

தலைவர் பிரபாகரன் அவர்களது நினைவெழுச்சி தொடபான சர்வதேச ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நேற்று (05.03.2025) புதன்கிழமை இடம்பெற்றது.

இணையவழியாக நடைபெற்ற இந்தச் சந்திப்பு “மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தின்” ஊடகப்பிரிவு இணைப்பாளர் அறிவுமணி தலைமையில் இடம்பெற்றது.

“மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்” நிறுவப்பட்டதன் நோக்கம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக அகவத்தின் செயலாளர் புரட்சி விளக்கமளித்தார்.

அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டவிருந்த காணொளி இணைய வழியில் காண்பிக்கப்பட்டது.

அடுத்து கேள்வி - பதிலுக்கான நேரம் வழங்கப்பட்டு, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கான பதில்களையும் தெளிவுபடுத்தல்களையும் அகவத்தின் முதன்மை செயற்பாட்டாளர்களில் ஒருவரான இளங்குட்டுவன் வழங்கினார்.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையில், இவ்வாண்டு எட்டாம் மாத முற்பகுதியில் ஒருங்கிணைந்து ஐரோப்பாவில் ஒரு நாட்டிலும் சம நேரத்தில் தாயகம், தமிழகம் உட்பட ஏனைய நாடுகளிலும் தேசியத் தலைவரின் வீரவணக்க நிகழ்வு இடம்பெறும் என்றும் அது தொடர்பான அறிவிப்பு மிகவிரைவில் வெளியாகும் என்ற தகவலையும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், தேசியத் தலைவர் தொடர்பான பல்வேறு விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, தற்போது தேசியத் தலைவரின் வீரவணக்க நிகழ்வை உணர்வெழுச்சியுடன் நிகழ்த்துவது தொடர்பாகவே எமது செயற்பாடுகள் அமைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

சந்திப்பின் இறுதியில் தெளிவுபடுத்தலுடன் கூடிய தொகுப்புரையினை, “மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தின்” தற்போதைய இணைப்பாளர் சங்கீதன் வழங்கினார்.

தொகுப்புரையின் போது தேசிய தலைவர் அவர்களின் வீரவணக்க நிகழ்வின் ஆரம்ப பணிகள் பற்றியும் எதிர்காலத்தில் அது எவ்வாறு நகர்ந்து செல்லும் என்பது பற்றியும் ஊடகவியாளர்களாக விடயங்களை மக்கள் மத்தியில் விவாதங்களுக்கு அப்பாற்பட்டு உறவுகளிடம் எடுத்துச் செல்ல வேண்டுமென்றும், திட்டமிடப்பட்டிருக்கும் தேசியத் தலைவர் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வினை அதி உச்சமாகவும் உணர்வுபூர்வமாகவும் நடத்துவதற்கு உலகமெங்கும் பரந்து வாழும் உறவுகளின் ஒத்துழைப்பினையும் அவர் கேட்டுக் கொண்டார். 

https://ibctamil.com/article/memorial-planed-for-leader-pirapakaran-1741249764

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.