Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: Vishnu

06 Mar, 2025 | 10:05 AM

image

(நெவில் அன்தனி)

யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டு வரும் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் இரண்டாவது பழைமைவாய்ந்த சென். பெட்றிக்ஸ் அணிக்கும் யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான 108ஆவது பொன் அணிகளின் போர் சென். பெட்றிக்ஸ் மைதானத்தில் வியாழக்கிழமை (06) ஆரம்பமாகிறது.

இந்தப் போட்டி கடந்த வாரம் நடைபெறுவதாக இருந்தபோதிலும் சீரற்ற காலநிலை காரணமாக ஒரு வாரத்தால் பிற்போடப்பட்டிருந்தது.

சென். பெட்றிக்ஸ் கல்லூரி இந்த வருடம் 175 வருட பூர்த்தியைக் கொண்டாடுவதை முன்னிட்டு முதல் தடவையாக பொன் அணிகளின் போர் மூன்று நாள் போட்டியாக நடத்தப்படவுள்ளது.

இதன் காரணமாக இந்த வருடப் போட்டியில் முடிவு கிட்டும் என நம்பப்படுகிறது.

பொன் அணிகளின் போரில் கடந்த 52 வருடங்களாக வெற்றிபெறாமல் இருந்துவரும் யாழ்ப்பாணக் கல்லூரி இம்முறை வெற்றி தாகத்தை தீர்த்துக்கொள்ளும் எனவும் அதேவேளை தனது 175 வருடப் பூர்த்தியை சென். பெட்றிக்ஸ் கல்லூரி வெற்றியுடன் கொணடாட முயற்சிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ்ப்பாணக் கல்லூரி கடைசியாக 1973ஆம் ஆண்டு எம். கணேசலிங்கம் தலைமையிலும் சென் பெட்றிக்ஸ் கல்லூரி 2023இல் எஸ். கீர்த்தன் தலைமையிலும் வெற்றிபெற்றிருந்தன.

கடந்த வருடம் (2024) வரை இரண்டு - நாள் போட்டியாக நடத்தப்பட்டுவந்த பொன் அணிகளின் போரில் சென் பெட்றிக்ஸ் கல்லூரி 35 - 16 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது.

31 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததுடன் ஒரு போட்டி கைவிடப்பட்டது.

சென். பெட்றிக்ஸ் கல்லூரி அணிக்கு பற்குணம் மதுஷன் தலைவராகவும் யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கு சிதம்பரலிங்கம் மதுஷன் தலைவராகவும் விளையாடுகின்றனர்.

இதேவேளை, இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான 32ஆவது ராஜன் கதிர்காமர் கிண்ணத்துக்கான 50 ஓவர்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியும்  இரண்டு கல்லூரி அணிகளும் பங்குபற்றும் அருட்தந்தை ஜீ. ஏ. பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் வெற்றிக் கிண்ணத்துக்கான 5ஆவது ரி20 கிரிக்கெட் போட்டியும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளன. 

அணிகள்

001.png

சென். பெட்றிக்ஸ் கல்லூரி: பற்குணம் மதுஷன் (தலைவர்), கே. சாருஷன், ஆர். ஷியாந்த்சன், டி. அபிலாஷ், வி.வி. பிரியங்கன், பி. மதுஷன், ஆர்.பி. டினோவன், எஸ். ஷெஹான், வி. எவொன், கே. லிக்ஷன், வி. டிஃபானோ, எம்.எஸ். ஆதித்யா, எஸ்.என். ஹரின் ஏட்ரியன், எஸ். ஸ்மித் ஸெனாரி, ஜே. டினுலக்ஷான், ரி. ஜோயேஷ், பி. சிபிஷாந்த், எஸ். ஜனுஷன், பி.எம். டெவின். பயிற்றுநர் மற்றும் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர்: ஏ. எஸ். நிஷாந்தன், ஆலோசக பயிற்றுநர்: எஸ். சகாயராஜா, பொறுப்பாசிரியர்: ஜீ. ரஞ்சித் தேவராஜன்.

jaffna_college_cricket_team.jpg

யாழ்ப்பாணக் கல்லூரி: எஸ். மதுசன் (தலைவர்), ரீ. டேமியன் (உதவித் தலைவர்), ஆர். ஜோன்சன், ஐ. இமக்ஷன், கே. புவினயன், ரி. கார்த்திகன், வி. விஷ்னுகோபன், ஏ. ரித்மன், எஸ்.கே. ஹாமிஷ், கே. ஹரிஷன், ஏ. கர்மிஷன், எஸ். கபிஷன், எஸ். தக்சிகன், கே. திருக்குமரன், எஸ். பங்கஜன், எஸ். அஷ்மின், யூ. ஹென்ரிக்சன், எஸ். அட்சயன், பி. கெவின். பயிற்றுநர்: பி. ஸ்ரீகுகன், உடற்கல்வி பணிப்பாளர்: ஆர். குகன், பொறுப்பாசிரியர்: பி.எம்.எம். தேவதர்ஷன்.

https://www.virakesari.lk/article/208393

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சமநிலையில் மோதப்படும் 108ஆவது பொன் அணிகளின் போர்; யாழ்ப்பாணக் கல்லூரி 153, சென். பற்றிக்ஸ் 50 - 2 விக்.

Published By: Vishnu

06 Mar, 2025 | 09:05 PM

image

(நெவில் அன்தனி)

சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை (06) ஆரம்பமான சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கொட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான 108ஆவது பொன் அணிகளின் போர் கிட்டத்தட்ட சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட வண்ணம் உள்ளது.

1_battle_of_the_golds_trophy.jpg

1_b_guests_before_tha_match...jpg

நாணய சுழற்சியில் வெற்றிபெற்றதும் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த யாழ்ப்பாணக் கல்லூரி அணி அதன் முதல் இனிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப வீரர்களில் ஒருவரான ஈ. எமக்ஷன் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார்.

ஆனால் மற்றைய ஆரம்ப வீரர் ஆர். ஜோன்சனும் 3ஆம் இலக்க வீரர் கே. ஹரிஷனும் 2ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர்.

ஹரிஷன் 13 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

1_c_spc_players_entering_the_field.jpg

1_d_jc_batsmen_at_the_crease.jpg

மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஆர். ஜோன்சன் 6 பவுண்டறிகளுடன் 61 ஒட்டங்களைப் பெற்றார்.

மத்திய வரிசையில் வி. விஷ்னுகோபன் 30 ஓட்டங்களையும் அணித் தலைவர் எஸ். மதுசன் 12 ஓட்டங்களையும் எஸ். கோபிஷன் 14 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் விஜயகுமார் எவொன் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பிரேமநாயகம் மதுசன் 17 ஓட்டங்களுக்கு   2 விக்கெட்களையும் விமலதாஸ் பிரியங்கன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் குமணதாசன் சாருஷன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் சென். பற்றிக்ஸ் அணி அதன் முதல் இன்னிங்ஸில் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 50 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

விமலதாஸ் டிபானோ 7 ஓட்டங்களுடனும் ரொபின்சன் டினோவன் (ரன் அவுட்) ஓட்டம் பெறாமலும் ஆட்டம் இழந்தனர்.

ஸ்டீவ் ஆதித்தியா 21 ஓட்டங்களுடனும் டேவிட் அபிலாஷ் 14 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.

பந்துவீச்சில் வி. விஷ்னுகோபன் 14 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

2guests_before_tha_match.jpg

3_jaffna_college_pricipal_hoistitng_the_

4_st_patrick_s__rector_hoisting_the_coll

5_team_photo.jpg

6_players_introduction.jpg

7_players_introduction...jpg

8_captains_walking_in_for_the_toss.jpg

9_toss.jpg

https://www.virakesari.lk/article/208486

  • கருத்துக்கள உறவுகள்

படங்களுடனான பகிர்வுக்கு நன்றி ஏராளன் .........! 👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சம அளவில் மோதிக்கொள்ளப்படும் சென். பற்றிக்ஸ் - யாழ்ப்பாணக் கல்லூரி பொன் அணிகளின் போர்

Published By: Vishnu

07 Mar, 2025 | 08:12 PM

image

(நெவில் அன்தனி)

யாழ். சென். பற்றிக்ஸ் மைதானத்தில் நடைபெற்றுவரும் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான 108ஆவது பொன் அணிகளின் போர் சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட வண்ணம் இருக்கிறது.

சுமாரான மொத்த எண்ணிக்கைகளைக் கொண்ட இந்தப் போட்டியில் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் யாழ்ப்பாணக் கல்லூரி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 69 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதற்கு அமைய இரண்டாவது இன்னிங்ஸில் மேலும் 5 விக்கெட்கள் மீதம் இருக்க யாழ்ப்பாணக் கல்லூரி 55 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது.

போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 50 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி, சகல  விக்கெட்களையும் இழந்து 167 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் நால்வர் மாத்திரமே 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.

இன்னிங்ஸில் பெறப்பட்ட 35 உதிரிகளே அதிகப்பட்ச எண்ணிக்கையாக இருந்தது.

பந்துவீச்சில் சிதம்பரலிங்கம் மதுசன் 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார்.

எண்ணிக்கை சுருக்கம்

யாழ்ப்பாணக் கல்லூரி அணி 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 153 (ரொபின்சன் ஜோன்சன் 61, வாசுதேவன் விஷ்னுகோபன் 30, சுரேஷ் கபிஷன் 14, விஜயகுமார் எவொன் 17 - 3 விக்., பிரேமநாயகம் மதுசன் 17 - 2 விக்., விமலதாஸ் பிரியங்கன் 21 - 2 விக்., குமணதாசன் சாருஷன் 42 - 2 விக்.)

சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 167 (உதிரிகள் 35, டேவிட் அபிலாஷ் 28, ஸ்டீவ் ஆதித்தியா 27, விமலதாஸ் பிரியங்கன் 23 ஆ.இ., பிரேமநாயகம் மதுசன் 20, சிதம்பரலிங்கம் மதுசன் 45 - 5 விக்., வாசுதேவன் விஷ்னுகோபன் 34 - 2 விக்., ஹமிஷ் ஹார்மிஷன் 43 - 2 விக்.),

யாழ்ப்பாணக் கல்லூரி அணி 2ஆவது இன்: 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 69 - 5 விக். (ஹமிஷ் ஹார்மிஷன் 15 ஆ.இ., வாசுதேவன் விஷ்னுகோபன் 13, தர்மகுமாரன் டேமியன் 10, பிரேமநாயகம் மதுசன் 5 - 2 விக்., குமணதாசன் சாருஷன் 16 - 2 விக்.)

https://www.virakesari.lk/article/208586

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

52 வருடங்களின் பின் சென். பற்றிக்ஸை வீழ்த்தி பொன் அணிகளின் போரில் வெற்றியை சுவைத்தது யாழ்ப்பாணக் கல்லூரி

08 Mar, 2025 | 06:59 PM

image

(நெவில் அன்தனி)

யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவரும் மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான பொன் அணிகளின் போரில் 52 வருடங்களின் பின்னர் சென் பற்றிக்ஸ் கல்லூரியை முதல் தடவையாக வீழ்த்தி யாழ்ப்பாணக் கல்லூரி வெற்றியை சுவைத்தது.

சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் இன்று சனிக்கிழமை நிறைவடைந்த 108ஆவது போன் அணிகளின் போரில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணியை 59 ஓட்டங்களால் யாழ்ப்பாணக் கல்லூரி அணி வெற்றிகொண்டது.

அணித் தலைவர் சிதம்பரலிங்கம் மதுசன் முழுப் போட்டியிலும் 10 விக்கெட் குவியலைப் பதிவுசெய்ததுடன் இரண்டாவது இன்னிங்ஸில் சுரேஷ் கோபிஷனுடன் 7ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 71 ஓட்டங்களைப் பகிர்ந்து தனது அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

இப் போட்டியில் மதுசன் 68 ஓட்டங்களுக்கு 11 விக்கெட்களைக் கைப்பற்றி பந்துவீச்சில் அசத்தியிருந்தார்.

முதல் ஒன்றரை நாட்களில் இப் போட்டி சம அளவில் மோதிக்கொள்ளப்பட்டபோதிலும் இரண்டாம் நாள் ஆட்டத்தின் பிற்பகுதியில் சென் பற்றிக்ஸின் கை மேலோங்கி இருந்தது.

இதன் காரணமாக சென் பற்றிக்ஸ் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், போட்டியின் கடைசி நாளான இன்று சனிக்கிழமை காலை 5 விக்கெட் இழப்புக்கு 65 ஓட்டங்களிலிருந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்த யாழ்ப்பாணக் கல்லூரி 159 ஓட்டங்களைப் பெற்று சற்று பலமான நிலையை அடைந்தது.

மொத்த எண்ணிக்கை 70 ஓட்டங்களாக இருந்தபோது 6ஆவது விக்கெட் வீழ்ந்ததால் சென். பற்றிக்ஸ் அணியினர் பெரும் சந்தோஷத்தில் மிதந்தனர்.

ஆனால், சிதம்பரலிங்கம் மதுசனும் சுரேஷ் கோபிஷனும் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 7ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 71 ஓட்டங்களைப் பகிர்ந்து போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினர்.

120 பந்துகளை எதிர்கொண்ட மதுசன் 32 ஓட்டங்களையும் 84 பந்துகளை எதிர்கொண்ட கோபிஷன் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் குமணதாசன் சாருஷன் 4 விக்கெட்களையும் பிரேமநாயகம் மதுசன் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

146 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சென். பற்றிக்ஸ் கல்லூரி 35.3 ஒவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 86 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் பற்குணம் மதுஷன் தனித்து போராடி 73 பந்துகளை எதிர்கொண்டு 35 ஓட்டங்களைப் பெற்றார். வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையை எட்டவில்லை.

இரண்டாவது அதிகப்பட்ச எண்ணிக்கையாக 14 உதிரிகள் சென். பற்றிக்ஸ் அணியின் மொத்த எண்ணிக்கைக்கு சேர்ந்தது.

பந்துவீச்சில் சிதம்பரலிங்கம் மதுசன் 7 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 16.3 ஓவர்களில் 23 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

மதுசனுக்கு பக்கபலமாக பந்துவீசிய வாசுதேவன் விஷ்ணுகோபன் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

எண்ணிக்கை சுருக்கம்

யாழ்ப்பாணக் கல்லூரி அணி 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 153 (ரொபின்சன் ஜோன்சன் 61, வாசுதேவன் விஷ்னுகோபன் 30, விஜயகுமார் எவொன் 17 - 3 விக்., பிரேமநாயகம் மதுசன் 17 - 2 விக்., விமலதாஸ் பிரியங்கன் 21 - 2 விக்., குமணதாசன் சாருஷன் 42 - 2 விக்.)

சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 167 (உதிரிகள் 35, டேவிட் அபிலாஷ் 28, ஸ்டீவ் ஆதித்தியா 27, விமலதாஸ் பிரியங்கன் 23 ஆ.இ., பிரேமநாயகம் மதுசன் 20, சிதம்பரலிங்கம் மதுசன் 45 - 5 விக்., வாசுதேவன் விஷ்னுகோபன் 34 - 2 விக்., ஹமிஷ் ஹார்மிஷன் 43 - 2 விக்.),

யாழ்ப்பாணக் கல்லூரி அணி 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 159 (எஸ். கோபிஷன் 35, சிதம்பரலிங்கம் மதுசன் 32, குமணதாசன் சாருஷன் 45 - 4 விக்., பிரேமநாயகம் மதுசன் 35 - 3 விக்., பற்குணம் மதுஷன் 9 - 2 விக்.)

சென். பற்றிக்ஸ் (வெற்றி இலக்கு 146 ஓட்டங்கள்) 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 86 (பற்குணம் மதுஷன் 35, சிதம்பரலிங்கம் மதுசன் 23 - 6 விக்., வாசுதேவன் விஷ்னுகோபன் 43 - 3 விக்.)

https://www.virakesari.lk/article/208652

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.