Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

North Sea, Ship Collision, கப்பல்கள் மோதல், வடக்கு கடல், பிரிட்டன் , அமெரிக்க கப்பல், எண்ணெய் கப்பல் மோதல்

படக்குறிப்பு,நடுக்கடலில் பற்றி எரியும் கப்பல்கள்

10 மார்ச் 2025

புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

வட கடல் பகுதியில் திங்கட் கிழமை காலையில் இரண்டு கப்பல்கள் நடுக்கடலில் மோதிக் கொண்டன. இரண்டு கப்பல்களும் கிழக்கு யார்க்ஷர் கடற்கரையில், பிரிட்டனில் உள்ள கிரிம்ஸ்பீ பகுதிக்கு அருகே மோதிக் கொண்டன.

ஸ்டெனா இம்மாகுலேட் கப்பல் ஜெட் எரிபொருளை எடுத்துச் சென்ற போது, வட கடலில் சோலாங் சரக்கு கப்பலால் மோதி விபத்துக்கு விபத்துக்குள்ளானது.

எண்ணெய் எடுத்துச்சென்ற கப்பல் மற்றும், வேதிப்பொருட்களுடன் சென்ற சோலாங் என இரண்டிலும் ஏற்பட்ட தீ இரண்டாவது நாளாக எரிந்து கொண்டிருக்கிறது.

பிபிசி வெரிஃபை ஆய்வு செய்த தரவுகளின்படி, அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட ஸ்டெனா இம்மாகுலேட் என்ற டேங்கர் கப்பல் நங்கூரமிட்டிருந்த போது, போர்ச்சுகல் நாட்டில் பதிவு செய்யப்பட்ட சோலாங் எனப்படும் கன்டேய்னர் கப்பலால் மோதப்பட்டதாகத் தெரிகிறது.

அமெரிக்க நிறுவனமான க்ரோவ்லி, ஸ்டெனா இம்மாகுலேட் கப்பலின் ஆபரேட்டர் மற்றும் இணை உரிமையாளர் ஆகும். ஃப்ளோரிடாவை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "இந்த விபத்தில் தீ பற்றி எரிந்தது மற்றும் ஜெட் எரிபொருள் கப்பலில் இருந்து வெளியானது. கப்பலில் பல வெடிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஸ்டெனா இம்மாகுலேட் கப்பலில் இருந்தவர்கள் அதனை விட்டு வெளியேறினர். தற்போது ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் மற்றும் கணக்கிடப்பட்டுள்ளனர்", என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Play video, "வட கடலில் இரு கப்பல்கள் மோதல் - கடும் தீ", கால அளவு 0,32

00:32

p0kxb2bt.jpg.webp

காணொளிக் குறிப்பு,வட கடலில் இரு கப்பல்கள் மோதல் - கடும் தீ

இரு கப்பல்களில் இருந்த 36 பேர் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரிட்டன் போக்குவரத்து செயலாளரிடம் பேசிய பிறகு உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கிரஹாம் ஸ்டூவர்ட் தெரிவித்தார்.

இப்போது அனைவரும் கரைக்கு வந்துவிட்டனர். ஆனால் இதனால் ஏற்பட இருக்கும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து கவலைப்படுவதாகவும் அவர் கூறினார்.

கப்பலில் இருந்தவர்களைத் தேடும் பணி நிறுத்திக் கொள்ளப்பட்டுள்ள போதிலும், ஒருவரை காணவில்லை என்பதை எச்.எம். கடலோர காவல்படை உறுதி செய்துள்ளது. காணாமல் போனவர் சோலாங் கப்பலின் ஊழியர் ஆவார்.

ஸ்டெனா இம்மாகுலேட் கப்பலில் இருந்த ஜெட் எரிபொருள் அமெரிக்க அரசாங்கத்திற்கு சொந்தமானது. அமெரிக்க அரசு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 10 எண்ணெய் கப்பல்களில் இந்த கப்பலும் ஒன்றாகும். மோதல் சமயங்களில் அமெரிக்க ராணுவத்துக்கு எரிபொருட்கள் கொண்டு செல்லவும், தேசிய அவரச காலங்களில் எரிபொருட்கள் கொண்டு செல்லவும் இந்த கப்பல் பயன்படுத்தப்படுகிறது.

டேங்கரில் இருந்து அடர்த்தியான புகை வெளியேறியதாகவும், பெரிய அளவில் தீ பற்றி எரிந்துகொண்டிருப்பதாகவும் இந்த விபத்து குறித்த வீடியோக்கள் காட்டுகின்றன.

அதிவேகமாக வந்து மோதிய கப்பல்

இம்மாகுலேட் கப்பலில் இருந்த பணியாளர் ஒருவர் பிபிசியிடம் சிய போது, சோலாங் கப்பல் சுமார் 16 நாட்ஸ் வேகத்தில் வந்து மோதியதாகவும், கப்பலில் இருந்த பணியாளர்கள் கைகளில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு உயிர் காக்கும் படகுகளில் ஏறி தப்பியதாகவும் கூறினார்.

சுற்றுச்சூழலில் இந்த மோதல் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்து ஆய்வு செய்யப்படுவதாகவும், இம்மாகுலேட் கப்பலில் இருந்து ஜெட் எரிபொருள் கடலில் கலந்திருப்பதாகவும் ஸ்டெனா இம்மாகுலேட் கப்பலை நிர்வகிக்கும் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

North Sea, Ship Collision, கப்பல்கள் மோதல், வடக்கு கடல், பிரிட்டன் , அமெரிக்க கப்பல், எண்ணெய் கப்பல் மோதல்

படக்குறிப்பு,கப்பல்கள் மோதல் நிகழ்ந்த இடம்

கப்பல்கள் பற்றிய விவரங்களைக் கண்காணிக்கும் மேரைன் டிராஃபிக்கின் தரவுகளின்படி, ஸ்டெனா இம்மாகுலேட் 183 மீட்டர் நீளம் (600 அடி) கொண்ட அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட எண்ணெய் மற்றும் ரசாயன டேங்கர் கப்பல் ஆகும். ஸ்டெனா இம்மாகுலேட் கிரேக்க துறைமுகமான அகியோய் தியோடோராய் என்ற இடத்தில் இருந்து புறப்பட்டு, பிரிட்டனில் உள்ள ஹல்லுக்கு செல்ல இருந்தது.

மார்டைம் ஆப்டிமா வலைத்தளத்தின்படி, இந்தக் கப்பல் 2017 ஆம் ஆண்டு கட்டப்பட்டது, மேலும் அதன் எடை கிட்டத்தட்ட 50,000 டன்கள் ஆகும்.

North Sea, Ship Collision, கப்பல்கள் மோதல், வடக்கு கடல், பிரிட்டன் , அமெரிக்க கப்பல், எண்ணெய் கப்பல் மோதல்

சோலாங் போர்ச்சுகல் நாட்டில் பதிவு செய்யப்பட்ட கன்டேய்னர் கப்பல் ஆகும். இது 2005 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது, மேலும் 9,500 டன் சரக்குகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது என்று மரைன் ஆப்டிமா வலைத்தளத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

சோலாங் கண்டேய்னர் கப்பல், ஸ்காட்லாந்து துறைமுகமான கிரேன்ஜ்மவுத் என்ற இடத்திலிருந்து நெதர்லாந்தின் ரோட்டர்டாமிற்கு சென்றுக்கொண்டிருந்தது

மேரைன் டிராஃபிக்கின் தரவுகள், விபத்து நடந்தபோது ஒரு கப்பல் நகர்ந்து கொண்டிருந்ததையும், ஒன்று கிட்டத்தட்ட நிலையாக இருந்ததையும் தெளிவாகக் காட்டுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c8x41kjx5xxo

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-133.jpg?resize=750%2C375&ssl

வட கடலில் இரு கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து!

வடகிழக்கு இங்கிலாந்தில் அமெரிக்க இராணுவத்திற்காக ஜெட் எரிபொருளை ஏற்றிச் சென்ற ஒரு டேங்கர் கப்பல் ஒரு கொள்கலன் கப்பலுடன் திங்கட்கிழமை (10) மோதி விபத்துக்குள்ளானது.

இந்த மோதலில் இரு கப்பல்களிலும் தீப்பிடித்தது.

இதனால் பல வெடிப்புகள் ஏற்பட்டதுடன், இரு குழுவினரும் கப்பலை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பல்லாயிரக்கணக்கான தொன் ஜெட் எரிபொருளை சுமந்து செல்லக்கூடிய அந்த டேங்கர் கப்பல், சிறிய கொள்கலன் கப்பல் மோதியபோது நங்கூரமிட்டிருந்ததாகவும், அதன் சரக்கு தொட்டி உடைந்து கடலில் எரிபொருளை வெளியிட்டதாகவும் அதன் இயக்குநரான ஸ்டெனா பல்க் கூறினார்.

இந்த சம்பவத்தில் தீங்கிழைக்கும் செயல்கள் அல்லது பிற நபர்கள் ஈடுபட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று இரண்டு கடல்சார் பாதுகாப்பு வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

பிரித்தானியாவின் கடலோர காவல்படை ஒரு அறிக்கையில், விபத்தினை அடுத்து 36 பணியாளர்கள் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டதாகவும், ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியது.

போர்த்துகீசியக் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பலான சோலாங் (Solong) இன் குழு உறுப்பினர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், தேடுதல் பணி முடிவடைந்துள்ளதாகவும் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் இன்னும் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

Gls4rAiXgAA1Lm8?format=jpg&name=900x900

அமெரிக்க தளவாடக் குழுவான க்ரௌலியால் இயக்கப்படும் ஸ்டெனா இம்மாகுலேட் (Stena Immaculate) என்ற டேங்கர் கப்பல், ஜெட்-ஏ1 எரிபொருளை ஏற்றிச் சென்றபோது, நங்கூரமிட்டிருந்த சரக்குக் கப்பலான சோலாங்கில் மோதியதாக கூறப்படுகிறது.

இந்த டேங்கர் கப்பல் அமெரிக்க அரசாங்க திட்டத்தின் ஒரு பகுதியாகும், தேவைப்படும்போது ஆயுதப் படைகளுக்கு எரிபொருளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட புதிய அணுகுமுறையை திறக்கிறது என்று அமெரிக்க இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

ஹாம்பர்க்கை தளமாகக் கொண்ட சோலாங் கப்பலின் உரிமையாளர் எர்ன்ஸ்ட் ரஸ், கப்பல் பிரித்தானிய கடற்கரையான ஹம்பர்சைடில் இருந்து வடக்குக் கடலில் பயணித்துக் கொண்டிருந்தபோது, GMT 10.00 மணிக்கு ஸ்டெனா இம்மாகுலேட்டுடன் மோதியதாக குறிப்பிட்டார்.

மோதலின் தாக்கத்திலும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்துகளிலும் இரு கப்பல்களும் குறிப்பிடத்தக்க சேதத்தை சந்தித்தன.

சோலாங் கப்பலில் இருந்த 14 பேரில் 13 பேர் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். காணாமல் போன குழு உறுப்பினரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.

கடற்படை தரவு வழங்குநர்களின் விபத்து தொடர்பான அறிக்கையின்படி, சோலாங் கப்பலில் 15 கொள்கலன்களில் சோடியம் சயனைடு, முக்கியமாக தங்கச் சுரங்கத்தில் பயன்படுத்தப்படும் நச்சு இரசாயனம் மற்றும் அறியப்படாத அளவு ஆல்கஹால் ஆகியவை இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இதனிடையே, திங்கட்கிழமை காலை சம்பவ இடத்திற்கு அவசரகால குழுக்கள் ஒரு ஹெலிகொப்டர், நிலையான இறக்கை விமானம், உயிர்காக்கும் படகுகள் மற்றும் தீயணைப்பு திறன் கொண்ட கப்பல்களும் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

https://athavannews.com/2025/1424712

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.