Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் இத்தாலிய விஞ்ஞானிகள் ஒளியை “சூப்பர்சொலிட்” (Supersolid) எனப்படும் அதிசயமான திண்ம நிலையாக மாற்றியுள்ளனர்…

இது குவாண்டம் இயற்பியலில் (Quantum Physics) ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது... இந்த கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் பல தொழில்நுட்ப புரட்சிகளுக்கு வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது... மேலும், இது ஒளியின் நடத்தை பற்றிய புதிய புரிதல்களை வழங்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்..

சரி இப்போ “சூப்பர்சொலிட்” என்றால் என்னவென்று பார்ப்போம்..

“சூப்பர்சொலிட்” என்பது ஒரு விநோதமான திண்ம நிலை… இது ஒரு பொருள் திண்மமாக (solid) இருக்கும் போதும், அதே நேரத்தில் திரவமாக (liquid) பாயும் தன்மை கொண்டிருக்கும்..

சூப்பர்சொலிடில் உள்ள அணுக்கள் (atoms) ஒழுங்காக (crystalline) ஒருங்கிணைந்து இருக்கும் போதிலும், அவை எந்த தடையுமின்றி (without friction) நகர முடியும்...

சூப்பர்சொலிட் தன்மை 1969 ஆம் ஆண்டு முதலில் முன்மொழியப்பட்டது... ஆனால், இதை ஆய்வகத்தில் உருவாக்கி, கண்கூடாக காண்பது கடினமானது...

இதை வெற்றிகரமாக உருவாக்கும் முயற்சியில்தான் இத்தாலிய விஞ்ஞானிகள் அண்மையில் வெற்றி கண்டுள்ளனர்… அதுவும் ஒளியை..

சாதாரணமாக, சூப்பர்சொலிட் நிலை, குறைந்த வெப்பநிலையிலான அணுக்கள் (ultracold atomic gases) மூலம் உருவாக்கப்பட்டன… ஆனால், இத்தாலிய விஞ்ஞானிகள் இதை ஒளி (light) மூலம் உருவாக்கியுள்ளனர் என்பது ஒரு புரட்சிகர கண்டுபிடிப்பு ஆகும்...

சரி இப்போ இவர்கள் எப்படி ஆய்வுகூட மட்டத்தில் இதைச் சாதித்தார்கள், அதுவும் தன்னைவிட இந்த பிரபஞ்சத்தின் உள்ளே யாரும் வேகமாக போகமுடியாது என்று அனைத்து விஞ்ஞானிகளுக்கும் ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கும் ஒளியை என்பதைப் பார்ப்போம்…

large.974F7EAA-698B-4E19-A50F-8BEA02ED4F74.jpeg

சூப்பர்சொலிட் உருவாக்கத்தில் பயன்படுத்திய உயர் துல்லிய படமெடுப்புக் கருவி(high resolution imaging system)

large.E0AD1E5B-9A6A-4D2A-B18F-9AB96A5BF3EB.jpeg

சூப்பர்சொலிட் தன்மை கொண்ட ஒளியின் ஒழுங்கமைப்பு…

large.0F2CA5A7-5601-414B-AA74-10DE5271917F.jpeg

விஞ்ஞானிகள் இது குறித்து ஆய்வு செய்யும் தருணம்…

விஞ்ஞானிகள் ஒளியை ஒரு சிறப்பான செமிகண்டக்டர் (semiconductor) கட்டமைப்பில் சிறப்பாக கட்டுப்படுத்தினர்…

ஒளியின் துகள்கள் (photons) ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்ளும் (interact) விதமாக அமைக்கப்பட்டது…

இதன் விளைவாக, ஒளி திண்மமாகவும் (solid-like) திரவமாகவும் (fluid-like) நடந்துகொள்ளும் நிலை உருவானது...

இவ்வாறு ஒளி “சூப்பர்சொலிட்” ஆக மாறியது... இதை முதன்முறையாக வெற்றிகரமாக உருவாக்கியுள்ள இத்தாலிய விஞ்ஞானிகள், இது எதிர்காலத்தில் குவாண்டம் இயற்பியலுக்கு (quantum physics) புதிய வாசல்கள் திறக்கும் என நம்புகின்றனர்...

இந்த கண்டுபிடிப்பு மூலம் கிடைக்கக்கூடிய பயன்கள்..👇

1. குவாண்டம் கணிப்பொறிகள் (Quantum Computing):

சூப்பர்சொலிட் ஒளி (supersolid light) புதிய வகை குவாண்டம் பிட்டுகள் (qubits) உருவாக்க உதவும்… இது மிகுந்த செயல்திறன் கொண்ட குவாண்டம் கணிப்பொறிகளை உருவாக்க வழிவகுக்கும்...

2. அளவீட்டு கருவிகள் (Precision Measurement):

சூப்பர்சொலிட் ஒளியின் தன்மை, மிகுந்த துல்லியத்துடன் (high precision) அளவீடுகளை மேற்கொள்ள உதவும்…இது அடிப்படை இயற்பியல் மாறிலிகளை (physical constants) கண்டறியவும், gravitational waves களை கண்டறியவும் உதவும்...

3. புதிய பொருட்கள் (Advanced Materials):

ஒளியை சூப்பர்சொலிட் நிலை வரை கட்டுப்படுத்தும் திறன், புதிய வகை பொருட்கள் (materials) உருவாக்க உதவும்… இது புதிய மெக்கானிக்கல் (mechanical) மற்றும் ஒளி (optical) பண்புகளைக் கொண்ட பொருட்களை உருவாக்க வழிவகுக்கும்...

இந்த கண்டுபிடிப்பின் எதிர்கால தாக்கம்..

இது குவாண்டம் கணிப்பொறிகள், தகவல் தொடர்பு, மற்றும் மருத்துவத் தொழில்நுட்பத்தில் (medical technology) புதிய புரட்சிகளை ஏற்படுத்தும்…

புதிய அளவீட்டு கருவிகள் மற்றும் அதிக செயல்திறனுள்ள தகவல் தொடர்பு முறைகளை உருவாக்கும்…

விஞ்ஞான உலகத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது…

ஆக மொத்தத்தில் அறிவியல் உலகில் ஒளியின் புதிய வடிவம் – இது ஒரு புதிய அதிசயம்..!

இத்தாலிய விஞ்ஞானிகள் சாதித்துள்ள இந்த கண்டுபிடிப்பு, எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது… இது ஒளி பற்றிய மனிதரின் புரிதலை முற்றிலும் மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை…!

-பாலபத்திரஓணாண்டி

Edited by பாலபத்ர ஓணாண்டி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.