Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2025-03-15-at-5.13.50%E2%80%A

Politics

மார்க் கார்ணி கனடாவின் 24 ஆவது பிரதமராகிறார்!

March 15, 2025

Post Views: 68

தமிழர் கெரி ஆனந்தசங்கரிக்கு நீதியமைச்சர் பதவி!

சிவதாசன்

எதிர்பார்க்கப்பட்டதைப் போல கனடிய மத்திய லிபரல் கட்சியின் தலைவராக, சுமார் 85% வாக்குகளால், தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் மார்க் கார்ணி நேற்று (வெள்ளி) கனடாவின் 24 ன்காவது பிரதமராக நியமனம் பெற்றுள்ளார். தெற்கே ஜனாதிபதி டொனால்ட் ட்றம்பின் சீரற்ற ஆட்சியில் கனடா எதிர்பார்க்கும் சவால்களைச் சமாளிக்கும் வல்லமையுள்ள ஒருவராக மார்க் கார்ணி பார்க்கப்பட்டதும் அவரது தெரிகுக்கு ஒரு முக்கிய காரணம்.

நாடு தழுவிய கருத்துக்கணிப்பில் எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் லிபரல் கட்சிக்குமிடையேயிருந்த பாரிய வித்தியாசம் இப்போது தகர்ந்து இரு கட்சிகளும் சமநிலையில் (37%) இருப்பதற்கு மார்க் கார்ணியின் வரவு முக்கிய காரணம். “தோல்வியடைந்த ட்றூடோ அரசுக்கு பொருளாதார ஆலோசகராக இருந்தவர் மார்க் கார்ணி” என எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லியேவ் மீண்டும் மீண்டும் உரத்துக் கதறிய பின்னரும் கணிசமான மக்கள் கார்ணிக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பது கூர்ந்து அவதானிக்கத் தக்கது.

கார்ணியின் தற்போதைய அரசு, ஏறத்தாழ, ஒரு காபந்து அரசு தான். தெற்கே இருக்கும் erratic கோமாளி எப்படி நடந்துகொள்ளப் போகிறார் என்பதைப் பொறுத்தே கார்ணியின் திட்டமிடல் இருக்குமென எதிர்பார்க்கலாம். ட்றூடோவுக்கும் ட்றம்பிற்குமான பகைக்கான வேறு பின்புலங்கள் இருப்பினும் கார்ணி ட்றூடோவின் பாதையிலிருந்து சற்று விலகிச் செல்வதே சாணக்கியமாக இருக்கும். கரி வரிச் சுமையைப் பொதுமக்கள் தோள்களிலிருந்து இறக்கி வைப்பதாக கார்ணி அறிவித்தது நல்ல விடயம். இதன் மூலம் பொய்லியேவ் கைகளிலிருந்து முக்கியமான ஒரு ஆயுதத்தைப் பிடுங்கி விட்டார். இது போல இன்னும் பல ஆயுதக் களைவுகளை எதிர்பார்க்கலாம்.

என்ன இருந்தாலும் அரசியல் பட்டையில், கொள்கை ரீதியாக, ட்றூடோ இடது பக்கத்தில் இருந்தவர். பெரும்பாலான உலக நாடுகள் இப்போ வலது பக்கம் சரிந்துகொண்டிருக்கும் காலம். ஆனால் 1960 களுக்குப் பிறகு கனடா பெரும்பாலும் மத்தி அல்லது இடது என்ற இடக்களிலேதான் இருந்துவந்தது. மல்றோனி காலம் வரை இதுதான் நிலைமை. ஹார்ப்பர் கொஞ்சம் வலது பக்கம் இழுத்துச் சென்றிருந்தாலும் இடது எப்போதுமே அதைச் சரியான இடத்தில் தான் வைத்திருந்தது. ட்றூடோ அதை கொஞ்சம் அதிகமாகவே இடது பக்கம் தள்ளிச் சென்றுவிட்டார். கார்ணி அதைக் கொஞ்சம் வலது பக்கம் நகர்த்துவதன் மூலம் “நான் ட்றூடோவல்ல”என்ற செய்தியைத் தெற்குக்கு அனுப்புவார். இது அவசியமானதும் கூட. இதனால் ட்றூடோவை ஓடும் பஸ்ஸின் கீழ் கார்ணி தள்ளிவிட்டதாகக் குறைகாணத் தேவையில்லை. இது கோமாளிக்குக் குதூகலத்தைக் கொடுக்கும் எனபது மட்டுமல்லாது ‘விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை’ கணக்கில் அதுவும் தனது திருவிளையாடல்களைக் கொஞ்சம் தணிக்க முயற்சிக்கும்.

Gary-1.jpg

ட்றூடோ அமைச்சரவையில் இருந்த 37 அமைச்சர்களை 24 ஆகக் குறைத்திருப்பது நல்ல விடயம். இது ‘தற்காலிக அரசு’ என்பதற்காக இருக்கலாம். ஆனால் இந்த மாத முடிவிற்குள் பொதுத் தேர்தளுக்கான திகதியைக் கார்ணி அறிவிப்பார் என எதிர்பார்க்கலாம். இத் தேர்தலில் மீண்டும் லிபரல் கட்சி ஆட்சியமைத்தால் ஆச்சரியப்படத் தேவையில்லை. நான் ஏற்கெனவே பலதடவைகள் கூறியது போல பொய்லியேவ் தனக்குக் கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தை இழந்துவிட்டார். அவரது ஆலோசக சேனை முதலில் துரத்தப்படவேண்டும்.

இந்த புதிய அமைச்சரவையில் இரு தமிழர்களுக்கு முக்கியமான அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டிருப்பது அவதானத்திற்குரியது. இந்த அமைச்சரவையில் கிறீஸ்டியா ஃபிறீலாண்டைத் தவிர , ஆனந்த், ஆனந்தசங்கரி உடபடப் பெரும்பாலானோர் ட்றூடோ விசுவாசிகள். இதனால் இந்த அரசில் கொஞ்சமேனும் ட்றூடோவின் ஆளுமை இருக்கும். முன்னாள் பிரதமர் ஜான் கிரைத்தியேன் ஒரு மூத்த ட்றூடோ விசுவாசி. இளைய ட்றூடோ ஆட்சியிலும் அவரது ஆலோசனை தொடர்ந்தும் இருந்துவந்தது. வளைகுடாப் போரின்போது coalition of the willing குடைக்குள் போக மறுத்த துணிச்சலான அரசியல் ஜாம்பவான். ட்றம்ப் போன்றோரைக் கையாள்வதற்கு கிரைத்தியேனின் ஆலோசனை அவசியமானது. இந்த அமைச்சரவைத் தெரிவில் அவரது கை இருந்திருக்குமெனவே எதிர்பார்க்கலாம். ஃபிறீலாண்டிற்கு போக்குவரத்து அமைச்சைக் கொடுத்து அவமானப்படுத்தியிருக்கிறார் கார்ணி / ட்றூடோ. இது இலங்கையில் மீன்பிடி அமைச்சுக்கு இணையான ஒரு அவமான அமைச்சு. பாவம் ஃபிறீலாண்ட், அடுத்த தடவை தெரிவானால் இன்னும் நான்கு வருடங்கள் கார்ணிக்குப் பின்னால் நின்று தலையாட்டிக்கொள்ள வேண்டும்.

மார்ச் 24 ஐப் போல் புதிய தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படலாம். 37 முதல் 51 நாட்களுக்குள் தேர்தல்கள் நடத்தப்படவேண்டும். அதுவரை கோமாளியின் சேட்டைகள் தொடர்ந்தால் கார்ணியின் கட்சி கரையேறும். அல்லது பொய்லியேவ் தனது புதிய வியூகத்தை அறிவிக்க வேண்டும். கோமாளியின் சேட்டைகள் தளர்ந்து போனால் உள்ளூர்ப் பிரச்சினைகள் தலை தூக்கும். கார்ணி சாமர்த்தியசாலியானால் கோமாளியை உசுப்பேத்திக் காரியங்களைச் சாதிக்கலாம். அல்லது றைட் லெஃப்டினண்ட் டக் ஃபோர்ட்டை முன்னரங்கத்திற்குத் தள்ள வேண்டும். இது வரை அவதானித்ததில் பொய்லியேவ்-ஃபோர்ட் கூட்டணி உருவாகுவதற்கான எந்தவித அசுமாத்தமுமில்லை. இந்த அணி கை கோர்க்குமானால் கார்ணிக்கு கொஞ்சம் கஷ்டம்.

கெரி ஆனந்த சங்கரிக்கு முக்கியமான நீதி அமைச்சுப் பதவி வழங்கப்பட்டிருப்பது பாராட்டப்படவேண்டியது. அது அவரது கடும் உழைப்பிற்கான வெகுமதி. தமிழ் மக்களிடையே இருக்கும் ஒற்றுமையின்மை உலகறிந்த விடயம். ஆனந்தசங்கரியைப் பற்றிப் பல குற்றம் குறைகள் பலதரப்புகளாலும் முன்வைக்கப்படுவது உண்மை. ஆனால் ஒரு உலகப் பார்வையில் அவருக்கு கனடிய அரசினால் வழங்கப்பட்ட கெளரவம் தமிழருக்கு வழங்கப்பட்ட கெளரவம் எனவே நான் பார்க்கிறேன். அந்த வகையில் அவர் பாராட்டுக்குரியவர். அனித்தா ஆனந்தும், சம தட்டில் வைத்துப் பார்க்கப்பட வேண்டிய இன்னுமொரு தமிழர். 1993 இல் ஒரே ஒரு சீக்கியர் பாராளுமன்றத்திற்குச் சென்றிருந்தார். 2015 இல் ட்றூடோவின் அரசில் 18 சீக்கிய உறுப்பினர்கள் இருந்தார்கள். நமது சட்டியிலிருந்து ஒரு நண்டாவது வெற்றிகரமாக வெளியே போய்விட்டது அதிசயம் தான். பார்ப்போம்.

இலங்கை அரசியல் விடயத்தில் அமைச்சர் ஆனந்தசங்கரி கொஞ்சம் அமத்தி வாசிக்கவேண்டி ஏற்படும். எதிர்க் கட்சியில் தெரிவாகப் போகும் தமிழர் இத்தடியை எடுத்துக்கொண்டு ஓடவேண்டி ஏற்படும். எப்படியானாலும் ஓடினால் போதும் என்று மகாஜனங்கள் பொறுமை காப்பர்.

வரப்போகும் தேர்தலின் முடிவுகள் எப்படியாகவும் இருக்கட்டும். கோமாளியின் குருட்டடிகளுக்கு உச்சக்கூடிய தலைமை கனடாவில் இருக்க வேண்டும்.

புதிய பிரதமருக்கும், அமைச்சர்களுக்கும் வாழ்த்துக்கள்! (Images & Video Courtesy: Gary Anandasangarie)

https://veedu.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-24-%e0%ae%86/?fbclid=IwY2xjawJDA2VleHRuA2FlbQIxMQABHZnO0A7X97X_tiYezuu5faIymY0aSYuRU6P6UR_0eFyu1EcWz5iV57FAjw_aem_B6gTIpjlWZI4KA8vqOLDeQ#google_vignette

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.