Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2025-03-23-at-1.41.21%E2%80%A

கனடிய தேர்தல்: கன்சர்வேட்டிவ் கட்சியின் திரிசங்கு நிலை

சிவதாசன்

இன்னும் 36 நாட்களில், ஏப்றில் 28 அன்று கனடிய பொதுத் தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கனடாவின் அதி குறைந்த ஆயுட்காலத்தைக்கொண்ட பிரதமர் என மார்க் கார்ணி வரலாற்றில் இடம்பெறுகிறார். அவரின் இன்றைய தேர்தல் அறிவிப்பை வானொலி மூலம் கேட்க முடிந்தது. அக்டோபர் 2025 மட்டும் அவகாசமிருக்க கார்ணி ஏந் இவ்வளவு அவசரமாகத் தேர்தலை அறிவித்தார் என ரொறோண்டோ ஸ்டார் ஊடகவியலாளர் ஒருவர் கேட்டார். பதில் மழுப்புதலாக இருந்தாலும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லியேவின் ‘கீறல் விழுந்த ரெக்கோர்ட்’ பதிலாக இருக்காதது வித்தியாசமாக இருந்தது.

கனடிய அரசியலில் மிகவும் அதிர்ஷ்டம் குறைந்தவர் என்றால் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லியேவ் தான். இரண்டு, மூன்று தடவைகளில் சந்தித்துப் பேசும் சதர்ப்பமும் கிடைத்தது. ‘அவ்வளவு பிழையான ஆளில்லை’ என்று ஊர் சொல்லக்கூடிய ஒருவர் தான். இருப்பினும் அதிர்ஷ்டம் அவர் பக்கம் இல்லை. அடுத்த 36 நாட்களுக்குள் கிரகங்கள் ஏதாவது சடுதியாக மாற்றப்பட்டாலே தவிர ராஜாவுக்குச் சாண்சே இல்லைப் போலிருக்கிறது.

ட்றம்ப் உளறத் தொடங்கியவுடனே டக் ஃபோர்ட் கொடுக்கைக் கட்டியதை பொய்லியேவ் ந்திருப்பாரோ அல்லது அவரது வாய்க்குப் பூட்டுப் போடப்பட்டதோ தெரியாது. அன்றே அவரிடமிருந்த ஒரேயொரு நட்பான கிரகமும் வீடு மாறிவிட்டது.

எல்லாம் இந்த கருத்துக் கணிப்பாளர்கள் செய்யும் வேலை. தெருவில் திரிந்த சாதாரண மனிதரைப் பாப்பாவில் ஏற்றிவிட்டு சனத்தை உசுப்பேத்திவிட அவரைச் சுற்றியிருந்த ஆலோசக சேனை அவரது கண்ணாடியைக் கழற்றிவிட்டு அப்பிளைக் கொடுத்து கடித்துக் கடித்து ஊடகருக்குப் பதில் சொல்ல வைக்க உசுப்பேத்தப்பட்ட மகாஜனங்கள் கைதட்டி ரசிக்க ஏறியவர் இறங்க மறுத்துவிட்டார் – அது ட்றம்ப் குளறும்வரை.

பப்பா மரத்திலிருந்து இறங்கியபோது கைதட்டிய மகாஜனங்களில் பலபேர் துண்டைக் காணோம் துணியைக் காணோஈம் என்று ஓடிப்போய் எதிரியின் கூடாரத்துக்குள் ஒளிந்துகொண்டனர். கருத்துக்கணிப்பாளர் பாவம். அவர்கள் தமக்குக் கிடைத்த கட்டளைகளை நிறைவேற்றத்தானே வேண்டும்.

Screenshot-2025-03-23-at-1.41.21%E2%80%A

கார்ணியின் வரவு தற்செயலானதல்ல. தேவை கருதி அவசரமாகக் களமிறக்கப்பட்ட ஒருவர் அவர். அவரது வரவால் சிறகொடிக்கப்பட்ட கிறிஸ்டினா ஃபிறீலாண்ட் ஒரு திருப்பலி. இதுவரை மேற்கு சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக இருந்து கோலோச்சிய அமெரிக்காவும் ஒரு நாள் தடம் புரளும் என்பதை ட்றம்ப் நிரூபித்த பிறகு, மேற்கு தனக்கான ஒரு புதிய தலைமையை உருவாக்கத் தீர்மானித்துவிட்டது. ஐரோப்பாவை மையமாகக் கொண்டிருக்கும் இப்புதிய தலைமையின் உருவாக்கத்தில் கனடாவுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. அந்த அவசிய பயணத்தை முன்னெடுக்கக்கூடிய தலைமை பொய்லியேவுக்கு இல்லை. அதற்குத் தேவையான ‘ஆங்கிலோ சக்ஸன்’ மரபணு அவரிடம் இருப்பத் போலத் தெரியவில்லை. அந்த establishment இனால் முன்தள்ளப்பட்ட மாமணியே கார்ணி.

கார்ணியின் முன்தள்ளலுக்குப் பின்னால் இருக்கும் establishment எனப்படும் இம்மர்ம விசையில் கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சி பங்காளியாய் இல்லைப் போலத் தெரிகிறது. இதற்குக் காரணம் பொய்லியேவா அல்லது கட்சி இயந்திரமோ தெரியவில்லை. ஐரோப்பா தலைமையில் ஆரம்பமாகும் இப்புதிய ஒழுங்கிற்கான பின்னரங்கச் சந்திப்புகளில் பொய்லியேவ் ஒதுக்கப்பட்டு டக் ஃபோர்ட்டுக்கு உயரிய இடம் கொடுக்கப்பட்டுள்ளமை தெரிகிறது. இதற்கு ட்றூடோவின் பங்களிப்பும் இருந்திருக்கலாம்.

மாகாண பொதுத் தேர்தலில் டக் ஃபோர்ட் அமோக வெற்றி பெற்றதும் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே அப்போதைய பிரதமர் ட்றூடோ தொலைபேசியில் அழைத்து டக் ஃபோர்ட்டிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். ஆனால் கன்சர்வேட்டிவ் கட்சியாகவிருந்தும் தன் சக கட்சித் தலைவருக்கு தொலைபேசி அழைப்பு எடுக்க பொய்லியேவுக்கு 18 நாட்கள் எடுத்திருக்கின்றது. ஃபோர்ட்டுக்கும் பொய்லியேவுக்குமிடையில் பனிப்போர் இருக்கிறதென்பது தெரிகிறது. ஆனால் அது எப்போ, எதற்காக அல்லது யாருக்காக ஆரம்பிக்கப்பட்டது என்பதற்கு விளக்கமில்லை.

டுத்தார். இருவருக்கும் அதிக நேரம் பேசத் தேவை இருக்காதவாறு உறவு புளித்துப் போயிருந்தது. ஆனாலும் டக் ஃபோர்ட் தனது பழிவாங்கலை வேறு வடிவங்களில் கச்சிதமாக முடித்துவிட்டார். தனது முடிசூடலுக்கு கிறிஸ்டியா ஃபிறீலாண்டுக்கு அழைப்பு விடுத்ததுடன் கார்ணியுடன் காலையுணவுக்கும் ஒழுங்குசெய்து விட்டார்.

ஃபோர்ட்டுக்கு சில வேளை தூரப்பார்வை அதிகமாக இருக்கலாம். வரப்போகும் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி படு தோல்வி கண்டால் அதன் தலைமை ஆசனத்தில் அடுத்த தலைவராகத் தான் அமர்ந்துகொள்ளலாம் என்ற எண்ணமும் பொய்லியேவை உதாசீனம் செய்யக் காரணமாக இருந்திருக்க வாய்ப்புண்டு.

ஃபோர்ட்டின் தேர்தல் வெற்றியை உடனடியாக வாழ்த்த விரும்பாத பொய்லியேவின் முடிவு சுயமானதா அல்லது தூண்டப்பட்டதா தெரியாது. ஆனால் கன்சர்வேட்டிவ் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலருக்கு இது அதிர்ச்சியானது என ரொறோண்டோ ஸ்டார் எழுதியிருக்கிறது.

தூரத்தில் வைத்திருப்பது கன்சர்வேட்டிவ் கட்சிக்குப் புதிய விடயமல்ல. 2019 இல் ஃபோர்ட்டின் செல்வாக்கு சரிந்தபோது அப்போதைய மத்திய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் அண்ட்றூ ஷியர் ஃபோர்ட்டை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்திருந்தார். 6 வருடங்களில் இந்த வன்மம் வளர்ந்திருக்க வாய்ப்புண்டு.

கனடாவின் 41 மில்லியன் சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு ஒன்ராறியோவில் இருக்கிறது. மொத்தம் 343 ஆசனங்களில் 122 ஆசனங்கள் ஒன்ராறியோவில் மாத்திரம் இருக்கின்றன. அப்படியிருந்தும் ஃபோர்ட்டைப் புறந்தள்ளும் யோசனை கன்சர்வேட்டிவ் கட்சிக்கு வருகிறதென்றால் சாணக்கியம் என்பது இவர்களுக்கு அன்னியமானதொன்று என்றுதான் பார்க்க வேண்டும். இப்படியான ஒரு கட்சியால் ட்றம்ப் போன்றவர்களை எப்படிச் சமாளிக்க முடியும்? என வாக்காள மகாஜனங்கள் யோசித்து, தீர ஆலோசித்து வாக்குகளை அளிக்க கார்ணி அதிக அவகாசம் கொடுக்காமல் அவசர தேர்தலுக்கு – ஒரு வகையில் preemptive- அறிவிப்பை விடுத்திருக்கிறார். ட்றம்பின் பலத்தை முன்வைத்து இத் தீர்மானம் எடுக்கப்பட்டதை விட பொய்லியேவின் பலவீனத்தை முன்வைத்து எடுக்கப்பட்டதாகவே பார்க்கப்படவேண்டியிருக்கிறது.

அடுத்த 36 நாட்களில் ட்றம்பின் சிறிய இரைச்சல்களையும் பெரிதாக amplify பண்ணுவதுதான் லிபரல் கட்சியின் strategy ஆகவிருக்குமென எதிர்பார்க்கலாம். நேரடடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக ஃபோர்ட் இதற்கு உதவி செய்வார். பொய்லியேவ் கட்சியில் ஊதுவதற்குப் புதிய விடயமுமில்லை. அதை முன்னெடுப்பதற்கான இரண்டாம் நிலை charismatic தலைவருமில்லை.

லிபரல் கட்சியை அதிகமாக இடதுபக்கம் தள்ளிச்சென்ற ட்றூடோ கட்சியில் விட்டுச் சென்ற சிவப்புச் சாயத்தைக் கழுவி கொஞ்சமேனும் வலது பக்கம் நோக்கித் தள்ளும் முயற்சியை கார்ணி ஏற்கெனவே வெளிக்காட்டிவிட்டார். அதற்கு மாறாக வலது பக்கமிருந்த கன்சர்வேட்டிவ் கட்சியைக் கொஞ்சம் இடதுபக்கம் நகர்த்த பொய்லியேவ் முயற்சிப்பதும் தெரிகிறது. திடீரென அவர் தொழிலாளர்களைப் பின்வரிசையில் நிறுத்தி அவர்களின் தோழராகப் படம் காட்டுவது அப்பட்டமாகத் தெரிகிறது. அந்தளவிற்கு கட்சியில் மூளை வறுமை இருக்கிறது. பாவம் பொய்லியேவ். நல்ல மனிசன். சுற்றம் சரியில்லை.

veedu.com
No image preview

கனடிய தேர்தல்: கன்சர்வேட்டிவ் கட்சியின் திரிசங்கு நிலை -...

சிவதாசன் இன்னும் 36 நாட்களில், ஏப்றில் 28 அன்று கனடிய பொதுத் தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கனடாவின் அதி குறைந்த ஆயுட்காலத்தைக்கொண்ட பிரதமர் என

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.