Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

breaking-news-news.gif

thumb_large_earth.jpg

யாழ்ப்பாணத்தில் நில நடுக்கம். வீரசிங்கம் மண்டபம் இடிந்து விழுந்தது.

இன்று காலை 8:47 மணியளவில் யாழ்ப்பாணத்தில் 6.8 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டிடங்கள், வீடுகள் அதிர்வதை உணர்ந்த மக்கள் உடனடியாக என்ன நடக்கின்றது என்று புரியாமல், அலறிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்த போது... வீட்டின் ஓடுகள் சர சர என விழுந்து பலருக்கு மண்டை உடைந்தது. அவர்கள் உடனடியாக சமூக ஆர்வலர்கள் மூலம் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப் பட்டார்கள்.

இதில் வீரசிங்கம் மண்டபம் பெரும் அதிர்வுடன் இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் பலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப் படுகின்றது. யாழ் மாநகர ஆளுநர் உடனடி உதவி தேவை என்று கொழும்பிற்கு செய்தி அனுப்பியுள்ளார். தற்போது இராணுவத்தினர் களத்தில் நின்று கட்டிட இடிபாடுகளை மந்த கதியில் அகற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனாலும்... அவர்களின் வேகம் போதாது என்றபடியால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப் படுகின்றது.

images?q=tbn:ANd9GcQnPe3U__A5S2iA0W_l0Uy

பலாலி விமான ஓடுபாதையில்.... விரிசல்கள் ஏற்பட்டதால் அங்கு விமானங்கள் தரை இறங்க முடியாமல், திருச்சியில் இருந்து புறப்பட்டு வந்த விமானம் கொழும்பிற்கும், சென்னையிலிருந்து வந்த விமானம் சிங்கப்பூருக்கும் திருப்பி அனுப்பப் பட்டது.

இந்தியாவால் யாழ். மக்களுக்கு அன்பளிப்பு செய்யப் பட்ட 15 மாடி உயரம் கொண்ட, யாழ்ப்பாண கலாச்சார மண்டபம் பல விரிசல்களுடன் எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அருகில் எவரும் செல்ல வேண்டாம் என பொலிசார் அறிவுறுத்தி உள்ளார்கள்.

பூட்டி இருக்கும் கடைகளிலும், மக்கள் இல்லாத வீடுகளிலும்... சமூக விரோதிகளும், திருடர்களும் புகுந்து விலை உயர்ந்த பொருட்களை திருடிக் கொண்டு செல்வதைக் கண்டு மக்கள் கொந்தளித்த போது... முதுகில் செருகி இருந்த வாளை உருவி பயமுறுத்தியதால் மக்கள் வேதனையுடன் நமக்கு ஏன் வம்பு என்று மௌனமாகி விட்டார்கள்.

கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்பதற்காக இந்தியாவிலிருந்து மோப்ப நாய்களுடன் ரிசேர்வ் இராணுவம் வந்து கொண்டு இருப்பதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.

புலம்பெயர் மக்களிடம் "யூ ரியூப்" இணையம் நடத்துபவர்கள்... வீடுகளை இழந்த மக்களுக்கு உடனடி உதவி செய்யும்படி வேண்டுகோள் விடுத்து தமது வங்கி கணக்கு இலக்கத்தை பகிர்ந்து உள்ளார்கள்.

http www. Lusan .com.த

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு உறுதிப்படுதப்படாத சிறியண்ணயின் வருடாந்த முட்டாள்கள் தின செய்தியாகும் மக்களே....😊

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.