Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

02 APR, 2025 | 12:55 PM

image

சென்னை: கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்துள்ளார்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கச்சத்தீவு மீட்பு தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதை கனத்த இதயத்தோடு இந்த மாமன்றத்தில் நான் பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர் பேரழிவாக இது அமைந்திருக்கிறது. அங்கு எத்தனை அரசியல் நிலைமைகள் மாறினாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது மட்டும் இன்னும் மாறாமல் இருக்கிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய மீனவர்கள்தான் என்பதை ஒன்றிய அரசு அடிக்கடி மறந்துவிடுகிற காரணத்தால் நாம் மீண்டும் மீண்டும் அவர்களை தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் என்று அழுத்தமாகச் சொல்ல வேண்டியதாக இருக்கிறது.

ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் ஒரு மீனவர்கூட கைது செய்யப்படமாட்டார் என்று 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நரேந்திர மோடி சொன்னார்கள். ஆனாலும் இந்தத் தாக்குதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 

இலங்கையில் சில மாதங்களுக்கு முன்னால் ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது. ஏற்கெனவே இருந்தவர்கள் தோல்வியடைந்து புதியவர்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். ஆனாலும் தமிழ்நாட்டு மீனவர்கள் நிலைமை மாறவில்லை; மீனவர்கள் மீதான தாக்குதல் ஓயவில்லை. பாரம்பரிய மீன்பிடி உரிமை கொண்ட நம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது தொடர்ந்து சிறைபிடிக்கப்படுகிறார்கள்; படகுகள் இலங்கை அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

மார்ச் 27 அன்றுஇ நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் 97 இந்திய மீனவர்கள் இலங்கைச் சிறையில் இருக்கிறார்கள் என்று ஒரு புள்ளிவிவரத்தைக் கொடுத்திருக்கிறார்கள். அதில் 11 பேரை கடந்த 27 ஆம் தேதி இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது.

கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் 530 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அமைச்சர் சொன்ன கணக்குப்படி பார்த்தால் ஒரு நாளைக்கு இரண்டு மீனவர்களை கைது செய்துள்ளார்கள். எல்லைதாண்டி வந்தார்கள் என்று சொல்லி அவர்களுக்கு அதிகபட்ச சிறை தண்டனை விதிக்கப்படுகிறது அல்லது அதிகபட்ச அபராதம் விதிக்கப்படுகிறது. 

அண்டை நாடாக இருந்து கொண்டு இந்திய மீனவர்கள் மீது எந்தவிதமான இரக்கமும் இல்லாமல் நம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் விதமாக ஏன் அடியோடு பறிக்கும் விதமாக இலங்கைக் கடற்படையினரும் இலங்கை அரசும் நடந்து கொள்வது நமக்கெல்லாம் மிகுந்த கவலையளிக்கிறது; கண்டிக்கத்தக்கது. இதனை ஒன்றிய பா.ஜ.க. அரசு தடுத்து நிறுத்திட வேண்டும்.

இந்தப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது சவாலாக இருக்கிறது என்று ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் சொல்லி இருக்கிறார்கள். இதில் என்ன சவால் இருக்க முடியும் என்று தெரியவில்லை. வேறொரு மாநில மீனவர்கள் இப்படி தொடர் தாக்குதலுக்கு உள்ளானால் இப்படித்தான் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பார்களா? 

தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசின் சார்பில் நான் தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டு வருகிறேன். இதுவரைக்கும் மீனவர்கள் கைது தாக்குதல் குறித்து 74 கடிதங்களை ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் பிரதமர் அவர்களுக்கும் எழுதியிருக்கிறேன். பிரதமர் அவர்களை நேரில் சந்திக்கும் போதெல்லாம் இது குறித்து வலியுறுத்தியிருக்கிறேன்.

இரு நாட்டு மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் ஆக்கபூர்வமான முடிவுகள் எட்டப்பட இயலாமல் கடந்து கொண்டிருக்கிறது. கடிதம் எழுதினால் விடுவிப்பது பிறகு கைது செய்வதென்று இலங்கை அரசின் நடவடிக்கை தொடர்ந்து கொண்டே இருப்பதால் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. 

மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டு பாரம்பரிய மீன்பிடி உரிமை கேள்விக்குறியாகி கடலுக்குச் சென்றால் பத்திரமாக வீடு திரும்புவார்களா நம் சொந்தங்கள் என்று குடும்பத்தினர் மீளாக் கவலையில் மூழ்கியிருக்க வேண்டிய துயர நிலை ஏற்பட்டிருக்கிறது. எவ்வளவு காலத்துக்கு இதனைச் சகித்துக் கொண்டு இருக்க முடியும்? இதுபோன்ற சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவு மீட்பே மிகச் சரியான வழி என்பதை இம்மாமன்றத்தின் வாயிலாக மீண்டும் வலியுறுத்திட விரும்புகிறேன்.

கச்சத்தீவு விவகாரத்தைப் பொறுத்தவரைக்கும் கச்சத்தீவை மாநில அரசுதான் இலங்கைக்கு அளித்தது போன்று ஒரு தவறான தகவலைப் பரப்பி அரசியல் செய்வது அரசியல் கட்சிகளுக்கு வழக்கமாகி விட்டது. ஆனால் அரசியல் ஆதாயத்திற்காக கட்சிகள் செய்யும் அதே தவறை ஒன்றிய அரசு செய்வது வருந்தத்தக்கது; ஏற்கமுடியாதது. கச்சத்தீவைப் பொறுத்தவரைக்கும் அந்தத் தீவைக் கொடுத்து ஒப்பந்தம் போட்ட போதே முதல்வராக இருந்த கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். தமிழ்நாட்டு மக்கள் அதை விரும்ப மாட்டார்கள் என்று எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்படக் கூடாது என்று அழுத்தந்திருத்தமாக வாதிட்டு இருக்கிறார். அன்றைக்கிருந்த தி.மு.க. எம்.பி.-க்கள் இரா செழியன் எஸ்.எஸ்.மாரிச்சாமி ஆகியோர் நாடாளுமன்றத்திலே கடுமையாக எதிர்த்து இருக்கிறார்கள். அதையும் மீறி கச்சத்தீவு ஒப்பந்தம் 28.6.1974 அன்று கையெழுத்து ஆனவுடன் மறுநாளே அதாவது 29.6.1974 அன்றே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் கூட்டி இதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி அன்றையதினமே பிரதமருக்கும் கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதத்தில் - தமிழ்நாடு அரசின் தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பை பிரதமருக்குத் தெரிவித்துள்ளதை இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அப்போதே 21.8.1974 அன்று “இந்தியாவுக்கு சொந்தமானதும் தமிழ்நாட்டுக்கு நெருங்கிய உரிமைகள் கொண்டதுமான கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு பற்றி இந்தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

மத்திய அரசு இதனை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவின் மீது இந்தியாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கை அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தியமைக்க முயற்சி எடுத்து தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது” என அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றியவர் முதல்வராக இருந்த கருணாநிதி.

கச்சதீவை மீட்கவும் கச்சத்தீவில் இருக்கிற இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டவும் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை திராவிட முன்னேற்றக் கழக அரசு எடுத்து வந்திருக்கிறது. கழக அரசு ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் பிரதமருக்கும் கடிதங்கள் எழுதி தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்க வலியுறுத்தி வந்திருக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

ஏற்கனவே ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 3.10.1991 மற்றும் 3.5.2013 ஆகிய தேதிகளிலும் அதேபோன்று இங்கே அமர்ந்திருக்கக்கூடிய ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது 5.12.2014 அன்றும் கச்சத்தீவைத் திரும்பப் பெற இந்த அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசு வலியுறுத்தப்பட்டுள்ளது. நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு பிரதமர் அவர்கள் முதன்முதலில் தமிழ்நாட்டிற்கு வந்தபொழுது கச்சத்தீவைத் திரும்பப் பெற அவரிடம் வலியுறுத்திக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறேன்.

பிறகு 19.7.2023 அன்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் “வரலாற்று ரீதியாக கச்சத்தீவு இந்தியாவின் ஓர் அங்கமாக இருந்திருக்கிறது. தமிழ்நாடு மீனவர்கள் பாரம்பரியமாக கச்சத்தீவைச் சுற்றி மீன்பிடித்துள்ளார்கள். மாநில அரசின் ஒப்புதலின்றி கச்சத்தீவு இலங்கைக்கு மாற்றப்பட்டதால் தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைகளும் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.” என்பதை மேற்கோள்காட்டி “கச்சத்தீவைத் திரும்பப் பெற வேண்டும். அதுவே தமிழ்நாட்டு மீனவர்களுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்” என்று வலியுறுத்தி “அதுவரை தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்டுக் கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்டேன்.

ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களுக்கும் எனது 2.7.2024 தேதியிட்ட கடிதம் மூலம் கச்சத்தீவு பிரச்சினையையும் தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி உரிமையையும் வலியுறுத்தியிருக்கிறேன். ஆனால் இன்றுவரை மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கக்கூடிய பா.ஜ.க. அரசு கச்சத்தீவை மீட்பது குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதை நான் வேதனையுடன் இங்கே குறிப்பிடுகிறேன்.

ஆகவே இந்தச் சூழலில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் போது இலங்கைக் கடற்படையினரால் கடும் தாக்குதலுக்கு உள்ளாவது படகுகள் பறிமுதல் செய்யப்படுவது கடும் அபராதம் விதிக்கப்படுவது போன்றவற்றிலிருந்து தமிழ்நாட்டு மீனவர்களைப் பாதுகாக்கவும் விரைவில் இலங்கை செல்லும் பிரதமர் அவர்கள் தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும் கச்சத்தீவை மீட்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைக்கு பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றம் விரும்புகிறது. இதனை அடிப்படையாகக் கொண்ட தீர்மானத்தை இப்போது நான் முன்மொழிகிறேன்:

தீர்மானம்: “தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும் இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களைப் போக்கிடவும் கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தரத் தீர்வாக அமையும்.

இதனைக் கருத்தில் கொண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்றும் அரசுமுறைப் பயணமாக இலங்கை செல்லும்  இந்திய பிரதமர் அவர்கள் அந்நாட்டு அரசுடன் பேசி இலங்கை சிறையில் வாடும் நம் நாட்டு மீனவர்களையும் அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டுக் கொண்டு வரவேண்டுமென்று இப்பேரவை வலியுறுத்துகிறது.” என்ற தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.

தமிழ்நாட்டைச் சார்ந்த இந்திய மீனவர்களின் நலன் கருதி அனைத்துக் கட்சிகளும் இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுகிறேன்.

https://www.virakesari.lk/article/210914

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டைச் சார்ந்த இந்திய மீனவர்களின் நலன் கருதி

துட்டு முக்கியம்....☹️

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-33.jpg?resize=750%2C375&ssl=

கச்சத்தீவு மீட்பு; சட்டமன்றத்தில் ஸ்டாலின் முக்கிய தீர்மானம்!

கச்சத்தீவை மீட்பது தொடர்பாக தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை முன் வைத்துள்ளார்.

தீர்மானத்தின்படி, “கச்சத்தீவை மீட்பது மட்டுமே தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடித்தலைப் பாதுகாப்பதற்கான ஒரே நிரந்தர தீர்வு” என்று கூறப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்களைத் தணிக்க, கச்சத்தீவைப் பெறுவது மட்டுமே நிரந்தரத் தீர்வு என்று தீர்மானம் கூறுகிறது.

“மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை உடனடியாக மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மத்திய அரசை இந்த மாண்புமிகு அவை ஒருமனதாக வலியுறுத்துகிறது” என்று தீர்மானத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம், “சிறையில் அடைக்கப்பட்டுள்ள நமது மீனவர்கள் அனைவரையும் அவர்களது படகுகளுடன் நல்லெண்ண அடிப்படையில் இலங்கைக்கு தனது அதிகாரப்பூர்வ பயணத்தின் போது விடுவிக்க” இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் நரேந்திர மோடியை இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது.

அண்மைய மாதங்களில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.

கடந்த பெப்ரவரியில் 32 சக ஊழியர்கள் கைது செய்யப்பட்டதையும், ஐந்து படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதையும் தொடர்ந்து, காலவரையற்ற வேலைநிறுத்தத்தை ராமேஸ்வரத்தில் மீனவர்கள் தொடங்கினர்.

இலங்கையின் வடக்கு மன்னார் பகுதிக்கு அருகில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இந்தக் கைதுகள் நடந்தன.

இது கடலோர சமூகத்தினரிடையே பரவலான போராட்டங்களைத் தூண்டியது.

1711954213-3109.jpg?ssl=1

இதேவேளை, இலங்கையின் காவலில் தற்போது மொத்தம் 97 இந்திய மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 83 பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர், மூன்று பேர் விசாரணைக்காக காத்திருக்கிறார்கள், மேலும் 11 பேர் மார்ச் 27 அன்று கைது செய்யப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மாநிலங்களவையில் அண்மையில் தெரிவித்திருந்தார்.

அத்துடன், 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட முடிவுகள்தான் இன்று நாடு எதிர்கொள்ளும் இந்த நிலைமைக்கு மூல காரணம்.

1974 ஆம் ஆண்டு அப்போதைய மத்திய அரசு மாநில அரசுடன் கலந்தாலோசித்து சர்வதேச கடல் எல்லையை வரைந்தபோது இந்தப் பிரச்சினை தொடங்கியது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

Athavan News
No image preview

கச்சத்தீவு மீட்பு; சட்டமன்றத்தில் ஸ்டாலின் முக்கிய தீர்மா...

கச்சத்தீவை மீட்பது தொடர்பாக தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை முன் வைத்துள்ளார். தீர்மானத்தின்படி, "கச்சத்தீவை மீட்பது மட்டுமே தமிழக மீனவர்களின் பாரம்பரிய ம...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.