Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

05 APR, 2025 | 05:28 PM

image

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பல்வேறு துறைகளில் கைச்சாத்திடப்பட்ட 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பரிமாற்றம் இன்று சனிக்கிழமை (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்றது.

இந்திய - இலங்கை உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில் வலுசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு, சுகாதாரம் ஆகிய துறைகள் மற்றும் நன்கொடை உதவிகள் தொடர்பில் இந்த  புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றப்பட்டன. 

அதன்படி,

01- மின்சார இறக்குமதி/ஏற்றுமதிக்கான உயர் மின்னழுத்த நேரடி மின்னோட்ட (HDVC) இடை இணைப்பை செயல்படுத்துவதற்கான இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால  மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோரால் பரிமாறிக் கொள்ளப்பட்டது.  

02- டிஜிட்டல் பரிமாற்றத்திற்காக மக்கள் மட்டத்தில் செயல்படுத்தப்படும் வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர்  வருண ஸ்ரீ தனபால மற்றும் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோரால் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

03- திருகோணமலையை வலுசக்தி மையமாக மேம்படுத்துவதில் ஒத்துழைப்புக்காக இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால,  இந்தியவெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத் தூதுவர் காலித் நசார் அலமேரி ஆகியோர் இந்தப் பரிமாற்றத்தை மேற்கொண்டனர்.

04- - பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ்.  சம்பத் துய்யகொந்த மற்றும் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோரால் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

05- இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சிற்கும் இலங்கை சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சிற்கும் இடையிலான சுகாதாரம் மற்றும் மருந்துத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர்  சந்தோஷ் ஜா ஆகியோரால் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

06- மருந்து விதிமுறைகள் ஒத்துழைப்புக்காக இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சின் மருந்து விதிமுறைகள் ஆணைக்குழுவிற்கும் இலங்கையின் தேசிய ஔடதங்கள்  ஒழுங்குபடுத்தும் அதிகார சபைக்கும் இடையிலான  புரிந்துணர்வு ஒப்பந்தம், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர்  சந்தோஷ் ஜா ஆகியோரால் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

07- கிழக்கு மாகாணத்தில் பல்துறை நன்கொடை உதவிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்  மஹிந்த சிறிவர்தன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரால் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான  "நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு" (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற கருத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி  அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்   உள்ளிட்ட இந்தியக் தூதுக்குழு  இந்த நிகழ்வில்  கலந்து கொண்டனர்.

WhatsApp_Image_2025-04-05_at_16.55.30.jp

WhatsApp_Image_2025-04-05_at_16.55.29.jp

WhatsApp_Image_2025-04-05_at_16.55.28.jp

WhatsApp_Image_2025-04-05_at_16.55.27__1

WhatsApp_Image_2025-04-05_at_16.55.27.jp

https://www.virakesari.lk/article/211247

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் நிலப்பரப்பும், கடற்பரப்பும் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படாது என உத்தரவாதமுள்ளதாக வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவிப்பு

Published By: VISHNU 06 APR, 2025 | 04:38 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கையின் நிலப்பரப்பை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்க போவதில்லை என்ற உத்திரவாதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கியுள்ள விடயம் இருநாட்டு தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடலின் போது முக்கியத்துவம் பெற்றிருந்தது. இலங்கையின் நிலப்பரப்பு மாத்திரமல்ல கடல் பரப்பையும் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது என்ற அடிப்படையில் இருதரப்பு பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தாக இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஊடாக இருநாட்டு படைகளும் விஸ்தரிக்கப்பட்ட கூட்டுப் பயிற்சிகள், செயலமர்வுகள், தொழில்நுட்பம் மற்றும் தகவல் பரிமாற்றம் என பரந்துப்பட்ட விடயங்களுடன் கூட்டு நடவடிக்கைளில் திறன்பட செயற்படவும் வலுவாக கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடிகிறது. இருநாட்டு தலைவர்களின் பரஸ்பர பாதுகாப்பு கரிசனைகளின் அடிப்படையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின்  இலங்கை விஜயம் குறித்து சனிக்கிழமை (5) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே  இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி மேற்கண்டவாறு கூறினார்.

 அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைய இந்திய விஜயத்தின்போது பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து இணக்கம் காணப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் ஊடாக இருநாட்டு படைகளும் விஸ்தரிக்கப்பட்ட கூட்டுப் பயிற்சிகள், செயலமர்வுகள், தொழில்நுட்பம் மற்றும் தகவல் பரிமாற்றமென பரந்துப்பட்ட விடயங்களுடன் கூட்டு நடவடிக்கைளில் திறன்பட செயல்பட முடிகிறது. எனவே இருநாட்டு தலைவர்களின் பாதுகாப்பு கரிசனைகளின் அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இலங்கையின் நிலப்பரப்பை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்க போவதில்லை என்ற உத்திரவாதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கியுள்ளார். இருதலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடலின் போது இந்த விடயம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இலங்கையின் நிலப்பரப்பு மாத்திரம் அல்ல கடல் பரப்பையும் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த இடமளிக்கப்படமாது என்ற அடிப்படையில் இருதரப்பு பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தன.

இவ்வாறான விடயங்களை உள்ளடக்கியதாகவே கூட்டு இணக்கப்பாடுகளுடன் ஒரு குடைக்கு கீழான பாதுகாப்பு ஒப்பந்த வரைபு முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஒரு நிலையானதும் ஸ்தீரமானதுமான புரிந்துணர்வு ஒப்பந்தமாகவே இது உள்ளது.  இருநாட்டு தலைவர்களின் பரஸ்பர விஜயங்கள் மூலம் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளின் பாதுகாப்பு படைகளின் செயற்திறன் மேம்படுத்தல் மற்றும் கூட்டு பயிற்சி நடவடிக்கள், பரிமாற்றங்கள் என்று இருதரப்ப பாதுகாப்பு ஒத்துழைப்புகள் புதிய வடிவில் வலுசேர்க்கப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்புகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மீனவர் பிரச்சினை

இருநாட்டு மீனவர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தைகள்  நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு ஏற்படுத்தும் நோக்கில் இலங்கை - இந்திய தலைவர்கள் முன்னுரிமையுடன் செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும் மீனவர்களின் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் கையாளவும் தீர்வு காணவும் வேண்டும் என்ற விடயத்தை பிரதமர் நரேந்திர மோடி இலங்கை தரிப்பிடம் வலியுறுத்தியிருந்தார். இருநாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதித்து விடாமல் தீர்வை நோக்கி நகர வேண்டும் என்பது நிலைப்பாடாக உள்ளது. இருப்பினும் மீனவர் பிரச்சினையில் அண்மைய நடவடிக்கைகள் கவனத்தில்  கொள்ளப்பட வேண்டும்.

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று மீனவர்களை இலங்கை விடுவித்திருந்தது. எனவே சிறந்த ஒத்துழைப்புகளுடன் இருதரப்பினராலும் மீனவர் பிரச்சினை கையாளப்படுகின்றது. கடந்த வருடம் ஓக்டோபர் மாதம் ஆகுகையில் 6 சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன. ஏற்படக்கூடிய நெருக்கடியான நிலைமைகளை தவிர்த்து மீனவர் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வை காண தொடர்ந்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது என்றார். 

https://www.virakesari.lk/article/211264

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.