Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான் மீது மேலும் பல குற்றச்சாட்டுகள் – மேலும் இருவா் கைது

adminApril 22, 2025

Pillaian-cid.jpeg?fit=1170%2C658&ssl=1

தற்போது கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் தொடா்பில்  வைக்கப்பட்டுள்ள  மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கடத்தல் தொடர்பில் மட்டும்  பிள்ளையானுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும்  தற்போது அவர் மீதான மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பான சாட்சியங்கள் கிடைத்து வருகின்ற நிலையில் அது குறித்தும் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது எனத் தொிவித்துள்ளாா். .

பிள்ளையானிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் ஊடாக  பல சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாவதுடன், அவற்றில் சில சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாகும் எனத் தொிவித்த அவா்  சில குற்றச்சாட்டுகள் உயர்நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட வழக்குகளுடன் தொடர்புடையவையாகும் எனவும்  அவை தொடர்பில் விசாரிக்கப்படுவதுடன் அது தொடா்பில்  மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளாா் .

சில கொலை வழக்குகளில் அவர்கள் எந்தவிதத்தில் தொடர்பை கொண்டிருந்தார்கள் என காவல்துறை விசாரித்து வருகிறது எனவும்   உயிா்த்த ஞாயிறு  தாக்குதலுக்கு அப்பாலான திகதிகளில் இடம்பெற்ற பல கொலைகள் மற்றும் கப்பம் கோரல்கள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அவா் தொிவித்துள்ளாா். .

சிறையிலிருந்த   பிள்ளையான் இதில் தொடர்புபடவில்லை என மறுக்க முடியாது எனவும்  கடந்த காலங்களில் பலர் சிறையிலிருந்து குற்றங்களை வழிநடத்திய வரலாறுகள் உள்ளன எனவும் சுட்டிக்காட்டிய  அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ  , பிள்ளையான் இதன் பின்னணியில் உள்ளாரா? என்பது குறித்து விசாரணைகளில் தெரியவரும் எனவும்   தெரிவித்துள்ளார்

https://globaltamilnews.net/2025/214589/

  • Replies 59
  • Views 3.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • nunavilan
    nunavilan

    இனமொன்றின் குரல் 8h  · பிள்ளையான் கைது செய்து தண்டிக்கப்பட வேண்டிய மிக மோசமான கிரிமினல் குற்றவாளி என்பதில் யாருக்கும் மாற்று கருத்திருக்க முடியாது ஆனால் பிள்ளையான் தென்னிலங்கை பயன்படுத்திய வெறும் கர

  • விசுகு
    விசுகு

    உள் நோக்கத்தை கேள்வி கேட்கக் கூடாது... பகடைக் காய்களின் கதி இறுதியில் இது தான். இனத்தையும் விற்று தம்மையும் இழந்து......?

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    நம்மை போட்டுக் கொடுத்துடாதே என்று கெளரவமாக போய் சொல்ல வேண்டாமோ?

  • கருத்துக்கள உறவுகள்

பல படுகொலைகளை அரங்கேற்றிய பிள்ளையானின் விசுவாசி

Vhg ஏப்ரல் 22, 2025

1000488755.jpg

கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் பிள்ளையான் கைது செய்யப்பட்டு விளக்கம்றியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில்  நாட்டில் ஒளிந்திருக்கும் பிள்ளையானின் முக்கிய TMVP உறுப்பினர் அஜித் என்று சொல்லப்படுகின்ற குறித்த நபர் வாழைச்சேனை பிரதேசத்தில் நடந்த படு கொலைகள் அனைத்துக்கும் காரணமாக இருந்தவர் என கூறப்படுகின்றது.

அதோடு இவர் பிள்ளையானின் நெருங்கிய விசுவாசமாக செயல்பட்ட இவர் வாழைச்சேனை மக்களுக்கும் நன்கு அறிந்த ஒருவர் என்றும், இன்னும் பலர் இருக்கின்றார்கள் என்றும் மட்டக்களப்பு சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பல பொது மக்கள் படு கொலை

தீவுச்சேனை பகுதியில் அமைந்திருந்த பிள்ளையான் குழுவின் முகாம்களில் கடந்த காலத்தில் பல பொது மக்கள் படு கொலை செய்யப்பட்டு மறைமுகமாக புதைக்கப்பட்டு மனித உடல்கள் மறைக்கப்பட்டிருக்கின்றது.

இது தொடர்பாக சரியான விசாரனை நடத்தப்பட வேண்டும் என்றும், அப்போதுதான் பல உண்மைகள் கண்டறியப்படும் எனவும் சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

இவரரை போன்றி பலர் , பிள்ளையானுக்கு உறுதுணையாக இருந்த பலர் இன்னும் சமூகத்தில் நடமாடுவதாகவும் அவர்களையும் கைதுசெய்து தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்தவேண்டும் எனவும் மட்டக்களப்பு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.     

அதேவேளை  இலங்கையின் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் பிள்ளையான் கைதானமை குறிப்பிடதக்கது.

https://www.battinatham.com/2025/04/blog-post_413.html

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான் செய்த தவறு ஒன்றுமட்டுல்ல!

http://seithy.com/siteadmin/upload/nalinda-250225-seithy.jpg

கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியரை காணாமலாக்கியது மாத்திரமே பிள்ளையான் செய்த ஒரே தவறு என்று தீர்மானம் எடுத்துவிட வேண்டாம். அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. தடுப்புக்காவலில் வைத்து அவரிடம் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

  

மேலும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குறித்து எதிர்க்கட்சியினர் வீண் அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

‘‘உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவம் மீதான விசாரணைகள் தொடர்பில் எதிர்த்தரப்பிலுள்ளவர்கள் ஏன் இந்தளவு தூரம் அச்சம் கொள்கிறார்கள் என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களமே விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. விசாரணைகளின் அடிப்படையில் சிலர் கைதுசெய்யப்பட்டுமுள்ளனர். சிலரிடம் சாட்சிகளும் பெற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பில் எதிர்த்தரப்பினர் அச்சம் கொள்ள வேண்டியதில்லை.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் உதய கம்மன்பில, நாமல் ராஜபக்ஷ போன்றோர் பதற்றத்தில் வெவ்வேறு கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார்கள். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று ஆறு வருடங்கள் கடந்திருந்தாலும் ஐந்தரை வருடங்கள் வரை விசாரணைகளை மூடிமறைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே நாங்கள் தற்போது விசாரணைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளோம்.

இந்த ஆறு வருடங்களில் முறையான விசாரணைகளை முன்னெடுத்திருந்தால் தற்போது இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகள் உள்ளிட்ட பின்னணியிலுள்ள சகலத் தரப்பினரையும் நாட்டுக்கு வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கும். ஆனால் கடந்த ஐந்தரை வருடங்களிலும் விசாரணைகளை மூடிமறைப்பதற்காக அமைச்சரவையினூடாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஒருசில அறிக்கைகளின் பரிந்துரைகளை நடைமுறைபடுத்தாமலிருப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானமும் எடுக்கப்பட்டிருந்தது. விசாரணை அதிகாரிகள் இடமாற்றம் செய்திருந்தார்கள். ஒரு சிலர் இந்த நாட்டில் இருக்க முடியாத நிலையை உருவாக்கியிருந்தார்கள். சாட்சிகளை மூடிமறைத்தார்கள். இந்தக் பின்னணியில் கடந்த ஆறு மாதங்களே விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த விசாரணைகளின்போது ஏற்கனவே மூடிமறைக்கப்பட்ட கண்டுகொள்ளப்படாத விடயங்கள் வெளிப்பட்டுவரும் நிலையில் இவர்கள் அச்சம் கொள்வது மக்களுக்கு புரியுமென்று நம்புகிறோம். எனவே, விசாரணைகள் தொடர்பில் மக்கள் வீண் அச்சமடைய வேண்டிய அவசியமில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பில் புதிதாக சிலர் கைதுசெய்யப்பட்டு அவர்களிடம் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் அடிப்படையில் மேலும் சிலருக்கு அழைப்பாணை விடுக்கப்படலாம். குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இம்முறை முறையாக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறார்கள் என்பது எதிர்த்தரப்பினரின் வீண் அச்சத்திலிருந்தே தெரிகிறது.

கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரை காணாமலாக்கிய சம்பவம் தொடர்பில் மாத்திரமே பிள்ளையான் கைதுசெய்யப்படாத நீங்கள் அறிந்து வைத்திருந்தாலும், அவருக்கு எதிராக மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பல்வேறு சாட்சிகளும் கிடைத்து வருகின்றன. விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன. அந்த விசாரணைகளின் முன்னேற்றங்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படும். எனவே, பேராசிரியரை காணாமலாக்கியது மாத்திரமே பிள்ளையான் செய்த ஒரே தவறு என்று தீர்மானம் எடுத்துவிட வேண்டாம்.

அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. தடுப்புக்காவலில் வைத்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவற்றில் ஒருசில சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாகும். ஒருசில குற்றச்சாட்டுகள் மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வழக்குகளுடன் தொடர்புடையவையாகும். விசாரணைகளுக்கமைய இருவர் கைதுசெய்யப்பட்டும் இருக்கிறார்கள்.

எனவே, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை கோரிவந்த பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட தரப்பினரும் திருப்தியடையக்கூடியவகையில் விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விசாரணைகள் முறையாக இடம்பெறுகின்றன என்பதை திட்டவட்டமாக கூறமுடியும். உரிய நேரத்தில் பிரதான சூத்திரதாரிகளை வெளிப்படுத்துவோம். உதயகம்மன்பில போன்றவர்கள் அச்சம் கொள்கிறார்கள் என்பதற்காக அரசாங்கம் பதற்றமடையாது.

உதய கம்மன்பில பிள்ளை யானை சந்தித்துவிட்டு வெளியிட்ட கருத்தினூடாக எவ்வாறான தகவலை வழங்கினார் என்பது சமூக புரிந்துணர்வுள்ள சகலருக்கும் தெரியும்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் எதனையும் கூறவில்லை என்றே கம்மன்பில கூறியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்படுகிறார்கள் என்றால், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் எதனையும் குறிப்பிடவில்லை என்று கூறுகிறார். கம்மன்பிலவின் அந்த தகவலிலுள்ள ஆழம் என்னவென்பதை குற்றப்புலனாய்வு விசாரணைகள் தொடர்பில் ஓரளவு ஞானம் இருப்பவர்களுக்கு புரியும்.

அது எங்களுக்கு அவசியமில்லை. இன்னும் சிறிது காலம் செல்லும்போது விசாரணைகளின் அடிப்படையில் இந்தச் சம்பவத்தின் பாரதூரம் எவ்வளவு காலத்திலிருந்து திட்டமிட்டிருக்கிறார்கள் என்பது தெரியவரும். அதுதொடர்பில் விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன’’ என்றார்.

http://seithy.com/breifNews.php?newsID=332402&category=TamilNews&language=tamil

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்தார்!

adminMay 16, 2025

Pillaian-cid.jpeg?fit=1170%2C658&ssl=1

கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை சட்டத்தரணிகள் ஊடாக தாக்கல் செய்துள்ளார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மை தடுத்து வைப்பதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட தீர்மானத்தின் ஊடாக தனது அடிப்படை மனித உரிமைகள் மீறுப்படுவதாக தீர்ப்பளிக்கக் கோரியே குறித்த மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.

https://globaltamilnews.net/2025/215587/

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையானின் அடிப்படை உரிமைகள் மனுவைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்

pillayan-780x470.jpeg

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கடத்தல் வழக்கில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் இருக்கும், பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரக்காந்தனின் அடிப்படை உரிமைகள் மனுவைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அத்துடன் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரன் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிள்ளையான் கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அதன்பின்னர் ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் 90 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அத்துடன் தாம் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டதன் ஊடாக தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அவர் உயர் நீதிமன்றில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதியரசர்களான மகிந்த சமயவர்தன மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது. இதன்போது குறித்த மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள நீதியரசர்கள் குழாம் தீர்மானித்து அறிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.


https://akkinikkunchu.com/?p=325668

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த அரசு வந்து இவரை வெளியே எடுத்து விடும்.

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனுவை பரிசீலிக்க திகதி நிர்ணயம்

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 23 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது. 

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்து தடுத்து வைக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எடுத்த முடிவால் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி பிள்ளையான் இந்த அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்துள்ளார். 

இந்த மனு இன்று உயர் நீதிமன்றத்தின் எஸ். துரை ராஜா, மேனகா விஜேசுந்தர மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது. 

இதன்போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை சமர்ப்பித்து, மனுவுக்கு வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய இரண்டு வாரங்கள் அவகாசம் கோரினார். 

அதன்படி, வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க பிரதிவாதி தரப்பினருக்கு இரண்டு வார கால அவகாசம் அளித்த நீதியரசர்கள் அமர்வு, அந்த திகதியிலிருந்து ஒரு வாரத்திற்குள் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் தாக்கல் செய்யுமாறும் மனுதாரர் தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmc0ubopq000rqp4k2jga3qjm

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கொலைக் குற்றச்சாட்டுகள் – பிள்ளையானுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

June 27, 2025 8:59 am

கொலைக் குற்றச்சாட்டுகள் – பிள்ளையானுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

முன்னாள் அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் ஐந்து கொலை வழக்குகளில் தொடர்புடையவரா என்பது குறித்து விசாரித்து வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த கொலை வழக்குகள் தொடர்பாக பல குழுக்கள் ஏற்கனவே விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த ஐந்து கொலை சம்பவங்களில் ஒரு பொலிஸ் அதிகாரி ஒருவரின் கொலையும் அடங்கும் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் காணாமல் போனது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையின் பல சிறப்புக் குழுக்கள் மட்டக்களப்பு பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்த விசாரணைகள் தொடர்பாக, சந்தேக நபர்கள் முகாம்களை நடத்தி வந்த இடங்கள் கண்காணிக்கப்பட்டு, பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அந்த சம்பவம் தொடர்பாக, பிள்ளையான் சமீபத்தில் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குற்றப் புலனாய்வு மற்றும் நிதிக் குற்றப் பிரிவின் பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்டவின் அறிவுறுத்தலின் கீழ் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://oruvan.com/murder-charges-cid-investigations-begin-against-pillayan/

  • கருத்துக்கள உறவுகள்

சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குமாறும், நீதியான விசாரணைகளை நடத்துமாறும் கோரி கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை

28 JUN, 2025 | 05:16 PM

image

வாழைச்சேனை முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குமாறும் நீதியான விசாரணைகளை நடத்துமாறும் கோரி அரசினை வலியுறுத்தி சனிக்கிழமை (28) பேத்தாழை வாழைச்சேனையில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வாழைச்சேனை பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஜனாதிபதியின் கவனத்திற்கு தெரிவிக்கும் வகையில் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

இன்றைய நிகழ்வில் முன்னாள் அமைச்சருக்கு விடுதலை வேண்டி பேத்தாழை மாவடி மாரியம்மன் ஆலயத்தில் விசேட பூசைகள் நடைபெற்று கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.

இதன்போது பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் இதில் ஈடுபட்டிருந்தனர்.

இவ் நடவடிக்கையானது மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இடம் பெறவுள்ளதாக கட்சியின் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ந.நிமல்ராஜ் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் கொழும்பு குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவினரால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

எமது தாய் நாட்டின் இறைமையும் தேசிய ஒருமைப்பாடும் ஆபத்துக்குள்ளாகி இருந்த வேளையில் அவற்றை மீட்டெடுக்க அவர் போன்றவர்கள் ஆற்றிய சேவைகள் இன்று மறக்கப்பட்டால் எதிர் காலத்தில் சிறுபான்மை இனங்களில் இருந்து இவ்வாறான தேச பக்தர்கள் எவ்வாறு தோன்ற முடியும் என்பது தேசத்தின் ஒருமைப்பாட்டை நேசிக்கும் சகலரும் சிந்திக்க வேண்டிய தருணம் இதுவாகும்.

ஆகவே சந்திரகாந்தன் மீதான விசாரணைகள் அனைத்தும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிடியில் இருந்து நீக்கப்பட்டு சாதாரண சட்ட நடைமுறைகளுக்கு அமைய நடத்தப்படுவதற்கு ஆவண செய்யுமாறு தயவுடன் கேட்டுக் கொள்ளுகின்றோம் என ஜனாதிபதியின் கவனத்திற்கு அனுப்பும் மகஜரில் மேற்படி விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

IMG_20250628_122136.jpg

IMG_20250628_104504.jpg

IMG_20250628_104208.jpg

https://www.virakesari.lk/article/218711

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

சிறையில் இருந்து பிள்ளையான் அனுப்பிய கடிதம் தொடர்பாக மட்டு மாநகர சபை முதல்வரிடம் சிஜடி விசாரணை

Published By: VISHNU

08 AUG, 2025 | 07:16 PM

image

மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருக்கு புனர் நிர்மானிக்கப்பட்ட பொது நூலகத்தை திறந்து மக்கள் பாவனைக்கு விடுமாறு சிறையில் இருக்கும் பிள்ளையான்  ஆனுப்பிய கடிதம் தொடர்பாக மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதனிடம்  சிஜடி யினர் வியாழக்கிழமை (07) விசாரணை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத்  கடத்தப்பட்டு காணாமல் போயுள்ள சம்பவம் தொடர்பாக கடந்த ஏப்பிரல் 6ம் திகதி சந்தேகத்தில் சிஜடி யினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்  

இந்த நிலையில் கடந்த 30 ம் திகதி பிள்ளையான் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் மட்டு மாநகர முதல்வருக்கு  மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் புதிதாக அமைக்கப்பட்ட நூலகத்தை மக்கள் பாவனைக்கு கையளிப்பது தொடர்பாக என தலைப்பிடப்பட்டு அதில் கையொப்பம் இட்டு கடிதம் ஒன்றை கட்சி உறுப்பினர்  ஒருவர் மாநகரசபை முதல்வரிடம் ஒப்படைத்துள்ளார்.

பிள்ளையான் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிஜடி யின் கீழ் இருக்கும் போது கடிதம் ஒன்று வெளிவந்ததுடன் அது முகநூலில் பிரசுரிக்கப்பட்ட நிலையில் சம்பவதினமான நேற்று முன்தினம் சிஜடி யினர் மாநகரசபைக்கு சென்று மாநகரசபை முதல்வரிடம் இந்த கடிதம் தொடர்பான விசாரணை ஒன்றை மேற்கொண்டு சென்றுள்ளனர்.

https://www.virakesari.lk/article/222129

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.