Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டம் பலனளிக்கின்றது : முழுமையான மீட்சியை நோக்கி நகர்வது அவசியம் - பீற்றர் புரூவர் மற்றும் மார்தா ரெஸ்பயே வொல்டெமைகல் ஆகியோர் தெரிவிப்பு.

09 Apr, 2025 | 08:33 PM

image

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டம் பலனளிக்கின்றது என்றும் முழுமையான மீட்சியை நோக்கி நகர்வது அவசியம் என்றும் இலங்கைக்கான பன்னாட்டு நாணய நிதியத்தின் முன்னாள் சிரேஷ்ட பணிக்குழுப் பிரதானி பீற்றர் புரூவர் மற்றும் இலங்கையிலுள்ள பன்னாட்டு நாணய நிதியத்தின் தற்போதைய வதிவிடப் பிரதிநிதியான மார்தா ரெஸ்பயே வொல்டெமைகல் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

பன்னாட்டு நாணய நிதியத்தினால் ஆதரவளிக்கப்பட்ட இலங்கையின் நான்கு ஆண்டு கால பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் நடுப்புள்ளியை இம்மார்ச் மாதம் குறிக்கின்றது. அதன் தொடக்கத்திலிருந்து இரு ஆண்டுகளில் கடினமான ஆனாலும் மிகவும் தேவையான மறுசீரமைப்புக்கள் குறிப்பிடத்தக்க நன்மைகளுடன் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இலங்கை மக்களின் அர்ப்பணிப்பிற்கும் தியாகத்திற்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். மிகவும் அவதானிக்கத்தக்க விடயம், எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் மருந்து என்பவற்றிற்கு இனிமேல் வரிசைகள் காணப்படாது என்பதுடன் அட்டவணைப்படுத்தப்பட்ட மின்துண்டிப்புக்களும் இல்லை.

பொருளாதாரமானது வலுவாகவும் விரைவாகவும் மீண்டெழுந்துள்ளது – 2024இல் அது 5 சதவீதம் வளர்ச்சியடைந்து 2018இல் உச்சத்திலிருந்து 2023இன் தாழ்வின்  எல்லைக்குச் சென்ற வெளியீட்னெ; அரைவாசிக்குக் கீழிருந்து இழப்பு வெறும் 18 மாதங்களிலேயே  மீண்டுள்ளது.

வானுயர்ந்து சென்ற பணவீக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்காக வரி வருவாய்கள் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் உயர்வடைந்து, வட்டிக் கொடுப்பனவுகள் நீங்கலாக அரசாங்கத்தின் மீதி (ஆரம்ப மீதி) ஏறத்தாழ 6 சதவீதப் புள்ளிகளால் மேம்பட்டுள்ளது. பல குடும்ப அலகுகள் இன்னும் தாக்கத்தினை முழுமையாக உணராத போதிலும் பேரண்டப்பொருளாதாரத் திருப்பமானது குறிப்பிடத்தக்கதாகும். 

வெளிநாட்டு கடன்கொடுநர்கள் மூலம் வழங்கப்பட்ட படுகடன் நிவாரணம் இலங்கை மக்கள் தோல்கொடுக்க வேண்டிய சுமையினை குறைத்துள்ளது. வெளிவாரி கடன்கொடுநர்கள் படுகடனின் ஐ.அ.டொலர் 3 பில்லியனை கைவிட்டுள்ளதுடன் அண்மைய காலத்தில் நிலுவையாகவிருக்கின்ற அல்லது ஏற்கனவே தவணை கடந்த மற்றுமொரு ஐக்கிய அமெரிக்க டொலர் 25 பில்லியன் தொகையினை  மிகவும் குறைக்கப்பட்ட வட்டி வீதங்களுடன் அடுத்த 20 ஆண்டுகளுக்கு மேல் மிக நீண்டகால வீச்சில்  நீடித்துள்ளனர்.

இலங்கையின் வர்த்தகப்படுத்தக்க படுகடன் சாதனங்கள் பன்னாட்டு முறிச் சுட்டிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளமையினாலும் இலங்கையின் கொடுகடன் தரமிடலானது குறைந்தது 3 படிமுறைகளினாலேனும் உயர்த்தப்பட்டமையினாலும் அவை மீண்டும் முதலீட்டாளர்களைக் கவருகின்றன. 

2023இல் 30 சதவீதம் கொண்ட உச்சத்திலிருந்து தற்போதைய 8 சதவீதத்திற்கு உள்நாட்டு கடன்பெறுதல் செலவில் சடுதியான வீழ்ச்சிகளுடனும்  பன்னாட்டுச் சந்தைகளில் நாட்டிற்கான இடர்நேர்வு “விரிவு” குறிகாட்டி 70 சதவீதம் கொண்ட உச்சத்திலிருந்து 5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளமை என்பவற்றைக் கொண்டு சந்தைகள் இலங்கையின் மறுசீரமைப்புகளுக்கு கைமாறளித்துள்ளன.  பொறுப்புமிக்க பன்னாட்டு சந்தை அணுகலினை அடுத்த சில ஆண்டுகளில் எட்டக்கூடியதாக இருக்க வேண்டும்.

இலங்கை மக்கள் கடந்தகால கொள்கைத் தவறுகளுக்காகவும் முடக்கத்தை ஏற்படுத்திய துரதிஸ்டத்திற்காக போதுமானளவு தயாராகாமைக்கும் வருந்தத்தக்கவிதத்தில் உயர் விலையினைச் செலுத்துகின்றனர். நிலைபேறற்ற குறைவான வரிகள் மற்றும் மக்களைவிட பெரும்பாலும் தொழில்முயற்சிகளுக்கு நன்மையளித்த பாரிய வரி விலக்களிப்புகள் என்பன நிகழவுள்ள விபத்தொன்றாகவிருந்தது.

வரிசெலுத்துநர்கள் வருமானத்தையும் சொத்துக்களையும் கொண்டு சமமாகப் பங்களிப்பதற்கு அவர்கள் கோரப்பட்டிருந்தும் கூட, அதன் அத்தியாவசிய பணிகளுக்கு இன்று நிதியிடுவதற்கு அரசாங்கத்தின் மேம்பட்ட இயலுமையின் அடுத்த பக்கம் உயர்வான சுமைக்கு அவர்கள் தோல்கொடுக்க வேண்டியிருந்ததாகும்.

அதேபோன்று எரிபொருள் மற்றும் மின்சாரம் எனபவற்றின்; முழுமையான செலவு தற்போது அரசாங்கத்தின் உதவுதொகைகளின்றி அதன் பயன்பாட்டாளர்கள் மூலமே ஏற்கப்பட்டு, அரிதான அரசாங்க மூலவளங்கள் சமூகப் பாதுகாப்பு போன்ற முன்னுரிமைத் துறைகளை நோக்கி திசைப்படுத்தப்பட்டிருப்பதற்கு இயலச்செய்யப்பட்டுள்ளது.

இன்னும் மிகவும் பாதிக்கப்படும் நிலையிலிருக்கின்ற இலங்கை முழுமையாக சுயமாக சிக்கலிலிருந்து விடுபடக்கூடியதாகவிருப்பதை உறுதிசெய்வதற்கும் 2022இல் எதிர்கொண்ட அபாயகரமான நிலைமைகளுக்கு மீண்டும் செல்வதைத் தடுப்பதற்கும் இவ்வகையான தியாகங்கள் அவசியமானதாகக் காணப்படுகின்றன. 

2023 தொடக்கம் பன்னாட்டு நாணய நிதிய நிதியிடல், நிகழ்ச்சித்திட்டத்திற்கு முன்னர் இலங்கையர்கள் அனுபவித்த மிக மோசமான விளைவுகளை தவிர்ப்பதற்குத் துணையளித்துள்ளது. பன்னாட்டு நாணய நிதியம் ஆதரவளித்த பொருளாதார நிகழ்ச்சித்திட்டம் ஏனைய பல்தரப்பு மற்றும் இருதரப்பு பங்காளரிடமிருந்து நிதியிடலை வினையூக்கச்செய்கின்ற மறுசீரமைப்புக்களுக்கு அர்பணிப்பதற்கு நம்பகமான கட்டமைப்பொன்றினைத் தொடர்ந்தும் வழங்குகின்றது. கடன்கொடுநர்கள் வழங்குகின்ற படுகடன் நிவாரணம் மறுசீரமைத்தலின் பின்னர் எஞ்சியிருக்கின்ற படுகடனைத் தீர்ப்பதற்கு இலங்கையினை இயலச்செய்யுமென அது அவர்களுக்கு உத்தரவாதமளித்தது. 

கடந்த தேர்தல் இடம்பெற்றதன் பின்னர், பன்னாட்டு நாணய நிதியம் அவர்களின் கொள்கை முன்னுரிமைகளின் சிலவற்றை அதிகாரிகள் நிறைவுசெய்வதற்கு உதவுவதற்காக நிகழ்ச்சித்திட்டத்தை மீள அளவமைப்பதற்கு புதிய அரசாங்கத்துடன் விரைவாக நெருங்கிப் பணியாற்றியது. 

வெற்றிகரமான வருவாய்த் திரட்டல் முயற்சிகளுக்கு நன்றி. இது, நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கை மக்களுக்கு சில நிவாரணத்தை வழங்குவதற்கும் வேறு அத்தியாவசியத் தேவைகளை வழங்குவதற்கு அரசாங்கத்தின் இயலுமையினை காக்கின்ற விதத்தில் அரசாங்கத்திற்கு அது சாத்தியமாகவிருந்தது. தனிப்பட்ட வருமான வரி கட்டமைப்பு சீராக்கப்பட்டு, கடந்தகால உயர்வான பணவீக்கத்திற்கு பகுதியளவில் ஈடளிப்பதற்கு அரசாங்கத் துறைச் சம்பளங்கள் உயர்த்தப்பட்டு வருவதுடன் பாற்பண்ணை உற்பத்திப் பயன்பாட்டாளர்களுக்கு சில  நிவாரணங்கள் வழங்கப்பட்டன. 

இந்;நடுநிலைப் புள்ளியில், மறுசீரமைப்பினைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதும் கடந்தகால தவறுகளைத் தவிர்ப்பதும் முக்கியத்துவம் மிக்கதாகும். தற்போதைய நிகழ்ச்சித்திட்டத்திற்கு முன்னர் பன்னாட்டு நாணய நிதிய நிகழ்ச்சித்திட்டங்களின் சுமார் அரைவாசியளவு இலங்கை முன்கூட்டியே முடிவுறுத்திமையினால் அதனைத் தொடர்ந்து பொருளாதாரத்தில் குறைவான செயலாற்றம் இடம்பெற்றது. இவ்வளர்ச்சி முடக்கல் சுழற்சியை நிறுத்தி, நிச்சயமற்ற உலகளாவிய நிலைமையிலும்கூட மீட்சி தொடர்ச்சியாக இருக்கக்கூடிய விதத்திலும் அனைத்து இலங்கையர்களும் அதிலிருந்து நன்மையடையும் விதத்திலும் பொருளாதாரத்தை முகாமைசெய்வதும் முக்கியமானதாகும்.  

நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்குகின்ற வளர்ச்சி மற்றும் அரசிறை மற்றும் படுகடன் நிலைபெறுதன்மை என்பவற்றிற்கான பாதை தொடர்ந்தும் குறுகியே காணப்படுகின்றது. கொள்கைத் தவறுகளுக்கு இடமளிக்கக்கூடாது. வரி விலக்களிப்புக்களை மட்டுப்படுத்தல் மூலமானவை உள்ளடங்கலாக அத்தியாவசிய அரசாங்கப் பணிகளுக்குத் தேவையான வருவாய்களைத் தொடர்ந்தும் வழங்குவது மிகவும் முக்கியமானதாக அமைந்திருக்கும்.

எரிபொருள் மற்றும் மின்சாரம் என்பவற்றிற்கான செலவு – மீட்பு விலையிடலை மீளமைத்தல் மற்றும் சமூக ரீதியான ஆதரவை மிகவும் பாதிக்கப்பட்டவர்களை நோக்கி நன்கு இலக்கிடுவதை நிச்சயப்படுத்தல் என்பன மூலம் அரிதான அரசாங்க மூலவளங்கள் பாதுகாக்கப்பட வேண்டியுள்ளது. பொருளாதார மீளெழுச்சியில் போதுமானளவு பங்கேற்பதற்கு வறியவர்களுக்கும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படவேண்டும். இலங்கையின் நீண்ட கால உள்ளார்ந்த ஆற்றலை வெளிக்கொணர்வதற்கு நடுத்தரகால வளர்ச்சிக்கு ஆதரவளித்தலில் மூலதனச் செலவிடல் மிகவும் எதிர்வுகூறத்தக்கவிதத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். 

வரவிருக்கும் கடமைகள் பேராவல்மிக்கவையாயினும் நிறைவேற்றப்படத்தக்கவையாகும். இடம்பெறுகின்ற மறுசீரமைப்பு உத்வேத்தைத் தக்கவைத்தல் முழுமையான மீட்சிக்கு முக்கியமானதாக அமைந்திருந்து இத்தலைமுறைக்கு மாத்திரமின்றி எதிர்காலத் தலைமுறையினருக்கும் நன்மைபயக்கக்கூடியதாகவுமிருக்கும். அனைத்துக் குடிமக்களினதும் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதில் வலுவான மற்றும் நீடித்த மீட்சியொன்றினைப் பெற்றுக்கொள்வதில் இலங்கைக்கு ஆதரவளிக்கும் பொருட்டு உறுதியானதொரு பங்காளராகப் பன்னாட்டு நாணய நிதியம் தொடர்ந்தும் இருக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டம் பலனளிக்கின்றது : முழுமையான மீட்சியை நோக்கி நகர்வது அவசியம் - பீற்றர் புரூவர் மற்றும் மார்தா ரெஸ்பயே வொல்டெமைகல் ஆகியோர் தெரிவிப்பு | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.