Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெருகல் படுகொலையின் 21 ஆவது ஆண்டு நினைவு

rep104April 11, 2025

ருத்திரன்

1744352863-WhatsApp%20Image%202025-04-11


வெருகல் படுகொலையின் 21 ஆவது ஆண்டு நினைவு நாள் ‘சிவப்பு சித்திரை’ வாகரை பிரதேசத்தின் கதிரவெளி மலைப் பூங்காவில் நேற்று வியாழக் கிழைமை மாலை(10) நினைவு கூறப்பட்டது.


நிகழ்வானது தமிழ் மொழி வாழ்த்து பாடலுடன் ஆரம்பிக்கப்பட்டு உயிர் நீத்தவர்களுக்கான மலர் அஞ்சலியுடன் மௌன வீர அஞ்சலி செலுத்தப்பட்டு பொதுச் சுடர் ஏற்றல் நிகழ்வு இடம்பெற்றது.


இம்முறை கடந்த 21 ஆண்டுகளுக்கு பின்பு முன்னாள் அமைச்சர் கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் முதன் முதலாக நிகழ்வில் பங்கு கொண்டு பொதுச் சுடரினை ஏற்றி வைத்தார்.


வழமையாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நிகழ்வில் பங்கு கொள்வது வழக்கமாகும். அவர் தனிநபர் ஒருவரின் கடத்தல் விவகாரம் தொடர்பாக விசாரணைக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதன் காரணத்தால் அவருக்கு பதிலாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உப தலைவர் ஜெயம் என்று அழைக்கப்படும் நா.திரவியம் கலந்துகொண்டு நிகழ்விற்கு தலைமை வகித்தார்.இதன்போது உயிர் நீத்தவர்களின் உறவுகள் தங்களது உறவுகளை நினைத்து ஈகைச் சுடர்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.


இதேவேளை தேர்தல் காலம் என்பதால் இம்முறை குறித்த நிகழ்வானது வழமை போன்று ஆரவாரம் இல்லாமல் அமைதியான முறையில் தேர்தல் சட்ட விதிகளுக்கு ஏற்ற வகையில் நடைமுறைகளை பின்பற்றி நினைவு கூறப்பட்டது.


2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட கிழக்கு பிளவின் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உருவானது.

17443528635.png

இதன்போது வடக்குப் புலிகள் வன்னிப் புலிகள் என அழைக்கப்பட்டனர். இதனால் இரு சாராருக்குமிடையில் இதே நாள் கதிரவெளி மற்றும் வெருகல் எல்லைப் பிரதேசத்தில் இடம்பெற்ற திடிர் மோதல் காரணமாக வன்னி புலிகளின் தாக்குதல் காரணமாக சுமார் 179 கிழக்கைச் சேர்ந்த ஆண்,பெண் உள்ளிட்ட இரு பாலாரும் கொல்லப்பட்டிருந்தனர்.


இதனை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் இவ் நிகழ்வை நினைவு கூர்ந்து வருகின்றமை வழக்கமாகும்.
இவ் நிகழ்வில் கலந்து கொண்ட கருணா அம்மான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அன்று போராட்டத்தில் வீனான உயிரிழப்புக்களை தவீர்த்து இராஜ தந்திர ரீதியாக பேச்சுவார்த்தை ஊடாக எங்களுடைய உரிமைகளை பெற்றுக் கொள்ளும் நோக்கோடு அன்ரன் பாலசிங்கம் அவர்களின் தலைமையில் நான் உட்பட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தோம். ஒஸ்லோவிலே இறுதியாக நடந்த பேச்சுவார்த்தையிலே எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தது. சமஸ்டி முறையிலான தீர்வை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதன் அடிப்படையில் சமஸ்டி உடன் படிக்கையிலே கைச்சாத்திட்டதன் பிரகாரம் தவறாக புரிந்து கொண்ட தலைமைத்துவம் பிழையான கண்ணோட்டத்தில் பார்வையிட்டது. ஆகவே மீண்டும் ஒரு யுத்தத்தை தொடக்கி வைத்து உயிரிழப்பை ஏற்படுத்த விரும்பவில்லை.


வடக்கில் இருக்கும் போராளிகளோ கிழக்கில் இருக்கும் போராளிகளாயினும் சரி பெரும் தொகையான போராளிகளை நாங்கள் இழந்திருக்கின்றோம்
‘ஜெயசிக்குரு மற்றும் ஆனையிறவு’ சமர் ஆகிய சமர்களில் களமாடிய வீரர்களின் உயிர்களின் இழப்புக்களை சந்தித்திருக்கின்றோம்.
ஆகவே இந்த இழப்பை தவீர்க்க முற்பட்ட வேளையில்தான் எங்களுக்கிடையில் பிளவு என்பது ஏற்பட்டது. இதன்போது தலைவர் பிரபாகரனுக்கும் எனக்கும் கருத்து முரன்பாடு ஏற்பட்டது. அந்த யுத்தத்தில் இருந்து ஒதுங்கியிருந்தோம். எங்களது போராளிகளை நிராயுத பாணிகளாக யுத்தத்தில் ஈடுபடாது ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு வீடுகளுக்கு செல்லுமாறு பணித்திருந்தோம். அந்த வேளையிலேதான் வன்னியிலிருந்து வந்த புலிகள் கிட்டத்தட்ட 500 போராளிகளை சுட்டு கொலை செய்தார்கள். இது மதிப்புக்குரிய தேசிய தலைவருக்கு தெரிந்து நடந்ததா,தெரியாமல் நடந்ததா என்பது வேறு விடயம். இதனை நான் அறியேன்.
ஆனால் இங்கு நடந்த கொடுமைகளை நாங்கள் மறக்க முடியாது. தலைவரைக் காப்பாற்ற வன்னிக் களமுனைகளில் இருந்த தளபதிகள் பலர் சரணடைந்த பிற்பாடும் உயிருடன் எரியூட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
இது போன்ற வேதனையான,கொடுமையான விடயங்கள் எல்லாம் நடந்தேறியது.

அதன் பிரகாரம் அரசியல் நீரோட்டத்தில் ஊக்கப்படுத்துக் கொண்டிருந்த வேளையிலே இராஜன் சத்தியமூர்த்தி அண்ணன் கிங்சிலி இராசநாயகம் அவர்கள் சுடப்பட்டனர். இவ்வாறு வகை, தொகையின்றி பொது மக்கள் நிராயுதபானிகள் மற்றும் போராளிகள் எல்லாம்; புலிகளால் கொள்ளப்பட்டனர். அன்று நாங்கள் விலகி இருந்தது என்பது நாங்கள் காட்டிக் கொடுப்பதற்கோ துரோகம் செய்வதற்கோ அல்ல மாறான ஆயுதங்களை கைவிட்டு ஒரு ஜனநாயக ரீதியாக போராட வேண்டும் என்றே ஆயுதங்களை கைவிட்டோம். ஆனால் அந்த காலத்திலே இருந்த ஊடகங்கள் அதனை திரிபுபடுத்தி கிழக்கு மாகானத்தில் உள்ள போராளிகள் அனைவரும் துரோகிகள் என்ற பட்டத்தைச் சூட்டி தேவையற்ற பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.


குறிப்பாக ஜ.பி.சி ஊடகவியலாளர் நிராஜ்டேவிட் என்பவர் சம்பவங்களை நேரடியாக கண்டது போன்று பல விடயங்களை திரிபுபடுத்தி இளைஞர்களுக்கு அவர் ஊட்டியிருந்தார். இன்று அதனை வன்மையாக கண்டிக்கின்றோம். இன்று பல போராளிகள் தளபதிகள் உலக நாடுகளில் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் இதனை நிச்சயம் புரிந்திருப்பார்கள். கிழக்கு மாகாண போராளிகளாக யாராவது துரோகியாக இருந்திருந்தால் வன்னியிலே நடந்த போர்க்களத்தில் இருந்த இராணுவ முகாம்களில் நின்றிருப்பார்கள். ஆகவே ஒரு போராளியாவது அவ்வாறு செயற்பட்டிருந்தால் அவர்கள் அதனை நிருபிக்கட்டும் அதன் பிற்பாடு நாங்கள் இந்த கருத்தை வாபஸ் பெறுவோம். ஆனால் நிராயுத பானிகளாக இருந்த இளைஞர்களை புலிகள் துரத்தி துரத்தி கொலை செய்தனர். வேறு வழியில்லை அதனால் அவர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தினார்கள். தவீர்க்க முடியாத விடயம் அது. அவர்கள் வந்து சுடும் போது தலையை கொடுப்பதற்கு இங்குள்ள இளைஞர்கள் எல்லாம் முட்டாள்களும் அல்ல மடையர்களும் அல்ல. ஆகவே அன்று விடுதலைப் புலிகள் அரசியல் தலைமைகள் சரியாக புரிந்து கொண்டு செயற்பட்டிருந்தால் இன்ற அரசியலில் வெற்றி கண்டு உலகமே போற்றுகின்ற அளவிற்கு வடக்கு கிழக்கிலே பாரிய கட்டமைப்போடு இருந்திருக்கலாம். இவற்றையெல்லாம் வருங்கால இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்று 21 வருடம் எனவே பிளவிற்கு பின்பு பிறந்த இளைஞனின் வயது 21 ஆகும். எனவே அவ்வாறன இளைஞர்களுக்கு வரலாறுகள் தெரியாது. ஆகவே திரிபுபடுத்துகின்ற வரலாறுகளை ஏற்றுக்கொள்ளாமல் வரலாறுகளை தெரிந்து கொண்டவர்கள் நாங்கள் உங்கள் மத்தியிலே இருக்கிறோம் எங்கள் பின்னால் அணிதிரண்டு எங்களுடைய மாவீரர்கள் குடும்பங்கள் போராளிகள் குடும்பங்களை உயர்த்துவதற்கும் அவர்களது தியாகங்களை கௌரவப்படுத்துவதற்கும் அனைத்து மக்களும் தோளோடு தோள் நிற்க வேண்டும் என்றார்.


எனவே ஒவ் வொரு வருடமும் இதனை செயற்படுத்தி வந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையானுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.supeedsam.com/230624/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாட்ஸப்பில் அரியம் ஐயா..

வெருகலில் மரணித்த போராளிகளும் மாவீரர்களே..!

நேற்று(10/04/2024) வெருகல் படுகொலையின் 21, வது ஆண்டு நினைவு தினம் இடம் பெற்றதாகவும் அதில் முதல் தடவையாக கருணா கலந்துகொண்டார் எனவும் ஊடகப்பரப்பில் செய்திகள் வந்தன.

இந்த மோதல் ஏற்பட பிரதான காரணகர்த்தா கருணாதான்.

2004, மார்ச்,03.ல் விடுதலைப்புலிகளில் இருந்து தாம் விலகிவிட்டதாக ஊடகத்தில் கருணா அறிவித்தார்.

2004, மார்ச்,06,ல் விடுதலைப்புலிகளில் இருந்து கருணாவை நீக்கிவிட்டதாகவும், அவருக்கும் விடுதலை புலிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லைஎன அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன் ஊடகங்களில் உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.

அதன்பின்னர் தாம் கிழக்குப்புலிகள், வன்னிப்புலிகள், என்ற பிரதேசவாதக்கருத்தை கருணாதரப்பினர் பரப்பி மட்டக்களப்பு நகர்பகுதி, செங்கலடி பகுதி எங்கும் யாழ்ப்பாண வர்தர்கள், யாழ் பொதுமக்கள் மீது பிரதேசவாதக்கருத்தை பரப்பி அவர்களை வெளியேற்றும் காடைத்தனத்தை புரிந்தனர்.

2004,ஏப்ரல்,04, பாராளுமன்ற பொதுத்தேர்தல்.

தேர்தல் முடியும் வரை விடுதலைப்புலிகள் கருணா குழு மீது எந்த நடவடிக்கையையும் செய்யவில்லை.

(தேர்தலில் 22, தமிழ்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு)

2004, ஏப்ரல்,09, இரவு தொடக்கம் 2004, ஏப்ரல்,10, வரை வாகரைக்கும், வெருகல் பாலத்துக்கும்(அப்போது பாலம் இல்லை) இடையில் ஏற்பட்ட மோதலில் கருணாதரப்பை சேர்ந்த போராளிகள் சிலர் உயிரிழந்தனர்.

2004,ஏப்ரல்,20, ல் கிளிநொச்சியில் தலைமைச்செயலகத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன், புலானாய்வுப்பொறுப்பாளர் பொட்டம்மான், மற்றும் புலிகளின் தளபதிகள் உள்ளிட்டவர்கள் 22, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பை ஏற்படுத்தினர். அதுதான் 22, பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தலைவரின் முதல் சந்திப்பு.

இந்த சந்திப்பின்போது நான்(பா.அரியநேத்திரன்) தலைவரிடம் கேட்டேன் கடந்த 2004, ஏப்ரல், 10, ம் திகதி கருணா குழுவினருடன் இடம்பெற்ற மோதலில் கருணாதரப்பில் மரணித்த போராளிகளை மாவீர்ர் பட்டியலில் இணைக்கவேண்டும். ஏனெனில் அவர்கள் இனவிடுதலைக்காக போராடவே இயக்கத்தில் இணைந்தார்கள் அவர்களை தவறாக கருணாதான் பயன்படுத்தினார் என்றேன்.

தலைவர் பதில் கூறுவதற்கு முன்னம் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் என்னிடம் கூறினார் அண்ணர் இந்த விடயங்களை எல்லாம் நாம் இங்கு கேட்ககூடாது என்ரார்.

அப்போது உடனே தலைவர் தமது கையால் செ.கஜேந்திரனை பேசவேண்டாம். என சைகைகாட்டிவிட்டு” அரியம் அண்ணர் கேட்டதில் என்னதவறு உள்ளது அந்த போராளிகள் இனவிடுதலைக்காகத்தானே போராட்டத்தில் இணைந்தவர்கள் அவர்களை தவறாக பயன்படுத்தியுள்ளனர் என்பது உண்மை .அரியம் அண்ணர் கேட்டது சரி அந்த போராளிகள் அனைவரையும் மாவீரர் பட்டியலில் இணைத்துக்கொள்கிறேன்” என்ரார்.

(இதற்கு சாட்சியாக அப்போது இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்போதும் சிலர் உள்ளனர்)

இந்த செய்தி மறுநாள் கிளிநொச்சியில் இருந்து வெளிவந்த ஊடகங்களில் வெளியிடப்பட்டது.

கடந்த 21, வருடங்களாக தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியால் வெருகல் படுகொலை என்ற பெயரில் இதனை நினைவு கூருகிறார்கள்.

ஆனால் இந்த உயிர் நீத்த அத்தனை போராளிகளும் தலைவரின் கட்டளைப்படி மாவீரர் பட்டியலில் இணைத்துக்கொள்ளப்பட்டு கார்த்திகை.27, ல் மாவீர்ர் தினநாளில் அவர்களுக்காகவுமே தீபச்சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்படுகிறது என்பதே உண்மை.

“வெருகல் படுகொலை” என வேறுபடுகொலை தினம் உண்டு. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் உள்ளவர்களுக்கு தெரியாது என நினைக்கிறேன்.

திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பகுதியில் 1986, காலப்பகுதியில் முதன்முதலாக ஓர் இடப்பெயர்வு இடம்பெற்று ஈச்சலம்பற்றுவில் ஒரு அமைக்கப்பட்டிருந்து. அந்த அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப்பொருட்களை 1986.யூன்,12 அன்று சேருவில பகுதியில் இருந்து ஈச்சிலம்பற்று நோக்கி எடுத்து வரும்போது மகிந்தபுர பகுதியில் வைத்து மூன்று அரச அதிகாரிகள் உட்பட 21பேர் இராணுவம் மற்றும் ஆயுததாரிகளினால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள் அந்த படுகொலையையே “வெருகல் படுகொலை” என நினைவு கூருவது குறிப்பிடத்தக்கதாகும்.

-பா.அரியநேத்திரன்-

11/04/2025

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

ஆனால் இந்த உயிர் நீத்த அத்தனை போராளிகளும் தலைவரின் கட்டளைப்படி மாவீரர் பட்டியலில் இணைத்துக்கொள்ளப்பட்டு கார்த்திகை.27, ல் மாவீர்ர் தினநாளில் அவர்களுக்காகவுமே தீபச்சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்படுகிறது என்பதே உண்மை.

இது உண்மையா?

  • கருத்துக்கள உறவுகள்+
7 hours ago, கிருபன் said:

.

17443528635.png

இதன்போது வடக்குப் புலிகள் வன்னிப் புலிகள் என அழைக்கப்பட்டனர். இதனால் இரு சாராருக்குமிடையில் இதே நாள் கதிரவெளி மற்றும் வெருகல் எல்லைப் பிரதேசத்தில் இடம்பெற்ற திடிர் மோதல் காரணமாக வன்னி புலிகளின் தாக்குதல் காரணமாக சுமார் 179 கிழக்கைச் சேர்ந்த ஆண்,பெண் உள்ளிட்ட இரு பாலாரும் கொல்லப்பட்டிருந்தனர்.


என்னடாப்பா ,

ஒவ்வொரு ஆண்டும் செத்தவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகுது...

~24, ~61, 98, இப்ப 179 ... விட்டால் பத்தாண்டுகளில் 1000 தாண்டி விடும்...

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன துரோகிகளின் இறுதி காலம் மிக மிக கசப்பானது!!

Vhg ஏப்ரல் 12, 2025

1000482012.jpg

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு  மாவட்ட கட்டளை தளபதியாக இயங்கிய கருணா,தன்னுடைய பதவி காலத்தில் நடைபெற்ற அத்தனை மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளிலும் மட்டக்களப்பில் பிரதான சுடரினை ஏற்றி மடிந்த வீரர்களுக்காக அஞ்சலித்து வந்திருக்கிறார் .

இறுதியாக 2003 கார்த்திகை இருபத்தி ஏழில் தனது இறுதி அஞ்சலியை தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் செலுத்தினார்.

விடுதலைப்புலிகளின்  பாரம்பரியத்தை மீறி அந்த ஆண்டில் சில புதுமைகளை சேர்த்து அந்த மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தார்.முன்னேற்பாடுகளிலும் வீரர்களின் அணிநடைமற்றும் அஞ்சலிக்கும் முறை என்பவற்றையும் தானே முன்னின்று பயிற்சி வழங்கி வழிநடத்தினார்.

சமாதான உடன்படிக்கை காலத்தில் அந்த மாவீரர் நாள் நிகழ்வுகள் அமைந்திருந்தமையால் தரவை மாவீரர் துயிலுமில்ல நிகழ்வுகள் முக்கியத்துவம் பெற்றன.மரபை மீறிய அந்த மாவீரர் நாள் நிகழ்வு பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தின.

அந்த இறுதி நிகழ்வோடு விடுதலை புலிகள் இயக்கத்தை விட்டு பிரிந்த அவர்,அதன் பின்னர் போராளிகள் தொடர்பிலான எந்த ஒரு அஞ்சலி நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவில்லை.

2003 ற்கு பின்னரான மாவீரர் நாள் அனுட்டானங்கள் நடைபெறும் பொழுதுகளில் ,கருணா நிறைந்த மது போதையில் கிடப்பதாகவே அவரது அருகாமையாளர்கள் காதோடு காது வைத்து பேசிக்கொள்வர்.

தனது கட்டளையை ஏற்று சண்டையிட்டு மடிந்து போன வீரனைகூட நினைவில் கொள்ளும் நிலையில் அவர் இருப்பதில்லை என்பதுதான் தகவல்.

ஆனால்,திடீரென ஞானம் வந்தது போல் கதிரவெளியில் கடந்த 10 ஆம் திகதி போய் நின்றிருக்கிறார் கருணா.

1000482014.jpg

சித்திரை 10 ஆம் திகதியை பிள்ளையான் அணியினர் சிவப்பு சித்திரை எனும் பெயரில் வெருகல் துறை மற்றும் ஏனைய இடங்களில் தம்மோடு இருந்து மாண்டு போன அல்லது தமிழினத்தை காட்டிக்கொடுத்தனர் என குற்றஞ்சாட்டி விடுதலை புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட  சில உறுப்பினர்களை நினைவுகூர்ந்து வந்திருந்தனர் .

தமிழ்மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையான் என அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன்  அவர்கள் தலைமையில் இதுவரை இடம்பெற்று வந்த அந்த நினைவேந்தல் முதல் தடவையாக இம்முறை கருணா அவர்களின் கைக்கு மாறியிருக்கிறது.

21 வருடங்களுக்கு பின்னர் போராளிகளை அஞ்சலிக்கச்சென்ற கருணா,யாரை நினைவுகூர்ந்திருப்பார்?

கருணா என்ற ஒற்றை நபருக்காக தான் கொண்ட கொள்கை,கோட்பாடு எல்லாவற்றையும் மறந்து வெருகல் துறையில் களமாடிய பாரதிராஜாவை நினைவு கூர்ந்திருப்பாரா?அம்மான் என்ற பெயரைக்கேட்டாலே புல்லரித்து நின்ற மாபெரும் தளபதி ராபட்டை நினைவுகூர்ந்திருப்பாரா?அல்லது ஊரவன் என்ற அடிப்படையில் தன்னை நம்பி வந்த ஜிம்கலி தாத்தாவை நினைவுகூர்ந்திருப்பாரா?

அல்லாது போனால் கருணா  தலையீடு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினுள் இருக்கவேண்டும் என்று வாதாடியதால் பிள்ளையானுக்காக கொல்லப்பட்ட நந்தகோபனை நினைவுகூர்ந்திருப்பாரா?பிள்ளையானின் கோட்டைக்குள் நின்று கருணாவுக்காக கொக்கரித்து வெல்லமுடியாது போகவே சையனைட் அருந்தி மாண்டுபோன மருத்துவ போராளி திலீபனை நினைவுகூர்ந்திருப்பாரா?

எத்தனை எத்தனை பெறுமதியான உயிர்களை தனது சுயநலத்திற்காக பலியிட்ட கருணா அவர்கள்,நேற்றுவரை அந்த நினைவுகளே இன்றி கிடந்து,இன்று வந்து விளக்கேற்றி அஞ்சலிப்பதன் மாயமென்ன?

இங்கே இரண்டு கேள்விகள்தான் தொக்கி நிற்கின்றன.

1.இனி தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிக்கு கருணாதான் தலைவரா?

2.இனி பிள்ளையானை இந்த அரசாங்கம் சிங்களவர்களை பாதுகாக்கும் நோக்கில் அவர்கள் நடாத்திய அத்தனை கொலைகளுக்கும் காரணகர்த்தாவாக்கி சிறையிலேயே அடைத்துவிடபோகிறதா?

வியாளேந்திரனின் சிறை பிரவேசம்,பிள்ளையானின் கைது,கருணாவின் மீளுருவாக்கம் என்பனவெல்லாம் தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் நல்ல வரலாற்று பாடங்களை கற்றுத்தந்துகொண்டுதான் இருக்கின்றன.

"இன துரோகிகளின் இறுதி காலம் மிக மிக கசப்பானது" https://www.battinatham.com/2025/04/blog-post_99.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.