Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

iran-fe.webp?resize=480%2C267&ssl=1

ஈரானில் பாரிய வெடிப்புச் சம்பவம்! 500க்கும் மேற்பட்டோர் காயம்.

தெற்கு ஈரானின் பன்டார் அப்பாஸில்(Bandar Abbas) உள்ள ஷாஹீன் ராஜீ துறைமுகத்தில் பாரிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்  சம்பவத்தில் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈரானில் உள்ள ஷாஹித் ராஜீ தெற்கு துறைமுகத்தில் பல கொள்கலன்கள் வெடித்தது இந்த சம்பவம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்த துறைமுகம் முக்கியமாக கொள்கலன் போக்குவரத்தை கையாளுவதுடன், எண்ணெய் தாங்கிகள் மற்றும் பிற கனிய இரசாயன வசதிகளை வழங்கும் துறைமுகம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வெடிப்பு சம்பவம் துறைமுகத்தை கடுமையாக சேதப்படுத்தியுள்ளதுடன், வெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இருப்பினும் வெடிப்புக்கான காரணம் ஆபத்தான பொருட்கள் மற்றும் இரசாயனங்கள் இருக்கலாம் என்று ஈரானிய சுங்க அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் துறைமுகத்தின் உள்ள படகு முனையத்தின் ஒரு பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், வெடிப்பால் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1429636

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானில் பாரிய வெடிப்பு சம்பவம் : 500 பேர் காயம்

26 APR, 2025 | 05:59 PM

image

ஈரானின் துறைமுக நகரமான பந்தர்  அப்பாஸ் நகரத்தில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தில் 500 பேர் வரை காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த பாரிய வெடிப்பு சம்பவம் இன்று சனிக்கிழமை (26) காலை இடம்பெற்றுள்ளது.

இந்த பாரிய வெடிப்பு சம்பவத்தினால் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள்  மக்கள் சிக்கியுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் துறைமுக நகரத்திற்கு அருகிலுள்ள அலுவலக கட்டிடங்களின் ஜன்னல்கள் உடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்புகள் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/213028

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ஏராளன் said:

500 பேர் வரை காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

51 பேர் இறந்துள்ளார்களாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-317.jpg?resize=750%2C375&ssl

ஈரானிய துறைமுக வெடிப்பு சம்பவம்; 18 பேர் உயிரிழப்பு!

ஈரானின் மிகப்பெரிய துறைமுகமான பந்தர் அப்பாஸில் (Bandar Abbas) நேற்றைய (26) தினம் ஏற்பட்ட ஒரு பெரிய வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்த அனர்த்தத்தில் 700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சனிக்கிழமை காலை தெற்கு நகரமான பந்தர் அப்பாஸுக்கு அருகிலுள்ள நாட்டின் மிகப்பெரிய வணிகத் துறைமுகமான ஷாஹித் ராஜீயிலேயே இரசாயனக் கசிவு காரணமாக இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது அருகிலுள்ள கட்டிடங்களின் ஜன்னல்கள் மற்றும் கூரைகளை வெடிக்கச் செய்து பல வாகனங்களை அழித்ததுடன், வெடிப்பின் தாக்கத்தை 50 கிலோ மீற்றர் தொலைவில் உணர்ந்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

ஈரான் அமெரிக்காவுடன் ஓமானில் மூன்றாவது சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ள நிலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

எனினும், இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று ஈரானிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஷாஹித் ராஜீயில் உள்ள கொள்கலன்களில் இரசாயனங்களை மோசமாக சேமித்து வைத்ததே வெடிப்புக்குக் காரணம் என்று ஈரானின் அவசரகால மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஹொசைன் ஜஃபாரி குற்றம் சாட்டியுள்ளார்.

எவ்வாறெனினும், சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் உத்தரவிட்டதுடன், தீயை அணைக்கவும், ஏனைய பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கவும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

ஹோர்மோஸ் நீரினைக்கு அருகில் அமைந்துள்ள ஷாஹித் ராஜீ துறைமுகம் ஈரானின் மிகப்பெரிய கொள்கலன் மையமாகும்.

இது நாட்டின் பெரும்பாலான கொள்கலன் பொருட்களைக் கையாளுகிறது என்று அரசு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

https://athavannews.com/2025/1429658

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் துறைமுக வெடிப்பு சம்பவம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு; காயமடைந்தவர்களைச் சந்தித்த ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன்

Published By: VISHNU

28 APR, 2025 | 08:59 AM

image

ஈரானின்  பாந்தர் அப்பாஸ் நகரிலுள்ள  மிகப்பெரிய துறைமுகமான ஷாஹித் ராஜீயில்   சனிக்கிழமை இரசாயனப் பொருட்களினால்  ஏற்பட்ட  பாரிய வெடிப்பு  சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளதோடு,  1200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் அமெரிக்காவுடன் ஓமானில் மூன்றாவது சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ள நிலையில், ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் கொள்கலன்களில் இரசாயனங்கள் முறையாக சேமிக்கப்படாததே வெடிப்பு சம்பவத்துக்கு காரணம் என ஈரானின் நெருக்கடி முகாமைத்துவ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஹொசைன் ஜஃபாரி தெரிவித்துள்ளார்.

ஈரானின் நெருக்கடி முகாமைத்துவ அமைப்பின் பணிப்பாளர் இதற்கு முன்னர் துறைமுகத்திற்கு வருகை தந்தபோது இந்த துறைமுகத்திற்கு எச்சரிக்கைகளை விடுத்திருந்தார், மேலும் ஆபத்துக்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்டியிருந்தார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த பாரிய வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களை ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் ஞாயிற்றுக்கிழமை (27) பார்வையிட்ட அதேவேளை விசாரணைகளை நடத்தவும் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/213109

  • கருத்துக்கள உறவுகள்

Iran Port-ல் பயங்கர வெடிப்பு சம்பவம்; 50 KM தாண்டி உணரப்பட்ட Effect; நடந்தது என்ன?

இரானின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான ஷஹீத் ராஜீயில் (Shahid Rajaee) சனிக்கிழமை ஏற்பட்ட மிகப்பெரிய வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 40 பேர் பலியாகியுள்ளனர். 1000-த்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இரானின் பலிஸ்டிக் ஏவுகணைகளில் பயன்படுத்தத் திட்டமிடப்பட்ட திட எரிபொருள் சரக்கை, முறையாக கையாளாததின் விளைவாக வெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என நம்புவதாக Ambrey Intelligence தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த வெடிப்புக்கான காரணமாக அரசு சொல்வது என்ன? விரிவாகப் பார்க்கலாம்.

#Iran #Port

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

இதுவும் உலகின் முதன்மை உளவுத்துறையின் வேலையாக இருக்கலாமோ?!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.