Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-18.jpg?resize=750%2C375&ssl=

உலகின் மிகவும் வயதான நபராக மாறிய இங்கிலாந்து பெண்!

உலகின் மிகவும் வயதான நபர் ஒன்ற பெருமைய இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது 115 வயது மற்றும் 252 நாட்களில் பெற்றுள்ளார்.

அதன்படி, சர்ரேயின் லைட்வாட்டரில் உள்ள ஒரு பராமரிப்பு இல்லத்தில் வசிக்கும் எதெல் கேட்டர்ஹாம் (Ethel Caterham), புதன்கிழமை (01) 116 ஆவது வயதில் உயிரிழந்த பிரேசிலிய கன்னியாஸ்திரியான இனா கனபரோ லூகாஸின் மரணத்தைத் தொடர்ந்து இந்த மைல்கல்லை எட்டினார்.

இந்தப் புதிய சாதனையை கின்னஸ் உலக சாதனைகள் மற்றும் உலகின் வயதான மக்களின் தரவுத்தளமான லாங்கிவிகுவெஸ்ட் (LongeviQuest) உறுதிப்படுத்தியுள்ளன.

எதெல் கேட்டர்ஹாம் 1909 ஆகஸ்ட் 21 அன்று ஹாம்ப்ஷயரில் உள்ள ஒரு கிராமத்தில் எட்டு குழந்தைகளில் இரண்டாவது இளையவராகப் பிறந்தார்.

அவர் தற்போது தெற்கு இங்கிலாந்தின் சர்ரேயில் அமைந்துள்ள ஒரு பராமரிப்பு இல்லத்தில் வசித்து வருகிறார்.

35edf94985f0ca56f447000a1120d0ea?impolic

அவரது கணவர் மற்றும் அவரது இரண்டு மகள்களையும் விட நீண்ட காலம் உயிர் பிழைத்துள்ளார்.

அவரது சகோதரிகளில் ஒருவரான கிளாடிஸ் 104 வயது வரை வாழ்ந்தார்.

டைட்டானிக் கப்பல் மூழ்கியது, முதலாம் உலகப் போர், ரஷ்யப் புரட்சி, பெரும் பொருளாதார மந்தநிலை மற்றும் இரண்டாம் உலகப் போர் ஆகியவற்றை கேட்டர்ஹாம் கடந்து வந்துள்ளார்.

https://athavannews.com/2025/1430282

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் மிகவும் வயதான நபர் காலமானார்

Published By: Digital Desk 3

02 May, 2025 | 10:27 AM

image

உலகின் மிகவும் வயதான நபரான பிரேசிலிய கன்னியாஸ்திரி இனா கனபரோ லூகாஸ், தமது 116 ஆவது வயதில் காலமானார்.

இவர் 1908 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதி பிறந்துள்ளார். 1934-ம் ஆண்டு தனது 26 வயதில் கன்னியாஸ்திரியாகியுள்ளார்.

இனா கனபரோ உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமை (30)  உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். 

அவர் எப்போதும் தனது பிறந்தநாளை தனக்கு பிரியமான ஸ்போர்ட் கிளப் இன்டர்நேஷனல் - போர்டோ அலெக்ரேவின் கால்பந்து அணி அரங்கத்தின் வடிவத்தில்  செய்யப்படட்ட கேக்குடன் கொண்டாடுவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இனா கனபரோ மறைவுக்குப் பின்னர் உலகின் அதிக வயதான பெண் என்ற பட்டம், பிரித்தானியாவைச் சேர்ந்த 115 வயதான எதெல் கேட்டர்ஹாமுக்குச் சென்றுள்ளது.

கேட்டர்ஹாம்  எட்டு பிள்ளைகளில் இரண்டாவது இளையவராக 1909 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஹாம்ப்ஷயரில் உள்ள கிராமம் ஒன்றில் பிறந்துள்ளார்.

1.jpgBrazilian nun Sister Inah Canabarro Lucas ; Credit: Guiness World Records

3.jpgBrazilian nun Sister Inah Canabarro Lucas ; Credit: Guiness World Records

https://www.virakesari.lk/article/213461

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

494203863_1128972545912269_8222430509077

495180798_1128972485912275_3142559625872

42695 நாள் வாழ்ந்த உலகின் மிக வயதான கன்னியாஸ்திரி தாய் 116’வது வயதில் இயற்கை எய்தினார்!

Inah Canabarro Lucas (இனா கனபர்ரோ லூகஸ்) பிரேஸிலை சேர்ந்த கன்னியாஸ்திரி ஆவார், இவர் 1908 ஆம் ஆண்டு ஜூன் 8’ம் திகதி பிறந்தவர். மகிழ்வாக வாழ்ந்து வந்த இவர் உலகின் அதிகூடிய வயதுடையவர் என்று அறியப்படுகிறார், இறக்கும்போது இவருடைய வயது 116 ஆண்டுகள் 326 நாட்கள் ஆகும், ஏப்ரல் 30 அன்று இவர் இயற்கை எய்தினார், மொத்தமாக 42,695 நாட்கள் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vaanam.lk

Edited by தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.