Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Nadarajah Kuruparan 

"இழக்கும் சந்தர்ப்பங்கள் மீண்டும் கிடைப்பதில்லை"

"தவறுகள் தொடர்ந்தால் வரலாறு மன்னிக்காது"

மாகாணசபைத் தேர்தல் இடம்பெறுமா? என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது. அதிகாரப் பரவலாக்கம் குறித்து NPP யிடமோ அதன் மூலக் கட்சியான JVPயிடமோ தெளிவான நிலைப்பாட்டை காணமுடியவில்லை

மாகாண சபை முறைமை என்பது ஒரு வெள்ளையானை என்பது அவர்களின் கருத்து.

எனினும் அரசியல் அமைப்பில் 13ஆவது திருத்தச் சட்டம் இருப்பதனையும், தமிழ் மக்கள் அதனை போராடிப் பெற்றனர் எனவும் தோழர் அநுரமார திஸ்ஸநாயக்கா கூறியிருந்தார்.

இப்போ ஜனாதிபதியானதன் பின் அவர் மாகாணசபைத் தேர்தலை நடத்துவாரா என்பது தெளிவாகவில்லை.

முன்னைய மாகாண சபைத் தேர்தலில் JVP போட்டியிட்டாலும் கொள்கை ரீதியாக மாகாண சபையை எதிர்த்தது.

இதே நிலைப்பாட்டையே அகில இலங்கைத் தமிழ்காங்கிரசும், தமிழ்த்தேசிய முன்னணியும் கொண்டிருக்கின்றன. தேர்தலில் போட்டியிடுவது ஆனால் கொள்கை அடிப்படையில் எதிர்ப்பது.

இங்கே மாகாண சபை வெறும் கோதா அல்லது முட்டையா என்ற விவாதம் தொடரட்டும். ஆனால் அரசியல் அமைப்புச்சட்டத்தில் 13 ஆவது திருத்தத்தில் இருப்பது மாகாணசபை முறை மட்டுமே.

இந்த அரசாங்கத்தின் புதிய அரசியல் அமைப்பு கதையை நம்பி மாகாண சபைமுறைமையினை தமிழ் கட்சிகள் விட்டுவிட வேண்டாம் என, இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் தயான் ஜெயத்திலக அண்மையில் கூறியிருந்தார்.

1980களில் இருந்து 2009 வரை பல தைப்பெங்கல்கள், தீபாவளிகளை கடந்துவிட்டோம். இன்னும் கனவில் கூட தமிழ் ஈழத்தை காணவில்லை.

விடுதலைப் பொராட்டத்தில் இணைந்திருந்த போது இந்த நம்பிக்கையை பலருக்கு விதைத்து அவர்களின் வாழ்வை சிதைத்த வேதனை என்போன்ற பலரின் மனதை இன்றும் உறுத்திக்கொண்டே இருக்கிறது.

ஆக சுயநிர்ணய உரிமை, சமஸ்டி, ஒருநாடு இரண்டு தேசம் என்பவற்றிற்காக போராடுபவர்கள் போராடட்டும். கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி.

அவை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் தவற விட்டோம்.

ஆட்சியாளர்கள் கூறியதை முழுமையாக தந்தார்களா? தருவார்களா? என்ற கேள்விகளுக்கு அப்பால் அவர்கள் தருவதாக கூறியவற்றை நாம் நிராகரித்துள்ளோம் என்பது முக்கியமானது.

ஒருவேளை சர்வதேசத்தையும், பிராந்தியத்தையும், தமிழ் மக்களையும் திருப்த்திப்படுத்த NPP அரசாங்கம் தேர்தலை நடத்தினால் தமிழ்த் தரப்பின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? என்னவாக இருக்க வேண்டும்? என்பது குறித்து சிந்திக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் கொடுத்த படிப்பினைகளை கருத்தில் எடுக்காததன் பயனை தமிழ்க் கட்சிகள் அனுபவிக்கின்றன.

குறிப்பாக உள்ளுராட்சி சபைகளிள் தனித்து ஆட்சியமைக்க முடியாது ஆதரவுக்கரம் நீட்டி அவை அலைகின்றன. மக்களின் எதிர்பார்ப்புகளை ஒற்றுமையை புறந்தள்ளியதால் வடகிழக்கின் பெருமாபாலான சபைகள் தொங்குகின்றன.

மாகாணசபைத் தேர்தலிலும் இந்த துர்ப்பாக்கிய நிலையை உணராவிட்டால் மாகாண சபையும் தொங்கும் சபையாகும் என்பதில் சந்தேகம் இல்லை்

குறிப்பாக மாணாக சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர், ஒருமித்த நிலைப்பாட்டடைக் கொண்ட தமிழ்க் கட்சிகளின் பொதுவேட்பாளராக இருப்பது காலத்தின் அதி முக்கிய தேவையாக இருக்கிறது.

அந்தப் பொது வேட்பாளர் அதிகார மைய்யத்தின் சேகராக, அடிமையாக, விலைபோகும் ஒருவராக, சொந்த நலனை முதன்மைப்படுத்துபவராக, தற்துணிவு அற்றவராக, முடிவெடுக்கும் ஆற்றல் இல்லாதவராக, அரசியல் அறிவும், நிர்வாக திறனும் ஒருங்கே அமையப்பெற்றவராக இல்லாதிருப்பின் முதலமைச்சர் கதிரையில் அமர்வதில் பயனில்லை.

கடந்து போன வடக்கு கிழக்கின் மாகாண ஆட்சிமுறை சிறந்த பாடத்தை மக்களுக்கு புகட்டிச் சென்றுள்ளது.

இதுவைரை இருந்த மாகாண ஆட்சிகளில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை ஆட்சி ஒப்பீட்டளவில் சிறப்பாக இருந்தது என அதனை நன்கு அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

மிகக் குறுகிய காலமே இணைந்த வடகிழக்கு மாகாண சபையை ஆட்சிபுரிந்த EPRLF அதன் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள், மாகாண சபையின் முக்கியஸ்த்தர்கள் குறித்து ஆயிரம் விமர்சனங்கள் உண்டு.

ஆனால் மாகாண சபை நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கிய விதம், அந்தக் கட்டமைப்புக்கான அதிகாரிகளை தேர்வுசெய்த முறைமை, செயல்திறனும், நிர்வாக திறனும் உடைய சிவில் நிர்வாக அதிகாரிகளை அமைச்சுக்கள், திணைக்களங்களில் இணைத்தமை குறித்து நல்ல அபிப்பிராயம் இருந்தது.

நேரடியாக டில்லியும், தீக்ஸித்தும் ஜே.ஆர் ஜெயவர்த்தனவையும், அவரது அமைச்சரவையையும் கட்டுப்பாட்டுள் வைத்திருந்ததோடு, அமைதிப்படையும் மாகாண கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கை வகித்திருந்தன.

இவை இருந்தாலும் அரசியல் ஆளுமையும், நிர்வாகத் திறனும், முடிவெடுக்கும் ஆற்றலும், தற்துணிவும் இல்லாத முதலமைச்சர் கதிரைக்கு பாரமாக இருந்திருந்தால் அது சாத்தியப்பட்டு இருக்காது. குறிப்பாக போகும் போது தமிழீழ பிரகடனத்தையும் செய்திருக்க முடியாது.

அதிகாரத்தை பரவலாக்க விரும்பாத, இனவாத அரசாங்கங்களோடு முட்டி மோத வேண்டியகதிரை முதலமைச்சர் கதிரை.

அதனால் முதலமைச்சர் வேட்பாளர் தனியே புத்திஜீவியாகவோ, அரசில் மோதாவியாகவோ, நீதிபதிகளாகவோ, அல்லது அரசியல் பின்புலம் அற்ற நிர்வாக அதிகாரியாகவோ இருப்பதனால் மட்டும் வடக்கு கிழக்கு மாகாண சபைகளை நிர்வகிக்க முடியாது. ஆட்சிபுரிய முடியாது.

அதற்கு அரசியல் புன்புலமும், அரசியல் அறிவும், நிர்வாகத் திறனும், மொழி ஆற்றலும், அர்ப்பணிப்பும் மக்கள் மீதான கரிசனையும் உடைய ஒருவரையே தேர்வுசெய்ய வேண்டும்.

அவரை கண்டுபிடியுயுங்கள். அவர் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் பொதுவாட்பாளராக நிறுத்துங்கள்.

இழக்கும் சந்தர்ப்பங்கள் மீண்டும் கிடைப்பதில்லை. மீண்டும் மீண்டும் தவறிழைத்தால் வரலாறு எம்மை மன்னிக்காது. #ஞாபகங்கள்

500814322_1633078924761391_4585766388052

499948392_1633079031428047_3238403108844

All reactions:

5656


Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.