Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

26 MAY, 2025 | 10:30 AM

image

வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய கடற்கரைச் சூழலில் உள்ள மலையொன்றில் புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டுள்ளதுடன் அதனோடு ஒட்டியதாக பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது.

வருடாந்தம் முருகப் பெருமான் தீர்த்தமாடுகின்ற கடற்கரைச் சூழலில் கடற்படை முகாமுக்கு அருகே உள்ள மலையில் குறித்த புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அதன் மேலாக பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது.

உகந்தை மலையில் நாங்கள் முருகன் சிலையொன்றை நிறுவ முற்பட்டபோது அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அதே சூழலில் இந்த புத்தர் சிலை எவ்வாறு நிறுவப்பட்டது என்று மக்கள் கவலை தெரிவித்தததுடன் கதிர்காமம் போல் உகந்தையையும் மாற்றத் திட்டமிட்ட சதி நடக்கிறதா என்றும் அவர்கள் அஞ்சுகின்றார்கள்.

இந்த விடயம் தொடர்பாக இந்து மக்கள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரனின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர். பிரபல சட்டத்தரணி நடராஜா சிவரஞ்சித்திடமும் மக்கள் முறையிட்டுள்ளனர்.

உகந்தைமலை வள்ளியம்மன் மலையில் கடந்த காலத்தில் முருகன் சிலை அமைப்பதற்கு கிழக்கு முன்னாள் ஆளுநர், அமைச்சர்கள், ஆலய நிர்வாகத்தினர் முயற்சி செய்த போது அதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் தடை செய்ததாக சொல்லப்படுகின்றது.

இந்நிலையில், அதே சூழலில் உள்ள மற்றுமொரு மலையில் புத்தர் சலை வைக்கப்பட்டிருப்பது இந்துக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விடயம் குறித்து உரிய, நீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்து மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/215694

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பூர்வீகங்களை அழித்தலும் ஆக்கிரமிப்புகளும் நிறுத்தப்பட வேண்டும்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

தமிழர் பாரம்பரிய வரலாற்று ஆதாரங்களுடன் காணப்படும் பூர்வீகங்களை அழித்தலுடன் தொடரும் ஆக்கிரமிப்புகள் யாவும் நிறுத்தப்பட வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளரும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க ஆலோசகருமான தாமோதரம் பிரதீவன் தெரிவித்துள்ளார். 

அம்பாறை மாவட்டம் உகந்தை மலையிலுள்ள ஆலயம் அதனுடன் இணைந்த கடற்கரையிலுள்ள மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

மேலும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தமிழர் பாரம்பரிய வரலாற்று ஆதாரங்களுடன் காணப்படும் பூர்வீகங்களை அழித்தலுடன் ஆக்கிரமித்தலும் அண்மைக்காலமாக தொடர்கின்றது. 

உகந்தை முருகன் ஆலய வளாகத்தில் புராதன தமிழர் வாழ்வியல் ஆதாரங்களைச் சிதைப்பதும் அதை அழிப்பதும் ஆக்கிரமிப்பதும் எனும் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ள இந்த புத்தர் சிலையானது, உகந்தை முருகன் ஆலய முன் வாயிலின் முன்பாகக் செல்லும் போது கடற்கரையில் இடது புறமாகக் காணப்படும் குன்றில் கடற்படை முகாம் முன்பாகவுள்ள குன்றில் கடற்படையின் தொடர்பு கோபுரம் முன்பாக அமைக்கப்பட்டுள்ளது. 

ஆனால், இது உகந்தை முருகன் ஆலய புராதன வரலாறு கொண்ட புண்ணிய பூமியாகும். இங்கு எவ்வாறு இவர்கள் புத்தர் சிலை நிறுவலாம் எனும் கேள்வியோடு உகந்தைமலையில் 25 அடி முருகன் சிலை நிறுவும் பணியைத் தடுத்த வன இலாகாவினரும் அரசும் ஏன் இதைத் தடுக்கவில்லை எனும் கேள்விக்குப் பதில் தர வேண்டும். 

அத்தோடு உகந்தை முருகன் ஆலய வளாகத்திலும் அதனைச் சூழவும் வன இலாகா, மற்றும் படையினர் புதிய பல நிபந்தனைகளையும் விதித்து ஆலய சூழலைச் சுருக்கியுள்ளனர், பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர், வள்ளிமலை போன்ற இடங்களுக்குச் செல்லவும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர், இது தவிர சந்நியாசி மலையும் பறிபோகும் அபாயம் காணப்படுகிறது. 

இந்த சிலை விவகாரமும் எமது ஒற்றுமையின்மை, இனம், மதம் என்ற எண்ணமும், பற்றும் அற்றவர்களினால் அங்கு ஏற்பட்ட நிர்வாகமின்மை இடைவெளியில் ஏற்பட்ட நிலைகள்தான் இவை. 

அத்தோடு இந்த இடத்தில் சிலை வைப்பதற்கான ஆயத்தமாக மலையில் பீடம் அமைத்தபோது கடந்த 2024 ல் நான் நேரில் சென்று அவதானித்ததோடு, இதுபற்றி உரியவர்கள் சிலரோடு பேசினேன் அத்துடன் இது உகந்தை ஆலய சூழலில் நிறுவப்பட்டுள்ள இரண்டாவது புத்தர் சிலை அத்துடன் இன்னும் ஒரு சிலைக்கான பீடமும் அமைக்கப்பட்டுள்ளது இதன் பின்னணியில் சிங்களவர்கள் பலரைக் குடியேற்றும் திட்டம் மற்றும் வன இலாகாவின் செயற்பாடுகள் மற்றும் மலையில் நிறுவப்படவிருந்த 25 அடி முருகன் சிலையை நிறுவாமல் தடுத்தது அதன் பின்னர் தற்போது புத்தர் சிலை வைத்தது அதற்கு உடந்தையாக இருந்த படைகள், அதிகாரிகள் உள்ளிட்ட பல விடயங்கள் மக்களுக்குத் தெரிய வேண்டும். 

இந்த சிலை உடனடியாக அகற்றப்படுவதோடு இந்த அரசு எமது மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmb4nso3300x5qpbsdgft6686

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வழியே தான் கதிக்காம காலடி யாத்திரை செல்வது.

சிங்களம் பார்த்து குறிவைக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உகந்தை முருகன் ஆலய புனித பூமியில் புத்தர் சிலை!!!! தொடரும் சர்ச்சைகள்

May 28, 2025 11:31 am

உகந்தை முருகன் ஆலய புனித பூமியில் புத்தர் சிலை!!!! தொடரும் சர்ச்சைகள்

தொன்மை வரலாறு கொண்ட உகந்தை முருகன் ஆலயம் கடந்த சில நாட்களாக இலங்கையிலும் சர்வதேச அளவிலும் பேசு பொருளாக மாறிய வருகின்றது.

அம்பாறை மாவட்டத்தின் லாகுகல பிரதேச செயலாளர் பிரிவு தென் எல்லையில் அமைந்துள்ள தமிழர்களுடைய தொன்மையும் புராதனமும் வரலாறும் கொண்ட உகந்தை முருகன் ஆலய புனித பிரதேச பகுதியில் காணப்படும் ஒரு மலையில் திடீரென அப்பகுதியில் நிலை கொண்டுள்ள கடற்படையினரால் ஸ்தாபிக்கப்பட்ட புத்தர் சிலை தொடர்பான விவகாரம் தொடர்பில் பல்வேறு எதிர்மறையான கருத்துக்கள் தகவல்கள் ஊடகங்கள் வாயிலாக வெளியாகியுள்ளன.

இந்த விடயத்தை ஆராயும் விதமாக எமது ஊடகவியலாளர் உட்பட சக செயற்பாட்டாளர்கள் குழு அப்பகுதிக்கு சென்று குறித்த புத்த சிலை நிர்மாணம் குறித்து ஆராய்ந்துள்ளது.

இதற்கமைய ஆலயத்தில் காணப்பட்டவர்களிடம் பேசுகின்ற போது இந்த புத்தர் சிலை நிறுவுகின்ற விடயம் நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று 2023ல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என்றும் 2024 இல் ஒரு புத்தர் சிலை இங்கே நிறுவப்பட்டது என்றும் கூறப்பட்டது.

அத்தோடு கடந்த இரண்டு மாதங்களாக இந்த புத்தர் சிலை பெரிய அளவிலே இங்கே ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறப்பட்டது.

முருகன் ஆலயத்திற்கு முன்பாக கடற்கரை பிரதேசத்தில் வலது புறம் வள்ளியம்மன் மலை தோணிமலை போன்றவைகளும் இடது புறம் கடற்படை முகாமோடு இணைந்ததாகக் காணப்படுகின்ற ஒரு மலையும் அந்த மலையில் தான் இந்த புத்தர் சிலையும் நிறுவப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் நாங்கள் அவதானித்த போது இந்த புத்தர் சிலை கடற்படை முகாமில் இருந்து வந்த சிவில் உடை தரித்த இருவரால் அந்த சிலையுள்ள மலை துப்பரவு செய்யப்பட்டது.

இந்த சிலை அவர்களுக்கு தெரியாமல் அங்கு வேறு யாரும் நிறுவியிருக்க முடியாது, இது அவர்களுடைய கடற்படை முகாமுடன் காணப்படும் மலை பிரதேசம் என்பதையும் நாங்கள் அறிந்து கொண்டதோடு இது அவர்கள் வழிபடுவதற்காக நிறுவியிருக்கலாம் என்றொரு கருத்தும் அங்கு கூறப்பட்டது. அவ்வாறு கடற்படையினர் வணங்குவதாக இருந்தால் அதை அவர்களது முகாமினுள் வைத்திருக்கலாமே ஏன் அதை பொது வெளியில் அதுவும் உகந்தை முருகன் திருவம்பாவை காலத்தில் தீர்த்தமாடுகின்ற அந்த பிரதேசத்தில் நிறுவினார்கள் எனும் கேள்வியும் எழுகிறது.

மேலும் உகந்தை முருகன் திருவெம்பாவை காலத்தில் தீர்த்தம் ஆடுகின்ற அந்த பிரதேசத்தில் இதற்கு முன்னர் ஒரு சூலம் நிறுவப்பட்டிருந்தது என்றும் இப்போது அந்த சூலம் அகற்றப்பட்டிருக்கிறது என்றும் அது யாரால் ஏன் அகற்றப்பட்டது எனும் கேள்வியும் எழுகிறது.

இன்றைய தினம் ஆலயத்திற்கு புலனாய்வுத் துறையினரும் வந்து தங்களிடம் இதை யார் புகைப்படம் எடுத்தது யார் ஊடகங்களில் வெளியிட்டது என்று கேட்டிருந்தார்கள் என்றும் இந்த இடத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக அவர்கள் வருகை தந்து நின்றார்கள் என்று இரு பொலீசாரும் வந்திருந்தார்கள் எனவும் கூறப்பட்டது. அந்த பொலீசாரையும் அப்பகுதியில் காண முடிந்தது.

மேலும் அந்த இடத்தில் ஒரு அச்சமான பதட்டமான சூழலையும் நாங்கள் அவதானித்தோம். அதை தொடர்ந்து இந்த விடயங்களை ஆராய்ந்து தகவல்களை சேகரித்த பின்னர் நாங்கள் அங்கிருந்து வெளியாகியிருந்தோம் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனிடையே, “உகந்தைமுருகன் ஆயத்தின் மலையில் வள்ளியம்மன் ஆலயத்தை அண்டியதாக அமைக்கப்படவிருந்த முருகன் சிலையினை அமைக்க வேண்டாம் என்று தடுத்து நிறுத்திய வனத்துறைந மற்றும் ஏனைய திணைக்ககளங்கள் ஏன் இந்த புத்தர் சிலையினை நிறுத்தவில்லை.

எனவே இதன் பின்னணி என்ன என்பதையும் இது தொடர்பான உண்மைகளையும் உரிய திணைக்களங்கள் உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதோடு இந்த சிலை நிறுவிய விடயம் சைவத் தமிழர்களிடையே அதிர்ச்சியையும் தங்களுடைய உரிமை மறுக்கப்பட்டு இன்னும் ஒரு சமூகத்திற்கு உரிமை வழங்கப்பட்டிருக்கின்ற விடயத்தையும் பேசுபொருளாக்க்கி இருக்கிறது. எனவே இந்த அரசு உடனடியாக இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் எங்களுடைய கோரிக்கையை முன் வைக்கின்றோம்.இந்த சிலை பற்றிய விடயத்தை நாங்கள் பேசுகிறபோது சன்னியாசி மலையும் எங்களிடம் இருந்து பறிபோயிருக்கிறது. அங்கும் ஒரு புத்தர் சிலை நிறுவப்பட்டிருக்கிறது” என அம்பாறை மாவட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்

https://oruvan.com/buddha-statue-on-the-sacred-ground-of-ukantha-murugan-kovil/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உகந்தமலையில் புத்தர் சிலை இல்லை; கோடீஸ்வரன் எம்.பி. தெரிவிப்பு

உகந்தமலையில் புத்தர் சிலை இல்லை; கோடீஸ்வரன் எம்.பி. தெரிவிப்பு

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு சொந்தமான ஏழு ஏக்கர் பரப்பில் எந்த ஒரு புத்தர் சிலையும் வைக்கப்படவில்லை. யாரும் அலட்டிக் கொள்ள தேவையில்லை என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உகந்தமலை புத்தர் சிலை விவகாரம் ஊடகங்களில் வைரலாக எரிந்து வருகையில்,  இதுவரை மௌனம் சாதித்து வந்த அந்த மாவட்டத்திற்குரிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்,  முதல் தடவையாக வாய் திறந்திருக்கிறார்..

அவரிடம்  இவ்விவகாரம் பற்றி சனிக்கிழமை (31) கேட்டபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த விடயம் எனக்கு மக்களால் தெரிவிக்கப்பட்டது. இது உணர்வு பூர்வமான விடயம். கவனமாக கையாள வேண்டும் என்பதற்காக இதுவரை நான் ஒரு கருத்தும் கூறவில்லை.

இன்று நான் அங்கு நேரடியாக சென்றேன். அங்கு ஆலய குருக்கள் முதல் வண்ணக்கர் வரை சந்தித்து கலந்துரையாடினேன்.

விளக்கம் கிடைத்தது. அதாவது குறித்த சிலை உகந்தமலை சூழலில் வைக்கப்படவில்லை என்பது.

மாறாக,  உகந்த மலைக்கு அப்பால் கடற்கரைச் சூழலில் உள்ள மலை ஒன்றில் புத்தர் சிலை  நிறுவப்பட்டு உள்ளது. அது அண்மையில் நிறுவப்படவில்லை. பல மாதங்களுக்கு முன்பே நிறுவப்பட்டது. அப்போது இந்த அறிக்கை வெளியிடும் சமூக செயற்பாட்டாளர்கள் எங்கே? இருந்தார்களோ தெரியாது. நிற்க, அதோடு ஒட்டியதாக பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது என்பதை நேரடியாக அறிந்தேன்.

வருடாந்தம் முருகப் பெருமான் தீர்த்தமாடுகின்ற கடற்கரைச் சூழலில் கடற்படை முகாமுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது. அச் சூழலில் மீன்வாடிகளும் உள்ளன. பெரும்பான்மையின மீனவர்கள் உள்ளனர்.

ஆனால், இதனை சில ஊடகங்களும் சமூக செயற்பாட்டாளர்கள் அரசியல்வாதிகள் என்று தங்களைக் கூறிக்கொள்வோர் சிலரும் முண்டியடித்துக்கொண்டு வழமைபோல் அறிக்கை வெளியிட்டனர். அவ்வளவு தான். 

“உகந்தமலையில் நாங்கள் முருகன் சிலை ஒன்றை நிறுவ முற்பட்டபோது அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அதே சூழலில் இப் புத்தர் சிலை எவ்வாறு நிறுவப்பட்டது? என்று மக்கள் கோருகின்றனரே? கதிர்காமம் போல் உகந்தையையும் மாற்ற திட்டமிட்ட சதி நடக்கிறது? என்று  மக்கள் கேட்கின்றனரே?” 

இதற்கு என்ன சொல்கிறீர்கள்? என்று எமது ஊடகவியலாளர் கேட்டதற்கு அவர் பின்வருமாறு கூறினார்.

உகந்தமலையில் வள்ளியம்மன் மலையில் கடந்த காலத்தில் முருகன் சிலை  அமைப்பதற்கு  முயற்சி செய்த போது அதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் தடை செய்தது உண்மைதான். 

அதற்கு அதே மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டு இருப்பதாக கூறுவது பொய். அபத்தம் கதிர்காமத்தை போல் உகந்தையையும் மாற்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றார்.

https://thinakkural.lk/article/318626

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.