Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியூமராலஜி நிஜமா........!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நியூமராலஜி நிஜமா........!!!

நேற்று காலையில் வண்டியில் போய் கொண்டிருக்கும் போது ரேடியோ மிர்ச்சியில் கேட்ட ஒரு செய்திதான் இந்த பதிவெழுதுவதற்கான காரணம். அதாவது ஒவ்வொரு வாரமும் சென்னையில் குறைந்தது 500 பேர் வரையில் தங்கள் பெயர்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்களாம். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் பெருவாரியான காரணம் நியூமராலஜியாம்....

இப்போது நியூமராலஜியுடன்...நேமியாலஜி என்கிறா ஜியும் சேர்ந்துள்ளதால் இத்தனை கூத்தும் நடக்கிறது.வேறு மாதிரியில் சொன்னால் ஒவ்வொரு வாரமும் சென்னையில் குறைந்தது 500 பேர் தங்களின் பெயரை மாற்றிக் கொள்வதால் வாழ்க்கையில் சுபிட்சம் அடைகிறார்கள் என கொள்ளலாம்.

என்ன அபத்தம் இது...... இதை மூடநம்பிக்கை என சொல்வதை விட பேராசை மற்றும் அறியாமையின் உச்சம் என்றே சொல்லலாம்.

வாஸ்து சாஸ்திரம், ஃபெய்ங் ஷீய் மாதிரி நியுமராலஜியும் நிரூபிக்கப் படாத/நிரூபிக்க முடியாத புதிரான அறிவியல் என்பதுதான் என்னுடைய தெளிவு. எனக்கும் நியூமராலஜியில் ஓரளவு பரிச்சயம் உண்டு, அதில் வியக்கவைக்கும் சில ஆச்சர்யங்களும் உண்மைகளும் இருக்கிறது.மற்றபடி பெயரை மாற்றுவதால் மட்டுமே ஒருவனுக்கு சுபிட்சம் வரவழைக்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அது சாத்தியமும் இல்லை

நியுமராலஜியின் பூர்வீகம் பற்றி நான் படித்த சிலவற்றை இங்கே பட்டியலிடுகிறேன்.....

எகிப்தில் வாழ்ந்த(வாழும்) 'Rosicrusians' இன மக்கள் வைத்திருந்ததாக சொல்லப்படும் 'Rose Cross' என்கிற அமைப்பு(நம்ம தமிழ்சங்கம் மாதிரி..) எழுத்துக்களுக்கான சப்த எண் குறித்து ஆராய்ந்தார்களாம்.

இவர்களிடமிருந்து இந்த கலை Hebrews கற்றுக் கொண்டதாக தெரிகிறது.இவர்கள் உறுவாக்கியதே Hebrew Kabala என்கிற முறை...

இவர்களை தொடர்ந்து கிரேக்கர்களும் இந்த கலையை கைகொண்டதாக தெரிகிறது.

நியூமராலஜி குறித்து புத்தகங்களாக நமக்கு கிடைத்திருப்பவை

12ம் நூற்றாண்டில் "மோஸஸ் டி லியான்" என்பவர் எழுதிய "The Book of Formation", "The Book of Splendour"

14ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "The Book of Thoth"

16ம் நூற்றாண்டில் John Hyden "Holy Guide"

18ம் நூற்றாண்டில் ஜெயின் ஜெர்மைன் எழுதிய Practical Astrology

நியுமராலஜி என்கிற பெயர் Cheiro என்பாரால்தான் முதன் முதலில் பாவிக்கப்பட்டது. இது நடந்தது பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பாதியில்

நியூமராலஜியின் நீட்சியே Tarot எனப்படும் சித்திரங்களை வைத்து பலன் சொல்லும் சோதிடமுறை

சீனர்கள் தங்களுக்கேயுரித்தான தனித் தன்மையுடன் ஒரு வகையான எண் கணிதத்தினை கையாண்டது தெரியவருகிறது. ஆனால் இது அரச குடும்பத்தினர் மட்டுமே பழக்கத்தில் வைத்திருந்தனர். மிக ரகசியமாக காக்கப் பட்டது.

இனி நம்மூருக்கு வருவோம்....

சம்ஸ்கிருதத்தில் "அஷரலஷா" என்கிற நூலில் எழுத்துக்களுக்கான ஒலி அளவும் அதன் பலன்களும் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

நமது மந்திர சாஸ்திரங்களில் எண்களை வைத்து யந்திரம் எழுதும் முறை இன்றளவும் உள்ளது.

அகத்தியரும்,வராகமிகிரரும் இது பற்றிய குறிப்புகளை தங்களது படைப்புகளில் குறிப்பிட்ட்டுள்ளனர்.

நம்ம திருவள்ளுவர் கூட "எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்"...என ஒரு குறளில் இது குறித்து கூறியிருக்கிறார். 'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்பது இன்னொரு பிரபலமான சொற்றொடர்.

நியூமராலஜியின் மகத்துவம் பற்றி மொழி ஆளுமை கொண்ட யாரும் பக்கம் பக்கமாய் எழுதிக் குவிக்க முடியும்...ஆனால் என் வரையில் நியுமராலஜி என்பது 'எழுத்துக்களில் ஒலி அது உருவாக்கும் அதிர்வு அதன் அளவுகோல்...அதை பொருத்தமாக அமைப்பதனால் உருவாகும் ஒத்திசைவு(Harmony)....அதன் பலாபலன்களே நியுமராலஜி

ஒவ்வொரு எழுத்தின் அதிர்வுகளை வைத்து அதனை ஒன்பது கிரகங்களுக்கு இனையாக்கி அதன் தாக்கம் அந்த எழுத்துக்களின் மீது பிற்காலத்தில் திணிக்கப்பட்டிருக்க வேண்டுமென நினைக்கிறேன்.ஒவ்வொரு எண்ணின் ஒலி அதிர்வும் மற்ற ஒலி அதிர்வுடன் ஒத்திசைவும்,ஒவ்வாமையும் கொண்டிருக்கின்றன. இதையே சோதிடர்கள் 3 க்கு 6 பகை என சொல்ல கேட்டிருப்பீர்கள்.தமிழ் இலக்கணத்தில் வரும் மாத்திரை, நேரசை,நிரையசை போன்றவையும் இத்தகைய சூத்திரக் கணக்குகளே.....

நமது உடலானது பல நாடிகளால் ஆனதாக சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.நாடிகளை வசப்படுத்தினால் எதுவும் சாத்தியமாகுமாம்.சப்த சலனமாய் உச்சரிக்கும் மந்திர ஒலிகள் இந்த நாடிகளைத் தூண்டி உச்சரிப்பவர் மற்றும் கேட்பவரிடம் சலனத்தை உண்டாக்கும் என்கிறார்கள்.மந்திரங்களை உச்சரிக்கும்போது அந்தந்த பீஜங்களுக்கான உடல் உறுப்பின்மீது சித்தத்தை நிறுத்தி தொடர்ந்து கூற அந்த மந்திரங்களுக்கான பலனை பெறலாமாம்.

மந்திரங்களை தொடர்ந்து உச்சரிப்பதை 'உருவேற்றுதல்' என்பர்.மந்திர சொற்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் உருவேற்றினால் உள்ளம் உறுதி பெற்று தான் சொல்வதும் செய்வதும் சாத்தியமாகும் என்கிற நம்பிக்கை தோன்றுகிறது.

இந்த தத்துவத்தின் அடிப்படையில்தான் நமது எண் கனித வல்லுனர்கள் செயல்படுகின்றனர் என்பது என்னுடைய கணிப்பு......

பெயரை மாற்றுவதால் பலன் இருக்கிறதோ இல்லையோ என் அனுபவத்தில் சில பெயர்கள் அத்தனை சரியில்லை என்பதே என்னுடைய அனுபவம். ஆண்களை பொருத்த வரையில் ரமேஷ், சுரேஷ் என்கிற பெயர் இருப்பவர்களின் வாழ்க்கை ஏமாற்றங்களும், போராட்டங்களும் மிகுந்ததாக இருப்பதை பார்த்திருக்கிறேன். அதே வகையில் பெண்களில் கீதா, சுதா போன்ற பெயர்கள். இது என்னுடைய அனுபவம் மட்டுமே இது பிழையாக கூட இருக்க வாய்ப்புள்ளது.

பதிவு நீளமாகிக் கொண்டிருக்கிறது....உண்மை தமிழன் பார்த்தால் டென்சனாகிவிடுவார் எனவே...

ஒன்றை மட்டும் சொல்லி முடிக்கிறேன், இங்கே பேசப்படும் அல்லது புழக்கத்தில் இருக்கும் நியுமராலஜி வெறும் ஆரம்ப நிலை மட்டுமே...அவிழ்க்கப் பட வேண்டியவை நிறையவே இருக்கின்றன.சூட்சும எண்கள் அதன் தாக்கம், எண் இயந்திரம் என பேச எழுத நிறையவே இருக்கின்றன.ஒவ்வொரு தனி மனிதனுக்கும் கூட இயந்திரம் எழுத முடியும் அதற்கான முறைகள் சூத்திரங்கள் எல்லாம் இருக்கின்றன......அதையெல்லாம் எழுதப்போனால் ஒரு மெகா தொடராக போய்விடக் கூடிய ஆபத்து(!) இருப்பதால் இந்த அளவில் இந்த பதிவினை முடிக்கிறேன்....

பதிவின் ஸ்வாரஸ்யம் கருதி...அடுத்த பதிவில் சில வலை பதிவர்களின்...வலைப் பெயர்களை பிரித்து மேயலாமென நினைக்கிறேன்....விருப்பம் உள்ளவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடாலாம்.....ஹி...ஹி....

http://pangaali.blogspot.com/2007/09/blog-post_13.html

இந்த கணனியின் இயக்கத்துக்கும் அடிப்படையில் இரண்டே இரண்டு இலக்கங்கள்தான் காணமாம்.. மனுசனுக்கு இருப்பதில தப்பில்லைத்தானே?! :blink::unsure:

எஸ்கீயூஸ் மீ என்ட பெயரை எப்படி மாற்றினா நான் அவுஸ்ரெலிய பிரதமாரா வருவேன் என்று ஒருக்கா சொல்லுங்கோ!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜமுனா, பெயரை மாற்ற முதல் வெள்ளை தோலாக இருக்க வேண்டும் அவுஸ்திரேலியாவின் பிரதமராக வருவதற்கு.

வெள்ள தோல் எல்லாம் தேவையில்லை நல்ல நம்பரா பார்த்து பெயரை மாற்றுங்கோ நுணாவிலன் அண்ணா நான் பிரதமரா ஆனதும் உங்களுக்கு நிதிஅமைச்சர் பதவியை தருகிறேன்!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.