Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யோக முத்திரைகள்

7 Chakras

YOGA MUDRAS

யோக முத்திரைகள்

1. ஞான முத்திரை : அறிவு முத்திரை

1.jpg

ஞானம் என்றாலே அறிவுதானே, இந்த முத்திரை அறிவைப் பெருக்கும். அறிவு முத்திரை என்றும் இதனை அழைக்கலாம். 

முறை: கட்டை விரலின் நுனியானது சுட்டு விரலைத் தொடுமாறு மற்றைய விரல்கள் நீட்டப்பட்டும் அமையத் தியானம் செய்ய வேண்டும். நீங்கள் இருந்துகொண்டோ அல்லது நின்றுகொண்டோ அல்லது படுத்துக்கொண்டோ செய்யலாம். 

இடம்: எந்தவொரு அமைதியான இடமும் இதற்கு உகந்தது. 

நேர அளவு: இந்த முத்திரைக்கு குறிப்பிடும்படியாக நேர அவகாசம் தேவையில்லை, எந்த நேரத்திலும் இதனைச் செய்யலாம். 

பலன்கள்: அறிவு முத்திரையல்லவா, அறிவைக் கூட்டும். கட்டை விரலின் நுனியானது அகஞ்சுரப்பிகளின் (முக்கியமாக கபச்சுரப்பி – pituitary ) மையமாக விளங்குகிறது. விரல்கள் அமுக்கப் படுவதால் இந்தச் சுரப்பிகள் நன்கு வேலை புரிகின்றன.ஆகவே இந்த முத்திரை,• ஞாபக சக்தியைக் கூட்டும், மூளையைக் கூர்மையாக்கும்.• கிரகிக்கும் செயற்பாட்டைக் கூட்டும், மேலும் தூக்கமின்மையை நீக்கும்.• ஒழுங்கான பயிற்சியின் மூலம் மன உள நோய்களான ஹிஸ்டீரியா, மன எரிச்சல் போன்றவற்றைக் குணப்படுத்தும். மனம் சாந்தமடையும்.

2. பிருத்வி முத்திரை : பூமி முத்திரை

2.jpg

 

பிருத்வி என்றால் சமஸ்கிருதத்தில் பூமி மாதா என்பதாகும். 

முறை: மோதிர விரலின் நுனிப்பகுதி கட்டை விரலின் நுனியுடன் தொட ஏனைய விரல்கள் நீட்டப்பட்டிருத்தல்.

நேர அளவு: வரையறை இல்லை

பலன்கள்: எந்தவித உடல் சோர்வினையும் நீக்கும்.

• உடல் பலவீனமற்றவருக்கு நிறையைக் கூட்டும்.
• தோலின் கட்டமைப்பை உகந்ததாக்கி தோலினை பளபளப்பாக வைத்திருக்க உதவும்.
• உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் உடலினைப் பேணுவதன் மூலம் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

 3. வாயு முத்திரை : காற்றிற்கான முத்திரை

3.jpg

முறை: சுட்டு விரலை கட்டை விரலின் அடிப்பகுதியிலும் கட்டை விரலால் சுட்டுவிரலின் மேல் இலகுவாகத் அழுத்தியும் மற்றைய விரல்கள் நீட்டியும் இருக்க வேண்டும்.

நேர அளவு: 45 நிமிடங்கள் இவ்வாறு இருத்தலின் மூலம் நோயின் தாக்கம் 12 – 24 மணி நேரங்களுக்குள் குறைந்து விடும். இரண்டு மாதங்களுக்குத் தொடர்ந்து செய்தல் சாலச் சிறந்தது. 

பலன்கள்:
• மூட்டு வாதம், ஏனைய வாத நோய்கள் ( rheumatism, arthritis, gout) மற்றும் பார்க்கின்சன் வியாதி
• கழுத்து முதுகென்பு அழற்சி (Cervical Spondilytis) முக நரம்பு செயலிழப்பு (facial paralysis)
• வாயுத்தொந்தரவு, செரிமானக் கோளாறு

 

4. சூரிய முத்திரை

44.jpg


முறை: மோதிரவிரலை மடக்கி அதன் மேல் கட்டை விரலால் அழுத்துதல்

நேர அளவு: ஒரு நாளைக்கு இரு தடவை 5 – 15 நிமிடங்கள்

பலன் :
• தைரோய்ட் சுரப்பியின் மையத்தை கூர்மையாக்கும்
• உடலில் கொழுப்பைக் கரைத்து நிறையைச் சீர் படுத்த உதவும்
• பதட்டத்தைப் போக்கும்
• சமிபாட்டுக் கோளாறுகளைத் தீர்க்கும்

 

5. பிராண முத்திரை : உயிர் முத்திரை

55.jpg




முறை: கட்டை விரல் நுனியைச் சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரல் நுனிகள் தொடுமாறு வைத்துக் கொள்ள ஏனைய விரல்களை நீட்டி வைத்திருத்தல். 

நேர அளவு: எக்காலத்திலும் வரையறையின்றி செய்யலாம். 

பலன்: உயிர் முத்திரை அல்லவா. உயிரின் சக்தியைப் பெருக்கும். பலவீனமானோர் தேக வலுப பெறுவர். குருதிக்குழாய் அடைப்புகளைச் சரிபடுத்தும். இதனை ஒழுங்காக பயிற்சி செய்தால் நன்கு உற்சாகமுள்ளோராக மாறுவோம்.


• நோயெதிர்ப்புச் சக்தியைக் கூட்டும்
• கண் பார்வை சிறப்புற உதவும், கண் சம்பந்தமான வியாதிகளைக் குறைக்கும்
உயிர்ச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் விளைவுகளைச் சீர்படுத்தும், களைப்பைப் போக்கும்..

6. பச்சன் முத்திரை : சமிபாட்டு சம்பந்தமானது.

66.jpg



 

பாபா படம் மூலம் அனைவரும் அறிந்த முத்திரை (ஆனால் முத்திரை பிடிப்பதில் சிறு வேறுபாடு உண்டு)
உணவு சமிபாடு அடைவதுடன் தொடர்புடையது.

 முறை: நடு விரல், மோதிர விரலின் நுனிகள் கட்டை விரலின் நுனியுடன் இணைத்து மற்றைய விரல்கள் நீட்டப்பட்டிருத்தல். 

 நேர அளவு: நாளாந்தம் 45 நிமிடங்கள் எனக் கூறப்படுகிறது. எவ்வளவு அதிக நேரம் செய்கிறோமோ அதற்கேற்ப பலன் கூடும். சாப்பிட்ட பின்னர் பயன்படுத்துவது உகந்தது. 

 பலன்:

எமது உடலின் கழிவுத் தொகுதியைச் சீராக வைத்திருக்க உதவுகிறது.

• நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்
• மலச்சிக்கல், மூலவியாதி போக்கும்
• கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது

 

7. லிங்க முத்திரை : வெப்பம் மற்றும் சக்திக்கான முத்திரை

77.jpg

முறை: இரு கரங்களின் விரல்களையும் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொள்ளவும், பின்னர் இடது கட்டை விரலை உயர்த்தி, அதனை வலது கட்டை விரல் மற்றும் சுட்டு விரல்களுக்குள் சுற்றி வருமாறு அடக்கவும்.

நேர அளவு: எந்த நேரமும் உகந்தது, ஆனால் நீண்ட நேரம் செய்தல் தவிர்க்கப்படல் நல்லது. 

பலன்: இந்தச் செயன் முறை எமது உடலில் வெப்பத்தை உருவாக்குகிறது. பால், நெய் தண்ணீர் மற்றும் பழச் சாறு போன்றவைகளை இந்த முத்திரையைப் பயன்படுத்தும் போது எடுப்பதால் கூடுதலான பலன்கள் கிடைக்கும்.

• சளி உருவாதலைக் கட்டுப்படுத்தும், சுவாசப்பைக்கு சக்தியைக் கொடுக்கும்.
• சளிக்காய்ச்சல் சுவாசக்குழாய் நோய்களைக் குணப்படுத்தும்.
• உடலுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும்.

8. அபான வாயு முத்திரை : இதய முத்திரை

88.jpg

 

முறை:
சுட்டு விரலின் நுனியானது கட்டை விரலின் அடிபகுதியைத் தொடவேண்டும், பின்னர் நடுவிரலின், மோதிர விரலின் நுனிகளும் கட்டை விரலின் நுனியோடு தொடவேண்டும் சுண்டு விரல் மட்டும் நீட்டப்பட்டு இருக்கும்.

நேர அளவு: எவ்வளவு நேரமும் செய்யலாம். இதய மற்றும் உயர் அழுத்த நோய் உள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் இருதடவைகள் 15 நிமிடங்களுக்குச் செய்து வருதல் மிக்க சிறப்பைத் தரும். 

பலன்: இதயத்திற்கு அனுகூலத்தைத் தரும். ஒரு ஊசி மருந்தினைப் போல மார்படைப்பினைக் குறைக்க உதவும். மேலும் வாயுவை உடலில் நீக்க உதவும்.


• இதயத்தை வலுப்படுத்தி இதயதுடிப்பைச் சீராக்கும்.
• கழிவுத் தொகுதியை ஒழுங்குபடுத்தும்
• சமிபாட்டை ஒழுங்காக்கும்.

9. வருண முத்திரை : நீருக்கான முத்திரை

99.jpg



 

முறை: சுண்டு விரல் நுனியையும் கட்டைவிரல் நுனியையும் சேர்த்துக் கொள்ளவும், மிகுதி மூன்று விரல்கள் நீட்டப்பட்டிருத்தல் வேண்டும்.

பலன் : உடலின் நீர்ச் சமநிலையைப் பேணுகின்றதில் உதவுவதோடு நீர்ப் பற்றாக்குறையால் வரும் எல்லா நோய்களையும் வருவதைத் தவிர்க்க உதவும்..


• இரைப்பை-குடல் அழற்சியால் ஏற்படும் வலியைத் தடுக்கிறது
• உடல் நீர் சமநிலை பேணுகிறது.
• தோல் சம்பந்தமான நோய்களைக் குணமாக உதவுகிறது
.

யோக முத்திரைகள்: YOGA MUDRAS
No image preview

YOGA MUDRAS

யோக முத்திரைகள் 1. ஞான முத்திரை : அறிவு முத்திரை ஞானம் என்றாலே அறிவுதானே , இந்த முத்திரை அறிவைப் பெருக்கும் . அறிவு முத்திரை ...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.