Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Gary_A-e1748991074857.jpeg

Columnsசிவதாசன்

கனடா: அமைச்சர் ஆனந்த சங்கரியின் திரிசங்கு நிலை

சிவதாசன்

கனடாவின் உள்ளக பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் இன்று, ஜூன் 03, 2025, மாண்பு மிகு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி புதியதொரு சட்டமூலத்தை அறிவித்திருக்கிறார். ‘கனடியர்களைப் பாதுகாப்பாக வைத்திருத்தல்’ என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் இச்சட்டத்திற்கு பலமான எல்லைகள் சட்டம் (Strong Borders Act) எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. ‘நாடு கடந்த திட்டமிடப்பட்ட குற்றத்தை எதிர்கொள்ளல்’ (combat transnational organized crime), சட்டவிரோதமான ஃபென்ரனில் போதை வஸ்து கடத்தலைத் தடுத்தல் (stop the flow of illegal fentanyl) மற்றும் கருப்புப் பணச்சலவைச் செயற்பாடுகளைத் (crack down on money laundering) தடுத்தல் ஆகியவற்றின் பின்னாலுள்ள அதி நவீன வலையமைப்புக்களை எதிர்கொள்ள வல்லதாக கனடிய பாதுகாப்பு அம்சங்களைப் பலப்படுத்தல் இச்சட்டத்தின் முக்கிய நோக்கமாக இருப்பினும் குடிவரவு விடயங்களிலும் அமைச்சரின் அதிகாரம் தலையை நீட்டுவதற்கான அனுமதியும் இருக்கிறது போலத் தெரிகிறது.

அதிகாரப் பரவலாக்கம்


  • போதை வஸ்து, ஆயுதங்கள் கடத்தல் வாகனத் திருட்டு ஆகியவற்றைக் காண்காணிக்கும் அதிகாரம் சுங்கச் சட்டத்தின் கீழ் வந்தாலும் சில எல்லைகளினூடு வரும் / போகும் பொருட்களைத் தேக்கி வைத்திருக்கும் / பொதிகளைத் தயாரிக்கும் கிட்டங்கிகள் (warehouses), கொள்கலன்கள் (containers), அல்லது பாரவண்டிகளைப் (trucks) பரிசோதிக்கும் அனுமதி தற்போது இல்லை என்பதால் அச்சட்டத்தை மாற்றுவது;

  • கரையோரப் பாதுகாப்ப்பில் ஈடுபடும் காவற் படையினர் சந்தேகத்திற்கிடமாக நடமாடும் கலங்களை வழிமறித்து அல்லது அவற்றுக்கிடையேயான தொடர்பாடல்களைக் கிரகித்து பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் சமுத்திர சட்டத்தை (Oceans Act) மாற்றுவது;

  • சர்வதேச சட்ட நிர்வாக அமைப்புகளுடன் பரிமாறல்களை அதிகரிக்கும் வகையில் RCMP காவல்துறையின் அதிகாரங்களை விரிவாக்குவது;

  • புதிய ‘தகுதியின்மை’ (ineligibility) விதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் சடுதியாக அதிகரிக்கும் அகதிகள் கோரிக்கைகளிலிருந்தும் நாட்டைப் பாதுகாப்பது;

  • அகதிக்கோரிக்கைகள் எவ்வழியில் பெறப்படுகின்றன, ஆராயப்படுகின்றன, தீர்மானிக்கப்படுகின்றன ஆகிய விடயங்களைக் கூர்மைப்படுத்தல்;

  • குடிவரவுப் பத்திரங்களை ரத்து செய்யவோ, இடைநிறுத்தவோ அல்லது மாற்றுவற்கோ அல்லது அகதிகோரிக்கைகளுக்கான புதிய விண்ணப்பங்களை ரத்துசெய்யவோ, தற்காலிகமாக இடைநிறுத்தவோ அல்லது முற்றாக நிறுத்தவோ தேவையான அதிகாரங்களை திணைக்களங்களுக்கு வழங்குதல்;

  • குடிவரவாளர் பற்றிய பிரத்தியேக தகவல்களை குடிவரவு,அகதிகள், பிரஜாவுரிமைத் திணைக்களம் ஏனைய மத்திய, மாகாண மற்றும் பிரதேச அதிகாரங்களுடன் பகிர்ந்துகொள்ளல்;

ஆகிய விடயங்களில் மாற்றங்களைக் கொண்டுவர அமைச்சரால் முன்மொழியப்படும் புதிய சட்டமூலம் வழிவகுக்கிறது.

நாடுகடந்த திட்டமிட்ட வகையில் செயற்படும் குற்ற அமைப்புக்கள் மற்றும் ஃபென்ரனில் போதை வஸ்து கடத்தல்

  • ஃபென்ரனில் போதை வஸ்து தயாரிப்பிற்குத் தேவையான மூலப்பொருட்கள் இறக்குமதியாவதை அவதானித்து விரைவாகக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சுக்கு அதிகாரங்களை வழங்கல்

  • தேவையேற்படின் ஒருவரது பிரத்தியேக தகவல்களைப் பெறும் வகையில் Criminal Code, MLACMAct, CSIS Act ஆகிய சட்டங்களை மாற்றி இத்திணைக்களங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்குதல்

  • எலெக்ட்றோனிக் ஊடகங்களை ஊடுருவி ஒருவரது பிரத்தியேக தொடர்பாடல்களைக் கண்காணிக்க்கும் வகையில் புலனாய்வு திணைக்களங்களுக்கு அதிகாரங்களை வழங்கும் வகையில் புதிய சட்டமொன்றை உருவாக்குதல்

  • கனடா போஸ்ட் மூலம் விநியோகிக்கப்படும் தபால்கல், பொதிகளைத் திறந்து பரிசோதிக்கவும், தேவையானால் குற்றங்களைப் பதியவும் காவற்துறையினருக்கு அனுமதி வழங்கும் வகையில் சட்ட மாற்றத்தைக் கொண்டு வருதல்

கருப்பு பண வருகையைத் தடுத்தல்

  • கருப்புப் பணத்தைச் சலவை செய்தல் மற்றும் பயங்கரவாதிகளுக்குப் பணம் வழங்கல் போன்ற விடயங்களைத் தடுக்க கடினமான தண்டனைகளை வழங்கும் வகையில் சட்டங்களை இயற்றுதல் /மாற்றுதல்

  • பெரிதளவான பண மாற்றம், மூன்றாம் தரப்பு பண மாற்றம் ஆகியவற்றைக் கண்காணித்தல்

  • வங்கிக் கணக்குகளில் காணப்படும் சந்தேகத்துக்கிடமான பண மாற்றங்கள் பற்றி சம்பந்தப்பட்ட அரச, தனியார் நிறுவனம்ங்களிடையே தகவற் பரிமாற்றத்துக்கு வழி செய்தல்

மேலும் வரவிருக்கும் புதிய சட்டங்கள் , மாற்றங்கள்

கனடாவைப் பாதுகாப்பதற்கெனக் கொண்டுவரப்படும் ‘பலமான எல்லைகள் சட்டம்’ துப்பாக்கிகளின் பிரயோகத்தைக் கட்டுப்படுத்தியும், தொடர் குற்றவாளிகள் இலகுவில் பிணை பெறுவதைத் தடுக்கவும், வாகனத் திருடர்கள், வீடுகளை உடைத்து திருடுபவர்கள், ஆள் மற்றும் போதை வஸ்து கடத்தல்காரர்கள் ஆகியவர்களிடமிருந்து பிரஜைகளுக்கு பாதுகாப்பு வழங்கவும் அரசு உத்தேசம் கொண்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். இதற்காக $1.3 பில்லியன் தொகையைச் செலவிடத் தயாராகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

அமைச்சர் ஆனந்தசங்கரியின் திரிசங்கு நிலை

இச்சட்டமூலம் அறிவிக்கப்பட்டபோது உடனடியாக ஒரு ஊடகவியலாளர் மாண்புமிகு அமைச்சரை இக்கட்டில் மாட்டிவிடும் வகையில் கேள்வியொன்றைக் கேட்டார். “சில வருடங்களுக்கு முன் வான்கூவரில் கரை தட்டிய கப்பலில் வந்த அகதிகள் விடுதலைப் புலிகள் அல்லவா. அப்போது நீங்கள் கனடிய தமிழர் பேரவையின் சட்ட ஆலோசகராக இருந்தீர்களே. இப்பின்னணியில் இப்போது அறிமுகமாகும் சட்டமூலத்தை எப்படி நடைமுறைப்படுத்தப்போகிறீர்கள்” என்ற சாரத்தில் அக் கேள்வி இருந்தது. இதற்குப் பதிலளித்த அமைச்சர், விடுதலைப் புலி, கனடிய தமிழர் பேரவை போன்ற ஆபத்தான பதங்களைச் சாதுரியமாகத் தவிர்த்து அவரது அமைச்சர் தொப்பியை மாற்றிவிட்டு ஒருகணம் வழக்கறிஞராக மாறிப் பதிலளித்து ‘வாய்ப்பில்லை ராஜி’ எனக்கூறி அவரை அனுப்பிவிட்டார் (எனது பார்வையில்).

இக்குறிப்பிட்ட ஊடகவியலாளரிடமிருந்து வந்த அம்பு நீண்ட நாட் தயாரிப்பாக இருந்திருக்குமென்று நினைக்கிறேன். ஆனால் இதைவிட மோசமான பல அம்புகள் இன்னும் பலவித ஊடகவியாளர்களின் அம்பறாத்துணியில் பதுங்கியிருக்க வாய்ப்புண்டு. குடிவரவு, வெளிவிவகாரம், தபால், சுகாதாரம், தகவற் தொடர்பு என ஏகப்பட்ட அமைச்சர்களின் அதிகாரங்களை அள்ளிக் கொண்டுவந்து அமைச்சர் ஆனந்தசங்கரியின் பாசறையில் போட்டுவிட்டு “ஏலுமெண்டால் செய்துபார்” என்று கார்ணி தப்பித்துக்கொண்டுவிட்டார். இவற்றில் பெரும்பாலானவை பெரியவர் ட்றம்பைத் திருப்திப்படுத்துவதற்காக என்பது பளிச்சென்று தெரிகிறது.

காளிஸ்தான் பயங்கரவாதிகள் என யாராவது தொண்டை கிழியக் கத்துவது அமைச்சரது செவிப்பறைக்குள் நுழையும் போது அது ‘விடுதலைப் புலிகள்’ ஆகவே அவருக்குக் கேட்கும். கத்துபவர்களின் நோக்கமும் அதுவாகவே இருக்கும். இப்பின்னணியில் தமிழ்ச் சமூகத்துடனான அவரது ஊடாடல்களை அவர் மட்டுப்படுத்தத் தள்ளப்படுவார். பாதுகாப்பு காரணங்களுக்கென குடிவரவு விண்ணப்பங்கள் ரத்துச் செய்யப்படும்போது அதனால் பெருவளவு பாதிக்கப்படப் போபவர்கள் வெள்ளையரல்லாதவர்கள். இதனால் அமைச்சருக்கு எதிராக அவரது ‘தோலினமே’ கொடி பிடிக்க (பனர் பிடிக்க (?)) கிளம்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எல்லைகளைப் பாதுகாத்தல் என்ற பெயரில் தனியார் சுதந்திர எல்லைகளை மீறும் பல சட்ட மாற்றங்கள் அமைச்சருக்குப் பல வகையான எதிரிகளையும் தேடித்தர வாய்ப்புண்டு.

அதைவிடவும் அச்சம் தரும் விடயம் இந்த ‘ஓர்கனைஸ்ட் கிரைம்’ கும்பல்கள். அமைச்சர் முன்பு போல ரொயோட்டா கொரோல்லாவில் பயணம் செய்யக்கூடாது. மாறாக இலான் மஸ்க்கிடமிருந்து ஒரு ‘சைபர் ட் ரக்’ ஒன்றை (இதுவரை வாங்காமலிருந்தால்) வாங்கி வைத்திருப்பது நல்லது.

ஆனால் அமைச்சரது இந்த சட்ட மூலம் ஒரு விடயத்தில் சில நல்ல விடயங்களைச் செய்யும் எனவும் எதிர்பார்க்கலாம். சமூக ஊடகங்களில் உலவும் தலை மாறிகளும், தலையாட்டிகளும் கொஞ்சம் ஓரமாக நிற்கவேண்டி ஏற்படலாம். அமைச்சருக்கு விருப்பமிருக்கிறதோ இல்லையோ எதிரிகளைச் சமாளிக்க சில தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்தேயாகவேண்டும். இதனால் நண்பர்கள் எதிரிகளாகவும் எதிரிகள் நண்பர்களாகவும் மாறுவதற்கான சூழல் ஏற்படுமெனப் பட்சி சொல்கிறது.

அமைச்சருக்கு எனது அட்வைஸ்? விளக்குக் கொழுத்துவதையும் பட்டயம் வழங்குவதையும் சற்றுத் தவிர்த்து அதிக காலத்தை ஒட்டாவாவில் கழிப்பது நல்லது.

|
No image preview

கனடா: அமைச்சர் ஆனந்த சங்கரியின் திரிசங்கு நிலை |

சிவதாசன் கனடாவின் உள்ளக பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் இன்று, ஜூன் 03, 2025, மாண்பு மிகு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி புதியதொரு சட்டமூலத்தை அறிவித்திருக்கிறார். 'கனடியர்களைப் பாதுகாப்பாக...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.