Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கலாநிதி கீதா கோபிநாத் இன்று இலங்கை செல்கின்றாா்.

adminJune 15, 2025

geetha.jpg?fit=600%2C400&ssl=1

சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் இன்று (15)  இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ  பயணமாக  இலங்கை செல்கின்றாா்.   அவா் தனது  பயணத்தின் போது, நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது, கடன் மற்றும் நிர்வாகம்” என்ற தலைப்பில் 2025 ஜூன் மாதம் 16 ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ள மாநாட்டில்  சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய சீர்திருத்தத் திட்டத்தின் முதல் பாதி நிறைவடைந்துள்ள நிலையில் நடைபெறவுள்ள  இந்த மாநாட்டில், இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை அடைவதில் உள்ள அனுபவங்கள், கடன் மறுசீரமைப்பு மற்றும் நிர்வாகம் மற்றும்  எதிா்கொள்ளவுள்ள சவால்கள் குறித்து கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

https://globaltamilnews.net/2025/216841/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலாலை சந்தித்தார் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத்

Published By: DIGITAL DESK 3

16 JUN, 2025 | 09:29 AM

image

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மைப் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்பு இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் பொருளாதார மீட்சியில் சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பங்கு குறித்து இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இதன்போது பாராட்டினார்.

494822954_708265468568554_54631263881100

'இலங்கையின் மீட்பு பாதை - கடன் மற்றும் நிர்வாகம்' என்ற தொனிப்பொருளில்  இன்று திங்கட்கிழமை (16) இடம்பெறவுள்ள மாநாட்டில் அவர் கலந்து கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மைப் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கீதா கோபிநாத், சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளையும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் வரவேற்றார். 

இதன் போது கருத்து வெளியிட்ட இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, சர்வதேச நாணய நிதியத்துடனான வலுவான ஈடுபாட்டை ஆதரித்தார். இது அண்மைய பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு உதவியாக உள்ளது என்றும் இந்த கூட்டாண்மை வலுவான பொருளாதார அடிப்படைகளுக்கு அடித்தளமிட உதவியதாகவும் நிலைத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதற்கு அவசியமென்றும் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/217578

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு தேவைப்படும் சர்வதேச நாணயநிதியத்தின் இறுதி திட்டமாக தற்போது முன்னெடுக்கப்படும் திட்டம் விளங்கவேண்டும் - கீதா கோபிநாத்

16 JUN, 2025 | 12:39 PM

image

சர்வதேச நாணய நிதியம் தற்போது முன்னெடுக்கும் திட்டத்தினை இலங்கைக்கு தேவைப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் இறுதி திட்டமாக மாற்றுவோம் என சர்வதேச நாணயநிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் அங்கீகாரம் மற்றும் உறுதிப்பாடு குறித்த வலுவான செய்தியை தெரிவித்துள்ளார் - இலங்கைக்கு தேவைப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் இறுதி திட்டமாக இது இருக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அனைத்து குடிமக்கள் மற்றும் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை மேம்படுத்தும் நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியின் பாதையை தொடருகின்ற நிலையில் சர்வதேச நாணய நிதியம் உறுதியான பங்காளியாகயிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்தது போல இந்த நேரம் வித்தியாசமானதாகயிருக்க வேண்டும் என தெரிவித்துள்ள அவர், இலங்கைக்கு தேவைப்படும் இறுதி சர்வதேச நாணய நிதியத்தின் திட்டமாக இதனை மாற்றுவோம் என தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போதைய பாதையில் தொடர்ந்தால் இது சாத்தியம் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/217608

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி மற்றும் IMF இன் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கீதா கோபிநாத் இடையே சந்திப்பு

June 16, 2025 3:21 pm

ஜனாதிபதி மற்றும் IMF இன் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கீதா கோபிநாத் இடையே சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் உள்ளிட்ட தூதுக்குழுவினரை இன்று (16) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

இலங்கை நிதி நெருக்கடியிலிருந்து மீள, வழிகாட்டிய சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்து வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

அமெரிக்கா அண்மையில் விதித்த வரிகளைப் பற்றிக் குறிப்பிட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 25% அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், அவ்வாறு வரி அதிகரிப்பதால் ஏற்படக்கூடிய தாக்கத்தையும் கூறினார்.

உலகளாவிய நெருக்கடிகள் காரணமாக இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் தொடர்பிலும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், இந்த சவால்களை செயற்திறன் மிக்க வகையில் முகாமைத்துவம் செய்வதற்கும் அவற்றின் தாக்கத்தை குறைப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு உறுதியளித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் வர்த்தக உறவு, குறிப்பாக இலங்கையின் 23% ஏற்றுமதிகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளுக்கு அனுமதி வழங்கும் GSP+ வர்த்தகச் சலுகை பற்றியும் இங்கு அவதானம் செலுத்தப்பட்டன.

முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை வலியுறுத்திய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பது பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும் என்றும் தெரிவித்தார். தற்போதைய ஆட்சி மக்களை மையமாகக் கொண்டது என்றும், மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும் ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தினார்.

இலங்கையில் தனக்குக் கிடைத்த அமோக வரவேற்புக்கு திருமதி கோபிநாத் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்ததுடன், பொதுத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்கள் இரண்டிலும் அரசாங்கத்திற்குக் கிடைத்த வலுவான மக்கள் ஆதரவு, அத்தியாவசிய மறுசீரமைப்புகளைச் செயல்படுத்த அரசாங்கத்திற்கு பலமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

கடுமையான நெருக்கடியிலிருந்து நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அடைந்த பொருளாதார வளர்ச்சியையும், மிக அதிக பணவீக்க விகிதத்திலிருந்து பணவீக்க விகிதம் குறைந்ததையும் குறிப்பிட்ட அவர், கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் பாராட்டினார்.

அதேபோன்று, அரச நிர்வாக மறுசீரமைப்புகளில் அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பாராட்டிய அவர், இந்த முயற்சிகளை நிலைநிறுத்தி விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். இலங்கையின் மறுசீரமைப்பு மற்றும் மீட்சி செயல்பாட்டில், சர்வதேச நாணய நிதியம் உறுதியான பங்காளியாக இருக்கும் என்று திருமதி கோபிநாத் உறுதியளித்தார்.

தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அபொன்சு ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

https://oruvan.com/meeting-between-the-president-and-dr-gita-gopinath-deputy-managing-director-of-the-international-monetary-fund/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரதமரை சந்தித்தார் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர்

Published By: DIGITAL DESK 3

17 JUN, 2025 | 09:30 AM

image

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் பிரதமர் ஹரிணி அமர் சூரியவை திங்கட்கிழமை (16) அலரி மாளிகையில் சந்திதுள்ளார்.

இந்த சந்திப்பின் போது பிரதமர் ஹரிணி அமர் சூரிய சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத்திடம், 

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட பின்னர் பொருளாதாரம் மீட்சிப் பாதையில் செல்லும்போது, சர்வதேச பங்குதாரர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கான இலங்கையின் வலுவான உறுதிப்பாட்டை நான் இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் பிரதமர் ஹரிணி அமர் சூரியவிடம்,

கடன் மறுசீரமைப்புக்கான அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையுடனான மற்றும் செயற்திறமான அணுகுமுறையை கலாநிதி கோபிநாத் பாராட்டியதுடன், இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் அரசாங்கத்தின் முயற்சிகளில் சர்வதேச நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதிலும் மீளக் கட்டியெழுப்புவதிலும் நாடு எதிர்கொள்ளும் சிக்கலான சவால்களையும் அவர் விசேடமாக குறிப்பிட்டுள்ளார். 

அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார சீர்திருத்த சட்டகம், இலங்கையை போலவே நிதி மற்றும் கட்டமைப்பு சவால்களை எதிர்கொள்ளும் ஏனைய நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக அமைகிறது என்றும் கலாநிதி கோபிநாத் குறிப்பிட்டுள்ளார்.

508046384_1283693457089087_5682029059170

508126552_1283693413755758_1795711606351

508430250_1283693487089084_8689420624615

508613787_1283693833755716_5863738291835

507944692_1283693890422377_7378037974303

https://www.virakesari.lk/article/217673

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.