Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 127

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 127 / பின் இணைப்பு - "இலங்கையின் நாளாகமங்கள் மற்றும் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை"

“யானும் ஒரு கற்புடைய பெண் என்பது உறுதி யானால் யானும் அற்புதம் நிகழ்விப்பேன்; இந்த அரசை அடியோடு அழிப்பேன். இந் நகரையும் முழுவதும் எரிப்பேன்; என் செயல் திறத்தை நீகாண்பாய்” என்று கூறி அரசவையை விட்டு அகன்றாள் கண்ணகி. தன் இட முலையைக் கையால் திருகிப் பிய்த்து எடுத்து நகரை வலம் வந்தாள். மும் முறை சுற்றினாள்; மணம் மிக்க மதுரை மாநகர்த்தெருவில் அலமந்து [சுழன்று] தன் முலையை வட்டித்து எறிந்தாள் [வட்டித்துவிட்டா ளெறிந்தாள்: இதன் பொருள் "பிரதிக்கினை பண்ணி எறிந்தாள்" என்பதாகும். அதாவது, அவள் ஒரு உறுதிமொழியைச் சொல்லிவிட்டு, அதை நிறைவேற்றும் விதமாக ஏதாவது ஒன்றை எறிந்தாள் என்று அர்த்தம்.].

எரி நெருப்பு தெய்வ வடிவில் அவள் முன் வந்து நின்றது. நீலநிறமேனி, சிவந்தசடைமுடி, பால்போலும் வெண்பற்கள் உடைய பார்ப்பனனாக அவள் முன் வந்து தோன்றியது. பத்தினியாகிய கண்ணகி முன் நின்றது; “இந்த நகர் எரியுண்ணும்; அதற்கு ஒரு சாபம் எற்கனவே உள்ளது. யாரை விட்டு வைப்பது?” என்று கேட்டு நின்றது.

“பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப்பெண்டிர், முத்தோர், குழவி ஆகிய இவர்களை விட்டு விட்டுத் தீயவர்கள் பக்கமே போய்ச் சேர்க” என்று ஏவினாள். புகையோடு கூடிய நெருப்பு மதுரை மாநகரைச் சுற்றிக் கொண்டது; அது மூண்டு எழுந்து அழிக்கத் தொடங்கியது. காலப்போக்கில், அவள் பத்தினி தெய்வமாக மாறினாள், மேலும் நோய்களைக் கட்டுப்படுத்துவதாகவும், நாட்டிற்கு செழிப்பை ஏற்படுத்தக் கூடியவள் என்றும் அவளை நம்பினர்.

கண்ணகி வானுலகம் செல்வதற்கு நின்றிருந்த மலை, சேர நாட்டைச் சேர்ந்தது. அக்காலத்தில் சேர நாட்டைச் சேரன் - செங்குட்டுவன் என்பவன் அரசாண்டு வந்தான். அவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்ற சேரப் பேரரசனுக்கு மகன் ஆவான்; இளங்கோ அடிகள் என்ற புலவர் பெருமானுக்கு அண்ணன் ஆவன். ஒருமுறை, துயரம் மிகுந்த கண்ணகி வரலாற்றைக் கேட்ட செங்குட்டுவன் பெருமூச்சு விட்டான்; “பொற்கொல்லன் பேச்சைக கேட்டதால் பாண்டியன் செங்கோல் வளைந்தது; ஆயின் அவன் தன் தவற்றை உணர்ந்தவுடனே இறந்ததால் வளைந்த செங்கோல் நிமிர்ந்தது" என்றான். பின்னர் அவன் தன் பட்டதரசியைப் பார்த்து, “நன்னுதால் கணவனுடன் இறந்த கோப்பெருந்தேவி போற்றத்தக்கவளா? தன் கணவன் குற்றவாளி அல்லன் என்பதை உணர்த்திப் பழிக்குப்பழி வாங்கிய கண்ணகி போறறத் தக்கவளா?” என்று கேட்டான். பட்டத்தரசி, ஐயனே, இருவரும் போறறத்தக்கவரே. ஒருத்தி அறக்கற்பு உடையவள்; மற்றவள மறக்கற்பு உடையவள். நாம், நமது நாடு அடைந்து துறக்கம் புகுந்து பத்தினிக் கடவுளைப் பரவுதல் வேண்டும். அவள் தெய்வமாகத் தொழத் தக்க தகுதியுடையவள்,” என்று பதில் அளித்தாள்.

எனவே, உடனே சேரர் பெருமான் பத்தினிக்குரிய கல்லைப் இமயத்திலிருந்து கொணர்ந்து கங்கையில் நீராட்ட, சேர மன்னன் செங்குட்டுவன், வட இந்திய மன்னர்களுக்கு எதிராகப் படையெடுத்து வடக்கு நோக்கிச் சென்று, இமயமலையிலிருந்து கற்களை தோற்கடிக்கப்பட்ட மன்னர்களின் தலையில் சுமப்பித்துக் கொண்டு வந்தான். அந்தக் கற்களைக் கொண்டு கண்ணகிக்கு ஒரு பத்தினி கோயில் கட்டினான். இலங்கை மன்னன் கஜபாகுவும் இந்த விழாவில் கலந்து கொண்டான். சேரன் செங்குட்டுவனின் பிறந்த நாளில் தான் நடத்தவிருந்த விழாவிற்கு பத்தினி தேவி வர வேண்டும் என்று அவன் வரம் கேட்டான். உடனே அதற்க்கு செவிசாய்த்து ஒரு குரல் கேட்டது. அந்த பாடல் அல்லது வசனம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

"கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும்
எந்நாட் டாங்கண் இமய வரம்பனின்
நன்னாட் செய்த நாளணி வேள்வியில்
வந்தீ கென்றே வணங்கினர் வேண்டத்
தந்தேன் வரமென் றெழுந்த தொருகுரல்"

‘தந்தேன் வரம்’ என்று எழுந்த குரலைக் கேட்டு மகிழ்ந்த கஜபாகு, கண்ணகியின் சக்தியை, அவள் பெருமையை நினைவுகூர்ந்து, அவளை கௌரவப் படுத்த தன்னுடைய நாட்டுக்குச்சென்று பத்தினிக்குக் கோட்டம் அமைத்து தானும் அங்கே விழா நடத்தினான் என்பது வரலாறு ஆகும். இதனால் அவனது இராச்சியம் ஒருபோதும் தவறாத மழையும், வளமான பயிர்களுமாக காணப்பட்டது. இந்த பத்தினி வழிபாட்டுப் பண்டிகை 1775ஆம் ஆண்டு வரை சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டதும் ஆகும். இந்த விழா தான் பின்னாளில் 'பெரகரா' ['Perahera'] விழாவாக மாறியது எனலாம்.

Part: 127 / APPENDIX – "The Chronicles of Ceylon and the Tamil Epics Silappathikaram and Mannimeghalai"

Kannaki wrenched her left breast, came right round the city three times, and threw it to burn the City of Madurai. She, in due course, became the Goddess Pattini, and believed to have control over disease and could cause prosperity to the country.

The king Kajavahu of Lanka heard of her power, and performed festival on her honour, and his kingdom became blest with never failing rain and abundant crops. This festival became the ‘Perahera’ festival.

The Chera king, Seng Kudduvan, went north on expedition against the north Indian kings, and brought stones from the mount Himalaya on the heads of the defeated kings. He made a temple for Kannaki, Pattini temple, with those stones. The king of Lanka, Kajavahu, too attended this festival. He requested a boon from the Goddess Pattini that she should come to the festival he intended to have on the day of the birthday of Cheran Seng Kudduvan. A voice ‘granted’ was heard. The verses related to this are given below.

"கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும்
எந்நாட் டாங்கண் இமய வரம்பனின்
நன்னாட் செய்த நாளணி வேள்வியில்
வந்தீ கென்றே வணங்கினர் வேண்டத்
தந்தேன் வரமென் றெழுந்த தொருகுரல்"

The monarch of the world circumambulated the shrine thrice
and stood proffering his respects.
In front of him the Arya kings'’ released from prison,
kings removed from the central jail, the Kongu ruler of the Kudagxi,
the king of Malva and ’Kayavagu (Gajabhau), the king of sea girt Ceylon,
prayed reverentially to the deity thus:
Please grace our countries by your presence
just as have done this auspicious day,
a fete day of Imayavaramban’s sacrifice.
’ Then a voice from the welkin issued forth:
‘I have granted the boon.’

The Perahera festival is the continuation of this worship of the Goddess Pattini till about 1775 A. D.

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 128 தொடரும் / Will follow

துளி/DROP: 2082 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 127

https://www.facebook.com/groups/978753388866632/posts/34206389789009564/?

  • Replies 156
  • Views 6.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • இணையவன்
    இணையவன்

    மறுக்க முடியாத அறிவியல் ஆதாரங்களைக் கொண்டு இந்திய புராணக் கதைகளால் பின்னப்பட்ட சரித்திரத்தை மறுதலிக்கக் கூடிய நிலை தமிழகத்தில் உருவாகி வருகிறது. ஆனாலும் இது மிகக் கடினாமானது. ஆயிரம் வருடங்களாகளாகப் பு

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தங்கள் கட்டுரையினை வாசித்த பின்னர் கருத்தெழுதலாமா ?

  • kandiah Thillaivinayagalingam
    kandiah Thillaivinayagalingam

    அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil &

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 128

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 128 / பின் இணைப்பு - "இலங்கையின் நாளாகமங்கள் மற்றும் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை"

கண்ணகி (இலங்கையில் பத்தினி தேவி என அழைக்கப்படுகிறார்) நீதித்துறையின் ஒரு முக்கிய பாகமாகவும் அன்று இலங்கையில் விளங்கினார். ஒரு பழி சுமத்தப்பட்ட நபர் (defendant) நீதிமன்றத்தில் ‘ஹல்லம்பா’ [Hallamba] எனப்படும் ஒரு விசேடமான சத்தியப் பொருள் மீது சத்தியம் செய்ய வேண்டியது அவசியமாக இருந்தது. அங்கே அந்த சத்தியத்தில், அவர்கள் உண்மை மட்டுமே பேசுவதாக தெரிவிக்க வேண்டும். இந்த ஹல்லம்பா மீது சத்தியம் செய்யும் பழக்கம் சிங்கள கிராமப்புற மக்களால் மிகவும் பயமுறுத்தும் ஒரு சத்தியமாகக் கருதப்பட்டது. தவறாக சத்தியம் செய்தால் தெய்வீக தண்டனை ஏற்படும் என அவர்கள் நம்பினர். இங்கே ஹல்லம்பா [Hallamba] என்பது பத்தினித் தேவியின் (கண்ணகி) புனிதமாகக் கருதப்படும் ஒரு பொருள் அல்லது அவள் அணிந்திருந்த, உடல் அணிகலன்களில் ஒன்றான அவளின் காற்சலங்கை [anklet] ஆகும். இது வழிபாடுகளிலும், சத்தியச் சடங்குகளிலும் பயன்படுத்தப்பட்டது. இதன்மீது தவறாக சத்தியம் செய்வது பத்தினி தேவியின் கோபத்தை ஏற்படுத்தும் என்று மக்கள் நம்பினார்கள்.

மேலதிக விவரங்களுக்கு 'Sketches of Ceylon History by P. Arunachalam, 1906, AES Reprint 2004 ' என்ற நூலின், பக்கம் 21 முதல் 22 பார்க்கவும். மேலும் 'Sketches of Ceylon History by P. Arunachalam, 1906, AES Reprint 2004 ' இன் பக்கம் 22 இலிருந்து ஒரு சிறிய மேற்கோள் கிழே தரப்பட்டுள்ளது:

"கஜபாகு இந்தியாவிலிருந்து பத்தினி தேவியின் பொற்சிலம்பு கொண்டு வந்தார். அதன் நகல்களே இப்போது பத்தினி வழிபாட்டின் பிரதான சின்னங்களாக பயன்படுகின்றன. நீதிமன்றங்களில் சத்தியம் செய்யும்போது இந்த ஹல்லம்பா அல்லது காற்சலங்கை மீது சத்தியம் செய்யப்படுவது அவ்வப்போது காணப்படுகிறது. இந்த சத்தியத்தை விட சிங்கள கிராமவாசிகள் அதிகமாக பயப்படுவது வேறு ஒன்றும் இல்லை." என்கிறது.

சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு விழா எடுத்தபோது இலங்கை மன்னன் கஜபாகுவும் அங்கிருந்ததாக சிலப்பதிகாரம் பாடுகிறது. மணிமேகலை காவியமும் அதை உறுதி செய்கிறது. ஆனால் செங்குட்டுவனின் காலகட்டத்தை மதிப்பிட உதவிய இலங்கையின் தீபவம்சம் (கிபி 4ம் நூற்றாண்டு) மற்றும் மகாவம்சம் (கிபி 5ம் நூற்றாண்டு) இரண்டிலும் கஜபாகு மன்னன் தென்னிந்தியா போனது பற்றி எந்தக் குறிப்பும் இல்லையே ஏன்? அது தான் எனக்குப் புரியவில்லை?

ஸ்ரீ விஜய ராஜசிங்கன் [Madurai Nayakkar king in Kandy, Sri Vijaya Rajasimha] 1739 தொடக்கம் 1747 ஆம் ஆண்டுவரை இலங்கையின் கண்டி அரசை ஆண்ட மன்னனாவான். தென்னிந்திய மதுரை நாயக்கர் மரபில் பிறந்த இவனே கண்டி நாயக்கர் மரபை உருவாக்கியவன் ஆவான்.

இவன் இலங்கையில் 1700களில், கிட்டத்தட்ட அழிந்துபோன பௌத்தத்தை மீட்டெடுக்க விரும்பினான். மேலும் இலங்கையில் பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டில் கூட எங்கும் தகுதியான துறவிகள் இல்லாததால், புதிய துறவிகளை உத்தியோகமாக அமர்த்தி சமயப்பணியில் ஈடுபடவைக்க, அவர்களுக்கு புத்த குரு பதவியளிப்பு செய்ய, சியாமில் (Siam / தாய்லாந்து) இருந்து துறவிகளை அழைத்து வர டச்சுக்காரர்களுடன் ஏற்பாடு செய்தார். எனவே இதற்காக, பல முறை, தூதர் குழுக்கள் அனுப்பப்பட்டது, அதில் கடைசியாக 1745-ஆம் ஆண்டு அனுப்பப்பட்டது ஆகும்.

இந்த தூதர் குழு சியாமில் இருக்கும்போது, ஸ்ரீ விஜய ராஜசிங்கம் இறந்துவிட்டார். அவரது இடத்தில் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கம் என்ற மன்னர் வந்தார். இதனால், சியாம் மன்னன், புதிய மன்னரிடமிருந்து உறுதிப்படுத்தல் வேண்டுமென்று கேட்டார். இதனால் சில தாமதம் ஏற்பட்டது. சியாம் பிக்குகள் இறுதியாக 1753-இல் இலங்கைக்கு வந்தனர். அவர்கள் கண்டியில் மல்வத்த மற்றும் அச்கிரிய [Malwatta and Asgiriya chapters] என்னும் இரண்டு பிக்கு சங்கங்களை உருவாக்கினர்.

மேலும் இவர்கள் சியாமிலிருந்து வந்ததால், இவை சியாம் நிக்காயங்கள் [Siam Nikayas] என அழைக்கப்படுகின்றன. அந்த நேரத்தில், எசல [சிங்களத்திலே ஆடி மாதம் எசல எனப்படும்] பெரகரா விழாவில் [The Kandy Esala Perahera procession] பத்தினி அம்மன் முதன்மையாக வணங்கப்பட்டு வந்தார். ஆனால் சியாமிலிருந்து வந்த பிக்குகள் இதை ஏற்கவில்லை. அவர்கள் மன்னரிடம், “தலதா (Dalada / Sacred Tooth Relic) விழாவின் முன்னிலையாக இருக்க வேண்டும்” எனக் கூறினர்.


அதன் பிறகு, அதாவது சுமார் இருநூற்று எழுபது ஆண்டுகளுக்கு முன்புதான், பெரகரா விழாவில் பல் நினைவுச்சின்னம் முக்கியத்துவம் பெற்றது. கஜபாகுவின் காலத்திலோ அல்லது அவரது ஆட்சிக்குப் பிறகு சிறிது காலத்திலோ இலங்கையில், பத்தினி வழிபாட்டுடன் நெருக்கமாக தொடர்புடைய, ஒரு கெலியா, தோடன் கெலியா, பொல் கெலியா மற்றும் மல் கெலியா [An Keliya, Dodan Keliya, Pol Keliya and Mal Keliya] என, நான்கு மத விளையாட்டுகள் தோன்றின. இங்கு ஒரு-கெலியா என்பது "கொம்பு - இழுக்கும் விளையாட்டு; "தோடன் - கெலியா என்பது "தோடம்பழம் / ஆரஞ்சு. (அடிக்கும்) விளையாட்டு;" பொல் - கெலியா என்பது "தேங்காய் (உடைத்தல்) விளையாட்டு;" மற்றும் மல் - கெலியா என்பது "பூ விளையாட்டு ஆகும். இது விடயமாக, ''Ancient Ceylon by Henry Parker / This book had been first published in 1909 and was republished by the Asian Educational Service in 1981", என்ற நூலின் 631 ஆம் பக்கத்தைப் பார்க்கவும்.

Part: 128 / APPENDIX – "The Chronicles of Ceylon and the Tamil Epics Silappathikaram and Mannimeghalai"

Goddess Pattini became a part of the judicial system in Lanka, defendants had to take oath on Hallamba to profess that they tell only the truth. No oath is more dreaded by the Sinhalese peasants than that on the Hallamba. The Sinhalese followed the tradition of the festival started by the king Kajavahu in honour of Pattini, Kannaki, until 1775 A. D. See the pages 21 to 22 of the Reference 'Sketches of Ceylon History by P. Arunachalam, 1906, AES Reprint 2004' for detail. A small quote from the page 22 of the Reference 'Sketches of Ceylon History by P. Arunachalam, 1906, AES Reprint 2004' is: ‘Gaja Bahu brought from India the golden halamba or anklet of the goddess, copies of which are the symbols of her worship, and oaths are not infrequently taken on them in courts of justice. No oath is more dreaded by the Sinhalese peasant’.

The Madurai Nayakkar king in Kandy, Sri Vijaya Rajasimha, wanted to revive the almost extinct Buddhism in Lanka, and made arrangement with the Dutch to bring monks from Siam (Thailand) to perform the ordination on novice monks as there were no qualified monks to perform the ordination anywhere in Lanka. There were many missions sent Siam, and the last one was in the year 1745 A. D. While the mission was in Siam, the king Sri Vijaya Rajasimha died, and a new King Kirty Sri Rajasimha succeeded to the throne. The king of Siam required re-affirmation from the new king. There was delay, and the monks were sent from Siam in 1753. The monks came and established the Malwatta and Ascriya chapters in Kandy. These monks came from Siam, and that is why these two chapters are known as Siam Nikkayas. Till that time the prominent position was accorded to the Goddess Pattini in the Perahera procession. The intolerant monks who came from Siam objected to the king that the Dalada shall be in the forefront of the festival.

The tooth relic became prominent in the Perahera festival thereafter, only about two hundred and seventy years ago. There are four religious games, all intimately connected with the worship of Pattini, established in Lanka by the time of Gajabahu or shortly after his rule, called An Keliya, Dodan Keliya, Pol Keliya and Mal Keliya. See page 631 of Reference 'Ancient Ceylon by Henry Parker / This book had been first published in 1909 and was republished by the Asian Educational Service in 1981. Thereafter the AES had done 3 reprints, the last being 1999.'

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 129 தொடரும் / Will follow

துளி/DROP: 2084 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 128

https://www.facebook.com/groups/978753388866632/posts/34221694934145716/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 129

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 129 / பின் இணைப்பு - "இலங்கையின் நாளாகமங்கள் மற்றும் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை"

🪵 1. ஒரு கெலியா (கொம்பு விளையாட்டு)

இந்த விளையாட்டில், ஒரு உறுதியான கம்பம் (பெரும்பாலும் தென்னை மரத்தின் தண்டு) செங்குத்தாக அமைக்கப்படுகிறது. கொம்புகளைப் போன்ற ஒரு முள் குச்சியுடன் பொருத்தப்பட்ட இரண்டு அணிகள், கயிறுகளைப் பயன்படுத்தி தங்கள் குச்சிகளை கம்பத்தில் இணைக்கின்றன. பின்னர் அணிகள் ஒரு கயிறு இழுப்பதில் ஈடுபடுகின்றன, குச்சிகளில் ஒன்று உடையும் வரை இழுக்கின்றன. இந்த விளையாட்டு வலிமை மற்றும் ஒற்றுமையைக் குறிக்கிறது.

🥥 2. பொல் கெலியா (தேங்காய் விளையாட்டு)

பொல் கெலியாவில் இரண்டு அணிகள் பங்கேற்கின்றன, ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தேங்காய்களைக் கொண்டிருக்கும். வீரர்கள் தங்கள் தேங்காய்களை எதிரணி அணியினர் மீது வீசி, அவற்றை உடைக்கும் நோக்கில் விளையாடுகிறார்கள். எதிராளியின் அனைத்து தேங்காய்களையும் வெற்றிகரமாக உடைக்கும் அணி வெற்றி பெறுகிறது. இந்த விளையாட்டு துல்லியத்தையும் உத்தியையும் சோதிக்கிறது.

🍊 3. தோடன் கேலியா (தோடம்பழம் / ஆரஞ்சு விளையாட்டு)

பொல் கேலியாவைப் போலவே, தோடன் கேலியாவும் தேங்காய்களுக்குப் பதிலாக தோடம்பழங்களைப் பயன்படுத்துகிறது. விதிகள் மற்றும் நோக்கங்கள் அப்படியே இருக்கின்றன, எதிராளியின் பழங்களை உடைப்பதில் கவனம் செலுத்துகின்றன. தோடம்பழங்களின் மென்மையான தன்மை காரணமாக இந்த மாறுபாடு வேறுபட்ட அளவிலான சவாலைச் சேர்க்கிறது.

🌸 4. மல் கேலிய (மலர் விளையாட்டு)

மல் கேலியத்தைப் பற்றிய குறிப்பிட்ட விவரங்கள் குறைவாக இருந்தாலும், இது பத்தினி வழிபாட்டுடன் தொடர்புடைய ஒரு மலர் விளையாட்டு என்று அறியப்படுகிறது. இது அழகு மற்றும் பக்தியை வலியுறுத்தும் ஒரு சடங்கு அல்லது போட்டி சூழலில் பூக்களைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியிருக்கிறது.

அந்தக் கால சிங்களவர்கள் பத்தினி தெய்வமான நல்லொழுக்கமுள்ள கண்ணகிக்கு ஒருபோதும் முழுமையான திருமண வாழ்க்கை அல்லது அதைப் போன்ற வாழ்க்கை இல்லை என்று வருத்தப்பட்டிருக்க வேண்டும். எனவே, அவர்கள் அவளை பால குருன்னன்சே அல்லது பலங்காவுக்கு [Pala Gurunnanse or Palanga] திருமணம் செய்து, அவளை தங்களில் ஒருவள் ஆக்கினார்.

அதாவது, சிங்கள நாட்டுப்புறக் கதைகளில், பத்தினி தேவி (தமிழ் காவியமான சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகியின் தெய்வீக வடிவம்) மற்றும் அவரது கணவர் பலங்கா (பால குருன்னன்சே என்றும் அழைக்கப்படுகிறார்) ஆகியோரின் கதை உள்ளூர் கலாச்சார மற்றும் மத சூழல்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தழுவல் அவர்களின் உறவைக் குறிக்கும் பல்வேறு சடங்குகள் மற்றும் நிகழ்ச்சிகளில் தெளிவாகத் தெரிகிறது.

கீழே காட்டப்பட்டுள்ள படம், இடது மார்பகம் இல்லாத பத்தினி தெய்வம், அவளுடைய இலங்கை கணவர் பலங்காவுடன் [Palanga]. இது பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த மரச் சிலை. இது நிகவேவாவில் உள்ள ஆரம்பகால மடாலயத்தின் குகைகளில் [caves at the early monastery at Nikawaeva] ஒன்றில் காணப்படுகிறது; ''Ancient Ceylon by Henry Parker ' என்ற நூலின் பக்கம் 631 ஐப் பார்க்கவும்.

ஹென்றி பார்க்கரின் பண்டைய இலங்கையில், "நிகாவேவா" ["Nikawaeva"] என்று குறிப்பிடப்படும் இடம் இலங்கையின் குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள நிகாவேவாவுடன் [Nikawewa] ஒத்திருக்கிறது. இந்தப் பகுதி மொரகொல்லாகம மற்றும் மடகல்ல [Moragollagama and Madagalla] நகரங்களுக்கு இடையில் நிகாவேவா மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு பழங்கால புத்த மடாலயமான ஸ்ரீ நாகலா ராஜமஹா விஹாரயாவின் தாயகமாகும். குறிப்பாக, இந்த மடத்தின் குகைகளுக்குள் இரண்டு பழங்கால மரச் சிலைகளை பார்க்கர் ஆவணப்படுத்தியுள்ளார். இந்த சிலைகளில் ஒன்று பத்தினி தேவியாக அடையாளம் காணப்பட்டுள்ளது, அவரது இடது மார்பகம் இல்லாமல், பலங்காவுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் கி.பி 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று நம்பப்படுகிறது.

இதற்கிடையில், கோவலனின் முன்னாள் காதலி அல்லது துணைவியான மாதவி ஒரு பெண்ணைப் பெற்றெடுத்தாள். மேலும் கடல் தெய்வமான மணிமேகலை பற்றிய பல குறிப்புகள் காவியங்களில் உள்ளன. மாதவி தனது மகளுக்கு கடல் தெய்வமான மணிமேகலை என்ற பெயரையே சூட்டினாள். இராசாவலியாவும் (மன்னர் வரிசை எனப் பொருள்படும்) கூட, அதே பெயரில் ஒரு கடல் தெய்வத்தை மணிமேகலை என்று குறிப்பிடுகிறது. இராசாவலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரளயத்தின் போது இந்த கடல் தெய்வம் விகாரதேவியைக் காப்பாற்றி, தனது வருங்கால கணவரான துட்டைகைமுனு அல்லது துட்டகாமினியின் தந்தையிடம் அழைத்துச் செல்கிறது. மாதவி தனது மகள் ஒரு துறவியாக இருப்பதை விரும்பவில்லை. தலையை மொட்டையடித்து அவளை ஒரு புத்த கன்னியாஸ்திரியாக்கினாள். மணிமேகலையின் உயிரியல் தாயான மாதவி, கோவலனின் துயரக் கொலைக்குப் பிறகு மணிமேகலையை கண்ணகியின் மகள் என்று குறிப்பிடுகிறாள்; தனது சொந்த மகள் என்று அல்ல. மாதவி, நடனத்துடனான தமது தொடர்பை அழிக்க விரும்பியிருக்கலாம், இதனால் தனது உயிரியல் மகளை கண்ணகியின் மகள் என்று அழைக்க விரும்பினாள் என்று நினைக்கிறன்.

"அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப்
பான்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோள்
ஆயர் முதுமகள் மாதரி என்போள்
கவுந்தி ஐயையைக் கண்டடி தொழலும்"

தமிழில் உள்ள மேற்கூறிய ஐந்து வரிகள், சிலப்பதிகாரத்தின் 15வது காண்டத்தின் 115 முதல் 119 வரையிலான வசனங்களாகும். அதாவது:

'அப்போது, நகர வாயில்களுக்கு வெளியே தர்மம் செய்து கொண்டிருந்த, அறத்தை விரும்பிய உள்ளத்தினையுடைய துறவிகளின் அறையில் வைக்கப்பட்டிருந்த, பூப்போலும் கண்களையுடைய இயக்கிக்கு வழக்கமாக, முறையான பாற்சோறு படைத்து காணிக்கை செலுத்திவிட்டு திரும்பி வந்த, இடையர் குடிப் பிறந்த முதியோள் மாதரி எனப்படுபவள், கவுந்தியடிகளைக் கண்டு, அவருடைய அடிகளை வணங்கினார்’ என்கிறது.

மேற்கண்ட வசனங்களும் மொழிபெயர்ப்பும் தமிழ் காவியங்கள் மற்றும் இலங்கை நாளிதழ்களுக்கும் [நாளாகமம்களுக்கும்] இடையே இயங்கும் பொதுவான தொடர்புகளைக் காட்ட இங்கு நாம் தந்துள்ளோம். மொழிபெயர்ப்பில் உள்ள இயக்கினி அல்லது இயக்கி என்ற சொல் இலங்கை நாளிதழ்களில் யட்சப் பெண்ணைக் அல்லது இயக்கர் சமூக பெண்ணைக் [the female of the Yakkhas] குறிக்கிறது. இலங்கை நாளிதழ்களின்படி யக்காக்கள் அல்லது இயக்கர்கள் துணை மனிதர்கள். இருப்பினும், இது தமிழ் காவியத்தில் கடவுள்கள் மற்றும் தெய்வங்களை (யக்கினி / Yakkini) குறிக்கிறது. இலங்கை நாளிதழ்களின் துறவி ஆசிரியர்களின், மத சகிப்பின்மை [Religious intolerance], தமிழ் காவியத்தின் தெய்வீக பிம்பத்தை ஒரு துணை மனிதனாக கேவலப்படுத்துது அல்லது தரம் குறைக்குது. எச். பார்க்கர் தனது "பண்டைய இலங்கை" [H. Parker in his book, Ancient Ceylon] என்ற புத்தகத்தில், இந்தியாவில் உள்ள சைவ கோயில்களில் இயக்கர்களை காவல் தெய்வங்கள் என்று கூறுகிறார்கள் என பதிவிட்டு உள்ளார்.

Part: 129 / APPENDIX – "The Chronicles of Ceylon and the Tamil Epics Silappathikaram and Mannimeghalai"

The Sinhalese of that time must have felt sorry for the Pattini Goddess, virtuous Kannaki, that she never had a consummated married life or similar. Therefore, they had her married to Pala Gurunnanse or Palanga. The picture shown below is the Goddess Pattini without her left breast along with her Ceylonese husband Palanga. This is the wooden statue of eleventh century A. D., and found in one of the caves at the early monastery at Nikawaeva; see plate facing page 631 of Reference ''Ancient Ceylon by Henry Parker '.

In the mean time Madhavi, former consort of Kovalan, gave birth to a girl. There are many references to the sea goddess, Mannimeghalai, in the epics. Madhavi named her daughter with the name of the sea goddess Mannimeghalai. Rajavaliya also makes reference to a sea goddess by the same name, Mannimeghalai. This sea goddess saves the Viharadevi during the deluge referenced in the Rajavaliya, and takes her to her future husband, the father of Duttha Gemunu. Madhavi didn’t want her daughter to be a nautch, and shaved her head and made her a Buddhist nun. Madhavi, the biological mother of Mannimeghalai, refers Mannimeghalai as the daughter of Kannaki; not as her own daughter after the tragic murder of Kovalan. Madhavi, perhaps, wanted to erase her connection with dancing to call her biological daughter as the daughter of Kannaki.

"அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப்
பான்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோள்
ஆயர் முதுமகள் மாதரி என்போள்
கவுந்தி ஐயையைக் கண்டடி தொழலும்"

The above five lines in Tamil are the verses 115 to 119 of Canto 15 of the Epic Silappathikaram. The translation is : Quote ‘Just then, Matari, an old woman of the cowherd caste, who was returning after making the usual offering of milk to the flower eyed Yakkini, enshrined outside the city gates in the quarters of monks practising Dharma, saw and prostrated herself before the saint Kavundi’.

The above verses and the translation are given to show the common threads run among the Tamil epics and the Ceylon chronicles. The word Yakkini in the translation is the female of the Yakkhas in the Ceylon chronicles. Yakkhas are sub-humans as per the Ceylon chronicles. It represents, however, gods and goddesses (Yakkini) in the Tamil epic. The religious intolerance of the monkish authors of the Ceylonese chronicles distorted the godly image of the Tamil epic into a sub-human being. H. Parker in his book, Ancient Ceylon, says that Yakkhas are guardian deities in Saiva temples in India.

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 130 தொடரும் / Will follow

துளி/DROP: 2086 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 129

https://www.facebook.com/groups/978753388866632/posts/34239285532386656/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 130

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 130 / பின் இணைப்பு - "இலங்கையின் நாளாகமங்கள் மற்றும் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை"

இலங்கை வரலாற்று நூல்கள் நாகர்களை மனித மற்றும் பாம்பு வடிவம் கலந்த உயிரினங்கள் என விவரிக்கின்றன. ஆனால், இது ஒரு புராண வர்ணனை அல்லது தவறான புரிதல் எனக் கருதுகிறேன். ஏனெனில் நாகர்கள் உண்மையில் காந்தாரதேசம் (Ghandhara / Northern Pakistan and Afghanistan) முதல் இலங்கை வரை பரந்த பரப்பில் வாழ்ந்த உயர்ந்த நாகரிகம் கொண்ட, நன்கு வளர்ந்த சமூகமாகம் ஆவார்கள். கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முன்பு, நாகர்கள் தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவின் சில பகுதிகளில் வாழ்ந்தனர் என்பதற்கும், காலப்போக்கில், அவர்கள் ஆரம்பகால தமிழ் மக்களுடன் இணைந்திருக்கலாம் என்பதற்கும் கணிசமான சான்றுகள் உள்ளன. இது வரலாற்று, தொல்பொருள் மற்றும் இலக்கிய ஆதாரங்களின் மூலம் உறுதிப்படுத்தப் படுகிறது அல்லது ஆதரிக்கப்படுகிறது.

பழமையான தமிழ் காவியம் சிலப்பதிகாரம் நூலில், புகார் (அல்லது காவேரிப்பட்டினம்), சோழ நாட்டின் தலைநகரமாகக் கூறப்படுகிறது. அது கடல் வெள்ளத்தால் (சுனாமி) சேதமடைவதற்கு முன்பு அல்லது அழிவதற்கு முன்பு, தென்னிந்தியாவின் மிகப் பெரிய நகரமாக இது இருந்தது. சிலப்பதிகாரத்தின் புகார்க் காண்டம் / 1. மங்கல வாழ்த்துப் பாடலில், புகார் நகரம் நாக நாட்டின் நீண்ட நாக நகரத்துடன் ஒப்பிடப்படுகிறது. இது நாகர்கள் உயர்ந்த நாகரிகத்தினை கொண்டவர்கள் அல்லது நன்கு வளர்ந்த மக்கள் என்ற புரிதலை வெளிப்படுத்துகிறது. இது இலங்கை வரலாற்று நூல்களில் காணப்படும் 'பாதி மனிதர் பாதி பாம்பு உருவம் கொண்ட மனிதர் அல்லாத உயிரினம்' என்ற கருத்தை முற்றிலும் புறக்கணிக்கிறது. இதை கட்டாயம் ஒரு வகையான பண்டைய கால இனவெறியின் வெளிப்பாடு என்று கூறலாம் என்று உணர்கிறேன்.

"ஆங்கு,
பொதியில் ஆயினும், இமயம் ஆயினும்,
பதி எழு அறியாப் பழங் குடி கெழீஇய
பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும்,
நடுக்கு இன்றி நிலைஇய என்பது அல்லதை
ஒடுக்கம் கூறார், உயர்ந்தோர் உண்மையின்
முடித்த கேள்வி முழுது உணர்ந்தோரே.

அதனால்,
நாக நீள் நகரொடு நாக நாடு-அதனொடு
போகம், நீள் புகழ் மன்னும் புகார்-நகர் அது-தன்னில்,"

[1. மங்கலவாழ்த்துப் பாடல்]

இந்தப் பூம்புகார் இமயத்தையும், பொதிகையையும் போல் நிலைத்து நின்றது; எந்த அதிர்ச்சியையும் கண்டது இல்லை; இன்பக் களிப்பு மிக்க நகர் அது; அவ்வகையில் அது நாகர் நாட்டையும், தேவர் உலகத்தையும் ஒத்து விளங்கியது. மக்கள் எந்தக் குறையுமின்றி அங்கு வாழ்ந்தனர். குடி பெயர்ந்து வாழப் பிற இடங்களைத் தேடியது இல்லை என்கிறது.
அதாவது ‘நெடிய நாக நகரோடும் நாக நாட்டுடனும் வைத்து எண்ணத்தக்க நீண்ட போகமும் புகழும் பொருந்திய புகார் நகர்’ என்கிறது

கீழே உள்ள பாடல் வரிகள் சிலப்பதிகார காவியத்தில் இந்திர விகாரை என்ற பெயரில் புத்த விகாரையைப் பற்றி குறிப்பிடுகின்றன. சீன சமயப்பயணர்கள் [யாத்ரீகர்கள்] இதை பேரரசர் அசோகரின் தம்பி மகேந்திரனால் கட்டப்பட்டதாகக் குறிப்பிடுகின்றனர். கோவலனின் பெற்றோர் தங்கள் செல்வம் மற்றும் உடைமைகள் அனைத்தையும் நன்கொடையாக அளித்து விட்டு இந்த விகாரையில் ஓய்வு பெற்றனர். தமிழர்கள் அந்த நேரத்தில் பல மதங்களைப் பின்பற்றி இருந்தனர். உதாரணமாக, சமணம், புத்தம், சைவம் மற்றும் பல. எனினும் கி.பி ஆறாம் மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளில் சைவ மதம் எழுச்சி கொண்டது. எனவே பௌத்தர்கள் பெருமளவில் இலங்கையில் முகாமிட்டிருக்க வேண்டும். சமணம் கிட்டத்தட்ட அதன் அடித்தளத்தை இழந்துவிட்டது. சைவமும் வைணவமும் மீண்டும் காலூன்றின. ஆனால், இவை இரண்டும் பதினெட்டாம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரிகளால், இந்து மதத்தின் ஒரு பிரிவாக சேர்க்கப்பட்டது அல்லது இணைக்கப்பட்டது, உண்மையில் அவர்களின் நிர்வாக, அரசியல் மற்றும் சமூக உத்திகளின் [administrative, political, and social strategies] காரணத்தால் ஆகும். இது துணைக் கண்டத்திற்குள்ளும் உலக அளவிலும் இந்திய மதங்கள் எவ்வாறு அன்று அவர்களால் புரிந்து கொள்ளப்பட்டன என்பதைக் காட்டுகிறது. அதாவது, சைவம் (சிவன் வழிபாடு), வைணவம் (விஷ்ணு வழிபாடு), சக்தி (தேவி வழிபாடு) மற்றும் பிறவற்றை உள்ளடக்கிய பரந்த அளவிலான மரபுகளை ஒரே இந்து சமயம் என்ற குடையின் கீழ் தொகுப்பதன் மூலம், அவர்கள் மக்கள்தொகையை சிறப்பாக வகைப்படுத்தலாம், வரி விதிக்கலாம் மற்றும் கட்டுப்படுத்தலாம் என்பதால் இருக்கலாம்? சுருக்கமாக, இது அவர்களின் வசதிக்காகவோ அல்லது அவர்களின் அறியாமையினாலோ நடைபெற்றது என்று கருதலாம்.

"அணிகிள ரரவின் அறிதுயி லமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலஞ்செயாக் கழிந்து
பணை ஐந்து ஓங்கிய பாசிலைப் போதி
அணி திகழ் நீழல் அறவோன் திருமொழி
அந்தர-சாரிகள் அறைந்தனர் சாற்றும்
இந்திர-விகாரம் ஏழ் உடன் போகி"

[10. நாடுகாண் காதை]

பாம்பின்மீது பள்ளிகொண்டிருந்த மணிவண்ணன் கோயிலை வலப்புறமாகச் சுற்றி வந்தனர். ஐந்து முரசுகளுடன் பசுமையான இலைகளைக் கொண்ட அரச மரத்தடி நிழலில் இருந்து அறம் சொன்ன அறவோன் புத்தனின் மாணவர்கள் அறம் உரைக்கும் ஏழு இந்திர விகாரைகள் வழியாகச் சென்றனர் என்கிறது இந்த பாடல் வரிகள்.

Part: 130 / APPENDIX – "The Chronicles of Ceylon and the Tamil Epics Silappathikaram and Mannimeghalai"

The Ceylon chronicles depicts Nagas as kind of semi human semi snake variety. Nagas must be people living in the East or to the east of India, and a well developed community known from Ghandhara (Afghanistan) to Ceylon. Ceylon can also be considered east of Tamil Nadu. The ancient city of Puhar was very famous in the olden days and it was then the capital of Chola country. It must have been damaged during a deluge, perhaps due to Tsunami. It was the grandest city in the southern India before it was damaged by the deluge. In the verses given below, in the Epic Silappathikaram, the city of Puhar is compared with the lengthy Naga city of the Naga country. The few verses below are the comparison of the City of Puhar with the Naga city. These verses are in the Canto 1 of the Tamil Epic Silappathikaram. Nagas are well developed people as per this Tamil epic, but they are half snake and half human in the Ceylon chronicles, kind of ancient day racism.

அதனால்,
நாகநீள்நகரொடுநாகநாடு-அதனொடு
போகம், நீள்புகழ்மன்னும்புகார்-நகர்அது-தன்னில்

The above lines can be summarised as ‘The city of Puhar is comparable with the lengthy Naga city and the Naga country’.

The verses below mention about a Buddhist Vihara with the name Indra Vihara in the Epic Silappathikaram. Chinese pilgrims mention this as built by Mahendra, the younger brother of the Emperor Asoka. Parents of Kovalan donated all their wealth and belongings and retired to this Vihara. The Tamils were following many religions; Jainism, Buddhism, Saivism and many more. There was Saiva upheaval in the sixth and seventh centuries A. D. and the Buddhists must have decamped to Ceylon en-mass. Jainism almost lost its footing. Saivism and Vainavam took foothold, both of which were bracketed into Hinduism by the eighteenth century British Colonial officers for their convenience or because of their ignorance.

பணைஐந்துஓங்கியபாசிலைப்போதி
அணிதிகழ்நீழல்அறவோன்திருமொழி
அந்தர-சாரிகள்அறைந்தனர்சாற்றும்
இந்திர-விகாரம்ஏழ்உடன்போகி-

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி / Part: 131 தொடரும் / Will follow

துளி/DROP: 2088 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 130

https://www.facebook.com/groups/978753388866632/posts/34257765697205306/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 131

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 131 / பின் இணைப்பு - "இலங்கையின் நாளாகமங்கள் மற்றும் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை"

மகாவம்சம் 36 – 133 ,'அரசுரிமை, பெருமைக்குரிய பல காரியங்களைச் செய்வதற்கு ஆதாரமாக' இருப்பதுபோலவே பல அநீதிகளுக்கும் காரணமாக இருக்கிறது. இதை உணர்ந்து நடக்கும் பக்திமான்கள் அரச போகம் குறித்து ஆனந்தம் கொள்ள மாட் டார்கள். நஞ்சுடன் [விசத்துடன்] கலந்த இனிய உணவாகக் கருதியே நடப்பார்கள் எனக் கூறுகிறது. சிலப்பதிகாரத்தில், வஞ்சிகாண்டம் – காட்சிக் காதை (Canto 25), 93 முதல் 106 வரையிலான வரிகள், அரச வாழ்க்கை சோகத்தால் நிறைந்தது [full of tragedy] என்று இதே போன்ற உணர்வுகளைக் கூறுகின்றன.

"தென்னர் கோமான் தீத் திறம் கேட்ட
மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன்:
‘எம்மோரன்ன வேந்தற்கு’ உற்ற
செம்மையின் இகந்த சொல், செவிப்புலம் படாமுன்,
‘உயிர் பதிப் பெயர்த்தமை உறுக, ஈங்கு’ என,
வல் வினை வளைத்த கோலை மன்னவன்
செல் உயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது:
மழைவளம் கரப்பின், வான் பேர் அச்சம்;
பிழை உயிர் எய்தின், பெரும் பேர் அச்சம்;
குடி புரவுண்டும் கொடுங்கோல் அஞ்சி,
மன்பதை காக்கும் நன் குடிப் பிறத்தல்
துன்பம் அல்லது, தொழுதகவு இல்’ என,
துன்னிய துன்பம் துணிந்து வந்து உரைத்த
நல் நூல் புலவற்கு நன்கனம் உரைத்து-"

[வஞ்சிக் காண்டம் / 2. காட்சிக் காதை]

அதாவது,

பாண்டியனுக்கு நேர்ந்த தீங்கினைக் கேட்ட சேரன் வருந்திக் கூறலானான். பாண்டியன் செங்கோல் தவறியது என் போன்ற மன்னர் செவிக்கு எட்டுவதற்கு முன்னர் பாண்டியன் உயிர் சென்றுவிட்டது. அந்த உயிர் அவனது வளைந்த கோலை நிமிர்த்தி நிறுத்திச் செங்கோலாக மாற்றிவிட்டது.

மழை பொழியாவிட்டால் அச்சம். மக்களுக்குத் துன்பம் நேர்ந்தால் அச்சம். இப்படி அஞ்சிக்கொண்டு மக்களைக் காக்கும் பொறுப்புள்ள அரசர் குடியில் பிறத்தலானது, துன்பமே அல்லாமல் தொழும் தகைமை உடையது அன்று - என்று சாத்தனாரிடம் சேரன் கூறினான்.


மேற்கூறியது மிகச் சில சிறந்த தமிழ் மன்னர்களில் ஒருவரின் கருத்து ஆகும். அதன் கடைசி பகுதி மகாவம்சம் 36 – 133 உடன் தெளிவாக எதிரொலிக்கிறது. மேலும் சிலப்பதிகாரத்தில், 11 ஆம் காண்டத்தின் [காடுகாண் காதையில்] 18 முதல் 20 வரையிலான கீழ்க்காணும் வரிகள் உள்ளன.

"வடிவேல் எறிந்த வான்பகை பொறாது,
பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள,"

அதாவது, ' பாண்டிய மன்னனானவன் தனது வடிவேலைக் [ஈட்டியை] கடல்மீது எறிந்திட, அந்தப் பெரிய பகையினைப் பொறுக்கமாட்டாமல், அது பழிவாங்கும் நோக்கத்தில், கடலானது பொங்கி எழுந்து, பஃறுளி ஆற்றுடன் குமரி மலை அடுக்குகளையும் தன்னுள் விழுங்கியது' என்கிறது.

மேலே உள்ளவை பண்டைய பஃறுளி நதி மற்றும் மலைகள் கொண்ட குமரி நிலத்தைப் பற்றிய ஒரு குறிப்பு. இந்தக் கடல் வெள்ளம் அல்லது சுனாமி அல்லது கடற்கோள் அல்லது ஆழிப்பேரலை, தமிழின் பிற இலக்கியப் படைப்புகளிலும் அடிக்கடி குறிப்பிடப்படுகிறது.

Part: 131 / APPENDIX – "The Chronicles of Ceylon and the Tamil Epics Silappathikaram and Mannimeghalai"

The Mahavamsa 36 – 133 says ‘Thus, reflecting that sovereignty, being the source of manifold works of merit, is at the same time the source of many an injustice, a man of pious heart will never enjoy it as it were sweet food mixed with poison’.

In Silappathikaram, Vanjikaandam – Kaadchik Kaathai (Canto 25), verses 93 to 106, says similar sentiments that the royal life is full of tragedy. The Tamil verses are not given but the English abstract of these verses are:
Quote: ‘When he heard the cruel deed of the king of the Pandiyan country, the Cera, the king of kings, was anguished and said: ‘Before these words, which well deserve condemnation from any monarch of our status, reached our ears, it is good that the Pandiyan laid down his life. For it is the departing soul of the king that has straightened the sceptre, which was bent by this irrestible act of destiny.

‘If rains fail, great havoc is caused (to the country). If living beings suffer unrighteousness, widespread fear is caused. Paying due regards to the welfare of his subjects, wary of tyrannical rule, a protecting king born of a noble line occupies a position which is suffering and is not to be sought after’. Unquote

The above is the opinion from one of the very few great Tamil kings. The last portion clearly resonates with the Mahavamsa 36 – 133.

The following verses in Tamil also from the Tamil Epic Silappathikaram. The English translation of these verses 18 to 20 of Canto 11 is given below and it is from the Reference 28.

வடி வேல் எறிந்த வான் பகை பொறாது,
பஃறுளி யாற்றுடன் பல் மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங் கடல் கொள்ள

‘by standing on the shore of the sea and throwing his spear upon the fierce waters which, in a sprit of revenge, consumed the river Pahruli and the Kumari with their adjoining group of hills’. The above is a reference to an ancient River Pahruli and the Kumari Land with hills. This sea deluge is very often mentioned in other literary works in Tamil.

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 132 தொடரும் / Will follow

துளி/DROP: 2090 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 131

https://www.facebook.com/groups/978753388866632/posts/34269844655997410/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 132

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 132 / பின் இணைப்பு - "இலங்கையின் நாளாகமங்கள் மற்றும் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை"

கடைசி பனி யுகம் சுமார் 7,000 ஆண்டுகளுக்கு முன்பு முடிவடைந்தது. 40,000 முதல் 50,000 ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவும் இன்றைய இலங்கையும் ஒரே நிலப்பரப்பாக இருந்தன. எனவே முதல் குழுவான கடற்கரையோரங்களில் ஒண்டித்திரிபவர் [Beach combers,], எந்த தீவையும் அப்பொழுது அங்கு காணவில்லை. ஆனால் ஒரு பெரும் நிலப்பரப்பைத் தான் கண்டனர். வடக்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள பனி மலைகளில் அதிக அளவு பூமியின் ஈரப்பதம் சிக்கியதால், கடந்த பனி யுகத்தின் போது கடல் மட்டம் சுமார் 120 மீட்டராகக் குறைந்தது. வட அமெரிக்காவில் உள்ள பெரிய ஏரிகள் அந்த பெரிய பனி மலைகளின் விளைவாகும். பனி மலைகளின் அதிக எடை பூமியை கீழே அழுத்தி வட அமெரிக்காவில் பெரிய ஏரிகளை உருவாக்கியது. ஆனால், ஆஸ்திரேலியா என்றென்றும் ஒரு தீவாகவே இருந்து வருகிறது. பனி யுகத்தின் போது கூட ஆஸ்திரேலியா அப்படியே ஒரு தீவாக இருந்துள்ளது. எனவே, கங்காரு போன்ற, அங்கு பரிணாமம் அடைந்த தனிப்பட்ட விலங்குகள், உலகின் வேறு எங்கும் காணப்படவில்லை. ஆனால், இலங்கைக்கு என ஒரு தனித்துவமான விலங்குகள் எதுவும் இல்லை. இலங்கையில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் இந்தியாவில் உள்ள விலங்குகளைப் போலவே உள்ளன. அதாவது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் விலங்குகளின் நடமாட்டம் குறுக்கும் நெடுக்குமாக இருந்துள்ளது. இலங்கையில் யானைகள் இருப்பதை எப்படி விளக்க முடியும்? அது படகு மூலம் கட்டாயம் வந்திருக்காது! இன்று இலங்கையில் இருக்கும் யானைகள் மலை மற்றும் கடல் கடந்து வந்து இருப்பது என்பது சாத்தியமல்ல. இது ஒரு காலத்தில் நிலப்பரப்புத் தொடர்பு இருந்ததைக் காட்டுகிறது.

தனபாக்கியம் குணபாலசிங்கம் என்பவரால் எழுதப்பட்ட "இலங்கையிற் தொல்லியலாய்வுகளும் திராவிடக் கலாசாரமும்" / Archeology & Dravidian culture for Srilanka by Thanapakkiyam Gunabalasingam in Tamil ' என்ற நூல், விட்டிபொட் மற்றும் கடைம்பொட் [Vittipot and Kadaimpot] ஆகிய இரண்டு சிங்களப் புத்தகங்கள் பற்றி குறிப்பிடுகிறது. இவை சமீப காலம் வரை வாய் வழியாகப் பரப்பப்பட்டு வந்தவை என்பது குறிப்பிடத் தக்கது. இந்நூல்களில், இராவணனின் தலைநகர், அவனது மரணத்துக்குப் பின் கடலில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. இராசாவலிய என்ற சிங்கள வரலாற்று நூலும், இராவணனின் கோட்டையும், 25 அரண்மனைகளும், 400,000 வீதிகளும் மன்னார் மற்றும் துத்துக்குடிக்கும் இடையே கடலில் மூழ்கியதாக, 27 ஆம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

நாளாகமங்களை எழுதிய துறவி ஆசிரியர்கள், வங்கதேசத்திலிருந்து ஆண்கள் மட்டும் இலங்கை தீவுக்கு வந்ததாகவே குறிப்பிடுகின்றன. ஆனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் பற்றிச் சொல்லவில்லை. இலங்கை நாளாகமங்கள் வழக்கம் போல், நாடு கடத்தப்பட்ட பெண்களையும் அவர்களின் குழந்தைகளையும் முற்றிலுமாக புறக்கணித்தன. அது ஏன் என்று புரியவில்லை?

மணிமேகலை: மற்றொரு தமிழ் காப்பியமான மணிமேகலை, சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள கருப்பொருளின் தொடர்ச்சியாகும். இக்காப்பியத்தின் தலைவி, மணிமேகலை, சிலப்பதிகாரத்தின் கோவலன் மற்றும் மாதவி என்பவர்களின் மகளாவாள். கோவலனின் துயர மரணத்திற்குப் பிறகு மாதவி தன் மகளை ஒரு புத்தத் துறவியாக வளர்த்தாள். ஒரு சமயத்தில் மணிமேகலையும் அவளுடைய தோழியும் வனத்திற்குப் பூப்பறிக்கச் சென்றிருந்தபோது, உதயகுமரன் என்ற சோழ மன்னன் மணிமேகலையின் மீது காதல் மயக்கம் கொண்டான். கடலின் கடவுளான மணிமேகலா, மணிமேகலையின் உலக இன்பங்கள் துறந்த வாழ்க்கையைப் பாதுகாக்க, அவளை தான் அறியாமலே மணிபல்லவம் என்ற தீவில் கொண்டு விட்டாள்.

இன்று இலங்கையின் ஒரு பகுதியாக விளங்கும் ‘நயினா தீவு’ தான் மணிமேகலை குறிப்பிடும் மணிபல்லவத் தீவு என்று வரலாற்று குறிப்புகள் சொல்கின்றன. யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஏழு தீவுகளில் இந்த தீவும் ஒன்று. இதை நாகத்தீவு என்றும் அழைத்தனராம் . இந்த தீவுக்கு புத்தர் வந்து தங்கி இருந்தார் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு.

மேலும், மணிமேகலை சங்கமித்தாவுடன் ஒரு நெருங்கிய ஒற்றுமையைக் கொண்டு இருப்பதைக் காண்கிறோம். இருவரும் மிகவும் இளம் பௌத்த கன்னியாஸ்திரிகள் அல்லது பெண் புத்தத் துறவிகள் ஆகும். இருவரும் மிகவும் இளமையாக இலங்கைக்கு வந்தனர்.

Part: 132 / APPENDIX – "The Chronicles of Ceylon and the Tamil Epics Silappathikaram and Mannimeghalai"

The glacial period must have aided the peopling of Lanka. The propagation of Homo sapiens from Africa to the rest of the world commenced about seventy thousands, 70,000, years back. The earliest human group, somehow, crossed the Red sea, probably near the present day port city of Eden, walked along the sea coast. There are many subterranean artesian fresh water streams day-lighting along the coasts might have helped them quench their thirst and they might have got their food from land and sea. These Beach Combers reached western coast of India, and walked along the coast to reach the southern end of India, might be around 40,000 to 50,000 years ago. They kept on walking and eventually reached Australia. There are many references for this journey. However, the References 30, 31, 32, 33, 34 and 35 are recommended for further details. The References 33 and 34 are by Tamils currently domiciled in England. The Reference 33 is by Dr. Siva Thiyagarajah and is a detailed one, while the Reference 34 is a brief sketch of Peopling of Ceylon.

Men and women walked together, and they must have had language to communicate, however crude it might have been. There might have been childbirths, deaths, sickness, dangers, adversities, jealousies and internal squabbling. Their language must have been adequate to keep going, meeting and resolving the issues along the way, from the Eastern Africa to Australia, some of course stopped half-ways and part-ways. I never studied biology during my school days, and spent years to understand the concept of evolution and DNA. It convinced me that no one is superior to any other. DNA sequence convinced me that.

The last ice age ended about 7,000 years ago, and the first group, the Beach combers, found no island, but a landmass 40,000 to 50,000 years ago, India and the present day Ceylon forming one land mass. The sea levels dropped to about 120m during the last ice age as huge amount of earth moisture is trapped in the Ice Mountains in the Northern and Sothern Europe and Northern America. The huge lakes in the North America are the result of those huge mountains of ice. The heavy weight of the Ice Mountains compressed the earth below forming the Great Lakes in the North America.

Australia has been an island forever, even during the ice age, and the evolution created animals typical to Australia, like Kangaroo, which are not found anywhere else. There are no such animals unique to Ceylon indicate no evolutionary uniqueness. The animals and the birds in Ceylon are same as those in India. There had been cross flow of animals between India to Ceylon, but the monkish authors of the chronicles assumed that men, not females, have to come from Vanga to people the Island of Lanka. The Lanka Chroniclers completely ignored, as usual, the exiled females and their children. How could one explain the presence of elephants in Ceylon? It would not have come by boat!

The author of the Reference 29 mentions two Sinhala books, Vittipot and Kadaimpot, which have been orally carried on until very recently. It is stated in these books that the Capital city of Ravana was engulfed by sea after his death. These are the lingering frightful memories of the people of Tamil Nadu and Lanka about a sea deluge which happened not in very ancient and not very recent times. I believed initially it was an exaggerated deluge due to a Tsunami occurred in the olden days. The Rajavaliya specifically stated, see page 27 of the Rajavaliya, that Ravana’s fortress, 25 palaces, and 400,000 streets situated between Mannar and Tuttukudiya were submerged. This is one of the occasions in which the area of submergence of land is partly identified. The Tamil Epic Sillappathikaram also identified the location as Kumari land in the earlier quoted three lines, verses 18 to 20 of Canto 11 of Silappathikaram. I brushed this aside when I was commenting on the Rajavalia.

I was working out the additional land area which became available to act as land bridge between Lanka and Indian landmass during the glacial period due to the dropping down of the sea levels. I used the Bathymetric contours to identify the land area which would have been exposed. The Bathymetric contours to the south of an imaginary line running East-West, somewhat below Mannar, are entirely different from the contours to the north of the same imaginary East-West line. These contour maps are given below.

The first map shows the Bathymetric contours to the north of that imaginary East-West line. The depth to the sea bottom is about 10 to 20m in the Palk Strait. The hatched area in the second map shows the additional land became exposed when the sea level dropped by 30m.The entire Palk Straight is dry now and people and animal had free passage. The third map shows the exposed land area when sea level dropped by 100m. The Beachcombers might have walked through these hatched areas. Some, of course, might have stay put around these areas. They must be the forefathers of Mr. Virumandi Andithevar of Jothimanicam village in Madurai. See the picture of him on the page 98 of Reference 33. His clans might have populated Ceylon too.

The fourth map gives the Bathymetric contours to the south of the earlier mentioned East-West line. The Bathymetric levels rapidly descend to 3000 to 4000m. See the thick dotted line connecting the Cape Comorin (Kannyakumari) to southern part of Ceylon. The edge of the disappeared land mentioned in the Tamil epic and in the Sinhala ancient works might have had been that dotted line. It could be that the mountain ranges of the central and southern part of Lanka is the continuation of the Western Ghats mountain ranges running along the western coast of India from Mumbai to the Cape Comorin, with intermittent gaps through which roads connecting East and West run. This mountain range is the main reason for the rain fall during the Monsoonal winds. There must have existed mountains between the western coast of Lanka from Mannar to Galle and between the coastal lines from Rameswaram to Kannyakumari (Cape Comorin) through Tutthukudi. There must have been rivers running around these mountains. Something must have caused a slope stability failure, perhaps due to the erosion of those rivers running around it or due to the Tectonic Plate sliding nearby or both. Tectonic Plate movements cause Tsunami. The slope stability failure caused the mountain and the land to end up deep down to the bottom of about 3000 to 4000m. This must have happened about 4000 to 5000 years before present and the memory persisted. This time frame is very insignificant in the evolutionary and geological time scales. This is the reason for flora and fauna are similar on both sides. If some neutral agencies conduct random DNA sampling and analysis in sufficient numbers of people on both sides then it would confirm that the people of Tamil Nadu and Ceylon are closely related to each other than with others.

The Bathymetric contour maps are given after the commentary on the Epic Mannimeghalai. The additional areas which became available due to the dropping of sea level are hatched.

Mannimeghalai: The other Tamil Epic Mannimeghalai is the continuation of the theme set out in the Epic Silappathikaram. The aforementioned daughter of Madhavi, Mannimeghalai, became a young Buddhist nun. She was also taken to an island called Mannipallavam in Lanka by the sea goddess Mannimeghalai. We, the natives of the island Nainativu in the Jaffna District, fondly believe that the Mannipallavam was the former name for Nainativu. The Ceylon Government too believed so and, built two Buddhist Viharas there during the years of the State Council. The Burmese Government too partly funded the construction.

These Buddhist Viharas became the policy arms of the chauvinistic Buddhists with the active help of the government. Strangely, then came the Navy and the Army detachments to protect the peace loving Buddha’s abode. The population of Nainativu in the 1961 census was well over five thousands, and it should have been now about, with a natural increase of about 3% per annum, thirty thousands. However, thanks to the Buddha and his guardian detachments of Navy and Army, the population now is not more than one thousand, only about one fifth of what it was sixty years ago. The Buddha is a coloniser in my native village. This Navy detachment played a major role in the massacre of the passengers of the Kumudini boat, on the name of Buddha. About seventy passengers were brutally massacred by the Sri Lankan Navy detachment based there.

Mannimeghalai had close resemblance with Samghamitta; both are very young Buddhist nuns. Both came to Ceylon very young.

The References

29. Illankayir(t) Tolliyalaivukalum Diradidak Kalaccaramum (In Tamil) by Thanapakkiyam Kunapalasingam, 2001, Mannimeghala Publication. (Archaeological Researches in Ceylon and the Dravidian Cultures)

30. The Great Human Diaspora: The History of Diversity and Evolution By Luigi Luca Cavalli-Sforsa and Francesco Cavalli-Sforsa, 1995, translated from Italian to English

31. The Journey of Man – A Genetic Odessy by Spencer Wells, 2001

32. Deep Ancestry by Spencer Wells, ISBN:0-7922-625-8

33. Peoples and Cultures of Early Sri Lanka by Dr. Siva Thiyagarajah, 2011, ISBN:1 85201 025 8

34. Peopling of Sri Lanka by Subramanian Visakan, 2010, ISBN: 1 85201 022 3

35. Mapping of Human History by Steve Olson, 2002

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 133 தொடரும் / Will follow

துளி/DROP: 2092 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 132

https://www.facebook.com/groups/978753388866632/posts/34292369700411572/?

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 133

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 133 / பின் இணைப்பு - "இலங்கையின் நாளாகமங்கள் மற்றும் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை"

மணிமேகலை மணிபல்லவம் தீவுக்கு உற்சாகமாகச் சென்றார். அத்தீவில் மணிமேகலை ஒரு அற்புதமான புத்த பீடிகை [இருக்கை] ஒன்றைக் கண்டாள். “அறவோர் அமரும் ஆசனம்” என்பதை உணர்த்தும் வகையில், அந்த பீடிகையில் நறுமணம் மிக்க மலர்களைத் தவிர பிற மலர்கள் இல்லை. அந்த பேரொளி மின்னும் அந்தப் பீடிகை மூலம், மணிமேகலை தனது முற்பிறப்பைப் பற்றி, அதாவது தனது கடந்தகால வாழ்க்கையைக் கற்றுக் கொண்டாள்.

அந்த கமல பீடத்தை அடைந்த மணிமேகலை, அதன் அழகில் மனதைப் பறி கொடுத்தாள், மூன்று முறை அந்த பீடத்தைச் சுற்றி வந்து வணங்கினாள். அங்குதான் மணிமேகலையின் முற்பிறப்பின் முடிச்சு அவளுக்கு அவிழ்க்கப்படுகிறது.

கீழ்த்திசை நாக நாட்டைச் சார்ந்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு மன்னர்கள் அந்த பீடிகையில் அமர உரிமை கேட்டு போர் தொடுக்க முற்பட்டபோது, புத்த பெருமான் அந்த பீடத்தில் தானே ஏறி அமர்ந்து, தனக்கென இருக்கையை கோரினார் என்ற வரலாறு அந்த இடத்திற்கு உண்டு. அந்த இடம் அழகும், அமைதியும் கொண்டு விளங்கியது. முழுவிளக்கத்துக்கும், மணிமேகலை காவியத்தின் 8வது காண்டத்தின் இறுதிப் பகுதியைப் பார்க்கவும்.

"பறவையும் முதிர்சிறை பாங்குசென்று அதிராது
தேவர்கோன் இட்ட மாமணிப் பீடிகை
பிறப்புவிளங்கு அவிர்ஒளி அறத்தகை ஆசனம்
கீழ்நில மருங்கின் நாகநாடு ஆளும்
இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி
எமதுஈது என்றே எடுக்கல் ஆற்றார்
தம்பெரும் பற்று நீங்கலும் நீங்கார்
செங்கண் சிவந்து நெஞ்சுபுகை உயிர்த்துத்
தம்பெருஞ் சேனையொடு வெஞ்சமம் புரிநாள்
இருஞ்செரு ஒழிமின் எமதுஈது என்றே
பெருந்தவ முனிவன் இருந்துஅறம் உரைக்கும்
பொருஅறு சிறப்பில் புரையோர் ஏத்தும்
தரும பீடிகை தோன்றியது ஆங்கு என்."

காண்போரது பழம் பிறப்பு விளங்குதற்கு ஏதுவாகிய ஒளி பொருந்திய அறத்தினியல்புடைய, சிறப்பு பொருந்திய, இந்திரனாலிடப்பட்ட பெருமை பொருந்திய மணிகளாலான பீடிகை அல்லது ஆசனம் அதுவாகும். அதுமட்டும் அல்ல, பறவைகளும் அப்பீடிகையின் பக்கத்திற் சென்று சிறையொலி செய்யாது மதிப்பளிக்கும் என்று மேலும் கூறுகிறது.

கீழ்த் திசைக்கண் உள்ள நாக நாட்டினை ஆளும் மன்னவர் இருவர் ஒருங்கு தோன்றி, இஃது எம் முடையது எம்முடையது என்று கூறி எடுக்கவும் இயலாதவர்களாய்த் தம்முடைய பெரிய விருப்பம நீங்குதலையும் செய்யாதவர்களாய், சிவந்த கண்கள் சினத்தாற் சிவந்து மனங்கொதித்து, தம்முடைய பெருஞ் சேனைகளுடம் கொடிய போர் புரியுநாளில், நீவிர் நுமது பெரிய போரை நீங்குமின் இஃது எம்முடையது என்று கூறி, பெரிய தவமுனிவனாகிய புத்தன் இருந்து அறம் உரைத்த, ஒப்பற்ற சிறப்பினையுடைய உயர்ந்தோர்கள் துதிக்கின்ற, தரும பீடிகை அவ்விடத்தில் தோன்றியது என்க என்கிறது.

மேற்கண்ட கதை தீபவம்சத்தின் இரண்டாவது அத்தியாயத்திலும், மகாவம்சத்தின் முதல் அத்தியாயம் 44 முதல் 70 வரையிலான வசனங்களிலும், புத்தர் இலங்கைக்கு இரண்டாவது முறை வருகை தந்தபோது சித்தரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. என்றாலும் நாளாகமங்களில் ஒரு சிம்மாசனத்திற்காக சண்டை நடந்தது. புத்தர் ஏற்கனவே தனது சொந்த சிம்மாசனத்தையும் [அரியணையையும்], பிம்பிசார மன்னரால் அவருக்கு வழங்கப்பட்ட சிம்மாசனத்தையும் துறந்து விலகிச் சென்றவர் என்பதால், அவர் இங்கு இலங்கை நூல்களில் ஒரு சிம்மாசனத்தை கோருவது விசித்திரமாக இருக்கிறது. ஆனால், மணிமேகலை காப்பியத்தில், மேலே கொடுக்கப்பட்டுள்ளபடி, அந்த இருக்கை பெரிய முனிவர் [பெருந்தவ முனிவன்] அமர்ந்து தர்மத்தைப் போதிக்க [பிரசங்கிக்க] இருந்ததாக கூறப்படுகிறது. இது உண்மையில் அர்த்தமுள்ளதாக இருக்கிறது.

Part: 133 / APPENDIX – "The Chronicles of Ceylon and the Tamil Epics Silappathikaram and Mannimeghalai"

Mannimeghalai was spirited away to the island of Mannipallavam where she learnt her past life from a miraculous Buddha Seat. Two Naga kings of same family were fighting for the Buddha Seat. The Buddha then came to the spot and claimed the seat for himself. Refer ending portion of the canto 8 of the Epic Mannimeghalai.

பறவையும்முதிர்சிறைபாங்குசென்றுஅதிராது
தேவர்கோன்இட்டமாமணிப்பீடிகை
பிறப்புவிளங்குஅவிர்ஒளிஅறத்தகைஆசனம்
கீழ்நிலமருங்கின்நாகநாடுஆளும்
இருவர்மன்னவர்ஒருவழித்தோன்றி
எமது ஈது என்றே எடுக்கல் ஆற்றார்
தம்பெரும்பற்று நீங்கலும் நீங்கார்
செங்கண்சிவந்து நெஞ்சுபுகை உயிர்த்துத்
தம்பெருஞ் சேனையொடு வெஞ்சமம்புரிநாள்
இருஞ் செருஒழிமின் எமதுஈது என்றே
பெருந்தவ முனிவன் இருந்து அறம் உரைக்கும்
பொரு அறு சிறப்பில் புரையோர் ஏத்தும்
தருமபீடிகை தோன்றியது ஆங்குஎன்.

The brief translation of the above verses: Quote ‘She wandered about till she came to what seemed a seat of the Buddha. The seat had been placed there by Indra, and had the miraculous power to let those who worshipped it know their previous life, as the Buddha himself had delivered a sermon sitting on it. This happened on the occasion when two neighbouring Naga chiefs, related to each other, fought for possession of it. As the war proved destructive Buddha appeared before them and pacified the combatants by preaching the sermon’. Unquote

The above story is depicted in the second chapter of the Dipavamsa, and in the first chapter of the Mahavamsa, from verses 44 to 70, during the second visit of the Buddha to Lanka. The fight was for a throne in the chronicles. It is strange for the Buddha to claim a throne as he already renounced and walked away from his own throne and the throne offered to him by the King Bimbisara. In the Epic Mannimeghalai, as given above in the translation, the Seat was for the Buddha to sit and preach Dhamma. This makes sense.

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 134 தொடரும் / Will follow


துளி/DROP: 2094 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 133

https://www.facebook.com/groups/978753388866632/posts/34309137428734799/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 134

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 134 / பின் இணைப்பு - "இலங்கையின் நாளாகமங்கள் மற்றும் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை"

பின்னர் மணிபல்லவம் தீவில் தீவ திலகை என்ற பெண்ணை மணிமேகலை சந்திக்க நேர்ந்தது. இந்த தீவ திலகை, சம்மன குட்டத்தில் [Sammana Kutta / சமந்தகம் என்ற மலை உச்சியின் மேல்] புத்தரின் பாதங்களை வணங்கி, புத்தர் இருக்கையின் காவலில் இருந்தார். மேற்கண்ட விவரிப்பு மன்னிமேகலை காவியத்தின் 11வது காண்டத்தில் 20 முதல் 30 வரையிலான பாடல்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு, "சம்மன குட்டா" ["Sammana Kutta" ] என்ற வார்த்தையை பாளி மொழியில் இரண்டாக்கப் பிரிக்கலாம், அங்கு "சம்மன" என்பது ஒரு துறவி அல்லது துறவியைக் குறிக்கிறது, மேலும் "குட்டா" என்பது சிகரம் அல்லது மலை என்று பொருள்படும். எனவே, "சம்மன குட்டா" என்பதை "துறவியின் மலை" அல்லது "துறவியின் சிகரம்" என்று விளக்கலாம், இது மலைப்பாங்கான அல்லது காட்டுப் பகுதிகளில் தியானம் மற்றும் கற்பிப்பதற்காக வசிக்கும் துறவிகளின் பாரம்பரியத்துடன் ஒத்துப்போகிறது.

"மன்பெரும் பீடிகை என்பிறப்பு உணர்ந்தேன்
ஈங்குஎன் வரவுஇதுஈங்கு எய்திய பயன்இது
பூங்கொடி அன்னாய் யார்நீ என்றலும்,
ஆயிழை தன்பிறப்பு அறிந்தமை அறிந்த
தீவ திலகை செவ்வனம் உரைக்கும்
ஈங்குஇதன் அயலகத்து இரத்தின தீவத்து
ஓங்குஉயர் சமந்தத்து உச்சி மீமிசை
அறவியங் கிழவோன் அடிஇணை ஆகிய
பிறவி என்னும் பெருங்கடல் விடூஉம்
அறவி நாவாய் ஆங்குஉளது ஆதலின்
தொழுதுவலம் கொண்டு வந்தேன் ஈங்குப்
பழுதுஇல் காட்சிஇந் நன்மணிப் பீடிகை
தேவர்கோன் ஏவலின் காவல் பூண்டேன்
தீவ திலகை என்பெயர் இதுகேள்:"

பெருமை பொருந்திய, புகழ் பெற்ற, இப் பெரும் பீடிகையால் என் முற்பிறப்பினை [என் பழைய பிறப்பைப்] பற்றித் தெரிந்து கொண்டேன். இது நான் அடைந்த பயன். பூங்கொடியே நீ யார் என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?” என மணிமேலை கேட்டாள்.

மணிமேகலை தனது முற்பிற்பினை அறிந்ததை தீவதிலகை அறிந்தாள். நல்ல முறையில் சில செய்திகளைக் கூறலானாள். “இந்த மணிபல்லவத் தீவின் அருகில் இரத்தினத் தீவகம் உள்ளது. அதில் உள்ள சமந்தகம் என்ற மலை உச்சியின் மேல், தன்னைச் சேர்ந்தவர்களைப் பிறவிக் கடலில் இருந்து கரை சேர்க்கும் புத்தரின் பாத பீடிகை உள்ளது. (சமந்தகம் என்பது இலங்கையில் உள்ள சிவனொளி பாதமலை) அதனை வலம் செய்து இங்கு வந்தேன். குற்றிமின்றிக் காட்சி தரும் இந்தப் பாத பீடத்தை இந்திரனின் ஆணையால் காவல் செய்து வருகிறேன். என் பெயர் தீவதிலகை” என்று கூறினாள் என்கிறது.

இந்தக் காவியத்தின்படி, கி.பி இரண்டாம் நூற்றாண்டில் தமிழ் மக்கள் புத்த மதத்தைப் பின்பற்றினர். சம்மன மலையின் உச்சியில் புத்தரின் பாதச் சுவடு இருப்பதை அவர்கள் அறிந்திருந்தனர். வட இந்தியாவில் பன்னிரண்டு ஆண்டு பஞ்சத்தின் போது சமண மதம் (Jainism) கி.மு மூன்றாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டிற்கு வந்தது. மௌரிய வம்சத்தின் நிறுவனர் சந்திர குப்த மௌரியரும் [The founder of the Maurya dynasty, Chandragupta Maurya / reigned 320 BCE – 298 BCE] தனது மகன் பிந்துசாரனுக்கு [Bindusara] ஆட்சியைக் கொடுத்துவிட்டு தெற்கே ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து புத்த மதம் உடனடியாகத் தமிழ் நாட்டிற்கு வந்தது. வி.ஏ. ஸ்மித் வலியுறுத்தியது போல், புத்த மதம் உண்மையில் தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்திருக்க வேண்டும். 'The Early History of India - Vincent A. Smith, Third edition, 1914' and 'Asoka, the Buddhist Emperor of India. By Vincent A. Smith, Third edition, 1919'. என்ற நூல்களைப் பார்க்கவும்.

இன்று காணப்படும் மன்னார் வளைகுடா, தெற்கு தமிழ்நாடு மற்றும் இலங்கையின் தென் மேற்குப் பகுதியில் உள்ள கடல்பகுதி, பழங்காலத்தில் மலைகள், ஆறுகள் மற்றும் பரந்த நிலப்பகுதியாக இருந்திருக்கலாம். கன்னியாகுமரி முதல் இலங்கையின் தென்பகுதி வரை ஒரு தொடர்ந்த நிலப்பகுதியாக இருந்திருக்க வாய்ப்புண்டு.

ஒரு நேரத்தில், இயற்கையின் மிகப் பெரிய மாறுபாடாக, நிலச்சரிவு அல்லது கடுமையான நிலக் கவிழ்ச்சி ஏற்பட்டது. இதன் விளைவாக மலைகள் மற்றும் சுற்றியுள்ள நிலப்பகுதிகள் கடலுக்குள் ஆழமாக கவிழ்ந்து மூழ்கியிருக்கும். இதனால் இன்றைய மன்னார் வளைகுடாவின் ஆழமான கடல்தொகுப்பு உருவானது.

பண்டைய தமிழர்களும் சிங்களர்களும் பெரும் கடல் வெள்ளம் பற்றிய நினைவுகளை தலைமுறை தோறும் கொண்டுள்ளனர். இதனால் இந்த பெரும் பேரழிவு மிகப் பழமையானது அல்ல, சுமார் 5000 ஆண்டுகளுக்குள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இது 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட சுனாமி போன்ற ஒரு பெரும் இயற்கை பேரழிவாக இருந்திருக்கலாம்.

Part: 134 / APPENDIX – "The Chronicles of Ceylon and the Tamil Epics Silappathikaram and Mannimeghalai"

Then Mannimeghalai happened to meet a lady named Theeva-Thilagai in the island Mannipallavam. This Theeva-Thilagai, having worshiped the Buddha’s feet on the Sammana Kutta, was in guard of the Buddha Seat. The above narrative is given in the verses 20 to 30 in the Canto 11 of the Epic Mannimeghalai.

மன்பெரும்பீடிகைஎன்பிறப்புஉணர்ந்தேன்
ஈங்குஎன்வரவுஇதுஈங்குஎய்தியபயன்இது
பூங்கொடிஅன்னாய்யார்நீஎன்றலும்,
ஆயிழைதன்பிறப்புஅறிந்தமைஅறிந்த
தீவதிலகைசெவ்வனம்உரைக்கும்

ஈங்குஇதன்அயலகத்துஇரத்தினதீவத்து
ஓங்குஉயர்சமந்தத்துஉச்சிமீமிசை
அறவியங்கிழவோன்அடிஇணைஆகிய
பிறவிஎன்னும்பெருங்கடல்விடூஉம்
அறவிநாவாய்ஆங்குஉளதுஆதலின்

தொழுதுவலம்கொண்டுவந்தேன்ஈங்குப்
பழுதுஇல்காட்சிஇந்நன்மணிப்பீடிகை
தேவர்கோன்ஏவலின்காவல்பூண்டேன்
தீவதிலகைஎன்பெயர்இதுகேள்:

The translation in brief: Quote ‘There on the high peak of the hill Samantakuta there are the footprints of the Buddha. Having offered worship at the footprints I came to this island long ago. Since then I have remained here keeping guard over this " Dharma-seat" under the orders of Indra. My name is Tiva-Tilakai (Dvipa Tilaka). People following the Dharma of the Buddha strictly, offering worship to this "Buddha’s seat" will gain knowledge of their previous birth, knowing their past as a result of this worship’. Unquote

Tamil people were following of the Buddhist faith as per this epic around the second century A. D. They were aware of the Buddha’s foot print on the top of the Sammana hill’.

The Samanna religion, (Jainism), came to Tamil country about third century B. C. during a twelve year famine in north India. The founder of the Maurya dynasty, Chandragupta Maurya, too retired to South, after giving the reign to his son Bindusara. The Buddhism followed suit immediately after to the Tamil country. The Buddhism must have really come to Lanka from Tamil country, as asserted by V. A. Smith. See References 15 and 21.

The present day Gulf of Mannar between the southern Tamil Nadu and south-west coast of Sri Lanka must been a land with hills, and rivers around it. The dotted line connecting Cape Commorin (Kannnya-Kumari) to the southern tip of Sri Lanka must have been the extent of land. A slope stability failure must have taken place in which the hills and adjoining lands plunged deep into the ocean as shown by the two arrows.

The picture below is a rendering showing the bathymetric contours of the Gulf Mannar in a continuous seascape. The memories of the Tamils and the Sinhalese about an ancient sea deluge have not faded. Therefore the deluge, the slope stability failure, must have happened not very long ago. The Biblical flood, Noachic flood, as per the introductory page XXXVIII of the Reference 42 is about 3044 B. C. This slope stability failure too must have occurred within the last 5000 years, or could even be recent. The effect must have been colossal and very destructive, similar to the Tsunami which occurred during the Christmas time of the year 2004

REFERENCES

15. The Early History of India by Vincent A. Smith, 3Rd edition, 1914

21. Asoka – The Buddhist Emperor of India by Vincent A. Smith, Third Edition 1919

42. The Mahavansi, The Raja-Ratnacari, The Raja-Vali Translation by Edward Upham, M. R. A. S. and F. S. A. Volume 1, 1833

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 135 தொடரும் / Will follow

துளி/DROP: 2096 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 134

https://www.facebook.com/groups/978753388866632/posts/34326065530375322/?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.