Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 21

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்த பதிப்பாகும்.]

பகுதி: 21 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'சேர் பொன்னம்பலம் இராமநாதன்'

சேர் பொன்னம்பலம் இராமநாதன் (Sir Ponnampalam Ramanathan, ஏப்ரல் 16, 1851 - நவம்பர் 26, 1930) இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். சிங்களவரும், தமிழரும் இன வேறுபாடு பாராது அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர். சர்.பொன்னம்பலம் ராமநாதன், ஓய்வு பெற்ற பிறகு, மிகுந்த மதப்பற்றுள்ளவராக இருந்த அவர், தனது வாழ்நாள் முழுவதையும் பிரார்த்தனையிலும் தவத்திலும் கழிப்பதற்காக தமிழ்நாடு - இந்தியா சென்றார். மெக்கலம் சீர்திருத்தங்கள் [The Crewe-McCallum reform] 1910 ஆம் ஆண்டு இலங்கையில் நடைமுறைக்கு வந்தது, இது ஒரு இலங்கைக் கல்விமான், சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட வழிவகுத்தது. அப்பொழுது கரவா (மீனவர்) சாதியைச் சேர்ந்த, கலாநிதி மார்கஸ் பெர்னாண்டோ தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அது உயர்சாதி சிங்களவர்களுக்கு பொறுக்க முடியவில்லை. ஆனால் படித்த உயர்சாதி சிங்களவர்களை விட, படித்த கரவா சிங்களவர்கள் அதிகமாக இருந்ததால், அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. என்றாலும் கல்வியின் அடிப்படையில் வாக்களிக்கத் தகுதியான தமிழர்கள் கணிசமான எண்ணிக்கையில் அன்று இருந்தனர். அப்போது உயர்சாதி சிங்களவர்கள், படித்த இலங்கைத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக, பொன்னம்பலம் இராமநாதனை வற்புறுத்த தமிழ்நாட்டிற்குச் சென்றார்கள், அவர் அப்போது சார் பட்டம் பெறவில்லை. இதனால், 1911 ஆம் ஆண்டு முதல் இலங்கைச் சட்ட சபை உறுப்பினராக இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார். பின்னர் 1915 ஆம் ஆண்டில், முஸ்லிம் மக்களுக்கு எதிராக, டி.பி. ஜயதிலக, டி.எஸ். சேனநாயக்க மற்றும் பல செல்வந்த சிங்களவர்கள் வன்முறை, கொள்ளை மற்றும் தூண்டுதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டனர். இராணுவ சட்டம் அமுல்படுத்தப்பட்டது, மேலும் மேற்கூறிய இருவர் உட்பட பல பௌத்தர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிலர் தூக்கிலிடப்பட்டனர். அப்பொழுது, ஜேர்மன் நீர்மூழ்கிக் கப்பலின் ஊடாக இராமநாதன் இங்கிலாந்துக்குச் சென்று தடுத்து வைக்கப்பட்டிருந்த பௌத்த சிங்களவர்களை விடுதலை செய்யுமாறு வாதிட்டு வெற்றியும் அடைந்தார். பின்னர் அதே தொகுதிக்கு 1916 இல் இரண்டாவது தேர்தல் நடந்தது. இராமநாதனும் போட்டியிட்டார், இத்தேர்தலில் அவரை எதிர்த்து நின்றவர் உயர்சாதி சிங்களவராக இருந்தாலும், நன்றியுள்ள பல சிங்களவர்கள், கடந்த தேர்தலை விட அதிக பெரும்பான்மையுடன் இராமநாதனை தெரிவு செய்தனர். பின்னர், சுமார் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1927 இன் பிற்பகுதியில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான கருத்துக்களைக் கேட்க டொனமோர் ஆணைக்குழு வந்தது. சிங்களவர்கள், எண்ணிக்கையில் மேன்மையில் இருந்ததால், எண் பலத்தின் அடிப்படையிலான சீர்திருத்தத்தை விரும்பினர். சார் பொன்னம்பலம் இராமநாதன், அவரது புகழ்பெற்ற மேற்கோளான ‘டோனமோர் என்றால் இனி தமிழர்கள் இல்லை’ [‘Donoughmore means Tamils no more’] மூலம் எண் வலிமைக்கு எதிராக இருந்தார். அவருடைய வார்த்தைகள் தீர்க்கதரிசனமாக இருந்தன; அதன் பிறகு தமிழர்கள், மனிதர்களைத் தவிர வேறு எதையோ போலத், தரக்குறைவாக நடத்தப்பட்டனர். உயர்சாதி பௌத்த சிங்களவர்களும் கரவ சாதி சிங்களவர்களும் சேர்ந்து சேர் பொன்னம்பலம் இராமநாதனை 1920களின் பிற்பகுதியில் சர் பொன்னம்பலம் ராமநாதனை ஒரு இனவெறி பிடித்தவராகக் கண்டித்தனர்.

இனக்கலவரத்தை ஏற்படுத்திய குற்றம் பாரிய குற்றம் என்றபோதும், அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை விரும்பாத சேர் பொன்னம்பலம் இராமநாதன், பிரித்தானிய அரசை எதிர்த்து, சிங்கள அரச தலைவர்களின் உயிரைக் காப்பாற்றும் முகமாக மீட்பு போராட்டம் செய்து, அவர்களை மீட்டவர் என்பதும் இலங்கை அரசியல் வரலாற்று நிகழ்வாகும்.

பொன்னம்பலம் இராமநாதனின் போராட்டத்தினால், உயிர் மீண்டு வந்த சிங்கள அரசியலாளர்கள், அவரைத் தங்கள் தோள்களில் சுமந்து, காலிமுகத்திடலில் ஊர்வலம் சென்றமையும் வரலாற்று நிகழ்வாகும். இவ்வாறு பொன்னம்பலம் இரமாநாதன் சிங்கள அரசியல் தலைவர்களை மீட்டிருக்காவிட்டால் டீ. எஸ் சேனானாயக்கா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா போன்ற சிங்கள அரசியல் தலைவர்கள் இலங்கை வரலாற்றில் இடம்பிடித்திருக்கவும் முடியாது என, நன்றி கூறும் தற்கால சிங்கள அரசியலாளர்களும் உளர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

Part: 21 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Sir Ponnampalam Ramanathan'

On his retirement, being a very religious person, he went to Tamil Nadu – India to spend rest of his life in prayer and penance. The Crewe-McCallum reform came into effect in the year 1910 in Ceylon to have one elected member for the Educated Ceylonese. Dr. Marcus Fernando filed his nomination and he belonged to the Karawa (fisher) caste. The so-called high caste Sinhalese could not stomach it, but they did not have a chance as the educated Karawa Sinhalese outnumbered the educated high caste Sinhalese.

There was considerable number of Tamils eligible to vote based on education. Then the high caste Sinhalese went to Tamil Nadu to persuade Ponnampalam Ramanathan, he was not knighted then, to contest the election for the educated Ceylonese seat. In the process, Ramanathan was elected to the Legislative Council as the first elected Ceylonese Member to the Legislative Council in 1911. Then in the year 1915, D. B. Jayatileke, D. S. Senanayake and many other wealthy Sinhalese were accused of inciting and causing violence, robbery and other crimes against the Muslim population. Marshall Law was enforced, and many Buddhists, including the above two, were interned. Some were summarily executed. This was during the First World War and the reaction from the British Colonial Government was harsh and swift.

Ramanathan went to England, through the German Submarine infested sea, to argue for the release of the interned Buddhist Sinhalese. He was successful. Then there was the second election in 1916 for the same seat. Ramanathan also contested and his opponent was a high caste Singhalese in this election. The grateful Sinhalese elected Ramanathan with larger majority than the previous election. Then, about fifteen years later, the Donoughmore commission came in the latter part of 1927 to hear views for the constitutional reform. The Sinhalese, being in an unassailable numerical superiority, wanted the reform based on the numerical strength. Sir Ponnampalam Ramanathan, he was knighted by that time, was against the numerical strength alone, with his famous quotation; ‘Donoughmore means Tamils no more’. His words were prophetic; Tamils were treated like anything but humans after that. The high caste Buddhist Sinhalese along with the Karawa caste Sinhalese then castigated Sir Ponnampalam Ramanathan as a racist from the latter part of the 1920s, the way Elara was treated in the Dipavamsa, the Mahavamsa and ultimately in the Rajavaliya

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 22 தொடரும் / Will Follow

https://www.facebook.com/share/p/1E7NPrkNhJ/?mibextid=wwXIfr

  • Replies 80
  • Views 3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • இணையவன்
    இணையவன்

    மறுக்க முடியாத அறிவியல் ஆதாரங்களைக் கொண்டு இந்திய புராணக் கதைகளால் பின்னப்பட்ட சரித்திரத்தை மறுதலிக்கக் கூடிய நிலை தமிழகத்தில் உருவாகி வருகிறது. ஆனாலும் இது மிகக் கடினாமானது. ஆயிரம் வருடங்களாகளாகப் பு

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தங்கள் கட்டுரையினை வாசித்த பின்னர் கருத்தெழுதலாமா ?

  • kandiah Thillaivinayagalingam
    kandiah Thillaivinayagalingam

    அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil &

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 22

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்த பதிப்பாகும்.]

பகுதி: 22 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'துட்ட காமினி ஒரு பௌத்தரை விட ஒரு இந்துவாக இருந்தாரா?'

சர் பொன்னம்பலம் அருணாசலம் எழுதிய முருக வழிபாடு [Worship of Muruka’ by Sir Ponnampalam Arunachalam] என்ற கட்டுரையை 'Ancient Ceylon by H. Parker, Late of the Irrigation Department of Ceylon, 1909.'' என்ற குறிப்பில் குறிப்பிடுவது சுவாரஸ்யமானது. இதழின் 243 ஆம் பக்கத்தில் உள்ள அடிக்குறிப்பு; 'பெரும்பாலான இலங்கை மன்னர்களைப் போலவே, துட்ட காமினியும், ஒரு பௌத்தரை விட ஒரு இந்துவாக இருந்தார். ரிதி விகாரை (சிங்களம்: රිදී විහාරය) என்பது, இலங்கையின் ரிதிகம என்னும் ஊரில் அமைந்துள்ள, கி.மு 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தேரவாத புத்த கோயில் ஆகும். ரிதி என்பது சிங்களத்தில் வெள்ளியைக் குறிப்பதால் ரிதி விகாரையை தமிழில் வெள்ளிக் கோயில் என்றும் அழைக்கலாம். இந்த விகாரையை துட்ட காமினி கட்டியெழுப்பி, அதன் பிரதிஷ்டையின் போது [தெய்வத்தைப் புதுக்கோயிலில் உரிய பீடத்தில் மரியாதையுடன் அமர்த்தும் விழாவின் போது] அவருடன் 500 பிக்குகள் (பௌத்த துறவிகள்) மற்றும் வேதங்களில் தேர்ச்சி பெற்ற 1,500 பிராமணர்கள் அங்கு சென்றதாகக் கூறுகிறது, இதை மெய்ப்பிக்கிறது. (Paper read at the R. A. S. Ceylon Branch in June 1923 on “Palm leaf MSS. in Ridi Vihara / MSS is the abbreviation for "manuscripts", which is the plural form of the word "manuscript"). புத்த பிக்குகளின் தொகையை விட இந்து பிராமணர்களின் தொகை மூன்று மடங்காக இருப்பதைக் காண்கிறோம்

உதாரணமாக, விஜயனும் அவரது சீடர்களும் இலங்கைத் தீவில் இறங்க, பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டி, புத்தர், தேவ லோகத்தில் இருந்து, சக்காவை (Sakka / இந்திரனை) அழைக்கிறார். அவர் உதவிக்காக உபுல்வனை (Upulvan / விஷ்ணுவை) அழைக்கிறார் என மகாவம்சத்தில் இந்து கடவுளையும் தேவ லோகத்தையும் கூறியிருப்தைக் கவனிக்க.

அனுராதபுரம் மாவட்டத்தில் மொத்தமாக 431 பிராமிக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 347 கல்வெட்டுகள் ஆங்கிலேயர் காலத்திலும், 84 கல்வெட்டுகள் அண்மையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் தமிழர் வழிபாட்டுப் பாரம்பரியம் மற்றும் இந்துத் தெய்வங்கள் தொடர்பான 116 கல்வெட்டுகள் அனுராதபுரத்திலேயே காணப்படுகின்றன. இவற்றில் நாகர் பற்றி 31 கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துட்ட காமினி (மு.கி. 161–137) பௌத்த அரசராக வரலாற்றில் வர்ணிக்கப்படுகிறார். ஆனால் அவர் மேற்கொண்ட வேத சடங்குகள், முருகன் வழிபாடு, மற்றும் தெய்வாலயங்கள் கட்டியமைத்தல் போன்றவை, அவர் இந்துமத மரபுகளையும் பின்பற்றியதைச் சுட்டிக்காட்டுகின்றன. உதாரணமாக கதிர்காமம் முருகன் கோயிலைக் கட்டியதாகவும், பௌத்தராக இருந்தாலும், வேத யாகங்கள் மற்றும் தேவாலய பூஜைகள் செய்தார் என்றும் மற்றும் பைரவர், விஷ்ணு, பத்தினி போன்ற இந்து தெய்வங்களுக்கு அவர் கோயில்கள் கட்டினார் எனவும் கூறப்படுகிறது. இவன் முதன்மையாக, பக்திபூர்வ பௌத்த அரசன் என்றாலும், இந்துமத மரபுகளையும் ஏற்று ஒழுகியவர். அத்துடன், பௌத்தம் மற்றும் சைவ-வைணவ மரபுகள் இரண்டையும் இணைத்து ஆட்சி செய்தார் என்றும் அறிய முடிகிறது.

பொ.ஆ.மு 59 – 50 காலப்பகுதியில் இலங்கை மன்னனாகவிருந்த லஜ்ஜிதிஸ்ஸ எனும் மன்னன் கந்தக்க தூபிக்கு பூஜைகள் நடத்தியது பற்றிய குறிப்புகள் மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ளன. மிகுந்தலையில் உள்ள மிகப் பழமை வாய்ந்த தூபிகளில் ஒன்றே கந்தக்க தூபியாகும். இங்குள்ள ஒரு வாயிலின் இரண்டு பக்கங்களிலும் மூன்றரை அடி உயரமான ஐந்து தலை நாகத்தின் புடைப்புச் சிற்பங்கள் இரண்டு செதுக்கப்பட்டுள்ளன.

எனவே இவனது காலத்திலோ அல்லது இதற்கு சற்று முந்திய காலத்திலோ கந்தக்க தூபி அமைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. இதன்படி மிகுந்தலையில் கந்தக்க தூபி அமைக்கப்பட்ட காலத்தில் அதாவது சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு இங்கு நாக வழிபாடு செல்வாக்குடன் விளங்கியிருக்கும் என நம்பக்கூடியதாக உள்ளது. இத் தூபியில் வாகல்கட என்றழைக்கப்படும் வாயிலில் பிள்ளையாரின் வடிவமும் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கந்தக்க தூபியில் விநாயகர் மட்டுமல்லாது இரண்டு தூண்களில் அழகிய நந்தியின் சிற்பமும் காணப்படுகிறது. இது இப் பகுதியில் நிலவிய சிவ வழிபாட்டின் அடையாளமாகும்.

இலங்கை வரலாறு முழுவதிலும் நீதிமன்ற மதம், இந்து மதம் மற்றும் அதன் சடங்கு மற்றும் வழிபாடு ஆகியவையின் ஒரு கலவையாகவும் இருந்தன என்பது இலகுவாக அறிய முடிகிறது. துட்ட காமினிக்குப் பிறகு, அவரது சகோதரர் சத்தாதிஸ்ஸ [சத்தா திச்சன் / Saddhatissa] பதினெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். மகாவம்சம் போற்றும் துட்டகைமுனுவின் மரணத்தின் பின்னர் அவரது மகன் சாலியவுக்கு அரச பதவி கிடைக்கவில்லை. சாலிய "தாழ்த்தப்பட்ட" சாதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் முடித்ததால் தான் சாலியவுக்கு அந்தப் பதவி வழங்கப்படவில்லை என்கிறது சிங்கள வரலாற்று இலக்கியங்கள். அதனாலதான் அவரின் தம்பி ஆட்சி பொறுப்பை ஏற்றாராம். சத்தாதிஸ்ஸனின் மகன் துலதனன் [துலத்தன் / Thulathana] ஒரு மாதம் பத்து நாட்கள் ஆட்சி செய்தான். சத்தாதிஸ்ஸனின் மற்றொரு மகன் லஜ்ஜிதிஸ்ஸ [Lajjitissa] தீபவம்சத்தின்படி ஒன்பது ஆண்டுகள் ஆறு மாதங்கள் ஆட்சி செய்தான். லஜ்ஜிதிஸ்ஸா என்பது மகாவம்சத்தில் உள்ள லஞ்சதிஸ்ஸ [லன்ஜ திச்சன் / Lanjatissa] ஆகும், இவர் மகாவம்சத்தின் படி, ஒன்பது ஆண்டுகள் ஒன்றரை மாதங்கள் ஆட்சி செய்தார். லஜ்ஜிதிஸ்ஸாவின் இளைய சகோதரரான கல்லாட நாகன் [Khallatanaga], லஜ்ஜிதிஸ்ஸவுக்குப் பிறகு ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தார். தளபதி [சேனாதிபதி] மகாரத்தக்க [The commander Maharattaka] மன்னன் கல்லாட நாகனை வென்று ஒரு நாள் ஆட்சி செய்தான். மகாரத்தக்க என்பது மகாவம்சத்தில் கம்மகாரத்தக்க [Kammaharattaka] ஆகும். என்றாலும் கல்லாட நாகனின் தம்பியான வட்டகாமினி [வலகம்பாகு அல்லது வட்டகாமினி அபயன் / Vattagamani] அவனை உடனடியாகக் கொன்று ஐந்து மாதங்கள் ஆட்சி செய்தான்.

Part: 22 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Is Dutugemunu was more of a Hindu than a Buddhist?'

It is interesting to refer the article, Worship of Muruka’ by Sir Ponnampalam Arunachalam in the Reference 'Ancient Ceylon by H. Parker, Late of the Irrigation Department of Ceylon, 1909.' The Footnote on the page 243 of the journal says; Quote ‘Like most Ceylon Kings he, (Dutugemunu), was more of a Hindu than a Buddhist. An ancient MS of Ridi Vihara, which he built and endowed, states that on the occasion of its consecration he was accompanied thither by 500 Bhikkus (Buddhist monks) and 1,500 Brahmins versed in the Veddas (Paper read at the R. A. S. Ceylon Branch in June 1923 on “Palm leaf MSS. in Ridi Vihara). Throughout Ceylon History the Court religion was Hinduism and its ritual and worship largely alloyed and affected the popular Buddhism and made it unlike the religion of Buddha’. Unquote After Dutthagamani, his brother Saddhatissa ruled for eighteen years. Thulathana, son of Saddhatissa, ruled for one month and ten days. Another son of Saddhatissa, Lajjitissa, ruled for nine years and six months as per the Dipavamsa. Lajjitissa is the Lanjatissa in the Mahavamsa, and ruled for nine years and one half month. Khallatanaga, the younger brother of Lajjitissa, ruled for six years after Lajjitissa. The commander Maharattaka overpowered the king Khallatanaga and ruled for one day. Maharattaka is Kammaharattaka in the Mahavamsa, and Vattagamani, the younger brother of Khallatanaga, promptly killed him and he ruled for five months.

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 23 தொடரும் / Will Follow

https://www.facebook.com/share/p/14PeVBDy4tG/?mibextid=wwXIfr

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 23

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்த பதிப்பாகும்.]

பகுதி: 23 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / ''பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கையைச் சேர்ந்த ஒருவர், இந்தியாவில் ஒரு பெண்ணைக், 2000 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்தார் என்றால் யாராவது நம்புவார்களா?'

தீபவம்சத்தின்படி, அலவத்த [புலகத்த] சபியா (பாகிய), பனய, பழைய மற்றும் தட்டிக ஆகிய ஐந்து தமிழ் மன்னர்கள் [புலகத்தன், பாகியன், பண்டியமாறன், பழையமாறன் மற்றும் தட்டிகன் / Alavatta (Pulahattha), Sabhiya (Bahiya), Panaya, Palaya, and Dathika] மொத்தம் பதினான்கு ஆண்டுகள் ஏழு மாதங்கள் ஆட்சி செய்தனர். ஆனாலும் இவர்கள் இலங்கைக்கு வெளியிலிருந்து வந்தவர்கள் என்று தீபவம்சம் கூறவில்லை. தீபவம்சம் 20-17ன் படி தட்டிக என்பது தமிழர் பெயர் என்பதைக் கவனியுங்கள். மகாநாமதேரர் [மஹாநாம] தீபவம்சத்தில் உள்ள ஐந்து தமிழர்களை, ரோகணத்தில் இருந்து ஒரு பிராமணனையும் மற்றும் ஏழு தமிழர்களையும் சேர்த்து, எட்டு பேராக மகாவம்சத்தில் திரித்து விரிவுபடுத்தினார். அதாவது தீபவம்சத்தில் அரியணைக்கு போட்டியிட்ட ஐந்து போட்டியாளர்கள், மகாவம்சத்தில் எட்டு பேர் ஆனார்கள். மேலும் பிராமணனை தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தினர். பிராமணனின் பெயர் திஸ்ஸ. எனவே, முன்பு கூறியது போல், பிராமணனும் ஒரு தமிழனாக இருக்கலாம்? பின்னர் ஏழு தமிழர்கள் பிராமணனையும் மன்னனையும் தோற்கடித்தனர். மேலும் மன்னன் தனது இரண்டு மனைவிகளில் ஒருவரான சோமாதேவியை, அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். ஏழு தமிழர்களில் ஒருவன் சோமாதேவியை தன்னுடன் அழைத்துக் கொண்டு திரும்பிச் சென்றுவிட்டான். ஆனாலும் அனுலாவும் சோமாதேவியும் [Anula and Somadevi] வட்டகாமினியின் மனைவிகள் என்று தீபவம்சம் ஒன்றும் கூறவில்லை.

ஒருவன் வெளியில் இருந்து வந்து, நாட்டை கைப்பற்ற போரில் ஈடுபட்டு, ஏற்கனவே திருமணமான தோற்ற மன்னனின் மனைவி, தனக்கு காணும் என்று அவளுடன் திருப்தி அடைந்து, நாட்டை விட்டுவிட்டு திரும்பி போனார் என்பதை, யாராவது நம்புவார்களா? மற்றொரு தமிழர், ஒரு பௌத்தர் என்பதைச் சுட்டிக்காட்டி, அவர் புத்தரின் பிச்சைப் பாத்திரத்துடன் திருப்தியடைந்து நாடு திரும்பினாராம் ! பின்னர் தீபவம்சத்தில் கூறப்பட்டதைப் போலவே மற்ற ஐந்து பேரும், இலங்கையை அடுத்தடுத்து ஆண்டனர். இது ஒன்றே மற்றைய மூவரையும் வலிந்து கதையில் உட் புகுத்தியதைக் காட்டுகிறது. பின்னர் அரசன் வட்டகாமினி திரும்பி வந்து, தமிழ் அரசன் தட்டிகனை தோற்கடித்து மீண்டும் ஆட்சியைத் கைப்பற்றி, பன்னிரண்டு ஆண்டுகள் ஐந்து மாதங்கள் ஆட்சி செய்தார். அவர் தனது மற்றொரு மனைவி சோமாதேவியையும் இந்தியாவிலிருந்து அழைத்து வந்தார். இலங்கையைச் சேர்ந்த ஒருவர், பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஒரு பெண்ணைக் கண்டுபிடித்தார் என்றால் யாராவது நம்புவார்களா?

எப்படியாகினும், அந்த காலத்திலும் இலங்கை மற்றும் தென்னிந்தியா இடையே வணிகம், சமயப் பரிமாற்றம் மற்றும் அரச மரியாதை தொடர்புகள் இருந்ததுடன், பௌத்த பிக்குகள் மற்றும் வணிகர்கள் இரண்டு தீவுகளுக்கும் இடையே சுதந்திரமாகச் சஞ்சரித்தனர். எனவே, பௌத்த பிக்குகள், வணிகர்கள், மற்றும் இராசஅரண்மனையினர் வழியாக சோமதேவியின் இருப்பிடம் பற்றிய தகவல் அரசனிடம் வந்திருக்கலாம் என்று நம்பவும் ஒரு அரிய வாய்ப்பு உண்டு. குறிப்பாக, காஞ்சிபுரம், மதுரை, அனுராதபுரம் போன்ற பகுதிகள் பல உறவுகளால் அன்று இணைக்கப்பட்டிருந்தன என்பதற்கு வரலாற்று சான்றுகள் உண்டு.

மகாவம்சத்தின் 33 ஆம் அத்தியாயம் பத்து அரசர்களைப் பற்றியது, அடுத்த அத்தியாயம் பதினொரு மன்னர்களைப் பற்றியது, அதுக்கு அடுத்த அத்தியாயம் பன்னிரண்டு மன்னர்களைப் பற்றியது, மகிழ்ச்சியான ஒரு ஏறுவரிசையில் அதிகரிப்பு! வட்டகாமினி மதக்கொள்கை கோட்பாட்டை முதல் முறையாக புத்தக வடிவில் எழுதச் செய்தார். பிற்காலப் பகுப்பாய்வில் தமிழ் அரசன் தட்டிக மிகவும் முக்கியமானவராக வருகிறார்.

வட்டகாமனிக்குப் பிறகு மகசுழி மகாதீசன் [Mahachuli Mahatissa] பதினான்கு ஆண்டுகள் கி.மு. 76 தொடக்கம் கி.மு. 62 வரை ஆட்சி செய்தார். பின்னர் வட்டகாமனியின் மகன் கோரநாகன் [Coranaga] பன்னிரண்டு ஆண்டுகள் கொள்ளையனைப் போல அரசாண்டான். மகசுழியின் மகன் திஸ்ஸா [Tissa], கோரநாகனுக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். பின்னர் சிவா [Siva] ராணி அனுலாவுடன் ஒன்றாக இணைந்து வாழ்ந்து, ஒரு வருடம் மற்றும் இரண்டு மாதங்கள் ஆட்சி செய்தார். பின்னர் வெளிநாட்டில் இருந்து வந்த வடுக [Vatuka], ஒரு தமிழன் ஒரு வருடம் மற்றும் இரண்டு மாதங்கள் ஆட்சி செய்தார். வடுகா என்பது தெலுங்கு பேசும் மக்களைக் குறிக்கப் பயன் படுத்தப்படும் ஒரு சொல், ஆனால் இங்கு அவர் ஒரு தமிழர் என்று குறிக்கப் பட்டுள்ளது. பின்னர் திஸ்ஸ ஒரு வருடமும் ஒரு மாதமும் ஆட்சி செய்தார். பின்னர் ஒரு தமிழ் மன்னர் நிலயா [Nilaya] மூன்று மாதங்கள் ஆட்சி செய்தார். தீபாவம்சம் 20 - 30 இன் படி, அனுலா மேற் கூறிய சிறந்த நபர்களைக் கொன்று நான்கு மாதங்கள் ஆட்சி செய்தார். இந்த அனுலா வட்டகாமினியின் மூத்த சகோதரனின் மனைவி என்றால், அவள் மிகவும் வயதான காலத்திலும் மிகவும் சுறுசுறுப்பாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது?. வட்டகாமினி அவளை அழைத்துச் சென்றபோது அவள் ஒரு குழந்தையுடன் இருந்தாள். எனவே அப்பொழுது அவளுக்கு 25 வயது என்றால், வட்டகாமினி இறக்கும் போது அவளுக்கு 37 வயது இருக்க வேண்டும். பிறகு மற்றவர்கள், 14+12+3+4, மொத்தமாக 33 ஆண்டுகள், ஆட்சி செய்தனர்.

எனவே, அவள் 70 வயதிலும் தீவிரமாக ஈடுபட்டிருக்க வேண்டும். இருப்பினும், அது தெளிவாக இல்லை, ஆனால் சாத்தியம் உள்ளது. சிவா, வடுக, நிலயா என்பன தமிழ்ப் பெயர்கள், இந்த ஆட்சியாளர்கள் அனைவரும் சிறந்த மனிதர்கள் என்று வர்ணிக்கப்படுகிறார்கள். திஸ்ஸா கூட தமிழ் பெயராக இருக்கலாம்?

Part: 23 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Who would believe that, over two thousand years ago, a man from Lanka could find a woman in India after twelve long years?'

Then as per the Dipavamsa, five Damila kings, Alavatta (Pulahattha), Sabhiya (Bahiya), Panaya, Palaya, and Dathika ruled for fourteen years and seven months in total. The Dipavamsa does not say that they come from outside. Note that Dathika is a Damila name as per the Dipavamsa 20-17. Mahanama twisted and elaborated the five Damilas in the Dipavamsa into one Brahman from Rohana and seven Damilas who landed at Mahatittha in the Mahavamsa. The five contestants for the throne in the Dipavamsa became eight in the Mahavamsa. The Brahman and the seven Damilas claimed the throne, and the king set the Brahman against the Damilas. The Brahman’s name is Tissa and, as stated earlier, the Brahman could be a Tamil too. Then the seven Damilas defeated the Brahman and the king, and the king ran away leaving one of his two wives, Somadevi. One of the Damilas took Somadevi and went back. The Dipavamsa does not say that Anula and Somadevi are wives of the King Vattagamni. Would anyone believe that one came from outside, fought a war and satisfied with an already married woman to go away with her? Another one returned with the alms bowl of the Buddha, implying that Damila was a Buddhist! Then the rest is same as given in the Dipavamsa. Then the king Vattagamani came back, and defeated the Damila king Dathika and resumed his reign. He reigned for the total of twelve years and five months. He also brought back his other wife Somadevi from India. Would anyone believe that one, from Lanka, was able to find a woman in India after twelve years? Chapter 33 of the Mahavamsa is about ten kings, the next chapter is about eleven kings and the next chapter is about twelve kings, a happy sequential increase! Vattagamni made the doctrine to be written in the form of books for the first time. The Damila king Dathika is very important in the analysis later.

Mahachuli Mahatissa reigned after Vattagamni for fourteen years. Then Vattagamni’s son Coranaga reigned twelve years like a robber. Tissa, the son of Mahachuli, reigned three years after Coranaga. Then Siva cohabited with queen Anula, and ruled for one year and two months. Then Vatuka from foreign country, a Damila, ruled for one year and two months. Vatuka is a term used to denote Telugu speaking people, but he is a Damila here. Then Tissa ruled for one year and one month. Then a Damila king Nilaya ruled for three months. Anula killed the above excellent persons, and ruled for four months, as per the Dipavamsa 20-30. If this Anula was the wife of the elder brother of Vattagamani, then she must have been very active even at very old age. She was with a child when Vattagamani took her with him. If she was 25 years of age, then she should be 37 by the time Vattagamni died. Then others ruled for, 14+12+3+4, 33 years. She should have actively involved even at the age of 70 years. However, it is not clear but the possibility is there. Siva, Vatuka, Nilaya are Tamil names, and all these rulers are described as excellent persons. Even Tissa could be a Tamil name.

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 24 A தொடரும் / Will Follow

https://www.facebook.com/share/p/1JSZZBCcpV/?mibextid=wwXIfr

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 24 A

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்த பதிப்பாகும்.]

பகுதி: 24 A / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'நாக[Naga]வில் முடிவடையும் பெயர் தமிழர்களைக் குறிக்குமா?'

மகசுழியின் மகன் குடகன்ன தீசன் [Kutakanna Tissa, also known as Makalan Tissa] இருபத்திரண்டு ஆண்டுகள் அரசாண்டான். குடகன்ன திஸ்ஸ என்பது தமிழ்ப் பெயராகவும் இருக்கலாம்? அவர் மகாவம்சம் 34-30 படி அனுலாவைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினான். அவரது மகன் அபயன் (Abhaya / மகாவம்சத்தில் பட்டிகாபய / Bhatikabhaya) அவரது தந்தைக்கு பின் இருபத்தெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். பிறகு, குடகன்ன தீசனின் மற்றொரு மகனான மகாதத்திக நாகன் [Mahadathika Naga] பன்னிரண்டு ஆண்டுகள் அரசாண்டான். தத்திக [Dathika] முன்பு கூறியது போல் ஒரு தமிழ் மன்னன். மகாதத்திக, என்பது பெரிய அல்லது உயர்ந்த தத்திக ஆகும். எனவே, மகாதத்திக ஒரு தமிழ்ப் பெயராக இருக்க வேண்டும். நாகசாமி, நாகராஜா, நாகபூசன்னி, நாகப்பட்டினம், நாகர்கோயில் போன்ற பல தமிழ் பெயர்களுக்கு நாக என்பது மிகவும் பொதுவான முன்னொட்டு என்பதையும் கவனிக்க.

மகாதத்திக நாகனின் மகன் அமந்தகாமினி [Amandagamani] ஒன்பது ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் ஆட்சி செய்தான். தீபவம்சத்தின்படி அவரது முழுப்பெயர் அமந்தகாமினி அபயன் [Amandagamani Abhaya, also referred as Aḍagamunu]. தந்தை தமிழராக இருந்ததைப் போல அவரும் தமிழராக இருக்க வேண்டும்? அவருக்குப் பிறகு அவரது இளைய சகோதரர் கனிராஜனு திஸ்ஸன் [Kanirajanu Tissa] மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரும் வம்சாவளி தமிழராக இருக்க வேண்டும்? அமந்தகாமினியின் மகன் சூலபாயன் [Chulabhaya] அவனுக்கு ஒரு வருடம் கழித்து ஆட்சி செய்தான்; இவனும் தமிழனாக இருக்க வேண்டும்? தனது சகோதரர், மன்னர் அமந்தகாமினியைக் கொன்று அரியணை ஏறினார் என்பதால், மகாவம்சம் அரசன் கனிராஜனு திஸ்ஸாவை ஒரு தீய மன்னன் என்று குறிப்பிடுகிறது.

அமந்தகாமினியின் மகள் சிவாலி அல்லது ரேவதி [Sivali, also known as Revati / சூலபாயனின் சகோதரியான சிவாலி], நான்கு மாதங்கள் ஆட்சி செய்தாள். அமந்தகாமினியின் சகோதரியின் மகன் இளநாகன் சிவாலியை ஆட்சியிலிருந்து அகற்றி ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தான். இளநாக, அதாவது இளம் நாகம் என்பது தெளிவான தமிழ் பெயர். இளநாகனின் மகன் சந்தமுக சிவா [Candamukha Siva] எட்டு வருடமும் ஏழு மாதமும் ஆட்சி செய்தான். சந்தமுக சிவா என்பதும் தமிழ்ப் பெயராகும். அது மட்டும் அல்ல, சந்தமுக சிவாவின் வம்சாவளி தமிழர் ஆகும். தமிழில் ‘சந்திரமுகி’ [‘Chandramuki'] என்ற பெயரில் ஒரு படம் வந்தது. தமிழ் தேவி [Damila Devi] என்று அழைக்கப்படும் சந்தமுக சிவாவின் மனைவி, ஒரு பௌத்த நிறுவனமான அரமாவிற்கு தனது சொந்த வருமானத்தை வழங்கினார். பௌத்தத்தில், அரம (arama / आराम) என்றால் "துறவற வாழ்விடம்" என்று பொருள். அதாவது துறவிகள் வசிக்கும் மற்றும் அவர்களின் நம்பிக்கையை கடைப்பிடிக்கும் மற்றும் ஒன்றாக கூடும் இடம் என பொருள்படும். மன்னரும் ராணியும் சைவ சமயத்தைச் சேர்ந்தவர்களாகத் தோன்றினாலும் அவர்கள் புத்த அராமாக்கு நன்கொடை அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும், தீபவம்சம் பௌத்தத்திற்கு ஆதரவானது, ஆனால் தமிழர்களுக்கு எதிரானது அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். மகாவம்சத்தில் அவரைப் பற்றிய ஒரு கதை உள்ளது, அதில் தமிழ் தொடர்பை ஊகிக்க முடியும். அடகெமுனுவுக்கும் (ஆமந்தகாபனி அபயன்) வசபாவுக்கும் / வசபனுக்கும் [Adagemunue and Vasabha] இடையில் இருந்த ஏழு அரசர்களைப் பற்றி இராசவலிய கூறுகிறது, என்றாலும் அவர்களின் ஆட்சிக்காலம் குறிப்பிடப்படவில்லை.

கி.பி. எழுபதாம் ஆண்டில் வாழ்ந்த, பொதுவாக மூத்த பிளினி / பிளைனி (Pliny the Elder) என்று அழைக்கப்பட்ட, கையசு பிலினியசு செக்குண்டசு (Gaius Plinius Secundus, கிபி 23 / 24 – கிபி 79 ) என்ற மேனாட்டு வரலாற்றாசிரியன், இலங்கையைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் தருகிறார். யாழ்ப்பாண தீபகற்ப அரசின் பண்டைய தலைநகர், நல்லூருக்கு நகர முன், தலைநகராகவும் பன்னாட்டு வர்த்தக மையமாகவும் விளங்கிய, சிலாபத்துறைக்கு அருகில் மன்னார் வளைகுடாவில் இலங்கையின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள, பண்டைய துறைமுக நகரமான குதிரைமலை (கிரேக்கம்: Hippuros) பகுதிக்கு அன்னிஸ் பிலோகேன்ஸ் [A freed man of Rome, Annius Plocanus by name] என்ற ரோம் நாட்டவர் வந்த பொழுது, அவரை அங்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்து ஏற்றுக் கொண்டனர். அப்பொழுது, கி பி 50 இல், அங்கு இருந்த இலங்கை அரசனின் பெயர் சந்திரமுக சிவா [The king of Ceylon at that time (circa 50 a.d.) was Sandamukha Siva or Sandamuhune (“the moon-faced one”)] என பதியப்பட்டுள்ளது.

சந்தமுகன் கி.பி. முதலாம் நூற்றாண்டில், கி.பி. 44 - 52 வரை [Sandamukha Siva /Chandramukhaseewa / Chandamukha / சந்தமுகன், 44 – 52 AD] அனுராதபுரத்தை ஆட்சி செய்து வந்தான். இவனது தந்தையான இளநாகனின் பின் இவன் ஆட்சிபீடம் ஏறினான் என மகாவம்சத்திலும் கூறப்பட்டு உள்ளது. அதன் பின் அரசன் ரோம் நாட்டிற்கு தூது குழு ஒன்றை அனுப்பினார். அவர்களின் தலைவரை 'ராசியா' என குறிப்பிடுகிறார் [the king despatched to the court of Claudius Caesar an embassy consisting of four persons, the chief of whom the historian Pliny describes as Rachia —“ Legatos qiiattuor misit principe corum Rachia"]. 'ராசியா' வை , ராஜா என்பதன் திரிபாக இருக்கலாம் என்று ஜேம்ஸ் எமர்சன் ரெனென்ற் அவர்களும் [Tennent seems to think that “ Rachia” is a Roman corruption of Rajah ], அது 'இரசையா' வாக இருக்கலாம் என்று "Twentieth Century Impressions Of Ceylon" by Arnold Wright யிலும் (perhaps Rasiah) குறிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் சைமன் காசிச்செட்டி அதை ஆராச்சி [தலைவர்] என குறிப்பிடுகிறார். [“ Rachia ” is meant “ Arachchi ” (chieftain)] மேலும் அங்கு ஐநூறு நகரங்கள் இருந்தன எனவும், அதில் தலைமை நகரம் பலேசிமுண்டோ என குறிப்பிடுகிறார். [five hundred cities in their country, the chief of which was called “ Palaesimundo,”]. இது பழையநகர் [perhaps a corruption of Palayanakar.] என்னும் தமிழ் சொல்லின் திரிபாக இருக்கலாம் என்றும், அப்படியாயின் அதை பண்டைய துறைமுக நகரமான குதிரைமலையை உள்ளடக்கிய நகரமாக இருக்கலாம் என நாம் கருதலாம் என்று எண்ணுகிறேன்?.

இதேவேளை, பண்டைய இந்திய நூலான கௌடில்யரின், கி.மு. 350-283 வருடத்தை சேர்ந்த அர்த்தசாஸ்திரம் [Kautilya's Arthaidstra] இலங்கையை, பெருங்கடலுக்கு அப்பால் உள்ள நிலம் அல்லது இதனின் மறுபுறம் ["of the other side of or beyond the ocean,"] என்ற கருத்தில் பரசமுத்திர [Parasamudra ] என்று அழைப்பதாகவும் அறிகிறேன்.

மேலும் பலேசிமுண்டோ என்பது, தமிழ் சொல் 'பழைய முந்தல்' என்பதன் திரிபு ஆகவும் இருக்கலாம்? [Also Palaisi moundou may be a corruption of palaya mundal [பழைய முந்தல்]], முந்தல் என்பதன் ஒரு பொருள் முனை [promontory - கடல் முனை] ஆகும். அது மட்டும் அல்ல இலங்கையின் மேற்கு கடற்கரையில் முந்தல் என அழைக்கப்படும் பல கடல் முனைகள் உள்ளன. மேலும் பிடோலேமி அல்லது தொலமி கூட அப்படி ஒரு கடல் முனையை, அதாவது இன்றைய கற்பிட்டி தீபகற்பகத்தை, அனரிஸ் முண்டோ [Anarismoundou] என குறிப்பிட்டுள்ளார். [There are several promontories on the west coast called by the Tamil name Mundal, and Ptolemy himself mentions one of the name of Anarismoundou, now called Kalpitiya Peninsula].

முதலில் பலேசிமுண்டோ தலைமை நகரத்தை குறித்தாலும், காலப்போக்கில் அது முழு தீவையும் குறிக்கப் பாவிக்கப் பட்டதாக அறிகிறோம். உதாரணமாக, பெரிப்ளுசு இலங்கையை பலேசிமுண்டோன் [Palaisimoundon] என்றே குறிப்பிடுகிறார்.[according to the Periplus, Ceylon was then known as Palaisimoundon]

Part: 24 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Is name ending in Naga indicate Tamils?'

Kuttikannatissa, son of Mahachuli, reigned for twenty-two years. Kuttikannatissa could be a Tamil name too. He slew Anula as per the Mahavamsa 34-30. His son Abhaya (Bhatikaabhaya in the Mahavamsa) ruled twenty-eight years after his father. Then, Mahadathika Naga, another son of Kuttikannatissa reigned for twelve years. Dathika was a Tamil king as stated earlier. Mahadathika, big or great Dathika, must also be a Tamil name. Naga is very common prefix to many Tamil names, Nagasamy, Nagarajah, Nagapoosanny, Nagapattinam, Nagarkoil etc. Amandagamani, the son of Mahadathika Naga, reigned for nine years and nine months. His full name is Abhaya Amandagamani as per the Dipavamsa. He should also be a Tamil as his father was a Tamil. His younger brother, Kanirajanu ruled three years after him. He should also be a Tamil by descent. Amandagamani’s son, Culabhaya, ruled one year after him; must also be a Tamil. Amandagamani’s daughter Sivali, also known as Revati, another Tamil, ruled for four months. The son of Amandagamani’s sister, Illanaga, dethroned Sivali and ruled for six years. Illanaga, meaning young Naga, is clearly a Tamil name. Candamukha Siva is the son of Illnaga reigned eight years and seven months. Candamukha Siva is by descent a Tamil. Candamukha Siva is also a Tamil name. There was a Tamil movie with the title ‘Chandramuki”. Candamukha Siva’s wife, known as Damila Devi, bestowed her own revenue to an Arama, a Buddhist institution. The king and the queen seem to be of Saiva faith but they donated to Buddhist Arama. Again, the Dipavamsa is clearly pro Buddhist, but not anti-Tamil. There is a story about him in the Mahavamsa, and it could be inferred Tamil connection in it. The Rajavaliya speaks of seven kings between Adagemunue and Vasabha and the lengths of their reigns are not given.

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 24 B தொடரும் / Will Follow

https://www.facebook.com/groups/978753388866632/permalink/31084754941173080/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 24 B

பகுதி: 24 B / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'நாகவில் [Naga] முடிவடையும் பெயர் தமிழர்களைக் குறிக்குமா?' [தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது]

மேலும் மூத்த பிளினி தனது குறிப்பில், அங்கு இருந்த மக்கள் சேரர்களுடன் வர்த்தகம் செய்தனர் என்றும் [and that the people had commercial dealings with a race called the Seres —], மற்றும் மன்னர் தனது உயர்வான அதிகாரத்தின் [இறையாண்மை] மேல் ஏதேனும் அட்டூழியம் செய்தால், குற்றவாளியென்று தீர்மானித்து அவரை உலகளாவிய வெறுப்பால், வருந்த விடுவர் [If the king committed any outrage against his duty as a sovereign, he was condemned to suffer ” (not by the hand of violence, as, for example, in the case of Charles I. of England) “by the universal detestation which he experienced. Every individual avoided his company, and he was left to perish in silence and solitude] என்கிறது. இதே காலத்தை ஒட்டிய தமிழரின் சங்க இலக்கியமும் இவ்வாறான தகல்வல்களையே தருகின்றன. உதாரணமாக, புறநானூற்றுப் பாடல் ஒன்று "பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்" (புறம்-182) என்று கூறுகிறது. பொதுமறை இன்னும் ஒருபடி மேலே சென்று விடுகிறது. தானே பழிக்குரியனவற்றைச் செய்யா விடினும், தன்னுடன் தொடர்புடையார் செய்த பழியும் அதற்கும் அஞ்சுவதே நாணுடைமை என்று கூறுகிறது.

"பிறர் பழியும் தம்பழி போல் நாணுவர் நாணுக்கு

உறைபதி என்னும் உலகு." (குறள்-1015)

எனவே, [அரசனே] பழிக்குரியவற்றைச் செய்யினும் அல்லது [அரசன்] தான் செய்யவில்லை, எனவே தனக்கு அதில் தொடர்பில்லை என்றிருந்து விடாமல், அதையும் தானே செய்தது போலக் கருதியும் [அரசன்] நாண மடையும் பண்பாட்டையே உலகம் போற்றும். இதை மனதில் கொண்டே பெருங்கதை,"வடுநீங்கு அமைச்சர்" (பெருங்கதை 484) என்ற அடைமொழியைத் தருகிறது எனலாம். மேலும், பழைய நூல்கள் பழியஞ்சும் இயல்பை அமைச்சனுக்கு இன்றியமையாது வேண்டப்படும் இயல்பாகவே விதிக்கிறது. உதாரணமாக, மதுரைக்காஞ்சி 494 - 498

"நன்றும் தீதும் கண்டாய்ந்து அடக்கி,

அன்பும் அறனும் ஒழியாது காத்து,

பழிஒரீஇ உயர்ந்து,பாய்புகழ் நிறைந்த"

என்கிறது, அதாவது, அமைச்சர்கள் மக்களின் நன்மை தீமைகளைத் தம் அறிவால் கண்டு,மேலும் ஆய்ந்து அன்பு நெறியிலும் அறச்செயலிலும் ஒழுக எக்காலமும் மாறாதவாறு தன்னைக் காத்து, பழி தம்மிடத்து வராமல் அதனாலேயே ஏனையோரினும் உயர்ச்சி அடைந்து..., என்று பாடுகிறது. இது ஒன்றே அங்கு தமிழர் பண்பாடு, அதன் ஆதிக்கம், சந்த [சந்திர] முகன் மன்னர் அவையில் ஓங்கி இருந்ததை காட்டுகிறது. முகம் என்பது, முகத்தல் - முகர்தல் என்ற வேர்ச்சொல்லின் அடியாகப் பிறந்த ஒரு தமிழ் சொல். இது மன்னனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை காட்டுகிறது மற்றும் சந்திரமுகன் சிவா, ஒரு சைவன் என்பதையும் காட்டுகிறது.

நாக மக்கள் ஒரு காலத்தில் இலங்கையிலும் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்த பழங்கால பழங்குடியினர் என்று சிலரால் நம்பப்படுகிறது. மகாவம்சம், மணிமேகலை போன்ற பல பண்டைய நூல்களில் நாகர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. யாழ்ப்பாணக் குடாநாடு தமிழ் இலக்கியத்தில் நாக நாடு என்றும், பாலி இலக்கியத்தில் நாகதீபம் என்றும், கிரேக்க வர்த்தமானி [Greek gazetteer / வர்த்தமானி என்பது ஒரு வரைபடம் அல்லது நிலவரைத் தொகுப்பு இணைந்து பயன்படுத்தப்படும் புவியியல் அகராதி ஆகும் / A gazetteer is a geographical dictionary or directory used in conjunction with a map or atlas.] நாகதிபா [Nagadiba] என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாகபூமி என்ற பெயர் யாழ்ப்பாணம், உடுத்துறையில் இருந்து எடுக்கப்பட்ட பிராமி பொறிக்கப்பட்ட நாணயத்திலும், யாழ்ப்பாணக் குடாநாட்டைக் குறிக்கும் தமிழ்நாட்டின் புதுக்கோட்டையிலிருந்து ஒரு தமிழ் கல்வெட்டிலும் காணப்பட்டது. நாக வழிபடும் பாரம்பரியம் இன்னும் தமிழ்நாட்டில் பின்பற்றப்படுகிறது. இந்த வார்த்தைக்கு பல மூலங்கள் உள்ளன. தமிழில் "நாகரிகம்" என்றால் பண்பட்ட மக்கள் என்றும் பொருள் படும். சமஸ்கிருதம், பாலி மற்றும் தமிழ் மொழியில் "நாக" என்பது "பாம்பு" அல்லது "அரவம்" என்று பொருள்படும். க.இந்திரபாலா போன்ற அறிஞர்கள், இவர்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழியுடன் இணைத்துக் கொள்ளத் தொடங்கிய பழங்கால பழங்குடியினராகக் கருதுகின்றனர். தமிழறிஞர், வரலாற்று ஆய்வாளர் வி.கனகசபையின் கூற்றுப்படி, தென்னிந்தியாவிலும் வடகிழக்கு இலங்கையிலும் பரவியிருந்த ஒளியர், பரதவர், மறவர், பறையர், கள்ளர், பள்ளி மற்றும் எயினர் [Oliyar, Parathavar, Maravar, Paraiyar, Kallar, Palli and Eyinar] ஆகியவர்கள் நாக பழங்குடியினர் என்கிறார்.

பல ஆசிரியர்களின் கூற்றுப்படி அவர்கள் திராவிட பழங்குடியினராக இருக்கலாம். சங்க இலக்கியத்திற்குப் பங்களித்த பல தமிழ்ப் புலவர்கள் தங்கள் நாக வம்சாவளியைக் குறிக்க நாக முன்னொட்டுகளையும் பின்னொட்டுகளையும் தங்கள் பெயர்களுடன் இணைத்தனர் என்பது வரலாறு!.

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 24 C தொடரும் / Will Follow

https://www.facebook.com/groups/978753388866632/posts/31112551158393458/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 24 C

பகுதி: 24 C / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'நாகவில் [Naga] முடிவடையும் பெயர் தமிழர்களைக் குறிக்குமா?' [தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது]

இன்று இலங்கையில் ஏறத்தாழ முழுமையாக சிங்களவர்கள் வாழும், தென்மாகாண காலியை கருத்தில் கொண்டால், அங்கே ரொசெட்டாக் கல் அல்லது கல்வெட்டின் ஒரே பக்கத்தில் இரு அல்லது மூன்று வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்டிருக்கும் கல்வெட்டு / கற்பலகை [Rosetta Stone] ஒன்றை எஸ். எச். தோம்லின் என்ற பொறியாளர் [An engineer, S. H. Thomlin] 1911இல் கண்டு எடுத்து உள்ளார். இதை இன்று காலி மும்மொழி கல்வெட்டு (Galle Trilingual Inscription) என்று அழைப்பதுடன், இலங்கையின் கொழும்பு தேசிய நூதனசாலையில் காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் காலியில் சீனக் கடற்படைத் தளபதியும், நாடுகாண் பயணியுமான 'செங் கே' [Chinese traveler Zheng He,dated 15 February 1409] இத்தீவிற்கு இரண்டாம் முறை வந்ததின் நினைவாக 1409 ஆண்டில் சீன, தமிழ், பாரசீகம் [Chinese, Tamil and Persian] ஆகிய மூன்று மொழிகளில் எழுதப்பட்ட இந்த கற்றூண் [stone pillar] கல்வெட்டு நடப்பட்டது ஆகும். இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால் பதின்மூன்றாம் / பதினான்காம் நூற்றாண்டில், இலங்கையின் தெற்குப்பகுதியான காலியில் கூட , சிங்களத்தை தவிர்த்து தமிழில் கல்வெட்டு எழுதப்பட்டு இருப்பது, அந்த நாட்களில், காலியில் கூட, தமிழ் எவ்வளவு நடைமுறையில் இருந்தது என்பதற்கான சான்றாக விளங்குகிறது. மேலும் இது அவரும் [செங் கே] மற்றவர்களும் சிவனொளிபாதம் அல்லது பாவா ஆதம் மலைக்கு (Adam's Peak; சிங்களம்: சிறிபாத] வழங்கிய காணிக்கை பற்றி கூறுகிறது. புத்தருக்கு கொடுத்த காணிக்கை பற்றி சீன மொழியிலும், அல்லாஹ்விற்கு வழங்கியதை பாரசீக மொழியிலும், தென்னாவர நாயனார் [Tenavarai Nayanar] என அழைக்கப்படும் விஷ்ணுவிற்கு வழங்கியதை தமிழிலும் எழுதப் பட்டுள்ளது. [The Chinese inscription mentions offerings to Buddha, the Persian in Arabic script to Allah and the Tamil inscription mentions offering to Tenavarai Nayanar (Hindu god, Vishnu).]. தொண்டீசுவரம் (அல்லது தொண்டேசுவரம், தொண்டேச்சரம் / Tenavaram temple) என்பது இலங்கையின் தெற்கில் மாத்தறை மாவட்டத்தில் தெவிநுவர (தேவந்திரமுனை) எனும் பகுதியில் இருந்த ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சிவன் கோயிலாகும். பஞ்சஈஸ்வரங்களில் ஒன்று இது ஆகும். இது பின் இலங்கையை ஆக்கிரமித்த போத்துக்கீசியரால் சிதைவடைக்கப்பட்டது. இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது ஒரு பெரிய சிவலிங்கம் ஒன்று ஆய்வாளர்களால் அகழ்ந்து எடுக்கப்பட்டது. தற்போது தொண்டேச்சரம் கோயில் இருந்த இடத்தில் ஒரு விஷ்ணு கோயில் அங்கிருந்த சிங்களப் பௌத்தரால் எழுப்பப்பட்டுள்ளது. "தெவிநுவர கோயில்" என இது இன்று அழைக்கப்படுகிறது

கல்லாடநாகன் (கிமு 50 – 44) (2) சோரநாகன் (கிமு 3 – 9) (3) இளநாகன் (கிபி 96 – 103) (4) மாகலக்க நாகன் (கிபி196 – 203) (5) குஜ்ஜநாகன் (கிபி 246 – 248) (6) குட்டநாகன் (கிபி 248 – 249) (7) ஸ்ரீநாகன் I (கிபி 249 – 269) (8) அபயநாகன் (291 – 300) (9) ஸ்ரீநாகன் II (கிபி 300 – 302) (10) மகாநாகன் (கிபி 556 -568) எனப் பல அரசர்கள் நாக பின்னோட்டத்துடன் இலங்கையை 6 ஆம் நூற்றாண்டு வரை அநுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டுள்ளார்கள் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியது ஆகும். அது மட்டும் அல்ல, தீசன் என்ற சொல்லும் நாக வம்சத்தவருக்கு உரிய சொல்லே ஆகும். எடுத்துக் காட்டாக ஸ்ரீநாகனின் தந்தை பெயர் வீர தீசன் ஆகும் (The Early History of Ceylon by G.C.Mendis -pages 83-85). இவர்கள் யாரும் தங்களை ஹெல, சிகல அல்லது சிங்கள என அழைக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

நாகர்கள் அதிகமாக மங்கோலியா இன மூலத்தை கொண்டவர்கள் [Mongolian origin] என்று C.ராஜநாயகம் [C.Rasanayagam] கூறுவதுடன், வருணோ மஹதி [Waruno Mahdi] என்பவர், நாகர்கள் ஒரு கடல் வாழ் மக்கள் என்கிறார் [a maritime people]. மேலும் தென் இந்திய மக்களில், கேரளத்தில் வாழும் திராவிட நாயர் [Nāyars] சமுதாயத்தை உதாரணமாக எடுக்கிறார்கள், பண்டைய கேரளா மக்கள் தமிழ் சேரர் என்பது குறிப்பிடத் தக்கது. வட இலங்கையில் ஆரியர் வருவதற்கு முன் குடி ஏறி வாழ்த்த நாகர்கள் இவர்களே என்று ஹென்றி பார்க்கர் கூறுகிறார். இதை K.M. பணிக்கர் சில காரணங்களை சுட்டிக்காட்டி ஆமோதிக்கிறார். நாகர் தான் நாயர் என மாற்றம் அடைந்ததாகவும், ஆணும் பெண்ணும் தமது தலை முடியை முடிச்சு போடும் விதம், ஒரு நாகப்பாம்பின் பேட்டை ஒத்திருப்பது, இதை உறுதி படுத்துவதாகவும் கூறுகிறார். [Perhaps the only South Indian community that could be reasonably identified with the Nāgas of yore are the Nāyars, a Dravidian – speaking military caste of Kerala amongst whom remnants of serpent worship have survived. Henry Parker suggested that “the Nāgas who occupied Northern Ceylon long before the arrival of the Gangetic settlers were actual Indian immigrants and were an offshoot of the Nāyars of Southern India”. This view is lent support by K.M. Panikkar who suggests that the Nāyar were a community with a serpent totem and derives the term Nāyar from Nāgar or serpent-men. The belief that the Nāyars have taken their name from the Nāgas also appears to be supported by the peculiar type of hair knot at the top of the head borne by Nayar men and the coiffure of Nayar women in the olden days which resembled the hood of a cobra] மனோகரன். நாகர்கள் பண்டைய வட இலங்கையில் வசித்தவர்கள் என்றும், பண்டைய தமிழர் என்றும் இரண்டாம் நூற்றாண்டு டோலமியின் வரைபடத்தை வைத்து வாதாடுகிறார் [Manogaran (2000) believed the Nāgas of the MV to be ancient Tamils, drawing his conclusions on Ptolemy’s 2nd century A.C. map of Taprobane which he supposes indicates Nāgadīpa in the northern part of the island, the areal extent of which corresponds to the area settled by present-day Tamils] நாகர்கள் கி மு 3ஆம் நூற்றாண்டிற்கு முன்பே தென் இந்தியாவும் அதை ஒட்டிய பகுதிக்கும் வந்து, படிப்படியாக தமிழுடன் குறைந்தது கி மு 3 ஆம் நூற்றாண்டில் முழுமையாக இணைந்து விட்டார்கள் என்கிறார். நாகர், அதிகமாக திராவிட இனத்தவர்களும் மற்றும் பாம்பை வழிபடுபவர்கள் ஆகும் [Laura Smid (2003). South Asian folklore: an encyclopedia : Afghanistan, Bangladesh, India, Pakistan, Sri Lanka. Great Britain: Routledge. 429]. கி மு மூன்றாம் நூற்றாண்டு வரை நாகர்கள் தனித்துவமான இனமாக ஆரம்பகால இலங்கை வரலாற்று குறிப்பேடுகளிலும் [chronicle] மற்றும் ஆரம்பகால தமிழ் இலக்கிய படைப்புகளிலும் காணப்படுவதுடன், கி மு மூன்றாம் நூற்றாண்டு தொடக்கத்தில், நாகர்கள் தமிழ் மொழியுடனும், தமிழ் இனத்துடனும் ஒன்றிணைய தொடங்கி, தம் தனிப்பட்ட அடையாளத்தை இழந்தார்கள் [Holt, John (2011), The Sri Lanka Reader: History, Culture, Politics, Duke University Press] என்று கருதப் படுகிறது.

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 25 தொடரும் / Will follow

https://www.facebook.com/groups/978753388866632/permalink/31140685415580032/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 25

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 25 A / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'எல்லாளனுக்கு முந்திய மன்னர்கள், எல்லாளன் உட்பட, கற்பனைப் கதாபாத்திரங்களா?'

சந்தமுக சிவாவுக்கு அடுத்தபடியாக யசலாலக்க தீசன் (Yassalalaka Tissa) தீபவம்சத்தின்படி எட்டு வருடங்களும் ஏழு மாதங்களும் மகாவம்சத்தின்படி ஏழு வருடங்களும் எட்டு மாதங்களும் ஆட்சி செய்தார்; வருடங்கள் மற்றும் மாதங்களின் எண்ணிக்கை, தீபவம்சத்தில் இருந்து மகாவம்சத்துக்கு போகும் பொழுது, ஆண்டு மாதமாகவும், மாதம் ஆண்டாகவும் ஒன்றுக்கொன்று மாற்றப் பட்டுள்ளது. திஸ்ஸ [Tissa] தனது சகோதரன் சந்தமுக சிவாவை ஒரு திருவிழா விளையாட்டில் கொன்றதாக மகாவம்சம் கூறுகிறது. பின்னர் சபா [மகாவம்சத்தில் சுபகராஜா / Sabah (Subharajah in the Mahavamsa)] ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவர் ஒரு கதவுக் காவலாளியின் மகன். மகாவம்சத்தில் உள்ள இந்தக் கதவுக்காவலரைச் சுற்றிய ஒரு கதை, அரசனைப் பற்றியும் அதே ஒற்றுமையைக் கொண்ட ஒரு வேலைக்காரனைப் பற்றியும் பழங்காலத்தில் நிலவிய ஒரு கதையுடன் ஒத்துப் போகிறது.

மகாவம்சம் 35-58 இன் படி சுபகராஜா ஒரு வள்ளி - விகாரை கட்டினார். மேலும் வள்ளி என்பது மிகவும் பொதுவான தமிழ்ப் பெண் பெயர். அதன் பின் வசபா [முதலாம் இலம்பகர்ண வம்ச மன்னனான வசபன் / Vasabha] என்ற அரசன் நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தான். தீபவம்சம் அவரது வம்சாவளியைப் பற்றிப் பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் மகாவம்சம் அவர் வடக்கு மாகாணத்திலிருந்தும் இலம்பகர்ண அரச குலத்திலிருந்தும் வந்தவர் என்று கூறுகிறது. வட மாகாணத்தை சேர்ந்தவர் என்பதால் அவரும் தமிழராக இருக்கலாம்? அவர் தனது மாமாவின் மனைவியை ராணியாகக் ஏற்றுக்கொண்டார். இவனுடைய ஆட்சி எல்லாளனுக்குப் பிறகு மிக நீண்டது ஆகும்; இருவருமே ஒரே கால ஆட்சியைக் கொண்ட தமிழர்களாகக் காணப்படுகிறது. என்றாலும், முன்பு நாம் பல சந்தேகங்களைக் சுட்டிக்காட்டியவாறு, எல்லாளனுக்குப் முந்தைய மன்னர்கள் எல்லோரும், எல்லாளன் உட்பட, கற்பனையான பாத்திரங்கள் போல்த் தெரிகிறது.

மகாவம்சத்தின் படி, வசபா இன்னும் பன்னிரண்டு ஆண்டுகள் மட்டுமே வாழ்வார் என்று ஒரு சோதிடரால் கூறப்பட்டதால், வசபா ஒரு பக்தியுள்ள பௌத்தரானார் என்றும் [அப்படி என்றால் முன்பு அவர் அல்லது இலம்பகர்ண வம்சம் அப்படி அல்ல என்று பொருள் படுகிறது, ஏனென்றால், இவருடன் தான் ஒரு புதிய வம்சம் ஆட்சிக்கு இலங்கைக்கு வந்தது என்பதால்] மற்றும் அவரது ஆயுளை நீட்டிக்கும் முயற்சியில் பல புண்ணிய செயல்களைச் செய்தார் என்றும் அங்கு கூறியிருப்பதால், இந்த மன்னனின் கதையில் உள்ள உண்மை சந்தேகத்திற்குரியது போல்த் தெரிகிறது? இவன் இலம்பகர்ண வம்சத்தைக் சேர்ந்தவன் என்றும் இலங்கையில் வட பகுதியில் இராணுவத் தளபதியாக இருந்த தனது மாமனாரின் கீழ் வேலை செய்து வந்தான் என்றும் கூறப்பட்டுள்ளது.

சோதிடரின் கணிப்பின்படி அரசனின் ஆட்சிக்காலத்தை பன்னிரெண்டு வருடங்களில் இருந்து நாற்பத்து நான்கு வருடங்களாக நீட்டிக்கும் அல்லது வாழ்நாளை நீட்டிக்கும் தீர்க்கதரிசனங்களும் அதை ஒட்டிய செயல்களும் உண்மையான வரலாறு அல்ல. எனவே மன்னனைப் பற்றி மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ள கதைகள் கற்பனையானவை அல்லது அரசனே ஒரு கற்பனைக் கதாபாத்திரமாகக் கூட இருக்கலாம்? என்றாலும் மகாவம்சம் விவரிக்கும் இந்தக் கதைகளை தீபவம்சம் கொடுக்கவில்லை. எனவே மகாநாம தேரர் நிச்சயமாக ஒரு இலக்கியக் கலைஞர் அல்லது இன்றைய பேச்சுவழக்கில் ஒரு சொற்பொழிவாளர். வசபாவின் பெயரை வெஹெப் [Vehep] என்று இராசவலிய கூறுகிறது. வட்டகாமினி முதல் வசபா வரை பெரும்பாலும் தமிழ் மன்னர்கள் அல்லது அவர்களின் வம்சத்தில் வந்தவர்கள் என்று அறிய முடிகிறது.

அனுராதபுரத்தில் 44 ஆண்டுகள் ஆட்சி செய்த எல்லாளனை அடைவதற்கு 31 மன்னர்களை வென்று அதன் பின் தான் 32 ஆவதாக எல்லாளனை, துட்ட கைமுனு வென்றதாக மகாவம்சம் விவரிக்கிறது. அது மட்டும் அல்ல அவன் தனது போரில் இலட்ச்சக் கணக்கானவர்களை கொன்றதாக கூறுகிறான். இந்த தரவை வைத்து பார்க்கும் பொழுது அனுராத புரத்தையும் அதை சுற்றியும் பெரும் அளவான தமிழ் கிராமங்களும் தமிழர்களும் வாழ்ந்தது அத்தாட்சி படுத்தப் படுகிறது. அவர்கள் சிவனை வழிபட்டார்கள் என்பதும் தெரிகிறது. கி மு 200 ஆண்டு அளவில் அல்லது அதற்குப் பின்பு, பாளி மொழி இறந்த மொழியாக மாறிக் கொண்டிருந்தது. எனவே இதற்கு பிரதி யீடாக ஹெள மொழி [Eḷu, also Hela or Helu, is a Middle Indo-Aryan language or Prakrit of the 3rd century BC] முக்கியத்துவம் பெற்றது. அதன் பின் கி பி ஆறாம் நூற்றாண்டில் அல்லது அதற்குப் பின், பிராகிருதம், பாளி, தமிழ் போன்ற மொழிகளையும் உள்வாங்கி சிங்கள மொழியாக முதல் முதல் வளர்ச்சி அடைந்தது. ஆகவே அதற்கு முன்பு சிங்கள மொழி என்று ஒன்றும் இல்லை என்பதே உண்மை ஆகும். அது மட்டும் அல்ல, வரலாற்று ரீதியாக, அனுராத புரத்தில் தமிழர்கள் பெரும் அளவில் வாழ்ந்தார்கள் என்பதை உறுதிப்படுத்துவதாக, அதன் தொடர்ச்சியை. பதினேழாம் நூற்றாண்டின் இறுதி பகுதியிலும் வர்த்தகரான ரொபெர்ட் நொக்ஸ் [Robert Knox ] என்ற ஆங்கிலேயனின் "Historical Relation of Ceylon" என்ற அவரின் நூலிலும் காண்கிறோம்.

Part: 25 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Are the kings earlier to Elara, including Elara, fictional characters?

Next to Candamukha Siva, Yasalala Tissa reigned for eight years and seven months as per the Dipavamsa and seven years and eight months as per the Mahavamsa; the numbers of years and months are interchanged. The Mahavamsa says that Tissa killed his brother Candamukha Siva in a festival sport. He is also the brother, as per the Mahavamsa, of Candamukha Siva, a Tamil. Then Sabah (Subharajah in the Mahavamsa) ruled for six years. He was the son of a doorkeeper. A story around this doorkeeper in the Mahavamsa is a very common thread in the olden times about king and a servant of same resemblance.

Subharajah built a Valli-vihara as per the Mahavamsa 35-58, and Valli is a very common Tamil female name. Then a king by the name Vasabha ruled for forty-four years. The Dipavamsa is silent on his lineage, but the Mahavamsa says that he came from the Northern Province and of Lambakanna clan. He could also be a Tamil as he is from the Northern Province. He took his uncle’s wife as his queen. His reign is the longest after Elara; both could be Tamils with the same length of reigns. The kings earlier to Elara, including Elara, are fictional characters, and the king Vasabha is the king with the longest reign so far. However, the bona fide of this king is also in doubt, as there is a prophecy in the Mahavamsa about him. There are acts to lengthen the king’s length of reign from twelve years to forty-four years in accordance with the soothsayer’s prediction. Prophecies and acts to lengthen the lifetime are not real history. Either the tales given in the Mahavamsa about the king are fictional or the king himself is a fictional character. The Dipavamsa does not give this tales, which the Mahavamsa narrates. Mahanama is certainly a literary artist or a wordsmith in the present day parlance. The Rajavaliya gives the name of Vasabha as Vehep. After Vattagamani to Vasabha are mostly Tamil kings.

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 25 B தொடரும் / Will follow

https://www.facebook.com/groups/978753388866632/posts/31192237513758155/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 25 B

பகுதி: 25 B / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'எல்லாளனுக்கு முந்திய மன்னர்கள், எல்லாளன் உட்பட, கற்பனைப் கதாபாத்திரங்களா?' [தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது]

ரொபெர்ட் நொக்ஸ் கண்டி அரசனால் சிறை பிடிக்கப் பட்டான். எனினும் பல ஆண்டுகளின் பின், சிறையில் இருந்து தப்பி, காடுகளையும் மலைகளையும் கடந்து அனுராத புரத்தை வந்தடைந்தான். அவன் சிறையில் இருந்த போது, சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றிருந்தான். ஆகவே அநுராத புரம் வந்த ரொபெர்ட் நொக்ஸ், அங்குள்ள மக்கள் சிங்கள மக்கள் என எண்ணி, சிங்கள மொழியில் பேச முற்பட்டான். ஆனால் அவர்களுக்கு அந்த மொழி விளங்க வில்லை. அதன் பின்பு தான் அவனுக்கு தெரிய வந்தது இவர்கள் தமிழர்கள் என்று எழுதி உள்ளார். ["To Anarodgburro therefore we came, called also Neur Waug.* Which is not so much a particular single Town, as a Territory. It is a vast great Plain, the like I never saw in all that Island: in the midst where∣of is a Lake, which may be a mile over, not natural, but made by art, as other Ponds in the Country, to serve them to water their Corn Grounds. This Plain is encompassed round with Woods, and small Towns among them on every side, inhabited by Malabars, a distinct People from the Chingulayes. But these Towns we could not see till we came in among them. Being come out thro the Woods into this Plain, we stood looking and staring round about us, but knew not where nor which way to go. At length we heard a Cock crow, which was a sure sign to us that there was a Town hard by; into which we were resolved to enter. For standing thus amazed, was the ready way to be taken up for suspitious persons, especially because White men ne∣ver come down so low. Being entred into this Town, we sate our selves under a Tree,* and proclaimed our Wares, for we feared to rush into their Yards, as we used to do in other places, lest we should scare them. The People stood amazed as soon as they saw us, being originally Malabars, tho Subjects of Cande. Nor could they understand the Chingulay Lan∣guage in which we spake to them. And we stood looking one upon another until there came one that could speak the Chingulay Tongue: "[ "The History of Ceylon from the Earliest Period TO THE YEAR MDCCCXV " / AUTHOR'S ESCAPE. PART IV /page 322-323].

அது மட்டும் அல்ல, போர்த்துகீசியர்கள் இலங்கையில் 1505 ஆம் ஆண்டு தரையிறங்கிய காலத்திலும் கூட தமிழ் இலங்கையில் ஒரு பிரதான மொழியாக இருந்தது என்பதற்கு பல சான்றுகள் வரலாற்று ரீதியாக இருக்கின்றன. உதாரணமாக, கோட்டை அரசன் ஏழாம் புவனேகபாகு [the king of Kotte, Bhuvanehabahu VII / 1468 – 29 December 1550] போர்த்துகீசியர்களுடன் தமிழில் ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டார். மேலும் கோட்டை அரசாட்சியில் நீதிமன்ற மொழியாக அன்று தமிழும் இருந்துள்ளது.[Aiyangar, S. Krishnaswami; de Silva, Simon; M. Senaveratna, John (1921). "The Overlordship of Ceylon in the Thirteenth, Fourteenth and Fifteenth Centuries"] . Kotte என்ற சொல்லே தமிழ் சொல் கோட்டை யில் இருந்து பெறப்பட்டதாகும்.[Somaratne, G.P.V. (1984). The Sri Lanka Archives, Volume 2. Department of National Archives. p. 1.] அதே போல, அறிஞர் H L செனிவிரட்ன [H L Seneviratne] பல கண்டி தலைவர்கள் [Kandyan chieftains] 1815 ஆண்டு மாநாட்டு [1815 Convention / treaty with the British] உடன்படிக்கைகள் தமிழில் கையெழுத்திட்டார்கள் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஊகங்கள் மற்றும் அனுமானங்களைத் தவிர்த்து, தொல்பொருள் சான்றுகள் அல்லது கல்வெட்டியல் சான்றுகள் மூலம் [archeological / epigraphic facts / evidence] சிங்கள மொழி கி பி 9ஆம் நூற்றாண்டிற்கு முன் இருந்ததாக எந்த தகவலும் நான் அறிந்த வரையில் இல்லை. சிங்கள மொழியில் ஏறக்குறைய 4000+ தமிழ் சொற்கள் இருப்பதை ஆதார பூர்வமாக எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் [Rev. S. Gnanapiragasam] சுட்டிக் கட்டி, சிங்கள மொழியில் இருந்து எல்லா தமிழ் சொற்களையும் கழற்றிவிட்டால், அங்கு சிங்கள மொழி என்று ஒன்றுமே இருக்காது என்கிறார். [If the Sinhala vocabulary is stripped of all the Tamil words there will be no Sinhala language.] சொற்பிறப்பு – ஒப்பியல் தமிழ் அகராதி (An Etymological and comparative Lexion of the Tamil Language), இவரால் 1938-இல் வெளிப்படுத்தப் பெற்றது என்பது குறிப்பிடத் தக்கது.1815 இல் கண்டி இராச்சியம் காட்டிக்கொடுப்பினால் வீழ்த்தப்பட்டது. அதன் பின் “கண்டி ஒப்பந்தம்” கண்டி அரச மாளிகையில் 02.03.1815 அன்று பி.ப. 4.00க்கு செய்து கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் கண்டி திசாவைகள் மற்றும் அதிகாரிகள் கையெழுத்திட்டனர். அட்டவனை 10 அவர்களின் கையொப்பத்தை காட்டுகிறது. இதில் ரத்வத்தையின் கையெழுத்து தமிழில் பூரணமாக வைக்கப்பட்டுள்ளது. மற்றும் பலரின் கையெழுத்து தமிழும் மற்றும் இன்னும் அப்பொழுது பரிணாமம் அடைந்து வரும் சிங்களமும் கலந்து இருக்கின்றன. [Table 10, depicts the signatures of the Dissawes and Adigars who were a party to the March’ 1815 Kandyan convention. The mixture of Tamil and yet evolving Sinhala alphabets used by many may depict a period in our history (especially in the Kandyan Kingdom) when a combination of Sinhala and Tamil alphbets were used].

மேலும், டச்சு காலத்தில், கிபி 1656 முதல் கிபி 1796 வரை, இலங்கையில் அடிமட்ட சமூக உறவுகளில், சிங்களம் தமிழ் என்ற வேறுபாடுகள் காணப்படவில்லை என்றும், ஆனால் பல்வேறு சாதி பிரிவுகளே காணப்பட்டதாகவும் அருட்தந்தை வீ. பெர்னியோலா அடிகள் கூறுகிறார் [Vito Perniola, in observing the social relations at the grassroots level in the Dutch period of SriLanka, did not see "any racial distinction between Sinhala and Tamils," but "rather the division into various castes"]. கண்டியைத் தலை நகராகக்கொண்டு 1707 ஆம் ஆண்டுக்கும் 1815 ஆம் ஆண்டுக்கும் இடையில் ஆண்டு வந்த நாயக்கர் அரச மரபு [வம்சம்] எமக்கு எடுத்து கட்டுவது, அரசன் சிங்களவனாக இருக்கவேண்டும் என்ற எந்த நிபந்தனையும் அப்பொழுதும் இலங்கையில் இருக்கவில்லை என்றும், ஆனால் புத்த மதத்திற்கு ஆதரவளிக்க மட்டுமே அங்கு வலியுறுத்தப்பட்டது என்பதாகும். [The longevity of the Nayakkar dynasty (1739-1815) in the kingdom of Kandy indicates that there was no requirement for the king to be Sinhalese,while his patronage to Buddhism was insisted upon].

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 25 C தொடரும் / Will follow

https://www.facebook.com/groups/978753388866632/posts/31249173764731196/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 25 C

பகுதி: 25 C / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'எல்லாளனுக்கு முந்திய மன்னர்கள், எல்லாளன் உட்பட, கற்பனைப் கதாபாத்திரங்களா?' [தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது]

இலங்கையில் கண்டு எடுக்கப் பட்ட கல்வெட்டுகள், சிங்களம் என்பது கி மு 500 ஆண்டில் வடமேற்கு வடகிழக்கு இந்தியாவில் இருந்து வந்த குடியேறிகளால் கொண்டு வரப் பட்ட பிராகிருதத்தில் இருந்து மெல்ல மெல்ல வளர்ந்த ஒரு மொழியாகும் என்பதை உறுதிப் படுத்துகிறது. இது இந்திய - ஆரிய மொழிகளில் இருந்து தனிமை படுத்தப் பட்டதால், அதன் வளர்ச்சி ஓரளவு சுயாதீனமாக இருந்தது எனலாம். திராவிட மொழிகளில் மூத்தது தமிழ் என்பதாலும், சிங்கள இனம் என்ற ஒன்றின் தோற்றம் ஆரம்பத்தில் இருந்தே தமிழுடன் தலைமுறைகளாக இணைந்திருந்ததாலும், சிங்கள மொழியின் வளர்ச்சியில் மிகவும் செல்வாக்கு செலுத்தும் வாய்ப்பு பெற்று, சிங்கள மொழியின் ஒலியியல், இலக்கணம் மற்றும் சொற்களஞ்சியங்களில் தமிழின் தாக்கத்தை இன்று காணக் கூடியதாக உள்ளது. [Stone inscriptions suggest that Sinhala developed from the Prakrits, brought to Sri Lanka by settlers from Northwestern and Northeastern India in the 5th century BCE. Because of its isolation from the other Indo-Aryan languages of mainland India, Sinhala’s development was somewhat independent. Since Tamil, the oldest of the Dravidian languages, and Sinhala have coexisted for generations, it strongly influenced Sinhala’s phonology, grammar, and vocabulary.] கி மு 300 ஆம் அல்லது கி மு 200 ஆம் ஆண்டில் இருந்து சிங்கள பிரகிருத் அல்லது சிங்கள மொழிக்கு முன்னைய கல்வெட்டுக்கள் [Sinhalese Prakrit inscriptions] காணப்பட்டாலும், சிங்கள கல் வெட்டுக்கள் 6ஆம் நுற்றாண்டிற்குப் பின்பே, அதிகமாக 9ஆம் நுற்றாண்டிற்குப் பின்பே தான் காணப்படுகின்றன. தொடக்கத்தில் இரண்டு மூன்று வரிகளில் நன்கொடைகளைப் பற்றிய விபரங்களை தந்தன, ஆனால் 10ஆம் நூற்றாண்டில் இருந்து தான் கூடுதல் விளக்கமுள்ளதாக அமைந்ததாக காணப்படுகிறது [At the beginning the inscriptions had two or three short lines containing the information about donations made to bhikkhus. After the 10th century A.C these have become more descriptive because they contained appreciations made for some kings]. தமிழ் மொழியின் செல்வாக்கு இலங்கையில் பரந்து பட்டு இருந்தன என்பதற்கு தமிழ் கல்வெட்டுக்கள் சான்று பகிர்கின்றன. உதாரணமாக, காலி கல்வெட்டு, பொலநறுவை வேலைக்காரர் கல்வெட்டு, அனுராதபுரத்தில் உள்ள அபயகிரித் தமிழ்க் கல்வெட்டு, [இந்த மூன்று கல்வெட்டு படங்களும் இணைக்கப்பட்டுள்ளன] கேகாலை மாவட்டத்தில் உள்ள கோட்டகமைக் கல்வெட்டு போன்றவை சான்றாகும். இந்த கல்வெட்டுக்கள் எல்லாம் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு வெளியே, இலங்கையின் வெவ்வேறு திக்குகளில் கண்டு எடுக்கப் பட்டவையும் ஆகும்.

காலி கல்வெட்டு என்பது 1755 இல் பூர்த்தி செய்யப்பட்ட காலியில் உள்ள டச்சு சீர்திருத்தப்பட்ட தேவாலயத்தில் பதியப் பட்ட கல் ஒன்றில் காணப்படும் தமிழ் எழுத்துக்கள். இது கிறித்துவத்திற்கு மாற்றப் பட்ட முதல் தமிழனின் கல்லறை வாசகமாகும். பொலநறுவை வேலைக்காரர் கல்வெட்டு என்பது இலங்கையின் தலைநகரமாக விளங்கிய பொலநறுவையில் உள்ள தளதாய்ப் பெரும்பள்ளிக்கு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தமிழ் கல்வெட்டு. இந்தக் கல்வெட்டு இரண்டு மொழிகளில் உள்ளது. ஐந்து வரிகளில் அமைந்த மேற்பகுதி சமசுக்கிருத மொழியில் உள்ளன. அதற்குக் கீழ் 44 வரிகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு வேலைக்காரரினால் வெட்டுவிக்கப்பட்டது என்பது கல்வெட்டிலுள்ள குறிப்புக்களில் இருந்து தெரியவருகிறது. அதேபோல, அபயகிரித் தமிழ்க் கல்வெட்டு என்பது அனுராதபுரத்தில் உள்ள பழங்காலத்து அபயகிரி விகாரையில் காணப்படும் ஒரு தமிழ்க் கல்வெட்டு ஆகும். அபயகிரிச் சைத்தியத்தின் [பௌத்தர் முதலியோருக்குரிய ஆலயம்] மேடையொன்றின் விளிம்புப் பகுதியை அண்டிக் காணப்பட்ட கற்பாளம் ஒன்றில் இக்கல்வெட்டு உள்ளது. கோட்டகமைக் கல்வெட்டு என்பது, 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்தக் கல்வெட்டு, அக்காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்தி வம்ச அரசன் ஒருவன் கம்பளை அரசின் மீதான போரொன்றில் பெற்ற வெற்றியைக் குறிக்க எழுதப்பட்டது ஆகும். இக்கல்வெட்டு நான்கு வரிகளைக் கொண்ட ஒரு பாடல் வடிவில் எழுதப்பட்டுள்ளது. இங்கே சொற்களிடையே இடைவெளி இல்லாமலும் அடிகள் முறையாகப் பிரிக்கப்படாமலும் உள்ளது. ஆய்வாளர்கள் இதைப் பின்வருமாறு ஒழுங்கு படுத்தியுள்ளர்கள்.

"சேது

கங்கணம் வேற்கண்ணினையாற் காட்டினார் காமர்வளைப்

பங்கயக்கை மேற்றிலதம்பாரித்தார் பொங்கொலிநீர்

சிங்கைநகராரியனைச் சேராவனுரேசர்

தங்கள்மடமாதர் தாம்"

இதன் கருத்து "சிங்கையாரியனுக்கு அடங்காத சிங்களத் தலைவர்களுடைய மனைவிமார் கண்ணீர் விட்டுத் தமது நெற்றியில் இருந்த பொட்டை அழித்தனர்" என்பதாகும். இதில் இன்னும் ஒன்றையும் கவனிக்க, சிங்களப் பெண்கள் பொட்டு வைப்பதையும், கணவன் இறக்கும் பொழுது அதை அழிப்பாதையும் கூட காண்கிறோம்.

படம் 01: [1755 இல் பூர்த்தி செய்யப்பட்ட காலியில் உள்ள டச்சு சீர்திருத்தப்பட்ட தேவாலயத்தில் பதியப் பட்ட கல் ஒன்றில் காணப்படும் தமிழ் எழுத்துக்கள். இது கிறித்துவத்திற்கு மாற்றப் பட்ட முதல் தமிழனின் கல்லறை வாசகமாகும் / Dutch Reformed Church – Galle / The current Dutch Reformed Church was completed in 1755 and stands at the highest point of the Galle Fort./ One of the most unusual stones in the church was this one, written in Tamil. Unfortunately, it is quite worn and hard to make out, / Apparently this is the grave of the first Tamil convert to Christianity]

படம் 02: [பொலநறுவை வேலைக்காரர் கல்வெட்டு இலங்கையின் தலைநகரமாக விளங்கிய பொலநறுவையில் உள்ள தளதாய்ப் பெரும்பள்ளிக்கு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தமிழ்க் கல்வெட்டு. இந்தக் கல்வெட்டு இரண்டு மொழிகளில் உள்ளது. ஐந்து வரிகளில் அமைந்த மேற்பகுதி சமசுக்கிருத மொழியில் உள்ளன. அதற்குக் கீழ் 44 வரிகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு வேலைக்காரரினால் வெட்டுவிக்கப்பட்டது என்பது கல்வெட்டிலுள்ள குறிப்புக்களில் இருந்து தெரியவருகிறது / In the 12th Century CE, the Velakkaras set up a Tamil inscription were they promised to protect the Relic of the tooth of the Buddha at Polonnaruwa ]

படம் 03: [அபயகிரித் தமிழ்க் கல்வெட்டு என்பது அனுராதபுரத்தில் உள்ள பழங்காலத்து அபயகிரி விகாரையில் காணப்படும் ஒரு தமிழ்க் கல்வெட்டு ஆகும். அபயகிரிச் சைத்தியத்தின் [பௌத்தர் முதலியோருக்குரிய ஆலயம்] மேடையொன்றின் விளிம்புப் பகுதியை அண்டிக் காணப்பட்ட கற்பாளம் ஒன்றில் இக்கல்வெட்டு உள்ளது.]

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 26 தொடரும் / Will follow

https://www.facebook.com/groups/978753388866632/posts/31293597796955459/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 26

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 26 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'சோழ மன்னன் ஒருவன் 12000 இலங்கையரைத் சிறைபிடித்தானா?'

வசபாவின் [வசபனின்] மகன் வங்கனாசிக தீசன் அல்லது வங்க நாசிக தீசன் [Vankanasikatissa] அவனுக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். மகாவம்சத்தில் வசபாவின் மாமா மற்றும் மாமன் மகள் பற்றிய ஒரு கதை உள்ளது. வங்கனாசிகதிஸ்ஸ இராசவலியில் வன்னேசினம்பாபா [Vannesinambapa] ஆகும். சோழ நாட்டு மன்னன் ஒருவன் படையுடன் வந்து பன்னிரண்டாயிரம் பேரைத் தன் நாட்டிற்கு சிறைபிடித்து அழைத்துச் சென்றதாக இராசவலிய கூறுகிறது. இந்த மன்னனைப் பற்றிய ஒரு கதை இராவலியில் காணப்படுகிறது, இது இராமாயணத்தில் உள்ள ஒரு கதையை ஒத்ததாகவும், தமிழில் உள்ள பொற்கை குலசேகர பாண்டியனைப் பற்றிய மற்றொரு கதையைப் போலவும் உள்ளது. இருப்பினும், மற்ற இரண்டு வரலாற்று நூல்களிலும் இது தொடர்பாக எதுவும் கூறவில்லை. கி.பி 3ஆம் நூற்றாண்டு (கி.பி. 201) முதல் கி.பி 6ஆம் நூற்றாண்டு (கி.பி. 501) வரையிலான காலகட்டம் தமிழக வரலாற்றில் இருண்ட காலமாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இந்தக் காலகட்டத்தைப் பற்றிய விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்தக் காலகட்டத்திற்கு முன்பு இலங்கை மீது படையெடுக்கும் திறன் கொண்ட ஒரு சோழ மன்னன் இருந்தான் என்பது நம்பகமானதல்ல.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த பொற்கைப் பாண்டிய மன்னனைப் [Golden Handed Pandya] பற்றிய ஒரு சுவாரஸ்யமான கதை தமிழ் காவியமான சிலப்பதிகாரத்தில் (குறிப்பு: மதுரை காண்டம் - கட்டுரை காதை) உள்ளது. இவனுக்கு தங்கத்தால் செய்யப்பட்ட செயற்கைக் கை பொருத்தப்பட்டது. என்றாலும் அவரது உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது.

“கொற்கையான் மாறன் குலசே கரப்பெருமான்

பொற்கையான் ஆனகதை போதாதோ- நற்கமல

மன்றலே வாரி மணிவா சலையசைக்கத்

தென்றலே ஏன் வந்தாய் செப்பு?”

[கம்பர்]

ஒருமுறை கவிச்சக்கரவர்த்தி கம்பர் தன் மனைவியுடன் படுத்திருந்தார். இருவரும் உறங்கும் நேரம் வந்ததும் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்ட கம்பர் படுக்கையில் இருந்து எழுந்து கதவைத் திறந்தார். அப்பொழுது தென்றல்தான் கதவைத் தட்டியது என்பதை உணர்ந்தார். உடனடியாக 'காற்றுடன் பேசுவது' போல இந்த பாட்டை பாடி,'கொற்கை பாண்டியன் குலசேகரப் பெருமான், ஊரார் வீட்டுக் கதவைத் தட்டிய ஒரே தவறுக்காக பொன் கை பாண்டியனாக மாறிய கதை உனக்குத் தெரியுமா?' என்று காற்றிடம் கேட்டார்.

அவன் மகன் கஜபாகுக்க காமினி [Gajabahuka Gamani] இருபத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். கஜபாகுக்க காமினி என்பது இராசவலியில் உள்ள முதலாம் கஜபாகு [Gajabahu I] என்றும், மற்ற இரண்டு வரலாற்று நூலிலும் சொல்லப்பட்ட இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்குப் பதிலாக, இருபத்தி நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார் என்றும் கூறுகிறது. முன்பு குறிப்பிட்டது போல் வசபா ஒரு தமிழனாக இருக்கலாம்? எனவே கஜபாகுக்க காமினியும் தமிழனாக இருக்கலாம்?

சேர மன்னன் செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்து விழாச் செய்த போது, மன்னனின் அழைப்பின் பேரில், இந்திர விழாவிற்கு வந்திருந்த அரசர்களில் இலங்கை அரசனான கஜபாகுவும் (முதலாம் கஜபாகு) ஒருவன் ஆகும். பல்லவ மன்னர்கள் மற்றும் அவர்களுக்கு முந்தைய மன்னர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லாததன் அடிப்படையில், இந்த இதிகாசத்தின் காலம் முதன் முதலில் கி.பி இரண்டாம் நூற்றாண்டு என கணிக்கப்பட்டது. பின்னர் கஜபாகுவின் காலத்தின் அடிப்படையில், கி.பி. 171 முதல் 193 வரை, அது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்த தமிழ் மன்னர்களுக்கும் இலங்கை மன்னர்களுக்கும் அன்றைய கால கட்டத்தில் பகை ஒன்றும் இருக்கவில்லை. இலங்கை மன்னர் கஜபாகு தென்னிந்தியாவின் தமிழ் மன்னர்களுடன் நல்லுறவு கொண்டிருந்தார். தீபவம்சமும் மகாவம்சமும் அதைப் பற்றி மௌனமாக இருக்கின்றன. கஜபாகு என்ற மன்னன் இலங்கையில் அண்மைக் காலம் வரை நிலவிய பத்தினி வழிபாட்டை இலங்கைக்கு கொண்டு வந்தான். தீபவம்சமும், மகாவம்சமும் கஜபாகு மன்னனைப் பற்றி அதிகம் சொல்லவில்லை.

Part: 26 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Did a Chola king capture 12,000 Sri Lankans?'

Vasabha’s son Vankanasikatissa ruled after him for three years. There is s story about Vasabha’s uncle and uncle’s daughter in the Mahavamsa. Vankanasikatissa is the Vannesinambapa in the Rajavaliya. The Rajavaliya says that a king of Soli country came with an army and took twelve thousand people to his country. There is a tale in the Rajavaliya about this king, which is very similar to a story in the Ramayana and similar to another story about the Golden Hand Kulasekara Pandiyan in Tamil. However, the other two chronicles did not say anything in this regard. The period from the 3rd century A. D. (201 A. D.) to the 6th century A. D. (501 A. D.) is considered a dark period in the history Tamil Nadu as there is no detail available about this period. It is not trustworthy to believe that there was a Chola king with the capacity to invade Lanka just prior to this period. His son Gajabahukagamani ruled for twenty-two years. Gajabahukagamani is the Gajaba in the Rajavaliya and ruled for twenty-four years, instead of twenty-two in the other two chronicles. As indicated earlier, Vasabha could be a Tamil. Therefore, Gajabahukagamani could also be a Tamil. He is the Gajabahu who went to Tamil Nadu to participate in the Indravill(zz)a on the invitation of the very famous Chera king Cheran Senguttuvan. There was no enmity between the Tamil kings in Tamil Nadu and the Lanka kings. He, the king Gajabahu, brought the Pattini cult to Ceylon, which prevailed in Lanka until very recently. The Dipavamsa and the Mahavamsa have nothing much to say about the king Gajabahukagamani.

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 27 தொடரும் / Will follow

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 26

https://www.facebook.com/groups/978753388866632/posts/31353268157655089/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 27 A

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 27 A / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'பன்னிரண்டாயிரம் கைதிகளை அழைத்து வருவதற்காக கஜபா மன்னன் ஒரே ஒரு இராட்சதனுடன் சோழ நாட்டிற்குச் சென்றாரா?'

தீபவம்சம் கஜபாகுவின் ஆட்சியை 22 – 13 முதல் 14 வரையிலான இரண்டு வசனங்களில் விவரிக்கிறது. மகாவம்சம் அவரது ஆட்சியை சுமார் 35 – 115 முதல் 122 வரையிலான எட்டு வசனங்களில் விவரிக்கிறது. இருப்பினும், இராசவலிய கஜபாகுவைப் பற்றிய நம்பமுடியாத கதையைக் கூறுகிறது. பைபிள் கதை ஒன்று, பல தலைமுறைகளாக எகிப்தியர்களிடம் அடிமைகளாக இஸ்ரவேல் மக்கள் இருந்தனர் என்றும், ஒரு முறை, அவர்களை ஆறுதல்படுத்திய மோசே, உடனே வானை நோக்கி இறைஞ்சினார். அப்போது கடவுள் மோசேயை நோக்கி, “ இன்னும் நீ என்னிடம் ஏன் அழுகிறாய்? செங்கடலுக்கு மேலாக உன் கைத்தடியை உயர்த்து. கடல் இரண்டாய்ப் பிளக்கும். பிளந்த இடத்தில் உலர்ந்த தரையைக் காண்பீர்கள். அப்போது உலர்ந்த தரை வழியே நடந்து கடலைக் கடந்து செல்லுங்கள் என்கிறார். இராசவலிய கதை, பைபிள் கதையின் நகலாகத் தோன்றுகிறது. தமிழ் நாடுகள் அன்றைய காலத்தில் வலிமைமிக்க சேர மன்னனின் கீழ் இருந்தன, பன்னிரண்டாயிரம் கைதிகளுடன் கூடுதலாக பன்னிரண்டாயிரம் கைதிகளை அழைத்து வர கஜபாகு ஒரு பூதத்துடன் சோழ நாட்டிற்குச் சென்றான் என்று இராசவலிய கதை கூறுவது முற்றிலும் விசித்திரமாக உள்ளது. அதுமட்டும் அல்ல, அந்த பூதத்துடன் சோழநாட்டிற்கு நடந்து போவதற்கு கடல் பிரிந்து, பைபிள் கதை போல், வழி கொடுத்தது. இந்த புனைகதை தென்னிந்தியாவில் உள்ள தமிழ் அரசுகளுக்கும் இலங்கையில் உள்ள அரசுக்கும் இடையே நிலவிய நல்லுறவை தவறாக சித்தரிக்கும் துறவியின் முயற்சியாக இருக்கலாம்.? இதற்கு நேர்மாறாக தமிழ் ஆதாரங்களில் கஜபாகு பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. உதாரணமாக, சிலப்பதிகாரம் 151 - 163:

"பத்தினிக் கோட்டப் படிப்புறம் வகுத்து நித்தல் விழாவணி நிகழ்கென் றேவிப் பூவும் புகையும் மேவிய விரையும் தேவந் திகையைச் செய்கென் றருளி வலமுறை மும்முறை வந்தனன் வணங்கி உலக மன்னவ னின்றோன் முன்னர் அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும் பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும் குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும் கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும் எந்நாட் டாங்கண் இமய வரம்பனின் நன்னாட் செய்த நாளணி வேள்வியில் வந்தீ கென்றே வணங்கினர்"

என்று அவரை 'கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்' என்று பெருமையுடன் கூறுகிறது.

கஜபாகு மன்னன் பத்தினி தேவியின் கொலுசுகளையும், நான்கு தேவாலய முத்திரைகளையும், வலகம்பாவின் (மற்ற இரண்டு வரலாற்று நூலிலும் வட்டகாமினி) காலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட புத்தரின் பிச்சைக் கிண்ணத்தையும் [இது புத்த மதத்தில் ஒரு புனித நினைவுச்சின்னம்] மீட்டு தன்னுடன் கொண்டு வந்ததாக இராசவலிய வெற்றியுடன் கூறுகிறது. என்றாலும் கஜபாகுகாமினியின் காலத்தில் பத்தினி வழிபாடு இலங்கைக்கு வந்ததாக மறைமுகமாக ஒப்புக்கொண்டு, தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தில், (சிலம்பு. 30 : 160, உரைபெறு கட்டுரை 3) கூறப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துகிறது.

செங்குட்டுவன் வஞ்சிமா நகரத்தில் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்துக் குடமுழுக்குச் செய்தபோது அந்த விழாவுக்குத் தான் இவன் வந்திருந்தான். பிற்காலத்து நூலாகிய இராசவலிய, சோழ அரசன் ஒருவன் இலங்கைக்குச் சென்று போர் செய்து சிங்களவரைச் சிறைப்பிடித்து வந்து காவிரியாற்றுக் கரை கட்டுவித்தான் என்றும், பிறகு கஜபாகு அரசன் சோழ நாட்டுக்குப் போய்ச் சிங்களவரைச் சிறைமீட்டுக் கொண்டு வந்தான் என்றும் கூறுகிறது. இச்செய்தியை மகாவம்சம் கூறவில்லை. பழைய தமிழ் இலக்கியங்களும் கூறவில்லை. எனவே, இச்செய்தி நம்பத்தக்கதன்று.?

Part: 27 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Is King Gajaba went to the Chola country with one giant to bring back twelve thousand prisoners?'

The Dipavamsa describes his [king Gajabahu] rule in two verses 22 – 13 to 14. The Mahavamsa describes his [king Gajabahu] rule in about eight verses 35 – 115 to 122. However, the Rajavaliya spins an unbelievable story about him. The story is a part copy of the Biblical story of the Saint Moses bringing back the Israelites out of Egypt through the Red Sea. Tamil countries were under the powerful Chera king at that time, and the Rajavaliya’s narration that Gajaba went to the Chola country with one giant to bring back twelve thousand prisoners along with additional twelve thousand is a flight of fancy of the author of the Rajavaliya. The sea parted and gave way to him to walk to the Chola country with that giant. This fiction is perhaps the monkish effort to misrepresent the cordial relationship that prevailed between Tamil kingdoms in South India and the kingdom in Lanka. This may not reflect the better cordial relationship that existed at the time of Gajaba between the Tamil kingdoms in South India and Lanka. The Rajavaliya triumphantly states that the king Gajaba brought with him the jewelled anklets of the goddess Pattini and the insignia of the four devala, and the bowl-relic, which had been carried off during the time of Valagamba (Vattagamni in the other two chronicles). There is an indirect admission that Pattini cult came to Lanka during the time of Gajabahukagamani, confirming the statement in the Tamil Epic Sillappathikaram.

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 27 B தொடரும் / Will follow

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 27 A

https://www.facebook.com/groups/978753388866632/posts/31383474037967834/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 27 B

பகுதி: 27 B / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'மூன்று கேள்விகள்?' [தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது]

சமஸ்கிருத பெயர்ச் சொல் " सैंहल " [saiMhala] என்பதன் அர்த்தம் கறுவா அல்லது இலங்கைக்கு உரியது அல்லது அங்கு உற்பத்தி செய்யப் படுவது அல்லது சிங்களவர் [cinnamon / Laurus Cassia - Bot or belonging to or produced in Ceylon or Sinhalese ] ஆகும். இதன் உச்சரிப்பு "சின்ஹல" ஆகும். இலங்கை கறுவா விளையும் நாடாகையால், கறுவாவின் சமஸ்கிருதப் பெயரான "சின்ஹல" என்பதே சிங்களமாக மருவியிருக்கலாம் எனவும் வாதாடலாம் என நம்புகிறேன். ஏனென்றால் சிங்கத்தின் வம்சாவளியினரே சிங்களவர் என்பது நம்பமுடியாத இயற்கைக்கு மாறான தகவலாக இருப்பதால்?

பண்டித ஹிஸ்ஸெல்லே தம்மரத்தன மகா தேரர் [Pandit Hisselle Dharmaratana mahathera], தனது 'தென் இந்தியாவில் புத்தமதம்' [Buddhism in South India], என்ற புத்தகத்தில், புத்த மதகுரு மகிந்தன் அல்லது மகிந்தர் அல்லது மஹிந்த (Mahinda, சமக்கிருதம்: महेन्द्र; மகேந்திரா, பிறப்பு: கிமு 3ம் நூற்றாண்டு), அவர்களே தமிழ் நாட்டிலும் புத்த மதம் பரப்பியதற்கு சான்றுகள் உள்ளதாக குறிப்பிடுகிறார். மகாவம்சம், அவர் இயற்கையை கடந்த சக்தி மூலம் [supernatural powers] இலங்கையை அடைந்தார் என புராணக் கதைகள் போல் குறிப்பிட்டாலும், உண்மையில் அவர் கடல் மூலம் பயணித்ததாகவும், அப்படி இலங்கைக்கு போகும் வழியில், காவேரி பட்டணம் வந்து அங்கு முதலில் புத்த மதம் பரப்பியதாகவும் அறிஞர்கள் கருதுவதாக கூறுகிறார் [The Mahathera states "although the chronicles say he arrived through his supernatural powers, scholars are of the opinion that he travelled by sea and called at Kaveripattinam on the east coast of Tamil Nadu on his way to Sri Lanka"]. டாக்டர் ஷூ ஹிகோசகே [Dr Shu Hikosake Director Professor of Buddhism, Institute of Asian Studies in Madras] தனது 'தமிழ் நாட்டில் புத்தமதம்' [Buddhism in Tamil Nadu] என்ற புத்தகத்திலும் இந்த கருத்தையே கூறுகிறார். கி.பி ஏழாம் நூற்றாண்டில் ஹியுங் சாங் (Hiuen Tsang) எனும் நாடுகண் சீன பிக்கு [the Chinese 7th Century, Buddhist monk, scholar traveller], பாண்டிய அரசனின் மதுரைக்கு அண்மையில், மஹிந்தரால் ஒரு மடாலயம் கடப்பட்டதாக குறிப்பிடுகிறார் [a monastery built by Mahinda thera]. அவர் மேலும் காஞ்சிபுரத்தில் ஒரு தூபி [stupa] அசோகனால் கடப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். மேலும் காஞசிபுரம் ஒரு செழிப்பான நகரம் என்றும், அங்கு வாழும் மக்களில் பெரும்பாலோர் புத்த மதத்தை தழுவியவர்கள் என்றும் குறிப்பிடுகிறார் [Kanchipuram as a flourishing city and states that most of its population was Buddhist].

அசோகனின் உற்ற நண்பனான தேவநம்பிய தீசன் அல்லது தீசன் இலங்கையை ஆளும் காலத்தில், புத்த சமயப்பரப்பாளர் குழுவொன்றை [Buddhist monk missionary] தன் மகனின் தலைமையில் அங்கு அனுப்பினான் என்கிறது மகாவம்சம். இந்த தீசன் பட்டாபிஷேகம் செய்து கொண்ட போது பல அற்புதங்கள் நிகழ்ந்தன என்றும், இவையனைத்தும் தீசனின் பெருமையால் நிகழ்ந்தவை என்றும், இவ்வற்றை கண்ட மன்னன் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து. ‘என்னுடைய நண்பனான தர்ம அசோகனைத் தவிர வேறு யாரும் இவ் விலை மதிப்பற்ற பொருள்களைப் பெறத் தகுதியுள்ளவர்கள் அல்ல. எனவே இவற்றைப் பரிசாக அவருக்கு அனுப்புவேன்' என்றான் என்றும் பதினோராம் அத்தியாயம், 'தேவநம்பிய தீசன் பட்டாபிஷேகம்' [ Chapter XI / The Consecrating Of Devanampiyatissa] கூறுகிறது. மேலும் பதின்மூன்றாவது அத்தியாயம் 'மஹிந்தர் வருகையில்' [Chapter XIII / The Coming Of Mahinda], இந்திரன், மிகச் சிறந்தவரான மஹிந்த தேரரிடம் வந்து இலங்கையை மாற்றப் புறப்படுங்கள். சம்புத்தராலும் இது ஏற்கனவே உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கும் என்கிறான். அதைத் தொடர்ந்து, பதிநான்காவது அத்தியாயம் 'தலைநகர் புகுதலில்' [Chapter XIV / The Entry Into The Capital], அரசனை [தீசனை] சோதிப்பதற்காக மஹிந்த தேரர் அவனை சூட்சுமமான கேள்வி கேட்டார். கேட்கக் கேட்க பல கேள்விகளுக்கும் அவன் பதிலளித்தான் என்கிறது.

இப்ப நான் உங்களைக் கேட்க விரும்புவது, புத்தரால் தேர்ந்து எடுக்கப்பட்ட, விஜயன் வரும் பொழுது, அங்கு ஒரு அதிசயமும் நடைபெறவில்லை, மாறாக உயர்குலம் அற்ற இயக்கர் பெண்ணை மணக்கும் சூழ்நிலைக்கு தள்ளப் படுகிறான். பின் அவன் தன் மனைவியையும் பிள்ளைகளையும், துரத்திவிட்டு, உயர் குல பாண்டிய தமிழ் இளவரசியை இரண்டாம் தாரமாக மணக்கிறான், என்றாலும் பிள்ளைகள் இல்லாமல் அவன் சந்ததி இலங்கையை ஆளாமல், முற்றுப் பெறுகிறது. அப்படி என்றால் ஏன் அவனை புத்தர் தேர்ந்தெடுத்தார் ? இரண்டாவதாக, இந்திரன், மிகச் சிறந்தவரான மஹிந்த தேரரிடம் வந்து இலங்கையை மாற்றப் புறப்படுங்கள். சம்புத்தராலும் இது ஏற்கனவே உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கும் என்கிறான். அப்படி என்றால் புத்தர் தன் முதல் தெரிவான விஜயனில் தடுமாறி, இரண்டாவது தெரிவை இருநூறுக்கு சற்று மேற்பட்ட ஆண்டுகளின் பின் காலம் தாழ்த்தி செய்தாரா ? மூன்றாவதாக, அசோகன் தீசனின் நட்ப்பிலும், அவன் ஆளும் இலங்கையிலும் மிகவும் அக்கறை கொண்டு மஹிந்த தேரரை அனுப்பினார் என்கிறது, அப்படி என்றால், எதற்காக, மஹிந்தர் வந்து இலங்கையில் இறங்கும் பொழுது, தீசன் சோதிக்கப் பட்டான்? எவராவது இதை வாசிக்கும் பொழுது, அவர்களின் மனதில் கட்டாயம் அசோகன், தீசனின் நட்பிலும், மற்றும் ஒருவரை ஒருவர் எவ்வளவுதூரம் புரிந்து வைத்து இருந்தார்கள் என்பதிலும் ஒரு ஐயப்பாடு ஏற்படும் என்றும் தோன்றுகிறது? [When one reads this portion of the Mahavamsa, the question arises how far Asoka and Tissa could be friends and how much Asoka knew of Tissa]

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 27 C தொடரும் / Will follow

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 27 B

https://www.facebook.com/groups/978753388866632/posts/31425152117133359/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 27 C

பகுதி: 27 C / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'அசோக மன்னன் திஸ்ஸனுடனான நட்பைப் பற்றிய எந்தப் பதிவையும் தனது கல்வெட்டுக்கள் எதிலும் ஏன் பதியவில்லை' [தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது]

வரலாற்று அறிஞர்களின் கூற்றின் படி, சேர [கேரள] மற்றும் பாண்டிய [மதுரை] மன்னர்களின் சத்திவாய்ந்த செல்வாக்கு இலங்கை மேல், கிருஸ்துக்கு முன்பே இருந்து கி பி 300 ஆண்டு வரை இருந்துள்ளது. அந்த கால பகுதியில் கேரள மக்கள் பேசிய மொழி தமிழாகும். பின்பு காலப்போக்கில் சேர நாட்டுத் தமிழ் மொழியில் வட்டார வேறுபாடுகள் அதிகமாகி, தமிழுடன் சமஸ்கிருதத்தைக் கலந்து, மலையாளம் என்ற தனி மொழி பிறந்தது. இலங்கைக்கும் தமிழ் நாட்டிற்கும் இடையில் உள்ள தூரம் ஆக 30 கிலோமீட்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கலாநிதி ஒபேயசேகர [Dr Obeysekere ] இலங்கைக்கும் கேரளத்திற்கும் உள்ள தொடர்பை பத்தினி தெய்வ வழிபாடு [ கண்ணகி வழிபாடு] மற்றும் தாய் வழி அமைப்பு [matrilineal system] மூலம் அலசுகிறார். மேலும் அவர் தாய் வழி அமைப்பு தெற்கு சிங்களவர்களிடமும் முன்பு இருந்து, ஆனால் பின்பு தந்தை வழி அமைப்பால் மாற்றம் செய்யப் பட்டது என்கிறார். [According to Dr Obeysekere, the matrilineal system existed in the Sinhala-speaking South also, but was supplanted by the patrilineal system]. மேலும் அவர், பத்தினி தெய்வ வழிபாட்டை கேரளத்து தமிழ் மொழி பேசும் புத்த சமய வர்த்தகர்களாலும் மற்றும் மற்றவர்களாலும், குறிப்பாக வஞ்சி [Tamil-speaking Kerala Buddhist traders and other immigrants from the Vanchi area] பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டதாக கூறுகிறார். குறிப்பாக இரண்டு கேரளா வர்த்தக குடும்பம், மெஹனாவரா மற்றும் அழகக்கோனார் அல்லது அழகக்கோன் குடும்பங்கள் இதில் ஈடுபட்டதாக கூறுகிறார். இதில் இன்று சிங்களவர்களில் காணப்படும் அழகக்கோன் குடும்பங்கள் இவர்களின் வாரிசு என்கிறார் [two trader families of Kerala origin, namely, the Mehenavara and the Alagakonara (the Alagakones of today are probably their descendents)], மேலும் பத்தினி தெய்வம் பற்றிய சிங்கள பாடலின் மூலம் தமிழ் என்கிறார் [Dr Obeysekere says that the Sinhala songs related to the Pattini cult were originally in Tamil].

சுருக்கமாக, விஜயன் முதல் துட்டகைமுனு வரை, எல்லாளன் உட்பட, மொத்தம் 396 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள் கற்பனையான மன்னர்கள் போலவே தோன்றுகிறது. இக்காலத்தில் அரசர்கள் இல்லை என்பதல்ல. அரசர்கள் அல்லது தலைவர்கள் இருந்திருக்க வேண்டும், ஆனால் அவர்களின் பெயர்கள், இலங்கை ஆட்சிக்கு ஒரு பௌத்த சாயலைக் கொடுப்பதற்காக தியாகம் செய்யப்பட்டுள்ளன என்று நம்புகிறேன். தேவநம்பிய திஸ்ஸா என்பது இந்தியப் பேரரசர் அசோகரின் பிரதி அல்லது நகல். அசோகனும் தேவநம்பிய திஸ்ஸ என்ற இரண்டாவது மகன். தேவநம்பிய திஸ்ஸ 40 வருடங்கள் ஆட்சி செய்ததாக இலங்கை வரலாற்று நூல் கூறுகிறது. அசோகர் இந்திய மரபுப்படி 40 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அசோகன் மாதிரி, ‘தேவானம்பிய’ என்ற அடைமொழியுடன், இலங்கையில் திஸ்ஸ மட்டுமே இடுந்தாரென இலங்கை நூல் கூறுகிறது. அசோகனுக்கும் திசாவுக்கும் இருந்ததாகக் கூறப்படும் நட்பு தமிழ்நாட்டில் இருந்த நட்பின் நகல் என்று இலகுவாகக் கூறலாம். அந்த நட்பு தமிழ்ப் புலவர் பிசிராந்தியாருக்கும், கிள்ளி என்ற பெயரால் அழைக்கப்பட்ட, தமிழ் மன்னன் கோப்பெருஞ்சோழனுக்கும் இடையே இருந்தது போல, நேரில் காணாமலேயே நட்பு கொண்டனர். என்றாலும் அசோக மன்னன் திஸ்ஸனுடனான நட்பைப் பற்றிய எந்தப் பதிவையும் தனது கல்வெட்டுக்கள் எதிலும் பதியவில்லை என்பதும், மற்றும் எந்த அசோகன் வாழ்ந்த மண்ணின் வரலாற்றில் அல்லது புராணத்திலோ குறிப்பிடவில்லை என்பது முக்கியமாகும். மாறாக சங்ககால நண்பர்களின் குறிப்பு சங்கப்பாடலில் உள்ளத்தையும் கவனிக்க.

முதுமையினால் ஏற்படும் துன்பம், வேதனை, அவமானம் இவைகளை மக்கள் விரும்பாமல் ஒதுக்குப்புறமான இடத்திற்குச் சென்று வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ளும் வழக்கம் தமிழகத்தில் அன்று இருந்தது; அதன்படி, இறக்கும் வரை உணவைத் தவிர்த்து, சோழ மன்னன் இறக்க முடிவு செய்து மேலும் சிலருடன் வடக்கு நோக்கி அமர்ந்தான். மன்னர், தான் இறப்பதற்கு முன், தனது கவிஞர் நண்பர் தன்னைப் பார்க்க வருவார் என்று நம்பினார். கவிஞர் இதை உணர்ந்து அந்த இடத்திற்கு விரைந்தார், ஆனால், துரதிர்ஷ்டவசமாக, மன்னர் தனது கவிஞர் நண்பரைக் காணாமல் இறந்துவிட்டார். பிசிராந்தையார் தனது உணர்ச்சிவசப்பட்ட அரச நண்பரின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுக் கல்லைக் கண்டு, அங்கேயே வடக்கு நோக்கி அவரும் அமர்ந்து இறந்தார்.

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 28 தொடரும் / Will follow

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 27 C

https://www.facebook.com/groups/978753388866632/posts/31473570135624890/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 28

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 28 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'மன்னன் மகல்லக்க நாகனில் இருந்து மன்னன் விசயகுமாரன் வரை'

மகல்லக்க நாகன் [Mahallaka Naga] கஜபாகுகாமனிக்குக்குப் பிறகு ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவர் இராசவலியிலுள்ள மஹாலு மனா [Mahalu Mana] ஆகும். தீபவம்சம் மற்றும் மகாவம்சத்தின்படி கஜபாகு காமினியின் மாமனார், மகல்லக்க நாகன் ஆகும். இருப்பினும், இராசவலிய, கஜபாகு மன்னரின் மைத்துனர் என்றும் கூறுகிறது. மகல்லக்க நாகனின் மகன் பதுதிஸ்ஸ (Bhatutissa / மகாவம்சத்தின் படி பதிகதிஸ்ஸ [Bhatikatiss] மற்றும் ராஜாவலியின் படி பதியதிஸ்ஸ [Bhatiyatissa] ) இருபத்தி நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவருடைய மகன் கனித்ததிஸ்ஸ அல்லது கனிட்ட தீசன் [Kannitthatissa] பதினெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். ஆனால், இராசவலியத்தில் அதற்கேற்ற அரசன் இல்லை. கனித்ததிஸ்ஸவின் மகன் குச்சநாகன் அல்லது சூளநாகன் [Khujjanaga] தீபவம்சத்தின்படி இரண்டு வருடங்களும், மகாவம்சம் 36-18ன்படி ஒரு வருடமும் ஆட்சி செய்தார். இராசவலியில் அதற்குரிய அரசன் இல்லை. குச்சநாகனின் இளைய சகோதரர் குட்டநாகன் அல்லது குஞ்சநாகன் (Kunjanaga / Kuncanaga / மகாவம்சத்தில் குஞ்சநாகன்) தனது சகோதரனைக் கொன்று ஒரு வருடம் ஆட்சி செய்தார் (மகாவம்சம் 36-19 இல் இரண்டு ஆண்டுகள்). இராசவலியத்தில் அதற்கேற்ற அரசன் இல்லை. சிறிநாகன் [Sirinaga] அரசனை வென்று பத்தொன்பது ஆண்டுகள் அரசாண்டான். தீபவம்சத்தில் கூறப்படாத சிறிநாகனைப் பற்றிய ஒரு கதை மகாவம்சத்தில் உள்ளது.

இக்காலக்கட்டத்தில், இராசவலிய மற்ற இரண்டு வரலாற்று நூல்களிலும் இருந்து மிகவும் வேறுபட்டடு காணப்படுகிறது. இராசவலியிலுள்ள குடானா [Kudana] என்பது மற்ற இரண்டிலும் உள்ள சிறிநாகனுக்கு (சிறிநாகன் 1) சமமானதாக இருக்கலாம்? குடானா இருபது ஆண்டுகள் ஆட்சி செய்தான். தீபவம்சத்தின்படி சிறிநாகனின் மகன் அபய [Abhaya] இருபத்திரண்டு ஆண்டுகள் அரசாண்டான். இருப்பினும், அவர் மகாவம்சத்தில் ஒகாரிக திஸ்ஸ [Voharikatissa] ஆகும். மற்றும் இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். இராசவலியத்தில் இவன் அரசன் வெரிதிஸ்ஸ [Veritissa] ஆகும். அங்கும் அவன் இருபத்தி இரண்டு ஆண்டுகள் தான் ஆட்சி செய்ததாக கூறுகிறது.

அபயவின் [Abhaya] இளைய சகோதரன் திஸ்ஸக [Tissaka], மன்னனுக்குப் பிறகு இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். மகாவம்சத்தில் இவன் அரசன் அபயநாகன் [Abhayanaga] ஆக மாறியதுடன், ஆக எட்டு ஆண்டுகள் தான் ஆட்சி செய்கிறான்; ஆட்சி காலம் முற்றிலும் இங்கு பெரிதாக வேறுபடுகிறது. தீபவம்சத்தில் கூறப்படாத ஒரு கதையை , மகாவம்சம் கூறுகிறது. அதாவது, அபயநாகன், தன் மூத்த சகோதரனின் மனைவியுடன் [ராணியுடன்] பாலியல் உறவு அல்லது காதல் விருப்பம் கொண்டிருந்தான் என்று கூறுகிறது.

தீபவம்சத்தின்படி திஸ்ஸகவின் ஆட்சியின் போது உண்மையான [புத்த] மதத்தை சிதைக்க மதவெறி முயற்சிகள் இருந்தனவென்று கூறுகிறது. ஆனால் மகாவம்சத்தில் அத்தகைய முயற்சி ஒன்றும் கூறப்படவில்லை. இராசவலியவில் இவனுக்கு ஒத்த அரசன் அபா சென் [Aba Sen] ஆகும். திஸ்ஸகவின் மகன் சிறிநாக (இரண்டாம் சிறிநாகன்) இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். இராசவலியவின்படி இவனுக்கு ஒத்த அரசன் சிறி நா [Siri Na] ஆகும். அங்கும் அவன் இரண்டு ஆண்டுகள் தான் ஆட்சி செய்தான். அடுத்து வந்த மன்னன் விஜய (Vijaya மகாவம்சத்தில் விசயகுமாரன் / Vijayakumara) ஒரு வருடம் ஆட்சி செய்தான். இராசவலியவின்படி இவனுக்கு ஒத்த மன்னன் விஜயிந்து [Vijayindu], ஆனால் அங்கு அவன் ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தான் எனக் குறிக்கப்பட்டுள்ளது?.

Part: 28 / The Kings who ruled after Vijaya and the related affairs / King Mahallanaga to king Vijayakumara

Mahallanaga ruled after Gajabahukagamani for six years. He is the Mahalu Mana in the Rajavaliya. Mahallanaga is the father in law of Gajabahukagamani as per the Dipavamsa and the Mahavamsa. The Rajavaliya, however, says Mahalu Mana is the brother in law of the King Gajaba. Mahallanaga’s son Bhatutissa (Bhatikatissa as per the Mahavamsa and Bhatiyatissa as per the Rajavaliya) ruled for twenty-four years. His son Kannitthatissa ruled for eighteen years. There is no corresponding king in the Rajavaliya. Kannitthatissa’s son Khujjanaga ruled for two years as per the Dipavamsa and one year as per the Mahavamsa 36-18.There is no corresponding king in the Rajavaliya. Khujjanaga’s younger brother Kunjanaga (Kuncanaga in the Mahavamsa) killed his brother and ruled for one year (two years in the Mahavamsa 36-19). There is no corresponding king in the Rajavaliya. Sirinaga defeated the king and reigned for nineteen years. There is a tale about Sirinaga in the Mahavamsa, which is not in the Dipavamsa. The Rajavaliya differs much from the other two chronicles in this period. Kudana in the Rajavaliya could be the equivalent of Sirinaga (say Sirinaga 1) in the other two chronicles. Kudana reigned for twenty years. Sirinaga’s son Abhaya reigned for twenty-two years as per the Dipavamsa. However, he is the Voharikatissa in the Mahavamsa and ruled for twenty-two years. The corresponding king in the Rajavaliya is Veritissa, and he reigned for twenty-two years. Abhaya’s younger brother Tissaka succeeded the king and reigned for twenty-two years. The corresponding king in the Mahavamsa is Abhayanaga and he ruled for eight years; lengths of reign are radically different. There is a tale about Abhayanaga’s affair with the queen, his elder brother’s wife, in the Mahavamsa, which is not in the Dipavamsa. There were sectarian attempts to corrupt the true religion during the reign of Tissaka as per the Dipavamsa but there is no such attempt in the Mahavamsa. The corresponding king in the Rajavaliya is Aba Sen. Tissaka’s son, Sirinaga (Sirinaga2), ruled for two years. The corresponding king as per the Rajavaliya is Siri Na and he too ruled for two years. The succeeding king is Vijaya (Vijayakumara in the Mahavamsa) ruled for one year, and the corresponding king in the Rajavaliya is Vijayindu and he ruled for six years.

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 29 தொடரும் / Will follow

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 28

https://www.facebook.com/groups/978753388866632/posts/31505070985808138/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 29

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 29 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / மகாவம்சத்தின் ஆசிரியரான மகாநாம தேரர் சோழர்களைப் பற்றி சித்தப்பிரமை உள்ளவரா?

விஜய அல்லது விசயகுமாரனுக்குப் பிறகு முதலாம் சம்கதிஸ்ஸ [Samghatissa] நான்கு வருடங்கள் ஆட்சி செய்தார். அவர் லம்பகண்ண குலத்தைச் சேர்ந்தவர் என்று மகாவம்சம் கூறுகிறது [முதலாம் லம்பகர்ண அரசர்களுள் பதிமூன்றாமானவனான விசயகுமாரன் ஆட்சியின் போது இருந்த தலைமை அமைச்சர்களுள் முதலாமானவன் இவனாகும்.]. ஆனால் இராசவலியவில் அவர் லெமினி வம்சத்தைச் [Lemini dynasty] சேர்ந்தவர் என்று கூறப்பட்டுள்ளது. மகாவம்சம் வழக்கம் போல் மூன்று லம்பக்கண்ணர்களான [Lambakanna] சம்கதிஸ்ஸ, சம்கபோதி மற்றும் கோதகபய [Samghatissa, Samghabodhi and Gothakabhaya] பற்றிய கதையுடன் வருகிறது. சம்கதிஸ்ஸவுக்கு விஷம் கொடுத்து, அதனால் அவன் இறந்தபின், சம்கபோதி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார் என்று, மகாவம்சம் கூறுகிறது. சம்கபோதி ஒரு நீதியுள்ள அரசர், அவரைப் பற்றிய கதைகள் மகாவம்சம் மற்றும் இராசவலிய இரண்டிலும் உள்ளன. ஆனால், தீபவம்சத்தில் அத்தகைய கதைகள் ஒன்றும் இல்லை; அவர் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்த நல்லொழுக்கமுள்ள மன்னர் என்று அது வெறுமனே கூறுகிறது. அவருக்குப் பின் அபய மேகவன்னா (Abhaya Meghavanna / மகாவம்சத்தின்படி கோதகபய / Gothakabhaya மற்றும் இராசவலியவின் படி கோலு அப / Golu Aba) பதின்மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

மன்னனின் மகன் ஜெத்ததிஸ்ஸ [Jetthatissa] வெற்றி பெற்று பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தான். இவன் இராசவலியவில் கலகண்டேது [Kalakandetu] ஆகும். ஜெத்ததிஸ்ஸனுக்குப் பிறகு, அவனுடைய தம்பி மகாசேனன் [Mahasena] இருபத்தேழு ஆண்டுகள் ஆட்சி செய்தான். தீபவம்சத்தின்படி, சில பிக்குகள் உண்மையானவர்கள் அல்ல என்று அவர் நினைத்தார். அதனால் அவர்களுடன் இந்த பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க முயன்றதுடன், அவர் துன்மார்க்க மக்களையும் சமாளிக்க முயன்றார். மகாவம்சத்தின்படி, ஜெத்ததிஸ்ஸ ஆட்சிக் காலத்தில் பிரிவினைவாத பிக்குகள் அங்கு இருந்தனர் என்பதையும் அறிகிறோம். மேலும் சோழ நாட்டைச் சேர்ந்த பிக்கு சங்கமித்ரர் மற்றும் அவனது செயல்களைப் பற்றிய ஒரு கதையும் அங்கு உள்ளது. ஆனால், இந்தக் கதை தீபவம்சத்தில் இல்லை.

சங்கமித்ரர் என்பவர் மகாயான பௌத்தம் என்ற பௌத்த மதப்பிரிவின் சோழநாட்டுத் தலைவராவார். இலங்கையைச் சேர்ந்த மகாயான பௌத்தம் பிரிவைச் சேர்ந்த பிக்குக்கள் இலங்கையிலிருந்து தேரவாத பௌத்தம் பிரிவைச் சேர்ந்த பிக்குக்களால் கோதாபயன் காலத்தில் நாடுகடத்தப்பட்டனர். இதை கண்டிப்பதற்காகவும் இலங்கையில் மகாயான பௌத்தத்தை பரப்புவதற்காகவும் சங்கமித்ரர் கோதாபயன் அரண்மனைக்குச் சென்று அங்கிருந்த தேரவாத பௌத்த பிக்குகளிடம் சமயவாதம் செய்து வென்றார். அந்த பிக்குகளையும், கோதாபயன் மற்றும் அவன் இரு மகன்களான முதலாம் ஜெத்ததிஸ்ஸ, மகாசேனன் என்பவர்களை மகாயான பௌத்தத்தைத் தழுவச் செய்தார். அதன் பிறகே கோதாபயனின் முதல் மகனான ஜெத்ததிஸ்ஸ இலங்கைக்கு அரசனானான். மகாவம்சத்தை எழுதிய மகாநாம தேரர் சோழர்களைப் பற்றி சித்தப்பிரமையாக இருக்க வேண்டும்! அவர் பொதுவாக தமிழ் பாண்டிய மன்னர்களைப் பற்றிப் பேசுவதில்லை.

Part: 29 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Is Mahanama, the author of the Mahavamsa, paranoid about Cholas?'

Then Samghatissa ruled for four years. The Mahavamsa says that he belonged to the Lambakanna clan, but the Rajavaliya says he belonged to Lemini dynasty. The Mahavamsa, as usual comes with a tale about three Lambakannas, Samghatissa, Samghabodhi and Gothakabhaya. Samghatissa was poisoned and Samghabodhi succeeded him as per the Mahavamsa, and ruled for two years. Samghabodhi is a righteous king and there are tales about him in both the Mahavamsa and the Rajavaliya. There are no such tales in the Dipavamsa; it simply says that he is a virtuous king ruled for two years. He was succeeded by Abhaya Meghavanna (Gothakabhaya as per the Mahavamsa and Golu Aba as per the Rajavaliya) and ruled for thirteen years. King’s son Jetthatissa succeeded and reigned for ten years. He is Kalakandetu in the Rajavaliya. After Jetthatissa, his younger brother king Mahasena reigned twenty-seven years. He, as per the Dipavamsa, thought that some Bikkhus are not genuine and tried to discuss the issues with them. He tried to deal with the wicked people. As per the Mahavamsa, the sectarian Bikkhus were there during the Jetthatissa’s reign. There is a story about a Bikkhu Samghamitta from Chola country and his actions. This story is not in the Dipavamsa. Mahanama, the author of the Mahavamsa, must be paranoid about Cholas! He does not usually speak about Tamil Pandiya kings.

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 30 தொடரும் / Will follow

துளி/DROP: 1861 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 29] / எனது அறிவார்ந்த தேடல்: 1279

https://www.facebook.com/groups/978753388866632/posts/31528774886771081/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 30 A

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 30 A / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'பிராமணர் கோயில்களை இடிப்பது என்ற கருத்து மகாசேன மன்னரிடமிருந்து தொடங்கியதா?'

மகாவம்சத்தின் கடைசி அத்தியாயம் மகாசேனனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மகாசேனன் மன்னன், சங்கமித்ரர் தேரரின் ஆலோசனையின் பேரில், மகாவிகாரையின் பிக்குகளுக்கு எதிராகச் சென்றார், அதனால், அது ஒன்பது ஆண்டுகளாக குடியிருப்பவர்கள் இல்லாமல் வெறுமையாக இருந்தது. 'மன்னர் நிலம்' என்ற கருத்து [Crown land concept] இவரது காலத்தில் தான் நடைமுறைக்கு வந்தது. பின்னர் மன்னர் மணிஹிரா-விகாரையும் கட்டினார், மேலும் மூன்று விகாரையும் நிறுவினார். பிராமண கடவுள்கள் அமைந்த ஆலயங்களை அழித்தார்:- கோகன்ன ஆலயம், எரகாவில்லை என்ற இடத்தில் இன்னும் ஒரு ஆலயம், மூன்றாவதாக, பிராமணர்களின் கிராமமான கலந்தனில் இருந்த ஆலயம் என்கிறது. இங்கு கொடுக்கப்பட்ட துணை-விளக்க உரையின் படி [According to the Tika] கோகன்ன அல்லது கோகர்ணம் - ஆலயம், கிழக்கு கடலோரம் அமைந்த ஒன்று என விளக்கம் கொடுக்கப் படுகிறது. அது மேலும் 'இலங்ககை தீவு முழுவதும், புத்தரின் கோட்பாட்டை, நம்பாதவரர்களின் ஆலயங்களை அழித்த பின் அவர் நிறுவினார் என்கிறது. அதாவது சிவலிங்கம் மற்றும் அது போல் என மேலும் ஒரு துணை விளக்கம் கொடுக்கப்பட்டும் உள்ளது. எனவே அங்கு குறிக்கப்பட்ட கிழக்கு கரையோரம் அமைந்த சிவன் கோவில் கோணேஸ்வரமாக இருக்க வாய்ப்பு அதிகம் தென்படுகிறது. மற்ற இரண்டிற்கும் விளக்கம் தேவைப் படுகிறது [The king built also the Manihira-vihara and founded three viharas, destroying temples of the brahmanical gods:- the Gokanna vihara, and another vihara in Erakavilla, anda third in the village of the Brahman Kalanda; moreover ... According to the Tika, the Gokanna-vihara is situated on the coast of the 'Eastern Sea', The Tika then adds : evam sabbattha Lankadipamhi kuditthikanamalayam viddhamsetva, Sivalingadayo nasetva buddha- sasanam eva patitthapesi 'everywhere in the island of Lanka he established the doctrine of the Buddha, having destroyed the temples of the unbelievers, i.e. having abolished the phallic symbols of Siva and so forth ']

ஆகவே இலங்கையில் சிவ வழிபாடும், அந்த வழிபாட்டிற்க்கான ஆலயங்களும் மிகவும் பழமை வாய்ந்தது என்று மறைமுகமாக சுட்டிக் காட்டுவதை காணலாம். அது மட்டும் அல்ல, ஆலைய உடைப்புகளும் உடைத்த பின் அந்த இடத்தில், விகாரைகள் அமைப்பதும் ஒன்றும் புதிது அல்ல என்பதும் புலப்படுகிறது. இதன் தொடர்ச்சியையே அல்லது நீட்சியே இன்றும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் காணப்படுகிறது.

ஆனால், இந்த அரசன் பகலில் ஆட்களையும், இரவில் பேய்களையும் அமர்த்தி பல பெரிய செயல்களைச் செய்தான் என்று மகாவம்சத்திற்கு மாறாக இராசவலிய கதை கூறுகிறது. இன்றும் அதன் தொடர்ச்சியை வேறு ஒரு கோணத்தில் காணுகிறோம். அதாவது பேச்சில் நீதியும் சமாதானமும் காணப்படுகிறது, ஆனால் செயலில் அதற்குத் எதிராக தனியார் காணிகள் கூட வலிந்து எடுக்கப்படுகிறது. அன்பும் பண்பும் போதித்த புத்தரின் சிலைகள் அல்லது ஆலயங்கள் கூட அங்கு வலிந்து நிறுவப் படுகின்றன. அவர் இருபத்தி நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார் (மற்ற இரண்டு நூல்களைப் போல இருபத்தி ஏழு அல்ல) மற்றும் அவரது திறமையான பணியின் காரணமாக தெய்வீக உலகத்திற்குச் [சொர்க்கத்துக்கு / divine world] சென்றார். மகாவம்சத்திற்கும் இராசவலியக்கும் இடையே எவ்வளவு வித்தியாசம்?

ஹென்றி பார்க்கர் [Henry Parker], தனது 1909 இல் எழுதிய பண்டைய இலங்கை [Ancient Ceylon], என்ற புத்தகத்தில், பக்கம் 490 இல், இலங்கையில், அனுராதபுர காலத்தை சேர்ந்த, பிராந்திய எழுத்து வடிவத்தில் ஓம் முத்திரை பொறிக்கப்பட்ட, முதல் நூற்றாண்டிற்கும் நான்காம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட கால நாணயம் கண்டு எடுக்கப் பட்டதாக குறிப்பிடுகிறார் [That the oblong type of coin continued to be issued up to the third or fourth century A.D. is clearly proved by the form of the ' Aum' monogram on the coin nuipbered 47, the m of which is of a type which is found in some inscriptions of that period. I met with a similar letter cut on the faces of two stones inside the valve-pit or ' bisdkotuwa' of a sluice at Hurulla, a tank constructed by King Maha-Sena (277-304 A.D.). Large coins of a circular shape made their appearance at about this time, having a similar ' Aum * monogram on them, and it may be assumed that the issue of the oblong money then either ceased or was of less importance than before] அது மட்டும் அல்ல, மகா சேன மன்னனுடைய ஆட்சிக் காலத்தில் (கி பி 277-304 ), அவனால் கட்டப்பட்ட குளத்தின் அடைப்பான் குழிக்குள் [valve-pit] இரண்டு கற்களில் ஓம் எழுத்து பொறிக்கப் பட்டு இருந்ததாகவும் கூறுகிறார். இது அங்கு முன்பு இந்து [சைவ] சமயம் இருந்ததையும் அதனின் தாக்கம் புத்த சமயம் பரப்ப பட்ட பின்பும் தொடர்ந்ததையும் தெளிவாகக் காட்டுகிறது.

இலங்கையில் மகாசேனன் காலம் முதல் சைவ கோவில்கள் இடித்து புத்த ஆலயங்கள் கட்டப்பட்ட வரலாற்று நிகழ்வுகள் உள்ளன என்றாலும் இவை காலப்போக்கில் அதிகரித்தும், அரச ஆதரவு பெற்றும் இன்று வடக்கு கிழக்கில் பலவந்தமான நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. உதாரணமாக, வட மற்றும் கிழக்குப் பகுதிகளில் இந்தச் செயல் வகைகள் மாற்றப்பட்ட வடிவங்களில் தொடர்கின்றன – குறிப்பாக இனமத அடிப்படையிலான அதிகார நிலைப்பாடுகள், பௌத்தமயமாக்கல், மற்றும் பழமையான தமிழ் பண்பாட்டை அழிக்க முயற்சிகள் என அவையை பிரித்துக் கூறலாம். இந்தவகையில், அண்மைய எடுத்துக்காட்டாக முக்கியமான இரண்டைக் கூறலாம். முதலாவது நீதிமன்ற உத்தரவையும் மீறி, ஆயுத படையினரின் உதவியுடன், அரச நிர்வாகத்தின் மறைமுக ஆதரவுடன் குருந்தூர்மலை, முல்லைத்தீவில் பலவந்தமாக கட்டப்பட்ட புத்த விகாரை மற்றது யாழ்ப்பாணம் தையிட்டியில் தனியார் காணியில், எந்தவித அனுமதியும் இன்றி, மீண்டும் முன்னையபாணியிலேயே, காணி உரிமையாளர்களின் எதிர்ப்பின் மத்தியிலும் கட்டப்பட்ட புத்த விகாரை ஆகும். இவ்வளவிற்கும் இந்த இரண்டு பகுதியும் முற்றிலும் தமிழர் வாழும் இடம் ஆகும்.

ஒன்று மட்டும் விளங்குகிறது. புத்த மதம் பற்றி பேசுபவர்கள் பலருக்கு புத்தரின் போதனைகளில் விளக்கம் அல்லது அறிவு இல்லை என்பதே, அது ஆகும், முக்கியமாக அதன் தலைவர்களுக்கும் குருமார்களுக்கும்!

Part: 30 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Did the concept of demolishing Brahminical temples begin with King Mahasena?'

The last chapter of the Mahavamsa is dedicated to Mahasena. The king Mahasena, on the advice of the thera Samghamitta, went against Bikkhus of the Mahavihara, and it was unoccupied for nine years. The Crown land concept came into effect during his time. The king later demolished three temples of the Brahminical (Hindu temples) gods, one at Gokanna (Trincomalee), and another at Erakaville, and the other at the Brahmin village Kalanda (Kanthalai). Mahasena seems to be busy with destroying the seven stories high Lohapasada, and later with demolishing the Brahminical temples as per the Mahavamsa. The Rajavaliya, in contrast with the Mahavamsa, says that this king did many great deeds by employing men in the daytime and demons in the night time. He reigned twenty-four years (not twenty-seven as in the other two chronicles) and went to the divine world because of his meritorious work, what a contrast between the Mahavamsa and the Rajavaliya.

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 30 B தொடரும் / Will follow

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 30 A

https://www.facebook.com/groups/978753388866632/posts/31577049141943655/?

Edited by kandiah Thillaivinayagalingam

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள். தொடர்ந்து எழுதுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதன் said:

நன்றிகள். தொடர்ந்து எழுதுங்கள்.

இது 146 பகுதிகளாக பதிவிட உள்ளேன். எல்லாம் எழுதி முடித்துவிட்டேன். ஆகவே பிரச்சனை இல்லை

என்றாலும், துரதிர்ஷ்டவசமாக, இப்பொழுது தோள் மூட்டு வலியில், குறிப்பாக வலது தோளில், நான் சிக்கியிருக்கிறேன். தற்போது மிகக் கடுமையான வலியால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே, இனிமேல் நான் ஏற்கனவே எழுதிய பதிவுகளைத் தவிர, புதிய பதிவுகளை எழுதுவதை மிகக் குறைக்கவோ, சில காலம் முற்றிலும் நிறுத்தவோ உள்ளேன். அடிப்படை தேவைக்கு அப்பாற்பட்டு, வலது கையால் வேகப்பந்து வீசுவது, பாரங்கள் தூக்குவது, அல்லது கையால் கூடுதல் வேலை செய்வதை தவிர்க்கிறேன். மருத்துவ சிகிச்சையை முறையாக மேற்கொண்டு, மருத்துவர் அறிவுரையின் படி என் வருங்கால நடவடிக்கைகளைத் தீர்மானிப்பேன்.

மிக்க நன்றி என் பதிவுகளை தொடர்ந்து வாசிக்கும் மற்றும் கருத்து தெரிவிப்பவர்களுக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 30 B

பகுதி: 30 B / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'புத்த சமயவாதிகள் புத்தரின் நான்கு பேருண்மைகளை சரியாக உணர்ந்தார்களா?' [தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது]

எனவே சுருக்கமாக ஆதார பூர்வமாக சொல்வதென்றால், விஜயன் என்று ஒரு புராண கதாநாயகன், அவனது பண்பற்ற கொடிய செயல்களால், நாடு கடத்தப்பட்டு வந்தேறு குடியாக, அகதியாக 700 தோழர்களுடன் இலங்கை தீவிற்கு வரும் முன்பே, சிவ வழிபாடும் தமிழும் அங்கு இருந்துள்ளது. விஜயன் வந்து 250 ~ 300 ஆண்டுகளின் பின்பு தான் புத்த மதம் இலங்கைக்கு வந்தது. மேலும் விஜயன் வந்து 1000 ஆண்டுகளிற்கு பின்புதான் சிங்களம் என்ற இனமோ அல்லது மொழியோ ஒரு கட்டுக் கோப்பிற்குள் உருவாக தொடங்கின. அது மட்டும் அல்ல, மகாவம்சம் / விஜயனின் பட்டாபிஷேகம் [CHAPTER VII /THE CONSECRATING OF VIJAYA] 46 - 50 இல். அங்கு பல குடியிருப்புகளை ஏற்படுத்திய பிறகு விஜயனுடைய மந்திரிகள் அவனிடம் ஒன்றாக வந்து ‘ஐயனே ! தாங்கள் முடி சூட்டிக் கொள்ள இசைய வேண்டும்" என்கிறார்கள். ஆனால், அவர்கள் வேண்டியும் அவன் மறுத்தான். 'உயர் குல மங்கை ஒருத்தியை', அதே சமயத்தில் அவளை ராணியாகக் கொண்ட பிறகே, பட்டாபிஷேகம் செய்து கொள்ள முடியும்’ என்று கூறி வேண்டு கோளை ஏற்க மறுத்தான். தங்கள் எஜமானனுக்குப் பட்டாபிஷேகம் செய்வதில் ஆர்வம் கொண்டவர்களாக, மந்திரிகள் அதற்கு வழிசெய்வது கஷ்டமாக இருந்த போதிலும், அவ்வகையில் ஏற்பட்ட பயத்தை ஒழித்தவர்களாக, விலையுயர்ந்த பரிசுப் பொருள்கள், ஆபரணங்கள், முத்துக்களுடன் சிலரை தென்னிந்தியாவிலுள்ள மதுரை மாநகருக்கு அனுப்பி வைத்தனர்' என்கிறது. [When they had founded settlements in the land the ministers all came together and spoke thus to the prince : Sire, consent to be consecrated as king But, in spite of their demand, the prince refused the consecration, unless a maiden of a noble house were consecrated as queen (at the same time). But the ministers, whose minds were eagerly bent upon the consecrating of their lord, and who, although the means were difficult, had overcome all anxious fears about the matter, sent people, entrusted with many precious gifts, jewels, pearls, and so forth, to the city of Madhurai in southern (India), to woo the daughter of the Pandu king for their lord,]. இது அன்று, அதாவது கி மு 6ஆம், 5ஆம் நூறாண்டில், தமிழருக்கு உள்ள மதிப்பை பறைசாற்றுகிறது, சிங்கள இனத்தின் முதல் மூதாதையான விஜயன் வாயினூடாகவே 'உயர் குல மங்கை' என மதுரை தமிழ் இளவரிசையை கூற வைத்ததிற்கு, நாம் மகாவம்ச கதையின் நூலாசிரியருக்கு கட்டாயம் நன்றி செலுத்த வேண்டும்.

இலங்கையில் கண்டுபிடிக்கப் பட்ட கிருஸ்துக்கு முற்பட்ட கல்வெட்டுகளில், 50 மேற்படட இடத்தில் முக்கிய இடத்தை வகுத்த சொல் 'பருமக' [parumaka] ஆகும். இது தென் இந்தியாவில் காணப்பட்ட, தமிழ் சொல் பருமகன் அல்லது பெருமகன் [perumakan] உடன் ஒன்றிப் போவதாக, ராசநாயகம், சி பத்மநாதன், ப புஸ்பரத்தினம் போன்ற அறிஞர்கள் அடையாளம் கண்டுள்ளார்கள். இதற்கு ராசநாயகம் , தலைவன், கோமான், மன்னன் [chief, lord, and king] மற்றும் பரணவிதான [Paranavitana] இதற்கு அதே பொருள் பட, ஆனால் பொதுப் படையாக இல்லாமல், இந்தோ ஆரியன் தலைவர்கள் [Indo-Aryan chieftains] என விளக்கி உள்ளார். ஆனால் கிருஸ்துக்கு பின் இந்த பெயர் மாற்றப் பட்டு அது மாபருமக [maparumaka / பெரும் பெருமகன்] என பிரதியீடு செய்யப் பட்டுள்ளது. அப்படியான கல்வெட்டு ஒன்று மட்டக்களப்பு, வெல்லாவெளி - தளவாய் என்ற இடத்தில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது [Vellaveli Brahmi Inscription / photo attached. The rough translation says “Ship caption Shamathaya, who has the title Parumaka, given this rock”. The word Parumaka literally means lord, and the word Naavika could be a sailboat as per use of Sangam literature’s wording.]. இந்த பிராமிச் சாசனம் 'பருமக நாவிக ஷமதய லெணே' என்பதாகும். இதை 'பருமக' [பெருமகன்] என்ற பட்டத்திற்குரிய கப்பல் தலைவன் ஷமதய என்பவன் கொடுத்த குகை என பொருள் படுத்தப் படுகிறது. எனவே இந்த இடத்தில் கிருஸ்த்துக்கு முன், தமிழ் மொழியையும் அல்லது வேறு மொழியையும் [பரணவிதான கூறியது போல் இந்தோ ஆரியன்] பேசியோர் வாழ்ந்து உள்ளனர் என்பது உறுதிப் படுத்தப் படுகிறது. எனவே விஜயன் வரும் பொழுது அவனுக்கும் அவன் தோழர்களுக்கு அடைக்கலம் கொடுத்த பூர்வீக குடிமக்களில் இவர்களும் ஒருவராகும், எனவே இவர்களை நீங்கள் ஒதுக்க முடியாது ,இவர்களும் இம் மண்ணின் மைந்தர்களே !!

சக்கரவர்த்தி அசோகன் செய்த தவறா, இல்லை புத்தரின் போதனைகளை பரப்பி தம் கட்டுப் பாட்டில் வைத்திருந்த, வைத்துக் கொண்டிருக்கிற துறவிகள் செய்த தவறா நான் அறியேன் ? ஏன் என்றால் புத்தர் மிக தெளிவாகச் சொல்கிறார்: 'கடவுளை மையமாகக் கொண்ட சமயங்களில் எது சரியானது, எது தவறானது, என்பதை அறிய அச்சமயவாதிகள் சொல்வதை நாம் செய்ய வேண்டும். ஆனால் மனிதனை மையமாகக் கொண்ட பௌத்த சமயத்தில் எது சரி, எது தவறு என்பதை அறிய நம்மை முழுமையாகப் புரிந்து கொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் வேண்டும். இவ்வாறு நம்மை உணர்ந்து கொள்வதால் எழும் நன்னெறி ஒரு கட்டளையினால் உருவாக்கப்படும் நன்னெறியை விட உறுதியானவையாகவும் பலம் வாய்ந்தவையாகவும் இருக்கும்' என்று அவர் போதித்ததுடன், மற்றவர்களுக்கு உதாரணமாக அவர் நான்கு அடிப்படை பேருண்மைகளையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டினார். இன்று பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் புத்த சமயவாதிகள் என்ன செய்கிறார்கள் ?, எது செய்யப் போகிறார்கள் ? என்ற தவிப்பில், பயத்தில் மற்ற இனம் வாழும் நாடாக இவை மாறுகிறது? காரணம் அந்த புத்தரின் புனிதமான நான்கு பேருண்மைகளை சரியாக உணராமையும் கடைப் பிடிக்காததும் ஆகும். அப்படியான நடவடிக்கைகளுக்கு சார்பான, சாதகமான வழி அமைத்து கொடுத்தது தான் இந்த மகாவம்சம் என்று சொல்லலாமோ என்று எனக்கும் தோன்றுகிறது ?

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 31 தொடரும் / Will follow

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 30 B

https://www.facebook.com/groups/978753388866632/posts/31627963990185503/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 31

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 31 / முடிவுரை / 'விஜயன் உண்மையான நபரா?'

தீபவம்சத்தின் 9 ஆம் அத்தியாயத்தின் 1 ஆம் வசனம் இலங்கைத் தீவு சிங்கத்தின் பெயரால் சிஹல [Sihala] எனக் அழைக்கப்பட்டது என்று கூறுகிறது. எனவே சிங்கள மொழிக்கும் அந்த மொழி பேசுபவர்களுக்கும் சிஹலவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றே பொருள் படுகிறது. இந்த அத்தியாயத்தின்படி, வங்க மன்னனின் மகள் சுப்பதேவி [Suppadevi] ஒரு சிங்கத்துடன் இணைந்து வாழ்ந்து இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்: அவர்கள் சிங்கபாகு மற்றும் சிங்கசீவலி [Sinhabahu and his sister Sinhasivali ] ஆகும். வாலிப பருவத்தை அடைந்த சிங்கபாகு தன்னுடைய தாய், தங்கை சகிதமாக குகையை விட்டு நாட்டுக்குள் நுழைந்தான். பின், அரச பாரம்பரியங்களுக்கு இணங்கி சுப்பதேவி தன் அத்தை மகனை மணம் கொண்டாள். அதன் பின், சிங்கபாகு, தனது தந்தையான சிங்கத்தைக் கொன்று, தனது சகோதரியான சிங்கசீவலியை மணம்புரிந்துக் கொண்டு அரசை தன் தாயின் கணவன் கைகளில் ஒப்புக்கொடுத்து விட்டு, நாட்டை விட்டு வெளியேறினான். தான் பிறந்த கானகத்தை அடைந்து அங்கு தனக்கென ஒரு நகரை அமைத்துக் கொண்டான். அதனை சுற்றிலும் கிராமங்களை அமைத்து சிங்கபுரம் என்ற அரசை நிறுவினான். தன்னுடைய தங்கை சிங்கசீவலியை அரசியாக்கி தன் நாட்டை ஆளத்தொடங்கினான். இவர்களுக்கு பிறந்தவன் தான் விஜயன்.

ஆனால், உங்களில் பலர் அடிப்படை உயிரியல் கட்டாயம் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒரு ஆண் சிங்கமும் ஒரு மனித பெண்ணும் புணர்ந்து சந்ததி உண்டாக்கும் என்பது நடைமுறை சாத்தியம் இல்லை. உதாரணமாக, சிங்கம் 38 குரோமோசோம்கள் / உடல் அணுக்களில் காணப்படும் மரபுத்திரிகள் கொண்டு உள்ளது , அதேவேளை மனிதன் 46 குரோமோசோம்கள் [Horses have 64 chromosomes, donkeys have 62, humans have 46, and lions have 38.] வைத்திருக்கிறான். அத்துடன் அவைகளின் வகைகளும் முக்கியம் [the types of chromosomes are also important.] ஆகும். உதாரணமாக, மனித-விலங்கு கலப்பினங்கள் நீண்ட காலமாக சமூக கலாச்சாரங்கள் முழுவதும் (குறிப்பாக புராணங்களின் அடிப்படையில்) இருந்து வருகின்றன, பல கண்டங்களில் பண்டைய கதைகளின் ஒரு பகுதியாக இருக்கின்றன, மேலும் சமீபத்திய காலங்களில் நகைச்சுவை அல்லது கேலிச்சித்திர புத்தகங்கள், திரைப்படங்கள், வீடியோ விளையாட்டுகள் மற்றும் பிற தொடர்புடைய வெகுஜன ஊடகங்களிலும் காணப்படுகின்றன. மற்றும் படி உண்மையில் அப்படி ஒன்றும் இல்லை, இருக்கவும் வாய்ப்பு இல்லை.

எனினும், சிங்கப்புலி அல்லது லைகர் (Liger) என்பது ஆண் சிங்கம் (Panthera leo) மற்றும் பெண் புலி (Panthera tigris) இவைகளுக்கிடையே ஒரு கலப்பினச் சேர்க்கை மூலம் உருவாகிய கலப்பு உயிரினமாகும். இதற்கு காரணம் இந்த இரு இனத்தின் பெற்றோர்கள் பந்தேரா எனும் ஒரே பேரினத்தைச் சேர்ந்தவை என்பதால், மற்றும் அவைகளின் குரோமோசோம்கள் மிகவும் ஒத்த தன்மையாக இருப்பதால் ஆகும், அப்படியே புலிச்சிங்கம் அல்லது வேயரிமா (Tigon) ஆகும். அத்துடன் இவை பெருபாலும் மலட்டுவாகவும் [sterile] இருக்கின்றன. இன்னும் ஒரு உதாரணமாக, குதிரையையும், கழுதையையும் எடுத்தால், அவை முறையே 64, 62 குரோமோசோம்கள் கொண்டுள்ளன. அவைகள் புணர்ந்து கோவேறு கழுதை [mules] பிறக்கிறது. அது எப்பொழுதும் மலடும் ஆகும். சிங்கத்தையும், மனிதனையும் இனி கருத்தில் கொண்டால், இங்கு குரோமோசோம்கள் வேறுபாடு எட்டு ஆகும். எனவே எந்த சந்தர்ப்பத்திலும் சந்ததி உண்டாகாது. அப்படி என்றால், விஜயன் என்று உண்மையான ஒருவர் இருக்க முடியாது? இது நான் சொல்லவில்லை. அறிவியல் சொல்லுகிறது!

கழுதையும் குதிரையும் ஒரே பேரினம் [genus], ஆனால் வெவ்வேறு இனங்கள். குரோமோசோம்கள் சொற்ப வித்தியாசம். எனவே தான் கோவேறு கழுதை முற்றிலும் மலடாகவே பிறக்கிறது. மனிதனும் சிங்கமும் ஒரே பேரினமும் இல்லை [do not even belong to same genus] . எனவே, சிங்கம் இளவரசியை உண்பதுதான் இறுதியாக நடந்து இருக்கும்! Genus மற்றும் Species அல்லது ஏதேனும் உயிரியல் பாடப்புத்தகத்தின் அர்த்தத்திற்காக, 'The Great Human Diaspora: The History of Diversity and Evolution By Luigi Luca Cavalli-Sforsa and Francesco Cavalli-Sforsa, 1995, translated from Italian to English'' என்ற புத்தகத்தின் பக்கம் 39 ஐப் பார்க்கவும்.

இலங்கையில் வாழ்ந்து பூர்வீக மக்களிடம் இருந்து நிலத்தை பறிக்க மகாநாம தேரரின் கட்டுக்கதை என்றே தோன்றுகிறது. ஒன்று மட்டும் உண்மை, அவர் தொடங்கி வைத்த நிலம் பறிப்பு, இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்னும் தொடர்வது கண்கூடு! அறிவு வளர்ந்து, மக்கள் நாகரிகம் அடைந்தாலும், பிற்போக்கு மத குருக்களும், அரசியல்வாதிகளும் இன்னும் அநாகரிகமாகவே இருப்பது ஆச்சரியமே, ஆனால் உண்மை!!

விஜயனுக்குப் பிறகு அடுத்த அரசர் பண்டுவாசுதேவன் அல்லது பண்டுவாசுதேவ ஆவார், அவர் மகாவம்சத்தின்படி விஜயனின் தம்பி சுமித்தவின் [Sumitta] இளையகுமாரன் ஆகும். ஆனால் நாம் முன்பு அறிவியல் ரீதியாக கூறியது போல, விஜயன் உண்மையான ஆள் இல்லை. அதனால் அவனது தம்பி சுமித்தவும் உண்மையான ஆள் இல்லை. அப்படி என்றால், சுமித்தவின் மகன் பண்டுவாசுதேவனும் உண்மையான நபர் அல்ல. அடுத்த மன்னன் அபயன் அல்லது அபய, பண்டுவாசுதேவனின் மகன், எனவே அவன் ஒரு கற்பனை மனிதனின் மகனாக இருப்பதால் உண்மையான மனிதனாக இருக்க முடியாது? அடுத்த மன்னன் பண்டுகாபய அல்லது பண்டுகாபயன், அபயனின் சகோதரியின் மகன் என்பதால், உண்மையான மனிதனாக மீண்டும் இருக்க முடியாது? மூன்று நபர்களின் பிறந்த ஆண்டுகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன அல்லது நாளாகமங்களில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அவர்களின் பிறந்த ஆண்டுகள் கணக்கிடப்படலாம்? அவர்கள் பண்டுகாபய, மகிந்த தேரர் மற்றும் தேரி சங்கமித்தை (Sanghamitta, பாளி: சங்கமித்தா] ஆகும். என்றாலும், முன்பு கூறிய காரணங்களால், இந்த மூவரும் அதிகமாக உண்மையான நபர்களாக இருக்க முடியாது? எது என்னவென்றாலும், மகிந்த தேரரும், தேரி சங்கமித்தாவும் இலங்கையின் ஆட்சியாளர்கள் அல்ல, எனவே, அது இலங்கையின் வரலாற்றிற்கு முக்கியமும் இல்லை.

மேலும், பண்டுகாபய முதல் துட்டைகைமுனு அல்லது துட்டகாமினி வரையிலான மன்னர்களின் ஆட்சியின் நீளம் மற்றும் அவர்கள் வாழ்ந்த மிகவும் சாத்தியமான வயது ஆகியவற்றில் முரண்பாடுகளைக் கொண்டுள்ளதால், வழக்கத்திற்கு மாறான அல்லது விதிமுறையிலிருந்து அவை மிகவும் வேறுபாடாகத் தோன்றுவதால், அவை உண்மையாக இருக்கும் எந்த சந்தர்ப்பம் இல்லை. நாம் முன்னரே குறிப்பிட்ட நான்கு அரசர்களைத் தவிர, உத்திய, மகாசிவன், சுரதிஸ்ஸ அல்லது சுரதிசா ஆகியவரும் இதேபோன்ற பழுத்த வயது மட்டும் வாழ்ந்திருக்க வேண்டும். எனவே, மூன்று தலைமுறைகளில் ஏழு மன்னர்கள் 107 வயது முதல் 189 வயது வரை வாழ்வது உண்மையாக இருக்க முடியுமா?, வாழ்வது மட்டும் அல்ல, அந்த வயது மட்டும் மன்னராக ஆட்சியும் செய்துள்ளார்கள் என்பதையும் நோக்குக.

மகாவம்ச ஆசிரியர், இலங்கையில் புத்த சமயத்திற்கு ஒரு கவர்ச்சியை கொடுக்க, புத்தர் தனது கொள்கையை பரப்ப, தேர்ந்து எடுத்த மக்களாக சிங்களவர்களையும், தேர்ந்து எடுத்த நாடாக இலங்கையையும் தனது கதையில் வெளிக் காட்டி, அதற்கு மகுடம் வைத்தாற் போல், விஜயனினதும் அவனது தோழர்களினதும் இலங்கை வருகை நாளை செயற்கையாக, புத்தரின் மரண நாளுடன் ஒத்து போக செய்தது வெளிப்படையாக எந்த நடுநிலையாளருக்கும் கட்டாயம் தெரியும் [The author of Mahavamsa, artificially fixed the arrival of Vijaya and his compatriots to coincide with the passing away of Buddha in 543 BCE.]. அதற்கான அறிவியல் காரணங்கள் ஏற்கனவே விரிவாக அலசப் பட்டுள்ளது. அதே நேரத்தில் பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் உண்மையான ஆண்டு கிமு 483 என்று ஒப்புக்கொள்கிறார்கள். இருப்பினும், சரியான தேதி பற்றி பல்வேறு கோட்பாடுகள் உள்ளன. உதாரணமாக, சில வரலாற்றாசிரியர்கள் புத்தரின் மரணம் கிமு 410 இல் நிகழ்ந்ததாக நம்புகிறார்கள். எவ்வாறாயினும் கி மு 543 யைக் கருத்தில் கொண்டு, விஜயனுக்குப் பிறகு ஆட்சி செய்த சில மன்னர்களின் ஆட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது. ஒரு எடுத்துக்காட்டாக, அபயாவின் மருமகனான பாண்டுகபயா, கிமு 377 முதல் கிமு 307 வரை 70 ஆண்டுகள் ஆட்சி செய்ததாக நம்பப்படுகிறது. அவருடைய மகன் மூத்தசிவன் கிமு 307 முதல் கிமு 247 வரை 60 ஆண்டுகள் ஆட்சி செய்தார் எனவும் நம்பப்படுகிறது. அதாவது தந்தையும் மகனும் மொத்தம் 130 ஆண்டுகள் செய்தனர் என்றாகிறது!

Part: 31 / Conclusion / Is Vijaya a real person?

The Verse 1 of Chapter 9 of Dipavamsa says the Island of Lanka was called Sihala after lion. Sihala has therefore nothing to do with the Sinhala language or with those who are speaking that language. As per this Chapter, the daughter of Vanga king, Suppadevi, cohabited with a lion and gave birth to two children: Sihabahu and Sivali. Sihabahu married his sister Sivali. Vijaya was born to them. A male lion and a female human to have offspring is a biological impossibility. Humans and Lions are two different species, and would never have off springs. Lions have 36 chromosomes and humans have 46 chromosomes. Not only the number of chromosomes, but also the types of chromosomes are also important. A Lion and a Tigress may produce Ligers, and Tiger and Lioness may produce Tions, as their chromosomes are very much similar. In this case, they are mostly, but not always, sterile. Horses and donkeys have 38 and 36 chromosomes respectively. They mate to produce mules, but mules are always sterile. The difference of only two chromosomes makes the mule sterile. Humans have 46 chromosomes and the lions have 36 chromosomes, and mating of these two will never result in off spring. Therefore, Vijaya cannot be a real person. He is a concocted personality to steal the land from the original people of Lanka. See the page 39 of the Reference 'The Great Human Diaspora: The History of Diversity and Evolution By Luigi Luca Cavalli-Sforsa and Francesco Cavalli-Sforsa, 1995, translated from Italian to English' for the meaning of Genus and Species or any biology textbook.

A group of similar speices belong to same Genus. Donkeys and horses belong to a same genus, but not to same species. All the donkeys belong to one species and they mate, male and female donkeys, to produce offspring. However, the hybrids between a horse and a donkey, mules or hinnies, are always sterile. Mules have relatively high load carrying capacity. Lions and Humans do not even belong to same genus. The only eventuality is for the lion to eat the adventurous woman.

The next king after Vijaya is Panduvasudeva and he is, as per the Mahavamsa, the son of Sumita, the younger brother of Vijaya. Vijaya is not a real person and therefore his brother Sumita is also not a real person. Sumita’s son Panduvasudeva is also not a real person. The next king Abhaya is the son of Panduvasudeva, and therefore he, being a son of an imaginary person, could not be a real person. The next king Pandukabhaya, being the son of Abhaya’s sister, could not be a real person. The birth years of only three persons are given or could be calculated based on the information available in the chronicles. Pandukabhaya, Thera Mahinda and Theri Sanghamitta are those three. These three should be, most probably, not real persons. Thera Mahinda and Theri Sanghamitta are not rulers of Lanka and it is irrelevant to the history of Lanka.

Also, The rules from Pandukabhaya to Dutthagamani have anomalies with respect to the lengths of their reigns and the most probable ages to which they lived. Other than the four kings we mentioned earlier, Uttiya, Mahasiva and Suratissa must also have lived to the similar ripe ages. Therefore, Seven kings of just three generations living to the age from 107 years to 189 years is really an absurdity. It looks like that the author of the Mahavamsa artificially fixed the arrival of Vijaya and his compatriots to coincide with the passing away of the Buddha in 543 BCE, while most historians now agree that the actual year was 483 BCE. However, there are different theories about the exact date. For example, Some historians believe the Buddha's death occurred around 410 BC, somewhere between the earlier and later dates. With this in mind, it is evident that the reigns of some of the kings who ruled after Vijaya were extended, particularly as father and son were said to have ruled for a total of 130 years. For example, King Pandukabhaya, the nephew of Abhaya, is believed to have ruled from 377 BCE to 307 BCE, a span of 70 years. His son, Muttasiva, ruled for 60 years, from 307 BCE to 247 BCE.

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 32 தொடரும் / Will follow

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 31

https://www.facebook.com/groups/978753388866632/posts/31672899879025247/?

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 32

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 32 / முடிவுரை / 'சிங்கள மொழி அதன் வரலாறு எழுத பொருத்தமற்றதா?'

தத்திக முதல் கஜபாகு வரை பல தமிழ் மன்னர்களின் சாத்தியம் முன்னரே காட்டப்பட்டுள்ளது. மூத்தசிவன், சிவன், மகாசிவன், எல்லாளன் எனப் பல தமிழ் மன்னர்களும், மற்றும் தத்திகவுக்குப் பின்பும் பல தமிழ் மன்னர்களும் உள்ளனர். ‘நாக’ என்று முடிவடையும் பல மன்னர்களின் பெயர்கள் உள்ளன. அவர்கள் தமிழ் மன்னர்களாகவும் இருக்கலாம்? அதற்கான காரணம் ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. மற்றொரு விசித்திரமான அம்சம், இலங்கை வரலாற்றை வெளிநாட்டு மொழியில், பாளியில் எழுதியது. சிங்கள மொழி அதன் வரலாறு எழுத பொருத்தமற்றதா? அல்லது அந்தக் காலக்கட்டத்தில் - ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுக்கு முதல் - சிங்கள மொழி வளர்ச்சி அடையவில்லையா?

தீபவம்சம், மகாவம்சம் போல் தமிழுக்கும் தமிழருக்கும் எதிரானது அல்ல. இந்த மாற்றம் எப்படி வந்தது? சிறந்த விளக்கவுரை ஆசிரியர் புத்தகோசரின் [great commentator Buddhaghosa] வருகையாக இருக்கலாம்? மூல பாஷை [மூல் பாஷா {mul bhaSha} = அசல் மொழி] கருத்தை அறிமுகப்படுத்தி, பாளி மொழியில், முன்னைய நூல்களை மொழிபெயர்த்த பிறகு, அவற்றை - முன்னைய நூல்களை - எரித்தார் என நம்பப்படுகிறது. எனவே, மகாநாம அவரிடமிருந்து தான் இந்த உத்வேகத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது?

புத்தகோசரின் வாழ்க்கையைப் பற்றி வரையறுக்கப் பட்ட நம்பகமான தகவல்கள் மட்டுமே இருக்கின்றன. புத்தகோசர் தென்னிந்தியாவில் பிறந்தவர் என்றும் வட இந்தியாவிலிருந்த அன்றைய மகத அரசுக்குட்பட்ட புத்தகயாவிற்கு அருகில் பிறந்தவர் என்றும் ஆய்வாளர்கள் நடுவில் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. என்றாலும் அவர் பிராமண குடும்பத்தில் பிறந்தார் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. மகாவம்சத்தின் படியும், புத்தகோசர் மகத அரசுக்குட்பட்ட புத்தகயாவிற்கு [Bodh Gaya] அருகில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவராகவும், வேதங்களில் தேர்ச்சி பெற்றவராகவும், இந்தியா முழுவதும் தத்துவ விவாதங்களில் ஈடுபட்டவராகவும் கூறுகிறது. ரேவதா [Buddhist monk named Revata] என்ற புத்த துறவியை சந்தித்த பிறகுதான், புத்தகோசர் விவாதத்தில் சிறந்து விளங்கினார், முதலில் வேதக் கோட்பாட்டின் பொருள் குறித்த சர்ச்சையில் தோற்கடிக்கப்பட்டார். பின்னர் அபிதம்மத்திலிருந்து [Abhidhamma] ஒரு போதனையை வழங்குவதில் குழப்பமடைந்தார். அதன் பின் பௌத்தத்தில் ஈர்க்கப்பட்ட புத்தகோசர் ஒரு பிக்கு (பௌத்த துறவி) ஆனார் மற்றும் திபிடகா [Tipiṭaka / இது தேரவாத பௌத்தத்தின் கோட்பாட்டு அடித்தளத்தை உருவாக்கும் முதன்மை பாளி மொழி நூல்களின் தொகுப்பாகும்] மற்றும் அதன் விளக்கவுரைகளில் ஆய்வு செய்தார். இந்தியாவில் விளக்கவுரை தொலைந்து போன ஒரு வாசகத்தைக் கண்டுபிடித்து படிப்பதற்காக, அது இலங்கையில் பாதுகாப்பாக இருக்கும் என்ற ஒரு நம்பிக்கையில் அங்கு பயணம் செல்லத் தீர்மானித்தார். அங்கே, இலங்கையில், புத்தகோசர் அனுராதபுர மகா விகாரையின் துறவிகளால் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட மிகப் பெரிய அளவிலான விளக்கவுரை நூல்கள் என்ன என்பதை ஆய்வு செய்யத் தொடங்கினார். புத்தகோசர் அங்கு காணப்பட்ட விளக்கவுரைகள் எல்லாவற்றையும் பாளியில் இயற்றப்பட்ட ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட விரிவான ஒரு விளக்கவுரையாகத் தொகுக்க, அவர்களிடம் அனுமதி கோரினார்.

புத்தகோசர் வட இந்தியாவில் போதகயாவிற்கு அருகில் பிறந்தார் என்று மகாவம்சம் கூறினாலும், அவரது விளக்கவுரைகளின் பின்னுரை அல்லது முடிவுரை, இந்தியாவில் குறைந்தபட்சம் தற்காலிக வசிப்பிடமாக இருக்கும் ஒரு இடத்தை மட்டுமே குறிப்பிடுகிறது: அது தென்னிந்தியாவின் காஞ்சி ஆகும். சில அறிஞர்கள் (among them Oskar von Hinüber and Polwatte Buddhadatta Thera) புத்தகோசர் உண்மையில் தென்னிந்தியாவில் பிறந்தார் என்றும், புத்தரின் பிராந்தியத்துடன் அவருக்கு நெருக்கமான உறவுகளை ஏற்படுத்துவதற்காக, பிற்கால சுயசரிதைகளில் வேண்டும் என்று இடமாற்றம் செய்யப்பட்டார் என்றும் முடிவு செய்கிறார்கள். புத்தகோசர் தனது பணி முடிந்ததும், இறுதியில், அசல் அல்லது மூல கையெழுத்துப் பிரதிகளை சேகரித்து எல்லாவற்றையும் எரித்ததாகக் நம்பப்படுகிறது.

Part: 32 / Conclusion / 'Was the Sinhala language unsuitable for its history?'

The possibility of many Tamil kings from Dathika to Gajabahu is shown earlier. There are many Tamil kings such as Mutasiva, Siva, Mahasiva, Elara, and many kings after Dathika. There are names of many kings ending with ‘Naga’. They could also be Tamil kings. Another strange aspect is the writing of the Lanka history in a foreign language, Pali. Was the Sinhala language unsuitable for its history? The Dipavamsa is not anti-Tamil unlike the Mahavamsa. What could have happened in between the compilations of the Dipavamsa and the Mahavamsa for this change? It could be the arrival of the great commentator Buddhaghosa! He burnt the originals after translating into Pali, introducing the Mula Bhasha [मूल भाषा {mul bhaSha} = ORIGINAL LANGUAGE] concept. Mahanama must have got the impetus from him.

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 33 தொடரும் / Will follow

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 32

https://www.facebook.com/groups/978753388866632/posts/31701596006155634/?

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 33

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 33 / முடிவுரை / 'மகாநாம தேரர் ஏன் சோழ வெறியர்?' & 'புத்தர் தனது கொள்கையைப் பரப்ப நம்பிக்கையான இடமாக, இலங்கையைத் தேர்ந்து எடுத்தாரா?'

இலங்கைக்கு முன்னைய காலத்தில் பாண்டிய அரச நாடு இலகுவான தொடர்புடைய நாடாக இருந்தது. உதாரணமாக, வைகை நதியினூடாக வந்தால், அது மன்னாரை அடைகிறது. மன்னாரில் இருந்து அருவி ஆறு (Malwattu Oya) மூலம் பயணித்தால் அனுராதபுரம் அடையலாம். எனவே பாண்டிய நாட்டுடன் நல்ல நட்பு தொடர்பு இருந்ததிற்கு இதுவே காரணம். இதனால், பாண்டிய நாட்டின் எதிரியான சோழ நாடு அனுராதபுர அரசர்களுக்கும் எதிரியாகவே இருந்தது எனலாம். அதுவே மகாநாம தேரர் சோழருக்கு எதிரான வெறுப்பு மனப்பான்மைக்கு [to be Chola phobic] ஒரு காரணமாகுவும் இருக்கலாம் என நம்புகிறேன்.

மகாபாரதத்தில் விதுர நீதி என்ற ஒரு பகுதி உள்ளது. அது " நீ எப்பவும் உண்மை சொல்ல வேண்டும், ஆனால் சொல்லும் உண்மை தீங்கு விளைவிக்கும் என்றால், அதை சொல்லாதே, பொய் உதவும் என்றால், பொய்யை உண்மை போல் சொல்லிவிடு" என்கிறது. [There is a verse in Mahabharata.YOU SHOULD ALWAYS TELL THE TRUTH.IF TELLING TRUTH WOULD HARM THE PEOPLE THEN DON’T TELL THAT.IF TELLING A LIE WILL HELP PEOPLE THEN TELL THAT LIE AS A TRUTH.That is from Vidura niti of Mahabharata]. இதைத்தான் மகாவம்சத்தின் ஆசிரியர் தம் இனத்திற்கு என்றும் வரலாறு சாதகமாக இருக்க வேண்டும் என்பதால் மாற்றி சொல்லி இருப்பார் என்றும் எண்ணுகிறேன்.

மற்றது மகாவம்சத்தில் காணப்படும் தமிழருக்கு எதிரான இனத்துவேசத்திற்கு முக்கிய காரணியாக விளங்கியவர், கி.பி 5 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வந்த பௌத்த ஞானியான, காஞ்சிபுரத்துப் பௌத்த பள்ளியைச் சேர்ந்த புத்தகோசர் [the great commentator Buddhaghosa] ஆவார்.

'புத்தர் தனது கொள்கையைப் பரப்ப நம்பிக்கையான இடமாக, இலங்கையைத் தேர்ந்து எடுத்தாரா?'

புத்தர் தனது நம்பிக்கைக்காக இலங்கையைத் தயார் செய்ததாக அனைத்து இலங்கை பண்டைய பாளி நூல்களும் கூறுகின்றன. புத்தர் மூன்று முறை இலங்கைக்கு விஜயம் செய்ததாக அந்த நாளாகமம்கள் [chronicles] மேலும் இதற்குச் சான்றாக கதை கூறுகிறது. இருப்பினும், இந்த வருகைகள் முந்தைய பாலி நியதியில் (திரிபிடகம் / Pāli Canon, the Tipitaka) குறிப்பிடப்படவில்லை, மேலும் இந்த நிகழ்வுகளை உறுதிப்படுத்தும் தொல்பொருள் அல்லது உரை ஆதாரங்கள் எதுவும், புத்தர் பிறந்து வாழ்ந்து இறந்த மண்ணில் - இந்தியாவில் - இல்லை இல்லை. புத்தர் இறக்க நேரிட்டபோது, பௌத்தர்கள் சென்று வழிபட வேண்டிய நான்கு இடங்களை புத்தரே அடையாளம் காட்டினார். அந்த நான்கு இடங்கள் லும்பினி, புத்தகயை [புத்த கயா], சாரநாத் மற்றும் குசி நகர் [Lumbini (birthplace of the Buddha), Bodh Gaya (the site where the Buddha attained enlightenment), Sarnath (the location of the Buddha’s first sermon), and Kushinagar (the location where the Buddha attained parinirvana)]. ஆனால், புத்தர் இலங்கையை ஒரு புனிதமான இடமாக என்றும் எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால் இலங்கைக்கு புத்தர் பறந்து மூன்று தரம் வந்தார் என்று, அதை ஒரு வரலாற்றாக மகாவம்சம் கூறுவது தான் விந்தையாக உள்ளது? புத்தர் இலங்கையை தேர்ந்து எடுத்து, அங்கு பயணம் செய்து இருந்தால், கட்டாயம் அதையே முதலாவதாக குறிப்பிட்டு இருப்பார் என்பதில் எந்த சாதாரண மனிதனுக்கும் ஐயம் இருக்காது, ஆனால் அவரோ அல்லது அவரை சூழ்ந்து இருந்தவர்களோ இலங்கையை அறவே கூறவில்லை என்பது உண்மையாகும்!

பின்னர் அசோகரின் காலத்தில், எட்டு புனித புனித தளங்கள் தரிசிக்க மற்ற நான்கு இடங்களும் சேர்க்கப்பட்டன. அந்த நான்கு புனித ஸ்தலங்கள்: சிராவஸ்தி அல்லது சவத்தி [Sravasti or savatthi], சங்கிசா அல்லது சங்காசியா [Sankasia], ராச்கிர் ராஜகஹ, அல்லது ராஜ்கீர்‌ [Rajagaha, also known as Rajgir] மற்றும் வெசாலி [Vaishali] ஆகும். பௌத்தர்கள் வருகை தரும் முக்கிய இடமாக இலங்கையை அசோகர் கருத்தியிருந்தால், அந்த பட்டியலில் இலங்கையையும் சேர்த்திருப்பார். அவரும் மீண்டும் இலங்கையைச் சேர்க்கவில்லை. இதுவும் வரலாற்று உண்மையாகும்!

ஒன்று மட்டும் உண்மை, புத்தரும் அசோக மன்னரும் கூட, இலங்கையை அல்லது அனுராதபுரத்தையோ பார்க்க வேண்டிய புனித இடமாக கருதவும் இல்லை, அதை புத்த புனித இடமாக ஏற்கவும் இல்லை.

Part: 33 / Conclusion / 'Why Mahanama to be Chola phobic?' & 'Is Buddha prepared Lanka for his faith?'

The earliest connection was with the Pandya kingdom, came along the River Vaigai, and arrived at Mannar. From Mannar progressed along the Aruvi Aru (Malwattu Oya) to Anuradhapura. There must have better relationship with Pandya kings. This could be the reason for Mahanama to be Chola phobic.

'Is Buddha prepared Lanka for his faith?

All the chronicles say that the Buddha prepared Lanka for his faith. The chronicles assert that the Buddha visited Lanka thrice. When the Buddha was about to die, he identified four places which the Buddhists should visit and venerate. The four places are Lumbini, Buddhagaya, Sarnath and Kusinara. The Buddha did not identify Lanka as one holy place to visit?

Later during Asoka’s time, four other places are also added to make eight holy places to visit. Those four holy places are Savatthi, Sankasia, Rajagaha and Vesali. If Asoka considered Lanka an important place for the Buddhists to visit, then he would have included Lanka also in the list. He did not include Lanka.

The Buddha and the king Asoka did not consider Lanka or Anuradhapura as a holy place to visit.

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 34 தொடரும் / Will follow

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 33

https://www.facebook.com/groups/978753388866632/posts/31796437396671494/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 34

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 34 A / முடிவுரை / 'முதன்மை இலங்கை நாளாகமம், மகாவம்சம் எப்போது ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது?'

பல்வேறு புத்த மடங்களில் [monasteries] மகாவம்சத்தின் பல பதிப்புகள் இருந்தன. ‘The Mahavansi, The Raja-Ratnacari and The Rajavali” Edited by Edward Upham, M. R. A. S., F. S. A., February 16, 1833.' என்ற தலைப்பில் ஒரு வெளியீடு இருந்தது. இந்த புத்தகம் அவரது அனுமதியுடன் அரசரின் சிறந்த மாட்சிமைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த புத்தகம், மொழிபெயர்ப்பு மற்றும் அதன் விளக்கத்தில் பல பிழைகள் காணப்பட்டது. அவற்றில், முக்கியமாக, புத்தர் இலங்கையில் பிறந்தார் மற்றும் சிவனொளிபாதம் அல்லது பாவா ஆதம் மலை [Adam's Peak] சிகரத்தில் ஒரு மடாலயத்தை கட்டினார் என்று கூறியிருப்பது ஆகும். முதல் அச்சிடப்பட்ட பதிப்பு மற்றும் பரவலாக வாசிக்கப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பு, 1837 இல் 38 அத்தியாயங்களை மொழிபெயர்த்த இலங்கை நிர்வாக சேவையின் வரலாற்றாசிரியரும் அதிகாரியுமான ஜோர்ஜ் டேனர் அல்லது ஜோர்ஜ் டர்னரின் [George Turnour / (1799–1843)] புத்தகமாகும்,

வில்ஹெம் லுட்விக் கெய்கர் அல்லது வில்லெம் கெய்கர் (Wilhelm Ludwig Geiger) (1856-1943) மகாவம்ச மொழிபெயர்ப்பானது, துட்டைகைமுனு அல்லது துட்டகாமினியின் மகன் சாலிய அல்லது சாலிராஜகுமாரனப் [Saliya or Salirajakumara ] பற்றி சுருக்கமாகக் குறிப்பிடுகிறது. 33 - 1 முதல் 3 வரையிலான மூன்று வசனங்களில், ஒரு அசாதாரண அழகான சண்டாளர் அல்லது வெட்டியான் குடும்பத்தை சேர்ந்த பெண்ணைக் காதலித்து, அவளுக்கு முன்னுரிமை அளித்து, தனது அரச பதவியைத் துறந்தார் என்று கூறுகிறது. இருப்பினும், உபாம் [Edward Upham (1776–1834)] திருத்திய பதிப்பில், கதை 207 முதல் 216 வரை ஒன்பது பக்கங்களில் கூறப்பட்டிருக்கிறது. அதுமட்டும் அல்ல, மேலும் அவரின், திருத்திய பதிப்பில் [‘The Mahavansi, The Raja-Ratnacari and The Rajavali'], மகாவன்சியில், மன்னன் மகாசேனனுடன் நின்றுவிடவில்லை. இப்பதிப்பின்படி ,கஜபாகு மன்னன் சோழ நாட்டிற்கு தனியச் சென்று, முன்பு கைதுசெய்து கொண்டு செல்லப்பட்ட தனது மக்களை மீண்டும் அழைத்து வந்தார் என்றும், அதைவிட கூடுதலாக எவரையும் கொண்டு வந்ததாக எதுவும் சொல்லவில்லை. அது மட்டும் அல்ல, 12,000 என்ற ஒரு எண்ணிக்கை ஒன்றையும் குறிப்பிடப்படவில்லை. அவர் நினைவுச் சின்னங்களையும் புத்தரின் பிச்சை பாத்திரத்தையும் [relics and the Buddha’s begging dish] கொண்டு வந்தார் என்று கூறுகிறது. அது மட்டும் அல்ல, இந்நூலில் மகாசேனனைப் பற்றிய விளக்கம் அல்லது கதை வேறாக உள்ளது. விவசாயத்தைப் பெருக்க அவர் நிறையச் செய்திருப்பதாகத் இங்கு சொல்லப்பட்டுள்ளது. மகாவம்சத்தின் பல பதிப்புகள் இருந்தன, ஒன்று மற்றொன்றிலிருந்து சிறிது அல்லது கணிசமாக வேறுபடுகிறது என்பதை இந்த கூற்று வலியுறுத்துகிறது. சர் அலெக்சாண்டர் ஜான்ஸ்டன் [ Sir Alexander Johnston] இலங்கைத் தீவு முழுவதும் தேடலில் இருந்து அசல் அல்லது மூல கையெழுத்துப் பிரதிகளைப் பெற தன்னால் முடிந்தவரை முயற்சி செய்தார். இருப்பினும், ஜோர்ஜ் டர்னர் [George Turnour] ஒரு மடாலயத்திலிருந்து ‘காலி’ [‘Galle’] என்ற புத்தர் பிக்கு மூலம் ஒரு பிரதியைப் பெற்று அதில் பணியாற்றினார். காலனித்துவ அரசாங்கம் மேலும் சிறந்த தரமான மொழிபெயர்ப்புக்கு ஏற்பாடு செய்ய விரும்பி, அதைச் செய்யுமாறு T. W. Rhys Davids ஐக் கேட்டுக் கொண்டது. அதன் விளைவாக, டாக்டர் வில்லெம் கெய்கர் [Dr. Wilhelm Geiger] மொழிபெயர்த்தார். இலங்கை அரசாங்கம் அதை 1912 இல் வெளியிட்டது.

தீபவம்சம் & மகாவம்சம் இரண்டும் முதலில் பண்டைய இந்திய மொழியான பாளி மொழியில் எழுதப்பட்டது.

மகாவம்சம் ஆங்கிலேயர் காலனித்துவ காலத்தில் 1877 ஆம் ஆண்டு சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டது, சிங்கள மொழிக்கு ஏற்றவாறு உரையில் புதுப்பிப்புகள் [Update] செய்யப்பட்டன; இந்த சிங்கள பதிப்பு பெரும்பாலும் "சூழவம்சம்" என்று குறிப்பிடப்படுகிறது. சிங்கள பௌத்த அடையாளத்தை வடிவமைப்பதில் சிங்கள மொழியாக்கம் கணிசமான பங்கைக் கொண்டிருந்தது. இந்த கதை பின்னர் 1935 மற்றும் 1978 இல் புதுப்பிக்கப்பட்டது.

தமிழ் மொழிபெயர்ப்புகளைப் பொறுத்தவரை, மகாவம்சத்தை நேரடியாக தமிழில் மொழிபெயர்த்தது ஒன்றும் அறியப்படவில்லை, ஏனெனில் சிங்கள சமூகத்திற்குள் அதன் வரலாற்று முக்கியத்துவம் காரணமாக சிங்கள பதிப்பில் முதன்மைக் கவனம் செலுத்தப்பட்டது போலத் தோன்றுகிறது.

மகாவம்சத்தின் மூல நூலாகக் தீபவம்சம் கருதப்படுகிறது. என்றாலும் மகாவம்சம் அதிலிருந்து மிகவும் வளர்ந்த மற்றும் விரிவான வரலாற்று நூலாக உள்ளது.

Part: 34 / Conclusion / 'When prime Lanka chronicle, Mahavamsa, translated in English & Sinhala?'

There were many versions of Mahavamsa in various monasteries. There was one publication in 1833 with the title ‘The Mahavansi, The Raja-Ratnacari and The Rajavali” Edited by Edward Upham, M. R. A. S., F. S. A., February 16, 1833. This book is dedicated to the King’s Excellent Majesty with his permission. but it was marked by several errors in translation and interpretation, among them suggesting that the Buddha was born in Sri Lanka and built a monastery atop Adam's Peak. The first printed edition and widely read English translation was published in 1837 by George Turnour, a historian and officer of the Ceylon Civil Service who translated 38 chapters. The Mahavamsa translation by Wilhelm Geiger briefly mentions about the son of Dutthagamani, Salirajakumara, in three verses, 33 – 1 to 3, fell in love with an extraordinary beautiful Candala woman and forsook the kingship in preference to her. However, in the version edited by Upham, the story runs into nine pages, from the page 207 to 216. Furthermore, the Mahavansi does not stop with the king Mahasena. The King Gajabahu went to the Solly country as per this edition but he went alone. He brought back his people, but does not say about the additional people. Even the number 12,000 is not mentioned. He brought the relics and the Buddha’s begging dish. The description of Mahasena is different in this book. He seemed to have done quite a lot to increase the agriculture. This is to emphasize that there were many versions of Mahavamsa, one differing from the other slightly or considerably. Sir Alexander Johnston tried his best to get the original manuscripts from an island wide search. However, George Turnour obtained a copy from one monastery through a priest called ‘Galle’ and worked on it. The colonial government found it wanting, and requested T. W. Rhys Davids to arrange for a better quality translation. Dr. Wilhelm Geiger translated it. The Ceylon Government published it in 1912.

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 34 B தொடரும் / Will follow

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 34

https://www.facebook.com/groups/978753388866632/posts/31833890602926173/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 34 B

பகுதி: 34 B / முடிவுரை / 'சிங்கள மொழி எப்போது தொடங்கியது?' [தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது]

சிங்கள மொழியானது, இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின், இந்தோ-ஆரிய மொழிப்பிரிவைச் சார்ந்த மொழியாக இன்று வகைப்படுத்தப்பட்டுள்ள மொழியாகும். சிங்கள மொழியைப் பொறுத்தவரை, அதன் பிராகிருத எழுத்துகள் கி.மு இரண்டாம் நூற்றாண்டு அளவுக்குப் பழைமையானது என்று சொல்லப்பட்டாலும், அதற்கான வலுவான ஆய்வுச் சான்றுகளைக் எங்கும் காணமுடியாதுள்ளது.

சிங்கள மொழியில் கிடைக்கப்பெற்றுள்ள மிகப் பழைமையான இலக்கியமானது ஒன்பதாம் நூற்றாண்டுக்குரியது என்று நம்பப்படுகிறது. அதற்க்கு முன் ஒன்றுமே இன்னும் அறியப்படவில்லை என்பதே உண்மை. ஆகவே, மகாவம்சத்தின், சிங்கள இனத்தின் தோற்றத்துக்கும், அறிவியல் ரீதியான மொழியின் தோற்றத்துக்கும் இடையில் பாரிய இடைவெளிகளுண்டு.

ஆகவே, கி பி 9 ஆம் நூற்றாண்டு, பிராகிருதத்திலிருந்து உருவான எலு மொழியில் இருந்து சிங்களம் ஓரளவு முழுமையாக உருவானது. இந்த எலு மொழியின் வடிவம் கி.பி 200 வரை இருந்தது. அதன் பின், 3 ஆம் நூற்றாண்டு முதல் 7 ஆம் நூற்றாண்டு வரை, இந்த மொழி தொல் - சிங்களம் [Proto-Sinhalese] என்று அறியப்பட்டது. எனவே, சிங்களத்தின் ஆரம்ப வடிவம், இந்த காலத்தில், பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்டது. இன்று நாம் காணும் சிங்கள வடிவத்தை, இந்த வடிவம் நாளடைவில் திடப்படுத்தியன என்று கூறலாம். 4 மற்றும் 8 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தொல் - சிங்கள எழுத்து வடிவம் கணிசமாக மாறியது. 7 முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை, இடைக்கால கட்டத்தில் சிங்கள மொழி மேலும் திடப்படுத்தப்பட்டது . நவீன சிங்கள மொழி 12 ஆம் நூற்றாண்டில் தொடங்கியதாக பல மொழியியலாளர்களால் கருதுகிறார்கள்.

சிங்களம் இன்று தமிழ் உட்பட பல மொழிகளிலிருந்து வார்த்தைகளை கடன் வாங்கியுள்ளது. இதன் விளைவு என்னவென்றால், சிங்களம் இந்தோ-ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்தது என்பதான ஒரு விவாதத்தின் முடிவுக்கு வழிவகுத்தது எனலாம். அது நீண்ட காலமாகத் தமிழின் தாக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. மொழியியல் ஆய்வுகளின்படி, சிங்கள சொற்களஞ்சியத்தின் கணிசமான பகுதியானது தமிழில் இருந்து பெறப்பட்டது. குறைந்தது 10% சிங்கள சொற்கள் தமிழ் தோற்றம் கொண்டவை என்று மதிப்பிடுகிறது. இது இலங்கையில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் மக்களிடையே உள்ள நெருக்கமான வரலாற்று தொடர்புகளை பிரதிபலிக்கிறது; இருப்பினும், பகுப்பாய்வு முறை மற்றும் மூலத்தைப் பொறுத்து சரியான சதவீதம் மாறுபடலாம்.

தமிழ் மொழியுடனான நெருங்கிய ஆரம்ப தொடர்பும் மற்றும் சிங்கள சமூகத்தில் தமிழர்களை சிங்களமயமாக்கியது [இணைத்துக் கொண்டது] பல தமிழ் மூலச் சொற்களை சிங்கள மொழியில் ஏற்றுக்கொள்ள உதவியது என்று எண்ணுகிறேன். இரண்டு இன அயல் மக்கள், அன்றாடம் பொருள் பண்டங்களை பரிமாறிக்கொள்ளும் சூழ்நிலையில், மொழிச் சொற்களில் கடன் வாங்குவது இயல்பாக எதிர்பார்க்கப்படுகிறது. முதலாவது உறவுச் சொற்கள், உடல் உறுப்புச் சொற்கள், மற்றும் சாதாரண நடவடிக்கைச் சொற்கள் போன்றவை கடன் வாங்கப்படுகின்றன. அப்படியே, இரண்டாவதாக, சொற்களஞ்சியம் சார்ந்த சொற்களுடன் [பெயர்ச்சொற்கள், உரிச்சொற்கள் மற்றும் வினைச்சொற்கள்], இடைச்சொற்களும் கடன் வாங்கப்பட்டுள்ளன.

சிங்கள சொற்றொடரியல் அல்லது சொல்வரிசை மீது தமிழ் ஏற்படுத்திய தாக்கம் நெருங்கிய தொடர்பை மட்டுமல்ல, அதிக எண்ணிக்கையிலான இருமொழி பேசுபவர்களின் இருப்பையும் மற்றும் அதிக அளவு இனக்களுக்கிடையான கலப்பையும் மற்றும் கலப்பு திருமணத்தையும் உண்டாக்கியிருக்கிறது எனலாம்.

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 35 தொடரும் / Will follow

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 34 B

https://www.facebook.com/groups/978753388866632/posts/31886481367667096/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 35

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 35 / பின் இணைப்பு - தீபவம்சம் / ' தீபவம்சம் என்பது இலங்கை மக்கள் அனைவரையும் பற்றிய வரலாற்றுப் பதிவா?'

தீபவம்சம் கி.பி நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து கி.பி ஐந்தாம் நூற்றாண்டின் முதல் மூன்றாம் பகுதிக்கு இடையில் தொகுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. ஏற்கனவே இருந்த ஜாதகக் கதைகள் [என்பது இந்தியாவைச் சார்ந்த புத்தரின் முற்பிறவிகளை கூறும் கதைகளின் தொகுதியாகும்.], விளக்கவுரைகள் மற்றும் பிற நியமனப் படைப்புகள் [ஒரு குறிப்பிட்ட பாரம்பரியம் அல்லது மொழிக்குள் தரம் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தின் தரமாகச் செயல்படும், அத்தியாவசியமான மற்றும் செல்வாக்குமிக்கதாகக் கருதப்படும் படைப்புகளின் தொகுப்பு அல்லது உண்மையானதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட புனித புத்தகங்களின் தொகுப்பு] தீபவம்சத்தின் தொகுப்பிற்கு அடிப்படையாக அமைந்தன என்று மொழிபெயர்ப்பின் அறிமுகப் பக்கங்களில் கூறப்பட்டுள்ளது. தீபவம்சம் தொகுக்கப்பட்ட பின், சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஊகம், அதாவது ஒரு சாத்தியமாக, மொழிபெயர்ப்பாளரால் முன்மொழியப்பட்டது என்பதால், இந்த அனுமானத்தின் உண்மைத்தன்மையை அல்லது நம்பகத்தன்மையை நாம் இங்கு அலசவில்லை. தீபவம்சத்தின் உள்ளடக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தப்படும். 1879 இல் ஹெர்மன் ஓல்டென்பர்க் (Hermann Oldenberg) (1854 - 1920) மொழிபெயர்த்த தீபவம்சத்தின் பிரதியை அடிப்படையாகக் கொண்டு இந்த பகுப்பாய்வு செய்யப்படும். "தீபவம்சம் - ஒரு பண்டைய புத்த வரலாற்றுப் பதிவு" [“The Dipavamsa - An Ancient Buddhist Historical Record”] என்ற தலைப்பில் இந்த புத்தகம் உள்ளது. மொழிபெயர்ப்பாளர் ஹெர்மன் ஓல்டென்பர்க்கின் கருத்துப்படி, இது ஒரு பண்டைய பௌத்த வரலாற்றுப் பதிவு ஆகும். அப்படி என்றால், இது முழு இலங்கை மக்களின் வரலாற்றுப் பதிவாக இருக்க முடியாது என்பது தெளிவாகிறது. மொழிபெயர்ப்பாளர் ஹெர்மன் ஓல்டென்பர்க் பயன்படுத்திய நம்பகமான பிரதிகள் முக்கியமாக பர்மாவைச் சேர்ந்தவை. என்றாலும் அவர் இலங்கை மற்றும் பிற இடங்களில் இருந்து பெற்ற தரம் குறைந்த நகல்களையும் பயன்படுத்தினார். இது தொடர்பாக தீபவம்ச மொழிபெயர்ப்பின் 10 முதல் 11 வரையிலான அறிமுகப் பக்கங்களைப் பார்க்கவும். மொழிபெயர்ப்பாளர், ஹெர்மன் ஓல்டென்பர்க், ஒரு ஜெர்மன், பாளி மற்றும் பௌத்த அறிஞர் ஆவார்.

எனவே, மற்ற ஆங்கிலேய அரசு ஊழியர்களைப் போல அவருக்கு காலனித்துவ ஆர்வம் இருக்காது. உதாரணமாக, தீபவம்சம் 1-1 ; "புத்தர் தீவுக்கு வந்த வரலாறு, நினைவுச்சின்னம் மற்றும் போதி மரத்தின் வருகை, மறுபரிசீலனை செய்த ஆசிரியர்களின் கோட்பாடு, தீவில் நம்பிக்கையைப் பரப்புதல், மனிதர்களின் தலைவரின் வருகை ஆகியவற்றின் வரலாற்றை நான் முன்வைப்பேன்." என்று கூறுகிறது. இவை அனைத்தும் முதல் ஒன்பது அத்தியாயங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும் சில அறிஞர்கள் மீதமுள்ள அத்தியாயங்களை பின்னர் சேர்த்ததாக கருதுகின்றனர்.

தீபவம்சம் மேற்கூறிய தலைப்புகளில் மட்டுமே முதன்மையாக கவனம் செலுத்துவதால், பண்டைய இலங்கையின் அனைத்து மக்களின் விரிவான வரலாறு அல்ல என்று நான் நம்புகிறேன். மாறாக, பெரும்பாலும் அனுராதபுரத்தில் உள்ள மகாவிகாரத்தில் இருந்து, இது புத்த துறவிகளால் எழுதப்பட்ட ஒரு மத நாளேடாகும். இது பெரும்பாலும் பின்வருவனவற்றைத் தவிர்த்துள்ளது என்பதையும் நினைவில் கொள்க:

'தீவின் புத்த மதத்திற்கு முந்தைய வரலாறு, பூர்வீக பழங்குடியினர் (இயக்கர்கள் மற்றும் நாகர்கள் போன்றவை) உட்பட பௌத்தம் அல்லாத சமூகங்களின் வரலாறு, மற்றும் இலங்கையில் இருந்த தமிழ் பேசும் குழுக்கள் அல்லது பிற இனங்கள், துறவறம் அல்லது அரச பௌத்த சூழலுடன் தொடர்பில்லாத சமூக-பொருளாதார, மொழியியல் அல்லது கலாச்சார விவரங்கள் போன்றவை.' ஆகும்.

எனவே, தீபவம்சம் இலங்கையின் முழு மக்களின் வரலாற்றுப் பதிவு அல்ல. இது ஒரு பிரிவுவாத பௌத்த நாளேடாகும், இது மத மற்றும் கோட்பாட்டு நலன்களுக்கு சேவை செய்ய வரலாற்றைத் தேர்ந்தெடுத்து வழங்குகிறது - முக்கியமாக தேரவாத பௌத்த மரபு மற்றும் அதை ஆதரித்த சிங்கள பௌத்த முடியாட்சிகளில் கூடுதலான கவனம் செலுத்துகிறது.

உதாரணமாக, தீபவம்ச மொழிபெயர்ப்பின் அறிமுகப் பக்கம் 11 இல்:

தீபவம்சம் நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்திற்கும் ஐந்தாம் நூற்றாண்டின் முதல் மூன்றாம் பகுதிக்கும் இடையில் எழுதப்பட்டது. மகாவம்சம் இயற்றப்பட்ட சரியான தேதி இன்னும் நமக்குத் தெரியாது. ஆனால் இரண்டு படைப்புகளும் எழுதப்பட்ட மொழி மற்றும் பாணியை ஒப்பிட்டுப் பார்த்தால், தீபவம்சம் முதலில் எழுதப்பட்டது என்பதில் எந்த சந்தேகமும் இருக்காது. மகாநாம தேரர் தனது முன்னோடிகளின் படைப்புகளை விவரிக்கும் வார்த்தைகள் இதை உறுதிப்படுத்துகின்றன என்றும் தீபவம்சத்தின் உரையைத் தொகுப்பாக்கம் செய்யும்பொழுது, பர்மிய எழுத்துக்களில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகளை பாவித்தேன் என்றும் ஹெர்மன் ஓல்டென்பர்க் கூறியிருப்பதைக் தெளிவாகக் கவனிக்கலாம்.

Part: 35 / Appendix – Dipavamsa / 'Is the Dipavamsa a historical record of the entire people of Ceylon?'

Dipavamsa is believed to be compiled between the beginning of the fourth century A.D. and the first third of the fifth century A. D. It is claimed in the introductory pages of the translation that the already existed Jathakas, commentaries and the other canonical works formed the basis for the compilation of the Dipavamsa. We would not go into the veracity of this conjecture as this guess was made by the translator about one thousand five hundred years after the compilation of the Dipavamsa. The focus will only be on the content of the Dipavamsa.

The analysis is based on the copy of the Dipavamsa translated by Hermann Oldenberg in 1879 with the title “The Dipavamsa - An Ancient Buddhist Historical Record”. As per the translator, Hermann Oldenburg, this is an ancient Buddhist historical record. It cannot, therefore, be the historical record of the entire people of Ceylon. The trustworthy copies used by the translator, Hermann Oldenberg, were mainly from Burma though he used copies of lesser quality from Ceylon and other places. See the introductory pages 10 to 11 of the Dipavamsa translation in this regard. The translator, Hermann Oldenburg, was a German, and Pali and Buddhist scholar. He might not, therefore, have any colonial interest unlike the other English Civil Servants.

Reference to a particular verse in a particular chapter is given by two numbers separated by a hyphen, such as 2-7. The number combination 2-7 references the verse seven of the chapter two. When a reference is made thus 4-36 to 39, it refers to the verses thirty six to thirty nine of the chapter four. Thus Dipavamsa 1-1 refers the verse one of the chapter one of the Dipavamsa;” I will set forth the history of Buddha’s coming to the Island, of the arrival of the relic and the Bo, of the doctrine of the teachers who made the recensions, of the propagation of the faith in the Island, of the arrival of the chief of men”. All these are covered in the first nine chapters, and, some scholars consider the rest of the chapters are later additions.

[ As It focuses primarily on the above titles only, I belief that the Dipavamsa (circa 3rd–4th century CE) is not a comprehensive history of all the peoples of ancient Ceylon (Sri Lanka). Rather, it is a religious chronicle written by Buddhist monks, most likely at the Mahavihara in Anuradhapura. Please note that It largely omits: The pre-Buddhist history of the island, The history of non-Buddhist communities, including indigenous tribes (like the Yakkhas and Nagas), and Tamil-speaking groups or other ethnicities who existed in srilanka, Socio-economic, linguistic, or cultural details unrelated to the monastic or royal Buddhist context etc. Therefore, the Dipavamsa is not a historical record of the entire people of Ceylon. It is a sectarian Buddhist chronicle that selectively presents history to serve religious and doctrinal interests — mainly those of the Theravāda Buddhist tradition and the Sinhalese Buddhist monarchy that supported it. - By Kandiah Thillaivinayagalingam]

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 36 தொடரும் / Will follow

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 35

https://www.facebook.com/groups/978753388866632/posts/31930767686571797/?

Edited by kandiah Thillaivinayagalingam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 36

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 36 / பின் இணைப்பு - தீபவம்சம் / தீபவம்சம் முழு தீவுக்கான விளக்கமா?

தீபவம்சம் முதலில் பாளி மூலமும், பின்னர் அதன் ஆங்கில மொழி பெயர்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆங்கில மொழிபெயர்பு பகுதி பக்கம் 117 முதல் பக்கம் 221 வரை சுமார் 105 பக்கங்களைக் கொண்டுள்ளது. இதில், முதல் எட்டு அத்தியாயங்கள் சுமார் 43 பக்கங்களை கொண்டு உள்ளது. என்றாலும் அதில், இலங்கை வரலாறோ, அல்லது இலங்கை மனித குடிமக்களையோ அல்லது இலங்கையில் நடந்த நிகழ்வுகளோ அல்லது இலங்கை மன்னர்களையோ அல்லது அவர்களின் ஆட்சிகள் பற்றியோ அல்ல என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் அத்தியாயம் 9, சுமார் 3 பக்கங்கள், இலங்கையில் நடைபெறாத, விஜயனின் தகுதியற்ற தீய குணங்கள் மற்றும் அவரது தீய செயல்கள் பற்றிக் கூறுகிறது. அதனால், அவரின் தந்தையால், படகில் ஏற்றி, தண்டனையாக, கடலில் எங்கேயாவது போய் தொலைந்து போக, மிதக்க விட்டதையும் மற்றும் காற்றுடன் பயணித்து முடிவில், விஜயன் தோழர்களுடன் இலங்கைக்கு வந்ததைப் பற்றியும் கூறுகிறது. அத்தியாயங்கள் 10 ம் 11 ம், பக்கம் 163 முதல் 167 வரை அடங்குகிறது. இது இலங்கையைப் பற்றியது என்றாலும் முழுமையாக அப்படி இல்லை. அத்துடன் இந்த அத்தியாயங்கள் இரண்டும் மிகவும் சிறியவை, மொத்தம் 5 பக்கங்கள் கூட இல்லை; அதில், 3 பக்கங்கள் மட்டுமே இலங்கையைப் பற்றியது. அத்தியாயம் 12 மகிந்த தேரரைப் பற்றியது, என்றாலும் இதுவும் இலங்கையில் நடந்த நம்பகமான வரலாற்று நிகழ்வுகள் பற்றி அல்ல. மகிந்த தேரர், 12- 16, இலங்கையை (பௌத்த மதத்திற்கு) மாற்றுவதற்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமையுமா என்று யோசித்துக் கொண்டிருந்தார் என்றும், மகிந்த தேரர் இன்னும் இந்தியாவில் இருந்தார் என்றும், எனவே தீவு இன்னும் பௌத்தத்திற்கு மாற்றப்படவில்லை என்பது வெளிப்டையாகத் தெரிகிறது. அதாவது விஜயன் மற்றும் அவரது உதவியாளர்கள், ஊழியர்கள் வந்ததாகக் கூறப்படும் நாளில் இருந்து, சுமார் இருநூற்று முப்பத்தாறு ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் இலங்கை புத்தசமயத்துக்கு மாற்றப்படவில்லை. அது மட்டும் அல்ல, புத்தர் ஐந்நூறு தேரர்களுடன் 2-53 இல் தனது மூன்றாவது வருகையாகவும் இலங்கைக்குப் பறந்தார் எனினும் அவர் தனது மூன்று பயணங்களிலும் தனது பிரசங்கங்களை முறையாக இலங்கை வாழ் மக்களிடம் அறிமுகப்படுத்தவில்லை அல்லது சரியாகப் போதிக்கவில்லை என்றும் தெரிகிறது! மொத்தத்தில், 28 பக்கங்களைக் கொண்ட அத்தியாயம் 12 முதல் அத்தியாயம் 16 வரை, இலங்கையில் நடந்த உண்மையான மனித வரலாற்று நிகழ்வுகளைப் பற்றியது அல்ல. அத்தியாயம் 17 முதல் அத்தியாயம் 22 வரையிலான கடைசி ஆறு அத்தியாயங்கள் மட்டுமே, இலங்கைப் பற்றியது. இது 27 பக்கங்களை மட்டுமே கொண்டது ஆகும்.

எனவே, தீபவம்சத்தின் மூன்றில் ஒரு பகுதியே, இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித வரலாற்று நிகழ்வுகளைப் பற்றி பேசுகிறது எனலாம். 1-18 ;”அழகான தட்பவெப்பநிலை கொண்டும், வளமான பூமியாகவும், புதையல் சுரங்கங்களை தன்னகத்தே கொண்ட ஒரு நேர்த்தியான நாடு...” என வர்ணிப்பதில் இருந்து, நாம் இலகுவாக விளங்கிக் கொள்வது என்னவென்றால், அழகிய காலநிலை என்பது மத்திய மலை நாட்டையும், வளமான பூமி என்பது அதிக மழைப்பொழிவு பகுதியையும், மற்றும் புதையல் சுரங்கம் என்பது இரத்தினபுரியையும் கூறுவது போலத் தோன்றுகிறது. எனவே, மேற்கூறிய விளக்கங்களைக் கருத்தில் கொண்டு, கீழே உள்ள வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளபடி, அநுராதபுரத்திற்கு தெற்கே, தீவின் கீழ் பாதியை மட்டுமே காட்டியுள்ளது போன்று உணரலாம். எனவே, இது முழு தீவுக்கான விளக்கம் அல்ல என்று நம்புகிறேன்.

17-1 : "முப்பத்திரண்டு யோஜனை நீளமும் பதினெட்டு யோஜனை அகலமும் கொண்ட சிறந்த இலங்கை தீவு என்றும், அதன் சுற்று நூறு யோஜனைகள் என்றும் ." கூறுகிறது. [1-2. The excellent island of Laṅkā is thirty-two yojanas long, eighteen yojanas broad, its circuit is one hundred yojanas; it is surrounded by the sea, and one great mine of treasures. It possesses rivers and lakes, mountains and forests.] மேலே உள்ள விளக்கம், செவ்வக வடிவ நாட்டிற்கானது மற்றும் மாம்பழ வடிவ நாட்டிற்கானது அல்ல என்பது மிகத் தெளிவு புரிகிறது. தீபவம்சத்தை எழுதியவர்களுக்கு அனுராதபுரத்திற்கு வடக்கே குறுகலான நிலப்பரப்பு ஒன்று இருப்பது பற்றிய எந்த எண்ணமும் இருந்ததாகத் தெரியவில்லை. அனுராதபுரத்திற்கு வடக்கே உள்ள நிலங்களும், மகாவலிகங்கைக்கு கிழக்கே உள்ள நிலங்களும் இந்த விளக்கத்தில் காணாமல் போய்விட்டன. அனுராதபுரத்திற்கு தெற்கே உள்ள நிலப்பகுதியை மட்டுமே இது குறிப்பிடுவது, இந்த பகுதியின் வடிவம் ஓரளவு செவ்வக வடிவம் என்று கூறுவதில் இருந்து புலப்படுகிறது.

Part: 36 / Appendix – Dipavamsa / 'Is Dipavamsa the description for the entire island?'

The Pali original is given first in the book, and then the English translation. The portion of the English translation runs from the page 117 to the page 221, approximately about 105 pages. The first eight chapters are about 43 pages, and are not about historical or human inhabitants or events that took place in Lanka or about the kings of Lanka or their reigns. The Chapter 9, about 3 pages, is about the unworthy evil characters of Vijaya and his evil deeds that took place not in Lanka, condemned to drift in sea, and his arrival in Ceylon with others at the end of their drift. Chapters 10 to 11, run from the page 163 to 167, are about Lanka, but not fully about Lanka, and these chapters are very short, not even 5 pages in total; only 3 pages are about Lanka. The chapter 12 is mostly about Mahinda Thera, and not about any trustworthy historical events that took place in Lanka. Mahinda Thera was considering, 12- 16, whether the time would be favourable or unfavourable for the conversion of Lanka (to the Buddhist faith). Mahinda Thera was still in India and the Island was therefore not converted yet to the Buddhism, about two hundred and thirty six years after the alleged arrival of Vijaya and his attendants and servants. The Buddha flew to Lanka on his alleged third visit, 2-53, along with five hundred Theras, but it seems that he did not introduce his sermons then! All in all, chapter 12 to chapter 16, consisting of 28 pages, are not about the true human historical events that took place in Lanka. The last six chapters, from the chapter 17 to the chapter 22, are about Lanka and consist of 27 pages. Therefore only less than one third of the Dipavamsa speaks about human historical events that allegedly took place in Lanka. 1-18 reads;”an exquisite country, endowed with beautiful climate, fertile, a mine of treasure...” Considering above descriptions such as beautiful climate (central hilly country), fertile (high rainfall area), and mine of treasure (Ratnapura), the reference is for the lower half of the island, south of Anuradhapura, as shown in the map below. It is not the description for the entire island.

17-1 reads;”The excellent island of Lanka thirty two Yojanas long and eighteen Yojanas wide, its circuit is one hundred Yojanas.” The above description is for a rectangular shape country and not for a mango shaped country. Those who wrote the Dipavamsa never had the idea of the land north of Anuradhapura with a narrowing landscape. The lands north of Anuradhapura and lands to the east of Mahaweliganga are not part of this description. The reference is only to the land south of Anuradhapura, and the shape of this area is somewhat rectangular.

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 37 தொடரும் / Will follow

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 36

https://www.facebook.com/groups/978753388866632/posts/31958835430431689/?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.