Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சதிகாரச் சக்கரவர்த்திகளின் சன் குழும சாம்ராஜ்யம்!

-சாவித்திரி கண்ணன்

106.jpg

ஆருயிராய் நினைத்த அண்ணன் தன்னையே வேரறுப்பான் என தயாநிதிமாறன் நினைக்கவில்லை. ஆனால், இந்த இரு சகோதரர்களும் தமிழகம் மட்டுமின்றி, இந்திய காட்சி ஊடகத்துறையில் கருவறுத்தவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. அந்த சாம்ராஜ்யத்தின் அடித்தளத்தில் புதைந்திருக்கும் எலும்புக் கூடுகளும் எண்ணற்றவை;

எத்தனையெத்தனையோ நிறுவனங்கள், கலைஞர்கள், தொழில் முகவர்கள், ஊழியர்கள், அரசு அதிகாரிகளின் பேரழிவிலே கட்டி எழுப்பப்பட்ட சாம்ராஜ்யம் தான் சன் குழுமம்!

அரசியல் அதிகார பலத்துடன் ஒரு ஆக்டோபஸ் மிருகத்தைப் போல, அடங்காப் பசியுடன் போட்டியாளர்களை அழித்தொழித்து விழுங்கி ஏப்பம் விட்ட நிறுவனம் தான் சன் குழுமம். அண்ணனும், தம்பியும் கைக் கோர்த்து ஆடிய அதிகார ஆட்டங்களை பல வால்யூம்களாக எழுதலாம். இன்று அவர்களுக்குள்ளேயே மோதல் ஏற்பட்டுள்ளது. அண்ணனை தொழில் சாம்ராஜ்ய சக்கரவர்த்தியாக்க தம்பி செய்த தகிடுதத்தங்கள் ஏராளம். அதே போல தம்பியை அரசியலில் முன்னினைபடுத்த அண்ணன் செய்த ஊடக நரித்தங்கள் சொல்லில் அடங்காதவை. இதுவே கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரகள் குடும்பமும் பிரியக் காரணமானது. ஆனால், விரைவில் ஒன்று பட்டனர். இந்த காலகட்டத்தில் நான் எழுதிய நூல் தான் சன் குழுமச் சதிகளும், திமுகவின் திசை மாற்றமும்.

20250621_104132.jpg

இவர்கள் துளிர்விட ஆரம்பித்த காலம் தொடங்கி தொடர்ந்து அணுக்கமாக அவதானித்து வருகிறேன் நான்!

1989 ஆம் ஆண்டு வாக்கில் குங்குமம் வார இதழில் நான் ஒரு சுயாதீனப் பத்திரிகையாளனாக கட்டுரைகள், புகைப்படங்கள் தந்து கொண்டிருந்த காலகட்டத்தில் கலாநிதியும், தயாநிதியும் பூமாலை என்ற வீடியோ கேசட் கொண்டு வந்தனர். அதில் குங்குமம், வண்ணத்திரை, முத்தாரம் போன்றவற்றில் வேலை பார்த்த பத்திரிக்கையாளர்களையே ஊதியம் தராமல் பயன்படுத்திக் கொண்டனர். 1990-ல் கலைஞர் ஆட்சிக்கு வந்த போது வீடியோ கேசட் கடைகளை மிரட்டி விற்பனை செய்ய வைத்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன.

1989-ல் வி.பி.சிங் அமைச்சரவையில் முரசொலிமாறன் நகர்புற அமைச்சராகப் பதவி பெற்ற வாய்ப்பில் ஏற்பட்ட தொழில் அதிபர்கள் தொடர்புகளால் தன்னை வளப்படுத்திக் கொண்டார்.

12796007_291_12796007_1629183649107.png

1992- அக்டோபரில் இந்தியாவின் முதன்முதல் சேட்டிலைட் சேனலாக ZEE  தொலைகாட்சி வந்தது. உடனே தன் மகன்களுக்கு காட்சி ஊடகத்தில் இருக்கும் ஆர்வத்தை அறிந்திருந்த மாறன் ஏப்ரல் 14 1993-ல் சன் குழுமத்தை ஆரம்பித்தார்.

திமுக கழகத்தின் நிதியைத் தந்து, அதுவும் போதவில்லை என மந்தைவெளி சிட்டி யூனியன் வங்கியில் கட்சி சொத்தை அடமானம் வைத்து வாங்கப்பட்ட நிதியில் ஆரம்பிக்கப்பட்டது தான் சன் தொலைக்காட்சி.

அவர் தான் சேர்மன் தயாளு அம்மாள், மல்லிகா மாறன் இருவரும் பெயருக்கு இயக்குனர்கள். கலாநிதி, தயாநிதி, ஸ்டாலின் மூவரும் பங்குதாரர்கள். இது தான் தொடக்கம். ஆனால், இன்றைக்கு சுமார் 98 சதவிகித பங்குகளை தன் வசம் வைத்திருக்கிறார் கலாநிதி எனச் சொல்லப்படுகிறது. இதன் மதிப்பு லட்சம் கோடிக்கும் அதிகமாகும்.

முரசொலி அலுவலகத்தையே முதலில் பயன்படுத்தியதும், பிறகு அறிவாலயத்திற்கு எதிர் வாடையில் உள்ள சென்சூரி பிளாசாவில் 2000 சதுர அடிக்கு வாடகையில் இருந்து அதையும் தரமுடியாமல் அறிவாலயத்திற்கே வந்ததும், ஒவ்வொரு நிகழ்ச்சி தயாரிப்பாளர்களிடமும் ரூபாய் ஐயாயிரம் என்றாலும், பத்தாயிரம் என்றாலும் தொடர்ந்து பல முறை தானே போனில் நச்சரித்து பேசி வாங்கிய கலாநிதியின் பொருளாதார நெருக்கடிகளும் அவருக்கு மறந்து போயிருக்கலாம்.

2000 ஆம் ஆண்டு சுமங்கலி கேபிள் விஷனை தயாநிதி மாறன் தான் தொடங்கினார். அப்போது தமிழகம் முழுமையும் 30,000 கேபிள் ஆப்ரேட்டர்கள் இருந்தனர். இவர்களில் ஆயிரத்திற்கு  மேற்பட்டோர் லோக்கல் சேனல் நடத்தி வந்தனர். சுமார் 200 பேராவது எம்.எஸ்.ஓ நடத்திக் கொண்டிருந்தனர். இதில் பலர் தொழிலைவிட்டே விரட்டி அடிக்கப்பட்டனர். சிலர் நடுத்தெருவிற்கு வந்தனர்,. ஒரு சிலர் தற்கொலை செய்து கொண்டனர். அங்குமிங்கும் சில கொலைச் சம்பவங்களும் அரங்கேறின. சரண்டரானவர்கள் மட்டுமே தப்பித்தனர். மத்தியி பாஜகவுடன் கூட்டணி ஆட்சி, மாநிலத்தில் கலைஞர் ஆட்சி, மாநகராட்சியில் ஸ்டாலின் மேயர். கருணாநிதி குடும்ப அதிகாரம் கோலோச்சிய காலம் அது.

unnamed.jpg

சென்னையில் சிட்டி கேபிள், ஹாத்வே, ஏ.எம்.என் போன்றவர்கள் கேபிள் நெட்வொர்க்கில் இருந்தனர். இவர்கள் கேபிள் வயர்களை இரவோடு இரவாக மாநகராட்சி ஊழியர்களைக் கொண்டு அறுத்து எறிந்தவர் தயாநிதி. அவரே களத்தில் இறங்கி ஒரு பேட்டை ரவுடி போல செயல்பட்ட காலகட்டங்கள் அவை.

இதே போல 2004 ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி ஆட்சியிலே தயாநிதி தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது அப்போது தமிழில் சேனல் தொடங்க விண்ணப்பித்து இருந்த 60 நிறுவனங்களுக்கு அனுமதி மறுத்தார். 2007 ஆண்டு மாறன் சகோதர்களுக்கும், மு.க அழகிரிக்குமான மோதலில் மதுரை தினகரன் அலுவலகம் பற்றி எரிந்தது. மாறன் சகோதரர்களுக்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் ஏற்பட்ட பகையில் தயாநிதி மத்திய அமைச்சர் பதவி இழந்தார்.

அப்போது தான் சுமங்கலி கேபிள் விஷனின் கொட்டத்தை ஒடுக்க அரசு கேபிளை தொடங்குகிறார் கலைஞர்.  நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி அஞ்சா நெஞ்சரான உமாசங்கர் அதன் இயக்குனராகிறார். அவர் மிக கடுமையாக உழைத்து அரசு கேபிளை நிலை நிறுத்தும் போது, சுமங்கிலியின் அட்ராசிட்டிகளை அடக்குகிறார். இதனால் பயந்து போன மாறன் சகோதர்கள் கலைஞரோடு சமாதானமாகிறார்கள். அத்துடன் அரசு கேபிளை அம்போவென விட்டுவிடுகிறார். உமா சங்கர் ஐ.ஏ.எஸ் பழிவாங்கப்படுகிறார். குடும்பம் ஒன்று சேர்ந்தவுடன் பொது நன்மைக்கு உழைத்த அதிகாரி அவமானப்படுத்தப்படுகிறார்.

20250621_120058.jpg

இந்த சன் குழும சதிக் கூட்டத்தின் அதிகார ஆட்டத்தை அடி முதல் நுனி வரை விவரித்து நான் இரண்டு நூல்கள் எழுதியுள்ளேன். முதலாவது 2007 ஆம் ஆண்டு எழுதிய சன் குழுமச் சதிகளும், திமுகவின் திசை மாற்றமும். அடுத்து 2013 –ல் கொண்டு வந்த கேபிள் தொழிலும், அரசியல் சதிகளும். இவற்றை மிக விரைவில் கிண்டிலில் வெளியிட உள்ளேன்.

இன்றைக்கு என்ன நிலைமை?  இந்தியாவின் பல மொழிகளில் 30 க்கு மேற்பட்ட சேனல்களுக்கு அதிபர். எம்.எம் வானொலிகள், ஐ.பி.எல் கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணியின் உரிமையாளர், இன்னும் பல பிசினஸ்கள்..எல்லாவற்றிலும் தம்பியைத் தவிர்த்துவிட்டு தன்னை மட்டுமே முன்னிறுத்திக் கொண்டார். சுமங்கலி கேபிள் விஷனையும் அவரே எடுத்துக் கொண்டார். நிறுவனங்களின் 98 சதவிகித பங்குகளை கலாநிதியே வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

29693246474_be67fc9929_b.jpg

தம்பியை அரசியலில் நீ சம்பாதித்துக் கொள். தொழில் சம்பாத்தியம் அனைத்தும் எனக்கே என முடிவு செய்துவிட்டார் போலும். அரசியலில் இருக்கும் போது கூட அண்ணனுக்கு அடியாள் வேலை மட்டுமே பார்த்தவர் தான் தயாநிதி. பல உயர் நிறுவனங்களில் அண்ணனை பங்குதாராக்க நிர்பந்தம் கொடுத்தார். ரத்தன் டாட்டா அவர்கள் இந்த மிரட்டல் எல்லாம் என்னிடம் வேண்டாம் என மூஞ்சிக்கு நேராக சொல்லி அனுப்பிவிட்டார். இல்லாவிட்டால் டாட்டாவையே மொட்டை அடித்து தெருவில் நிற்க வைத்திருப்பார்கள். ஆட்சி மாற்றங்களும், காட்சி மாற்றங்களும் நடந்தன.

திமுக குடும்பத்தில் இன்றைக்கு மிகவும் சக்தி வாய்ந்தவராக சபரீசன் வந்துவிட்டார். கலாநிதி மாறனே கதிகலங்கி போய் அவரோடு கைகுலுக்கி தன்னை தற்காத்துக் கொண்டார். தயாநிதியோ அரசியலில் புதிதாக உள்ளே நுழைந்த சோட்டா பாயான உதயநிதிக்கு கீழ் படிந்து நடக்க வேண்டிய நிலையில் உள்ளார். அரசியலில் தனக்கான எதிர்காலம் குறித்து அவருக்கு அச்சம் இருக்கிறது. எல்லாமே அண்ணன் என இருந்துவிட்டதால் அண்ணன் பார்த்து செய்வார் என தனக்கான சேனல் என்பதாக தன் மகனைக் கொண்டு கரண் தொலைகாட்சி தொடங்க முயன்றார்.

தன்னைத் தவிர யாருமே வளர்வதை அறவே விரும்பாத இயல்பு  கொண்டவரான கலாநிதி தம்பியை வளரவிடுவாரா? நான்கைந்து வருட காத்திருப்புக்கு பிறகும் தயாநிதியால் தனக்கென ஒரு சேனலை சாத்தியப்படுத்த முடியவில்லை. தன் மகனுக்கு சன் குழுமத்தில் ஒரு முக்கிய பொறுப்பையும் பெற்றுத் தர முடியவில்லை. கலாநிதியின் மனைவியும் மகளுமே அங்கு ஆதிக்கம் செலுத்த முடிகிறது.

இந்தச் சூழலில் தான் 22 வருடங்களாக மனதில் பொத்தி வைத்த கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் தயாநிதி. ஆனால், பாட்டி தயாளு அம்மாள், அம்மா மல்லிகா மாறன் ஆகியோரையே நிராகரித்து தன்னை மட்டுமே மையப்படுத்திக் கொண்ட கலாநிதி, தன் இயல்புக்கு ஏற்ப தம்பியை நிராகரித்துள்ளார். ஸ்டாலின் பேசியும் கலாநிதி ஒத்து வரவில்லை. தம்பிக்கு ஒரு நியாயமான பங்கை தர இசைவு தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் தயாநிதியின் வக்கில் நோட்டீஸ் அண்ணன் கலாநிதியை கலவரப்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தையடுத்து சன் குழுமத்தில் அமலாக்கத் துறை, வருமானவரித்துறை உள்ளிட்ட பல அரசு அமைப்புகள் மூக்கை நுழைக்கும் சந்தர்ப்பம் கனிந்துள்ளது.

அட்டூழியக்காரர்கள் தங்கள் அழிவை தாங்களே வலிந்து உருவாக்கி கொண்டு அழிவர் என்பது நம் முன்னோர்கள் வாக்கு. அந்த வகையில் பற்பலரின் பேரழிவுக்கு காரணமான சன் குழுமத்தினரின் சங்கதியும் ஒரு முடிவுக்கு வருமா? அல்லது சமாதானமாகிக் கொண்டு ஒன்றிணைந்துவிடுவார்களா/ என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சாவித்திரி கண்ணன்

https://aramonline.in/21935/kalanidhi-vs-thadhayanidhi/

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

சன் தொலைக்காட்சியின் ஆரம்பகால திருவிளையாடல்களை… விரிவான கட்டுரை மூலம் தந்த இணைப்பிற்கு நன்றி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.