Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதைச் சொல்ல?

sudumanal

இஸ்ரேல்- ஈரான்

iran.jpeg?w=288

கடந்த 13 ம் தேதி முதன்முதலில் இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதலை இஸ்ரேல் தனித்து எடுத்த முடிவு போல ஊடகங்கள் சித்தரித்திருந்தன. அமெரிக்காவுக்கு தெரியாமல் இஸ்ரேலின் எந்த அணுவும் நகராது என்ற உண்மையை அவைகள் செய்திகளுள் புதைத்து விட்டன. இத் தாக்குதலின் மையப் பாத்திரத்தை அமெரிக்காவே வகித்தது என அரசியல் அறிஞரான ஜெப்ரி ஸாக்ஸ் உட்பட்ட புத்திஜீவிகள் சொல்கிறார்கள். இத் தாக்குதலுக்கு ஒருசில நாட்களுக்கு முன்னரே அமெரிக்கா 300 ஏவுகணைகளை இஸ்ரேலுக்கு கொடுத்திருந்தது என “வோல் ஸ்றீற் ஜேர்ணல்” செய்தி வெளியிட்டிருந்தது. உக்ரைனுக்கு தருவதாக பைடன் காலத்தில் ஒப்புக்கொண்ட 20000 ட்ரோன்களை ஒருசில வாரங்களுக்கு முன்னர் ட்றம்ப் மத்திய கிழக்குக்கு மடைமாற்றிவிட்டதாக செய்திகள் வந்திருந்தன. அது எங்கே போனது என்ற விபரம் இதுவரை தெரியாது.

இஸ்ரேலிய தாக்குதல் தொடங்கப்படுவதற்கு முன்னரே அமெரிக்க ஜெட் போர் விமானங்கள், கடற்படை போர்க் கருவிகள், தரைப்படையின் விமான எதிர்ப்பு கருவிகள் எல்லாமே தயார் நிலையில் வைக்கப்பட்டதாக செய்திகள் வெளிவருகின்றன.

ஈரானின் எல்லைக்குள்ளேயே மொசாட் இரகசியமாக ட்ரோன்களை இயக்கும் நிலையமொன்றை உருவாக்கி வைத்திருந்தது என்பதும், அது சம்பந்தமாக 20 க்கு மேற்பட்டோர் கைதானது என்பதும் ஈரான் மீதான விமானத் தாக்குதல் நடந்த பின்னர் ஊடகங்களில் வெளிவந்த செய்திகள். உலகுக்கு மட்டுமல்ல ஈரானுக்குக் கூட இந்த சதி அரங்கேற்றம் அதிர்ச்சியான செய்தியாக அமைந்திருந்தது. ஈரானின் விமான எதிர்ப்பு தளபாடங்களை செயலிழக்கச் செய்யும் வேலையை செய்யவும், முக்கியமான தலைவர்கள் இருந்த இடத்தை அறியவும் இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதாவது இஸ்ரேலின் விமானத் தாக்குதலை துல்லியமாக செய்து முடிக்க இத் தொழில்நுட்பம் பாவிக்கப்பட்டிருக்கிறது.

சில வாரங்களுக்கு முன் ரசிய எல்லைக்குள் ஆழ ஊடுருவி ரசிய விமானத் தரிப்புகளில் வைத்து அவற்றை அழித்தொழிக்க இதேவகை திட்டமே செயற்படுத்தப்பட்டது. சுமார் ஒன்றரை வருட காலமாக இத் திட்டமிடல் நடத்தப்பட்டது என செலன்ஸ்கி குறிப்பிட்டிருந்தார். இதில் உக்ரைன் உளவுப்படை மட்டுமல்ல, பிரித்தானிய உளவுப்படையும் (எம்-16) சம்பந்தப்பட்டதாக ரசியா குற்றஞ் சாட்டியிருந்தது. சிஐஏ உம் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற ஊகங்களும் வெளிவந்திருந்தன. இவற்றை வைத்துப் பார்க்கும்போது, பிரதியெடுத்தது போன்ற இந் நிகழ்வில் ஈரானிலும் சிஜஏ யும் மொசாட் உம் சேர்ந்து செயற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

இத் தாக்குதல் தொடங்கப்பட்டதன் நோக்கம் என்ன?. ஈரானின் அணுச்சக்தி தளங்களை அழிப்பது, அதன் மூலம் இஸ்ரேலின் பாதுகாப்பை, பிராந்தியப் பாதுகாப்பை, இன்னும் மேலே போய் உலகின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது என்ற விளம்பரப் பலகையை நெத்தன்யாகு தொங்கவிட்டு அமெரிக்காவை இறைஞ்சினார். இதேநேரம் இந்த அணுசக்தி நிலையம் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதை, அதற்கான உயர் யூரேனிய செறிவூட்டலை தடுக்க, ஓர் உடன்பாட்டு ஒப்பந்தத்துக்கு வர ட்றம் ஈரானுடன் 5 சுற்றுகளாக பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்திக் கொண்டிருந்தார் என்பது கவனிக்கத் தக்கது. அது முறிவடையவில்லை. பிறகு எப்படி அந் நிலையங்களை தாக்குகிற முடிவை ட்றம் எடுத்தார் என்ற கேள்வி முக்கியமானது.

அத்தோடு தனக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு தர வேண்டும் எனவும் அந்தக் கோரிக்கையை பாகிஸ்தான் ஊடாக தெரியப்படுத்தியுமிருந்தார். தான் பதவிக்கு வந்து 24 மணி நேரத்துள் ரசிய-உக்ரைன் இடையில் சமாதானத்தை கொண்டு வருவேன் என சமாதானத் தேவனாக படம் காட்டியபடி பதவியேற்றவர் அவர். அப்படியிருக்க, அவர் இஸ்ரேலின் பொறிக்குள் அகப்பட்டுவிட்டார் எனவும், அவரது மாறாட்டமான பேச்சுகள் நிலைப்பாடுகளை வைத்தும் அதைச் சிலர் விளங்கப்படுத்துகின்றனர்.

அதேநேரம் இதை இன்னொரு கோணத்தில் புரிந்துகொள்வதற்கு ‘ஆழ்-அரசு’ (deep state) குறித்த புரிதல் முக்கியமானது. அரசாங்கம் என்பதும் அரசு அல்லது ‘ஆழ்-அரசு’ என்பதும் ஒன்றல்ல. அரசு ஆனது அரசாங்கங்களை ஒரு கருவியாகக் கையாளும் நிலை உள்ளது. இது ஏதோ தலைவர்களை பொம்மையாக வியாக்கியானப் படுத்துவதல்ல. ஜனாதிபதி தனக்கு வழங்கப்பட்டு இருக்கும் அதிகாரத்தை -‘ஆழ்-அரசுடன்’ முரண்படாமல் அல்லது இன்னும் வீரியமாக்கி- செயற்படுத்த முடியும். எனவே ட்றம்ப் க்கும் ஒரு முக்கிய பாத்திரம் இருக்கிறது. அதனால் ட்றம்ப் மீதான பொறுப்புக் கோரல், மற்றும் விமர்சனம் நிச்சயம் இருக்கும். மக்களால் தெரிவுசெய்யப்பட்டு நாட்டை ஆள பொறுப்பேற்றவர் என்ற வகையில் அவர் மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்.

2017 இல் புட்டின் சொன்ன கதை ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. “அமெரிக்க ஜனாதிபதிகள் பல திட்டங்களோடு பதவிக்கு வருவர். பிறகு என்ன நடக்கும். கறுப்பு நிற உடையுடனும், நீல கழுத்துப்பட்டி (ரை) உடனும், கையில் ஒரு குறுஞ் சூட்கேஸ் உடனும் ஒரு ‘மனிதர்’ வருவார். அவர் புதிய ஜனாதிபதிக்கு நிலவும் யதார்த்தத்தை விளங்கப் படுத்துவார். அதன்பிறகு பதவிக்கு வந்தவர்களின் திட்டங்கள் காணாமல் போய்விடும். பிறகு அதை நீங்கள் காதால் கேட்கக்கூட முடியாமல் போய்விடும்” என்று சுவைபட ‘ஆழ்-அரசு’ குறித்து புட்டின் சொன்னார்.

அமெரிக்க ‘ஆழ்-அரசு’ என்பது சிஐஏ, பென்ரகன், அதி பணக்காரக் குழு (billionare) / மேட்டுக்குடிகள் (elites), இராணுவ தளபாடத் தரகர்கள் என்போரைக் கொண்டது. இந்த அதி பணக்காரர் குழுவுக்குள் சியோனிச லொபியும் அடங்கும். இந்த ‘ஆழ்-அரசுப்’ பங்காளர்களே அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை வழிநடத்துபவர்கள். மக்களால் இவர்கள் தெரிவுசெய்யப் படுவதில்லை. அரசாங்கங்கள் மாறிக் கொண்டிருப்பது போல், இந்த ‘ஆழ்-அரசு’ மாறிக் கொண்டிருப்பதுமில்லை. இந்த ‘ஆழ்-அரசு’ ட்றம்பின் சமாதானத்துக்கான நோபல் பரிசுக் கனவையும் ஈரானின் அணுசக்தி நிலையங்களில் வைத்து பறித்துக் கொண்டுள்ளது.

இவர்களின் கனவு இந்த அணுசக்தி நிலையத் தகர்ப்பு அல்ல. அது மக்களுக்கு சொல்லப்பட்ட காரணமே ஒழிய, உண்மை அதுவல்ல. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பினால் (IAEA) தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. “ஈரான் அணுகுண்டை தயாரிக்கும் நிலைக்கு யுரேனியச் செறிவூட்டலை செய்யவில்லை” என அவர்கள் சான்றிதழ் வழங்கியிருந்தனர். எனவே காரணம் அதுவல்ல. பல வருடங்களாக நெத்தன்யாகு செய்துகொண்டு வந்த பிரச்சாரம் மட்டுமே அது. “இன்னும் இரண்டு வாரத்தில் ஈரான் அணுகுண்டை தயாரித்துவிடும்” என்பது அவரது மந்திரமாக அவருடன் ஒட்டிக் கொண்டுவிட்டது.

இதெல்லாம் ‘ஆழ்-அரசு’ கும்பலுக்கு தெரியாததல்ல. அவர்களின் இலக்கு ஈரானில் தலைமையை மாற்றும் சதி வேலை செய்வதிலேயே இருக்கிறது. 1945 இலிருந்து இன்றுவரை 64 ஆட்சி மாற்றச் சதிப் புரட்சிகளை பல்வேறு நாடுகளில் அங்கேற்றியவர்கள் அவர்கள். இச் சதியின் பட்டியலில் ஈரான் விடயத்தில் நெத்தன்யாகுவும் இணைந்து கொண்டிருந்தார். அதை அவர் உச்சரித்தது செய்திகளாக ஏற்கனவே வந்தவை. சர்வாதிகாரி ஷாவை 1953 இல் சதிப்புரட்சி மூலம் ஆட்சிக்குக் கொணர்ந்தவர்கள் ‘ஆழ்-அரசுக்’ கும்பலான சிஐஏ உம் ‘எம்-16’ உம் ஆவர். (எம்-16 என்பது பிரித்தானிய உளவுப்படை). ஷா மேற்குலகின் அடிவருடியாக ஈரானை ஆட்சி புரிந்தார். அவரை தூக்கியெறிந்த ஈரானியப் புரட்சி 1979 இல் நடந்தது.

அதன்பின் ஈரான் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிரியாகவே நிலைநிறுத்தப்பட்டது. இப்போதும் ஓர் அடிவருடியை ஈரானினின் ஆட்சி பீடத்தில் நிலைநிறுத்துவதே அவர்களின் நோக்கம். அரசின் இந்தவகை எல்லா நடவடிக்கைகளையும் ஜனாதிபதி காரணங்களை சோடித்து, வரலாறுகளை புனைந்து மக்கள் முன் வைப்பதும், சதி நடவடிக்கைகளுக்கு கையெழுத்து இட்டு அங்கீகரிப்பதுமான ‘ஜனநாயகக்’ கடமையை செய்ய வெண்டியிருக்கும். அவர்கள் பதவிக்கு வர முன் கூவிய திட்டங்களெல்லாம் பிறகு காணாமல் போகும் என்பது இதைத்தான். ஆட்சிக்கு வர முன்னர் சிஐஏ இனை விமர்சித்தவர் ட்றம்ப். ஈராக் யுத்தத்தை விமர்சித்தவர் அவர். இப்போ?

ட்றம் திடீரென தெஹ்ரானிலிருந்து எல்லோரும் வெளியேறிவிட வேண்டும் என அறிவித்தார். 10 மில்லியன் சனத் தொகையைக் கொண்டது இத் தலைநகரம். இந்த பெருந்திரளை அலையவிடுவதன் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மையைக் குலைத்து, ஆட்சிமாற்ற சதியை அரங்கேற்றுவதே ‘ஆழ்-அரசின்’ நோக்கமாக இருந்தது. இருக்கிறது. இதற்கும் அணுசக்தி நிலைய தாக்குதலுக்கும் என்ன சம்பந்தம். அவை தெஹ்ரானுக்கு பல காத தூரம் வெளியில் இருப்பவை. ஏன் அந்த மக்கள் வெளியேற வேண்டும்?. அத்தோடு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் “தெஹ்ரான் இன்னொரு பெய்ரூத் ஆக மாற்றப்படும்” என அறிவித்திருந்தார். பெய்ரூத் இல் ஆட்சியை கவிழ்த்ததோடு, லிபிய ஜனாதிபதி கடாபி கேலப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். ஈராக் இலும் இதேவகை குரூர நாடகமே அரங்கேற்றப்பட்டது.

ஈரானின் ஆட்சி மாற்றம் அல்லது சதி என்பது இஸ்ரேலுக்கு தன்னைச் சூழவுள்ள ஹமாஸ், ஹிஸ்புல்லா, சற்று தொலைவிலுள்ள ஹவுதி அமைப்புகளை பலமிழக்கச்செய்ய அவசியமானதாக இருக்கிறது. இதன்மூலம் பலஸ்தீனத்தை முழுமையாக கைப்பற்றுவது மட்டுமன்றி, லெபனான் சிரியா என இன்னும் அகலக் கால்வைத்து தனது அகண்ட இஸ்ரேல் கொள்கையை அவர் நடைமுறைப்படுத்துவது இலகுவாக இருக்கும். மற்றைய அயலவர்களாக இருக்கும் அரபுநாடுகளின் தகிடுதத்தம் போல் இல்லாமல், பலஸ்தீனப் போராட்டத்துக்கான விடாப்பிடியான ஆதரவை வழங்கிவரும் ஈரானையும் அதே கும்பலுக்குள் தள்ளி, பலஸ்தீனப் போராட்டத்தை பலவீனப்படுத்தி, தனது ‘ஒற்றை-அரசு’ (one state) கனவை மெய்ப்படுத்த முனைகிறது நெத்தன்யாகு கும்பல்.

ஆனால் அமெரிக்காவுக்கோ நோக்கம் வேறானது. அமெரிக்க பெற்றோ டொலர் உட்பட்ட, டொலர் மைய வர்த்தகத்தை பிரிக்ஸ் நிராகரித்தததாலும், பிரிக்ஸ் பலமான பொருளாதார அமைப்பாக மாறிவருவதாலும் அதை எதிர்கொள்ள, ஈரானின் எண்ணை வளத்தை முடக்க அல்லது தன் பக்கம் மடைமாற்ற ஈரானில் ஓர் எடுபிடி ஆட்சி தேவைப்படுகிறது. எனவே அமெரிக்காவும் இஸ்ரேலும் “ஈரானின் ஆட்சி மாற்றம்” என்ற புள்ளியில் வெவ்வேறு பாதையால் வந்து ஒன்றிணைந்துள்ளனர்.

வெறும் 250 வருட வரலாறு கொண்ட அமெரிக்கா 5000 வருட வரலாறு கொண்ட ஈரானையும் அதன் பண்பாட்டு மனக்கட்டமைப்பையும் புரிந்துகொள்ள முடியாமலிருக்கிறது. அந்த மனக்கட்டமைப்பின் உறுதியோடுதான் ஈரான் 1979 இலிருந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும், பொருளாதாரத் தடைகளைத் தாண்டியும் தன்னை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. உலகமே அதிர்ச்சியடைய வைத்த அவர்களின் ஏவுகணை தொழில்நுட்பத்தின் சூட்சுமம் அங்கிருந்து தோற்றம் பெற்ற ஒன்றுதான்.

ஈராக் காலம் போல் தொழில்நுட்பம் இன்றைய காலத்தை நேர்கோட்டில் வைத்திருக்கவில்லை. இதுவரையான எந்தப் போரிலும் அழிவுகளையும் வெறியாட்டங்களையும் அமெரிக்கா சாதித்ததேயல்லாமல், ஒரு போரில் கூட வெற்றிபெற முடியவில்லை. எந்த நாட்டையும் உருப்படியாக முன்தள்ளிவிடவில்லை. இதுதான் வரலாறு. ஈரான் மீது படையெடுத்தாலும் இறுதியில் இதேதான் முடிவாக இருக்கும். எது எப்படியோ வடகொரியா தன்மீதான மேற்குலகின் நொட்டுதலை அமைதியடையச் செய்ய அணுவாயுத உற்பத்தியை கையிலெடுத்தது போல, ஈரானையும் அதே நிலைக்குத் துரிதமாகத் தள்ளிவிடுவதுதான் நிகழும்.

ஈரானின் தோல்வி பிரிக்ஸ் இன் பொருளாதார வளர்ச்சியின் மீதான தாக்குதலாக அமையும் என்பதால் பிரிக்ஸ் நாடுகள் -குறிப்பாக சீனாவும் ரசியாவும்- இராணுவ ரீதியிலோ இராஜதந்திர ரீதியிலோ கைகட்டி நின்று பார்த்துக் கொண்டிருக்குமா என்ற பெரும் கேள்வி இருக்கிறது. ரசியா கடைசியாக உதிர்த்த வார்த்தைகள் இதைக் காட்டுகின்றன. “ஈரானுக்கு அணுவாயுதங்களை கொடுக்க சில நாடுகள் தயாராக இருக்கின்றன. அத்தோடு ஈரான் அணு ஆயுதங்களை இனி உற்பத்தி செய்யும் செயல்முறைகளை உருவாக்கும்” என்பதே அது.

ஆக மொத்தம் ஒற்றைத் துருவ அதிகாரம் பல் துருவ அதிகாரமாக மாறும் நிலைமாற்றத்தின் பாதையில் (அதாவது இன்னோர் கோணத்தில்) ஈரான் நிலைமையை பார்க்க இடமுண்டு. அதாவது அமெரிக்க சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிப் பாதையின் இன்னோர் அறிகுறியாகவும் இவைகளை பார்க்க முடியும். இஸ்ரேலின் தரப்பில் பார்த்தால், நிராகரிக்கப்பட்ட அல்லது தனிமைப்படுத்தப்பட்ட நாடாகவும், பாதுகாப்பின்மையை தானே தனக்கு ஏற்படுத்திய அவலம் நிறைந்த நாடாகவும், ஏன் சியோனிசத்தின் வீழ்ச்சிப் பாதையில் செல்லும் நாடாகவும் பார்க்க இடமுண்டு. இந்த சூட்சுமமான பூகோள அரசியலில் தொங்கவிடப்பட்டிருக்கிற பலஸ்தீன மக்களின் தரப்பில் எதைச் சொல்ல?.

https://sudumanal.com/2025/06/23/எதைச்-சொல்ல/

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

எதைச் சொல்ல?

sudumanal

ஈரானின் தோல்வி பிரிக்ஸ் இன் பொருளாதார வளர்ச்சியின் மீதான தாக்குதலாக அமையும் என்பதால் பிரிக்ஸ் நாடுகள் -குறிப்பாக சீனாவும் ரசியாவும்- இராணுவ ரீதியிலோ இராஜதந்திர ரீதியிலோ கைகட்டி நின்று பார்த்துக் கொண்டிருக்குமா என்ற பெரும் கேள்வி இருக்கிறது. ரசியா கடைசியாக உதிர்த்த வார்த்தைகள் இதைக் காட்டுகின்றன. “ஈரானுக்கு அணுவாயுதங்களை கொடுக்க சில நாடுகள் தயாராக இருக்கின்றன. அத்தோடு ஈரான் அணு ஆயுதங்களை இனி உற்பத்தி செய்யும் செயல்முறைகளை உருவாக்கும்” என்பதே அது.

ஆக மொத்தம் ஒற்றைத் துருவ அதிகாரம் பல் துருவ அதிகாரமாக மாறும் நிலைமாற்றத்தின் பாதையில் (அதாவது இன்னோர் கோணத்தில்) ஈரான் நிலைமையை பார்க்க இடமுண்டு. அதாவது அமெரிக்க சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிப் பாதையின் இன்னோர் அறிகுறியாகவும் இவைகளை பார்க்க முடியும். இஸ்ரேலின் தரப்பில் பார்த்தால், நிராகரிக்கப்பட்ட அல்லது தனிமைப்படுத்தப்பட்ட நாடாகவும், பாதுகாப்பின்மையை தானே தனக்கு ஏற்படுத்திய அவலம் நிறைந்த நாடாகவும், ஏன் சியோனிசத்தின் வீழ்ச்சிப் பாதையில் செல்லும் நாடாகவும் பார்க்க இடமுண்டு. இந்த சூட்சுமமான பூகோள அரசியலில் தொங்கவிடப்பட்டிருக்கிற பலஸ்தீன மக்களின் தரப்பில் எதைச் சொல்ல?.

https://sudumanal.com/2025/06/23/எதைச்-சொல்ல/

கமல்ஹாசனின் மருதநாயகம் திரைப்படம் மாதிரி "இந்தா வருகுது வருகுது" என்று எத்தனை வருடங்களாக இந்த பிரிக்ஸ் இன்னும் வந்து கொண்டிருக்குது😂? இந்த "பல்துருவ" உலகை நாடும் எழுத்தாளர்களும் அதை ஒரு காரணியாக எடுத்துக் கதை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.