Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Highlights | West Indies v Australia | 1st Test Day 1

14 Wickets Fall On Day 1

Watch highlights of the 1st Test Day 1 between West Indies and Australia at Kensington Oval, Bridgetown

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டை ப‌ர்க்க‌ 5 நாள் விளையாட்டு மூன்று நாளில் முடிந்து விடும் போல் இருக்கு.........................அவுஸ்ரேலியா ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ள் நிலைத்து நின்று ர‌ன்ஸ் அடிக்கின‌ம் இல்லை...............வெஸ்சின்டீஸ் இந்த‌ மைச்சை வெல்ல‌க் கூடும்....................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

உந்த‌ மைதான‌த்தில் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் பெரிய‌ இஸ்கோர் அடித்து இருக்கின‌ம் , இந்த‌ டெஸ்ட் மைச்சில் வீர‌ர்க‌ள் அவுட் ஆகி வெளிய‌ போவ‌துமாய் இருக்கு................பிச்சில் மாற்ற‌ம் செய்து விட்டின‌மோ தெரியாது.....................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Highlights | West Indies v Australia | 1st Test Day 2

Hope Returns With Runs

  • கருத்துக்கள உறவுகள்

Barbados தீவில் ந‌ட‌க்கும் விளையாட்டு , மூன்று வ‌ருட‌த்துக்கு முத‌ல் இந்த‌ மைதான‌த்தில் ம‌ழை வ‌ராம‌ கூட‌ , இங்லாந் கூட‌ விளையாடி , விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிந்த‌து.................இப்ப‌ ந‌ட‌க்கும் விளையாட்டை பார்க்க‌ குழ‌ப்ப‌மாக‌ இருக்கு................விளையாட்டு சில‌து இன்றுட‌ன் முடிய‌க் கூடும்...................இப்ப‌ எல்லாம் ஜ‌ந்து நாள் நிலைத்து நின்று இப்ப‌த்த‌ வீர‌ர்க‌ளால் விளையாட‌ முடியாது😁...................ப‌ழைய‌ வீர‌ர்க‌ள் அவ‌ர்க‌ள் அனுப‌வ‌ம் மிக்க‌ வீர‌ர்க‌ள் நிலைத்து நின்று விளையாடுவின‌ம்💪..........................

  • கருத்துக்கள உறவுகள்

வெஸ்சின்டிஸ் வீர‌ர்க‌ளின் விளையாட்டு ப‌டு கேவ‌ல‌ம்...................வீர‌ர்க‌ள் சீக்கிர‌ம் அவுட் ஆகி வெளிய‌ போகின‌ம்................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

RESULT

1st Test, Bridgetown, June 25 - 27, 2025, Australia tour of West Indies

Australia FlagAustralia

180 & 310

West Indies FlagWest Indies

(T:301) 190 & 141

Australia won by 159 runs

PLAYER OF THE MATCH

Travis Head, AUS 59 & 61

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Highlights | West Indies v Australia | 1st Test Day 3

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

Highlights | West Indies v Australia | 1st Test Day 3

விளையாட்டு மூன்று நாளுட‌ன் முடிவ‌டைந்து விட்ட‌து

வெஸ்சின்டீஸ் தேர்வுக்குவுக்கு செவிட்டை பொத்தி போட‌னும் ,

டெஸ்ட் விளையாட்டில் நிலைத்து நின்று விளையாட‌க் கூடிய‌ வீர‌ர்க‌ளை தெரிவு செய்ய‌மா , ப‌ல‌ புது முக‌ வீர‌ர்க‌ளை தெரிவு செய்து ப‌டு தோல்வி அடைஞ்ச‌து தான் மிச்ச‌ம்

வூட் என்ர‌ ஜ‌மேக்கா நாட்டை சேர்ந்த‌ வீர‌ர் டெஸ்ட் விளையாட்டுக்கு த‌குதியான‌ வீர‌ர் , அவ‌ரை தேர்வுக்குழு ஓர‌ம் க‌ட்டி விட்ட‌து......................

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா அணி பெரிய‌ ம‌லை , வெஸ்சின்டீஸ் அணி காற்றும் போன‌ ப‌லூன் ஹா ஹா........................அடுத்த‌ மைச்சையும் அவுஸ்ரேலியா தான் வெல்லும் , ம‌ழை வ‌ராட்டி அவுஸ்ரேலியா அணி சிம்பிலா வெஸ்சின்டீஸ் அணிய‌ வெல்லுவின‌ம்...............................

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெஸ்ட்களில் இரண்டாவது மிகக் குறைந்த எண்ணிக்கைக்கு சரிந்தது மேற்கிந்தியத் தீவுகள்; ஸ்டாக் அதிவேக 5 விக்கெட்கள்

15 JUL, 2025 | 05:34 PM

image

(நெவில் அன்தனி)

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மேற்கிந்தியத் தீவுகள் இரண்டாவது மிகக் குறைந்த எண்ணிக்கையான 27 ஓட்டங்களுக்கு சரிந்ததுடன் அவுஸ்திரேலிய வேகபந்து வீச்சாளர் மிச்செல் ஸ்டாக் 15 பந்துகளில் 5 விக்கெட்களைக் கைப்பற்றி வேகமாக 5 விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற சாதனைக்கு உரித்தானார்.

துடுப்பாட்ட வீரர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த மிச்செல் ஸ்டாக், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பந்தவீச்சுக்கான அபூர்வ  சாதனையை நிலைநாட்டினார்.

ஜெமெய்க்கா கிங்ஸ்டன் சபினா பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 176 ஓட்டங்களால் இலகுவாக வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா தொடரை 3 - 0 என முழுமையாக கைப்பற்றியது.

அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 204 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 14.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 27 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இங்கிலாந்துக்கு எதிராக ஆக்லண்டில் 1955ஆம் ஆண்டு நியூஸிலாந்து பெற்ற மிகக் குறைந்த 26 ஓட்டங்கள் என்ற மொத்த எண்ணிக்கையை விட ஒரு ஓட்டம் அதிகமாக மேற்கிந்தியத் தீவுகள் பெற்றது.

மிச்செல் ஸ்டார்க் தனது முதலாவது ஓவரில் 3 விக்கெட்களையும் 3ஆவது ஓவரின் முதல் 3 பந்துகளில் 3 விக்கெட்களையும் வீழ்த்தியதன் மூலம் 15 பந்துகளில் 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இன்னிங்ஸில் ஒன்றில் வேகமாக (குறைந்த பந்துகளில்) 5 விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற சாதனையை மிச்செல் ஸ்டாக் நிலைநாட்டினார்.

மேலும் மேற்கிந்தியத் தீவுகளின் இரண்டாவது இன்னிங்ஸில் 7 வீரர்கள் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தனர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் 7 வீரர்கள் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தது இதுவே முதல் தடவையாகும்.

மேற்கிந்தியத் தீவுகளின் இரண்டாவது இன்னிங்ஸில் மிக்காய்ல் லூயிஸின் விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம் மிச்செல் ஸ்டாக், 400 டெஸ்ட் விக்கெட்களைப் பூர்த்திசெய்தார். மிச்செல் ஸ்டாக் 400ஆவது விக்கெட்டை தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் கைப்பற்றியது விசேட அம்சமாகும்.

இதேவேளை, ஸ்டாக்குக்கு பக்கபலமாக பந்துவிசிய ஸ்கொட் போலண்ட், ஹெட் - ட்ரிக் முறையில் விக்கெட்களைக் கைப்பற்றி சாதனை படைத்தார். அவுஸ்திரேலியா சார்பாக டெஸ்ட் போட்டியில் ஹெட் ட்ரிக் சாதனை புரிந்த 10ஆவது பந்துவீச்சாளர் போலண்ட் ஆவார்.

மூன்று நாட்களுக்குள் முடிவடைந்த இந்த டெஸ்ட் போட்டியில் சகலரும் ஆட்டம் இழந்த நான்கு இன்னிங்ஸ்களிலும் மொத்தமாக 516 ஓட்டங்கள் மாத்திரமே பெறப்பட்டது. அத்துடன் இந்தப் போட்டியில் ஒருவர் கூட அரைச் சதம் பெறவில்லை.

எண்ணிக்கை சுருக்கம் 

அவுஸ்திரேலியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 225 (ஸ்டீவன் ஸ்மித் 48, கெமரன் க்றீன் 46, பெட் கமின்ஸ் 24, ஷமார் ஜோசப் 33 - 4 விக்., ஜஸ்டின் க்றீவ்ஸ் 56 - 3 விக்., ஜேடன் சீல்ஸ் 59 - 3 விக்.)

மேற்கிந்தியத் தீவுகள்: 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 143 (ஜோன் கெம்பெல் 36, ஷாய் ஹோப் 23, ஸ்கொட் போலண்ட் 34 - 3 விக்., பெட் கமின்ஸ் 24 - 2 விக்., ஜொஷ் ஹேஸ்ல்வூட் 32 - 2 விக்.)

அவுஸ்திரேலியா 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 121 (கெமரன் க்றீன் 42, ட்ரவிஸ் ஹெட் 16, அல்ஸாரி ஜோசப் 27 - 5 விக்., ஷமார் ஜோசப் 34 - 4 விக்.)

மேற்கிந்தியத் தீவுகள் - வெற்றி இலக்கு 204 ஓட்டங்கள் - 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 27 (ஜஸ்டின் க்றீவ்ஸ் 11, மிச்செல் ஸ்டாக் 7.3 - 4 - 9 - 6 விக்., ஸ்கொட் போலண்ட் 2 - 3 விக்.)

ஆட்டநாயகன்: மிச்செல் ஸ்டாக் (9 விக்கெட்கள்)

தொடர்நாயகன்: மிச்செல் ஸ்டாக் (15 விக்கெட்கள்)

1507_mitchel_starc.png

https://www.virakesari.lk/article/220077

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.