Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச கிரிக்கெட்டில் ட்விஸ்ட்… ஐசிசி புதிய விதிமுறைகள் வெளியானது – முழு விபரம்!

27 Jun 2025, 5:02 PM

icc set new rules in cricket

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகளை ஐசிசி இன்று (ஜூன் 27) அறிவித்துள்ளது.

சௌரவ் கங்குலி தலைமையிலான ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் கவுன்சில் இந்த புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் நடப்பு (2025-27) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சுழற்சியின் தொடக்கத்தில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. ஏற்கெனவே இலங்கை-வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து-இந்தியா டெஸ்ட் போட்டிகளில் புதிய விதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஒருநாள் தொடருக்கான ஐசிசி விதிகள் வரும் ஜூலை 2 முதல் அமலுக்கு வருகின்றன.

புதிய நிபந்தனைகள் விவரம்!

ஓவர் பிரேக் 60 வினாடிகள்!

ஒருநாள், டி20 போட்டியைத் தொடர்ந்து தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் பந்துவீச்சு அணி ஒரு ஓவர் நிறைவடைந்த 60 நொடிகளுக்குள் அடுத்த ஓவரை தொடங்க வேண்டும்.

ஒரு இன்னிங்ஸில் மூன்றாவது முறையாக (இரண்டு எச்சரிக்கைகளுக்குப் பிறகு) அவ்வாறு செய்யத் தவறினால், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பேட்டிங் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும். இது ஒவ்வொரு 80 ஓவர்கள் கடந்த பிறகு, ஒரு புதிய பந்து கிடைக்கும்போது அமலாகும்.

எச்சில் தடவினாலும்…

பந்தின் மீது எச்சில் தடவுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், எச்சில் தடவியது கண்டறியப்பட்டால் நடுவர்கள் பந்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. பந்தை மாற்றுவற்காக இந்த தந்திரம் கடைபிடிக்கப்படலாம் என்பதால் இந்த விதி கொண்டு வரப்பட்டுள்ளது.

கிரீஸை தொடாமல் ரன் ஓடினால்…

வேண்டுமென்றே ஓடி ரன் எடுக்கும்போது, பேட்ஸ்மேன் கிரீஸை தொடாமல் சென்றுவிட்டால், அந்த ரன் வழங்கப்படாது. பேட்டர்கள் இருந்த இடத்துக்கே செல்ல வேண்டும். பவுலிங் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும். மேலும், இருவரில் அடுத்த பந்தை எந்த பேட்டர் எதிர்கொள்ள வேண்டும் என்பதை பவுலிங் அணி கேப்டன் தேர்வு செய்ய முடியும்.

DRS முறையீடு!

Wide, Out உள்ளிட்டவைகளுக்கு ஒரே நேரத்தில் பேட்டர் அல்லது பவுலிங் கேப்டன் DRS கோரினால் யார் முதலில் கேட்டார்களோ அவரின் முறையீடே முதலில் ஏற்றுக்கொள்ளப்படும்.

No Ball கேட்ச்!

No Ball பந்தை பேட்டர் அடித்து அது கேட்ச் பிடிக்கப்பட்டால், அது முறையான கேட்ச் எனும்பட்சத்தில் ஒரு ரன் வழங்கப்படும். முறையாக பிடிக்கப்படவில்லை எனில், பேட்டர்கள் ஓடி எடுத்த ரன்கள் வழங்கப்படும்.

ஒரு ODI இன்னிங்ஸில் புதிய பந்துகள்…

ஒரு ODI இன்னிங்ஸின் முதல் 34 ஓவர்களுக்கு இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தப்படும், அதன் பிறகு ஃபீல்டிங் அணி மீதமுள்ள ஓவர்களுக்கு பந்துகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்.

பவுண்டரி கேட்சுகள்

பவுண்டரி எல்லையில் பறந்து சென்று கேட்ச் செய்யும்போது, மீண்டும் ஒருமுறை மட்டுமே களத்திற்குள் வந்து கேட்ச் செய்ய முடியும். பந்தை பிடித்த பிறகு மீண்டும் பவுண்டரி லைனுக்கு வெளியே சென்றால் அது கேட்சாக கருதப்படாது.

டி20 பவர்பிளே மாற்றம்!

பிரத்யேகமாக டி20 ஆட்டத்தில் ஆட்டம் மழையால் பாதிக்கப்படும்போது, 5 ஓவரில் இருந்து 19 ஓவர்கள் வரை ஆட்டம் குறைக்கப்பட்டால், எத்தனை ஓவர்கள் பவர் பிளே இருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp-Image-2025-06-27-at-16.41.36_88

வேண்டுமென்றே விக்கெட் கேட்டால்…

சில நேரங்களில் பீல்டர்கள் தெளிவான கேட்ச் பிடிக்காமல் வேண்டுமென்றே விக்கெட்டை கேட்பார்கள். அது போன்ற சூழ்நிலையில் கேட்ச் தெளிவாக இல்லையென்று கண்டறிந்தால் நடுவர் அதை நோ-பால் என்று அறிவிப்பார்.

எல்பிடபிள்யூ ஆ? அல்லது ரன் அவுட் ஆ?

ஒரு பந்தில் ஒரு பேட்ஸ்மேன் எல்பிடபிள்யூ மற்றும் ரன் அவுட்டாகிறார் என்றால் அந்த இரண்டையும் தனியாக ரிவ்யூ எடுக்கலாம். ஆனால் முதலில் எல்பிடபிள்யூ என்று தெரிய வந்தால் அது டெட் பால் என்று முடிவெடுக்கப்பட்டு விக்கெட் வழங்கப்படும். ரன் அவுட் சோதிக்கப்பட மாட்டாது.

மாற்று வீரருக்கு பேட்டிங், பவுலிங் செய்யலாம்!

அதுபோக உள்ளூர் போட்டிகளில் ஒரு வீரர் முழுமையாக காயத்தை சந்திக்கும்போது புதிதாக வரும் மாற்று வீரர் பேட்டிங், பவுலிங் உள்ளிட்ட அனைத்தையும் செய்யலாம். அதை நடுவர் சோதித்து முடிவெடுப்பார்.

https://minnambalam.com/icc-set-new-rules-in-cricket/#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்

எச்சில் ப‌ந்தில் ப‌டுவ‌தை அன்மையில் கூட‌ பார்த்தேன் , அப்ப‌ ந‌டுவ‌ர்க‌ள் க‌வ‌னிக்க‌ வில்லையா ,

இல‌ங்கை வீர‌ர் ல‌சித் ம‌லிங்கா ப‌ந்து போடுவ‌துக்கு முத‌ல் ப‌ந்துக்கு முத்த‌ம் கொடுப்பார் , எத்த‌னை வீர‌ர்க‌ளின் எச்சில் அவ‌ரின் சொன்டில் ப‌ட்டு இருக்கும்.😁.....................

டெஸ்ட் விளையாட்டை குறைத்து , இன்னும் கூடுத‌ல் 20ஓவ‌ர் போட்டி வைத்தால் கிரிக்கேட் இன்னும் வேக‌மாக‌ வ‌ள‌ரும்👍................

பிரேசில் நாட்டு ம‌க‌ளிர் கூட‌ ந‌ல்லா கிரிக்கேட் விளையாடுகின‌ம் , கால்ப‌ந்துக்கு பெய‌ர் போன‌ நாட்டில் , கிரிக்கேட் மெது மெதுவாய் வ‌ள‌ர்வ‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து பெரிய‌ப்பு👍...................

டெஸ்ட் விளையாட்டு என்றால் ஜ‌ரோப்பிர‌க‌ள் விரும்ப‌ மாட்டின‌ம் , இங்லாந் நாட்டை த‌விர‌ ,

ஜ‌ரோப்பாவில் கிட்ட‌ த‌ட்ட‌ எல்லா நாடுக‌ளும் 20 ஓவ‌ர் கிரிக்கேட் விளையாட‌ தொட‌ங்கி விட்டின‌ம்...................

ஜ‌ரோப்பா க‌ப் போட்டி வைத்தால் இங்லாந் ம‌ற்ற‌ நாடுக‌ளை வென்று கோப்பைய‌ தூக்கும் , கிரிக்கேட் ஜ‌ரோப்பாவில் வ‌ள‌ர‌னும் என்றால் ஜ‌ரோப்பா க‌ப் போட்டி 4வ‌ருட‌த்துக்கு ஒருக்கா ந‌ட‌த்தினால் ந‌ல்லா இருக்கும்....................

கென்னியா அணிய‌ முந்தி உக‌ன்டா நாடு கிரிக்கேட்டில் வ‌ள‌ந்து வ‌ரும் என‌ நினைத்து இருப்போமா😮😁💪........................

டெஸ்ட் போட்டிக்கு வெஸ்சின்டீசில் வ‌ர‌வேற்ப்பு சுத்த‌மாய் இல்லை , அங்கு 20ஓவ‌ர் விளையாட்டுக்கு தான் ந‌ல்ல‌ வ‌ர‌வேற்ப்பு.😁👍............................

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வீரப் பையன்26 said:

டெஸ்ட் விளையாட்டை குறைத்து , இன்னும் கூடுத‌ல் 20ஓவ‌ர் போட்டி வைத்தால் கிரிக்கேட் இன்னும் வேக‌மாக‌ வ‌ள‌ரும்👍..............

கொன்னுபுடுவேன்😂

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வீரப் பையன்26 said:

கென்னியா அணிய‌ முந்தி உக‌ன்டா நாடு கிரிக்கேட்டில் வ‌ள‌ந்து வ‌ரும் என‌ நினைத்து இருப்போமா😮😁💪.......................

1ம் அல்லது 2ம் உலக கோப்பையில் கென்யா, உகண்டா, சிம்பாப்வே, தன்சானியா சேர்ந்து கிழக்கு ஆபிரிக்கா என களமிறங்கினர் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

1ம் அல்லது 2ம் உலக கோப்பையில் கென்யா, உகண்டா, சிம்பாப்வே, தன்சானியா சேர்ந்து கிழக்கு ஆபிரிக்கா என களமிறங்கினர் என நினைக்கிறேன்.

Bro டெஸ்ட் விளையாட்டு கிரிக்கேட்டை வ‌ள‌க்காது இந்த‌ நூற்றாண்டில் , என்ன‌ செய்ய‌ கிரிக்கேட் ஆர‌ம்ப‌ம் ஆன‌தே டெஸ்ட் விளையாட்டில் இருந்து தான் , இனி வ‌ரும் கால‌ங்க‌ளிலும் அதையும் ந‌ட‌த்தி தான் ஆகானும் , இந்தியாவில் ஜ‌பிஎல் வ‌ருகைக்கு முத‌ல் டெஸ்ட் போட்டிய‌ கூட‌ இந்திய‌ர்க‌ள் நேரில் போய் அதிக‌ ம‌க்க‌ள் பாப்பின‌ம் ,

முந்தி எங்கையோ வாசித்த‌ ஞாப‌க‌ம் , டெஸ்ட் போட்டிய‌ த‌டை செய்ய‌னும் என‌ ஏதோ ஒரு நாடு தெரிவித்த‌து........................

இங்லாந் நாட்ட‌வ‌ர்க‌ள் தான் டெஸ்ட் போட்டிய‌ இப்ப‌ வ‌ரை ஆர்வ‌த்தோட‌ பார்க்கின‌ம் ம‌ற்ற‌ நாடுக‌ளில் , டெஸ்ட் விளையாட்டு ந‌ட‌க்கும் போது மைதானத்தில் இருந்து பெரிதாக‌ யாரும் பார்ப்ப‌து கிடையாது.................................

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வீரப் பையன்26 said:

இங்கிலாந்தை போல் ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் மைதானம் நிரம்பும் ஆதரவு ஏனை நாடுகலில் இல்லை எனிலும், இந்தியா, அவுஸ், தெஆ வில் இன்றும் டெஸ்டுக்கு மவுசு குறையவில்லை.

ஆஷ்சஸ், பார்டர்-கவாஸ்கர், இந்தியா-பாக், இங்கிலாந்து/அவுஸ்/தெ ஆ தொடர்களுக்கு இந்த நாடுகளில் இப்போதும் நல்ல கூட்டம் வரும்.

இலங்கை பங்களாதேஷ் போன்ற போட்டிகளில் இந்த நாடுகளில் ஆர்வம் குறையினும், போட்டி விறு விறுப்பாக போனால் 3,4,5 நாளுக்கு கூட்டம் வரும்.

அனைத்தையும் விட முக்கியமாக, ஒரு அளவுக்கு கடினபந்து விளையாடிய அனைவருக்கும், பார்வையாளருக்கு அல்ல, வீரருக்கு டெஸ்டே இப்போதும் அவர்கள் விளையாட்டின் உச்சம்.

சச்சின் முதல், முரளி வரை தமது டெஸ்ட் சாதனைகளைதான் அதிகம் கொண்டாடுவார்கள்.

எத்தனை white ball specialist ஐ 10 வருடம் பின் நினைவில் வைக்கிறோம், ஆனால் அநேக டெஸ்ட்வீரர் புகழ் காலத்துக்கும் அழியாதது.

ஆகவே இங்கிலாந்து, அவுஸ், தெ.ஆ, இந்தியா, பாக் இருக்கும் வரை டெஸ்ட்டுக்கு ஆபத்தில்லை.

டெஸ்ட் உலக தொடர் புதிய ரத்தமும் பாய்ச்சியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

20 ஓவ‌ர் வ‌ருகைக்கு பிற‌க்கு தான் ஜ‌ரோப்பாவில் ப‌ல‌ நாடுக‌ள் கிரிக்கேட் விளையாட‌ தொட‌ங்கி இருக்கின‌ம் , உதார‌ன‌த்துக்கு நேட்டோ அமைப்பை சேர்ந்த‌ நாடுக‌ளில் இஸ்ரேல் ம‌ற்றும் சில‌ நாடுக‌ள் தான் இன்னும் கிரிக்கேட் விளையாட‌ ஆர‌ம்பிக்க‌ வில்லை , ம‌ற்ற‌ நாடுக‌ள் ஜ‌ரோப்பாவில் வெதுவாய் வ‌ள‌ந்து கொண்டு வ‌ருகின‌ம்.....................

ஜ‌ரோப்பாவில் சில‌ நாடுக‌ள் கிரிக்கேட்டை அங்கிக‌றீக்க‌ கூடும்.................

இல‌ங்கை முத‌ல் முறை உல‌க‌ கோப்பை தூக்கின‌ போது கிரிக்கேட்டை சில‌ நாடுக‌ள் தான் விளையாடின‌வை , இபோது அந்த‌ நிலை இல்லை , கால்பந்துக்கு பெய‌ர் போன‌ பிரேசில் நாடே கிரிக்கேட் விளையாடுகின‌ம் என்றால் , கிரிக்கேட் எவ‌ள‌வு தூர‌ம் வ‌ள‌ந்து விட்ட‌து 2007க்கு பிற‌க்கு👍.............................

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வீரப் பையன்26 said:

எல்லாமும் மாறி மாறி நடக்கும்.

AC Milan தெரியும்தானே?

பிரபல இத்தாலிய கால்பந்து கழகம்.

அதை ஆரம்பித்தது ஆங்கிலேயர்.

அதுமட்டும் அல்ல நவீன கால்பந்தை இத்தாலிக்கு அறிமுகம் செய்தவர்களும் ஆங்கிலேயரே.

ஆனால் இன்று நாம் இத்தாலியை ஏதோ கால்பந்தின் சாம்ராஜ்யம் போல நினைக்கிறோம்.

ஒன்று தெரியுமா ? AC Milan இன் ஆரம்ப முழு பெயர் Milan Football and Cricket Club.

அப்போது இத்தாலியில் கால்பந்து பிரபலமாகாது கிரிகெட் பிரபலமாகாகி இருப்பின் இப்போ இத்தாலி ஒரு டெஸ்ட் நாடாக இருக்கும்।

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

இத்தாலி அனைத்து கால்ப‌ந்து கில‌ப்புக‌ளை தெரியும்....................juventus என‌க்கு மிக‌வும் பிடிச்ச‌ அணி , இவ‌ர்க‌ள் இபோது கால்ப‌ந்தில் பெரிசாக‌ சாதிப்ப‌து கிடையாது.............

இத்தாலியில் இன்னும் கிரிக்கேட் அழிய‌ வில்லை , இத்தாலியும் வ‌ள‌ந்து வ‌ரும் அணிக‌ளில் ஒன்று , என்ன‌ செய்வ‌து அந்த‌ நாட்டில் கால்ப‌ந்து rugby போன்ர‌ விளையாட்டுக்கு அதிக‌ முக்கிய‌த்துவ‌ம் கொடுக்கின‌ம்..............................

இத்தாலிய கிரிகெட் அணிக்கு 90/80களில் ஒரு இலங்கை தமிழ் கிறிஸ்தவர் விளையாடி உள்ளார். இப்போதும் ஈடுபாட்டுடன் உள்ளார். ஆனால் விளையாடுவதில்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இத்தாலிய கிரிகெட் அணிக்கு 90/80களில் ஒரு இலங்கை தமிழ் கிறிஸ்தவர் விளையாடி உள்ளார். இப்போதும் ஈடுபாட்டுடன் உள்ளார். ஆனால் விளையாடுவதில்லை.

👍.....................

1 hour ago, goshan_che said:

இத்தாலிய கிரிகெட் அணிக்கு 90/80களில் ஒரு இலங்கை தமிழ் கிறிஸ்தவர் விளையாடி உள்ளார். இப்போதும் ஈடுபாட்டுடன் உள்ளார். ஆனால் விளையாடுவதில்லை.

👍...........................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.