Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனித புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வேண்டுகோள்

Published By: DIGITAL DESK 2

18 JUL, 2025 | 04:03 PM

image

நல்லிணக்கம் ஏற்படவேண்டுமாயின் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்டுள்ள குண்டுதாக்குதல்கள், புதைகுழிகள், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலாவது சர்வதேச விசாரணைகளை   மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என யாழ் கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இது தொடர்பாக "செம்மணி புதைகுழி கிளறிய சில சிந்தனைகள்" என குறிப்பிட்டு அவர்கள் வெளியீட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்கள். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : 

1996ம் ஆண்டு சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசாமி பரீட்சை முடிந்து செம்மணியூடாக வீடு திரும்பும் போது செம்மணியில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினரால் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டமையும் அவரைத்தேடிச் சென்ற அவரது தாயும் உறவுகளும் படுகொலை செய்யப்பட்டு அங்கே புதைக்கப்பட்டதும் பின்னர் இந்நிகழ்வுகள் வெளிவந்து குற்றவாளிகள் கோர்ப்புரல் சோமரட்ண ராஜபக்ஷ ஆகியோர் குற்றவாளிகளாகக்காணப்பட்டு 1998 ஆண்டு ராஜபக்ஷவிற்கு மரண தண்டனைத்தீர்ப்பு வழங்கப்பட்டு பின்னர் 2015ம் ஆண்டுக்குப்பின் கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டவை என்பன வரலாறுகள்.

கிருஷாந்தி குமாரசாமி கொலை வழக்கின் பிரதான குற்றவாளியாகிய சோமரட்ண ராஜபக்ஷ கொடுத்த வாக்குமூலத்தில் மேலும் சில தமிழ் மக்கள் செம்மணியில் கொல்லப்பட்டு அங்கு புதைக்கப்பட்டிருந்தார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தும் அப்போது செம்மணிப்பகுதி ஒரு பாரிய மனிதப்புதைகுழியாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தாலும் அதன்பின் அதுபற்றி எவரும் பெரிதாக பேசவில்லை. 

ஆயினும் சில மாதங்களுக்குமுன் செம்மணிப்பகுதியில் ஒரு தகனமேடைக்கெனத் துப்புரவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, மனித உடற் பாகங்கள் கண்டு பிடிக்கப்பட்டு நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

பின்னர் உத்தியோகபூர்வமாக அப்பகுதியில் நீதிமன்ற அனுசரணையுடன் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது மேலும் பல எலும்புத் தொகுதிகள் கண்டுபடிக்கப்பட்டன. 

இரண்டு கட்டங்களாக இடம் பெற்ற அகழ்வுப்பணிகள் தற்காலிகமாக 10.7.2025 நிறுத்திவைக்கப்பட்போது ஏறக்குறைய 65 மனித உடற்தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. இவை இன்னும் பகுப்பாய்வு செய்யப்படவில்லையாயினும் மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது அதிர்ச்சியூட்டுபவையாகவுள்ளன. 

அவற்றுள் சில சிறுவர்களுடையது. ஒரு இடத்தில் சிறுவர்களது விளையாட்டு பொம்மை, பாடசாலை புத்தகப்பை, சிறுமியின் உடை, சில வளையல்கள் போன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

15.7.2025 அன்று இவ்வழக்குக்குப் பொறுப்பான நீதிவான் அ. ஆனந்தராஜா முன்னிலையில் அகழ்வின் போது பிரசன்னமாயிருந்த தொல்லியல் பேராசிரிய ராஜ்சோம தேவாவும், சட்டவைத்திய அதிகாரி வைத்தியர் செல்லையா பிரணவனும் பிரசன்னமாயிருந்தனர். 

அப்போது தொல்லியல் பேராசிரியரும் சட்ட வைத்திய நிபுணரும் தமது இடைக்கால அறிக்கைகளில் இப்புதைகுழியில் உள்ள எலும்புக்கூடுகள் உள்ள இடம் ஒரு குற்றப்பிரதேசமாகவும், மனித உரிமை மீறல்கள் இடம் பெற்ற இடமாகவும் கருதப்படச்சான்றுகள் உள்ளன என்றும் குறிப்பாக 4-5 வயதுச்சிறுமியின் பகுப்பாய்வுக்குட்படுத்தப்படவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது சடலம் மேலும் இக்காலகட்டத்தில் கிருஷாந்தி கொல்லப்பட்டதற்கு (1996க்கு) முந்திய பிந்திய காலப்பகுதியில் யாழ் குடாநாட்டில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக இராணுவ முகாம்களும் வீதிக்குவீதி சென்ற்றி போயின்ற்றுகளும் இருந்தன. 

சர்வ சாதாரணமாக கைதுகளும், கைது செய்யப்பட்டவர்கள் காணாமல் போவதும் இடம்பெற்றுவந்தன. யாழ் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இது பற்றி பாராளுமன்றத்தில் 2025 ஆனி ஆடி இடம் பெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் குறிப்பிட்டிருந்தார். 

ஆங்கிலத்தில் 'tip of the iceberg' (நீரில் மிதக்கும் பனிப்பாறையின் வெளியே தெரியும் சிறிய பகுதிஎன்று ஒரு சொற்றொடர் உண்டு, பாரிய பனிப்பாறைகள் கடலில் மிதந்துவரும் போது வெளியே கண்ணுக்குத்தெரியும் சிறியதொரு பனிக்கட்டியை இது குறிக்கின்றது. ஆனால் அதைப்போல் ஏழு மடங்கு பெரிய பனிப்பாறை தண்ணிருக்குள் அமிழ்ந்திருப்பது வெளியே தெரியாது) இது போலத்தான் இதுவரை செம்மணி சிந்துபாத்திப்பகுதியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட 65 மனித எலும்புக்கூடுகள் (பாடசாலை சிறுமிகளது உட்பட) சோமரட்ண ராஜபக்சவின் சாட்சியத்தின் அடிப்படையில் பார்க்கும் போது இந்த எலும்புக்கூடுகள் இப்பகுதியில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட 600க்குக்குறையாத எலும்புக்கூடுகளாயிருக்கலாம் என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்றாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு வரமுடியும்.

இதற்குமேலாக 2024ம் ஆண்டு குழாய்நீர் வசதி வழங்க சில அகழ்வு மேற்கொள்ளப்பட்ட கொக்கு தொடுவாயில் கண்டெடுக்கப்பட்ட சூட்டுக்காயங்களுடன் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட இறந்த இளைஞர், இளம் பெண்களுடைய எலும்புக்கூடுகள், மன்னார் பாலத்துக்கருகாமையில் 'சதோச' வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டு இதுவரை முடிவு வெளிவராத எலும்புகூட்டு விபரங்கள், திருக்கேதிஸ்வரத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் எல்லாவற்றையும் செம்மணியில் கண்டெடுக்கப்பட்டதை பார்க்கும் போது எலும்பு கூடுகள் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டவர்களுள்  வீதமானவர்களது எலும்புக்கூடுகள் என்ற முடிவுக்கு வரலாம்.

அண்மையில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழு கமிஷனர் வோக்கர் டக் இலங்கைக்கு வந்த போது யாழ்ப்பாணத்திற்கும் வந்திருந்தார். அப்போது அணையா விளக்கு' நிகழ்வும் சிவில் சமுகங்கள் செயற்பாட்டாளர்கள் சரியான நேரத்தில் செம்மணிப்பகுதியில் ஏற்பாடு செய்த 3 நாள் கவன ஈர்ப்பு நிகழ்விலும் கலந்து கொண்டது வரவேற்கத்தக்கது. 

ஆயினும் இவரது கருத்துக்கள் விசாரணையில் சர்வதேச பங்களிப்பை சுட்டிக்காட்டாதிருப்பது பெரும் ஏமாற்றமே. 3000 நாட்களைக் கடந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் போரின் பின் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் எங்கே என்று கவனயீர்ப்பை நடத்திக் கொண்டிருந்தார்கள். இந்த 3000 நாட்களில் கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்களுள் 200க்கு மேற்பட்டவர்கள் தமது உறவுகளைக் காணாது இறந்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

பலவிதமான வாக்குறுதிகளுடன் பதவிக்கு வந்து தொடர்ந்தும் புதுப்பித்த வாக்குறுதிகளை வழங்கிக்கொண்டிருக்கும் தற்போதைய அரசின் செயற்பாடும் 'பேச்சு பல்லக்கு தம்பி கால் நடை' என்று தான் உள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இந்த அரசின் செயற்பாடு ஒரு அங்குலம் தானும் முன்னேறவில்லை. நல்லிணக்கத்தைக்கொணர்வோம் என்று பதவிக்கு வந்த தற்போதைய அரசு தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினை சம்பந்தமாக அதன் செயற்பாடுகள் மந்த கதியிலேயே உள்ளன. 

வீதிகள் திறக்கப்பட்டாலும்  மறுபுறத்தில்  இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள சில வீதிகள் காணிகள் இன்னும் முறைப்படி விடுவிக்கப்படவில்லை. பாரம்பரியக்காணிகள் கிழக்கில் தமிழரது பெரும்பான்மையினருக்குத் தாரைவார்க்கப்படுகின்றன. 

வெடுக்குநாறி, குருத்தூர், தையிட்டி ஆகிய இடங்களில் தமிழ் மக்களின் தொன்மை மிகு இடங்கள் பறிக்கப்பட்டமைக்கு தீர்வு காணப்படவில்லை. பயங்கரவாத தடைச்சட்டம் இன்னமும் நீக்கப்பட்டபாடில்லை. 

2009 ம் ஆண்டு யுத்தம் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு முடிவுக்கு வந்த பின் போர்க்குற்றங்கள் (சரணடைந்தவர்களைக் கொல்வது உதாரணம் : இசைப்பிரியா, பாலச்சந்திரன் போன்றவர்கள்) பற்றிய பொறுப்புக்கூறல் இதுவரை இடம் பெறவில்லை. 

செம்மணி, கொக்குத்தொடுவாய், மன்னார் திருக்கேதிஸ்வரம் போன்ற இடங்களில் உள்ள புனித குழிகள் பற்றிய அகழ்வுக்கும் ஆய்வுக்கும் உள்நாட்டில் நிபுணத்துவம் இல்லையென்று தெரிந்தும் வெளிநாட்டு தலையீடுகளுக்கு அனுமதி மறுப்பு. போர்க்காலத்தில் இடம் பெற்ற படுகொலைகள் உதாரணம், நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் ஆலயக்குண்டு வீச்சு, நாகர்கோவில் குண்டுவீச்சு, புனித ஜேம்ஸ் ஆலய குண்டுவீச்சு, மடு தேவாலய செல் வீச்சு, மூதூர் வெளிநாட்டு  தொண்டு நிறுவன ஊழியர் படுகொலை, திருகோணமலையில் பரீட்சை எழுதிமுடித்திருந்த 5 மாணவர் படுகொலை போன்றவை எவற்றிலும் உள்நாட்டுப் பொறிமுறையில் ஒரு அங்குலம் முதலாக முன்னேற்றம் இல்லை.

இதனால் தான் தமிழ் மக்கள் நல்லிணக்கம் ஏற்படவேண்டுமாயின் மேற்குறிப்பிட்ட சில விடயங்களிலாவது வெளிநாட்டு தலையீடு ஏற்பட்டிருக்க வேண்டும். சாத்வீரசேகர, விமல்வீரவன்ச, விமல ரத்னதேரர் போன்றவர்களது இனவாத கருத்துக்களுக்கு இவ் அரசும் அடிபணிகிறது போலத் தென்படுகிறது.

2009ம் ஆண்டுக்குமுன் குறிப்பாக 30 ஆண்டுகாலம் நடந்த உக்கிரமான மோதல்களில் பல்லாயிரக்கணக்கில் பொதுமக்கள் விமானக்குண்டு வீச்சுக்கள் மூலமும் தரையில் கடத்தப்பட்டதும், கைது செய்யப்பட்டதும், சித்திரவதைக்குள்ளாகி, கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு, கடலில் சாதாரண பயணிகள் கொல்லப்பட்டதாலும் (குமுதினி படுகொலை) ஆசியாவை இனப்படுகொலை அல்லது இனச்சுத்திகரிப்புக்களின் வெளிப்பாடுகளே. 

அத்துடன் யாழ் நூலக எரிப்பு, பொதுமக்களின் காணிகள் ஆக்கிரமிப்பு, ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் பெளத்த விகாரைகள் நிர்மாணம் எல்லாம் இனஅழிப்பின் பல்வேறு பரிமாணங்களே. அத்துடன் ஒவ்வொரு வருடமும் 2009ம் ஆண்டுக்குப்பின் யுத்த வெற்றி நாள் கொண்டாடப்பட்டு கடற்படை, விமானப்படை, தரைப்படையினருக்கு யுத்தகால வீரதீரச்செயல்களுக்குப்பதவி உயர்வுகளும், பதக்கங்களும் வழங்கப்படுகின்றன.

மேற்குறிப்பிட்டவற்றுள் எந்த வீரதீரச்செயல்களுக்காக இப்பதக்கங்களும் பதவி உயர்வுகளும் வழங்கப்படுகின்றன? இது போன்ற துன்பியல் நிகழ்வுகள் இனி நிகழாது, நல்லிணக்கமே எமது குறிக்கோள் என்று பதவிக்கு வந்த இவ்வரசு இவ்வருட வெற்றி விழாவில் மேற்படி வீர தீரச்செயல்களுக்காக பதவி உயர்வுகளும் பதக்கங்களும் வழங்கியிருந்தது என்பது சுட்டிக்காட்டத்தக்கது என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/220320

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.