Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

19 JUL, 2025 | 04:23 PM

image

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும் என  கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். 

நெடுந்தீவுக்கு வெள்ளிக்கிழமை (18)  சென்றிருந்த அமைச்சர் மக்கள் அமைப்புகள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடி, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டார்.

அதன் பின்னர் நெடுந்தீவு பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் விளக்கமளித்தார். அதனை தொடர்ந்து அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் ஊழல்வாதிகள் மற்றும் மோசடியாளர்கள் தப்பவே முடியாது. ஊழல் அரசியல் கலாசாரத்துக்கு முடிவு கட்டவே நாம் ஆட்சிக்கு வந்தோம். 

அதற்கே மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். அதற்கமைய ஊழல்களில் ஈடுபட்ட மோசடியாளர்கள் தற்போது சட்டத்தின் பிடிக்குள் சிக்கியுள்ளனர்.

நாம் சட்ட விவகாரத்தில் தலையிடவில்லை. சட்டம் தனக்குரிய வகையில் தனது கடமையை நிறைவேற்றும். அதேபோல மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாம் நிச்சயம் கட்டம், கட்டமாக நிறைவேற்றுவோம்.

இது தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை ஒரே இரவில் நிறைவேற்றிவிட வேண்டும் என சிலர் நினைக்கின்றனர். அது தவறு.

அதேவேளை, வறுமையின் கோரப்பிடிக்குள் இருந்து மக்களை மீட்பதற்காக சமூக சக்தி வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 

அரசியல், பொருளாதார மற்றும் சமூக மேம்பாடே எமது இலக்கு. அந்த சமூகமேம்பாட்டு திட்டத்தை வறுமை நிச்சயம் ஒழிக்கப்படும். அதற்குரிய வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன என்றார். 

fe89f694-042e-4d8c-9a36-1e3e3cbf9728.jpe

37b3c9d6-7313-41a2-9726-04ad71856f4a.jpe

c8c61251-2211-4a48-9edf-d8f4b37be27d.jpe

https://www.virakesari.lk/article/220394

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும்

நல்லவேளை சம்பந்தர் தப்பிவிட்டார். ம், இத்தனை சௌகரியங்களையும் அனுபவித்துக்கொண்டே நாட்டை கொள்ளையிட்டவர்கள் சும்மா விடுவார்களா? இல்லை ஓய்வூதியத்துக்கு முன்னாலேயே இரண்டு மடங்காக சூறையாடிவிடுவார்கள். அரசியல்வாதிகளின் ஓய்வுபெறும் வயதையும் நிர்ணயிக்க வேண்டும்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 20/7/2025 at 08:54, satan said:

அரசியல்வாதிகளின் ஓய்வுபெறும் வயதையும் நிர்ணயிக்க வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து : அமைச்சரவைக்கு வரைவு சமர்ப்பிப்பு

30 JUL, 2025 | 11:22 PM

image

(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்வது தொடர்பான சட்டவரைவினை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்வதற்காக சட்டவரைஞர் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்ட சட்ட வரைவு நீதியமைச்சினால் பரிசீலிக்கப்பட்டுள்ள நிலையில் இறுதி மீளாய்வுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்வதாக தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தது. இதற்கமைய சட்டவரைஞர் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்ட சட்டவரைவினை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு எதிர்வரும் வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த சட்டவரைவுக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்ததன் பின்னர் வர்த்தமானி அறிவித்தலில் சட்டமூலம் பிரசுரிக்கப்படும். அதன் பின்னர் சட்டமூலத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த 14 நாட்கள் காலவகாசம் வழங்கப்படும்.

https://www.virakesari.lk/article/221397

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓய்வூதியம் இரத்து : போர்க்கொடி தூக்கும் 500 முன்னாள் எம்.பிக்கள்

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளை இரத்து செய்வதற்கும், எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கும் தொடர்புடைய சட்டங்களில் திருத்தம் செய்வதற்கும், இரண்டு புதிய வரைவு சட்டமூலங்களை தயாரிப்பதற்கும் அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

இருப்பினும், இதற்கு பதிலளித்த ஓய்வுபெற்ற எம்.பி.க்கள் சங்கம், முன்னாள் எம்.பி.க்களின் ஓய்வூதியம் இரத்து செய்யப்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஜெனீவா மனித உரிமைகள் ஆணையத்திடம் முறைப்பாடு 

ஐநூறுக்கும் மேற்பட்ட முன்னாள் எம்.பி.க்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஓய்வுபெற்ற எம்.பி.க்கள் சங்கம், ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணையத்திடம் ஒரு கடிதத்தையும் சமர்ப்பித்துள்ளது, ஓய்வுபெற்ற எம்.பி.க்களில் பெரும்பாலானோர் நோய்வாய்ப்பட்டிருப்பதால், அவர்கள் வேலை செய்யவோ அல்லது தொழில் நடத்தவோ முடியாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் இரத்து : போர்க்கொடி தூக்கும் 500 முன்னாள் எம்.பிக்கள் | 500 Mps Demand Pension Payment

அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது கூட கடினமாக இருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இந்த ஓய்வூதியத்தை இரத்து செய்வது நியாயமற்றது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

https://ibctamil.com/article/500-mps-demand-pension-payment-1754220219

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.