Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு ஜூலை தமிழர் தேசத்தின் மீதான தாக்குதல் : 13 இராணுவத்தினர் கொல்லப்படாவிட்டாலும் அது இடம்பெற்றிருக்கும் : கொல்லப்பட்ட தமிழர்களின் பல உடல்களை பார்த்தேன் என்கிறார் சட்டத்தரணி  ஸ்ரீநாத் பெரேரா

Published By: RAJEEBAN

23 JUL, 2025 | 12:44 PM

image

சட்டத்தரணி  ஸ்ரீநாத் பெரேரா தமிழ் மக்களிற்கான நீதி அவர்களின் அரசியல் அபிலாஷைகளிற்காக தென்பகுதியிலிருந்து தொடர்ச்சியாக குரல்கொடுத்து வரும் ஒருவர்.

வடக்குகிழக்கில் தமிழ் மக்கள் தங்களது உரிமைக்காக போராடும் இடங்களில் எல்லாம் பார்க்ககூடிய தென்பகுதி முகம் அவர்.

கறுப்புஜூலை குறித்த அவரின் மனப்பதிவுகள்.

srinath_3.jpg

அவ்வேளை நான் சட்டபீட மாணவனாகயிருந்தேன், 24ம் திகதி நாங்கள் சட்டபீடத்தில் இருந்தவேளை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பெரும் புகைமண்டலம் எழுந்ததை பார்த்தோம்.

என்ன நடக்கின்றது என்பது எங்களிற்கு தெரியாது,தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

சந்திரஹாசனின் துணைவியார் அவ்வேளை எங்களின்  சிரேஸ்ட விரிவுரையாளர்களில் ஒருவர். அவர் அச்சத்தினால் நடுங்கியது எனக்கு இன்னமும் நினைவில் இருக்கின்றது.

நான் அவரிடம் சென்று என்ன பிரச்சினை என கேட்டேன், அதற்கு அவர் தமிழர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்படுகின்றன என தெரிவித்தார்.

அந்த நாட்களில் எங்களின் ஊடகங்களாக செய்தித்தாள்களும் வானொலிகளும் மாத்திரம் காணப்பட்டன, தொலைக்காட்சியின் ஆரம்ப நாட்கள்.

அன்று காலை முதல் நாள்( 23) 13 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்ற செய்தியை வாசித்திருந்தோம்.

அதன் பின்னர் பௌத்தர்கள் கனத்தையில் கூடியது குறித்தும்  சிங்கள காடையர்கள் தமிழர்களின் வீடுகளிற்கு தீ வைத்தது குறித்தும் கேள்விப்பட்டோம். 

எங்களை பல்கலைகழகத்திலிருந்து செல்லுமாறு கேட்டார்கள், பேருந்துகள் இல்லை, நான் எனது நண்பியுடன் காரில்  எனது ஊரான வாதுவை நோக்கி பயணித்தேன்.

காரில் செல்லும் வழியில் நான் வெள்ளவத்தை தெகிவளை பகுதிகளில்  ஏழு எட்டு உடல்களை பார்த்தேன். கடைகள் வீடுகள் எரிவதையும் உடல்களையும் பார்த்தேன் - 

நாங்கள் பயணித்த காரை அவர்கள் நிறுத்தினார்கள், யாராவது தமிழர்கள் இருக்கின்றார்களா என கேட்டார்கள் எங்களுடன் தமிழர்கள் எவரும் பயணிக்கவில்லை.

இராணுவத்தினர் டிரக்குகளில் காணப்பட்டனர், ஆனால் அவர்கள் காடையர்களை தடுப்பதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

கொழும்பு நான்கிலிருந்து தெகிவளை வரை 100க்கும் வீடுகள் கடைகள் எரிவதை பார்த்தேன்.

ஐக்கியதேசிய கட்சி அமைச்சர் சிறில்மத்தியு இதன் பின்னணியில் இருந்தார்.

எனது நகரான வாதுவையில்  தமிழர்கள் அதிகம் வசிக்கவில்லை, ஆனால் தமிழர் ஒருவரின் சுருட்டுக்கடையிருந்தது. வயதான தமிழ் தம்பதியினர் அந்த கடையை நடத்தினார்கள்.

சிறுவயதிலிருந்தே அவர்களை எனக்கு தெரியும், அப்பாவிகள்  அன்பாக நட்புடன் பழகுபவர்கள்.

அவர் எப்போதும் சாரம்தான் கட்டியிருப்பார்.

பகல் 12மணியளவில் அவரது கடை சிறிதளவு திறந்திருந்தது,

ஆனால் பகல் மூன்று மணியளவில் அந்த சுருட்டுக்கடையை எரித்துவிட்டார்கள் என்ற  தகவல் எனக்கு கிடைத்தது,

அந்த வயதான தமிழ் தம்பதியினர் அங்கிருந்து தப்பியோடி அருகிலிருந்த பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இது இனவெறியில்லை இனவெறி கலந்த சூறையாடல். அவ்வாறுதான் சம்பவங்கள் நடந்தன.

அன்று மாலை ஜேஆர் ஜெயவர்த்தன உரையாற்றினார், ஊரடங்கை அறிவித்தார், மூன்று அரசியல் கட்சிகளை தடை செய்தார்.

25ம் திகதி கொழும்பு வெலிக்கடை சிறையில் குட்டிமணி உட்பட தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர் என்பதை அறிந்தோம், அவர்களின் கண்கள் தோண்டப்பட்டன.

ஐக்கியதேசிய ஒரு கட்சியாக கறுப்பு ஜூலையுடன் தொடர்புபட்டிருக்கவில்லை, ஆனால் அந்த கட்சியின் இனவாத அணியின் சிறில்மத்தியு  கறுப்பு ஜூலைக்கு தலைமை வகித்தார்.

மிகவும் திட்டமிடப்பட்ட முறையிலேயே இது இடம்பெற்றது.

வாக்காளர் பட்டியலை வைத்தே தமிழர்களை அவர்களின் சொத்துக்களை தாக்கினார்கள், அது இல்லாமல் எப்படி அவர்களால் தமிழர்களை இலக்குவைத்திருக்க முடியும்.

ஆகவே இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட விடயம்,

13 இராணுவத்தினர் கொல்லப்படாவிட்டாலும் அவர்கள் இவ்வாறான ஒரு கலவரத்தை வன்முறையை முன்னெடுத்திருப்பார்கள்,

நான் கொழும்பு அன்டர்சன் தொடர்மாடியில் வசித்து வந்த எனது நண்பியொருவரை கொழும்பு பம்பலப்பிட்டியில் இருந்த அகதிமுகாமிற்கு கொண்டுசென்று அங்கு விட்டுவிட்டு வந்தேன். அவர் மிகுந்த அச்சத்துடன் காணப்பட்டார். அன்டசன் தொடர்மாடியிலிருந்த  சிங்களவர்கள் அவருக்கு உதவினார்கள்.

அவ்வேளை வடக்கிற்கு தப்பிச்சென்ற தமிழர்கள் ஆயிரக்கணக்கில் பின்னர் வெளிநாடுகளிற்கு புலம்பெயர்ந்தார்கள்.

தமிழ் புலம்பெயர் சமூகம் என்பது அப்படித்தான் ஆரம்பமானது, 1958 கலவரத்தின் பின்னர் வெளிநாடுகளிற்கு தப்பிச்சென்றவர்களும் உள்ளனர். ஆனால் 1983ம் ஆண்டின் பின்னரே பெருமளவானவர்கள் வெளிநாடுகளிற்கு சென்றார்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் வளர்ச்சியடைவதற்கு கறுப்பு ஜூலையே காரணமாக இருந்தது, பிரிந்து செல்வதை தவிர வேறுவழியில்லை என்ற நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டனர்.

இலங்கையின் வரலாற்றில் இதுவே மிகவும் இருண்ட பக்கம்.

ஆகவே இந்த நாளை நாங்கள் நினைவு கூருகின்றோம்,

இனிமேலும் இரத்தக்களறியில்லை. இனிமேலும் கறுப்பு ஜூலையில்லை என்ற கருபொருளில் கொழும்பில் நாங்கள் கறுப்பு ஜூலையை நினைவு கூரவுள்ளோம்.

கறுப்பு ஜூலை என்பது தமிழர் தேசத்தின் மீதான தாக்குதல், தனித்தனியாக தமிழர்கள் தாக்கப்பட்டாலும் இது தமிழர் தேசத்தின் மீதான தாக்குதல்.

நான் சிங்களவன் நானும் எனது குழுவினரும்  அந்த நாட்களிற்காக எங்கள் கவலையை வேதனையை தெரிவித்துக்கொள்கின்றோம்.

எங்களை சேர்ந்தவர்களின் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலிற்காக  வெட்கப்படுகின்றோம்.

https://www.virakesari.lk/article/220703

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஏராளன் said:

நான் சிங்களவன் நானும் எனது குழுவினரும்  அந்த நாட்களிற்காக எங்கள் கவலையை வேதனையை தெரிவித்துக்கொள்கின்றோம்.

எங்களை சேர்ந்தவர்களின் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலிற்காக  வெட்கப்படுகின்றோம்.

முதலில் தாக்குதல் நடத்தி, ஒரு இனத்தை அழிவின், இருளின் விளிம்புக்கு துரத்தினோம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், அதற்காக மன்னிப்பு கோரவேண்டும், இனிமேல் இப்படி நடக்காது என உறுதி செய்து பொறுப்பு எடுக்கவேண்டும். அப்போதான் உண்மையான நம்பிக்கை, நல்லிணக்கம், சமாதானம் ஏற்படும். அதைவிட்டு அந்த மக்களின் நிலங்களை பறிப்பதாலேயோ, அவர்களுக்கு பொருத்தமில்லாத கட்டிடங்களை எழுப்புவதாலேயோ, அவர்களை அச்சுறுத்துவதாலேயோ, அல்லது அவர்களை குற்றம் சுமத்துவதாலேயோ இழந்த ஐக்கியதை ஒருநாளும் கட்டியெழுப்ப முடியாது. மாறாக சந்தேகம், வெறுப்பு, பகைமை மட்டுமே வளரும். இதை புரிந்து கொள்ள அரசியல்வாதிகளுக்கும் அனுபவமில்லை, மத தலைவர்களுக்கும் ஞானமில்லை, கற்றவர்களுக்கும் அறிவில்லை. நமது தலைவர்களும் புலிகளை குற்றம் சுமத்தி இல்லாத குற்றத்திற்கு மன்னிப்பு கோரி அவர்களை நிஞாயப்படுத்துவதை விடுத்து, பிரச்சனைக்கான மூல காரணத்தை விளக்கி, எங்கிருந்து பிரச்சனை ஆரம்பித்தது, யார் ஆரம்பித்தார்கள் என்பதை விளக்க வேண்டும், ஏற்றுக்கொள்ள தூண்ட வேண்டும். அதை செய்வதற்கு வரலாறு தெரியாவிட்டால் விலகியிருக்க வேண்டும். நாம் குற்றவாளிகள் என்று அவர்களை சந்தோஷப்படுத்த முனைந்தால்; அவர்கள் தங்களை நிஞாயவாதிகளாக காட்டி நம்மை இல்லாமற் செய்ய வழி வகுக்கும். இதுவரையில் இத்தனை மக்களை கொன்றவர்கள், எங்களை விரட்டியவர்கள் ஒரு தடவையாவது மன்னிப்பு கேட்டார்களா? அல்லது தவறு நடந்து விட்டதென ஏற்றுக்கொண்டார்களா? ஆக்கிரமிப்பை நிறுத்தித்தான் கொண்டார்களா? ஒரு பக்கம் சமாதான கரம் நீட்டி பயனில்லை. தாக்குதலாளி உணரவேண்டும் உணர வைக்கப் பட வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.