Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'தந்திரமாக பேசி அழைத்துச் சென்றான்' - மென்பொறியாளர் ஆணவக்கொலையில் என்ன நடந்தது?

நெல்லை மென்பொறியாளர் ஆணவக்கொலை, கவின் செல்வ கணேஷ்

படக்குறிப்பு,கொலையுண்ட மென்பொறியாளர் கவின் செல்வ கணேஷூம், ஆறுமுகமங்கலத்தில் அவரது வீட்டு முன் கூடியுள்ள உறவினர்களும்

29 ஜூலை 2025, 02:47 GMT

நெல்லை பாளையங்கோட்டையில் காதல் விவகாரத்தில் மென்பொறியாளர் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த இளைஞரை அவரது தாயின் கண் முன்னே பெண்ணின் சகோதரர் கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட அவர் காவல் நிலையத்தில் ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்துள்ளார்.

காவல் சார்பு ஆய்வாளர்களான பெண்ணின் பெற்றோர் மீதும் சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. அவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி கொலையுண்ட இளைஞரின் உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோரும் குடும்பத்தினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னணி

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர் - தமிழ் செல்வி தம்பதியரின் மகன் கவின் செல்வ கணேஷ்(26). இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியை சேர்ந்த சரவணன் - கிருஷ்ணகுமாரி தம்பதியின் மகளை காதலித்து வந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. சரவணனும், கிருஷ்ணகுமாரியும் மணிமுத்தாறு பட்டாலியன் காவல் சார்பு ஆய்வாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களது குடும்பம் இதற்கு முன்பு தூத்துக்குடியில் இருந்தபோது அவரது மகளும் கவின் செல்வ கணேஷும் ஒரே பள்ளியில் படித்ததால் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு, அதுவே பின்னாளில் காதலாக மாறியுள்ளதாக காவல்துறை கூறுகிறது. காவல் சார்பு ஆய்வாளர் தம்பதியருக்கு சுர்ஜித் (24) என்ற மகனும் இருக்கிறார்.

நெல்லை மென்பொறியாளர் ஆணவக்கொலை, கவின் செல்வ கணேஷ்

படக்குறிப்பு,சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலை பார்த்துவந்தார் கவின் செல்வ கணேஷ்

என்ன நடந்தது?

கொலை தொடர்பாக போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது:

கவின் செல்வ கணேஷ் சென்னையில் மென்பொறியாளராக வேலை பார்த்து வந்த நிலையில், விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். உடல் நலமின்றி இருந்த அவரது தாத்தாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு சித்த மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் கவின் அழைத்து வந்துள்ளார்.

கவின் பாளையங்கோட்டை வந்திருந்ததை அறிந்த அவரது காதலியின் சகோதரரான சுர்ஜித் அந்த மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். கவினை சுர்ஜித் அழைத்துப் பேசிய போது ஏற்பட்ட வாக்குவாதம் ஆணவக்கொலையில் முடிந்துள்ளது.

தகவல் அறிந்த பாளையங்கோட்டை உதவி காவல் ஆணையர் சுரேஷ், ஆய்வாளர் காசி பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கவினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது சுர்ஜித் கொலை செய்தது உறுதியானதாக காவல்துறையினர் கூறுகின்றனர். இதையடுத்து விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் சுர்ஜித்தை கைது செய்தனர். விசாரணையில் ஆணவக்கொலை செய்ததை ஒப்புக்கொண்டு சுர்ஜித் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

நெல்லை மென்பொறியாளர் ஆணவக்கொலை, கவின் செல்வ கணேஷ்

சுர்ஜித் ஒப்புதல் வாக்குமூலம்

பிபிசி தமிழிடம் பேசிய விசாரணை அதிகாரி ஒருவர், "சுர்ஜித்தின் அக்காவும், கவின் செல்வ கணேஷ் ஆகிய இருவரும் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி பருவத்தில் இருந்தே ஒன்றாக படித்தனர். இருவரும் நட்புடன் பழகி வந்த நிலையில் நட்பு காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

கவின் பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் அவர்களது காதல் சுர்ஜித்துக்கு பிடிக்கவில்லை. இதுகுறித்து பல முறை சுர்ஜித் அவரது அக்காவை கண்டித்ததுடன், கவினையும் அழைத்து எச்சரித்துள்ளார்.

ஆனால், சுர்ஜித்தின் அக்கா வேலை பார்க்கும் பாளையங்கோட்டை தனியார் சித்த மருத்துவமனைக்கே சென்று அவ்வப்போது அவருடன் கவின் பேசியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) சித்த மருத்துவமனைக்கு கவின் வந்ததை அறிந்த சுர்ஜித் அவரை பின் தொடர்ந்து சென்று தனியாக அழைத்து மீண்டும் எச்சரித்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொலை செய்து விட்டதாக சுர்ஜித் வாக்குமூலம் கொடுத்தார்" என்று தெரிவித்தார்.

பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சுர்ஜித் மீது கொலை, சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கொலைக்கு சுர்ஜித்தின் தாய்-தந்தையே காரணம் என்றும், அவர்களையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்றும் கவின் குடும்பத்தினர் வலியுறுத்தினர்.

நெல்லை மென்பொறியாளர் ஆணவக்கொலை, கவின் செல்வ கணேஷ், சுர்ஜித்

படக்குறிப்பு,கைது செய்யப்பட்ட சுர்ஜித்

"கவினை தந்திரமாக பேசி சுர்ஜித் அழைத்துச் சென்றான்"

பிபிசி தமிழிடம் அழுது கொண்டே பேசிய கவினின் தாய் தமிழ் செல்வி, "எனக்கு இரண்டு மகன்கள், இதில் மூத்த மகன் கவின் செல்வகணேஷ். பொறியியல் முடித்துவிட்டு சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஐ.டி கம்பெனியில் வேலை செய்து வந்தான். பள்ளியில் படிக்கும் போதே கவினும் சுர்ஜித்தின் அக்காவும் நண்பர்களாக பழகி வந்தனர் என்பதால், எங்களது பின்னணி சுர்ஜித்தின் குடும்பத்துக்கு நன்றாகவே தெரியும்.

ஒரு வாரத்துக்கு முன் கீழே விழுந்த என் அப்பாவுக்கு திருச்செந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பார்த்தோம். அவருக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பது தொடர்பாக சுர்ஜித்தின் அக்காவிடம் ஆலோசனை பெறுவதற்காக அவர் மருத்துவராக பணியாற்றும் சித்த மருத்துவமனைக்கு கவின் அழைத்துச் சென்றான். கவினுடன் நான், எனது மற்றொரு மகன் மற்றும் என் சகோதரர் ஆகியோருடன் உடன் வந்திருந்தோம்." என கூறினார்.

நெல்லை மென்பொறியாளர் ஆணவக்கொலை, கவின் குமார்

மேலும் பேசிய அவர், "ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் சித்த மருத்துவமனைக்கு என் அப்பாவுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக ஆலோசனை பெற்றுக் கொண்டிருந்த போது சுர்ஜித் அங்கே வந்தான். அவனது பெற்றோர் கவினை பார்க்க வேண்டும் என கூறியதாக சொல்லி சுர்ஜித் அழைத்தான். அதை நம்பி சுர்ஜித்துடன் கவின் இருசக்கர வாகனத்தில் ஏறிச் சென்றான்.

சித்த மருத்துவ ஆலோசனை முடிந்த பின் நானும் எனது இளைய மகனும் மற்றும் என் தம்பி கேடிசி நகர் சாலையில் சென்ற போது எனது மகனுடன் சுர்ஜித் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தோம். இதனால், வண்டியை நிறுத்திவிட்டு அவர்கள் அருகில் சென்ற போது என்னை தகாத வார்த்தையில் சுர்ஜித் திட்டினான். அதன் பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் என் மகனை சுர்ஜித் கொலை செய்துவிட்டான். கவினை கொலை செய்ய தூண்டிய சுர்ஜித் பெற்றோர் சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

நெல்லை மென்பொறியாளர் ஆணவக்கொலை, கவின் குமார்

"ஒரு இளைஞனை சாதி மிருகமாக்கி உள்ளது"

சமூக செயற்பாட்டாளரான எவிடென்ஸ் கதிர் பிபிசி தமிழிடம் பேசுகையில், "பெற்றோர் காவல்துறையில் பணியாற்றும் நிலையில் எந்த குற்றப் பின்னணியும் இல்லாத இளைஞனால் அவரது அக்கா மாற்று சமூகத்தை சேர்ந்தவரை காதலிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாததற்கு சாதி வன்மமே காரணம்." என்றார்.

2022ஆம் ஆண்டு முதல்வரை சந்தித்து ஆணவ படுகொலைகளுக்கு தனி சட்டம் தேவை என்று மனு அளித்திருந்த நிலையில், இதுவரை எந்த தனி சட்டத்தையும் தமிழக அரசு இயற்றவில்லை என அவர் கூறினார்.

சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீதிமன்றங்கள் பலமுறை தீர்ப்பு அளித்தும் இதுவரை எந்த மாவட்டத்திலும் இது பின்பற்றப்படவில்லை எனவும் சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு காவல்துறையினர் உடனடியாக பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

"ஆணவப் படுகொலை செய்பவர்களுக்கு பிணையில் வெளியே வராத அளவுக்கு கடுமையான சட்டம் இயற்றி அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார் கதிர்.

நெல்லை மென்பொறியாளர் ஆணவக்கொலை, கவின் குமார் , எவிடென்ஸ் கதிர்

பட மூலாதாரம்,KATHIR

படக்குறிப்பு,ஆணவப் படுகொலை செய்பவர்களுக்கு பிணையில் வெளியே வராத அளவுக்கு கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் - எவிடென்ஸ் கதிர்

கவின் குடும்பத்தினர், உறவினர்கள் போராட்டம்

சார்பு ஆய்வாளர்களாக பணியாற்றி வரும் பெண்ணின் பெற்றோருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக கவின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். அவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலை முக்காணியில் கவின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அந்த சாலை வழியாக வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.

போராட்டம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. சுர்ஜித்தின் பெற்றோர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை உறுதிமொழி அளித்த பின்னரே முக்காணியில் சுமார் 3 மணி நேரம் நீடித்த சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

சுர்ஜித்தின் தாய், தந்தை ஆகிய இருவரும் கைது செய்யப்பட்ட பின்னரே கவின் உடலைப் பெற்றுக் கொள்வோம் என்று கவின் குடும்பத்தினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோர் சரவணன், கிருஷ்ணகுமாரி மீது சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cjdy548e5v7o

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக பெண்ணின் அண்ணன்மார், அப்பா, மாமாமார் போன்றோர்தான் காதலனை வெட்டுவார்கள் கொலை செய்வார்கள் என இந்திய செய்திகள் வரும். இங்கே பெண்ணின் தம்பிக்கு உரு ஏறிவிட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெல்லை ஆணவக் கொலை; கவின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

30 JUL, 2025 | 12:59 PM

image

திருநெல்வேலி: நெல்லை ஆணவக் கொலை விவகாரத்தில், பெண்ணின் பெற்றோர்களான காவல் உதவி ஆய்வாளர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே உடலை வாங்கப் போவதாக உறவினர்கள் உறுதிபடத் தெரிவித்துவிட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரன் சுர்ஜித் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சாரணடைந்த நிலையில் சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

கொலை செய்யப்பட்ட கவின்

சுர்ஜித் பெற்றோர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி இருவரும் காவல்துறை உதவி ஆய்வாளர்களாக உள்ளனர். எனவே இருவரையும் கைது செய்தால் மட்டுமே உடலை வாங்கி அடக்கம் செய்வோம் என கவினின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தது.

இந்நிலையில், இன்று அதிகாரிகள் வன்கொடுமை பாதிப்பு முதற்கட்ட நிதியை கொண்டு சென்று கவினின் தந்தை சந்திரசேகரிடம் கொடுக்க சென்றபோது தனக்கு நிதி தேவையில்லை; நீதிதான் வேண்டும். பெண்ணின் பெற்றோரான உதவி ஆய்வாளர்கள் கைது செய்யப்பட வேண்டும் எனக் கூறி நிதியை வாங்காமல் அதிகாரிகளை திருப்பி அனுப்பினார்.

இதனை அடுத்து வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள கவின் செல்போன் பாஸ்வேர்டை பெறவும் அதில் இருக்கும் தகவல்கள் குறித்து அறிந்து கொள்ளும் நடவடிக்கையிலும் காவல்துறை இறங்கியது. இதற்காக கவினின் சகோதரன் பிரவீன் மற்றும் உறவினர்களை பேச்சுவார்த்தைக்கு திருநெல்வேலிக்கு அழைத்து வந்தனர். மாநகர காவல் துறை ஆணையாளர் சந்தோஷ் முன்னிலையில் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கவின் மற்றும் அவர் காதலித்ததாக கூறப்படும் பெண் தொடர்பாக அவரது சகோதரர் உள்ளிட்ட உறவினர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. உடலை வாங்க வலியுறுத்தி காவல்துறை சார்பில் ஆணையாளர் சந்தோஷ் துணை ஆணையர் பிரசன்ன குமார் ஆகியோர் வலியுறுத்தினர். ஆனால் இவ்வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள நபர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே உடலை பெறுவோம் என அவர்கள் கண்டிப்பாக தெரிவித்துள்ளனர். இதனால் மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கவின் உறவினரும் வழக்கறிஞருமான செல்வம் கூறுகையில் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் உதவி ஆய்வாளர்கள் இருவரையும் கைது செய்யலாம். ஆனால் காவல்துறை அவர்களை கைது செய்ய மறுக்கிறது. அவர்களை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்கி அடக்கம் செய்வோம். இதே நிலை தொடர்ந்தால் இந்த வழக்கை வேறு முகமைக்கு மாற்ற கோரிக்கை கொடுக்க நேரிடும் என்று தெரிவித்தனர். வழக்கில் பாதிக்கப்பட்ட எங்களிடமே அதற்கான ஆதாரங்களை காவல்துறை கேட்கிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுர்ஜித்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் காதி மணி உத்தரவிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/221359

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெல்லை பொறியாளர் கவின் உடல் ஒப்படைப்பு - 5 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது எப்படி?

நெல்லை பொறியாளர் கவின்

படக்குறிப்பு, கவினின் உடலுக்கு அமைச்சர் கேஎன் நேரு மாலை அணிவிக்கிறார்

கட்டுரை தகவல்

  • பிரபுராவ் ஆனந்தன்

  • பிபிசி தமிழுக்காக

  • 30 ஜூலை 2025

    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் தலித் சமூகத்தை சேர்ந்த கவின் செல்வ கணேஷ் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட சுர்ஜித் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரது பெற்றோர் இருவரும் காவல்துறையில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுர்ஜித்தின் தந்தையான உதவி ஆய்வாளர் சரவணன் புதன் கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.

இனையடுத்து 5 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த கவினின் உறவினர்கள், அவரது உடலை பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்தனர்.

அதன்படி கவினின் தந்தை சந்திரசேகர், சகோதரர் பிரவீன், தாய்மாமா இசக்கிமுத்து மற்றும் உறவினர்கள் பாளையங்கோட்டையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு இன்று காலையில் வந்தனர். அங்கு உடலை ஒப்படைக்க ஏற்பாடுகள் நடைபெற்றது.

இந்நிலையில் காலை 10:30 மணி அளவில் அமைச்சர் நேரு, மாவட்ட ஆட்சியர் சுகுமார், பாளையங்கோட்டை தாசில்தார் முன்னிலையில் கவின் உடலை அவர்களது உறவினிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து அவரது உடலுக்கு மாலை அணிவித்தனர். தொடர்ந்து வாகனம் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பிபிசி தமிழிடம் பேசிய கவினின் தாய் மாமா இசக்கி முத்து,"சுர்ஜித்தின் மீது குண்டர் சட்டம் போட்டப்பட்டுள்ளது, அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிபிசிஐடி வழக்கை முன்னெடுக்கிறது. இது எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. எனவே தான் உடலைப் பெற்றுக் கொள்ள சம்மதித்தோம் " என்றார்.

இதனிடையே சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் சரிபார்ப்பு, ஆவணங்கள் எழுதும் பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும், கவின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் முடிவடைந்த பின்னர் மேற்கொண்டு விசாரணைகள் தொடங்கும் எனவும் சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவித்தன.

வழக்கில் இதுவரை நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயி சந்திரசேகர் மகன் கவின் செல்வகணேஷ். இவர் சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் அவர் கொலை செய்யப்பட்ட சம்பவம், நெல்லை மற்றும் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை சம்பவத்தில் இளம்பெண்ணின் பெற்றோர், சார்பு ஆய்வாளராக பணியாற்றி வரும் சரவணனுக்கும், கிருஷ்ணகுமாரிக்கும் தொடர்பு இருப்பதாக உயிரிழந்த கவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி வந்தனர்.

இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோர் சார்பு ஆய்வாளர்கள் சரவணன், மற்றும் கிருஷ்ணகுமாரி மீது காவல்துறையினர் சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து சரவணன், மற்றும் கிருஷ்ணகுமாரியை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு சிறப்பு காவல்படை டிஐஜி விஜயலட்சுமி உத்தரவிட்டார்.

ஆனால், இருவரையும் கைது செய்தால் மட்டுமே, கவினின் உடலை வாங்கி அடக்கம் செய்வோம் என உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டடனர்.

கவின் செல்வ கணேஷ்

படக்குறிப்பு, கவின் செல்வ கணேஷ் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலை பார்த்துவந்தார்

இதையடுத்து, நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி முன்னிலையில், நேற்று முன்தினம் இரவு 8 மணி வரை கவினின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஆனால், முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சுர்ஜித் பெற்றோர் இருவரையும் கைது செய்தால் மட்டுமே, கவினின் உடலை பெறுவோம் என அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்ததால் போலீசார் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

மேலும், நேற்று 5வது நாளாக கவின் சொந்த ஊரான ஆறுமுகமங்கலத்தில் அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

போராட்டங்களுக்கு நடுவே அமைச்சர்கள் கேஎன் நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் மற்றும் தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா மற்றும் நெல்லை சரக டிஐஜி சந்தோஷ் ஆகியோர் கவினின் பெற்றோரை சந்தித்து பேசினர்.

கொல்லப்பட்ட கவினின் குடும்பத்தாரிடம் காவல்துறை விசாரணை

படக்குறிப்பு,கவினின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறை

இதனிடையே சுர்ஜித்தை போலீசார் கைது செய்து, அவர் மீது கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில், சுர்ஜித்தை திருநெல்வேலியில் உள்ள இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிபதி ஹேமா, சுர்ஜித்தை 14 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கவினின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர் செல்வம், "காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் சுர்ஜித்தின் பெற்றோராரான உதவி ஆய்வாளர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும் இதுவரை காவல்துறையினர் அவர்களை கைது செய்யவில்லை, இருவரும் போலீசார் என்பதால் காவல்துறை கைது செய்யாமல் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது." என தெரிவித்தார்.

"இருவரையும் உடனடியாக காவல்துறை கைது செய்ய வேண்டும் என்பது எங்களது ஒரே கோரிக்கை. ஆனால், கொலையில் அவர்களுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் இருந்தால்தான் கைது செய்ய முடியும் என போலீசார் தரப்பில் சொல்கிறார்கள். ஆதாரத்தை நாங்கள் எப்படி உருவாக்க முடியும்? சட்டப்படி முதல் தகவல் அறிக்கையில் பெயர் சேர்த்தால் கைது செய்யலாம். ஆனால், பெயர்கள் சேர்க்கப்பட்டும், கைது செய்ய மறுக்கிறார்கள். இதனால் பேச்சுவார்த்தையில் எங்களுக்கு திருப்தி இல்லை", என வழக்கறிஞர் செல்வம் தெரிவித்தார்.

குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சுர்ஜித்

படக்குறிப்பு,குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சுர்ஜித்

சுர்ஜித் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

இந்நிலையில், சுர்ஜித் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

இது தொடர்பாக நெல்லை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''கடந்த 27ம் தேதி கவின் செல்வகணேஷ் (27) என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கில் தொடர்புடைய பாளையங்கோட்டை, கே.டி.சி.நகர், மங்கம்மாள் சாலையைச் சேர்ந்த சுர்ஜித்(23) கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில் மேற்சொன்ன வழக்கில் சம்பந்தப்பட்ட, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்ட சுர்ஜித்தை, திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்'' என குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவரின் தந்தை மற்றும் தாய் சார்பு ஆய்வாளர் என்பதால் விசாரணை பாரபட்சமின்றி நடக்க இருவரும் பணி இடை நீக்கச் செய்யப்பட்டுள்ளனர் என்றும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு விசாரணைக்கு மாற்றப்படுவதாகவும் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் அலுவலகத்திலிருந்து வெளியான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவின் செல்வ கணேஷ், குடும்பத்தினர்

படக்குறிப்பு,கவினின் வீட்டின் முன்பு உறவினர்கள்

திரைப் பிரபலங்கள் கண்டனம்

இதனிடையே திரைப் பிரபலங்கள் கண்டனங்கள் தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.

கமல்ஹாசன், இயக்குனர் மாரி செல்வராஜ், ஜி.வி.பிரகாஷ் தங்களது எக்ஸ் சமூக வலைதள பக்கம் வாயிலாக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், பாளையங்கோட்டையில் கவின் செல்வ கணேஷ் எனும் 27 வயது ஐடி ஊழியர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டு உள்ளார்.

''இந்தக் குற்றத்தைச் செய்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். கவினை இழந்து வாடும் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். சாதிய வன்கொடுமை எனும் சமூக இழிவிற்கு எதிராக அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்று திரள வேண்டும். சாதி தான் நம்முடைய முதல் எதிரி என்பதை உணர வேண்டும். முற்றுப்புள்ளி எட்டும் வரை போராட வேண்டும்'' என அறிக்கையில் கமல்ஹாசன் கூறியுள்ளார்

இயக்குநர் பா.ரஞ்சித், அவர் நடத்தி வரும் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ''சுர்ஜித்தின் பெற்றோர்கள் குற்றவாளியாகத் சேர்க்கப்பட்டிருந்தாலும், இன்னும் கைது செய்யப்படவில்லை. வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகளின் படி, வன்கொடுமை சம்பவம் நடந்த உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சம்பந்தப்பட்டவர்களை சந்திக்க வேண்டும் என்கிறது. இதுவரை ஆட்சித் தலைவர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லை. உடனடி ஊடக வெளிச்சம் கிடைக்கும் நவீன காலத்திலும் ஒவ்வொரு முறை இத்தகைய சம்பவங்கள் நிகழும் போது, பட்டியலின மக்கள் போராடித்தான் குறைந்தபட்ச நீதியை பெற வேண்டியிருக்கிறது, அப்படித்தான் கவினின் பெற்றோர்கள் நீதிக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.'' என தெரிவித்துள்ளார்.

அக்காவை காதலித்தவர் ஆணவக்கொலை: பெண்ணின் போலீஸ் பெற்றோர் சஸ்பெண்ட்:  கண்டன அறிக்கைகள்

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாஷ் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், ''தீண்டாமை ஒரு பாவச்செயல் தீண்டாமை ஒரு பெருங்குற்றம் தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்'' என குறிப்பிட்டுள்ளார்

இயக்குனர் மாரி செல்வராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ''நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம். சாதிய பெருமை வாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அரசு இன்னும் துரிதமானதாகவும் கடுமையானதாகவும் நிச்சயம் செயல்படுத்தியே ஆகவேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார்.

திருமாவளவன் கண்டனம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,'' தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆதிக்க சாதி கொலைகள், சாதி வெறி தாக்குதல்கள் தொடர்ந்து நிகழ்வது வேதனையளிக்கிறது. கெளரவம் என்ற பெயரில் நடக்கும் கொலைகளை தடுப்பதற்கான சட்டத்தை இந்திய சட்ட ஆணையம் வடிவமைத்து பல ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதுபோன்ற கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக மாநில அரசு உருவாக்க வேண்டும்'' என தெரிவித்திருந்தார்.

மேலும் உயிரிழந்த கவின் குடும்பத்தினரை திருமாவளவன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி பிரிவு தலைவர் ரஞ்சன் குமார், ''கவின் படுகொலை வழக்கை முதல்வரின் நேரடி பார்வையில் நடத்தினால் மட்டுமே நீதி கிடைக்கும். தென் மாவட்டங்களில் தொடரும் இதுபோன்ற படுகொலைகளை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என்று அறிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1w8j50epgjo

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர் ஒரு பகுதி காரணமாக (அதில் புரட்டும் இருக்கிறது) சொல்வது, தமிழருக்கு அதிகாரம் கொடுத்தால் இப்படியான நிலை ஏற்பட்டு விடும் என்று.

அன்றைய நிலையில் அதில் பகுதி நியாயம் இல்லாமலும் இல்லை. ஏனெனில் சாதியை கொண்டு பகுதி மக்கள் நாத்தப்பட் விதம்.

இலங்கைத்தீவில் தமிழரில் இப்படியாக நடப்பது மிக குறைவு.இலங்கைத்தீவில் தமிழரில் இப்படியாக நடப்பது மிக குறைவு.

அனால், இப்போதும் கிணற்றில் தண்ணி அள்ளக்கூடாது போன்றவை இருப்பது, தமிழ்நாட்டில் நடப்பது தொற்றிவிவிடுமோ என்ற கிலேசமும் வருகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.