Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

13 AUG, 2025 | 03:40 PM

image

https://www.dw.com

Jeevan Ravindran 

இலங்கையில் மனித புதைகுழியொன்று தோண்டப்படும் ஒவ்வொரு தருணத்திலும் தம்பிராசா செல்வராணி உறக்கமிழந்தவராக காணப்படுகின்றார்.

"எங்கள் உறவுகளிற்கு என்ன நடந்தது என்பது தெரியாது அவர்கள் தோண்ட ஆரம்பிக்கும்போது நாங்கள் பதற்றமடைகின்றோம்" என அவர் டிடயில்யூவிற்கு(dw) தெரிவித்தார்.

இலங்கையின் உள்நாட்டு போரின் இறுதி தருணங்களில் இலங்கைஇராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல்போன தனது கணவர் முத்துலிங்கம் ஞானசெல்வத்தை 54வயது செல்வராணி தேடிவருகின்றார். 3 தசாப்தகால மோதலின் பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் யுத்தம் முடிவிற்கு வந்தது.

அதன் பின்னர் பல பாரிய மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதகாலமாக தொல்பொருள் ஆய்வாளர்கள் செம்மணியில் உள்ள மனித  புதைகுழியை அகழ்ந்துவருகின்றனர், இது இலங்கையின் வடபகுதி தலைநகரமான யாழ்ப்பாணத்தின் புறநகரில் உள்ளது. இதுவரை குழந்தைகளினது எலும்புக்கூடுகள் உட்பட 140க்கும் அதிகமான எலும்புக்கூடுகளை மீட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் ஒரு ஆழமற்ற கல்லறையில் ஒன்றாக புதைக்கப்பட்டுள்ளனர்

73610200_906.jpg

செம்மணி 1998 முதல் ஒரு மனித குழியாகயிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட பகுதி. பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி பாலியல்வன்முறை கொலை வழக்கில் விசாரணையை எதிர்கொண்டிருந்த முன்னாள் இராணுவ கோப்பிரல், அந்த மாணவியுடன் உடலுடன் நூற்றுக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்திருந்தார்.

செம்மணியை சுற்றியுள்ள பகுதிகளில் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களுடன் 1990ம் ஆண்டு முதல்  தான் பணியாற்றுவதற்காக சட்டத்தரணி நிரஞ்சன் டிபில்யூவிற்கு தெரிவித்தார்.

"இதுவரை உடல்கள் தோண்டப்பட்டதில், உடல்கள் எந்தவித சட்டத்தடைகளும் இல்லாமல், ஆழமற்ற குறிக்கப்படாத புதைகுழியில் புதைக்கப்பட்டுள்ளமை" தெரியவந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

நாங்கள் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதுகின்றோம் என தெரிவித்த அவர் ஏற்கனவே இறந்தநிலையில் அவர்கள் புதைக்கப்பட்டிருந்தால் அவர்களின் உடல்கள் வளையாது என குறிப்பிட்டார். சிலரின் கைகால்கள் வளைக்கப்பட்டதாக தோன்றுகின்றது என அவர் குறிப்பிட்டார்.

அந்த இடத்தில் எலும்புக்கூடுகளுடன் செருப்புகள், ஒரு குழந்தையின் பால்போத்தல், குழந்தையின் பாடசாலை பை உள்ளிட்ட பல பொருட்களை கண்டுபிடித்துள்ளனர்.

காயங்களை கிளறுதல்

செம்மணிக்கு மிகவும் வலிமிகுந்த அதிர்ச்சிகரமான வரலாறு உள்ளது. குறிப்பாக யாழ்ப்பாண மக்களுடன் என யாழ்ப்பாணத்தை தளமாக கொண்ட அடையாளம் ஆய்வு கொள்கை ஆய்வு மையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அனுஷானி அழகராஜா தெரிவித்தார்.

அந்த காலத்தில் எங்களின் நண்பர்களின் சகோதரர்கள் தந்தைமார் சகோதரிகள் காணாமல்போனார்கள் என குறிப்பிட்டுள்ள அவர் இது நடந்து 25 வருடங்களாகிவிட்டது, இது மிகவும் பழைய காயங்களை கிளறுகின்றது, பாதிக்கப்பட்டவர்களிற்கு மாத்திரமில்லை, முழு சமூகத்திற்கும் முழுயாழ்ப்பாணத்திற்கும், இது உங்களால் உண்மையில் மறக்க முடியாத நினைவுபடுத்தல் என அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் இதுவரை இடம்பெற்ற மனித புதைகுழி விசாரணைகளில் செம்மணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக கவனத்தை ஈர்த்ததாக மாறியுள்ளது.

இந்த மனித புதைகுழி அகழ்வு சர்வதேச மேற்பார்வை என்ற கோரிக்கையை கிளறியுள்ளது குறிப்பாக இலங்கையின் தமிழ் சமூகத்திடமிருந்து.

ஜூன் மாதம் இந்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேக்கர் "பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை பெற்ற நம்பகதன்மை மிக்க உள்நாட்டு பொறிமுறைகளுடன் முன்னேறிச்செல்வதில் இலங்கை சிரமங்களை எதிர்கொண்டுள்ளது, இதன் காரணமாக இலங்கையர்கள் நாட்டிற்கு வெளியே நீதியை தேடுகின்றனர், சர்வதேச சமூகத்தின் உதவியுடன்" என தெரிவித்தார்.

அவர்கள் அடுத்தது யாரை கண்டுபிடிக்கப் போகின்றார்கள் என்பது தெரியாது

வோல்க்கெர் டேர்க்கின் விஜயத்தின் போது தமிழ் செயற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர், தம்பிராசா செல்வராணி அதில் கலந்து கொண்டு ஐநாவின் மனித உரிமை ஆணையாளரை நேரடியாக சந்தித்தார். இலங்கையின் நீதி பொறிமுறையில் தனக்கு நம்பிக்கை இல்லை என அவர் மனித உரிமை ஆணையாளரிடம் தெரிவித்தார்.

அம்பாறையின் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்கள் சங்கத்தின் தலைவி செல்வராணி, தனது மாவட்டத்தில் உள்ள மனித புதைகுழிகளையும் அகழவேண்டும் என அவர் தெரிவிக்கின்றார்.

'நாங்கள் அச்சமடைந்துள்ளோம், அடுத்தது யாரை கண்டுபிடிக்கப்போகின்றார்கள் என்பது எங்களிற்கு தெரியாது என டிடபில்யூவிடம் தெரிவித்த அவர் நான் இரவும்பகலும் இதனையே நினைத்துக்கொண்டிருக்கின்றேன் என்னால் நிம்மதியாக உறங்கமுடியவில்லை, உண்ணமுடியவில்லை, நான் பெரிதும் குழப்பமடைந்துள்ளேன் என தெரிவித்தார்.

கடந்த 17 வருடங்களாக, ஜனாதிபதிகள் மாறிக்கொண்டிருக்க நாங்கள் அவர்களிடம் எங்கள் பிள்ளைகள் எங்கள் அன்புக்குரியவர்களிற்கு என்ன நடந்தது என்ற உண்மையை தெரிவிக்கும்படி கேட்டுவருகின்றோம் என அவர் தெரிவித்தார்.

ஆனால் முன்னேற்றம் என்பது மிகவும் மெதுவானதாக காணப்படுகின்றது. ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளும் வேளை செல்வராணி தற்போதும் சிஐடியினரின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றார்.

"அவர்கள் நான் அங்கு செல்லக்கூடாது என தெரிவிக்கின்றனர், உங்கள் உறவினர்கள் இறந்துவிட்டனர் நீங்கள் ஏன் அங்கு செல்கின்றீர்கள் என கேட்கின்றனர்" என்கின்றார் செல்வராணி.

73610232_1004.webp

புதிய அரசாங்கம் பழைய பிரச்சினைகள்

இலங்கையின் வழமையான வம்சாவளி அரசியலில் இருந்து விலகி செப்டம்பர் 2024 இல் நாடு இடதுசாரி ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவை தெரிவு செய்தது.

எனினும் சட்டத்தரணி நிரஞ்சன் 'சந்தேகம் வெளியிடுகின்றார்' அரசாங்கங்களை நம்பமுடியாது என்பதை வரலாறு எங்களிற்கு தெரிவித்துள்ளது. அவர்கள் சர்வதேச கண்காணிப்பை எதிர்ப்பார்கள் என அவர் குறிப்பிடுகின்றார்.

அரசாங்கத்திற்கு இனப்பிரச்சினை குறித்த புரிதல் இல்லை அவர்கள் அதனை புரிந்துகொள்ளவில்லை என சட்டத்தரணி நிரஞ்சன் ஊழலை ஒழித்தால் நாடு அமைதியாகயிருக்கும் என அவர்கள் கருதுகின்றனர், ஆனால் "நாடு கடனிற்குள் சிக்கியமைக்கு இனப்பிரச்சினையும் ஒரு காரணம்" என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என குறிப்பிட்டார்.

மனித உரிமை சட்டத்தரணியும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான அம்பிகா சற்குணநாதனும் தனது நம்பிக்கையின்மையை வெளியிட்டார்.

"வரலாற்றுரீதியாக, மிக தெளிவாக இலங்கையின் ஒவ்வொரு அரசாங்கமும் பல்வேறு பொறுப்புக்கூறல் செயற்பாடுகளில் சர்வதேச உதவியை நாடுவதற்கு தயங்கியுள்ளன" என அவர் தெரிவித்தார்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க யுத்தகுற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவது தொடர்பில் தான் சர்வதேச உதவியை பெறப்போவதில்லை என தெரிவித்திருந்தார்.

அரசாங்கம் நீதியை நிலைநாட்டுவது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளது என்பது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் உள்ள நம்பிக்கையின்மையை அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டினார்.

அனுரகுமார திசநாயக்க அரசாங்கம் சர்வதேச மேற்பார்வையை கோரும் என தான் கருதவில்லை என அடையாளத்தின் அழகராஜா தெரிவித்தார்.

முன்னைய அகழ்வுகளில் இருந்து இம்முறை அகழ்வில் வித்தியாசமான எதனையும் பார்க்கவில்லை என அவர் தெரிவித்தார்.

73609952_906.jpg

தங்கள் பிள்ளைகளை செம்மணியில் பார்ப்போம் என எதிர்பாக்கும் குடும்பங்களை நான் சந்தித்தேன், அவர்கள் இந்த செயற்பாடுகள் தங்களிற்கு ஏதோ பதிலை தரப்போகின்றது என நம்பமுயல்கின்றார்கள், ஆனால் அவர்களின் நம்பிக்கைக்கான பதில் மிகவும் ஆபத்தானது என அவர் தெரிவித்தார்.

நம்பிக்கை என்பது எப்போதும் சிறந்தவிடயமல்ல, ஏனெனில் அது உங்களை மிக மோசமாக ஏமாற்றும் காயப்படுத்தும் குறிப்பாக இலங்கையில் என அழகராஜா தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/222491

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.