Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

"யாரோ ஒரு இயக்க டொக்கராம், அவர் தானாம் நிறையபேரை காப்பாற்றினாராம். எனக்கு பேர் மறந்துபோச்சுதடா. அவரும் இன்னொரு டொக்கரும் தான் அந்தப்பிள்ளையை காப்பாற்றினவ. உனக்கு அவரை தெரியுமோடா”

----செய்தியாளர் சகிலா

போர்முடிவுற்று ஒன்பது ஆண்டுகளாகிறது. மெல்ல மெல்ல ஒவ்வொருவரும் பேசுகிறார்கள். மனம் பதறும் சம்பவங்களை வேதனையுடன் பகிர்கிறார்கள்.

இறுதியுத்தகாலப்பகுதியில் செய்தியாளராக கடமையாற்றியவர் சகிலா. செய்தியாளராக பணியாற்றியவர்களில் ஒரே பெண் செய்தியாளரும் இவரே. குடும்பத்தில் இருவர் மாவீரர்கள். யுத்தத்தின் பின் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை. சிறையில் இருந்து விடுதலையாகியதும் அவளுக்கு கிடைத்த சமூகப்புறக்கணிப்பு. பல துயரங்களை சுமந்த ஒரு பெண்ணாகி என்னுடன் பேசும் போது “ ஒருதரும் என்னோடு பேசுவதில்லை, எனக்கு காசு ஒன்றும் வேண்டாம். நீ அடிக்கடி பேசிறியடா” என்று அப்பாவிதனமாக கேட்கும் சகிலாவின் துணிச்சல் மிக்க ஊடகப்பணிக்காகவே அவர் மதிக்கப்படவேண்டியவர்.

அதிகாலை நேரம், அனேகமான மக்கள் நித்திரையில் இருக்க, அனேகமான மக்கள் அங்கயும் இங்கயும் என்று மாறி மாறி ஓடிக்கொண்டிருந்த நேரமது. எறிகணைகள் வீழ்ந்து படுகாயமடைந்துகொண்டிருப்பார்கள். குண்டுசத்தங்கள் கேட்கும் திசையை நோக்கி சகிலாவின் கமரா விரைந்து செல்லும்.

24.03.2009 அன்று காலை 5 மணி புதுமாத்தளன் நீர்ப்பரப்பினை தாண்டி படையினரின் நிலைகளில் இருந்து ஏவப்பட்ட ஆர்.பி.ஜி உந்துகணை ஒன்று வைத்தியசாலையின் பின்புறத்தில் வசித்த பெண் ஒருவரின் கால்கள் துளைத்துக்கொண்டு வெடிக்காத நிலையில் இருந்துள்ளது. யுத்த காலத்தில் வெளியான நிழற்படங்களில் இதைப் பார்த்திருப்பீர்கள். சத்தம் கேட்கும் திசையை நோக்கி ஓடிச்சென்ற உறவினர்கள் வெடிக்காத நிலையில் இருந்த உந்துகணையோடு காயமடைந்த பெண்ணை வைத்தியசாலைக்குக் கொண்டு வந்திருந்தனர். அங்கு கடமையிலிருந்த மருத்துவர்கள் உடனடியாக செயற்பட்டு அப்பெண்ணைக் காப்பாற்றியிருந்தனர். இது எவ்வளவு பெரிய சவால் நிறைந்தது என்று அனைவருக்கும் தெரியும். அன்று அந்த உந்துகணை வெடித்திருந்தால் வைத்தியசாலையில் வைத்தியர்கள் உட்பட

பலர் இறந்திருப்பார்கள்.

“அக்கா நீங்கள் எப்படி பயமில்லாமல் அதில நிண்டீங்கள்? “ என்று கேட்க!

“உனக்கு தெரியாதடா, நான் விடியப்பறமே எழும்பிடுவன், பகலில் சனம் என்று, அதில ஒரு கிணற்றடியில குளிக்கபோறனான். வழமையாக வெள்ளனவே நான் வைத்தியசாலைக்கு போடுவன். அன்றும் அப்படிதான் போனன். நான் பயப்பிடேல. எப்படியாவது அந்தப்பிள்ளையை தூக்கிகொண்டு வரவேணும் என்று அதில் கிடந்த துணியில கிடத்தி தான் தூக்கிகொண்டு வந்தது. வைத்தியசாலைக்கு கொண்டுவந்தவுடன்; அதில் இருந்த எல்லாரும் ஓடிட்டினம். யாரோ ஒரு இயக்க டொக்கராம், அவர் தானாம் நிறையபேரை காப்பாற்றினாராம். எனக்கு பேர் மறந்துபோச்சுதடா. அவரும் இன்னொரு டொக்கரும் தான் அந்தப்பிள்ளையை காப்பாற்றினவ. உனக்கு அவரை தெரியுமோடா” இன்றும் அதே வழமையான பாணியில் எல்லாரையும் அன்பாக கேட்டார்.

சகிலா அக்கா ஊடகத்துறையினை விட்டு விலகியிருந்தாலும் அவர் நிச்சயம் மதிக்கப்படவேண்டிய ஒருவர். இணையங்களில் நீங்கள் பார்க்கின்ற இறுதியுத்தகால புகைப்படங்களை பலவற்றினை சகிலாவே எடுத்திருந்தார்.

நான், ஏன் சகிலா அக்காவை மதிப்புகுரியவராக பார்க்கிறேன். என்பதையும் சொல்கிறேன்.

பழைய மாத்தளன், புதுமாத்தளன், இடைக்காடு, அம்பலவன்பொக்கணை(பொக்கணை என்று அழைப்பது வழமை), வலைஞர்மடம், களுவாவாடி, இரட்டைவாய்க்கால், தனிப்பனையடி, முள்ளிவாய்க்கால் மேற்கு, முள்ளிவாய்க்கால் கிழக்கு,வட்டுவாகல் மேற்கு ஆகிய பிரதேசங்களே இறுதி யுத்தகாலப்பிரதேசங்களாகும். இதில் வட்டுவாகல் மேற்கு மட்டும் இறுதி நாட்களிலேயே மக்கள் அதிகளவு ஒதுங்கிகொண்ட பிரதேசமாகும்.

இப்பிரதேசங்களை நான்; நான்காக பிரிக்கின்றேன்.

01)பழைய மாத்தளன், புதுமாத்தளன், இடைக்காடு, அம்பலவன்பொக்கனை

02)வலைஞர்மடம்,களுவாவாடி,இரட்டைவாய்கால்

03)தனிப்பனையடி,முள்ளிவாய்க்கால் மேற்கு,முள்ளிவாய்க்கால் கிழக்கு

04)வட்டுவாகல் மேற்கு

இப்பிரதேசங்களில் முதல் பிரிவில் உள்ள பிரதேசங்கள் 2009 ஏப்பிரல் 20,21 ஆகிய நாட்களில் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் செல்கிறது. அத்துடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் படையினரின் பகுதிக்கு சென்று விட்டார்கள்.

இதில் அம்பலவன்பொக்கணைப்பிரதேசத்திலேயே சகிலா அக்காவும் அவரது தாயாரும் வசித்து வந்திருந்தனர்.

சிறிலங்கா படையினர் அம்பலவன்பொக்கணையை அண்மித்துக்கொண்டு இருக்கும் பொழுது தமிழீழ விடுதலைப்புலிகளின் காவலரண்கள் வலைஞர்மடம் பகுதியினை அண்மித்து அமைக்கப்பட்டிருந்தது. வலைஞர்மடத்தினை தாண்டி முள்ளிவாய்க்காலுக்கு எவரும் அன்றையநாளில் வரமுடியாதநிலை, அம்பலவண்பொக்கணையில் இருந்த பெரும்பாலானவர்கள் படையினரின் பக்கமும் முள்ளிவாய்க்கால் பக்கமும் முதல்நாள் சென்று விட்டனர். அதற்குள் அகப்பட்டிருந்த சகிலா அக்காவும் தாயாரும் உண்மையிலே படையினரின் பக்கமே செல்லவேண்டும். முள்ளிவாய்க்கால் வருவதற்கு வழியேதும் இல்லை. வருவதென்றால் விடுதலைப்புலிகளின் காவலரண்களைத்தாண்டித்தான் வரவேண்டும். அது கடினமான காரியம். இந்த நேரத்தில் தான் தற்துணிவோடு வலைஞர்மடம் கடற்பகுதிக்கு சென்று கடலுக்குள் இறங்கி கழுத்தளவு தண்ணியால் தனது தயாரையும் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு அழைத்துச்சென்றமையானது. சகிலா அக்கா ஊடகப்பணி மீது வைத்த அதீத அக்கறை தான் காரணம்.

இறுக்கமான சூழல், சாப்பாடு பிரச்சினை, வயதான பெற்றோர்களை பராமரிப்பதில் சிரமம். குழந்தைப்பிள்ளைகளுக்கான உணவுப்பொருட்கள் இல்லை. காயமடைந்தவர்கள் மீண்டும் மீண்டும் காயமடைகிறார்கள். இந்த நெருக்கடி நிலையில் தான் அப்பகுதியில் வசித்த பல ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் படையினர் பக்கம் சென்றிருந்தனர். படையினரின் பக்கம் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தும் அங்கே செல்லாமல் இறுதிநாள் வரைக்கும் அந்தப்பணியை செய்திருந்தார். இன்றுவரைக்கும் அனைவரும் இறுதியுத்தகால படங்களை பார்க்கின்றீர்கள் என்றால் அதற்கு சகிலா அக்காவின் உழைப்பும் அதில் நிறையவே இருக்கின்றது.

(சகிலா அக்கா பற்றிய விரிவான பகுதி நூலில் வெளிவரும்)

-->சுரேன் கார்திகேசு

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to போர்க்காலச் செய்தியாளர்களில் ஒருவரான சகிலா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.