Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவில் பிரமாண்ட இராணுவ அணிவகுப்பு

03 Sep, 2025 | 11:24 AM

image

சீனாவில் இரண்டாம் உலகப்போர் வெற்றி மற்றும் ஜப்பான் சரணடைந்ததன் 80-ஆண்டு நிறைவையொட்டி பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. 

பீஜிங் நகரில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பை சீன ஜனாதிபதி ஜின்பிங்குடன், ரஷ்ய ஜனாதிபதி புட்டின், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் உட்பட பலநாட்டு தலைவர்கள் பார்வையிட்டனர்.

இந்த அணிவகுப்பில் அதிநவீன போர் விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுஆயுத ஏவுகணைகள், புதிய நீர்மூழ்கி ட்ரோன்கள் உட்பட சீனாவின் இராணுவ வலிமையை உலகிற்கு பறைசாற்றும் ஆயுதங்களும் இராணுவ தளவாடங்களும் இடம்பெற்றிருந்தன.

5.jpg

1.jpg

https://www.virakesari.lk/article/224075

  • கருத்துக்கள உறவுகள்

அதிநவீன ஆயுதங்கள் அணிவகுப்பு: புதின், கிம் முன்னிலையில் ராணுவ வலிமையை காட்டிய சீனா

சீனா ராணுவ அணிவகுப்பு, சீனா, பெய்ஜிங், தியானன்மென், ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீனாவின் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் அணுஆயுத ஏவுகணை

9 மணி நேரங்களுக்கு முன்னர்

சீனாவில் இரண்டாம் உலகப்போர் வெற்றி மற்றும் ஜப்பான் சரணடைந்ததன் 80-ஆண்டு நிறைவையொட்டி பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. பெய்ஜிங் நகரில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பை சீன அதிபர் ஜின்பிங்குடன், ரஷ்ய அதிபர் புதின், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உள்பட பலநாட்டு தலைவர்கள் பார்வையிட்டனர்.

சீனா ராணுவ அணிவகுப்பு, சீனா, பெய்ஜிங், தியானன்மென், ஜின்பிங்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு, புதின், ஜின்பிங் மற்றும் கிம் முதல் முறையாக பொதுவெளியில் ஒன்றாக தோன்றியுள்ளனர்.

இந்த அணிவகுப்பில் அதிநவீன போர் விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுஆயுத ஏவுகணைகள், புதிய நீர்மூழ்கி டிரோன்கள் உள்பட சீனாவின் ராணுவ வலிமையை உலகிற்கு பறைசாற்றும் ஆயுதங்களும் ராணுவ தளவாடங்களும் இடம்பெற்றிருந்தன.

சீனா ராணுவ அணிவகுப்பு, சீனா, பெய்ஜிங், தியானன்மென், ஜின்பிங்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ராணுவ அணிவகுப்பில் ஈடுபட்டுள்ள வீராங்கனைகள்

சீனா ராணுவ அணிவகுப்பு, சீனா, பெய்ஜிங், தியானன்மென், ஜின்பிங்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ராணுவ அணிவகுப்பின் முடிவில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்

சீனா ராணுவ அணிவகுப்பு, சீனா, பெய்ஜிங், தியானன்மென், ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீன ராணுவ அணிவகுப்பில் நவீன ஆயுதங்கள் இடம் பெற்றிருந்தன

சீனா ராணுவ அணிவகுப்பு, சீனா, பெய்ஜிங், தியானன்மென், ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீனாவின் நவீன ராணுவ ஆயுதங்கள் இந்த அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டன.

சீனா ராணுவ அணிவகுப்பு, சீனா, பெய்ஜிங், தியானன்மென், ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீனாவின் ராணுவ உலங்கு வானூர்திகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

சீனா ராணுவ அணிவகுப்பு, சீனா, பெய்ஜிங், தியானன்மென், ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீனாவின் நவீன போர் விமானங்களும் அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தன.

சீனா ராணுவ அணிவகுப்பு, சீனா, பெய்ஜிங், தியானன்மென், ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீன கடற்படையின் கப்பல் மாதிரி

சீனா ராணுவ அணிவகுப்பு, சீனா, பெய்ஜிங், தியானன்மென், ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீன அதிபர் ஷி ஜின்பிங் வாகனத்தில் சென்று ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

சீனா ராணுவ அணிவகுப்பு, சீனா, பெய்ஜிங், தியானன்மென், ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீன கடற்படையின் நீருக்கடியில் சென்று தாக்கும் ஆயுதம் (டொர்பீடோ)

சீனா ராணுவ அணிவகுப்பு, சீனா, பெய்ஜிங், தியானன்மென், ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹச்எஸ்யு என்கிற சீன கடற்படையின் நீர்மூழ்கி ஏவுகணை

சீனா ராணுவ அணிவகுப்பு, சீனா, பெய்ஜிங், தியானன்மென், ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வானில் சாகசம் செய்த போர் விமானங்கள்

சீனா ராணுவ அணிவகுப்பு, சீனா, பெய்ஜிங், தியானன்மென், ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீன ராணுவ அணிவகுப்பு

சீனா ராணுவ அணிவகுப்பு, சீனா, பெய்ஜிங், தியானன்மென், ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அணிவகுப்பில் பங்கேற்ற சீன பீரங்கிகள்

சீனா ராணுவ அணிவகுப்பு, சீனா, பெய்ஜிங், தியானன்மென், ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீன ராணுவ அணிவகுப்பில் கலந்து கொண்ட தலைவர்களின் குழு புகைப்படம்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cj9w9x28z72o

  • கருத்துக்கள உறவுகள்

80 ஆயிரம் புறாக்களை பறக்கவிட்டு சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 80 ஆவது ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம்

Published By: Priyatharshan

03 Sep, 2025 | 04:20 PM

image

80 ஆயிரம் புறாக்களை பறக்கவிட்டு, சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 80 ஆவது ஆண்டு வெற்றி விழா, சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், இதன் நேரடி ஒளிபரப்பு கொழும்பில் உள்ள சீன தூதரகத்தின் ஏற்பாட்டில் சீனத் தூதுவரின் தலைமையில் இன்று புதன்கிழமை (3) காலை சினமன் லைப் ஹோட்டலில் இடம்பெற்றது.

WhatsApp_Image_2025-09-03_at_16.12.10.jp

WhatsApp_Image_2025-09-03_at_16.12.12__1

WhatsApp_Image_2025-09-03_at_16.12.12.jp

சீனாவில் இடம்பெற்ற வெற்றிக் கொண்டாட்டம் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் மற்றும் ஈரான், கியூபா உள்ளிட்ட 26 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

WhatsApp_Image_2025-09-03_at_16.12.19.jp

WhatsApp_Image_2025-09-03_at_16.12.16.jp

WhatsApp_Image_2025-09-03_at_16.12.18.jp

இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக சீனா பெற்ற வெற்றியின் 80 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

சீனாவின் முக்கிய இராணுவ அணிவகுப்பில் பங்கேற்பதற்காக வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 2) குண்டு துளைக்காத ரயில் மூலம் பெய்ஜிங் சென்றடைந்தார்.

"வரலாற்றை நினைவில் கொள்வோம், தியாகிகளை நினைவு கூர்வோம், பிரகாசமான எதிர்காலத்திற்காக அமைதியைப் போற்றுவோம்" என்ற முக்கிய கருப்பொருளில் சுமார் 70 நிமிடங்கள் இடம்பெற்ற இந்த வெற்றிக்கொண்டாட்டத்தின் போது, சீன இராணுவம் தனது அணு ஆயுத பலத்தை தரை, கடல் மற்றும் வான்வழி என மூன்று தளங்களிலும் ஒரே நேரத்தில் காட்சிப்படுத்தியது.

WhatsApp_Image_2025-09-03_at_16.12.19__1

தியான்மென் சதுக்கத்தில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு மரியாதையை சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் பார்வையிட்டார்.

"நீதி வெல்லும்" , "அமைதி வெல்லும்" மற்றும் "மக்கள் வெல்லும்" என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளைச் சுமந்துகொண்டு ஹெலிக்கொப்டர்கள் தியான்மென் சதுக்கத்திற்கு மேல் பறந்தன.

5 ஆவது தலைமுறையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், சீனாவின் அதிநவீன இராணுவ தளவாடங்கள், புதிய ரக டாங்கிகள், பீரங்கிகள் மற்றும் விமானங்கள் அணு ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

வான்வழி நீண்ட தூர அணு ஏவுகணை, நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஏவுகணை, தரைவழி சார்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஏவுகணை மற்றும் புதிய DF-31BJ தரைவழி சார்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன. அத்துடன் DF-5C திரவ கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஏவுகணை காட்சிப்படுத்தப்பட்டது. இந்த ஏவுகணை, உலகின் எந்த இலக்கையும் தாக்கும் திறன் கொண்டது என சீனா இராணுவம் தெரிவித்துள்ளது.

இதன்போது ஒய்ஜே-21 (YJ-21), டிஎஃப்-17 (DF-17) மற்றும் டிஎஃப்-26டி (DF-26D) போன்ற புதிய தலைமுறை ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்த ஏவுகணைகள் மிக அதிக வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டவை. மேலும், இவை எதிரிகளின் பாதுகாப்பு அரண்களை ஊடுருவி, இலக்குகளை மிகத் துல்லியமாகத் தாக்கும் சக்தி வாய்ந்தவை ஆகும்.

ஆளில்லா தரைப்படை, ஆளில்லா கடல்சார் போர்ப் படை மற்றும் ஆளில்லா விமானப் படை ஆகியவற்றின் அணிவகுப்புக்கள் இடம்பெற்றன. சமாதானத்தை வெளிப்படுத்தும் முகமாக 80 ஆயிரம் புறாக்கள் பறக்கவிடப்பட்டன. 

இந்நிகழ்வில் உரையாற்றிய சீன ஜனாதிபதி சீ ஜின் பிங்,  

80 ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற வெற்றி, நவீன காலத்தில் சீனா வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராகப் பெற்ற முதல் முழுமையான வெற்றி. போர் மீண்டும் நிகழாமல் இருக்க, போருக்கான அடிப்படைக் காரணத்தை ஒழிக்க வேண்டும் என்று அவர் உலக நாடுகளை வலியுறுத்தினார்.

மிகப் பிரம்மாண்டமான முறையில் இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பு, அமைதியான வளர்ச்சியின் பாதையைத் தொடர அதன் உறுதியையும், தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கான அதன் வலுவான ஆர்வத்தையும், உலக அமைதியைப் பாதுகாப்பதற்கான அதன் சிறந்த திறனையும்  எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது.

இந்த ராணுவ அணிவகுப்பில் 10,000க்கும் மேற்பட்ட சீன இராணுவ வீரர்கள், 100 க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான போர் வாகனங்கள் பங்கேற்றன. ஆளில்லா உளவு மற்றும் எதிர்ப்பு- ஆளில்லா கருவிகள், அதிவேக ஏவுகணைகள், இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஆற்றல் கொண்ட ஆயுதங்கள், மின்னணு  அமைப்புகள் மற்றும் உலகளாவிய தாக்குதல் திறன் கொண்ட மூலோபாய ஆயுதங்கள் போன்ற அதிநவீன ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிகளில் பங்கேற்ற சீன வீரர்கள் முதன்முறையாக இந்த வெற்றி தின அணிவகுப்பில் அணிவகுத்துச் சென்றனர்.

ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போரில் பங்களித்த சர்வதேச நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கும் சிறப்பு அழைப்புகள் விடுக்கப்பட்டிருந்தன. சீனாவில் வெற்றி தினத்தைக் கொண்டாடும் வகையில் பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் இன்று இரவு (செப்டம்பர் 3) சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

OhWupHOGx7CZniyO.jpeg

5qvhMH6Phqx6TvWF.jpeg

K30V5l28WlLPC9wr.jpg

1EUZCbhU25kJa2wk.jpg

z1yy5D1MVzMkdMxV.jpg

uDmGBqVHmgabJ3zx.jpg

AAKryOC1rhLuambn.jpg

M5QTj4idEjqr9Q81.jpeg

WsTKijDkN2DiO7kz.jpeg

TbCWi6kQVgfDtfK5.jpeg

pszEYffwBulWzkEc.jpeg

UyGhHm9gxbVStDR4.jpeg

je4AwYaj4ntoe9QU.jpeg

EjCOxAn9gvcNbkK0.jpeg

GBUbW9sqiP2KIVyw.jpeg

9iOUmTIvFQeKLvpP.jpeg

bKGX2pFyfE2KDdKH.jpeg

q8EyCzL69mhY27Rj.jpeg

96QKVC7Q0YIzOHM7.jpeg

ZzIvpvGpzP2u78Mv.jpeg

NhA8zG7f1apEUveL.jpeg

INQRUwXUvkAN9lhI.jpeg

https://www.virakesari.lk/article/224109

  • கருத்துக்கள உறவுகள்

Robo Wolves முதல் Under Water Drone வரை... China ஆயுதங்களின் பலம் என்ன? | China Weapons Display

சீனாவின் ராணுவ வலிமையை உலகுக்கு காட்டும் வகையில், பெய்ஜிங்கில் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இதில், புதிதாக உருவாக்கப்பட்ட ஏவுகணைகள், ட்ரோன்கள், லேசர் ஆயுதங்கள், கூடவே ரோபோ நாய்களும் களத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்த ராணுவ அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்ட சில ஆயுதங்கள் பற்றி சர்வதேச அளவில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அவை என்னென்ன? தனது ஆயுதங்களை காட்சிபடுத்தியதன் மூலம் சீனா சொல்ல வரும் செய்தி என்ன? இந்த காணொளியில் பார்க்கலாம்.

#China #VictoryParade #Weapons

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் ராணுவ அணிவகுப்பில் மோதி பங்கேற்காதது ஏன்? உலகுக்கு சொல்லும் செய்தி என்ன?

விளாதிமிர் புதின், ஷி ஜின்பிங், நரேந்திர மோதி

பட மூலாதாரம், Press Information Bureau (PIB)/Anadolu via Getty Image

படக்குறிப்பு, செப். 1ஆம் தேதி சீனாவில் நடந்த எஸ்.சி.ஓ மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் பிரதமர் மோதி பங்கேற்றார்.

கட்டுரை தகவல்

  • எழுதியவர்,முகமது ஷாஹித்

  • பிபிசி செய்தியாளர்

  • 4 செப்டெம்பர் 2025

சீனா புதன்கிழமை நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு மூலம் தன் பலத்தைக் காட்டியுள்ளது. இந்த அணிவகுப்பில் நிறைய ஆயுதங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.

இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பான், சீனாவிடம் சரணடைந்ததன் 80வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், இந்த மாபெரும் அணிவகுப்பு நடைபெற்றது.

இந்த அணிவகுப்பை விட சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் உடனான சந்திப்புதான் அதிக கவனம் பெற்றது. இவர்களை தாண்டி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர்.

ஆனால், ஷி ஜின்பிங், புதின் மற்றும் கிம் ஜாங் உன் பற்றிதான் விவாதம் நடைபெற்றது.

உலகளவில் அதிக தடைகளை எதிர்கொள்ளும் புதின் மற்றும் கிம் ஜாங் உன், பொது மேடையில் ஷி ஜின்பிங்கை நேரில் சந்திப்பது இதுவே முதல்முறை.

டிரம்பின் குற்றச்சாட்டும் ஷி ஜின்பிங்கின் பதிலும்

டொனால்ட் டிரம்ப், ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, 'சீனா யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சுவதில்லை' என ஷி ஜின்பிங் பதிலளித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் புதன்கிழமை தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். அதில், அமெரிக்காவுக்கு எதிராக சதி செய்ய ரஷ்யா மற்றும் வட கொரியாவுடன் இணைந்துள்ளதாக ஷி ஜின்பிங் மீது அவர் குற்றம் சாட்டினார்.

அதேசமயம், தனது உரையில் டிரம்பின் பெயரைக் குறிப்பிடாமல், 'சீனா யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சுவதில்லை' என ஷி ஜின்பிங் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து ஜிண்டால் பல்கலைக்கழகத்தில் சீன ஆய்வுகள் துறையின் பேராசிரியராக உள்ள ஸ்ரீபர்னா பதக் பிபிசி ஹிந்தி பாட்காஸ்டில் கருத்து ஒன்றை தெரிவித்தார். அதில், "இந்த ராணுவ அணிவகுப்பால் அமெரிக்கா சற்று அதிர்ச்சி அடைந்துள்ளது. அதனால்தான் காலையிலேயே டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் இரண்டாம் உலகப்போரின் போது சீனாவுக்கு அமெரிக்க ராணுவம் உதவியதாக குறிப்பிட்டிருந்தார்" என்கிறார்.

சீனா உட்பட பல நாடுகள் மீது அமெரிக்க அதிபர் இறக்குமதி வரி விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மீது 50% வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, அமெரிக்க இடையிலான உறவில் பல ஏற்ற இறக்கங்கள் இருப்பதற்கு மத்தியில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா, இந்தியா இடையிலான உறவில் ஒரு இணக்கம் தெரிகிறது.

2020ஆம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த ராணுவ மோதலால் இருநாட்டு உறவுகளிலும் விரிசல் ஏற்பட்டது. பின் டிரம்பின் வரிவிதிப்பால் இந்த உறவு மேம்பட்டுள்ளது.

கடந்த மாதம் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, இந்தியா வந்தார். பின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் சீனா சென்றார். மறுபுறம், பிரதமர் நரேந்திர மோதியும் 7 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா சென்றார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் (எஸ்.சி.ஓ) பங்கேற்றதை தாண்டி, சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடத்தினார். இது இந்தியா, சீன இடையிலான உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

ராணுவ அணிவகுப்பில் பிரதமர் மோதி பங்கேற்காதது ஏன்?

நரேந்திர மோதி, ஷி ஜின்பிங், விளாதிமிர் புதின்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, எஸ்சிஓ மாநாட்டின்போது பிரதமர் மோதி, ஷி ஜின்பிங் மற்றும் புதின் இடையே நல்ல நெருக்கம் காணப்பட்டது.

எஸ்.சி.ஓ மாநாட்டின்போது பிரதமர் மோதி, ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இடையே நல்ல நெருக்கம் காணப்பட்டது.

ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரை நடந்த எஸ்.சி.ஓ மாநாட்டில், 10 உறுப்பு நாடுகளின் உறுப்பினர்கள் தவிர கூட்டணி நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

புதன்கிழமை நடைபெற்ற ராணுவ அணிவகுப்பிலும், ரஷ்ய அதிபர் புதின், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் போன்ற பல தலைவர்கள் பங்கேற்றனர். 4 நாள் சுற்றுப்பயணமாக புதின் சீனா சென்றுள்ளார்.

எனினும், பிரதமர் மோதி இந்த அணிவகுப்பில் பங்கேற்காதது அதிக பேசுபொருளாகியுள்ளது.

பிரதமர் மோதி ஏன் ராணுவ அணிவகுப்பில் பங்கேற்கவில்லை?

இந்த கேள்விக்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆய்வு மையத்தின் இணைப் பேராசிரியர் அரவிந்த் யேலாரி பிபிசியிடம் பதிலளித்தார். "பாசிசத்துக்கு எதிரான சீனாவின் இந்த அணிவகுப்பு இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் ஆதிக்கத்துக்கு எதிரானது. அதனால் இந்த அணிவகுப்பில் பங்கேற்று ஜப்பானுக்கு எந்த செய்தியும் சொல்ல இந்தியா விரும்பவில்லை. இந்தியா பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்குதான் எதிரானதே தவிர ஜப்பானுக்கு அல்ல" என்றார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் இந்த அணிவகுப்பில் பங்கேற்றார். ஆனால், பிரதமர் மோதி பங்கேற்கவில்லை.

இதுகுறித்து ஸ்ரீபர்னா பதக் கூறுகையில், "ராணுவ அணிவகுப்பில் பங்கேற்க அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் பிரதமர் மோதி செல்லவில்லை. இந்த அணிவகுப்பு ஜப்பான் ராணுவத்துக்கு எதிரான கொண்டாட்டம். ஜப்பான் இந்தியாவின் நட்பு நாடு. சீனா இந்தியாவை இதற்கு முன் நம்பியதில்லை. இப்போதும் நம்பவில்லை" என்றார்.

அதேசமயம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ரஷ்ய மற்றும் மத்திய ஆசிய மையத்தின் இணைப் பேராசிரியர் அமிதாப் சிங்கும் அரவிந்த் யேலாரி மற்றும் ஸ்ரீபர்னா பதக்கின் கருத்தை ஒப்புக்கொள்கிறார். இவர் மேலும் ஒரு கூற்றை முன்வைக்கிறார்.

சீனாவின் ராணுவ அணிவகுப்பில் ரஷ்ய அதிபர் புதின், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பட மூலாதாரம், SPUTNIK/KREMLIN POOL/EPA/Shutterstock

படக்குறிப்பு, சீனாவின் ராணுவ அணிவகுப்பில் ரஷ்ய அதிபர் புதின், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சுதந்திரமாகவும், ஜனநாயக முறையிலும் செயல்படாத சக்திகளுடன் நிற்க இந்தியா விரும்பவில்லை என, பேராசிரியர் அமிதாப் சிங் கூறுகிறார்.

பிரதமர் மோதி முதலில் ஜப்பான் சென்றார், அதன்பின் அங்கிருந்து சீனா சென்றார். சீனா மற்றும் வடகொரியா உடனான ஜப்பானின் பதற்றமான உறவு நன்கு தெரிந்த ஒன்றாகும்.

"ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையில் தனிப்பட்ட விரோதம் உள்ளது. சீனாவில் தேசியவாத உணர்வை தூண்ட வேண்டும் என்றால், ஜப்பான் மற்றும் இரண்டாம் உலகப் போர் என்ற பெயர் குறிப்பிடப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், சீனா மற்றும் வடகொரியாவுடன் ஒரே மேடையை பகிர்ந்துகொள்வது இந்தியாவுக்கு அசௌகரியமாகவே இருக்கும்" என அமிதாப் சிங் கூறுகிறார்.

"நம்மை பொறுத்தவரை ஜப்பான் பாசிச சக்தி கிடையாது. அதனால்தான் இந்தியா இந்த அணிவகுப்பில் இருந்து விலகியது. ஒருவேளை இந்தியா இந்த அணிவகுப்பில் பங்கேற்றிருந்தால், அது சீனாவின் ராணுவ படைகளுக்கு ஆதரவளித்திருக்கும்" என அரவிந்த் யேலாரி கூறுகிறார்.

"இன்று எந்த பாசிச சக்திகளும் இல்லையென்றாலும்கூட, சீனா மற்றும் PLA (சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம்), தனது ராணுவ வலிமையை அதிகப்படுத்தி வருகிறது. பிரதமர் மோதியின் பங்கேற்பை சீனா தனக்கு சாதகமாகவும் பயன்படுத்தியிருக்கக் கூடும். அதனால்தான் பிரதமர் மோதி இதில் பங்கேற்கவில்லை" என்றும் அவர் கூறுகிறார்.

பிரதமர் மோதி அணிவகுப்பில் பங்கேற்காததற்கு டிரம்ப் காரணமா?

நரேந்திர மோதி, டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, பிரதமர் மோதி டிரம்புக்காக இந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்பில்லை என அமிதாப் சிங் கருதுகிறார்.

டிரம்பின் வரி விதிப்புக்குப் பிறகு இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவு சற்று கசப்பாக மாறிவிட்டது.

இந்தியாவுக்கு 50% வரி விதித்துள்ளார் அதிபர் டிரம்ப். பிரதமர் மோதியின் சீன பயணம் மற்றும் எஸ்.சி.ஓ மாநாட்டில் ஷி ஜின்பிங் மற்றும் புதின் உடன் நெருக்கமாக இருந்தது அமெரிக்காவுக்கான செய்தியாகவே கருதப்பட்டது.

சீனாவின் ராணுவ அணிவகுப்பில் பங்கேற்று டிரம்பை மேலும் கோபத்துக்கு ஆளாக்க வேண்டாம் என பிரதமர் மோதி நினைத்தாரா?

பிரதமர் மோதி டிரம்புக்காக இந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்பில்லை என அமிதாப் சிங் கருதுகிறார்.

"பிரதமர் மோதி இந்த அணிவகுப்பில் பங்கேற்காதது டிரம்புக்காக அல்ல என நான் நினைக்கிறேன். சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இந்தியாவுக்கு வந்து சென்ற பின் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் சென்றார். ஒருவகையில் அவர் இந்தியா மற்றும் பாகிஸ்தானை சமன் செய்ய முயற்சித்தார்" என்றார் அவர்.

மேலும், "இதற்கு முன்பாகவும் நிறைய வெளிநாட்டு தலைவர்கள் சமயத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அதேபோலவே, பிரதமர் மோதியும் முதலில் ஜப்பான் சென்றார்." என்றார்.

இந்த சந்திப்பு சீனாவின் உலக அரங்கில் இணைய விரும்பும் நாடுகளின் சந்திப்பாகும். அதனால் இந்தியா அதில் கலந்துகொள்ளவில்லை என அமிதாப் சிங் கூறுகிறார்.

"இந்த அணிவகுப்பில் பங்கேற்ற நாடுகளின் பட்டியலை எடுத்துப் பார்க்கையில் அவர்கள் அனைவரும் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சிவில் உரிமைகளில் கீழே உள்ளவர்கள். இந்த அணிவகுப்பு அதிகாரத்தை காட்சிப்படுத்த மட்டுமல்ல, மாற்று உலக அதிகாரத்துக்காகவும் ஆனது" என்றார்.

மோதியின் இருதரப்பு சுற்றுப்பயணம் ஒரு செய்தி சொல்லவே என்கிறார் அமிதாப் சிங். "சீனாவுடன் பல பிரச்னைகள் உள்ளன. அது ஒரே சுற்றுப்பயணத்தில் தீர்ந்துவிடாது எனபதை இந்தியா நன்கு அறியும்." என்றார்.

மேலும், "தற்போது உலகளவில் ஒற்றுமையை நிலைநாட்டும் ஒரு சூழல் உள்ளது. ஆனால், சீனா தலைமையிலான இந்த உலக ஒழுங்கில் இந்தியா பங்கேற்கவில்லை. இந்தியா, சுதந்திர மற்றும் ஜனநாயக உலக ஒழுங்குடன் இணைந்து நிற்கவே விரும்புகிறது" என்று அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.virakesari.lk/article/224244

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.