Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

13 Nov, 2025 | 12:42 PM

image

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட வீதிகளில் காணப்படுகின்ற பாதீனிச் செடிகளினை வேரோடு அகற்றுகின்ற பணியினை நல்லூர் பிரதேச சபை செவ்வாய்க்கிழமை (11) முதல் முன்னெடுத்து வருகின்றது.

குறித்த செயற்றிட்டத்தினை வினைத்திறனாக தொடந்து முன்னெடுக்கும் வகையில் ஒரு பிரத்தியேக அணி உருவாக்கப்பட்டு அவர்கள் வீதியோரங்களில் காணப்படுகின்ற பாதீனியச் செடிகளினை உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி அழித்து வருகின்றார்கள்.

நல்லூர் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இச் செயற்றிட்டம் தொடர்பில் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன் கருத்து தெரிவிக்கையில் வீதிகளில் காணப்படும் பாதீனிய செடிகளினை அழிக்கும் செயற்பாட்டினை எமது பணியாளர்கள் செய்து வருகின்றார்கள். 

இச் சம நேரத்தில் நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் வாழ்கின்ற பொது மக்களும் தங்கள் குடியிருப்பு வளாகங்களில் காணப்படுகின்ற பாதீனிச் செடிகளை உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி அழிக்கும் செயற்பாட்டினை முன்னெடுக்குமாறும் அவ்வாறு பிடுங்கப்படுகின்ற பாதீனிச் செடிகளினை அகற்றவேண்டும்.

எனின் அது தொடர்பில் நல்லூர் பிரதேச சபையுடன் தொடர்பு கொண்டால் அதற்குரிய ஏற்பாடுகளை நல்லூர் பிரதேச சபை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார். 

001__3_.jpg

001__2_.jpg

https://www.virakesari.lk/article/230217

  • கருத்துக்கள உறவுகள்

579387215_2074249666314601_2382563487012

580479922_2074249719647929_2731000258299

பார்த்தீனிய ஒழிப்பு என்ற பெயரில் கரைச்சி பிரதேச சபையால் மேற் கொள்ளப்பட்ட தீர்மானம் ஒன்றின் படி வேருடன் பிடுங்கி வந்து பிரதேச சபையில் ஒப்படைக்கப்படும் பார்த்தீனியம் செடிகளுக்கு கிலோ 200/- ரூபா வழங்கப்படும் என்பதற்கு இணங்க...

ஒருவர், 47 கிலோ பார்த்தீனிய செடிகளை புடுங்கி வந்து, ஒன்பதாயிரத்து நாநூறு (9400) ரூபாவை பெற்றுக் கொண்டார் என சொல்கிறார்கள்.

இதில் பிரச்சினை என்னவென்றால்.... பார்த்தீனிய செடியின் விதைகள் உடையில் ஒட்டியும், காற்றில் பரவியும் முளைக்கக் கூடிய தன்மை உடையதாம். மேலே இவர்... தனது மோட்டார் சைக்கிளின் பின்புறம் எவ்வித பாதுகாப்பும் இன்றி கட்டி வந்த பார்த்தீனிய செடியில் இருந்து விழுந்த விதைகள் எல்லா இடமும் பரவி இருக்கும் என்று பலர் அச்சப்படுகின்றார்கள்.

ஒரு தீர்மானத்தை எடுக்கும் போது... அதனைப் பற்றி தெரிந்தவர்களிடம் அறிந்து, அதன் நன்மை தீமைகளை ஆராய்ந்து எடுப்பதுதான் சிறந்த செயற்பாடாக இருக்க முடியும்.

582972738_859771046563347_91855356293561

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தீனிய பரவல் என்பது சுமார் 60% மனித நடவடிக்கைகள் மூலமே இடம்பெறுகிறது. குறிப்பாக பார்த்தீனியம் காணப்படும் ஒரு நிலத்தை உழவு செய்த அதே உழவு இயந்திரத்தால் பார்த்தீனியம் அற்ற நிலத்தில் உழவு மேற்கொள்ளும் போது பார்த்தீனியம் இலகுவாக பரவல் அடைகிறது.

ஒரு பார்த்தீனியம் செடியானது 10 ஆயிரம் தொடக்கம் 1 லட்சம் விதைகளை தன்னகத்தே கொண்டிருக்கும் இந்த பாரிய விதை இருப்பானதுதான் பார்த்தீனியம் ஒரு அபாயகரமான ஆக்கிரமிப்பு செடியாக அடையாளம் காணப்பட முதன்மை காரணமாகும். மிக நுண்ணிய மற்றும் எண்ணிக்கை அதிகமான விதைகள் என்பதால் விதைகள் முளைக்காமல் இருக்க விசிறப்படும் களை நாசினிகள் பார்த்தினிய முளைப்பை கட்டுப்படுத்துவதில்லை.

பார்த்தீனியம் செடிகளை கட்டுப்படுத்த வேண்டுமெனில் அதற்கான சரியான காலகட்டம் அது பூப்பதற்கு முந்தை பருவமே. அந்த பருவத்தில் அவற்றை பிடிங்கி அவ்விடத்தில் வைத்தே அழிப்பதுதான் மிகச்சிறந்த வழியாகும் பூக்காத செடியாயினும் வேருடன் பிடிங்கி வேறிடத்திற்கு கொண்டு செல்வதும் தவறாகும் வேர்களுடன் ஒட்டியிருக்கும் மண்ணில் ஏலவே விழுந்த விதைகள் நூற்றுக்கணக்கில் முளைக்காமல் ஒட்டியிருக்கும் இடமாற்றத்தின் போது அவை மண்ணில் விழுந்து செடியாக மாறும்.

மிக அதிகளவில் பொதுமக்கள் வந்து செல்லும் இடத்தில் அவற்றை கையாண்டமையினால் வந்து செல்லும் அனைத்து மக்களும் தங்களை அறியாமலே பார்த்தீனிய விதைகளை தங்கள் பாதங்களினாலும் பாதணிகளினாலும் காவிச்சென்று பார்த்தீனியம் அற்ற இடங்களில் அதை பரவலடைய வைக்கப்போகின்றனர்.

பார்த்தீனியம் அற்ற அதிகளவில் பொதுமக்கள் வந்து செல்லும் இடத்திற்கு பார்த்தீனியம் செடிகளை கொண்டுவந்தமையே முதல் தவறு.

-முகநூலில் இருந்து.-

Edited by தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.