Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெனிசுலாவின் ராணுவம் அமெரிக்க தாக்குதலைத் தாங்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • நோபெர்டோ பரெதஸ்

  • பிபிசி

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

லத்தீன் அமெரிக்காவுக்கு அருகில் உள்ள கடல் பகுதிக்கு அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டு விமானந்தாங்கி போர்க்கப்பல் வந்தடைந்துள்ளது. இது அமெரிக்கா மற்றும் வெனிசுவேலாவுக்கு இடையிலான அதிகரிக்கும் பதற்றத்தில் ஒரு திருப்புமுனையாகும்.

1989 பனாமா மீதான படையெடுப்புக்கு பிறகு, இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் பெரிய அளவிலான நடவடிக்கையை இது குறிக்கிறது.

மூன்று தசாப்தங்களுக்கு முன்பு போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை மானுவல் நோரிகா எதிர்கொண்டதைப் போல இப்போது வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அதே போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். அந்த குற்றச்சாட்டுகளை அவர் உறுதியாக மறுக்கிறார்.

வெனிசுவேலாவின் கரையோரங்களுக்கு அருகில் உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் அதிநவீன விமானந்தாங்கி கப்பலை நிலைநிறுத்தினாலும், அமெரிக்கா அதன் நோக்கங்களை தெளிவாக வெளிப்படுத்தவில்லை.

எவ்வாறாயினும், வெனிசுவேலா எதையும் எதிர்கொள்ளும் நிலைக்கு தயாராக இருப்பதாகத் தெரிகிறது.

கடந்த வாரம், பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பாட்ரினோ லோபஸ், மதுரோவின் அரசாங்கத்துக்கான (வெனிசுவேலா அதிபர்) அச்சுறுத்தலை எதிர்கொள்ள, நாடு முழுவதும் பொதுமக்கள் படைகளுடன் சேர்ந்து நிலம், கடல், வான்வழி, நதி மற்றும் ஏவுகணை படைகளை "பெரியளவில் நிலைநிறுத்த" இருப்பதாக அறிவித்தார்.

ஒரு தொலைக்காட்சி உரையில், இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக கிட்டத்தட்ட 200,000 துருப்புக்களை அணி திரட்ட மதுரோ உத்தரவிட்டுள்ளார் என்று பாட்ரினோ லோபஸ் கூறினார்.

அமெரிக்க விமானந்தாங்கி கப்பலின் வருகை என்பது, வெனிசுவேலாவில் செயல்படுவதாக டிரம்ப் குற்றம் சாட்டும் போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிரான அவரது ராணுவ நடவடிக்கையின் தீவிரப்படுத்தலாகப் பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை, படகு மற்றும் கப்பல்களில் பயணித்த 80க்கும் அதிகமான உயிர்களை ஏற்கனவே பறித்துள்ளது.

ஆனால் சில ஆய்வாளர்கள் இந்த நடவடிக்கை மதுரோவை பலவீனப்படுத்துவதற்கான அல்லது கவிழ்ப்பதற்கான பரந்த உத்தியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று வாதிடுகின்றனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற வெனிசுவேலா அதிபர் தேர்தல் ஒரு மோசடி என எதிர்க்கட்சிகள் மற்றும் சர்வதேச பார்வையாளர்களால் முத்திரை குத்தப்பட்டது. அமெரிக்கா மதுரோவின் அரசாங்கம் சட்டவிரோதமானது என்று கருதுகிறது.

'பலவீனமான படைப்பலம்'

மதுரோவின் படைகள் உலகின் மிக சக்திவாய்ந்த ராணுவத்தின் தாக்குதலைத் தாங்க முடியுமா?

செப்டம்பரில், மதுரோ வெனிசுவேலாவைப் பாதுகாக்க 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தயாராக இருப்பதாகக் கூறினார். அத்தகைய எண்ணிக்கையிலான ஒரு படைக்கு ஆயுதம் வழங்கும் வாய்ப்பும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

நிபுணர்கள் அந்த எண்ணிக்கையை கடுமையாக மறுக்கின்றனர்.

"அது உண்மை இல்லை. உண்மையான எண்ணிக்கை மிகக் குறைவு. மதுரோ கடந்த ஆண்டு 40 லட்சம் வாக்குகளை கூட பெற முடியவில்லை," என்று 2020 முதல் 2023 வரை கொலம்பியாவில் அமெரிக்க மூத்த தூதரக அதிகாரியாக இருந்த ஜேம்ஸ் ஸ்டோரி பிபிசியிடம் கூறினார்.

"ராணுவத்திலிருந்து வெளியேறும் விகிதம் அதிகமாக உள்ளது," என்றார் அவர்.

உத்தி ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் (ஐஐஎஸ்எஸ்) ஓர் அறிக்கை, வெனிசுவேலாவில் 123,000 துருப்புக்கள், அத்துடன் 220,000 பொதுமக்கள் படை மற்றும் 8,000 ரிசர்வ் படையினர் இருப்பதாக மதிப்பிடுகிறது.

வெனிசுலாவின் ராணுவம் அமெரிக்க தாக்குதலைத் தாங்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

வெனிசுவேலா வீரர்கள் அரிதாகவே பயிற்சி பெறுகிறார்கள், மேலும் சாவிஸ்டா படையில் உள்ள பல உறுப்பினர்களிடம் ஆயுதம் இல்லை என்று ஜேம்ஸ் ஸ்டோரி கூறினார்.

"ஒருவேளை ராணுவத்தில் ஒரு சில திறமையான பிரிவுகள் இருக்கலாம், ஆனால் ஒரு போரிடும் சக்தியாக, அவை குறிப்பாக திறமையானவை அல்ல."

வெனிசுவேலாவின் ராணுவம் முன்பு இருந்ததைப்போல் இல்லை என்று கூறும் அவர், ஆனால் பிராந்தியத்தில் சில தனித்துவமான வளங்கள் இன்னும் அதற்கு உள்ளன எனத் தெரிவித்தார்.

2006-இல் முன்னாள் அதிபர் ஹ்யூகோ சாவேஸ் ரஷ்யாவிடமிருந்து வாங்கிய சுமார் 20 சுகோய் போர் விமானங்களைத் தவிர, வெனிசுவேலா 1980-களில் அமெரிக்காவின் முக்கிய பிராந்திய கூட்டாளியாக இருந்தபோது, ஒரு டஜனுக்கும் அதிகமான அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட F-16 விமானங்களையும் வாங்கியது.

"சுகோய் தாக்குதல் ஜெட் விமானங்கள் பிராந்தியத்தில் உள்ள வேறு எதையும் விட உயர்ந்தவை, சில இன்னும் செயல்படுகின்றன. F-16 களைப் பொறுத்தவரை, ஒன்று அல்லது இரண்டு இன்னும் வேலை செய்கின்றன என்று நான் நினைக்கிறேன்," என்று ஜேம்ஸ் ஸ்டோரி குறிப்பிட்டார்.

விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள்

அக்டோபர் பிற்பகுதியில், அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், வெனிசுவேலா ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 5,000 இக்லா-எஸ் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை "முக்கிய வான் பாதுகாப்பு நிலைகளில்" நிலைநிறுத்தியுள்ளதாக மதுரோ அறிவித்தார்.

"உலகில் உள்ள எந்த ராணுவ சக்தியும் இக்லா-எஸ் இன் சக்தியை அறிந்திருக்கும்," என்று மதுரோ ஒரு தொலைக்காட்சி ராணுவ நிகழ்வின் போது கூறினார்.

வெனிசுலாவின் ராணுவம் அமெரிக்க தாக்குதலைத் தாங்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

இக்லா-எஸ் (Igla -S) என்பது குறுகிய தூர, குறைந்த உயரத்தில் செயல்படும் வான் பாதுகாப்பு அமைப்பாகும், இது க்ரூஸ் ஏவுகணைகள், டிரோன்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்களை சுட்டு வீழ்த்தும் திறன் கொண்டது.

வெனிசுவேலா சீனாவால் தயாரிக்கப்பட்ட VN-4 கவச வாகனங்களையும் கொண்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், தாக்குதல்களை நடத்தும் திறன் கொண்ட ஆயுதமேந்திய டிரோன்களைக் கொண்ட ஒரே தென் அமெரிக்க நாடாக வெனிசுவேலா உள்ளது. இதை மதுரோ 2022-இல் ஒரு ராணுவ அணிவகுப்பின் போது காட்சிப்படுத்தினார்.

வெனிசுவேலா இரானிடமிருந்து கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை ஏவும் வசதி கொண்ட பேகாப்-III எனும் வேகமான தாக்குதல் படகுகளையும் பெற்றுள்ளது.

அன்டோனியோ ஜோஸ் டி சுக்ரே 100 மற்றும் 200 (ANSU-100 மற்றும் ANSU-200) ஆகியவை இரானிய மாடல்களின் மேம்படுத்தப்பட்ட பதிப்புகளை அடிப்படையாகக் கொண்ட வெனிசுவேலாவில் தயாரிக்கப்பட்ட டிரோன்கள் ஆகும்.

கூடுதலாக, ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸி ஜுராவ்லெவின் கூற்றுப்படி, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பான்ட்சிர்-எஸ் 1 மற்றும் புக்-எம் 2 இ ஏவுகணை அமைப்புகள் சமீபத்தில் ஐஎல் -76 போக்குவரத்து விமானங்களில் வெனிசுவேலாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

'எளிதாக' வீழ்த்தக்கூடிய ஓர் அமைப்பு

ஆனால் "வெனிசுவேலா இருப்பதாகக் கூறுவதற்கும் உண்மையில் செயல்படுவதற்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது" என்று 100-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மையங்களின் நெட்வொர்க்கான பொருளாதார மற்றும் சமூக ஆராய்ச்சிக்கான பிராந்திய ஒருங்கிணைப்பாளர் அமைப்பில் (CRIES) வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச ஆய்வாளர் ஆண்ட்ரே செர்பின் பாண்ட் கூறுகிறார்.

வெனிசுவேலாவுக்குள் நேரடி தாக்குதல்கள் மேலும் தீவிரமடையக்கூடும் என்று வரும் அறிக்கைகளுக்கு மத்தியில், நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளன.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பெச்சோரா எனும் தரையிலிருந்து வானில் ஏவப்படும் ஏவுகணை அமைப்புகள் போன்றவை, இப்போது பயன்பாட்டில் இல்லாத 1960-களுக்கு முந்தைய வடிவமைப்பை கொண்டவை. அவை அமெரிக்க தொழில்நுட்பத்தால் "எளிதாக வீழ்த்தப்படலாம்" என்று செர்பின் பாண்ட் பிபிசியிடம் கூறினார்.

வெனிசுலாவின் ராணுவம் அமெரிக்க தாக்குதலைத் தாங்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

கொரில்லா போர்

மதுரோவும் அவரது நெருக்கமான வட்டமும் ஒரு கொரில்லா போரை நடத்த தயாராகி வருவதாக பல ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

செப்டம்பரில், வெனிசுவேலாவின் உள்துறை அமைச்சர் டியோஸ்டாடோ கபெல்லோ நாடு ஒரு "நீடித்த போருக்கு" தயாராக இருப்பதாக எச்சரித்தார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, மதுரோவின் அரசாங்கம் பொலிவேரியன் தேசிய ஆயுதப் படையிடம், ஏழை சமூகங்களைச் சேர்ந்த தன்னார்வலர்களுக்கு ஆயுதங்களைப் பயன்படுத்த பயிற்சி அளிக்க உத்தரவிட்டது.

வெனிசுவேலா மக்கள் மதுரோவின் பின்னால் அணிதிரள்வார்கள் என்ற கருத்தை ஜேம்ஸ் ஸ்டோரி நிராகரிக்கிறார்.

"மதுரோ ராணுவத்தாலோ அல்லது மக்களாலோ நன்கு விரும்பப்படவில்லை, அதனால்தான் மக்கள் அவரைப் பின்தொடர்வார்கள் அல்லது ஒரு கொரில்லா போரில் அவரை ஆதரிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை," என்று அவர் கூறினார்.

''வெனிசுவேலா ராணுவம் அமெரிக்காவுடன் ஓர் உண்மையான மோதலுக்கு தயாராக இல்லை,'' என்று கூறுகிறார்.

"ஒரு அண்டை நாடான கொலம்பியா அல்லது பிரேசில் உடனான மோதலில் வெனிசுவேலாவின் வழக்கமான ஆயுத அமைப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்," என்று அவர் விளக்கினார், ''ஆனால் அவை அமெரிக்காவிற்கு உண்மையான அச்சுறுத்தலை ஏற்படுத்தாது'' என்றும் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx2lekv1dn8o

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறுங்கோ. தலைவன் Trump பங்குச்சந்தையில எல்லாம் வாங்கி முடிஞ்ச பிறகு நிலைமை சாதாரணமா வந்திடும். பிறகு திருப்பி வித்திட்டு மறுபடியும் பங்குச்சந்தை இறங்கிறதுக்கு இப்பிடி எதாவது செய்யலாம்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெனிசுவேலாவை தாக்க அமெரிக்கா தயாராகிறதா? டிரம்ப் அறிவிப்பால் பதற்றம்

அமெரிக்கா - வெனிசுவேலா, டிரம்ப் மிரட்டல்

பட மூலாதாரம்,Getty Images

30 நவம்பர் 2025, 07:09 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வெனிசுவேலா வான்வெளி மூடப்பட்டிருப்பதாகக் கருதப்பட வேண்டும் என்பதன் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 'காலனித்துவ அச்சுறுத்தல்' விடுப்பதாக வெனிசுவேலா குற்றம்சாட்டியுள்ளது.

அந்நாட்டின் வெளிநாட்டு அமைச்சகம், டிரம்பின் கருத்துகளை வெனிசுவேலா மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சட்டவிரோதமான மற்றும் நியாயமற்ற தாக்குதல் என்று கூறியுள்ளது.

போக்குவரத்துத் துறையில் நிச்சயமற்ற சூழல் உருவாகவும், விமான நிறுவனங்கள் அங்கு விமானங்களை இயக்காமல் தவிர்க்கவும் டிரம்பின் இணையதள பதிவு, காரணமாக அமையக்கூடும்.

கரீபியன் தீவுகளில் தனது ராணுவ இருப்பை அமெரிக்கா அதிகரித்து வருகிறது. இது போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் முயற்சி என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அமெரிக்காவின் போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகள், 'தன்னைப் பதவியில் இருந்து அகற்றுவதற்கான முயற்சி' என்று கூறி நிராகரித்துள்ளார்.

டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) தள பதிவில், "விமான நிறுவனங்கள், விமானிகள், போதைப் பொருள் கடத்தல்காரர்கள், மனித கடத்தலில் ஈடுபடுபவர்கள் ஆகிய அனைவரும், வெனிசுவேலாவின் வான்வெளியும் அதைச் சுற்றியுள்ள பகுதியும் முழுவதும் மூடப்பட்டிருப்பதாகக் கருதவும்" என்று பதிவிட்டிருந்தார்.

இதுபற்றி கருத்து கேட்க பிபிசி தொடர்புகொண்டபோது, வெள்ளை மாளிகை உடனடியாக பதிலளிக்கவில்லை.

"வெனிசுவேலாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக"அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (எஃப்ஏஏ) விமான நிறுவனங்களை எச்சரித்த சில நாட்களுக்குப் பிறகு டிரம்பின் இந்த கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன.

"இந்த ஒழுக்கமற்ற தாக்குதல் செயலை உறுதியாக நிராகரிக்க சர்வதேச சமூகத்தையும், உலகின் சுயாட்சி அரசுகளையும், ஐநாவையும், இது தொடர்புடைய பல்தரப்பு அமைப்புகளையும் நேரடியாக அழைக்கிறோம்" என்று சனிக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில் வெனிசுவேலாவின் வெளிநாட்டு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கிறது.

முன்னதாக, 48 மணி நேர காலக்கெடுவுக்கு விமான சேவையை மீண்டும் தொடங்க தவறியதால், ஐபீரியா, டிஏபி போர்ச்சுகல், கோல், லாடம், ஏவியன்கா மற்றும் டர்கிஷ் ஏர்லைன்ஸ் ஆகிய ஆறு முக்கிய சர்வதேச விமான நிறுவனங்களின் விமானங்கள் தரையிறங்க வெனிசுவேலா புதன்கிழமை தடை விதித்தது.

உலகின் மிகப்பெரிய விமானந்தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்ட் கப்பலையும் சுமார் 15,000 படையினரையும் வெனிசுவேலாவுக்கு அருகில் அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

1989-ல் பனாமாவை ஆக்கிரமித்த பிறகு இந்தப் பகுதிக்கு இவ்வளவு பெரிய படையை அனுப்புவதற்கான காரணம் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகப் போராடுவதே என்று அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்கா - வெனிசுவேலா, டிரம்ப் மிரட்டல்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்டு விமானந்தாங்கி போர்க்கப்பல் (கோப்புப் படம்)

வெனிசுவேலாவில் தரைவழி போதைப்பொருள் கடத்தலை தடுத்து நிறுத்துவதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் மிக விரைவில் தொடங்கும் என்று டிரம்ப் வியாழனன்று எச்சரித்தார்.

அமெரிக்கப் படைகள் போதைப்பொருளை ஏற்றிச் சென்றதாகக் கூறி படகுகள் மீது குறைந்தது 21 தாக்குதல்களை நடத்தி எண்பதுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுள்ளன. எனினும், அந்த படகுகள் போதைப்பொருள் கொண்டு சென்றதற்கான ஆதாரங்களை அமெரிக்கா இதுவரை வழங்கவில்லை.

வெனிசுவேலா அரசாங்கம், இந்த அமெரிக்க நடவடிக்கையின் நோக்கம் மதுரோவை பதவி நீக்கம் செய்வதே என்று நம்புகிறது. கடந்த ஆண்டு அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதை வெனிசுவேலா எதிர்க்கட்சியும் பல வெளிநாடுகளும் மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டின.

மதுரோ தலைமையில் இயங்குவதாக அமெரிக்கா குற்றம்சாட்டும் கார்டெல் டி லாஸ் சோல்ஸ் அல்லது கார்டெல் ஆஃப் தி சன்ஸ் என்ற குழுவை, ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஒரு அமைப்புக்கு பயங்கரவாதக் குழு என்று முத்திரை குத்துவது, அமெரிக்க சட்ட அமலாக்க மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு அதை குறிவைத்து அகற்றுவதற்கான அதிகாரங்களை வழங்குகிறது.

வெனிசுலாவின் வெளியுறவு அமைச்சகம் இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cr4d262100yo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.