Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திஸ்ஸராமகமவில் மேலும் இரு சடலங்கள் மீட்பு

Featured Replies

திஸ்ஸராமகமவில் மேலும் இரு சடலங்கள் மீட்பு

[ த.இன்பன் ] - [ நவம்பர் 08, 2007 - 09:05 AM - GMT ]

சிறிலங்காவின் திஸ்ஸராமகம காட்டுப்பகுதியில் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் மேலும் இருவரின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.

ரன்மினிதென்னவிலிருந்து ஆறு கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள ஒசுவின்ன காட்டுப்பகுதியிலேயே இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் வீரகென பகுதியைச் சேர்ந்த அபயவர்த்தன(55) மற்றும் பத்மசிறி(54) ஆகியோரென அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தையடுத்து சிறிலங்கா படையினரும் காவல்துறையினரும் இணைந்து பாரிய தேடுதல் நடவடிக்கையை அப்பகுதிகளில் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை தமது தேடுதல் நடவடிக்கை முடியும்வரை குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் தமது கிராமங்களை விட்டு வெளியே செல்லவேண்டாமென படையினர் அறிவித்துள்ளனர்.

http://www.eelatamil.net/index.php?option=...6&Itemid=67

செத்தவை நாட்டுக்கு பிர்ரியோசனமாய் காட்டுக்கை கஞ்சா செடி வளர்க்கிறவை போல..?? இல்லை கசிப்பு காச்சுறவையோ.???

தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்த நேரடி சாட்சியான பெண் புலிகளே இதை செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும் ஊர் மக்ககள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில்" அரசாங்கம் புலிகளின் இந்த கொலைகளை மறைக்கப் பார்க்கிறது" என்று குற்றம் சாட்டுகின்றனர்.

அரசும் இந்த விடையத்தில் இருதலை கொள்ளிஎறும்பாக உள்ளது. ஏனெனில் இதே பகுதியில் புலிகள் நடமாடுவதாக செய்தி வெளியிட்ட ஊடக நிறுவனத்தின் (ஏ.பீ.சி) 5 ஊடகங்களை பொய் செய்தி வெளியிட்ட குற்றச்சாட்டில் தடை செய்யப்பட்டன. இப்போது அதை மறுக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் திண்டாடுகின்றது அரசு.

இந்த நிலமை அம்பாறை எல்லை கிரமங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு மிகுந்த நெருக்கடியை கொடுக்கும்!

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலமை அம்பாறை எல்லை கிரமங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு மிகுந்த நெருக்கடியை கொடுக்கும்!

ஏற்கனவே 80களில் இருந்து பெருமளவில் தமிழர் தரப்புக்குச் சிங்கள அரசு செய்து வருகின்ற ஒன்று தான். கொக்கிளாய் தொடக்கம் அம்பாறை வரைக்கும் இவ்வாறு நடந்திருந்தன. எனவே இதனால் தான் புதிதாகத் தொடங்கும் என்றில்லை.

அம்பாந்தோட்டையில் மேலும் இரு சடலங்கள் மீட்பு: மக்கள் மத்தியில் பதற்றம்

[வியாழக்கிழமை, 08 நவம்பர் 2007, 05:14 PM ஈழம்] [கொழும்பு நிருபர்]

அம்பாந்தோட்டைப் பகுதியில் இன்று காலை மேலும் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதையடுத்து அப்பகுதி மக்கள் மத்தியில் பதற்ற நிலை உருவாகியுள்ளது. இது தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற இரு ஊடகவியலாளர்கள் சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.

அம்பாந்தோட்டை ரன்மினித்தெனவில் இருந்து 12 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள கலறா என்ற இடத்திலேயே இன்று வியாழக்கிழமை காலை 8:30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று நள்ளிரவு அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகவும் அந்த வேளையிலேயே இவர்கள் படுகொலை செய்யப்ட்டிருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தற்போது காவல்துறையினரும், படையினரும் இணைந்து அப்பகுதியில் பாரிய அளவிலான தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர். தேடுதல் நடவடிக்கை முடியும் வரை பொதுமக்கள் எவரையும் காட்டுப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மர்மமான முறையில் இடம்பெறும் இத்தகைய படுகொலைகளையடுத்து ஆத்திமடைந்திருக்கும் சிங்கள மக்கள் அங்குள்ள தமிழ் மக்களின் பகுதிகளில் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்ற அச்சத்தில் பெருமளவான காவல்துறையினரும், படையினரும் அப்பகுதிகளுக்கு நகர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே அம்பாந்தோட்டை காட்டுப்பகுதியில் ஆயுதம் தரித்த குழுவினர் நடமாடுவதாகவும் மர்மமான முறையில் படுகொலைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், தமக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.

இப்பகுதியில் ஆயுதம் தரித்தவர்கள் நடமாடுவதாக ஏற்கனவே தாம் காவல்துறையினருக்கும், படையினருக்கும் அறிவித்திருந்த போதும் அவர்கள் பாதுகாப்பு வழங்கவில்லை என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையிலேயே இன்றைய தினம் மேலும் இருவரின் சடலங்கள் அப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

பிந்திக் கிடைத்த தகவலின்படி சிங்களக் காடையர்கள் எதிர்ப்படும் தமிழர்களை தாக்குவதற்காக நிற்பதாகவும் சிலர் குழுக்களாக காட்டுக்குள் புகுந்து காவல்துறையினருடன் இணைந்து தேடுதல் நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.puthinam.com/full.php?20ZRs920e...d43uQF2b02STF3e

polonnaruwaUR.gif

Edited by சாணக்கியன்

ஏதிர்வு கூறியபடி நிகழ்வுகள் நடைபெற ஆரம்பித்துள்ளன.

இன்றைய நிலையில் அப்பகுதி தமிழ் மக்கள் பெரிதும் சிங்களவரை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.

நிலமையை சமாளிப்பதற்காக முஸ்லீம்கள் முந்திக் கொண்டு தங்களிலும் மூவரை காணவில்லை என காவல்துறையில் புகார் செய்துள்ளனர்.

அப்பாவி தமிழ் மக்கள் மேலும் பாதிக்கப்படுவதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாக இருப்பது கண்டிக்கத்தக்கது!

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா சானக்கியா...இது புலிகள் மேல் வெறுப்பை உண்டுபண்ணுவதற்க்கும் இன்னும் ஏன் புலிகள் ஒரு சிங்களவரையும் தாக்காமல் இருக்கனி;றார்கள் வெளி உலகில் அரசியல் பன்னுவதற்கு என்று நினைப்பவர்களும் சேர்ந்து செய்யும் நாடகம் இதுக்கு தமிழனா இருந்து கொண்டு நீங்களும் எடுபட்டு இருப்பது கண்டு இந்த யாழகளம் வெட்கி தலை குனிகின்றது...

உங்களோட முகழூடிய களட்டி வைத்து விட்டு நேரடியாகவே எழுதலாமே?............

திரு சுண்டல்,

கருணாநிதி, வை.கோ., ஆனந்தசங்கரி என்று எல்லோரையும் பற்றி எழுதினேன், அப்போது கேட்காத கேள்வி இப்போது கேட்கிறீர்கள்?

புலிகள் உங்களை சந்தோசமாக வைத்திருப்பதற்காகவோ, அல்லது உங்கள் கண்ணீர் அஞ்சலிகளுக்கோ அன்றி மக்களுக்காகவே போராடுவதாகவே நான் நினைக்கிறேன்.

மக்களுக்கு ஆபத்து எற்படப்போவது பற்றி என் ஆதங்கத்தை கூறினேன், நீங்கள் கூறும் வியாக்கியானத்திற்கு ஆதாரங்களை அல்லது உங்கள் கருத்தை முன்வையுங்கள். அதை விடுத்து ஏன் முகமூடியை கழற்று, நேராக வா! என்று வீம்புப் பேச்சு?

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இதை புலிகள் தான் செய்கின்றார்கள் என்று உங்களால் நிரூபிக்க முடியுமா? நீங்கள நிரூபித்தால் நானும் ஆதரங்களை வைக்க தயார்...

  • கருத்துக்கள உறவுகள்

நான் பிழைய விளங்கி எழுதினதால எனது கருத்தை எடுத்து விடுறேன். மன்னிக்கவும்.

Edited by Sabesh

தமிழ்மக்களில் ஒருசாரார் தமிழ்நெட், புதினம் போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டதும் எதிர்கேள்வியின்றி அதை 100% ஏற்றுக்கொள்வர்.

அதேபோல் சிறிலங்கா ஊடக மத்திய நிலையம், லங்காதீப, லங்காஈநியூஸ் போன்ற ஊடகங்கள் செய்திவெளியிட்டதும் பெரும்பாலான சிங்கள மக்களும் அதை 100% ஏற்றுக்கொள்கின்றனர்.

இதில் பெரும்பாலும் இருசாராரும் ஒருவருக்கு ஒருவர் குறித்த ஒரு சம்பவம் பற்றி முரணாகவே செய்திகள் வெளியிடுவது வழக்கம்.

இதில் வேடிக்கை என்னவென்றால், அதே சிங்கள ஊடகங்கள் அனுராதபுர தாக்குதல் குறித்து முந்திக் கொண்டு புகைபடங்களை வெளியிட்டபோது எந்த தயக்கமோ கேள்விகளோ இன்றி, ஆதாரம் கூட கேற்காமல் யாழ்கள கருத்தாளர்கள் பலர் அதைப்பற்றி கருத்துகளாக எழுதி கொண்டாடினார்கள் .

இதைப்போலவே மட்டக்களப்பு வெபர் அரங்கில், வெளிநாட்டு இராஜதந்திரிகள் தரையிறங்கிய போது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களையும், இங்கு சில கருத்தாளர்கள் தாம் சார்ந்த நிலைப்பாட்டை பாதுகாக்கும் பொருட்டு முந்திக் கொண்டு மறுப்பறிக்கைகள், வியாக்கியானங்கள் என்பவற்றை வெளியிட ஆரம்பித்தனர். ஆனால் சிறிது தாமதமாக விடுதலைப் புலிகளின் பேச்சாளர் இளந்திரையன் தாக்கியது தாமே என்று அறிக்கை விட அதிர்ந்து போயினர்.

மக்களின் வாழ்க்கை போக்கை தீர்மாணிக்கும் சக்தி இன்று பெரும்பாலும் ஊடகங்களின் கைகளில் உள்ளது. தமக்கு ஊட்டப்பட்ட செய்திகளினுடே மக்களும் கருமமாற்ற முயற்சிக்கின்றனர். அவர்கள் தேர்தல்களின் போதும் கலவரங்களின் போதும் இவற்றை வெளிப்படுத்துகின்றனர்.

எனவே மக்கள் ஊடகங்களால் வரையப்படும் வட்டத்திற்குள் தாமாகவே போய் நின்று கொண்டு கோசமிடாமல், மனிதனுக்கு என்று விசேடமாக கிடைத்த திறனை உபயோகித்து அறியப்படும் செய்திகளை பகுப்பாய்வு செய்து முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்!

Edited by சாணக்கியன்

சிங்கள பகுதிகளில் நடை பெறும் இப்படியான விடயங்கள் புலிகள் மீது பழியை போட்டாலும், அங்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் அங்கு சிங்கள மக்கள் பாதுகாக்க பட வேண்டியவர்கள் ஆகின்றார்கள்....!

சிங்கள மக்களை பாதுகாக்கும் பொருட்டு எடுக்கப்படும் நடவடிக்கைகளால் வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசம் சிங்கள இராணுவத்தின் தாக்குதல் படுகொலைகள் உக்கிரத்தில் இருந்து வெளியேறும்....!

மேலும் அண்மையில் வவுனியாவில் 5 தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டதற்கு இத்தனை முக்கியத்துவமோ அல்லது பதில் நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை. அது ஏதோ வழமையானது போன்ற ஒரு நிலமையே காணப்பட்டது!

தவளை அவியல் தான் சிறந்த முறை போல் தெரிகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.