Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிகூடிய வெற்றி இலக்கைக் கடந்த அணி என்ற சாதனையுடன் 19இன் கீழ் உலகக் கிண்ண அரை இறுதிக்கு முன்னேறியது இந்தியா

Published By: Vishnu

04 Feb, 2026 | 09:13 PM

image

(நெவில் இந்தியா)

ஹராரே, குவின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்றைய தினம் (04) கணிசமான மொத்த எண்ணிக்கைகள் குவிக்கப்பட்ட ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட்களால் மிக இலகுவாக இந்தியா வெற்றிகொண்டது.

0402_u_19_wc_india_in_final.jpg

இந்த வெற்றியுடன் பெப்ரவரி 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை இந்தியா எதிர்த்தாடவுள்ளது.

ஆப்கானிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட மிகவும் கடினமான 311 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 41.1 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 311 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இதன் மூலம் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ணப் போட்டியில் அதிகூடிய வெற்றி இலக்கை விரட்டிக்கடந்த அணி என்ற சாதனையை இந்தியா நிலைநாட்டியது.

இலங்கையில் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் அயர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 305 ஓட்டங்களை நியூஸிலாந்து விரட்டிக்கடந்து ஈட்டிய வெற்றியே முந்தைய விரட்டிக்கடக்கப்பட்ட  அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது.  

0402_aaron_george_celebrates_his_century

இன்றைய போட்டியில் ஆரம்ப வீரர்களான ஆரோன் ஜோர்ஜ் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி சதம் குவித்ததுடன் மூன்று பெறுமதி வாய்ந்த இணைப்பாட்டங்களில் பங்களிப்பு செய்து இந்தியாவின் வெற்றியை இலகுவாக்கினார்.

ஆரம்ப விக்கெட்டில் வைபவ் சூரியவன்ஷியுடன் 57 பந்துகளில் 90 ஓட்டங்களையும் இரண்டாவது விக்கெட்டில் அணித் தலைவர் அயூஷ் மஹாத்ராவுடன் 101 பந்துகளில் 114 ஓட்டங்களையும் மூன்றாவது விக்கெட்டில் விஹான் மல்ஹோத்ராவுடன் 79 பந்துகளில் 96 ஓட்டங்களையும் ஆரோன் ஜோர்ஜ் பகிர்ந்தார்.

மிகவும் பொறுமையுடனும் நிதானத்துடனும் துடுப்பெடுத்தாடிய ஆரோன் ஜோர்ஜ் 104 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 115 ஓட்டங்களைக் குவித்தார்.

வைபவ் சூரியவன்ஷி எப்போதும் போல அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 33 பந்துகளில் 9 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 68 ஓட்டங்களையும் அயூஸ் மஹாத்ரா 59 பந்துகளில் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 62 ஓட்டங்களையும் பெற்றனர்.

விஹான் மல்ஹோத்ரா 38 ஓட்டங்களுடனும் வேதாந்த் திரிவேதி 5 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் நூரிஸ்தானி ஓமர்ஸாய் 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 310 ஓட்டங்களைக் குவித்தது.

ஆப்கான் சார்பாக இருவர் சதங்கள் குவித்தனர். 

19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண நொக் அவுட் வரலாற்றில் ஒரே அணியைச் சேர்ந்த இருவர் சதங்கள் குவித்த இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

0402_uzairullah_niazai_celebrates_his_ce

ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸில் பைசால் ஷினோஸதா 110 ஓட்டங்களையும் உஸைரூல்லா நியாஸாய் ஆட்டம் இழக்காமல் 101 ஓட்டங்களையும்  பெற்றதுடன் அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 148 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

அவர்களை விட ஆரம்ப வீரர்களான ஒஸ்மான் சதாத் 39 ஓட்டங்களையும் காலித் அஹ்மத்ஸாய் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் கனிஷ்க் சௌஹான் 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தீப்பேஷ் தேவேந்திரன் 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: ஆரோன் ஜோர்ஜ்

https://www.virakesari.lk/article/237838

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'100 ரன் வித்தியாசம்' - வைபவ் சூர்யவன்ஷி அதிரடியால் இந்தியா உலகக் கோப்பை சாம்பியன்

வைபவ் சூர்யவன்ஷி அதிரடியால் இந்தியா உலகக் கோப்பை சாம்பியன்

பட மூலாதாரம்,Getty Images

6 பிப்ரவரி 2026, 13:25 GMT

புதுப்பிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர்

இந்திய அணி 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றுள்ளது.

இறுதிப் போட்டியில் இந்தியா இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

ஹராரேவில் நடந்த போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து வெற்றி பெற 412 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்திருந்தது.

ஆனால் இங்கிலாந்து அணி 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இறுதிப் போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது.

வைபவ் சூர்யவன்ஷி அதிரடியால் இந்தியா உலகக் கோப்பை சாம்பியன்

பட மூலாதாரம்,Getty Images

நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை

இருப்பினும், இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. ஆரோன் ஜார்ஜ் வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார்.

அப்போது இந்தியாவின் ஸ்கோர் நான்கு ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே.

ஆனால் பின்னர், தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி, கேப்டன் ஆயுஷ் மத்ரேவுடன் இணைந்து, இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை எதிர்த்துப் போராடி, 8 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களின் உதவியுடன் வெறும் 55 பந்துகளில் தனது சதத்தை நிறைவு செய்தார்.

இருப்பினும், கேப்டன் ஆயுஷ் மத்ரே 51 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இருப்பினும், வைபவ் தனது சதத்தை எட்டிய பிறகு தனது ரன் குவிப்பு வேகத்தை அதிகரித்தார்.

வைபவ் 80 பந்துகளில் 175 ரன்கள் எடுத்து, 15 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்சர்கள் உட்பட ஒரு அபாரமான இன்னிங்ஸுடன் ஒரு பெரிய ஸ்கோருக்கு அடித்தளமிட்டார்.

வெந்தாத் திரிவேதி 32 ரன்கள் எடுத்தார், விஹான் மல்ஹோத்ரா 30 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதியாக, அபிக்யான் குண்டு 31 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார், கனிஷ்க் செளஹான் 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார்.

இந்த இன்னிங்ஸ் மூலம், இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 411 ரன்கள் என்ற மிகப்பெரிய ஸ்கோரை இங்கிலாந்துக்கு முன்னால் வைத்தது.

வைபவ் சூர்யவன்ஷி

பட மூலாதாரம்,Getty Images

இங்கிலாந்து இன்னிங்ஸ்

இந்த இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியின் தொடக்கம் மோசமாக இருந்தது. ஐந்தாவது ஓவரின் கடைசி பந்தில் ஜோசப் மூர்ஸ் 17 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.

பின்னர் பென் டாக்கின்ஸ் 66 ரன்களும் பென் மேயஸ் 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஒரு கட்டத்தில், இங்கிலாந்து அணி வெறும் 177 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்திருந்தது.

தொடர்ச்சியாக விக்கெட்டுகள் வீழ்ச்சியடைந்த நிலையில், காலேப் பால்க்னர் 67 பந்துகளில் ஏழு சிக்ஸர்கள் மற்றும் ஒன்பது பவுண்டரிகள் உட்பட 115 ரன்கள் எடுத்தார்.

பால்க்னருக்கு ஆதரவாக ஜேம்ஸ் மின்டோ 28 ரன்கள் எடுத்தார். இருப்பினும், இங்கிலாந்து 40.2 ஓவர்களில் 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்திய அணி சார்பாக அம்ப்ரிஸ் சிறந்த பந்து வீச்சாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஒன்பது ஓவர்களில் 56 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இது தவிர, கனிஷ்க் செளஹான் மற்றும் தீபேஷ் தேவ்வர்தன் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

வைபவ் சூர்யவன்ஷி ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.

வைபவ் சூர்யவன்ஷி அதிரடியால் இந்தியா உலகக் கோப்பை சாம்பியன்

பட மூலாதாரம்,Getty Images

வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டும் வீரர்கள்

"14 வயதில் இவ்வளவு வலிமையா, கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை."

''குழந்தை போன்ற முகம், ஆனால் அபாரமான வலிமை"

''இது குழந்தையல்ல, நெருப்பு"

இவை, இந்திய கிரிக்கெட்டின் புதிய நட்சத்திரமான 14 வயதான வைபவ் சூர்யவன்ஷியைப் பற்றி சமூக ஊடகங்களில் குவிந்த எண்ணற்ற கருத்துகளில் சில.

வெள்ளிக்கிழமை இங்கிலாந்துக்கு எதிரான19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், வைபவ் சூர்யவன்ஷி தனது சாதனையால் மீண்டும் ஒருமுறை கிரிக்கெட் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

வெறும் 80 பந்துகளில் 175 ரன்கள் எடுத்து, 15 சிக்ஸர்கள் மற்றும் 15 பவுண்டரிகளுடன் அவர் சாதனை படைத்துள்ளார்.

அவரது சிக்ஸர்களும், தோள்களின் வலிமையும் கிரிக்கெட் நிபுணர்களை வியப்பில் ஆழ்த்தின.

கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே எக்ஸ் தளத்தில், "இன்று நான் பார்த்ததை என்னால் நம்ப முடியவில்லை. இந்தப் பையன், அவன் ஒரு சிறுவன்தான், ஆனால் உண்மையிலேயே அற்புதமானவன் " என்று எழுதியுள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி அதிரடியால் இந்தியா உலகக் கோப்பை சாம்பியன்

பட மூலாதாரம்,Getty Images

முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக், "இன்று அவர் உண்மையிலேயே சூரியனைப் போல பேட்டிங் செய்தார். வேகமானவர், திகைப்பூட்டுபவர் மற்றும் யாராலும் தடுக்க முடியாதவர். இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அனைத்தையும் முயற்சித்தனர், ஆனால் சூரியனை யாராலும் தடுக்க முடியாது" என்று பதிவிட்டார்.

"வைபவ் சூர்யவன்ஷியிடமிருந்து ஒரு அற்புதமான இன்னிங்ஸ் கிடைத்தது. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 80 பந்துகளில் 175 ரன்கள் எடுத்தது உண்மையிலேயே அசாதாரணமானது. அவரது நோக்கம், வேகம் மற்றும் டைமிங் நாள் முழுவதும் தெளிவாகத் தெரிந்தது" என்று கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் பதிவிட்டார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான இயன் பிஷப், "வைபவ் சூர்யவன்ஷியைப் பற்றி தெரிந்தவர்களுக்கு அவர் சிறப்பு வாய்ந்தவர் என்று தெரியும். இன்று அவர் அதை மீண்டும் நிரூபித்துள்ளார். 15 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்கள் உட்பட 80 பந்துகளில் 175 ரன்கள். 150 ரன்கள் பவுண்டரிகள் மூலமாகக் கிடைத்துள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.

நீரஜ் என்ற நபர், "14 வயதில் இவ்வளவு வலிமையா, கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி

பட மூலாதாரம்,Ashley Allen-ICC/ICC via Getty Images

2025 ஆம் ஆண்டில் வெளிப்பட்ட அபார திறன்

2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இடையே நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை போட்டியில், வைபவ் சூர்யவன்ஷி 95 பந்துகளில் 171 ரன்கள் எடுத்து ஒரு சிறப்பான இன்னிங்ஸை விளையாடினார்.

இந்த இன்னிங்ஸில், வைபவ் 14 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகளை விளாசினார்.

டிசம்பர் மாதத்தில், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டிராபி போட்டியில் மகாராஷ்டிராவிற்கு எதிராக வைபவ் ஒரு சிறப்பான சதத்தை அடித்தார். அவர் 61 பந்துகளில் 108 ரன்கள் எடுத்தார்.

இதன் மூலம், சையத் முஷ்டாக் அலி டிராபியில் சதம் அடித்த மிக இளைய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார்.

2025-ல் அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான விஜய் ஹசாரே டிராபி போட்டியில் பிஹார் அணிக்காக விளையாடிய அவர், 84 பந்துகளில் 190 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸில் அவர் 15 சிக்ஸர்கள் மற்றும் 16 பவுண்டரிகளை அடித்தார்.

ஐபிஎல், பிசிசிஐ, சூர்யவன்ஷி, ராஜஸ்தான் ராயல்ஸ், கிரிக்கெட்

பட மூலாதாரம்,Getty Images

ஐபிஎல்லில் சிறந்து விளங்கிய சூர்யவன்ஷி

2025 ஏப்ரல் 28 ஆம் தேதி, வைபவ் சூர்யவன்ஷிக்கு ஒரு முக்கியமான நாளாக இருந்தது.

அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெறும் 35 பந்துகளில் சதம் விளாசினார். அவர் 11 சிக்ஸர்களையும் ஏழு பவுண்டரிகளையும் பதிவு செய்தார்.

அந்த இன்னிங்ஸ் அவரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.

அவரது அசாதாரண திறமை அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்தது. கிரிக்கெட் உலகம் அவரது ஆட்டத்தை வியப்புடன் பார்த்தது. அவரிடம் இருந்து இத்தகைய திறமை வெளிப்பட்டதை யாராலும் நம்ப முடியவில்லை.

ரஷீத் கான், முகமது சிராஜ், இஷாந்த் சர்மா மற்றும் பிரசித் கிருஷ்ணா போன்ற பந்துவீச்சாளர்களுக்கு எதிராக, 14 வயது பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி பேட்டிங்கைக் கண்டு கிரிக்கெட் ரசிகர்கள் திகைத்துப் போனார்கள்.

அதன் பிறகு அவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 40 ரன்களும், பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 57 ரன்களும் எடுத்து தனது ஆட்டத்தை மேலும் உறுதிப்படுத்தினார்.

ஐபிஎல் ஏலத்தில் வைபவ் சூர்யவன்ஷி வாங்கப்படும்போது அவருக்கு 13 வயதுதான். 13 வயது சிறுவனை ஏலத்தில் எடுத்து ராஜஸ்தான் அணி என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி பலதரப்பிலும் எழுந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c79r91zyr9go

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.