Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாவாந்துறை சென். மேரிஸ், கொம்பனித் தெரு ஜாவா லேன் கழகங்களுக்கு இலகுவான வெற்றிகள்

Published By: Vishnu

05 Jan, 2026 | 11:51 PM

image

(நெவில் அன்தனி)

கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் இன்று திங்கட்கிழமை (05) நடைபெற்ற இரண்டு சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில் யாழ். நாவந்துறை சென். மேரிஸ் கழகமும் கொம்பனித் தெரு ஜாவா லேன் கழகமும் இலகுவான வெற்றிகளை ஈட்டிக்கொண்டன.

champions_legue_logo.jpg

மொரகஸ்முல்லை கழகத்திற்கு எதிரான பி குழு போட்டியில் 4 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய சென். மேரிஸ் கழகம் 7 புள்ளிகளுடன் நிகர கோல் வித்தியாச அடிப்படையில் அணிகள் நிலையில் முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

st_mary_s___1_.jpg

இன்றைய போட்டியில் ஏகப்பட்ட இலகுவான கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்ட சென். மேரிஸ் கழகம் கடினமான சற்று சூழ்நிலைகளில் கோல்களைப் போட்டது.

முழுப் போட்டியிலும் திறமையாக விளையாடிய சென். மேரிஸ் கழகம் இந்த வெற்றியுடன் சுப்பர் 8 சுற்றுக்கான தனது வாய்ப்பை சற்று அதிகரித்துக்கொண்டுள்ளது.

எவ்வாறாயினும் மொரகஸ்முல்லை கழகத்தின் பின்கள வீரர் 41ஆவது நிமிடத்தில் போட்டுக் கொடுத்து சொந்த கோலே சென். மெரிஸ் கழகத்திற்கு திருப்புமுனையாக அமைந்தது.

st_mary_s___2_.jpg

அதுவரை சென் மேரிஸ் கழகம் குறைந்தது 4 கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டிருந்தது.

இடைவேளைக்குப் பின்னர் முழுத் திறமையுடன் விளையாடிய சென் மேரிஸ் கழகம், வெளிநாட்டு வீரர்களின் ஆற்றல்களின் உதவியுடன் மேலும் 3 கோல்களைப் போட்டது.

இரண்டாவது ஆட்ட நேரத்தின் மத்திய பகுதியில் 11 நிமிட இடைவெளியில் ஆபரிக்கர்கள் 3 கோல்களைப் போட்டு சென் மேரிஸ் கழகத்துக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர்

ஜோன் லொவனி 62ஆவது மற்றும் 65ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்களைப் போட்டதுடன் டஞ்சுமா கம்பாரி 75ஆவது நிமிடத்தில் ஒரு கோலைப் போட்டார்.

ஜாவா லேன் வெற்றி

தனது முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெறத் தவறிய ஜாவா லேன் கழகம் ஏ குழுவுக்கான இன்றைய போட்டியில் இ.போ.ச.வை 5 - 0 என்ற கோல்கள் கணக்கில் மிக இலகுவாக வெற்றிகொண்டது.

java_lane__1_.jpg

போட்டி ஆரம்பித்து 5 நிமிடங்கள் ஆன நிலையில் ஜாவா லேன் அணித் தலைவர் ஹர்ஷன சுமுது முதலாவது கோலைப் போட்டு தனது அணியைத் முன்னிலையில் இட்டார்.

15 நிமிடங்கள் கழித்து முன்னாள் சென். லூசியா  மறறும் 19 வயதுக்குட்பட்ட இலங்கை வீரர் டெரிக் பெர்னான்டோ அருமையான கோல் ஒன்றைப் போட்டு ஜாவா லேனை 2 - 0 என முன்னிலையில் இட்டார்.

java_lane__2_.jpg

java_lane__3_.jpg

போட்டியின் 31ஆவது நிமிடத்தில் ஜாவா லேன் கழகத்தின் 3ஆவது கோலை ஒலுவாசெயுன் ஒலாவேல் போட்டார்.

இடைவேளைக்குப் பின்னர் 57ஆவது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை ஒலுவாசெயுன் ஒலாவேல் போட்டதுடன் உபாதையீடு நேரத்தில் ஜாவா லேனின் 5ஆவது கோலை ஹர்ஷன சுமுது போட்டார்.

ஜாவா லேனுக்கு இலகு வெற்றி

https://www.virakesari.lk/article/235312

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செரெண்டிபை அதிரவைத்தது சென் மேரிஸ்; மீண்டும் நியூ ஸ்டார் ஹீரோவானார் பஸால்

01 Feb, 2026 | 07:51 AM

image

(நெவில் அன்தனி)

கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் சனிக்கிழமை நடைபெற்ற மாவனெல்லை செரெண்டிப் கழகத்திற்கு எதிரான சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட சுப்பர் 8 போட்டியில் யாழ். நாவாந்துறை  சென் மேரிஸ் கழகம் 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியீட்டியது.

st_mary_s__1_.jpg

இரண்டு அணிகளும் எதிர்த்தாடுவதிலும் தடுத்தாடுவதிலும் மிகத் திறமையாக விளையாடியதை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக சென். மேரிஸ் கழக வீரர்கள் முந்தைய போட்டிகளிலும் பார்க்க இந்தப் போட்டியில் சிறந்த வியூகங்களுடன் விளையாடினர். அதுவே அவர்களது வெற்றியில் பிரதான பங்காற்றியது.

இடைவேளைவரை இரண்டு அணிகளும் கோல் போட்டிருக்கவில்லை.

இடைவேளைக்குப் பின்னர் 50ஆவது நிமிடத்தில் சென். மேரிஸ் பின்களத்தில் ஏற்பட்ட தடுமாற்றத்தைப் பயன்படுத்தி ஃப்ரிம்ப்பொங் யாவ் கோல் ஒன்றைப் போட்டு செரெண்டிபை முன்னிலையில் இட்டார்.

st_mary_s__2_.jpg

ஆனால், சென் மேரிஸ் வீரர்கள் திறமையாக விளையாடி அடுத்த இரண்டாவது நிமிடத்தில் ஜோன் லவானி மூலம் கோல் நிலையை சமப்படுத்தினர்.

அதன் பின்னர் இரண்டு அணிகளும் வெற்றி கோலை போடுவதற்கு கடுமையாக முயற்சித்தன.

போட்டியின் 72ஆவது நிமிடத்தில் வலதுபுற முன்கள மாற்று வீரர் எம். மேரிசன் மிகவும் சாமர்த்தியமாக பந்தை நகர்த்திச் சென்று எம். பிரேம்குமாருக்கு பரிமாறினார்.

எம். பிரேம்குமார் மிகவும் பலமாக உதைத்து கோலாக்கி சென். மேரிஸ் கழகத்தை வெற்றிபெறச் செய்தார்.

பஸால் மீண்டும் ஹீரோவானார், மஞ்சள் அட்டைக்கும் இலக்கானார்

நியூ ஸ்டார் கழகத்திற்கும் சொலிட் கழகத்திற்கும் இடையில் இரவு நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட சுப்பர் 8 போட்டியில் சொலிட் கழகத்தின் கடும் சவாலுக்கு மத்தியில் எம்.என்.எம். பஸால் உபாதையீடு நேரத்தில் கோல் போட்டு நியூ ஸ்டார் கழகத்தை வெற்றி அடையச் செய்து ஹீரோவானார்.

new_star__1_.jpg

ஆனால், வெற்றிக்களிப்பில் ஜேர்சியைக் கழற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் மத்தியஸ்தரின் மஞ்சள் அட்டைக்கு இலக்கானார்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற அப் போட்டியில் முதலாவது பகுதியில் கோல் எதுவும் போடப்படவில்லை.

இடைவேளை முடிந்த பின்னர் 48ஆவது நிமிடத்தில் மொஹமத் ஷஹிர் கோல் போட்டு நியூ ஸ்டார் கழகத்தை முன்னிலையில் இட்டார்.

new_star__2_.jpg

15 நிமிடங்கள் கழித்து சொலிட் கழகம் சார்பாக ஹென்றி சிபுயேஸ் கோல் நிலையை சமப்படுத்தினார்.

அதன் பின்னர் போட்டியில் சூடு பிடிக்க இரண்டு அணிகளும் கடுமையாக மோதிக்கொண்டன.

உபாதையீடு நேரத்தின்போது பஸால் அருமையான கோல் ஒன்றைப் போட்டு நியூ ஸ்டார் கழகத்தை வெற்றி அடையச் செய்தார்.

https://www.virakesari.lk/article/237503

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொலிஸை வெளுத்துக்கட்டியது செரெண்டிப், சோண்டர்ஸுக்கு அதிர்ச்சிக்கொடுத்தது சென். மேரிஸ், ஜாவா லேனிடம் வீழ்ந்தது நியூ ஸ்டார்

Published By: Vishnu

07 Feb, 2026 | 09:48 PM

image

(நெவில் அன்தனி)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்டுவரும் சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தின் சுப்பர் 8 சுற்றில் பொலிஸ் கழகத்தை மாவனெல்லை செரெண்டிப் கழகம் வெளுத்துக்கட்டியதுடன் சோண்டர்ஸ் கழகத்தை யாழ். நாவாந்துறை சென். மேரிஸ் கழகம் அதிரவைத்தது. அதேவேளை நியூ ஸ்டார் கழகத்தை கொம்பனித் தெரு ஜாவா லேன் வீழ்த்தியது.

செரெண்டிப் 5 - 0 வெற்றி

கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற சுப்பர் 8 கால்பந்தாட்டப் போட்டியில் பொலிஸ் கழகத்தை வெளுத்துக்கட்டிய மாவனெல்லை செரெண்டிப் கழகம் 5 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் ஆரம்பத்தில் பொலிஸ் கழகம் ஆதிக்கம் செலுத்தியபோதிலும் அக் கழகத்தினால் கோல் போட முடியாமல் போனது. குறிப்பாக செரெண்டிப் கழக கோல்காப்பாளர் மொஹமத் லுத்திபி ஓரிரு கோல்களை மிகவும் அற்புதமாக தடுத்தார்.

serendib_abishan.png

எவ்வாறாயினும் போட்டியின் 16ஆவது நிமிடத்தில் டாக்டோ ஜோர்ஜ் கோல் போட்டதும் செரெண்டிப் கழகம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.

அதன் பின்னர் செரெண்டிப் கழகம் எதிர்த்தாடுவதிலும் பொலிஸ் கழகம் தடுத்தாடுவதிலும் குறியாக இருந்தன.

எனினும் இடைவேளைக்கு முன்னரும் இடைவேளைக்குப் பின்னரும் 7 நிமிட இடைவெளியில் செரெண்டிப் கழகம் 3 கோல்களைப் போட்டு பொலிஸ் கழகத்தை பிரமிப்பில் ஆழ்த்தியது.

இடைவேளைக்கு முன்னரான உபாதையீடு நேரத்தில் விஜயகுமார் அபிஷான், இடைவெளை முடிந்து 46ஆவது நிமிடத்தில் டாக்கோ ஜோர்ஜ், 52ஆவது நிமிடத்தில் மொஹமத் ரஹுமான் ஆகியோர் கோல்களைப் போட்டு செரெண்டிப் கழகத்தின் கோல் எண்ணிக்கையை நான்காக உயர்த்தினர்.

serendib_sc.jpg

தொடர்ந்து 76ஆவது நிமிடத்தில் டாக்கோ ஜோர்ஜ் மேலும் ஒரு கோலைப் போட்டு தனது ஹெட் - ட்ரிக்கை நிறைவுசெய்தார்.

இப் போட்டியில் முரட்டுத்தனமாக விளையாடியதால் பொலிஸ் கழக வீரர் ஒருவருக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டதுடன் மேலும் இருவருக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது.

சோண்டர்ஸ் கழகத்தை அதிரவைத்த சென் மேரிஸ்

இதே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மற்றொரு சுப்பர் 8 போட்டியில் பழைமைவாய்ந்ததும் பலம்வாய்ந்துமான சோண்டர்ஸ் கழகத்தை சென் மேரிஸ் கழகம் அதிரவைத்தது.

அப் போட்டியில் 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் 83ஆவது நிமிடம்வரை சென் மேரிஸ் கழகம் முன்னிலையில் இருந்ததால் சோண்டர்ஸ் கழகம் பெரும் அதிர்ச்சி அடைந்தது.

st_mary_s.jpg

சென். மேரிஸ் கழக பின்கள வீரர் ஓக்கே மிட்டோபொரின் கவனக் குறைவால் வழங்கப்பட்ட பெனல்டியினால் அப் போட்டியை சென் மேரிஸ் கழகம் வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொள்ள நேரிட்டது.

எவ்வாறாயினும் பிரபல சோண்டர்ஸ் கழகத்துடனான போட்டியை வெற்றிதோல்வியின்றி (2 - 2) முடித்துக்கொண்ட முதலாவது யாழ். அணி என்ற வரலாற்றுச் சாதனையை சென். மேரிஸ் கழகம் படைத்தது.

இந்தப் போட்டியில் மிகவும் திறமையாக விளையாடிய சென் மேரிஸ் கழகம் 7ஆவது நிமிடத்தில் ஜோன் லவானி மூலம் கோல் போட்டு முன்னிலை அடைந்தது.

தொடர்ந்து 30ஆவது நிமிடத்தில் செபஸ்தி அருள் அலாதியான கோல் போட்டு சென். மேரிஸ் கழகத்தை 2 - 0 என முன்னிலையில் இட்டார்.

இடைவேளையின் பின்னர் 56ஆவது நிமிடத்தில் சோண்டர்ஸ் அணித் தலைவர் இந்தீவ உதார அருமையான கோல் ஒன்றைப் போட்டு தனது அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தார்.

தொடர்ந்து 84ஆவது நிமிடத்தில் சென். மேரிஸ் பெனல்டி எல்லைக்குள் வைத்து ஓக்கே மிட்டோபோர் பந்தை கையால் தட்டியதால் சோண்டர்ஸ் கழகத்துக்கு பெனல்டி வழங்கப்பட்டது.

அந்த பெனல்டியை ஸியார்ட் முபாஸ்ஸல் இலக்கு தவறாமல் கோலினுள் புகுத்தி கோல் நிலையை சமப்படுத்தினார்.

இதனை அடுத்து போட்டி வேற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

நியூ ஸ்டார் கழகத்தை வீழ்த்தியது ஜாவா லேன் கழகம்

சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் மிகவும் பலம்வாய்ந்த அணிகளுள் ஒன்றான நியூ ஸ்டார் கழகத்தை அதிரவைத்து கொம்பனித்தெரு ஜாவா லேன் கழகம் 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இரண்டு அணிகளுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த சுப்பர் 8  போட்டி ஆரம்பம் முதல் கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்துவதாக அமைந்தது.

java_lane__1_.jpg

போட்டியின் 29ஆவது நிமிடத்தில் ஒலுவாசேயுன் ஓலாவேல் மிகவும் இலாவகமாக கோல் போட்டு ஜாவா லேன் கழகத்தை முன்னிலையில் இட்டார்.

அந்த கோல்தான் பின்னர் வெற்றி கோலாக அமைந்தது.

ஏனெனில் அதன் பின்னர் கோல் போடப்படவில்லை.

https://www.virakesari.lk/article/238096

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.