கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 10 பாகம் 10 / “வெற்றிக்குப் பிறகு அமைதி” உடப்பு பள்ளியில் காலை சூரியன் ஆரவாரமின்றி அமைதியாக உதயமானது. பள்ளி முற்றமும் எந்த ஆரவாரமும் இன்றி அமைதியாக இருந்தது, அங்கு பதட்டமும் காணப்படவில்லை. மாணவர்கள் ஒரே நோக்கத்துடன் அங்கு நகர்ந்தனர். சீருடைகளை மாணவர்கள் ஒரு கவசமாக உணரவில்லை. அவர்கள் உண்மையில் கவசமாக உணர்ந்தது தங்கள் மொழி தமிழைத்தான். ஆதன் வகுப்பறைக்குள் நுழைந்தான். கரும்பலகை காலியாக காத்திருந்தது - ஆசிரியரை எதிர்பார்த்து. ஆனால், ஆதன் முதலில் பாடப் புத்தகத்தைத் திறக்கவில்லை. ஆதன் மாணவர்களின் முகங்களைப் பார்த்தான். அதேவேளை, மாணவர்கள் எல்லோரும் ஆதன் ஆசிரியரை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்கள் - ஆனால் பயத்தால் அல்ல. ஒரு ஆழ்ந்த மூச்சுவுடன் ஆதன், “காலை வணக்கம்,” என்று மாணவர்களுக்கு கூறினான். அன்று ஆதனுக்கு ஒரு தயக்கமும் இல்லை. தணிக்கை செய்ய அதிகாரியும் இல்லை. எந்த கோப்புகளும் பதிவதற்கு இல்லை. பாடம் நேரடியாகத் தொடங்கியது. புத்தகத்திலிருந்து மட்டும் அல்ல, நினைவிலிருந்தும் அது தொடங்கியது - உரையாடலில் இருந்து - புரிதலில் இருந்து. எனவே, ஆதனால் அளவிடப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் - உயிருடன் இருந்தது. மாணவர்கள் ஆதனின் கற்பித்தலை சரியாக கேட்க முன்னோக்கு சாய்ந்தனர். அதிகாரம் அதைக் கோரியதால் அல்ல, ஆனால் ஆதனின் கற்பித்தலில் உள்ள உண்மை அவர்களை அழைத்ததால். மதியம் அளவில், பாடசாலை நடைபாதை வழியே பெற்றோர்கள் வகுப்பறைகளைக் கடந்து மெதுவாக நடந்து சென்றனர், அவர்கள் போகும் பொழுது வகுப்பறைக்குள் எட்டிப்பார்த்து, அமைதியாக கிசுகிசுத்துக்கொண்டு சென்றனர். அப்பொழுது சில ஆசிரியர்கள் சிரித்தனர். சிலர் அவர்களின் கண்களைத் தொடர்பு கொள்வதைத் தவிர்த்தனர். ஆனால் யாரும் ஆதனுக்கு எதாவது தண்டனை கிடைக்குமா என்பது பற்றிப் பேசவில்லை. காலை வெயிலில் மூடுபனி போல, பெற்றோர்களின் பயம் கரைந்து போனது. ஆதனும் அதன் பின் நடைபாதை வழியாகச் சென்றான். ஒரு சிறிய கை அவன் மீது விழுந்தது. ஒரு மாணவன் கிசுகிசுத்தான்: “சார் ... நீங்கள் உங்கள் கற்பித்தல் முறையை மற்றும் உண்மையை சாட்சியங்களுடன் உறுதிப்படுத்துவதை நிறுத்தாததற்கு நன்றி.” கூறினான். ஆசிரியர் ஆதன் மெதுவாகப் பின்னால் அவனை அழுத்தி, நன்றி. ஆனால் வெற்றி அல்ல என்றான். அதேவேளை, சிலப்பம் மருத்துவமனையில், நோயாளிகள் மத்தியில் சமந்தி [செந்தூரி] நடந்துகொண்டு இருந்தாள். பாடசாலை செய்தி அங்கு சில நோயாளிகள் மூலம் அனைவரையும் எட்டியது. அங்கு நின்ற சிலர், சமந்தியிடம் ஆசிரியர் ஆதன் பற்றியும் , பள்ளிக்கூடத்தில் நடக்கும் சம்பவம் பற்றியும், ஆதன் எடுத்து இருக்கும் அல்லது பின்தொடரும் நிலைப்பாடு பற்றியும் கேட்டார்கள். அவள் அவர்களிடம் எளிமையாக, ஆனால் உறுதியாகச் சொன்னாள்: "ஆசிரியர் ஆதன், ஒரு உண்மையுள்ள நேர்மையான அறிவுள்ள மனிதனாக, எதைச் செய்ய வேண்டுமோ, அதை கச்சிதமாகச் [துல்லியமாக] செய்தார். [“He did what he had to do.”]" சமந்தியின் இதயம் அமைதியாக இருந்தது. ஆபத்து நீங்கியதால் அல்ல, ஆனால் தைரியம் பெருகிவிட்டதால். நீர்த்தொட்டிக்கு [சிங்க் / sink] அருகில் கொஞ்சம் அவள் நின்றாள். தண்ணீர் அங்கு ஓடிக்கொண்டு இருந்தது, ஆனால், அதை நிற்பாட்டிட அவள் இம்முறை அவசரப்படவில்லை. முதல் முறையாக, அமைதியான வெற்றியின் தாக்கத்தை, அதன் எடையை அவள் உணர்ந்தாள். சத்தமாக அதைக் கொண்டாட வில்லை . ஆனால் அது அவளுக்கு சுவாசிக்க போதுமானதாக இருந்தது. பள்ளியில் நடந்த நிகழ்வுக்குப் பிறகு, வாழ்க்கை திடீரென எளிதாக மாறவில்லை. வகுப்புகள் தொடர்ந்தன. அதிகாரிகளின் கண்காணிப்பும் தொடர்ந்தது. பயம் முழுமையாக மறையவில்லை. ஆனால் ஒன்று மட்டும் மாறியது. மாணவர்கள் ஒருமுறை பேசிவிட்டார்கள் — அந்த குரலை அவர்கள் இனி மறக்க முடியாது. பெற்றோர்கள் ஒன்றாக, அமைதியாக நின்று - நிற்பதே சக்தி என்பதை அறிந்துகொண்டார்கள். இது இனி ஒரு தனி ஆசிரியரின் கதையல்ல என்றாலும், இப்போதைக்கு அதன் விளைவுகளை தான் இன்னும் சந்திக்க நேரிடும் என்பதை ஆதன் புரிந்துகொண்டான். அவன் பின்னர் இடமாற்றம் செய்யப்படலாம், புறக்கணிக்கப்படலாம் அல்லது அமைதியாக தண்டிக்கப்படலாம். ஆனால் மிகவும் ஆபத்தான போர் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டது என்பதை அவன் புரிந்துகொண்டான். மருத்துவமனையில் அதே மாற்றத்தை சமந்தி [செந்தூரி] உணர்ந்தாள். மருத்துவமனையில் மக்கள் மேலும் மேலும் நேர்மையாக பேச ஆரம்பித்தார்கள். அபாயம் நீங்கியதால் அல்ல — தைரியம் ஒருவரிடம் மட்டும் இல்லை, பலரிடையே பரவியதால். எதிர்காலம் கடினம் என்பதை அவள் அறிந்தாள். ஆனால் இனி தனியாக இல்லை. அன்று மாலை நேரம், தங்கள் உடைகளில் ஒரு மாற்றத்துடன், ஆதன் வேட்டி சால்வையுடனும், சமந்தி அழகான கவுனுடனும், கடற்கரையில் சந்தித்தனர். ஆனால் ஏதோ ஒன்று மாறியது. அலைகள் மென்மையாக இருந்தன. காற்று மென்மையாக இருந்தது. தாங்கள் இன்னும் கண்காணிக்கப்படுவதை அவர்கள் அறிந்திருந்தனர். தங்களுக்கு எதிராகத் திட்டங்கள் தீட்டப்படும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால், மிகக் கடினமான போராட்டத்தில் இருந்து - உண்மையாக இருக்க தங்களுக்குள் போராடியதிலிருந்து - தாங்கள் தப்பிப்பிழைத்ததையும் அவர்கள் அறிந்திருந்தனர். அவர்களின் வெற்றி அமைதியாக இருந்தது, ஆனால் அது உண்மையானது. கடல் தங்க நிறத்தையும் வெள்ளி நிறத்தையும் பிரதிபலித்து, மெதுவாக நகர்ந்தது. அவர்கள் அதை ரசித்தபடி, அமைதியாக ஒன்றாக நின்றனர். - அவர்கள் எதுவும் தங்களுக்குள் சொல்லாததால் அல்ல - உலகம் இறுதியாகக் அவர்களது வாதத்தை, உண்மையை காது கொடுத்து கேட்கத் தொடங்கியதால் [Not because they had nothing to say, but because the world was finally listening.]. வீடு திரும்பியதும், மென்மையான விளக்கு வெளிச்சத்தில், அன்று இரவு, ஆதன் தனது நாட்குறிப்பில்: "அதிகாரிகளின் மறைமுகமான, ஆனால் அமைதியான நடவடிக்கைகள், கூச்சலிடுதல் அல்லது வன்முறையால் அல்ல, மாறாக தலைவணங்க மறுத்த மக்களால்தான் உடைக்கப்பட்டது என்பதை நான் புரிந்து கொண்டேன். பயம் இன்னும் முற்றாக அழிக்கப்படவில்லை, ஆனால் தைரியம் வளர்ந்து பரவியுள்ளது. என்றாலும், எதிர்காலம் இன்னும் நிச்சயமற்றதாக இருக்கிறது, ஆனால் இந்த நேரத்தில், நாம் மனிதர்களாக இருக்க போதுமான சுதந்திரம் பெற்றுவிட்டோம். அது மட்டும் அல்ல, நிர்வாகத்தை தற்காலிகமாவது செவிசாய்க்க வைத்த, உடப்பு பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் அமைதியான ஒற்றுமையான போராட்டம், அவர்களின் தலைமுறைகளும் கற்றுக்கொண்டால், நான் பயப்படுவதற்கு ஒன்றுமே இல்லை, என்னை, இந்த தனி மனிதனை, என்னவென்றாலும் செய்து விட்டு போகட்டும்" என்று எழுதி, ஆதன் டைரியை மூடினான். வெளியே, இரவு மெதுவாக முணுமுணுத்தது. அலைகள் கிசுகிசுத்தன. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] முடிவுற்றது துளி/DROP: 2087 [கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 10 https://www.facebook.com/groups/978753388866632/posts/34256984190616790/?
By
kandiah Thillaivinayagalingam · 4 minutes ago 4 min