Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பிரச்சனைக்கு தீர்வு: ப.சிதம்பரம் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திங்கள் 12-11-2007 01:55 மணி தமிழீழம் [செந்தமிழ்]

சிறீலங்காவின் இறையாண்மையையும், நிலஒருமைப்பாட்டையும் மீண்டுமொரு தடவை இந்தியா வலியுறுத்தியுள்ளது.

சிறீலங்காவின் இறையாண்மையையும், நில ஒருமைப்பாட்டையும், ஐக்கியத்தையும், மீண்டுமொரு தடவை இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற, லகஸ்;மன் கதிர்காமரின் நினைவுக் கருத்தரங்கில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய, இந்திய மத்திய நிதித்துறை அமைச்சர் P.சிதம்பரம், அதிகாரப் பரவலாக்கத்தின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஏற்படுத்தப்படுவதை, தமது அரசாங்கம் ஆதரிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

“யுத்தத்தின் மூலம் இரு தரப்பினரும் இறுதி வெற்றியை ஈட்டமுடியாது. பேச்சுவார்த்தை அரங்கிலேயே சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டும். எந்தவொரு சமாதானத் தீர்வும், மக்களின் நம்பிக்கை வாக்கைப் பெறவேண்டும். எம்மைப் பொறுத்த வரை,நம்பகமான முறையிலான அதிகாரப் பரவலாக்கத்தை உள்ளடக்கிய அரசியல் தீர்வின் மூலமே, இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

சிறீலங்காவின் இறையாண்மை, நில ஒருமைப்பாடு, ஐக்கிய ஆகியவற்றில் நாம் பற்றுறுதியாக உள்ளோம். ஒவ்வொரு தடவையும் இந்த நிலைப்பாட்டை இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.

பண்பாடு, மொழி, மனித உரிமைகள் ஆகியவற்றில் ஒடுக்கப்பட்டு, பாகுபாட்டிற்கு உட்படுத்தப்படுவதாக தலைதூக்கிய உணர்வுகள் காரணமாகவே, இனப்பிரச்சினை தோற்றம் பெற்றது.

இந்த வகையில், நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய அதிகாரப் பரவலாக்க அரசியல் தீர்வின் ஊடாகவே, இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும்.

கண்மூடித்தனமான பயங்கரவாதத் தாக்குதல்களில் ஒரு தரப்பு ஈடுபடுவதும், திட்டமிட்ட நடவடிக்கைகளை ஆயுதப் படைகள் முன்னெடுப்பதும், இழப்புக்களும், அழிவுகளும் அதிகரிப்பதற்கே வழிகோலும்.

இரு தரப்பினரின் நிலைப்பாடுகளும் முரண்பட்டு, நல்லிணக்க நிலையில் இல்லாத சூழலில், பேச்சுவார்த்தை வாயிலான தீர்வில் இரு தரப்பும் கவனம் செலுத்த வேண்டும்.

இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக, தமிழீழ விடுதலைப்புலிகளுடன் நேரடித் தொடர்பாடல்களை நாம் ஏற்படுத்தியிருந்த காலப் பகுதியில், தமிழீழ தனியரசுக் கோரிக்கையைக் கைவிட்டு, ஐக்கிய சிறீலங்கா என்ற வரையறைக்குள் தீர்வு காணுமாறு இந்தியா வலியுறுத்தியதை, நான் நினைவூட்டிக் கொள்ள விரும்புகின்றேன்."

இவ்வாறு இந்திய மத்திய நிதித்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.இதனிடையே, இன்று மாலை அலரி மாளிகைக்கு சென்ற இந்திய மத்திய நிதித்துறை அமைச்சர் .சிதம்பரம் அவர்கள், சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்பொழுது, கொழும்புக்கான இந்திய தூதுவர் அலோக் பிரசாத் அவர்களும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது,

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

Edited by கறுப்பி

எந்த அரசியல் தீர்வு பற்றியது. இந்திய சிறிலங்கா ஒப்பந்தமா? இலங்கையரசை இந்தியா முடிந்தால் அதைச் செயற்படுத்திக் காட்டும்படி சொல்லுங்கோ மிகுதி என்ன நடைபெறுமென நாங்கள் சொல்லத் தேவையில்லை.

கொழும்பு (ஏஜென்சி), திங்கள்கிழமை 12 நவம்பர் 2007 ( 11:25 )

இலங்கை இனப் பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வு காண வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்இ நேற்று இலங்கை சென்று அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார். பின்னர் கருந்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:

இலங்கையில் இனக் கலவரத்தில் இந்தியா தலையிடாததால், அதை புறக்கணிப்பதாக அர்த்தம் அல்ல. பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணும்படி இலங்கை அரசிடமும், தமிழக தலைவர்களிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

விடுதலைப்புலிகள் தங்களுடைய தனி நாடு கோரிக்கையை கைவிட வேண்டும். அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையிலான அதிகாரப்பகிர்வு கொண்ட ஒரு தீர்வை இலங்கை அரசு உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

(மூலம் - வெப்துனியா)

நன்றி : யாகூ தமிழ்

ஆயுதங்களையும் நிதி உதவிகளையும் அள்ளி வழங்கி விட்டு போகின்ற போக்கில் ஒரு நக்கல் கதை இவர்களுக்கு. தமிழக தலைவர்களிடம் இவர்கள் வலியுறுத்துவது என்னவென்பது ஈழத் தமிருக்குத் நன்றாகவே தெரியும்.

தெற்காசிய பிராந்தியத்திலேயே பாதுகாப்புக்கு அதிக நிதியும் கல்விக்கு மிகக் குறைந்த நிதியும் சிறிலங்கா அரசாங்கம்தான் ஒதுக்கியுள்ளது என்று இந்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

படிப்புக்கு ஏற்ற அறிவு இருந்தா தமிழனை கொல்கிற அரசாங்கத்திடம் விருந்தாளியா தமிழன் போவானா?

பண்பற்ற முறையில் எழுதப்பட்டவை நீக்கப்பட்டுள்ளன. - இணையவன்

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவரின் இந்த உரையை பாருங்கள்.

Kadirgamar was a great Tamil national & patriot! – P. Chidamparam

(12th November 2007 08.55 S.L.T )

With the assassination of former Foreign Minister Luxman Kadirgamar, Sri Lanka lost one of the greatest Tamils and a patriot said Indian Minister of Finance P. Chidamparam. He said this addressing the memorial meeting held on the 2nd anniversary of Mr. Luxman Kadirgamar’s death.

Mr. Chidamparam said India held Mr. Kadirgamar in high esteem as a leader who dedicated himself to bring peace to Sri Lanka. Also, as a foreign minister he served the country proficiently at a very difficult time to the country said the Indian Minister of Finance adding that Mr. Kadirgamar’s service should be appreciated.

Ministers Rohitha Bogollagama, Sarath Amunugama and Messrs. Somawansa Amarasinghe and Wimal Weerawansa participated representing political parties.

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லில் கூறும் நிதர்சனத்தை செயலில் உணர்த்த முயலுங்கள்!

""இலங்கையில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச் சினைக்கு இறுதித் தீர்வு இராணுவ வழிகளில் கிட் டாது. சமாதானப் பேச்சின் ஊடாகவே அது எட்டப்பட வேண்டும்.''

இவ்வாறு தெளிவாகவும் வெளிப்படையாகவும் கொழும்பில் வைத்துப் பகிரங்கமாகக் கூறியிருக்கின்றார் இந்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம்.

இந்தச் சந்தர்ப்பத்தில் அமைச்சர் ப. சிதம்பரத்தின் கூற்று இரண்டு வழிகளில் முக்கியத்துவம் பெறுகின்றது.

ஒன்று, நேற்றுமுன்தினம் கொழும்புக்கு வருவதற்கு முதல்நாள் அவர் சென்னையில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னரே கொழும்புக்குப் புறப்பட்டார். அந்தப் பின் புலத்திலேயே இராணுவத் தீர்வுக்கு வாய்ப்பில்லை, அமைதிப் பேச்சு மூலமான தீர்வே இறுதிவழி என்று அழுத்தம் திருத்தமாக சிதம்பரம் குறிப்பிட்டிருக்கின்றார் என்பது கவனிக்கத்தக்கது.

அடுத்தது, இலங்கை விவகாரத்தில் நேரடியாக இராணுவ ரீதியில் தலையிட்டு சூடுபட்டுத் தெளிந்த முன்னைய இந்திய அரசிலே சிதம்பரமும் இடம் பெற்றி ருந்தவர் என்பதால் அவரது பட்டறிவுப் பாடமும் கவனத் தில் கொள்ளத்தக்கது.

1987 இல் இலங்கை விவகாரத்தில் இந்தியப் பிர தமர் ராஜீவ் காந்தியின் அரசு நேரடியாகத் தலையிட்டபோது ராஜீவுக்கு நெருங்கியவராக அந்த அரசில் சிதம்பரமும் இடம்பெற்றிருந்தார்.

இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் சம்பந் தப்பட்ட பிரதான தரப்பான தமிழர் பக்கத்தின் ஏற்றுக் கொள்ளக்கூடிய இணக்கப்பாடு இன்றியே, தான் விரும் பிய உருப்படியற்ற உப்புச்சப்பற்ற திட்டம் ஒன்றை தீர்வுக்கான மார்க்கமாக இலங்கை மீதும் ஈழத் தமிழர் மீதும் வல்வந்தமாகத் திணிக்க முயன்றது ராஜீவின் இந்திய அரசு. பேச்சு மூலமான தீர்வு என்றும், இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலமான சமாதானத் திட்டம் என்றும் அது அடையாளப்படுத்தப்பட்டாலும் கூட, அது இராணுவ மார்க்க வழியிலேயே தமிழர்கள் மீது கட்டாயமாக பலவந்தமாக திணிக்கப்பட்டது. அந்த வகையில் அதுகூட ஒருவித இராணுவத் தீர்வு முயற்சியாகவே கடைசியில் கட்டவிழ்ந்தது.

பல லட்சம் இந்தியத் துருப்புக்களைக்கொண்டு வந்து தமிழர் தாயகத்தில் குவித்து, அதை ஆக்கிரமித்து, சுமார் இரண்டரை வருடகாலம் நிலைகொண்டிருந்தும் கூட, ஆயுத முனையில் தன்னும் சமாதானத்திட்டம் என்று பெய ரிட்டும் கூட அந்த முயற்சியை நடைமுறைச் சாத்தி யமாக்கவே முடியவில்லை என்ற பட்டறிவு, ராஜீவின் அந்த அரசில் இடம்பெற்றிருந்த சிதம்பரம் போன்ற மூத்த தலைவர்களுக்கு நிறையவே உண்டு. அந்த அனுபவப் பாடம்தான் இப்படி யதார்த்தத்தை நிதர்சனத்தை பேசும்படி சிதம்பரத்தைத் தூண்டியிருக்கும் என்று கருதலாம்.

மஹிந்த ராஜபக்ஷவின் அரசுத் தலைமை யுத்த சந்நதம் கொண்டு, போர்வெறி உருவேறி, களச்சமருக்கான முரசும் கொட்டத் தயாராக இருக்கின்றது. இப்போது அதன் சிந்தனையும், இலக்கும், நோக்கும், குறிக்கோளும் ஒன்றே ஒன்றுதான். அது, போரியல் ரீதியாகப் புலிகளை அடக்கி, ஒடுக்கி, அரசின் காலில் விழவைத்து, இனப்பிரச்சினைக் கான தீர்வு முயற்சிகளில் தமிழர்களின் பேரம் பேசும் வலுவை அடியோடு தகர்த்து, அதன் பின்னர் தான் பிச்சையாகப் போடும் தீர்வுத் திட்டத்தை சிறுபான்மையினரான தமிழ ருக்கு அடிமைச்சாசனமாக வழங்கி, தமிழினத்தை நிரந் தரமாகவே இலங்கைத் தீவின் இரண்டாந்தரப் பிரஜைகளாக்குவது என்பதுதான்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதி வழித் தீர் வைக்காணும் எண்ணம் இலங்கையின் தற்போதைய அரசுத் தலைமைக்குக் கிஞ்சித்தும் கிடையாது என்பதும், அது முற்றும் முழுதாக இராணுவத் தீர்வு வழியை நோக்கி முழு மூச்சில் நகர்ந்து கொண்டிருக்கின்றது என்பதும் உலகறிந்த பரகசியம்.

அத்தகைய அரசுக்கு, இராணுவ ஒத்தாசைகளை வழங்கி, ஆயுத உதவிகளையும், உளவுத் தகவல் வசதி களையும் ஏற்படுத்திக் கொடுத்துக்கொண்டு, மறுபுறத் தில் பேச்சளவில் உதட்டளவில் "இராணுவ வழித் தீர்வு சாத்தியமற்றது. ஆகவே அமைதி வழியில் நிரந்தரத் தீர்வை நாடுங்கள்' என வாயால் மந்திரம் செபிப்பதில் அர்த்தமோ, பயனோ கிடைக்கப்போவதில்லை.

இப்போது அமைச்சர் சிதம்பரம் தாம் கொழும்பில் உரைத்த யதார்த்தத்தை, இலங்கை அரசுத் தலைமைக்கு உறைப்பாக உரைப்பதற்கு தாம் நிதி அமைச்சராக இருக்கும் இந்திய அரசு மூலம் காத்திரமான நடவடிக்கை எடுக்கச் செய்யவேண்டும். அதைச் செய்வதை விடுத்து, நினைவுப் பேருரைகள் ஆற்றும் சாக்கில் இலங்கைத் தீவை யும் இந்தத் தீவின் மக்களையும் பார்த்துப் போதனை செய்து, தத்துவம் கூறுவதில் அர்த்தமில்லை; பயனில்லை.

தமது அரசு வழங்கும் ஆயுத, இராணுவ ஒத்தாசை, உளவு உதவி என்பனவே இலங்கை அரசுத் தலை மையை பயன்தரவே மாட்டாத இராணுவ வழித் தீர்வு முயற்சி களை நோக்கி உந்தித் தள்ளக் காரணம் என்ற உண்மையை சிதம்பரம் போன்ற இந்திய அரசின் மூத்த தலைவர்கள் உணர்வார்களேயானால், தாம் இப்போது சொல்லில் கூறும் நியாயத்தை இலங்கை அரசுத் தலைமைக்கு செயலில் உணர்த்திக் காட்டுவதற்கான ஆக்கபூர்வ நடவடிக் கைகளை தமது அரசு மூலம் எடுக்கச் செய்வித்து, இப் பிரச்சி னையின் தீர்வுக்குக் காத்திரமாகப் பங்களிப்பர் என எதிர்பார்க்கலாம். அது நடக்குமா? .... பொறுத்திருந் துதான் பார்க்கவேண்டும்!

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.