Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாடகை வீடு தொடர்பான சட்டமூலம் குறித்து வௌியான தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாடகை வீடு தொடர்பான சட்டமூலம் குறித்து வௌியான தகவல்

Feb 3, 2026 - 07:21 PM

வாடகை வீடு தொடர்பான சட்டமூலம் குறித்து வௌியான தகவல்

வாடகை அடிப்படையில் வீடுகளை வழங்கும் போது ஏற்படும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக அரசாங்கம் கொண்டு வந்த புதிய சட்டமூலத்தின் நோக்கங்கள் குறித்து அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (03) விளக்கமளித்தார். 

இந்த சட்டமூலத்தின் நோக்கமாக அமைவது வீட்டு உரிமையாளர் மற்றும் அந்த வீட்டில் வாடகை அடிப்படையில் தங்கியிருப்பவர்கள் இடையே உள்ள உறவைப் பாதுகாப்பதாகும் என அமைச்சர் கூறினார். 

அதன்படி வாடகை அடிப்படையில் வீடொன்றை வழங்கும்போது செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் படி செயல்பட வேண்டும் என்றும், எந்த வகையிலாவது அந்த ஒப்பந்தங்களை மீறி சட்டவிரோதமாக செயல்பட முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, 

இன்றைய தினத்திலிருந்து மேலும் ஒரு மாத காலம் இந்த சட்டமூலத்திற்காக மக்கள் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. அந்த கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு இதை மேலும் திருத்தம் செய்ய முடியும். இறுதி வடிவத்திற்கு அதன் பின்னரே செல்ல முடியும். 

இந்த சட்டமூலத்தைக் கொண்டு வருவதன் எதிர்பார்ப்பு சட்டரீதியான பிணைப்புக்கு, இணக்கப்பாட்டுக்கு உட்பட்ட வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகை குடியிருப்பாளர் இடையிலான உறவை உறுதிப்படுத்துவதாகும். அதில் இருதரப்புக்கும் நிவாரணம் கிடைக்கும் வகையில்தான் இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. 

சில இடங்களில் இந்த செயல்முறையில் வீட்டு உரிமையாளருக்குப் பிரச்சினைகள் வருகின்றன, அவர் சட்டத்தின் முன் தஞ்சம் கோர முடியாத சந்தர்ப்பங்கள் உள்ளன. அதேபோல் வாடகை குடியிருப்பாளர் அநீதிக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்களும் உள்ளன. இந்த வாடகை குடியிருப்பாளர் மற்றும் வீட்டு உரிமையாளர் என்ற இருதரப்பையும் பாதுகாத்துக்கொள்வதை நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட சட்டம் இது. 

இந்தச் சட்டம் பொருந்துவதே ஏதேனும் இருதரப்பினர் ஒப்பந்தம் செய்துகொண்டால், அந்த ஒப்பந்தத்திற்குப் புறம்பாக யாராவது செயல்பட்டால், அவ்வாறு அநீதிக்கு உள்ளாகும் நபர்களுக்கு இந்தச் சட்டத்தின் மூலம் உதவி கிடைக்கிறது. ஒப்பந்தத்திற்கு வெளியே சென்று காலம் தாழ்த்தி இருந்தால் இந்தச் சட்டம் பொருந்தாது, அதற்குப் பொருந்துவது சாதாரண சட்டமாகும். ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தால் அந்த ஒப்பந்த காலத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட யாருக்கும் உரிமை கிடைப்பதில்லை. 

அதாவது ஒரு வருடத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது, இரண்டு மாதங்களுக்கு முன் வெளியேற முடியும் என்று ஒப்பந்தத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது என்று வைத்துக்கொள்வோம். அவ்வாறான நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன் சட்டவிரோதமாக மின்சாரத்தைத் துண்டித்தோ, நீரைத் துண்டித்தோ, பல்வேறு விதமாக துன்புறுத்தல்கள் செய்தோ அனுப்ப முயன்றால் அல்லது இந்த வகையில் அநீதிக்கு உள்ளானால், அந்த நபர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cml6npmel04sgo29nfa1475t7

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.