Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

78வது தேசிய சுதந்திர தின நிகழ்வு ஆரம்பம் (நேரலை)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

78வது தேசிய சுதந்திர தின நிகழ்வு ஆரம்பம் (நேரலை)

Feb 4, 2026 - 07:44 AM

78வது தேசிய சுதந்திர தின நிகழ்வு ஆரம்பம் (நேரலை)

78வது தேசிய சுதந்திர தின நிகழ்வு தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது. 

"இலங்கையை கட்டியெழுப்புவோம்" என்ற கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் இந்த நிகழ்வு இடம்பெறுகின்றது. 

சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெறும் இந்நிகழ்வை நேரலையில் பார்வையிட,

சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு இன்று காலை 7.45 மணி முதல் டிவி தெரண (TV Derana) மற்றும் அத தெரண (Ada Derana) ஊடாக ஒளிபரப்பப்படும். 

இன்று காலை சுமார் 7.50 மணியளவில் பிரதம நீதியரசர் திரு. பிரீதி பத்மன் சூரசேன சுதந்திர சதுக்கத்திற்கு வருகை தந்தார். 

இதேவேளை, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவும் விழா நடைபெறும் வளாகத்திற்கு வருகை தந்துள்ளார். 

அத்துடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சற்றுமுன்னர் வருகைத் தந்தார்.

https://adaderanatamil.lk/news/cml7e95a704sto29nfweznwp5

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திர தின நிகழ்வில் இணைந்தார் ஜனாதிபதி

Feb 4, 2026 - 08:03 AM

சுதந்திர தின நிகழ்வில் இணைந்தார் ஜனாதிபதி

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு வருகை தந்துள்ளார்.

இலங்கையின் 78-வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமாகியுள்ளன.

78-வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் "இலங்கையைக் கட்டியெழுப்புவோம்" எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறுகின்றன.

1948 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியிடமிருந்து சுதந்திரத்தை வென்றெடுப்பதற்காகத் தியாகங்களைச் செய்தவர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்த கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.

வெளிநாட்டு இராஜதந்திரிகள் உட்பட சுமார் 400 விருந்தினர்களுடன், முப்படை மற்றும் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 4,500-க்கும் மேற்பட்ட படையினர் இந்நிகழ்வில் கலந்துகொள்கின்றனர்.

https://adaderanatamil.lk/news/cml7eyg2v04suo29nalv1s474

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திர தினத்தில் மரியாதை வேட்டுக்களை தீர்த்த கடற்படை

Feb 4, 2026 - 12:45 PM

சுதந்திர தினத்தில் மரியாதை வேட்டுக்களை தீர்த்த கடற்படை

78வது பெருமைமிக்க தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டுக்கு கௌரவம் செலுத்தும் வகையில் இலங்கை கடற்படையினரால் இன்று (04) 25 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுள்ளன. 

கடற்படைத் தளபதியின் ஆலோசனையின் பேரில், கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் கடற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டிருந்த 'இலங்கை கடற்படைக் கப்பல் சயுர' போர்க்கப்பலில் இருந்து இந்த மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. 

நாட்டின் மிக உயரிய மரியாதையாகக் கருதப்படும் 25 வேட்டுக்கள் தீர்க்கும் இந்த கௌரவம், தேசத்திற்காக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cml7p19zd04t2o29nkn0hq7xp

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.