Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் - ட்ரம்ப்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் - ட்ரம்ப் 

04 Feb, 2026 | 04:22 PM

image

நாங்கள் ஈரானுடன் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த விடயத்தில் அவர்கள் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அரபிக் கடலின் சர்வதேச கடல் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த அமெரிக்க கப்பலை வேகமாக நெருங்கிய ஈரான் நாட்டின் ட்ரோனை அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த போதே ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர், சிறிது காலத்துக்கு முன்பு அவர்களுடன் ஒப்பந்தம் செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அது நடக்கவில்லை. அதனால் நாங்க் “மிட்நைட் ஹேமர்” என்ற பெயரில் நடவடிக்கையை தொடங்கி தாக்குதல் நடத்தினோம்.

அவர்கள் தற்போது மீண்டும் “மிட்நைட் ஹேமர்” போன்ற ஒரு தாக்குதலை விரும்பவில்லை என நான் நினைக்கிறேன். பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறிய டிரம்ப், எந்த இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என்று கூறவில்லை என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

செவ்வாய்க்கிழமை (3) அமெரிக்காவின் “யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்” விமானம் தாங்கிக் கப்பலை, அச்சுறுத்தும் விதத்தில் வேகமாக நெருங்கிச் சென்ற ஈரானின் ஷாஹித்-139 ட்ரோனையே அமெரிக்கப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

கப்பலிலிருந்து ஏவப்பட்ட அதிநவீன எப்-35சி போர் விமானமே அந்த ட்ரோனை நடுவானில் சுட்டு வீழ்த்தியுள்ளது.

இது தற்காப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என அமெரிக்கப் படையினர் தெரிவித்திருந்தனர்.

ஈரான் எல்லையிலிருந்து சுமார் 800 கி.மீ தொலைவில் அமெரிக்க கப்பல் இருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ட்ரோன் மீதான தாக்குதலின்போது அமெரிக்க படையினர் எவருக்கும் காயமோ அல்லது உபகரண சேதமோ ஏற்படவில்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/237825

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் - அமெரிக்கா இடையே நாளை அணுசக்தி பேச்சு

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான தீர்க்கமான அணுசக்தி பேச்சுவார்த்தை ஒன்று நாளை (06) ஓமானில் நடைபெறவுள்ளது. 

கட்டார், துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட விசேட கட்டமைப்பின் கீழ் இப்பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இரு நாடுகளுக்கும் இடையில் பல வருடங்களாக நிலவி வரும் இராஜதந்திர நெருக்கடிக்குத் தீர்வு காண்பதே இதன் நோக்கம் என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஜி தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

யுரேனியம் செறிவூட்டலை மட்டுப்படுத்தல்,பெலஸ்டிக் ஏவுகணைக் கட்டுப்பாடு மற்றும் பிராந்தியத்தில் உள்ள ஈரானிய சார்பு ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதம் வழங்குவதை மட்டுப்படுத்தல் என்பன குறித்து இங்கு கவனம் செலுத்தப்படவுள்ளது. 

நியாயமான மற்றும் நீதியான முறையில் இப்பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்லுமாறு தாம் வெளியுறவு அமைச்சருக்கு அறிவுறுத்தியதாக ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

https://adaderanatamil.lk/news/cml8w6kqi04tko29ng4xxssxk

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ஏராளன் said:

நாங்கள் ஈரானுடன் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த விடயத்தில் அவர்கள் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதையே வெனிசூலா விடயத்திலும் சொல்லி

சிஐஎ யின் வேலை முடியுமட்டும் நேரடியாக பேசினார்.

இதனாலே வெனிசூலா தலைவர் கோட்டை விட்டிருப்பார்.

ஈரானிலும் தாக்குதல் இலக்குகளை துல்லியமாக கணிக்கும்வரை

பேச்சுவார்த்தை தொடரலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.